அத்தியாயம் -2
எதுக்கு டி கூப்பிட்ருக்கார் முகில் சார்? என ஆயிஷா பானு கேட்க.. யாரு முகில் சாரு? என தமிழ் கேட்டாள். முகில் சாரை தெரியாதா? என கோரசாக கேட்டார்கள் ஜெஸியும், ஆயிசாவும். பார்த்தார்கள்.
ஹே நீங்க தான் இங்கேயே UG பண்ணீங்க? நான் வேற காலேஜ்ல ug பண்ணேன். எனக்கு இங்கே யாரையும் தெரியாது! எங்க வீட்ல கிட்ட அப்போவே சொன்னேன். அங்கேயே படிக்கிறேன்னு.
ஏன் உன்னை நாங்க என்ன பண்ணோம்? அப்டின்னா அப்பாலே போயிடு சாத்தானே என ஜெஸி கூறினாள்.
ஹே கம்முன்னு வாங்க எனக்கு என்னமோ நம்ம பாட்டை கேட்டுட்டு பாராட்ட கூப்பிடுவார்ன்னு தோணுது அதுக்கு தான் வர சொல்றார். வாங்க டி போலாம் என மூன்று பெண்களும் சென்றார்கள்.
ரீடிங் தப்பு! ரிப்பீட் பண்ணிட்டு வா! என மாணவனிடம் கூறி கொண்டிருந்தான் கார் முகிலன். சார் என தயங்கிய படி மாணவர்கள் நிற்க..
ரெண்டு டீமா பிரிந்து செய்யுங்க.. முதல்ல டிஸ்டில் வாட்டர் யூஸ் பண்ணி கழுவி பண்ணிட்டு போகனும். இல்லன்னா நெக்ஸ்ட் லேபும் இதுவே கண்டின்யூ பண்ணனும் என ஸ்ட்ரிக்ட் ஆபிசராக சொல்லிக் கொண்டிருந்தான்.
அந்த நேரம் பார்த்து முகிலனின் போன் அலறியது. திரும்ப திரும்ப போன் அலற பார்த்தான். அண்ணா என இருக்க.. டியூட்டி டைம்ல போன் பண்ணிருக்கான்? என புருவம் நெருக்கியவன்.
சொல்லு கண்ணா! டூட்டி டைமில் கூப்பிட்ருக்க? என மென்மையுடன் பேசினான் முகிலன்.
உனக்கும் எல்லாமே தெரியுமா? இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறயா? என்றான் கார்வண்ணன்.
“என்ன சொல்ற? எனக்கு என்ன தெரியும்?”
“அம்மா அவங்களோட தம்பி வீட்டில் சம்மந்தம் வச்சுக்க போறதா என்னை கூப்பிட்டு சொன்னாங்க”
என்ன சொல்ற? என கார் முகிலனின் முகம் மாறியது. கண்ணன் நெற்றியை பிடித்த படி, மகேஷ்வரி சொன்ன அனைத்து விடயத்தையும் சொல்ல… அதை கேட்க கேட்க முகிலனுக்கு உடனே முகம் மாறியது.
ஒரு பெரிய மூச்சை விட்ட கண்ணன். இப்போ எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல முகில் என சொல்லி கொண்டிருக்கவே! ஜீப் நல்ல ஆட்டத்துடன் சட்டன் ப்ரேக் போட பட்டது.
முத்து என கண்ணன் கத்தினான்.
சார் சாரி சார் நான் இல்ல முன்னாடி போற பைக் தான் என பதட்டத்தில் கூறினார் முத்து.
சார் உள்ளே வரலாமா? என பெண்களின் குரல் கேட்க.. சரி நீ ஃபீல் பண்ணாத நான் வீட்டுக்கு போயிட்டு கால் பண்றேன். உன்னோட முடிவு தான் என்னோட முடிவும் என போனை வைத்து விட்டு திரும்பினான் கார் முகிலன்.
அவனின் முன் ஆயிஷா பானு, ஜெஸி, தேன் தமிழ்.
யார் நீங்க? என முகிலன் கேட்டு கொண்டே அவர்களை பார்த்தான்.
சார் கடவுள் வாழ்த்து! கிருஷ்ணா பாட்டு! என ஜெஸி விட்டு விட்டு கூறினாள்.
ஓ வாங்க உங்களை தான் பார்க்கணும்னு நினைச்சேன் என்றவன். வேதியல் ஆய்வகத்தின் மத்தியில் எழுத்து பலகைக்கு முன்னால் போடப்பட்ட மேஜை கொண்ட இருக்கையில் சென்று அமர்ந்தான்.
மாணவ மாணவிகள் யாரென எட்டி எட்டி பார்க்க, இங்கே என்ன வெடிக்க? தீபன் தலை மொத்தமா திரும்பிக்கும் என ஆளுமையுடன் கர்ஜித்தான் முகிலன். அந்த ஆய்வகத்தில் அவனது குரல் மட்டுமே தனித்து ஒலித்தது.
ச.. சாரி சார்! என அனைவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தினார்கள்.
ஆயிஷா மற்றும் ஜெஸி இருவரும் ஒரு வித பதட்டத்துடன் பார்த்தார்கள். தேன் தமிழ் சாதாரணமாக நின்றாள்.
இப்பொழுது முகிலனின் பார்வை மூன்று மாணவிகள் மீது இருக்க.. அவர்களை கொஞ்சம் கனிவுடன் பார்த்தவன். சேரில் நன்கு சாய்ந்த படி, சாங் யாரு செலக்ட் பண்ணது?
அது வந்து தமிழ் சார்! என ஆயிசா மற்றும் ஜெஸி இருவரும் பார்த்தார்கள்.
நான் தான் சார் என பதில் கூறினாள் தேன் தமிழ்.
நீங்க மூணு பேரும் சேர்ந்து பாடினீங்க?
ஆமா சார் என ஆயிசா, ஜெஸி இருவரும் கூறினார்கள்.
சாங் செலக்சன் யார் பண்ணா? என அவனது பார்வை ஆயிசா மற்றும் ஜெஸியின் மீது இருந்தது.
அவர்கள் இருவரின் தலையும் அப்படியே தேன் தமிழை பார்த்தார்கள்..
நான் தான் சார்! என ஓரடி முன்னால் நின்றாள் தேன் தமிழ்.
இவ்வளவு நேரமும் கனிவாக இருந்த முகம் அப்படியே மாறி போனது. அவனது முக மாற்றத்தை பார்த்து பெண்கள் இருவரும் பதட்டத்துடன் நின்றார்கள். ஆனால் தமிழுக்கு அவன் புதியவன் அதனால் சாதரணமாகவே பார்த்தாள்.
முகிலன் பார்வை கூறாக இந்த காலேஜ் என்ன பஜனை மடமா? உனக்கு சுய சிந்தனை இருக்கா இல்லையா? என கேட்டான் அழுத்தமான குரலில்.
தமிழ் பேச வர.. நான் இன்னும் பேசி முடிக்கல என்றவன். கால் மேல் கால் போட்டுக் கொண்டே அந்த பொண்ணு கிருஸ்டியன் அம் ஐ கரெக்ட் ஜெஸி? என முகில் கூற… வாயை பிளந்த படி ஜெஸி பார்த்தாள்.
ஜெஸிஇஇஇ! என அழுத்தமாக அழைத்தான் முகில்.
“எஸ் சார்!”
இப்பொழுது முகில் பார்வை அவளின் மீது படிந்து நீ கிருஷ்ணன் பாட்டு பாட நினைக்கும் போது அவள் ஜீசஸ் பாட்டு பாட நினைச்சா அடுத்து ஆயிஷா முஸ்லிம் பாட்டு பாடி இருக்கலாம்னு நினைச்சா?
என்ன மத கலவரத்தை உண்டு பண்ணி எங்களுக்குள் சண்டை கொண்டு வர பார்க்கிறீங்களா? என தமிழ் ஆவேசமாக பொங்கி எழுந்தாள்.
முகில் இளனமாக இதழ் வளைத்து எழுந்து நின்றவன் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டு கொண்டே லிசன் இடியட் அதை நீ தான் உருவாக்கற! இந்த கிருஷ்ணன் பாட்டை கோவிலில் பாடி இருந்தால் உன்னை நான் திரும்பி கூட பார்க்க மாட்டேன். ஐ மின் கேள்வி கேட்டிருக்க மாட்டேன். ஸ்கூல்க்கு எதுக்கு யூனி ஃபார்ம் கொடுக்கறாங்க தெரியுமா? மதம், இனம், மொழியை தாண்டி பள்ளி கூடம் படிப்புன்னு வந்துட்டா அனைவரும் சமம் அப்டின்ற விசயத்தை வலியுறுத்த தான் சீருடை. நம்ம காலேஜில் மெஜாரிட்டியா இருக்க ஸ்டுடன்ஸ் பின்பற்ற மதத்தை ஊக்குவிக்கும் விதமாக நீ பாடின அந்த கிருஷ்ணன் பாட்டு தப்பு. ஏன்னா உன்னோட தோழிகள் நினைக்கலன்னா கூட மற்ற மதத்தை பின்பற்றும் மாணவர்கள் மனதில் நினைக்கலாம். அதை அவாய்ட் பண்ணிக்க சொல்றதுக்கு தான் கூப்பிட்டேன். தட்ஸ் ஆல் அதை சொல்ல தான் கூப்பிட்டேன். இடம் பொருள் ஏவல்ன்னு ஒன்னு இருக்கு என சொல்லி முடித்தான்.
ஒரு பக்கம் தவறு தெரிய இன்னொரு பக்கம் முகிலன் மீது கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. ஏனோ தமிழுக்கு கண்கள் வியர்த்து போனது. போகலாம் என மணியை பார்த்துக் கொண்டே கூறினான்.
தொண்டை குழி அடைத்தது தமிழுக்கு. தே.. தேங்க் யூ சார் என ஜெஸி மற்றும் ஆயிசா இருவரும் தமிழை அவ்விடத்தை விட்டு நகர்த்தி கொண்டு வந்தார்கள். போகும் போது கோபம் பொங்கும் கண்களுடன் தமிழ் கார் முகிலனை முறைத்து விட்டு சென்றாள்.
டேய் மச்சான்! ஸ்கூல் புள்ளை மாதிரி நம்ம முகில் சாரு அந்த ஜூனியர் பொண்ணை அழ வச்சிட்டார். என செகன்ட் இயர் வேதியல் மாணவர்கள் கூற.. தமிழ் தனது தோழிகளின் கையை விடுத்து வேகமாக ஓடினாள்.
ஹே நில்லு டி! என ஜெஸி, ஆயிஷா இருவரும் ஓடினார்கள் தமிழின் பின்னால்.
கார் முகிலன் தேன் கூட்டை சீண்டி விட்டுட்டான்.
அடுத்த சந்திப்பு எப்படி இருக்குமோ?
*
அதே நேரம் இங்கே ரவுண்ட் அப் பண்ணுங்க என உரக்க கத்தினான் கண்ணன். பைக்கில் ஒரு இளவட்ட ஆடவன் பெண்ணுடன் அமர்ந்திருந்தான். முத்து சொன்ன படியே வண்டியை வளைத்து நிறுத்தினார்.
காக்கி சட்டையுடன் கம்பீரமாக இறங்கினான் கண்ணன். சார் என் கிட்ட லைசன்ஸ் இன்சூரன்ஸ் எல்லாமே இருக்கு என பிரபு நீட்டினான்.
வண்டிய விட்டு இறங்க முடியாதா சார்க்கு? மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? என கேட்டுக் கொண்டே முத்து மிரட்டினான்.
சார் என்ன பண்ணோம் நாங்க? என அந்த பெண் கத்திக் கொண்டிருந்தாள்.
முத்து வாக்கு வாதம் செய்து கொண்டிருக்க கண்ணன் விவரங்களை சேகரித்த படி, முத்து டார்பிக் ரெட் சிக்னல் டைமிங் முடியறதுக்குள் ஹீரோ சார் பாஞ்சு போயிருக்கார். அண்ட் ஜீப் சைரன் சவுண்ட் கூட தெரியாம 100 கிலோமீட்டர் வேகத்தில் போயிருக்கார். சோ சீக்கிரம் புரோசஸ் பண்ணுங்க என ஜீப்பில் அமர்ந்து கொண்டான்.
அக்கா என்ன பண்றது? என் கிட்ட பைசா இல்ல கம்மியா தான் இருக்கு?
சார் சில்லறை இல்ல GPay பண்ணலாமா? என கேட்டாள். அந்த மாடல் உடையழகி..
முத்து அவர்களை முறைத்தான். சார் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க அதுக்கு காரணம் எமர்ஜென்சி எங்களோட க்லோஸ் ஜான் ஹாஸ்பிடலில் சீரியஸா இருக்கான் அதுக்கு தான் பிளீஸ் பிளிவ் மி! என கண்களில் நீர் விட்டு கொண்டாள் அந்த மாடர்ன் உடையழகி.
நீங்க fine கட்டிட்டு தான் மா போகனும்! நீங்க ஒன்னும் ஆம்புலன்ஸ் ல வரல. என்றார் முத்து.
முத்து சீக்கிரம் முடிச்சிட்டு வாங்க இன்னும் எவ்ளோ நேரம் என தனது நேம் பேட்சை தேடினான் கார்வண்ணன்.
சார் அது இவங்க G pay பண்றேன்னு சொல்றாங்க.
கண்ணன் இறங்கி வந்து ஆன்லைனில் போட்டு விடுங்க. ரெண்டு அபராதத்தை கட்டிட்டா பிரச்னை இல்ல. என சொல்லி விட்டு திரும்பினான்.
சார் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க! நாங்க ரொம்ப எமர்ஜென்சில இருக்கோம் என கண்ணனின் முன் வந்து நின்றாள் பேரழகி.
No compramise என வண்டியில் ஏறி கொண்டான் கண்ணன்.
முத்து வாங்க என உத்தரவை பிறப்பித்தான் கண்ணன்.
கருவாயன் பெரிய லாட் லபக்கு தாஸ் என்னை மாதிரி ஒரு பொண்ணு இவன் கிட்ட பேசி இருக்குமா? என கைகளை முறுக்கிய படி வண்டியில் ஏறினாள்.
ஜீப் சைரணுடன் அவ்விடத்தை விட்டு கிளம்பியது. சார் எதோ அவசரம்ன்னு சொன்னாங்க விட்டுறுக்கணும். எதோ ஜான் ஹாஸ்பிடலில் இருக்காராம். என்றார் முத்து.
அது அவங்க பிரச்னை முத்து. ஹாஸ்பிடல் போறவங்க இத்தனை மேக் அப் பெயிண்ட் அடிப்பாங்களா என்ன? பொண்ணுங்கறதாள விட்டேன். இல்லன்னா ஓட்டிட்டு போன டிரைவர் கன்னம் பழுத்திருக்கும் என்றவன் கண்களை மூடினான் ஜீப் கமிஷ்னர் ஆபிஸ் செல்கிறது.
போச்சு 5000 fine போட்டுடாங்க மான்வி! உன்னை என பிரபு குதித்தான். டேய் அக்காக்கு மரியாதை கொடு என வண்டியில் ஏறி கொண்டாள். இரு உங்க அண்ணன் கிட்ட சொல்லி பணத்தை மொத்தமா வசூல் பண்றேன் என இருவரும் நேராக சென்றது அவர்களின் கல்லூரி மாணவர்கள் கெட் டூ கெதருக்கு.
அப்போ அந்த டாப் ஜீன் மான்வியா?
ரெண்டும் மோதலில் ஆரம்பிக்குதே!
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels