கண்கள் உன்னை தேடுது மானே (தேனே)

by Pradhanya kuzhali
1.1K views

அத்தியாயம் -1

கல்யாண விசயத்தை பத்தி பேசத்தான் வர சொன்னேன் கண்ணா! என உணவை வைத்துக் கொண்டே தன் மகனை தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தார் மகேஸ்வரி 

சாப்பிடுவதை நிறுத்தி விட்டு தன் அன்னையை முறைத்தான் கார்வண்ணன். 

“எனக்கே பிளான் பண்ணி ஸ்கெட்ச் போடுறீங்களா?” என கண்ணன் பற்களை கடித்தான். 

கண்ணா முதல்ல சொல்றத கேளு டா!  அப்புறம் கோப படு முதல்ல விசயத்தை கேளு. உன்னோட தங்கச்சி  பொன்மலர் கல்யாணத்தை பத்தி பேசுறேன்  என்றதும் கண்ணன் ( கார்வண்ணன்) கொஞ்சம் பணித்தது. 

ஆனால் சம்பவமே இனிமேல் தானே இருக்கிறது. மகேஸ்வரி மனதை திட படுத்திக் கொண்டு “கோபி மாமா வந்தாரு  டா!”

கண்ணன் எதையும் பேசாமல் சாதத்தை பிசைந்தான். 

மோகன் வேலையில் இருக்கான். அவனுக்கு பொன்மலரை கேட்டு..  என மகேஷ் முடிக்கவில்லை கைகளை இறுக்கி மடக்கி முறுக்கினான். 

“டேய் கண்ணா! கோபி என்னோட தம்பி டா!”

இது நீங்க தானா என நிமிர்ந்து தன் அன்னையை பார்த்தான் கண்ணன். மகேஸ்வரி தலை குனிந்தபடி நடந்தது நடந்து போச்சு! உங்க அத்தை குடும்பம் பண்ணதுக்கு என் தம்பி என்ன பண்ணுவான். 

“என்ன என்னோட அத்தையா?” என கண்ணனின் புருவம் உயர்ந்தது. 

தப்பு தான் அப்பாவோட இறுதி காரியத்தில் அப்படி நடந்து போச்சு. இப்போ வரைக்கும் மறக்க முடியல. ஆனால் அவங்களே நம்ம கிட்ட மன்னிப்பு கேட்டு வரும் போது ஒதுக்கி வச்சா பொல்லாப்பு ஆகிடும். அதனால் தான் நான் பொண்ணு பார்க்க வாங்கன்னு சொல்லிட்டேன். பார்வை என திட்டமாக பார்த்தார் மகேஸ்வரி. அதற்கு காரணம் காக்கிசட்டை காரன் சாப்பாட்டில் கை வைத்தால் அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என கோபமும் பட மாட்டான் மற்றவர்களை திட்டவும் மாட்டான். 

அவளுக்கு பிடிச்சிருந்தால் மட்டும் தான் இது நடக்கும் கண்டிப்பா அவளுக்கு அந்த குடும்பத்தில் யாரையும் பிடிக்காது என கண்ணன் கூற… 

மலருக்கு ஒகே என மகேஷ்வரி தன் மகனை வளைக்க  தயாராக இருந்தார். 

ஆக மொத்தத்தில் நீங்க முடிவு பண்ணிட்டு என்ன கூப்பிட்டு சொல்றீங்க? இதுல நீங்க மட்டும் கூட்டா? இல்ல கார் முகிலனும் உங்க பக்கமா? என தன் தம்பியை பற்றி கேட்டான். 

முகில் பற்றி கேட்டதும் இன்னும் நடுக்கம் வந்தது மகேஷ்வரிக்கு.  முதல்ல காட்டாரை அடக்கிட்டு புயல பார்த்துப்போம் என இருந்தார். 

அடுத்து கண்ணன் பேச வர அதற்குள் மகேஷ்வரி அடுத்த குண்டை இறக்கினார். அவங்க வந்ததும் நம்ம ஒரேட்டு போய் பொண்ணு  பார்த்திட்டு வந்திடனும் என கூறினார்

எது நடந்தாலும் நான் வர மாட்டேன். என் தங்கச்சிக்கு தேவையான நகை, கல்யாணத்துக்கு தேவையான பணம் எல்லாமே வரும் . என சாப்பிட்டு முடித்து எழுந்தான். 

உட்காரு என அழுத்தி அமர வைத்தவர் எட்சிலை விழுங்கி கொண்டு “அவங்க பொண்ணு பார்த்திட்டு போனதும் நம்ம திரும்பி போகனும்.” என சாதம் வைத்தார். 

எதுக்கு நாம்ப போகனும்? என உணவை பிசைந்தான். 

அது மான்விய பொண்ணு பார்க்க தான். என்றார் மகேஸ்வரி. 

ஓ!! முகிலனுக்கா? என கண்ணன் உணவை  பிசைந்தான். 

அண்ணன் இருக்கும் போது தம்பிக்கு எப்படி பண்ண முடியும்? மான்விக்கு உன்னை பேசி முடிச்சிட்டென். என்றதும் டமார் என தட்டு பறந்தது. 

மகேஷ்வரி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பதட்டத்துடன் மகனை பார்க்க…  நீங்க நினைக்கிறது ஒருகாலும்  நடக்காது. என வேகமாக கையை கழுவி விட்டு காக்கி சட்டையை மாட்டினான் கண்ணன். 

அவனது முகத்தில் கோபம் தகித்து கொண்டிருந்தது. விரக்தியா? ஏமாற்றமா? வலியா? வேதனையா? தவிப்பா? அது அவன் வாய் திறந்தால் தான் தெரியும். 

அவன் வேகமாக  முத்து வண்டிய எடுங்க என வெளியே வந்தான். கண்களில் நீருடன் வெளியே வந்த மகேஷ்வரி என் தம்பி பொண்ணு மான்வி தான் உன் பொண்டாட்டி. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே மொட்டை பையனா சுத்த்திட்டு இருப்ப? நான் தப்பு பண்ணிட்டேன். உன் அப்பன் போன போலீஸ் வேலைக்கு உன்னை போக அனுமதிச்சது தான் பெரிய தப்பா போயிடுச்சு. நீ மட்டும் நான் சொன்னதுக்கு சம்மதிக்கல நானும் பொன்மலரும் சுருக்கு போட்டுக்குவோம் என மிரட்டினார் வெளிப்படையாக… 

சார் என முத்து தயங்கி கொண்டே பார்க்க தன் அன்னையை பார்த்து முறைத்தவன். இப்போ உங்களுக்கு என்னை அவமான படுத்தனும் அதுக்கு தானே கங்கணம் கட்டிட்டு இருக்கீங்க. அந்த சிறுக்கி எல்லார் முன்னாடியும் கருவாயனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லணும். அதுக்கு தானே உன் தம்பி என்னை அவமான படுத்த பிளான் போட்டு வந்திருக்கார். 

நான் கேட்டதுக்கு பதில் சொல்லு நான் சுருக்கு கயிறு வாங்க போறேன் என மகேஷ்வரி நின்றார் விடாப்பிடியாக. 

கண்கள் சிவக்க தன் அன்னையை முறைத்த கார்வண்ணன் ஜீப்பில் ஏறினான். 

டேய் என்னைய மார்கெட்டில் இறக்கி விடு சுருக்கு கயிறு வாங்க..என சேலையை இடுப்பில் சொருகி கொண்டு வந்தார். 

என்னைய அவமான படுத்த கூட்டிட்டு போற நீ! எனக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் கேட்டேனா? என கண்ணன் தன் அன்னையை பார்க்க.. நான் சாக போறேன். உன்னால தான் உன் தங்கச்சி வாழ்க்கை போக போகுது நினைப்பு வச்சுக்க என கண்களில் நீர் வழிந்தது அவருக்கு. 

ஒரு சில நொடிகள் அமைதியில் கழிந்தது. வரேன். அவளே என்னை வேணாம்னு சொல்ல போறா! அப்போ தான் நீங்க அடங்குவீங்க! என்றான் கார்வண்ணன் IPS. 

“வெள்ளி கிழமை வந்திடு உன் மாமனார் வீடு பொன் மலரை பொண்ணு பார்க்க வராங்க.”

எனக்கு மீட்டிங் இருக்கு வர மாட்டேன். அண்ட் இந்த உறவு முறையை என் கிட்ட கொண்டு வராத. உனக்கு அவரு தம்பி அங்கேயே நின்னுக்க.. என்றான் பற்களை கடித்த படி. 

டேய் அவன் உன் வருங்கால பொண்டாட்டியொட அப்பா டா என்ன முத்து தம்பி நான் சொல்றது சரி தானே! உங்க சாருக்கு கொஞ்சம் புரிய வைக்கிறது? 

முத்து வண்டிய எடுங்க என அதட்டினான் கண்ணன் என்னும் கார்வண்ணன். 

கடவுளே இவனை சமாளிச்சாச்சு எப்படியாவது பொன் மலர் கிட்ட சம்மதம் வாங்கணும் என காத்திருந்தவர் நேராக அவள் படிக்கும் கல்லூரிக்கே சென்றார். M.sc படிக்கிறாள். 

நீ எதுக்கு மா வந்த? நான் முகில் அண்ணா கூட வந்திருப்பேனே என பொன் மலர் சொல்ல..  

உன் கிட்ட முக்கியமா பேசணும்! 

நானே வீட்டுக்கு வந்திருப்பேன் என்ன மா? சொல்லு அப்படி என்ன முக்கியமான விசயம்? என மலர் கேட்க.. ..

கண்ணனுக்கு கல்யாணம் ஆகிறதும் ஆகாததும் உன்னோட கையில் தான் இருக்கு என மகேஷ்வரி கூற..  நான் என்ன மா பண்ணனும்? என மலர் தன் அன்னையை பார்த்தாள். 

கோபி மாமா வீட்டுக்கு வந்தாங்க. மோகனுக்கு உன்னை கேட்டு… 

அண்ணாவுக்கு தெரிஞ்சா நடக்கிறதே வேற! அந்த குடும்பம் நமக்கு வேணாம். உன் தம்பி குடும்பம்  மொத்தமும் விஷம் மா! என கொந்தளித்தாள் பொன்மலர். 

மகேஸ்வரி  ஒரு பெரு மூச்சை விட்டு போதும் நிறுத்து நான் சொல்றதை முழுசா கேளு! அப்புறம் பேசு என்றார். 

அதற்குள்  பொன் மலரின் எண்ணுக்கு காவல்துறை லைனில் வந்தது. யாரு என மகேஷ்வரி கேட்க..  கண்ணன் அண்ணா தான் என போனை காட்டினாள். 

ஹே எடுக்காத உன்னோட மனசை மாத்த தான் போன் பண்றான். நான் சொல்றத கேட்டுட்டு பண்ணு என தடுத்தார். 

என்னோட மனசை மாத்தவா? எனக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் மா? என பொன் மலர் தன் அன்னையை புரியாமல் பார்த்தார். 

அது வந்து உன்னோட  கார் வண்ணனுக்கு மான்விய பேசி முடிச்சிட்டேன் என்றார் மகேஷ்வரி. 

என்ன மா சொல்ற? நிஜமா? ஆனால் அண்ணனை அவளுக்கு பிடிக்காதே! அவள் கிளியோபாட்ரா உலக அழகி ஐஸ்வரியா மாதிரி சீன் போடுவா? நம்ம அண்ணனை எப்டி அவள் கட்டிக்க சம்மதம் சொன்னா? நீ தேவையில்லாத வேலை பண்ணாத மா! என் அண்ணங்க ரெண்டு பேரையும் அவமான படுத்தும் எந்த விஷயமும் எனக்கு பிடிக்காது. கண்ணன் அண்ணன் கருப்பா இருக்குன்னு மட்டும் அவள் சொல்லிட்டா சிண்டை வெட்டி எடுத்திருவேன் என குதித்தாள் பொன்மலர். 

“அவனுக்கு கல்யாணம் ஆகணுமா வேணாமா சொல்லு! வேற எதுவும் தேவையில்லாம பேசாதே!” என மகேஷ்வரி கேட்க..  ஆகணும் தான் ஆனால் அந்த மான்வி அண்ணனை கருப்பா.. 

இரு மலரு! உன் அண்ணன் கல்யாணம் நடக்கும். 

எப்டி? 

மோகனை நீ கல்யாணம் பண்ணிக்கிடனும்! என்றார் மகேஸ்வரி. 

என்ன மா? என பொன்மலர் அதிர்ச்சியாக நின்றாள். 

யாரை கேட்டு உங்க இஷ்டத்துக்கு சம்மந்தம் பேசிட்டு வந்தீங்க? என் பொண்ணு கிளி மாதிரி இருக்கா! அவன் அப்போவே வட்டு கருப்பட்டி மாதிரி இருந்தான் இப்போ எப்படி இருக்கானோ என மல்லிகா இஷ்டத்துக்கு கத்தி கொண்டிருந்தார். 

எங்க அக்கா குடும்பத்தை விட்டு நான் விலகி போக காரணமே நீ தான் டி! வாய அடக்கு இல்லன்னா அறைஞ்சிடுவேன் என கத்தினார் கோபி. 

இப்போ நான் என்ன சொல்லிட்டேன்? என மல்லிகா எகிறி கொண்டு வர, மோகனுக்கு நான் பொன்மலரை பரிசம்  கேட்டுட்டேன்.  அதே போல எங்க அக்கா பரிசம் போட வருவாங்க. அவ்ளோ தான் என எழுந்தார். 

மோகா! என மல்லிகா கத்த..  மோகன் தன் அப்பாவின் அருகில் வந்து நின்றவன். எனக்கு சம்மதம் மா! நான் மலரை கட்டிக்க இஷ்டம்  என்றான். 

மல்லிகா உச்ச கட்ட அதிர்ச்சியிலும் கோபத்திலும் பார்த்தவர். என் பொண்ணு வரட்டும். அவள் என் பேச்சை தான் கேட்பா! உங்களை என்ன செய்கிறேன் பாருங்க. என சொல்லி விட்டு வேகமாக சென்றார். 

என்ன மோகா இது? என கோபி பார்க்க.. பா நான் பார்த்துக்கிறேன் விடுங்க. மான்வி வரட்டும் என நகர்ந்தான். 

யாரது காலேஜ் அசம்பிலில கடவுள் வாழ்த்துக்கு  கிருஷ்ணன் பாட்டு பாடினது? என ஆளுமையாக கேட்டான் கார்முகிலன். 

அது வந்து M.sc first year தேன்தமிழ் குழு சார்! என நிகழ்ச்சி பொறுப்பு மாணவி குழு கூறியது. 

அந்த கேங் இப்போ உடனே வரணும். வர சொல்லு என பிசிக்கள் கெமிஸ்ட்ரி லேப்பை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தான் கார்முகிலன். 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment