Episode-14

“நான் ஒரு பொண்ணை நிஜமாவே லவ் பண்றேன் மீனா. உன்கிட்ட பொய் சொல்லி எனக்கு என்ன வரப்போகுது? என்னை நம்பு,” என்று அபி அனைத்தையும் கூறி முடித்தான்.“அப்படியா? அப்போ ஏன் இதை உன்னோட உயிர் நட்பு சிவா கிட்ட இன்னும் சொல்லவே இல்லை?” என்றாள் துக்கத்தை அடக்கிக்கொண்டு.“சொல்லணும்.

இப்போ ஊருக்கு வந்ததும் சொல்லிடுவேன். அவனை அழைச்சிட்டு போய் பேசி எனக்கும் யாழினிக்கும்… அதாவது எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறதே சிவாதான். அவளை நான் UG-ல இருந்து லவ் பண்றேன். படிச்சிட்டு இருந்தாள். அதுக்குள்ள என்னோட கேரியர்ல ஒரு ஸ்ட்ராங் பேஸ் பண்ணனும்னு தோணுச்சு. இப்போ அவளும் ஜாபில் இருக்கா. நானும் ஆன்சைட் ஃபினிஷ் பண்ணிட்டு வரப்போறேன். வந்ததும் அவளைக் கட்டிக்கிட்டு திரும்ப ஃபாரின் ரிட்டர்ன் ஆகிடுவோம்,” என்றான் அபி.அபியின் அனைத்து வார்த்தைகளும் கேட்கக் கேட்க மீனா நொந்து போனாள்.

கண்களில் இன்னும் கண்ணீர் முட்டிக் கொள்ள, அவளின் அமைதி அபிக்கு உள்ளுக்குள் பூகம்பத்தைக் கிளப்பியது. “மீனா!” என அழைத்தான்.“நான் உன்னைக் லவ் பண்றேன்னு உனக்கு எப்போ அபி தெரியும்?” என கேள்வி கணைகளை அவன் மேல் வீசினாள் மீனா.“அதுஉஉ!” என அபி தயங்க, “என் வாழ்க்கையில இப்படி விளையாடிட்டியே அபி! என்கிட்ட உன்னோட மனசுல இருக்கும் பொண்ணைப் பத்தி சொல்லி இருக்கலாமே! நான் உன் மேலே இப்படி ஆசையை வளர்த்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேனே?” என அவள் பக்க நியாயத்தை வரிசையாகப் பேசினாள்.அபி மௌனமாக இருக்க, “ரொம்ப சந்தோஷமா இருக்கு,” என விரக்தியாகக் கூறியவள் போனை வைக்கப் போனாள்.“ஹே மீனா, ப்ளீஸ் நான்… என்னை மன்னிச்சிடு. நீங்க பணக்கார சமூகம், உங்களுக்கு இந்த ஃபீலிங் எல்லாம் சும்மா டைம் பாஸ்னு நினைச்சுதான் நான் அதை பெருசா எடுத்துக்கல,” எனக் கூறினான்.“என்னோட உணர்வுகளுக்கும் பணத்துக்கும் என்ன சம்பந்தம் மிஸ்டர் அபினந்தன்? போதும்! உங்களோட விளக்கங்கள். என்னோட காதலைக் கொச்சைப்படுத்திட்டிங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

போதும் இதுக்கும் மேலே உங்ககிட்ட இருந்து தேவையான எல்லாமே கிடைச்சிடுச்சு,” என்று கூறியவள் போனை வைத்தாள்.அபி ஒரு சில நொடிகள் அப்படியே அமர்ந்திருந்தான். அதன் பின் அவளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. யாழினிக்கு மீண்டும் முயற்சி செய்தான். அவளை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் சிலாகித்துப் போனான்.சிவாவின் ஆசைகுளித்து முடித்து தனக்குப் பிடிக்காத உடையை அணிந்துகொண்டு வெளியே வந்தவளைப் பார்த்து கண்கள் பூக்க, உணர்ச்சிகள் மேலோங்க அவளையே வெறித்துப் பார்த்தான்.

“உமையா!” என உயிர் உருகும் அளவுக்கு அழைத்தான் சிவன்.அவனது பார்வையில் மாற்றத்தைக் கண்டுகொண்டவள், ‘உணர்வுகளை அடக்க முடியாதவன். எப்பொழுதும் அதே நினைப்பில் சுற்றிக் கொண்டிருக்கிறான்,’ என சிவாவைப் பார்க்கப் பார்க்க உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது. “சொல்லுங்க,” எனச் சோம்பல் முறித்துக் கொண்டே அருகில் சென்றாள்.“இந்த ட்ரெஸ்ல ரொம்ப அழகா இருக்கேடி!” என்றவன் உடையைக் கொஞ்சம் சரி செய்தபடியே பார்த்தான். ‘டிராகுலா போல தன்னை முழுங்கப் போகிறான்’ என உள்ளுக்குள் உதறல் எடுக்க, அவள் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.அவளின் கையைப் பிடித்தபடி படுக்கையில் அமர வைத்தவன், அவளின் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான்.

‘என்ன செய்கிறான்?’ என உமையாள் அவனைப் பார்க்க, “ஏன் நான் படுக்கக் கூடாதா?” என்றான் வாய்மொழியாக.“இல்லை, எனக்குத் தூக்கம் வருது,” எனக் கண்களைத் தேய்த்தாள்.“கொஞ்சம் நேரம்டி,” என அவளின் விரல்களைப் பற்றிக்கொண்டு கோதிக் கொடுக்கச் சொன்னான். மெல்ல மெல்ல கோதிக் கொடுத்தவள் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவனின் நெற்றியில் இருக்கும் தழும்பைப் பற்றிக் கேட்கத் தோன்றியது. ‘வேணாம்’ என உடனே தலையை உலுக்கிக்கொண்டாள்.அவளுக்கு உறக்கம் கண்ணைக் கட்ட, “ரொம்பத் தூக்கம் வருதா?” என அவன் வாய்மொழியாகக் கேட்டுவிட, “ம்ம்” என்றாள்.“எனக்குத் தூக்கம் வரலையே. உன்கிட்ட பேசணும்னு ஆசை. என்னை எப்படி லவ் பண்ண, அதைப்பத்தி கொஞ்சம் சொல்றியா?” எனக் கேட்டான்.

அவ்வளவுதான், பெண்ணவள் பதறியடித்து விழித்தாள்.“என்னாச்சு?” என அவளின் பதட்டத்தைப் பார்த்து கேட்டான்.“அது ஒண்ணும் இல்லைங்க. உங்களுக்குத்தான் காலையில் ஆபீஸ் இருக்கே,” என்றாள் பதட்டத்தை மறைத்துக்கொண்டு.“ஆமாம்ல, நீயும் இனி ஆபீஸ் போகணும். நான் மறந்தே போயிட்டேன். சரி தூங்கலாம்,” என அவன் தூக்கத்துக்குத் தயாரானான்.‘அப்பாடா, நல்ல வேலை விட்டுட்டான்’ என எழுந்து கொண்டவள் வேகமாக ஓட, “உமையா!” என குரலில் கடுமையுடன் அழைத்தான்.“என்னங்க?”“எங்கே போற?”“அது நான் அங்கே சோபாவில்,” எனத் திக்கித் திணறி கூறி முடித்தாள்.“எனக்கும் அங்கே இடம் இருக்குமா? ஏன்னா உன் கூடதான் இனி தூங்குவேன்,” என அவன் குறும்புடன் வேண்டுமென்றே கூற, “இப்போ எங்கே படுக்கணும்?” என அவள் கேட்டாள்.

அதற்கு அவனது பதில்தான் இன்னும் கோபத்தைக் கொடுத்தது; பட்டென ‘முடியாது’ எனப் பொரிந்தாள்.அப்படி என்ன சொல்லி இருப்பான்? “நான் எங்கே தூங்கணும்?” என உமையாள் கேட்க, “நான் உன்னோட நெஞ்சில் தூங்கணும்,” என்ற வரிகள் அவளது கேள்விக்கு பதிலாய் அமைந்தது.“முடியாது. அது அதெல்லாம் முடியாது,” என்றாள் வெடுக்கென.“என்கிட்ட என்ன வெட்கம்?” எனக் கையைப் பிடித்து இழுத்தவன் அடுத்த நொடி குழந்தையாக மாறினான்.

அவள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருக்க, “உமையாஅஅஅ!” என உயிர் உருகும் அழைப்பு.“என்ன?” எனச் சுரத்தே இல்லாத பதில். ஜிப் திறக்கும் சத்தம் கேட்டது. கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். “தூக்கம் வரலடி! இதுக்கும் மேலே உன்னைத் தொந்தரவு பண்ணக் கூடாதுன்னுதான் இப்படி,” என்றான் மோகம் கலந்த குரலில். அவள் எதுவும் பேசவில்லை. சுக வேதனையில் துடித்தாள்.“ஏன் இது எனக்கில்லையா?” எனக் கொஞ்சம் பல் தடம்; கூறாக ஷார்ப் செய்யப்பட்ட பென்சிலின் முனையில் சிறு வலி… அது உயிரை உருக்கியது. அவள் முனகிக்கொண்டே கிடக்க, “கேட்டதுக்கு பதில் சொல்லுடிஈஈஈ!” எனத் தாபக் குரலில் கேட்டான்.‘என்ன சொல்வாள்?’ சொல்வதற்கு ஒன்றும் இல்லை. உயிரை மொத்தமாக உரிஞ்சிக்கொண்டிருக்கிறான் டிராகுலா.

அவளின் கைகள் தன்னிச்சையாக அவனது தலையை வருட ஆரம்பித்தது. அதை அறியவில்லை அந்தப் பேதை.மீனாவுக்கு நிச்சயதார்த்தம்அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. ஆபீஸில் இருந்து அழைப்பு. “ஹலோ சொல்லுடா?” எனக் கடுமையைத் தத்தெடுத்துக் கொண்டது சிவனின் குரல். உமையாள் அவனுக்குப் பரிமாறிக் கொண்டிருக்க, போனின் மறுமுனையில் பிரகாஷ் விஷயத்தைக் கூற ஆரம்பித்தான்.

சிவா அதிர்ச்சி கலந்து, “என்ன சொல்ற?” எனக் கேட்க, “ஆமாம் மச்சி, இன்னைக்கு ஈவ்னிங் மீனாவுக்கு நிச்சயதார்த்தம். மீனாவின் அப்பாவுடைய பிஸ்னஸ் பார்ட்னர் பையன் ராம். இப்போதான் அப்ராட் ரிட்டர்ன் ஆகிருக்காரு. பெரிய இடம் போல. அதான் 24 மணி நேரத்தில் ஃபிக்ஸ் ஆகிடுச்சு. இன்னைக்கு ஆபீஸ் லீவ் மச்சி,” என்றான்.சிவா கண்கள் இடுங்க, உடனே மீனாவுக்கு அழைத்தான்.

தொடரும்.

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.