Episode-12
உமையாள் கண்ட சிவாஉமையாளின் மார்பில் முகம் புதைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான் சிவா. அவன் அருகாமையில் லேசாக நெளிந்தவள், பிறகு எப்படித் தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.மாலை நேரம் ஆகிவிட்டது. உமையாள் மட்டும் படுக்கையில் இருந்தாள். அவளுக்கு முன்னாடியே சிவா எழுந்துவிட்டான். அவன் காபி போட்டு எடுத்து வந்தவன், தூங்கும் அவளை உற்றுப் பார்த்தான்.
பிடித்தது. மிகவும் பிடிக்கிறது. காரணம், தன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி கட்டிப்பிடித்திருக்கிறாள். இத்தனை நாட்களில் இருந்த கோபமும், வெறுப்பும் எப்படி மறைந்து போனது என்று தெரியவில்லை.நேராகக் கண்ணாடியின் முன் சென்று தன் முகத்தைப் பார்த்தான். ஒட்டிய புருவங்கள், கூரான மூக்கு, தடித்த உதடுகள், நெருங்கி வளர்ந்த மீசை மற்றும் தாடி. அவன் நிறம் கறுப்பு (விஜய் சேதுபதி போல). கூடவே, நெற்றியில் ஒரு கீறல் தழும்பு, உதட்டில் கூடச் சிவந்த தோல் இல்லை, உதடு நாவல் பழத்தின் நிறத்தில் இருக்கும். இப்படிப்பட்டவன் குணத்தில் தன்னைத்தானே சுருக்கிக் கொண்டான்.
யாரிடமும் ஒட்ட மாட்டான். அவனுடைய நெருங்கிய வட்டம் அபினந்தன், பிரகாஷ், கணேஷ், திவ்யா, மீனா, வானதி மட்டுமே.சிவாவுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவன் ஒருவனே, அபி. (பின்னாடி ஆப்பு கூட நெருக்கமா இருக்கு!)சிவா தன்னைப் நினைத்து கர்வம் கொண்டான். அதுவும் முதன்முதலாக அவளால். ஒரு பெருமூச்சை விட்டு அவளைப் பார்த்தான். சிலாகித்துப் போனான். உமையாள் அப்படியே அவனுக்கு எதிர்மாறாக, நல்ல நிறத்தில் இருப்பாள். பளிங்கு போல மின்னும் அவள் தேகம்.
அதற்காக ஒன்றும் அவள் மேல் மோகம் இல்லை. ஒரே ஒரு வார்த்தைதான், காதல்! சிவா அவளின் அருகில் வந்து, “உமையா… உமையா…” என அழைத்தான்.கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்து கொண்டு எழுந்து அமர்ந்தாள். காபியை நீட்டினான். அவள் கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்க்க, “ம்ம் வாங்கிக்க,” என நீட்டினான் சிவா.வாங்கி ஒரு மடக்கு குடித்தாள். அதில் காபி பவுடர் கொஞ்சம் அதிகமாக இருக்க, கசந்தது. அவளின் முக மாற்றத்தைப் பார்த்தவன், “கசக்குதா?” என்றான்.“ம்ம் ஆமா!”அவன் சிரித்துவிட்டு, “சாரி, அது என்னோட கப். உனக்கு இது சரியா இருக்கும்,” என நீட்டினான்.வாங்கி குடித்தாள். ‘இது கொஞ்சம் தேவல போல…’இருவருக்கும் இடையில் அமைதி மட்டுமே இருந்தது. காபி குடித்து முடித்ததும், “சரி நீ கிளம்பு, நம்ம ஒரு இடத்துக்குப் போகணும்,” என்றான்.‘எங்கே?’ என்று அவளின் பார்வை இருக்க, “கிளம்புமா!” என அவளைத் தள்ளினான். ‘நம்ம கனவில் இருக்கோமா? எப்போ பாரு இஸ்திரிப் பெட்டியில் இருக்கும் நெருப்பு கங்கு போலத் தகித்துக்கொண்டே இருப்பான். இன்று அப்படியே வேற ஆளாக இருக்கிறான்,’ என்று தோன்றியது. அதே நினைப்பில் குளித்து முடித்து வந்தாள்.மஞ்சள் வண்ணத்தில் அவளிடம் இருக்கும் புடவையை எடுத்து வைத்தான். அதைப் பார்த்ததும், அவளின் முகம் மாறியது.
உமையாளுக்குப் பொருந்தாத வண்ணம் என அவள் நினைப்பது மஞ்சள் வண்ணத்தைத்தான். “இது உனக்கு நல்லா இருக்கும்,” என உடையைப் பார்த்துக்கொண்டே கூறினான்.“சரி,” என எடுத்து அணிந்து கொண்டாள். அவனைப் போலவே அந்தப் புடவையும் பிடிக்கவில்லை. அவளுடைய உணர்வில், அந்தப் புடவை மொத்தத்தில் சிவாவின் வாசம் வீசுவதைப்போல ஒரு உணர்வு, அதை சகித்துக் கொண்டாள் உமையாள்.“எங்கே போறோம்?” எனக் கதவைப் பூட்டும் போது கேட்டாள் உமையாள்.“இவ்வளவு தூரம் கேட்கிற? சரி சொல்றேன். உனக்காக போன் வாங்கி கொடுக்கலாம்னு நினைச்சேன். கூடவே கொஞ்சம் டிரஸ்,” என அவன் அவளின் முகத்தைப் பார்த்தான்.“என்கிட்ட ஆல்ரெடி போன் இருக்கு,” எனத் தயங்கிக் கொண்டே கூறினாள்.“இருக்கா? அதைத்தான் உன் அம்மா கிட்ட கொடுத்துட்டு வந்திட்டியே!”“இல்லை, நான் பேங்கில் லோன் போட்டு போனும், லேப்டாப்பும் வாங்கி இருக்கேன்,” எனத் தயங்கிக் கொண்டே கூறினாள் உமையாள்.
இந்தச் செய்தி அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுக்க, முகத்தில் அந்த நொடியே சுருக்கம்; அதுவும் கண்களில் அப்பட்டமான கோபம். அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “வேலையா? என்ன வேலை? நீ என்ன படிச்சிருக்க? என்ன போன் வாங்கி இருக்க?” என அடுக்கடுக்காகக் கேள்வியைக் கேட்டுக்கொண்டே பூட்டிய கதவைத் திறந்தான்.உமையாள் அவளுடைய லேப்டாப் மற்றும் போன் இரண்டையும் எடுத்து அவன் முன் வைத்தாள். தாடியை நீவிக்கொண்டே பார்த்தவன் வெறும் அமைதியை மட்டும் வெளிப்படுத்தினான். ஆனால் கண்களில் ஆச்சரியம்.ஐபோன், அதே கம்பெனி லேப்டாப். ‘அப்போ மேடம் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை… இதை ஏன் என்கிட்ட சொல்லல?’ என்று அந்தப் பார்வையில் அப்பட்டமான கோபம்.“அது நானே சொல்லணும்னு இருந்தேன். நீங்க நீங்களே கேட்டுட்டீங்க…
எனக்கு படிச்சிட்டு வீட்டில் இருக்க இஷ்டம் இல்லை. அங்கேயே கண்டின்யூ பண்ணலாமா, வேண்டாமான்னு ஆஸிலேசன் மோடில் இருந்தேன். நான் ‘XYZ’ கம்பெனியில் ஒர்க் பண்றேன். இங்கே ஹாஸ்டலில் ஸ்டே பண்ணி போயிட்டு இருந்தேன். இப்போ கல்யாணம்…” எனத் தயங்கிக் கொண்டே உமையாள் கூறி முடித்தாள்.“இன்ட்ரஸ்டிங்… கூடவே சர்ப்ரைஸிங்! பட் லிட்டில் பிட்… மோசமா ஏமாற்றம்…” எனப் புரியாமல் பேசினான்.அவள் பதட்டத்துடன் அவனைப் பார்க்க, சிவா கொஞ்சமே சிரிப்பது போல முகத்தை வைத்தவன், “உன்னை பத்தி நீ சொன்னது ரொம்ப பிடிச்சிருக்கு. நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். உனக்கு வேலைக்குப் போகணும்னு ஆசை, சரிதானே!”உமையாள் கண்கள் மின்ன, ‘ஆமாம்’ என்பதைப்போலத் தலையாட்டினாள்.சிவா எழுந்து நின்றான்.
“எனிவே, நீ விஷயத்தைச் சொல்ல மறந்திருக்க, ஆர் மறைச்சிருக்க. இப்போ நியாயமா என்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்ட…”உமையாள் அவனைப் புரியாமல் பார்க்க, “நல்லவேளை எனக்குப் பொய் சொன்னால் பிடிக்காது. சுத்தமா பிடிக்காது. எல்லாருக்கும் பொய் சொன்னால் பிடிக்காதுதான். ஆனால் என்னோட கொள்கை வேற மாதிரி. இப்போவே எல்லாத்தையும் சொல்லிட்ட… என்னைப் பத்தி நீ என்னை காதலிச்சதால் தெரிஞ்சு வச்சிருப்ப. ஆனாலும் சில விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ… எனக்குப் பொய் பிடிக்காது, அதனால் வர்ற கோபம் ரொம்ப மோசமா இருக்கும். என்னோட வெறுப்பு ரொம்ப மோசமானது. அதே நேரம் எனக்கு நம்பிக்கையானவங்களை கண்மூடித்தனமாக நான் நம்புவேன். என்னோட வேலையில நான் கரெக்டா இருப்பேன்.
இந்த மாதிரி இருக்கும் என்கிட்ட யாரும் ஒட்ட மாட்டாங்க!” என சிவா கூறி முடித்தான்.அவன் சொன்ன வார்த்தைகள் உள்ளுக்குள் புயலைக் கிளப்பியது உமையாளுக்கு.‘சோ, உமையாள் வாயில் இருந்து விஷயம் வரலைன்னா, அதைச் சொல்ல அபி வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை…’‘எல்லாத்தையும் தெளிவா சொன்ன இந்த சிவா பையன், தனக்கு உயிரிலும் மேலானவங்க விட்டுப் போனால் அதைத் தாங்கும் சக்தி இல்லைன்னு சொல்லாமல் போயிட்டான்.’‘போச்சு! எனக்கே பயமாதான் இருக்கு.’
தொடரும்.