அத்தியாயம் – 10
டீயா? டி… டி… என மான்வி கோபத்துடன் நின்றாள்.
கண்ணன் “டி” சொன்னதை பற்றி அவளை கண்டு கொள்ளாமல் அடுத்த நொடி ஜீப் முன்னாள் வந்து நின்றது. ஹே என்னை பார்த்து!…. என்னை பார்த்து நீ எப்படி டி சொல்லலாம்? உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் டா? என்று மான்வி அவன் முதுகுக்கு பின்னால் கத்தினாள்.
இனி நீ என்னை மரியாதையா கூப்பிடுற வரைக்கும் உன்னை நான் டி தாண்டி சொல்லுவேண்டிஇஇஇ என்று இழுத்தவன் நேர்த்தியாக ஜிப்பில் ஏறி அமர்ந்து, அவளைப் பார்த்தான்.
உன்னை என்ன பண்றேன் பாருடா என்று தாவிக்கொண்டே அவள் வேகமாக வெளியே வர, முத்து ஜீப் எடுங்க என்று மீசையை வருடியபடி அவன் கூற, யெஸ் சார் என்று முத்து கிளம்பினான்.
கருவா! .. கருவா! கருவாயா! என அவனது ஜீப்பை பார்த்து முனகினாள்.
என்னாச்சு? கண்ணன் கிளம்பிட்டானா? என்று கேட்டபடி முகிலன் வெளியே வர, மான்வி அவளது கோபத்தை அடக்கியவள். “இவன் வேற அந்த கருவாவுக்கு ஒத்து நாங்க என்ன பண்றோம்? என்ன செய்றோம்னு நோட்டம் விடுவதிலேயே குறியா இருக்கான். எப்படித்தான் அந்த மோகனுக்கும் அந்த உலக அழகி பொன்மலருக்கும் கல்யாணம் பண்றதுன்னு தெரியல” என்று சலித்துக் கொண்டவள். தன் முகத்தை சரி செய்தபடி திரும்பினாள்.
முகிலன் அவளை ஆராயும் பார்வையுடன் நோட்டமிட்டு கொண்டிருந்தான். “இவன் கண்ணு அவிஞ்சு போகணும். திமிரு புடிச்சவன்” என்று முணுமுணுத்துக் கொண்டே கேட்டை சாத்தி விட்டு திரும்பினாள்.
ஹே நில்லு என்று அதட்டினான் முகிலன்.
என்னடா சொல்லு என்று மான்வி அவனுக்கு இணையாக நின்று கொண்டிருக்க, கைகளை இறுக்கி மடக்கியவன். “எங்க அண்ணன நெஜமாவே விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கூர்மையாக துளைக்கும் பார்வையுடன் கேட்டான்.
“உங்க அண்ணன் இங்கிலாந்து இளவரசர்? இவரு அவரோட தம்பி! என்கிட்ட வந்து விருப்பத்தை கேட்கிறார்” என்று அஷ்ட கோணலாக முகத்தை வளைத்தாள் மாண்பு.
முகிலன் சிரித்தபடி எங்க அண்ணன் ஒன்னும் இங்கிலாந்து இளவரசர் இல்ல தான். ஆனால் அதேபோல நீ இளவரசி டயானா ஒன்னும் கிடையாது என்று அவளை வாறினான்.
உன்ன என்று பற்களை கடித்தபடி ஒரு அடி முன்னாள் வந்தாள்.
முகிலன் அவளை பார்த்து ஹே ஏதோ கண்ணனுக்காக உன்னை விடுறேன். அவ்வளவுதான். இல்லன்னு வை ஒரு பெரிய சாட்டையா வாங்கிட்டு வந்து உன்னை வெளு வெளுன்னு வெளுத்து எடுத்துடுவேன்.
ஆமாண்டா அடிப்ப அடிப்ப அது வரைக்கும் என் கை பூ பறிக்கும் பாரு!! அந்த எண்ணம் வேற வச்சிட்டு இருக்கியா? யாரு வெளுக்கிறாங்கன்னு பார்க்கலாம்! என்று மான்வி கொஞ்சம் சத்தமாக கூற, பார்க்கலாமா? என்று முகிலன் சண்டைக்கு நின்றான்.
அதை தாண்டா நானும் சொல்றேன். பாக்கலாம் டா என்று சவால் விட்டாள்.
சரி கல்யாணம் முடியட்டும் அவனைப் பார்த்து பற்களை கடித்தபடி கல்யாணம் முடியட்டும் டா நான் வீட்டுக்கு வந்து உன்னை எப்படி டார்ச்சர் பண்றேன்னு பாரு! என்னோட டார்ச்சர்ல நீ உங்க வீட்டை விட்டு ஓடி போக போற! கண்டிப்பா அது நடக்கத்தான் போகுது! என்று மான்வி சபதம் போட, அதையும் பார்க்கலாம் என்று இருவரும் சிவந்த மூக்குடன் கோபமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இங்க என்ன நடக்குது? என்று கேட்டபடி அவ்வடத்திற்கு வந்து சேர்ந்தாள் பொன்மலர்.
உடனே மான்வி தனது முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு, உள்ளே சென்றவள். ஒன்றும் இல்லை வா என்று அவளிடம் இனிமையாக பேசினாள்.
என்ன தான் இருந்தாலும் இந்த வீட்டின் மருமகள் அவள் தானே இனி… எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது. அக்கா தேதியை எப்ப குறிக்கலாம்?என்று கோபி கேட்க, நான் ஜோசியர் கிட்ட கேட்டு இருக்கேன். நீயும் வந்து ரெண்டு பேரும் சேர்ந்து போய் குளிச்சிட்டு வந்துடுவோம். ஒரே நாளில் இரண்டு பேருக்கும் கல்யாணத்தை வச்சுக்கலாம் என்று கூறினார் மகேஸ்வரி.
அம்மா என்று இடை புகுந்தான் கார்முகிலன். என்னடா என்று அவர் கேட்க, எதுககும் கண்ணன் கிட்ட இத பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு பண்ணிக்கலாம். அவனுக்கு கல்யாணம் எல்லாம் கிராண்டா பண்ணனும்ன்னு எண்ணம் இல்லை என்று கார்முகிலன் கூற, மான்வி இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு எங்க அண்ணன் கல்யாணம் கிராண்டா நடக்கணும்னு எனக்கு ஆசை! அப்பா நீ கல்யாணத்தை கிராண்ட்டா பண்ணு என்று கூறினாள்.
ஒரு கல்யாணமா?? ரெண்டு கல்யாணம் நடக்க போகுது! உங்களுடைய கல்யாணமும் தான் அண்ணி என்று பொன்மலர் நடுவில் புகுந்தாள்.
ஆமா ஆமா என்னோட கல்யாணமும் தான் என்றாள் மான்வி சிரித்தபடி, சரி டிஸ்கஸ் பண்ணிட்டு முடிவெடுத்துக்கலாம் என்று கூறிவிட்டு அவள் செல்ல, அனைவரும் அமர்ந்து போதும் கல்யாண விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
மான்வி அவ்விடத்தை சுற்றி பார்த்தவள். ஒரு ஆள் குறையுதே என யோசித்தாள். ஹான் தாய் மீனாட்சி தான் இல்லல்ல மல்லிகா வில்லி மல்லிகா (அப்படினா கரெக்டா இருக்கும் என்று நினைக்கிறேன்.)
மான்வி வீடு முழுவதும் தேடியவள் கொள்ளை புறமாக சென்றாள். அங்கு ஊஞ்சலின் அருகில் சேலையின் தலைப்பால் கண்களை துடைத்த படி மூக்கை உறிஞ்சி கொண்டு யாரிடமோ போன் பேசிக் கொண்டிருந்தார் மல்லிகா.
வேறு யாராக இருக்க முடியும் மைதிலி அப்படி இல்லை என்றால் தனது தாய் மாமன் குடும்பம் சுரேஷ் வீட்டில் தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்று நன்றாகவே தெரிந்தது.
அம்மா என்று கூப்பிட்டபடி மான்வி வந்து நின்றாள்.
மல்லிகா அவளை முறைத்து பார்த்தபடி நான் கூப்பிடுறேன் இரு அந்த ஆட்டக்காரி! அடங்காதவன் வந்திருக்கா என்று சொல்லியபடி ஃபோனை கட் செய்தவர்.
நான் உனக்கு அம்மா இல்ல இனிமே நீ என்னை அம்மான்னு கூப்பிடாதே என்று ஆவேசமாக கத்தினார்.
அம்மா நான் சொல்றதை கேளு என்று மான்வி பேச வர, என்னடி பேசணும்? முதல்ல வாயை அடக்குடி உனக்கு செல்லம் கொடுத்து நான் கெடுத்து வச்சுட்டேன். போயும் போயும் உனக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்கலையா? என்று அவர் கொதித்து எழுந்தார்.
அவனுக்கு என்ன குறைச்சல் என்று மான்வி தன் அன்னையைப் பார்த்து கேட்க.. கேவலமாக இதழ் வளைத்து சிரித்தவர். என்ன குறையா? அவன் ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல கான்ஸ்டபில் இருக்கிறாண்டி! ஏட்டா இருக்கிறான். என்று மல்லிகா கூற,
மா ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு!
ஹே நான் சொல்றத நீ கேளுடி அவன் உனக்கு எந்த விதத்துல தகுதியானவன்? உன்னோட படிப்பா? உன்னோட அழகா? உன்னோட வேலையா? உன்னோட குடும்பமா ஒரு இதுல அவனோட தகுதியை பத்தி சொல்லு பாக்கலாம்? நான் பெத்த ஒத்த பையன் இன்னும் அதுக்கும் மேலே ஏறி என் தலை மேல ஆடிட்டு இருக்கான். வேற பொண்ணே கிடைக்கலையா? 50 பவுன் நகையோட ஒரு மருமக வருமானு பாத்தா!! உங்க அத்தைகாரிக்கு இதுதான் சான்சுன்னு இங்கே தள்ளி விட்டுட்டு போயிட்டா நல்ல குடும்பம் டி! என்னை நல்லா நம்ப வச்சு கழுத்தறுத்திட்டல்ல உங்க அப்பன் புத்தி தானடி உனக்கும் வரும் என்று இஷ்டத்துக்கு பேசினார் மல்லிகா.
மான்வி பற்களை கடித்தபடி தன் அன்னையைப் பார்த்தவள். நீ பேசிட்டல்ல இப்ப நான் பேசட்டுமா?
இன்னும் நான் பேச வேணும் என மல்லிகா குறுக்கிட “நிறுத்து நான் பேசணும்னு சொன்னேன்!” என்று அதட்டியவள்.
அவன் ஒன்னும் கான்ஸ்டபிள் ஏதோ கிடையாது. இந்த மாவட்டத்தோட எஸ்பி. அப்படின்னா என்னன்னு உன் மூத்த பொண்ணு கிட்ட கேளு! இந்த மாவட்டமே அவனோட கண்ட்ரோல்ல இருக்கு. அவ்ளோ பெரிய வேலையில இருக்கான். இப்பவும் சொல்றேன் எனக்கு அந்த குடும்பத்தை சுத்தமா பிடிக்காது. ஆனா…
மல்லிகா அவளை உற்று பார்க்க, மா நீ பண்றது எல்லாமே ஒழுங்கான இங்க வந்து பேசிட்டு இருக்காத! அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன். இத்தன நாள் நா உன்கூட இருந்துட்டேன். இந்த ஒரு தடவை எனக்காக இல்ல. எல்லாம் மோகனுக்காக தான். பொன்மலர் நல்ல பொண்ணு. கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு என்ன வந்தது? உன் மனசுல அப்படி என்ன நினைச்சுட்டு இருக்க? மொத்த குடும்பத்தையும் போய் மாமா வீட்ல தள்ளலாமான்னு பார்க்கிறயா? நீ பண்றது சுத்தமா சரியில்ல. மாமா அத்தை ரெண்டு பேருமே நல்லவங்களான்னு என்னால நம்ப முடியல. ஒரு அளவுக்கு தான் எல்லாமே. அதுதான் மைதிலி கல்யாணம் பண்ணி வச்சிட்டல்ல என்னையும் அங்க தள்ளனும்னு நினைச்சுட்டு இருக்கியா? அது மட்டும் எக்காலத்துக்கும் நடக்காது என்று கூறினாள் மான்வி.
ஏய் ஏய் நாக்கை இழுத்து வச்சு அறுத்துடுவேன். என் அண்ணன் பையன பத்தி சொல்றதுக்கு உனக்கு என்ன அறுகதை இருக்கு? சுபாஷ கட்டியிருந்தா நீ செல்வ செழிப்பா ஜெகஜோதியா இருந்திருக்கலாம். போலீசாம்! போலீஸ்!… என்ன பெரிய போலீசு! என்று மல்லிகா பேச வர… இதுக்கு மேல தேவையில்லாம பேசாத என்று மான்வி திரும்பினாள்.
மல்லிகா அவளின் முதுகை பார்த்தபடி என்னை ஏமாத்திட்டல்ல! சொல்றத கேளு. அந்த குடும்பம் நமக்கு வேண்டாம் என்று சொல்லி நிறுத்தியவர். கடைசியில் அந்த குடும்பத்திலேயே நீயும் உன் பொறந்தவனும் போய் அங்கேயே விழுந்துதுட்டீங்கல்ல. நல்லா இருக்கு. இந்த கல்யாணத்துல எனக்கு துளி கூட இஷ்டம் இல்ல. நான் எதுலயுமே கலந்துக்க மாட்டேன். என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, மான்வி கோபமாக திரும்பியவள்.
இப்ப கூட எனக்கு இஸ்ட.. என்று மான்வி வாய் வரை வந்த வார்த்தையை விழுங்கினாள்.
மல்லிகாவின் கவனம் முழுவதும் அவளின் முகத்தில் இருந்தது. என்ன என்று அவளை கூர்ந்து பார்த்தார்.
“எனக்கு அந்த கண்ணனை எப்பவும் பிடிக்காது.”
அப்புறம் எதுக்கு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட? என்று மல்லிகா கோவமாக இடைமறிக்க, எவனையோ ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க போறேன். அதுக்கு நான் இவனை கல்யாணம் பண்ணிட்டு போறேன் என்று முடித்தாள்.
அவளின் மனதை மாற்றும் பொருட்டு அருகில் வந்த மல்லிகா நீ பேசறது ஒன்னும் சரியில்ல மான்வி நான் சொல்றத கேளுமா! அம்மா சொல்றதை கேளு! அவன் உனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவன் கிடையாது. இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம். நீ வேணாம்னு ஒரு வார்த்தை சொல்லு. அம்மா கிட்ட சொல்லு மத்ததை நான் பார்த்துக்கிறேன். உன் வார்த்தையில் தான் எல்லாமே இருக்கு. மோகனுக்கும் இதனால கல்யாணம் நடக்காது. என்று மல்லிகாவின் முகத்தில் குருரை எண்ணம் மின்னியது.
மான்வி என்ன சொல்ல போகிறாள்?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels