Episode -5
கௌதம் பேசுவதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை அதிவீரா. அவன் செக் புக்கில் சைன் போட்டுக் கொண்டே “நீயே கொண்டு போய் கொடுத்திடு” என நீட்டினான்.
“பாஸ் தாத்தாவுக்கு செக் அப் இருக்கு. நீங்க தான் கூட்டிட்டு போகனும்னு சொல்லிருக்கார்.”
அதிவீரா நடந்து கொண்டே “என்னால் வர முடியாது. எனக்கு பிசினஸ் வேலையே நிறைய இருக்கு. அடுத்த மார்க்கெட்டிங் டீம் அதாவது பி.ஆர். ப்ராஜெக்ட்ஸ பண்ண போறோம். பொலிட்டிக்கல் வச்சு. அதுல ப்ராஃபிட் ரொம்ப அதிகமா கிடைக்கும். அதனால என்னை டிஸ்டர்ப் பண்ணாத” என்றான்
கௌதம் போனை நீட்ட, என்ன இது என்று கண்களால் கேட்டான்.
பாஸ் தாத்தா லைன்ல இருக்காரு. நீங்க ஒத்துக்கலைன்னா, உடனே போன் பண்ண சொன்னாரு. அதுக்கு போன் பண்ணுவியாடா ராஸ்கல்! நீ எனக்கு P.A வா? அவருக்கு P.A-வா என்று மிரட்டினான் வீரா.
பாஸ் ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க.
நான் தாத்தா சொல்றதை தான் கேடகணும். ஏன்னா அவர் வய்ஸ்ல பெரியவா என்று தலையை குனிந்து கொண்டே கூறினான்.
ஒரு நாள் உன்னை நசுக்கி போடறேன் இரு என்று பற்களை கடித்தபடி கூறியவன். கண்களை மூடி “சொல்லுங்க!.. எப்படி இருக்கீங்க?” என்று என் மென்மையான குரலில் கேட்டான். அதே வழக்கமான இயந்திரத்தனமான பேச்சு வீராவிடமிருந்து வெளிப்பட்டிருந்தது.
உன்னோட அக்கறைய நேரில் வந்து காட்டு. நீதான என்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலன்னு சொன்னது?
அது… என வீரா தயங்க, தேவையில்லாம கெளதம மிரட்டிட்டு இருக்காத. அவன் உன்ன மாதிரி கிடையாது என்று கூறினார்.
அதிவிரா பற்களை கடித்தபடி கௌதமை முறைக்க, “தாத்தா ஏன் தான் இப்படி இவர்கிட்ட என்னை கோர்த்துவிடுகிறாரோ?” என்று முகத்தை வடிவேல் போல வைத்துக்கொண்டான்.
எப்ப வரணும் என்று அதிவீரா கேட்க, இப்போ உன்னோட அக்கறை எவ்வளவுன்னு நான் காதால கேட்கிறேன். என்றார் சவுந்தர பாண்டியன்.
இந்த ஆளு ஏன் தான் இன்னும் உயிரோட இருக்காரு என்று அதிவீரா மனதில் நினைத்துக் கொண்டான்.
அதிவீராவின் தாத்தா சௌந்தர பாண்டியன் அவருக்கு ஒரே பெண் பத்மினி. சௌந்தரபாண்டியனுக்கு மகள் வழி பேரன் தான் அதிவீரன். பத்மினி ஆசிரமத்தில் இருக்கிறார். பத்மினியின் கணவர் ஆதிசங்கரன். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டது.
ஆதிசங்கரன் மற்றும் பத்மினி இருவரும் சேர்ந்து இல்லையா ஏன் பிரிந்து இருக்கிறார்கள்?(அதிவிராவோட அப்பா அது அழகிய அசுரா கதையில படிப்பீங்க)
சீக்கிரம் சொல்லுங்க எனக்கு ஆபீஸ்க்கு நேரம்மாச்சு என்று அதிவீரா மெல்லிய குரலில் கேட்க, நாளைக்கு மதியம் 2 மணிக்கு ரெடியாயிரு.நான் உன்ன ஆபீஸ்ல இருந்து கூட்டிட்டு போறேன்.
“நீங்க ஏன் ஆபீஸ்க்கு வரீங்க? நான் வீட்டுக்கு வரேன்.” என்றான் வீரா. ஏனென்றால் ஆபீசுக்கு வீரா செல்வதே 12 மணிக்கு இரண்டு மணிக்கு தான் வேலையை ஆரம்பிப்பான். அப்படி இருக்கும்போது சௌந்தர பாண்டியன் முன்னாலோ இல்லை தாமதமாகவோ, அங்கு வந்து தன்னை பற்றி விசாரித்தால்? என்ன ஆவது? என்றுதான் அப்படி கூறினான்.
நீ ஒன்னும் வர வேண்டாம். நானே வரேன் என்று அவர் மீண்டும் கூற… ப்ச் நான் தான் வரேன்னு சொல்றேன்ல. நானே வரேன் நீங்க கம்முன்னு இருங்க என்று கூறியபடி ஃபோனை வைத்தான் வீரா.
இரவு இங்கே அம்முவின் வீட்டில் பார்த்து பார்த்து தன்னை அலங்கரித்துக் கொண்டாள். என்ன இன்னிக்கு புடவைல கிளம்பிட்டீங்க மேடம் என்று ரமா கேட்க,
இன்னிக்கும் கோவிலுக்கு போயிட்டு என்னோட வேலைக்கு போலாம்னுக்கா. இன்னும் பத்து நாள் தானே இங்க இருக்க போறோம். இப்போவே பாரு நாலு நாள் கடகடன்னு ஓடிருச்சு. அதேபோல இந்த பத்து நாள் கூட கண்ண மூடி திறக்கறதுக்குள்ள ஓடிடும். என்று சந்தோஷமாக கூறினாள் அம்மு.
ரமாவும் ஒரு பெருமூச்சு விட்டபடி ஆமா நம்ம இங்க இருந்து போயிடலாம். இந்த மும்பை ரொம்ப வேகமா இருக்கு. இவ்வளவு வேகத்துக்கு என்னால மூச்சே விட முடியாது. அதனாலதான் ஆண்டவன் எனக்கு இதயத்தை எடுக்கணும்னு இருக்கிறான் போல என்று கூறினாள்.
அக்கா இப்படி லூசுத்தனமா உலராத. அதுக்கு தான் நமக்கு நல்ல வழி பொறந்துருக்கு. டாக்டர் சீனிவாசன் சொன்ன மாதிரி இன்னும் பத்து நாள்ல நம்ப அங்க போயிடலாம்.
“ஆமா ஆமா!”
அங்கே போனோம்னா கிட்டத்தட்ட பாதி செலவு எனக்கு குறைஞ்சிடும். உன்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு அங்கேயே என்னோட வேலைய நான் அங்க இருந்து பாத்துக்குவேன். பிரச்சனை இல்லை. நமக்கு நல்லது நடக்கும். அதுமில்லாம உதவும் கரங்கள்ன்னு டிரஸ்ட் இருக்குல்ல. அதுல நான் உனக்காக அப்ளை பண்ணிருக்கேன்.
இது சீனிவாசன் சார் சொன்னதா என்று ரமா சந்தேகமாக கேட்க, இல்லக்கா இதை நான் ஆன்லைன்ல பார்த்து அப்ளை பண்ணேன்
நமக்கு கிடைக்குமோ கிடைக்காதோ கடவுள் கிட்ட வேண்டிக்க… அதை பண்ணி வச்சிருக்கேன். சீனிவாசன் சாரு ஹாஸ்பிடாலிட்டி தான் உதவும் கரங்களை ட்ரஸ்ட்ல கிடைக்கும்னு சொன்னாரு. நான் இதையும் அப்ளை பண்ணி வச்சிருக்கேன். பார்க்கலாம் ரெண்டுல எது கிடைச்சாலுமே நமக்கு நல்லது தான் என்று நினைத்து கடவுளிடம் வேண்டினாள் அம்மு.
இன்னைக்கு என்ன கலர் தாவணி? எந்த கலர் ஜாக்கெட்.. அண்ட் உள்ளே என்ன கலர்ல போட்டிருக்க இன்னர் பாவாடை கூட போட்ருக்கியா? உள்ளேயும் பாவாடை போட்ருக்கயா? உனக்கு கசகசன்னு இருக்குமா வேர்க்குமா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் வீரா.
அவளின் கண்கள் சிரித்தது. ஹே எதுக்கு டி சிரிக்கிற! என்று வீரா கேட்க, ‘ நான் சிரிச்சது இவருக்கு எப்படி தெரியும்? இதெல்லாம் கண்டுபிடிக்கிறார். கண்ண வச்சே கண்டுபிடிச்சிடுறரே. ஒருவேளை நான் வீரா முன்னாடி நேரில் வந்தனா? என் கண்ணை வைத்து கண்டுபிடிச்சிடுவாரா! கடவுளே அப்படி மட்டும் ஒரு நிலைமை எனக்கு வரக்கூடாது. அவர் கண்ணில் நான் படவே கூடாது. ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணு. அவரோட கண்ணுல நான் படவே கூடாது.’ என்று வேண்டினாள்.
இந்த வேண்டுதல் எவ்வளவு மோசமான நிலையில் அவளை கொண்டு போய் விடும் என்று தெரிந்திருந்தால் அவள் அப்படி வேண்டியிருக்க மாட்டாள்.
கடவுள் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் அவ்வளவு எனது கதையில்..
கேட்டதுக்கு பதில் சொல்லுடி என்று வீரா மதுவை வாயில் சரித்தபடி கேட்க, “நீங்க குடிக்காம கேளுங்க. நான் சொல்றேன்” என்று கண்களை மின்னும் நட்சத்திரங்கள் போல சிமிட்டினாள்.
சொல்லு!! ஹே நீ உன்னோட டிரஸ் கலரையே காட்டலையே என்று வீரா உதட்டை பிதுக்க… முழுதாக டிஸ்ப்ளே முழுவதும் தெரியும்படி வைத்தாள். அம்மு இன்னிக்கு புடவையில் வந்திருக்கிற! எழுந்து நின்னு காட்டு டி நான் பாக்கணும்.ப்பா செம்மையா இருக்கடி! என கண்ணை மூடி திறந்து மயங்குவது போல ஒரு பாவனை செய்தான்.
கடை இதழ் கடித்து ரசித்தவள் புடவையுடன் எப்படி இருக்கேன் என்று கேட்டாள்.
அம்மு அழகி டி நீ என்று மனதில் நினைத்துக் கொண்டான். ஆனால் வாய்மொழியாக கூறவில்லை. வீரா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மிஸ்டர் அதிவீரா இது நீதானா? அவகிட்ட நீ கரையரயா? இல்ல உன்கிட்ட அவ கரையிறாளா? அதிவீரா இப்படித்தான் இருப்பானா? வெளியில அதிவீராவுக்கு என்ன இமேஜ் இருக்குன்னு கொஞ்சம் யோசிச்சு பாத்தியா? அந்த சத்யதேவ் கிட்ட தோக்க போறியா என்ன? இவளை நீ விரும்புகிறாயா? அப்புறம் ஏன் இந்த சேட் பண்ணிட்டு இருக்க? நேரடியா அவளை தூக்கிட்டு வாடா என்று ஒரு மனம் அவனை உசுப்பி விடும் பொருட்டு நிறைய கேள்விகளை கேட்டது.
வீராவின் கண்கள் திடீரென மாறியது. இருக்கவே இருக்காது. எனக்கு இந்த உறவுகள் மேல நம்பிக்கை இல்லை. என்னை பிசினஸ் பண்றதுக்காக மட்டும் தான் பெத்து வச்சிருக்காங்க. யார் எனக்கு அன்பு காட்டினா? எங்க அம்மா ஆசிரமத்தில் போய் உட்கார்ந்துகிட்டா! எனக்கு அப்பா? அந்த ஆளுக்கு நானா முக்கியம்? நான் வேணான்னு என்ன விட்டுட்டு அவனை கூட்டிட்டு போயிட்டாரு. இது வாழ்க்கையா? கல்யாணம் தேவையா? அதுக்கு ஒவ்வொரு நாளும் ஒருத்தி கூட இருக்கலாம். ஆனால் அந்த அளவுக்கு அவன் (அஸ்வத்தாமன்) மாதிரி நான் மட்டமானவன் இல்ல. எனக்குன்னு சில பிரின்ஸ்பல் இருக்கு. என தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.
“புடவையை கழட்டு”
ஹே புடவைய கலட்டி வீசடி என்று கர்ஜனையுடன் கூறினான்.
வீரா என்று அவள் ஆசையுடன் ஒன்றும் புரியாமல் என்னாச்சு என்ற தொனியில் அழைக்க, சொல்றது புரியலையா? என்று முகத்தை அழுத்தி துடைத்தவன்.
புடவை கழட்டி வீசு! வா முன்னாடி வந்து உட்காரு. முடியெடுத்து மொத்தமா பின்னாடி போடு. அந்த கழுத்து மச்சத்தை காட்டு என்று மூர்க்கனாக நடந்து கொண்டான்.
அம்முவின் கண்களில் பயம் அப்பி கிடந்தது. என்னாச்சு இவருக்கு? நல்லா தானே பேசிட்டு இருந்தார். திடீர்ன்னு என்ன ஆச்சு என்று பதட்டத்துடன் அவள் மெதுவாக அனைத்தையும் செய்து கொண்டிருக்க, “ப்ச் பணத்தை கத்தையா வாங்குறல்ல! என்னடி உனக்கு கேடு? சீக்கிரம் அவுத்து போட்டு காட்டுடி” என்று கோபமாக கர்ஜித்தவன். அருகில் இருக்கும் மது பாட்டிலை மொத்தமாக வாயில் சரித்தான்.
அம்மு உதட்டை கடித்த படி அமர்ந்தாள். எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரி தான். அப்படி இல்லனா வீரா காசு கொடுத்து இப்படி என்ன என்று என்னென்னவோ யோசித்தாள். அவளின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருக்க, “சீட் அழாதடி என் மூட ஸ்பாயில் பண்ணாத. பக்கத்துல வாடி. உன்னோட கேமரா கிட்ட வந்து நில்லு. உட்காருடி” என்று அதட்டிக் கொண்டே பேசினான்.
இதோ சார் என்று அவளின் குரலும் மாறி போக அவன் சொன்னபடியே அனைத்தையும் செய்தாள். இப்படியே அந்த நாள் ஓடிப்போக வீட்டிற்கு வரும்போது சோர்ந்த முகத்துடன் அதிகாலை வந்து சேர்ந்தாள் அம்மு.
அம்மு வந்துட்டியா என்று ரமா அழைக்க, அக்கா பாத்ரூம் போயிட்டு வரேன் என்று கூறியவள்.
உள்ளே சென்றதும் வாயை பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
தனது மூர்க்கத்தனம் ஒரு சின்ன பெண்ணை இப்படி வேதனைப்படுத்துகிறது என்று தெரியாமல் பெரிய படுக்கையில் அரை நிர்வாணமாக கிடந்தான் அதிவீரா. அம்மு அம்மு அம்மு என்று அவனது ஆழ்மனம் அவளை தான் தேடியது.
தாத்தா ஹாஸ்பிடலுக்கு தயாராகி நேராக வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வீரா! என சவுந்தரபாண்டியன் அழைக்க, அவரது வீல்சேரை கௌதம் தள்ளிக் கொண்டு வந்தான்.
ஓ டேம்ன் என எழுந்தான் வீரா
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels