Episode-11

மாலை நேரம், அலுவலகத்தில் பரபரப்புடன் பணிகள் நடந்துகொண்டிருந்தன. சிவாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்ததும் அபிக்கு ஒரே அதிர்ச்சி.அதிர்ச்சி செய்தி“டேய் ராசா! சிவா பயங்கர கோபத்தில் இருக்கான். நீ இங்கே இருந்து போன இந்த ரெண்டு வருஷமும் அதே மாதிரிதான் இருக்கான். கல்யாணத்துக்கு எங்களால் போக முடியலை; அதான் இன்னும் உக்கிரமாக இருக்கான்,” பிரகாஷ் டென்ஷனாகப் பேசினான்.

அபிக்கு மனதில் ஒரு சிறு குறும்பு. புன்னகையுடன், “அப்போ சிஸ்டர் இங்கேதான் இருக்காங்களா?” என்று கேட்டான்.“ஆமா! இன்னைக்கு ஃபீவர்னு லீவு போட்டு இருக்கான்,” பிரகாஷ் சொன்னதும் அபிக்கு அதிர்ச்சி.“வாட்? லீவா?” அபிக்கு நம்பவே முடியவில்லை.“என்ன அதிர்ச்சியா இருக்கா? எங்களுக்கும் அதேதான்! அவனுக்கு எல்லாத்தையும்விட வேலைதான் முக்கியம்னு இங்கே ஆபீஸ்ல வேலை செய்யுற பியூனுக்குக்கூட தெரியும். ஆனா, அப்படி இருக்கும்போது சிவா கிட்டத்தட்ட கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம், அதுக்கப்புறம் இப்போ காய்ச்சல்னு லீவு போட்டு இருக்கான். போன் பண்ணாக்கூட எடுக்க மாட்டறான் மச்சி,” பிரகாஷ் மேலும் கூறினான்.

அபி லேசாகச் சிரித்தான். “நல்ல மாற்றம் நடந்தா அதை அக்செப்ட் பண்ணிக்கணும் மச்சி! சிவா மேல கண்ணு வைக்காதீங்க. என் நண்பன் பொக்கிஷம் மாதிரி, இப்போ அவனைப் பார்த்துக்க ஒருத்தங்ககூட இருக்காங்க. எனக்கு அது போதும்,” திருப்தியுடன் கூறினான்.“எனக்கும் அவன் ஃப்ரெண்டுதான்டா! நீ எப்போ வர்ற?” பிரகாஷ் கேட்க, அபி பதில் சொன்னான்.“சரியா இன்னும் முப்பது நாள்ல வந்துடுவேன். சரி ஓகேடா, அப்புறம் பார்க்கலாம்!” என்று அபி போனை வைத்துவிட்டான்.அடுத்ததாக, அவன் போன் தன்னிச்சையாக யாழினியின் எண்ணைத் தேடித் தட்டியது. அழைப்பு போய்க்கொண்டே இருந்தது, யாரும் எடுக்கவில்லை. வழக்கம் போல அவன் தளராமல் யாழினியின் எண்ணுக்கு செய்தியைத் தட்டிவிட்டான்.“ஹே யாழ்… புரியுதுடி! நீ என்னை ரொம்ப மிஸ் பண்ற! I know… ஆனா, உன்னைவிட நான் கட்டுப்படுத்திட்டு இருக்கேன்.

இதுக்கு மேல என்னோட யாழினியை ஒரு நிமிஷம் கூட பிரிய மாட்டேன். வந்ததும் உங்க வீட்டுக்கு வந்து பேசி, கல்யாணம் பண்ணி, உன்னைக் கடத்திட்டு மறுபடியும் கனடா போயிடுவேன். எனக்குப் புரியுது உனக்கு நான் கனடா வந்தது பிடிக்கலை… ஆனா எனக்கு வேற வழி இல்லைடி! இந்த ரெண்டு வருஷத்துல மேடம் மனம் இறங்கவே இல்லை… இட்ஸ் ஓகே, உன்னை எப்படி கூல் பண்றதுன்னு உன் நந்துவுக்குத் தெரியும். வரேன்டி,” என அனுப்பிவிட்டு, கடைசியாக “லவ் யூ யாழ்” எனத் தட்டச்சு செய்துவிட்டு, ஒரு சில முத்தமிடும் இமோஜிகளையும் அனுப்பிவிட்டான்.மெல்லிடையாள் உமையாள்அங்கே, உமையாள் சிவாவின் அணைப்பில் இருந்தாள்.

அவள் உதடுகள் அவனுக்கென எழுதப்பட்டிருக்கிறதோ என்னவோ, கணக்கில்லாமல் முத்தங்களை வழங்கிக் கொண்டிருந்தான் சிவா. அவளைவிட்டு ஒரு இன்ச் கூடப் பிரியவில்லை. இது காமம் என்று சொல்லிவிட முடியாது. பார்த்ததும் காதலா, சொன்னால்தான் காதலா என்று பல வகை இருந்தாலும், இந்த உணர்வை எப்படி விவரிப்பது என அவளுக்கே தெரியவில்லை.சிவா அவளின் உதடுகளைவிட்டு கழுத்தெலும்பில் முகம் புதைத்துக் கொண்டான். அப்படியே கிடந்தான்.உமையாள் உதட்டைக் கடித்துக்கொண்டு ஆடாமல் அசையாமல் இருந்தாள். அவனுடைய மூச்சுக்காற்றுதான் அவளின் நாசியில் நிறைந்தது.

முற்றிலும் ஆண் வாசம் அது; அதில் சிவவாசம் என்று பெயர்.“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருப்பீங்க! கொஞ்சம் எழுந்து அந்தக் கஞ்சியைக் குடிங்க?” என்று கூறினாள் உமையாள்.“நீ ஊட்டிவிடு! அப்போ குடிக்கிறேன்!” என்று சிவா சொல்ல, ‘எல்லாம் என் தலையெழுத்து’ என்று நினைத்தவள், வரவழைக்கப்பட்ட சிரிப்புடன், “ம்ம் எழுந்து உட்காருங்க!” என்று அவனுக்கு மெதுவாக ஸ்பூன் கொண்டு ஊட்டினாள்.

இரண்டு கிண்ணத்தையும் முடித்து, தண்ணீர், மாத்திரை எனப் பத்து நிமிடத்தில் முடித்தான்.“சரி நான் போய்…” என்று அவள் விலக, சிவா அவளை இழுத்துப் போட்டுக்கொண்டான். “எனக்குத் தூக்கம் வருது, கம்பெனி கொடு! இங்கே என் பக்கத்தில்தான் நீயும் தூங்கணும்! சோபாவுக்குப் போகாதே.”“அப்போ நான் சாப்பிட வேண்டாமா? கிட்டத்தட்ட இந்த நாலு நாளும் சரியா சாப்பிடவே இல்லை… எனக்கு ரொம்ப பசிக்குது,” என்று உமையாள் வாய்விட்டுச் சொல்ல, “நீயும் சாப்பிடலையா?” என்று வாய்மொழியாகக் கேட்டவன், ‘எப்படி முடியும்? என்னை மனசுல வச்சிட்டு அவளால் எப்படி சாப்பிட முடியும்!’ என உள்ளுக்குள் ஆணவத்தால் பூரித்துப் போனான்.

“சரி, நீ போய் சாப்பிட்டு வா, இங்கே என் பக்கத்தில் வந்து தூங்கு! உன்னை ஈவ்னிங் ஒரு இடத்துக்குக் கூட்டிட்டு போகணும்,” என்று சொல்லிவிட்டு, அப்படியே படுக்க மனமில்லாமல் அவளின் உதட்டைக் கடித்து, மாத்திரையின் கசப்பை அவளின் நாவுக்குப் பரிமாறியவன், அவளின் சர்க்கரைக் கட்டி உதட்டைத் தன் நாக்குக்கு மாற்றி, திருப்தியுடன் உறங்க ஆரம்பித்தான்.உமையாள் வேகமாக எழுந்து பாத்ரூம் சென்று கதவை அடைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். உள்ளுக்குள் ரணமாக இருந்தது. உண்மையைச் சொல்ல வழியில்லை. சொன்னால் அது எப்படித் திரும்பும்! தன்னுடைய மனது மாறும் வரை அவன் பக்கத்தில் வராமல் இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், அவ்வளவு சீக்கிரத்தில் தன்னுடைய அபியை மறக்க முடியுமா? என கண்கலங்கித் துடித்தது.‘என்னுடைய அபியா? இனி அந்த வார்த்தை எனக்குச் சொந்தம் இல்லையே!’ எனக் குமுறி அழுதது பாவையின் மனம்.மீனாஅங்கே மீட்டிங் ஹாலில் அனைவரும் கூடியிருக்க, வெகு சிரத்தையாக பேங்கிங் அப்ளிகேஷன் ப்ராஜெக்ட் பற்றி மொத்தமும் விளக்கிவிட்டு, அனைவரின் கருத்தையும் கேட்டுவிட்டு மீட்டிங்கை முடித்தாள் மீனா.

அனைவரும் கிளம்பி வேலையில் மூழ்க, “பிரகாஷ்!” என அழைத்தாள்.“சொல்லுங்க மேம்!”“பிரகாஷ்!” என மீண்டும் அழைத்தாள்.“ம்ம் மீனா! என்ன விஷயம்?” எனக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே கேட்டான் பிரகாஷ்.“கனடாவில் இருந்து ரிட்டர்ன் ஆகிறதா கேள்விப்பட்டேனே? எப்போ வராங்க? வர்றான்?” மீனா கேட்டாள்.‘உன்கிட்ட அவன் சொல்லலையா?’ என்பது போல அந்தப் பார்வை இருக்க, “சொல்லு பிரகாஷ்,” என ஆர்வத்துடன் முகத்தைப் பார்த்தாள் மீனா.பிரகாஷ் ஒரு பெருமூச்சை விட்டு, “ஈவ்னிங் பேசலாமா?” என்று கேட்டான்.“நீ என்ன சொல்லப்போறேன்னு தெரியும். என்கிட்ட இருந்து தப்பிக்க… என்னை அவாய்ட் பண்ணத்தான் அபி கனடா போனான்.

I know…”இந்த முறை பிரகாஷ் கோபமாக, “அப்புறம் எதுக்குத் தொங்கிட்டு இருக்க? நீ எவ்வளவு பெரிய இடத்தில் இருக்க? அப்படிப்பட்ட உதாசீனக் காதல் உனக்கு வேணுமா?” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, மீனா தன்னைச் சரிசெய்து கொண்டு, “வேணும்!” என ஏக்க விழிகளுடன் பார்த்தாள்.“இந்த பொண்ணுங்களை திருத்த முடியாது,” என பிரகாஷ் வெளியே சென்றான்.மீனா யோசனையில் ஆழ்ந்தாள்.

தொடரும்.

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.