Episode-10
“என்னங்க?” எனத் தயங்கிக்கொண்டே அழைத்தவள். அருகில் சென்று பார்த்தாள்.அவன் முகமே சுணங்கிப் போயிருக்க!”என்னாச்சு?” என இன்னும் அருகில் சென்றவள். தயக்கத்துடன் அவனுடைய தலை மேல் கை வைத்தாள்.காய்ச்சல் கொதித்தது.”அச்சோ!” என அவள் வாய்மொழியில் சொல்ல,சிவா அந்தக் சத்தத்தைக் கேட்டு அவனுடைய கண்மணிகள் உருள, நெற்றியில் இருந்த அவளின் கையைப் “ப்ச்” என வேகமாகத் தட்டி விட்டான்.”என்னங்க காய்ச்சல் கொதிக்கிது! என்னாச்சு? என்கிட்ட சொல்லி இருக்க வேண்டியதுதானே!” என அவள் வேகமாக சமையல் அறை சென்று அவனுக்காக கெட்டிலில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அவனைப் பார்த்தாள்.
அவன் அதே போல படுத்திருக்க, ‘ஒருவேளை எழுந்து நிற்கக்கூடப் பலம் இல்லையா?’ என அவன் கையைப் பிடிக்க,வேகமாக மீண்டும் தட்டி விட்டான்.”என்னங்க என் மேல என்ன கோபம்? மூணு நாள்ல நீங்க ஒண்ணுமே சரி இல்ல.. சரியா சாப்பிடல! இப்போ காய்ச்சல் கொதிக்குது! நைட்டு பசிக்குதுன்னுதான சொன்னீங்க! அப்புறம் எதுக்கு சாப்பிடாமல் படுத்தீங்க?” என அவள் கேள்விகளாக மட்டும் கேட்டாள்.
அவன் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இருக்க, வேகமாக அவனைத் தூக்கி விடும் பொருட்டு அருகில் வந்தாள். மெல்ல தொட்டுத் தூக்கி விட,”ப்ச் எதுக்கு என்னைத் தொட்ட? தள்ளி போடி!” எனக் கோபமாக எழுந்து அமர்ந்தான்.உமையாள் விரக்தியுடன் அவனைப் பார்த்தாள்.
‘பாவம்’ என இரக்கப்பட்டு எல்லாவற்றையும் செய்தால், ‘எனக்கு இது தேவைதான்!’ எனப் பார்த்தாள்.”எதுக்கு இங்கே நிக்கிற? நான் எப்படி போனால் உனக்கென்னடி! போ! இங்கே இருந்து போ!” என மீண்டும் கட்டிலில் சரிந்தான்.”மிஸ்டர் சிவா! உங்களுக்கு ஃபீவர் அதுதான், நான்…” என அவள் அருகில் வர,”எதுக்குடி என் வாழ்க்கை உள்ளே வந்த?” என மெதுவான குரலில் முணுமுணுக்கும் சத்தம் கேட்டது.
உமையாள் அவன் பேசுவதைக் கேட்டு அப்படியே நின்றாள். ‘இது சரிப்பட்டு வராது’ என மீண்டும் கிச்சன் சென்று அவனுக்கு குடிக்க அரிசி கஞ்சி செய்து எடுத்து வந்தவள். “என்னங்க கொஞ்சம் எழுந்து இதைக் குடிங்க! எழுந்திருங்க,” என அவன் அருகில் உள்ள மேஜையில் வைத்தாள்.
சிவா மயக்கத்தில் இருந்தான். “என்னங்க என்னங்க” என அருகில் சென்று கன்னத்தைத் தட்டினாள். அவளின் கையைப் பிடித்தவன் அப்படியே இன்னொரு பக்கம் திரும்பிப் படுத்தான்.”என்…னங்க!” என மூச்சு முட்டிக்கொண்டே அவனுடைய உடல் சூட்டில் ஒரு நிமிடம் திடுக்கிட்டவள்.
“என்னங்க காய்ச்சல் கொதிக்குது கொஞ்சம் கஞ்சி குடிங்க மாத்திரை சாப்பிட்டு அப்படியே மெதுவாக ஹாஸ்பிடல் போயிட்டு வந்திடலாம்!” என அவள் சொல்லிக்கொண்டிருக்க… அதுதான் சிவாவின் காதில் அதெல்லாம் கிணற்றுக்குள் பேசுவது போல இருந்தது.”எதுக்குடி என்னைக் கல்யாணம் பண்ண? சொல்லு! இப்போவே சொல்லு!” என சிவாவின் கண்களில் இருந்து நீர் கோர்த்தது. அது காய்ச்சலில் வந்ததா? இல்லை அவளின் பிரிவில் வந்ததா? அவனுக்கே வெளிச்சம்..”நான் வேற வழி இல்லாம எங்க வீட்டில் என்னை தெரிஞ்சே தூக்கு மேடைக்குத் தள்ளிவிட்டுட்டாங்க.
என் அபியை மனசுல இருந்து கஷ்டப்பட்டுத் தூக்கி…” என வெம்பியவள். “நான் உங்களை லவ்வ்வ்…” என அந்த வார்த்தையைச் சொல்லவே கூசியது அவளின் உதடுகள். “உங்களை லவ் பண்ணேன்! அதனால் கல்யாணத்தை நிறுத்திட்டு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்,” என கண்களை மூடிக்கொண்டே கண்ணீருடன் பதில் அளித்தாள் உமையாள்.
ஏனோ இந்த வார்த்தைகள் உள்ளுக்குள் இருந்த கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக தணித்தது அவனுக்கு… ஆனால் புருவம் மட்டும் முடிச்சுடன், “நான் தொட்டா பிடிக்கலன்னு எதுக்குச் சொன்ன?” என அவளின் கழுத்தில் முகம் புதைத்தான் சிவா!
என்ன சொல்வாள்?”ஏன் சொன்ன?, ஏன் சொன்ன?, ஏன் சொன்ன? சொல்லுடி!” என வாய் மூடாமல் சூடான சுவாசத்துடன் கூறினான். கண்களில் நீர் நிற்கவில்லை. “நான் ஏன் இப்படி இருக்கேன்னு எனக்கே தெரியல! நீ இல்லாம!..” என சொல்ல வந்தவன். “நீ சொன்ன ஒரு வார்த்தைடி! என்னை லவ் பண்றேன்னு சொன்ன பார்த்தியா? என்னை எல்லாம் எவளும் அப்படி நினைச்சது இல்ல! நான் எவ்வளவு கருப்பா ரொம்ப கரடு முரடாக இருப்பேன்! உன் அக்காவுக்கு என்னை பிடிச்சது கூட உதவி உபகாரம் அப்படின்னுதான் இருந்தேன். எனக்கே அந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்னோட அம்மாவுக்காகத்தான் ஒத்துக்கிட்டேன். உன்னைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்ததும் அக்கம் பக்கத்தில் ஊரில் இருக்க எல்லாரும் என்னை ‘அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும் இந்த முகரையை வச்சுட்டு வளைக்க வந்துட்டான்’ அப்படின்னு கேவலமாக பேசினாங்கடி!” என சிவா பற்களைக் கடித்துக் கூறியவன்.
“அதைத்தான்டி என்னால தாங்க முடியல நான் யார் கிட்டயும் எதையும் எதிர்பார்த்தது இல்ல! அதையும் மீறி எதிர்பார்த்தால் என்னை விட்டுதான் போயிருக்காங்க அப்படி இருக்கும்போது நீ எதுக்கு? ஏன் வந்த? ஏன் என்னை பிடிக்கலன்னு சொன்ன? இந்த ஒரு வாரம் உன்னோட சமையலில் நான் சொர்க்கத்தை அனுபவிச்சேன். நீயே எனக்கு சொர்க்கம் தான்! ஆனால் உன் கிட்ட பேச வரும்போது ஊர்க்காரங்க சொன்ன வார்த்தைதான் காதில் விழுது. என்னை விட்டுப் போயிடு!” என அவன் விட…
உமையாள் வேகமாக எழுந்தாள். அவனைப் பார்க்க முற்றிலும் மயக்கத்தில் கிடந்தான். இந்த மூன்று நாட்களும் உணவு இல்லாமல் கிடக்கிறான். இதற்கு காரணம் தன்னுடைய ஒதுக்கமா? ‘நான் என்ன செய்தேன்! இப்படி இருக்கிறவன் கிட்ட போய் நான் பொய் சொல்லி இருக்கேன்னு தெரிஞ்சா என்ன நடக்கும்?’ என உள்ளுக்குள் உதறல் எடுத்தது.”உமையா! என்னோட தொடுதல் பிடிக்கலையாடி!” எனச் சொன்னவன் புரண்டுக்கொண்டே ஆழ் நிலை உறக்கத்துக்குச் சென்றான்.
இந்த வார்த்தை’ என நொந்துகொண்டே தன்னைப் பார்த்தாள். தன் கழுத்தில் உள்ள மஞ்சள் தாலி அவளைப் பார்த்துச் சிரித்தது. ‘உன் பொழப்பு சிரிப்பா சிரிக்குது!’ என்பது போல இருந்தது.’என்ன செய்ய? என்ன செய்ய?’ என யோசித்தாள்.ஏதோ மயக்கத்தில் மொத்தத்தையும் உளறி விட்டான்.
நல்லவேளை தன்னோட கடந்த காலத்தைப் பத்தி இவன் கிட்ட சொல்ல நினைத்தேனே! அதுக்கு இனி அவசியம் இருக்காது. என எதிரில் இருக்கும் பூஜை அறையைப் பார்த்தாள். ‘என்னோட தலை எழுத்து இப்படித்தான் இருக்கும் என இருந்தால் யாரால் மாற்ற முடியும்! நான் மிசஸ் சிவா! அவ்வளவுதான்’ எனக் குமுறி அழுதுகொண்டே ஒரு பெருமூச்சு விட்டாள்.வேகமாக மீண்டும் அவன் அருகில் சென்று “என்னங்க! என்னங்க!” என எழுப்ப,அசையாது மலை என்பது போல இருந்தான்.
“மாமா கால் பண்ணாரு! உங்களைப் பார்க்க வர்றாராம்!” எனச் சொல்ல… மெதுவாக அசைந்தான்.”அப்பாடா” எனப் பெருமூச்சு விட்டவள். “கொஞ்சம் இதைக் குடிங்க” என கஞ்சியை நீட்டிட, “வேண்டாம்! என் போன்,” எனத் தேடினான்.”முதலில் கஞ்சி அப்புறம்தான் போன்! ப்ளீஸ்,” என கண்களில் கெஞ்சினாள்.
அவன் அவளைச் சிவந்த விழிகளில் பார்க்க,உமையாள் அவனைப் பார்த்து, “நான் சொன்னது தப்புதான்! சாரி சோ சாரி! ப்ளீஸ் இதைக் குடிங்க!” என அருகில் நெருங்கினாள்.”எடுத்திட்டு போடி! இங்கே இருந்து போ! என் போனை கொடு,” என அவன் படுக்கையில் இருந்து எழுந்துகொள்ள முயற்சி செய்ய… எழுந்து நின்றவனுக்குக் கண்கள் எல்லாம் இருட்டிக்கொண்டு வருவது போல இருக்க, உமையாள் அவனைப் பதட்டத்துடன் பிடிக்க, நிலை தடுமாறி இருவரும் படுக்கையில் பொத்தென விழுந்தார்கள்.
“எதுக்குடி இப்படி என்னை டார்ச்சர் பண்ற? நீ நாளைக்கே உங்க வீட்டுக்குக் கிளம்பிடு! என் கூட இருந்தால் உனக்கு நரகம் தான்!” என அவளின் கழுத்தைப் பிடித்தான்.”நான் தான் உங்களை லவ் பண்றேன்! நரகமா இருந்தாலும் பரவாயில்லை!” என வேறு வழி இல்லாமல் வார்த்தையை உதிர்த்தாள்.”காதலா! குப்பையில் போடு! நீ எனக்கு வேணாம்! நீ ஒரு புதைகுழி!” என அவன் பேச வர,”தப்புதான்! உங்க தொடுதல் பிடிச்சிருக்கு! வேணும்னுதான் அப்படி கூறினேன்! நீங்க என்னை லவ் பண்ணணும்னு எனக்கு ஆசை! உங்களைச் சீண்டி விடத்தான் அப்படி சொன்னேன்!” எனப் பொய்யைக் கலர் கலராகக் கூறினாள் உமையாள். வேறு வழி இல்லாமல் கூறினாள்.
அடுத்த நொடி அவளின் உதடுகள் அவனுடைய உதட்டுக்குள்… எங்கிருந்து இந்த பலம் வந்தது? ஒருவித திகைப்புடன் பார்த்தாள். உள்ளுக்குள் இனம்புரியா கவலை, ‘ஏதோ மனதை ஒருவனுக்கும் உடலை ஒருவனுக்கும் ச்ச! என்னோட மனசு மாறக்கூட இடம் கொடுக்காமல் இவன் அட்டை பூச்சி போலத் தன் மேல் ஒட்டிக்கொள்வது அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.’முத்தம் தீவிரமானது. அமிர்தமே கிடைத்து விட்டது போல அவனுக்கு அவள்! உமையாள்…
இவள் சிவாவின் உமையாள்!சிவாவுடைய போனுக்குத் தொடர்ந்து போன் வந்துகொண்டே இருந்தது.கிட்டத்தட்ட பத்து முறை அழைப்பு வர எடுக்க நாதி இல்லை. சிவா எப்படி போனை எடுப்பான்? அவன் தான் உமையாளுக்குள் புதைந்துகொண்டிருக்கிறானே! போன் செய்த அபி நொந்துகொண்டே “இன்னும் கோபம் போகல போலயே! இவனை எப்படி சமாதானம் பண்றது. அடுத்த மாசம் இந்நேரம் ஊரில் இருப்போம் அதுக்குள் இவனை சமாதானம் பண்ணப் பார்த்தால் முடியாது போலயே! விடா கண்டன்” என நினைத்துக்கொண்டு பிரகாஷுக்கு அழைத்தான் அபி!
“டேய் நான் அபி பேசுறன்!””டேய் ராசா! சிவா பயங்கர கோபத்தில் இருக்கான். நீ இங்கே இருந்து போய் இந்த ரெண்டு வருஷமும் அதே மாதிரிதான் இருக்கான். கல்யாணத்துக்கு எங்களால் போக முடியல இன்னும் உக்கிரமாக இருக்கான்.”அபி புன்னகையுடன் “அப்போ சிஸ்டர் இங்கேதான் இருக்காங்களா?””ஆமா! இன்னைக்கு ஃபீவர்னு லீவு போட்டு இருக்கான்.”
“வாட்? லீவா?” என அபி அதிர்ச்சி ஆக…சிவா காய்ச்சலில் இருக்கிறான் என்பது அபிக்கு ஏன் அதிர்ச்சியாக இருக்கிறது? உமையாள் சொன்ன பொய், சிவாவின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துமா? அபி அடுத்ததாக என்ன செய்யப் போகிறான்?