Episode-15
சிவாவின் ஆதங்கம்மீனா இன்னும் போனை எடுத்த பாடில்லை. சிவா இன்னொரு முறை அழைக்க, இந்த முறை அழைப்பு ஏற்கப்பட்டது. “மீனா என்ன காரியம் பண்ணி வச்சிருக்க?” என்று சிவா பேச ஆரம்பிக்க, உமையாள் அவனுக்கு உணவைப் பரிமாறிக்கொண்டே அவன் பேசுவதைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.
மீனா விரக்தியாகச் சிரித்துவிட்டு, “என்னைய என்ன பண்ண சொல்ற சிவா! அவ்வளவுதான், இது இப்படித்தான் போகும்னு எழுதி இருக்கு. நான் என் வாழ்க்கையோட விதி போல ஏத்துக்கிறேன்,” என்று கூறினாள்.“முட்டாள்தனமா பேசிட்டு இருக்காத மீனா! மனசுல ஒருத்தரை நினைச்சுக்கிட்டு இன்னொருத்தர எப்படி உனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுச்சு? இது அவனுக்குச் செய்யற துரோகம் இல்லையா?” என்று சிவா கேட்க, டம்மென கிச்சனிலிருந்து சத்தம். சிவா பேசுவதைக் கவனித்துக்கொண்டே சமையலறை சென்றவள், அவனுக்காகத் தண்ணீரை கெட்டிலில் இருந்து கிளாசுக்கு ஊற்றிவிட்டுத் திரும்ப, கடைசியாக அவன் சொன்ன வார்த்தை உள்ளுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்த, கை தவறி கீழே போட்டுவிட்டாள்.சத்தத்தைக் கேட்டு உணவு மேஜையில் இருந்து விருட்டென எழுந்தவன் அவளிடம் வந்து கண்களாலேயே “என்னாச்சு?” எனக் கேட்க, உதட்டைக் கடித்துத் துக்கத்தை அடக்கியவள் “ஒன்றும் இல்லையே” என்று தலையசைத்தாள்.
அந்தப் பக்கம் மீனா அமைதியாக இருக்க, சிவாவின் பார்வை இறுகி, “நீ எப்போ அவனை விரும்பினியோ, அப்பவே உன்னோட காதலை சொல்லி இருக்கலாம்ல! இன்னும் சொல்லாம இப்போ இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க? எப்படி இன்னொருத்தன் கூட உன்னால வாழ முடியும்? இது நீ கட்டிக்கப்போறவருக்கு செய்யுற துரோகம் இல்லையா?” என நெற்றிப் பொட்டில் அடித்தது போல கேள்விகள் தூள் பறந்தன.அவனது வார்த்தைகளைக் கேட்டு உமையாள் திகைத்துப் போனாள். உள்ளுக்குள் குற்ற உணர்வு அதிகமானது. மீனா மெதுவான குரலில், “விடு சிவா, நடந்தது நடந்து போச்சு. இதுக்கு மேல பழசை நான் நினைக்க விரும்பல,” என்று துக்கம் தொண்டையை அடைக்க அவள் பேச, “எப்படி இப்படி உன்னால மனசார பொய் சொல்ல முடியுது? உன்னோட காதல் எந்த அளவுக்குன்னு எனக்குத் தெரியும்டி!” என்று உரிமையாக ‘டி’ போட்டு அழைத்துக் கொண்டிருந்தான் சிவா.“அதுக்கு என்ன பண்ண சொல்ற? இனிமே இதைப்பத்தி பேசாதடா! நான் மறக்க நினைக்கிற விஷயத்தை, நீ நியாபகப்படுத்தாத. எப்படி இருந்தாலும் என்னோட காதல் ஒரு தலைபட்சம் தானே? அபியோட மனசுல வேற யாராவது இருக்கலாம்ல.
நிச்சயத்துக்கு உன் மனைவியோட வந்து சேரு, நான் வைக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு மீனா போனை வைக்கப் போனாள்.“ஒரு நிமிஷம் இருடி, நான் இன்னும் பேசி முடிக்கல,” என்று அவன் குரலில் கொஞ்சம் அழுத்தம் தெரிந்தது.உமையாள் உறைந்து பார்த்துக் கொண்டிருக்க, சிவா தீர்க்கமான குரலில், “நீ என் மச்சானை எவ்வளவு லவ் பண்ணனு எனக்குத் தெரியும். இந்த அளவுக்கு லவ் பண்ண நீ, உன்னோட காதலை எக்ஸ்பிரஸ் பண்ணாம திடீர்னு இப்படி ஒரு முடிவெடுத்ததுனு எனக்குத் தெரியல. உன்னோட நல்ல நண்பனா சொல்றேன்.
இன்னொரு முறை யோசிச்சு பாருடி. ஒரு தடவை எக்ஸ்பிரஸ் பண்ணு. அப்போதான் உன்னைப்பத்தியும் உன்னோட காதல் பத்தியும் அவனுக்குத் தெரியும். நீ மட்டும் இன்னொருத்தனுக்குச் சொந்தம் ஆகிட்டா, அது உனக்கு நீயே செய்யற துரோகம்டி. நான் வேணும்னா ஒரு தடவை அங்கில்கிட்ட பேசி பார்க்கிறேன்,” என அவன் எடுத்துக்கூறினான்.“ஐயோ! எனக்கு அபி வேணாம்டா சிவா! என்னை விட்டுடு! இல்லைன்னா நான் செத்திடுவேன்!” என மீனா நடுங்கும் குரலில் அறையே அதிரக் கத்தினாள்.
சிவா அதற்கும் மேல் எதுவும் பேசவில்லை. “சரி, உன் இஷ்டம்,” என போனை வைத்தான்.உமையாளின் வலிஉமையாள் மெதுவாக அவன் அருகில் வந்து, “என்னங்க, என்னாச்சு?” எனக் கேட்க, “என்னை கொஞ்சம் தனியா விடு,” என அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டான். பெண்ணவள் இங்கு உலைகலன் போல கொதித்துக் கொண்டிருந்தாள். ‘ஒருவேளை நான் அபியை காதலிச்ச விஷயத்தை முதல்லயே சொல்லியிருக்கலாமோ! இவர் மேலே எந்தத் தப்பும் இல்லையே! நான் இவரை விரும்புறேன்னு சொன்னதாலதான இவர் உரிமை எடுத்து, இப்போ இப்படி ஒரு வினையில் வந்து மாட்டிக்கிட்டேனோ? எப்படி இவர் கிட்ட நான் என்னோட கடந்த காலத்தைச் சொல்வேன்?’ என ஆயிரம் குமுறல் கேள்விகளில் சிக்கித் தவித்தாள்.
அந்தக் தவிப்பு, கூடவே மன சோர்வு என அனைத்தும் சேர்ந்து மாதவிடாய் வந்துவிட, சிவா அவளைப் பாடாய்ப்படுத்தி பாகாய் உருகிய அவளின் பாகங்கள் அனைத்தும் வலிக்க ஆரம்பித்தது.அவள் வயிற்றைப் பிடித்துக்கொண்டே தேதியைப் பார்த்தாள். ‘இவ்வளவு சீக்கிரம் வந்திடுச்சே’ என நினைத்தவள், உடனே ஆபீஸுக்கு போன் செய்து இந்த வாரம் முழுவதும் வொர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிக்கொண்டாள்.
நேராக வெளியில் இருக்கும் பாத்ரூமுக்குச் சென்றவள், தன்னை நிலைப்படுத்த முடியாமல் அங்கிருந்து வரவே முடியவில்லை. கண்கள் சொருக, மயக்கத்தில் அப்படியே அமர்ந்தாள். கண்ணைத் திறக்க முடியவில்லை. “அம்மாஆஆ!” என கத்தினாள் வலியில்.அரை மணி நேரம் கழித்து அறையில் இருந்து வெளியே வந்தவன், தன் மனையாளைத் தேட உமையாள் எங்கேயும் இல்லை. “உமையா! உமையா!” என அழைத்துக் கொண்டே கதவருகில் சென்றான்.
எல்லா இடமும் அமைதியாக இருக்க, பாத்ரூம் பக்கம் சென்றான். “உமையா!” என்று வேகமாக கதவைத் தட்டினான்.“என்னங்க…” என்று மெதுவாக பதிலளித்தாள்.“என்ன ஆச்சு? இவ்வளவு நேரம் பாத்ரூமில் என்ன பண்ற?”“அது… அது ஒண்ணும் இல்லை,” என்று அவள் தயங்க, “சொல்லு, என்ன ஆச்சு?” என்று அவன் கேட்டுக்கொண்டிருக்க, “எனக்கு இது பீரியட் டைம் ஆகிடுச்சு. எனக்கு டிரஸ் மட்டும் எடுத்து தரீங்களா?” என்று பற்களைக் கடித்துக்கொண்டு வலியில் அவள் முனக, அவளின் குரல் தொனியே உள்ளுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்த, “ஹே முதல்ல கதவைத் திறடிஈஈ!” என்று அதட்டினான்.“இல்லை, வேணாம்,” என்று அவள் தயங்கிக்கொண்டே கூற, “இப்போ கதவைத் திறக்கிறயா? இல்லை உடைக்கட்டுமா?” என்று அவன் ருத்ரமூர்த்தியாக நின்று கொண்டிருந்தான்.அவள் வியர்க்க விறுவிறுக்க, வலியை கட்டுப்படுத்திக்கொண்டே கதவைத் திறக்க, சிவா அவளின் நிலையைப் பார்த்து உள்ளுக்குள் நிலைகுலைந்து போனவன், “இந்த பாத்ரூம் ரொம்ப குட்டியா இருக்கு. வா நான் உன்னை பெட்ரூம் தூக்கிட்டு போறேன்,” என்று பக்கத்தில் வர, “வேணாம், என்னை தொடாதீங்க,” என்று அவள் தள்ளி நிற்க, “பைத்தியமாடி நீ! உமையா, என்னை டென்ஷன் பண்ணாத!” என்று அவளைத் தூக்கிச் சென்றான்.குளியலறைக்குத் தூக்கிச் சென்று, அவள் மறுக்க மறுக்க, வெதுவெதுப்பான நீரில் காலை அழுத்தி விட்டுக் கொண்டே, “எப்படிப் பதமா பிடிக்கணும்னு சொல்லிக் கொடு. உனக்கு என்ன தேவையோ என்கிட்ட சொல்லு.
உன்னைப் பார்த்துக்கிறதை விட எனக்குப் பெரிய வேலை எதுவும் இல்லை. உன்னோட முகத்தில் சந்தோஷம் இருந்தால்தான் நான் நிம்மதியா இருக்க முடியும்,” என சொல்லிக்கொண்டே குளிக்க வைத்து உடை மாற்றி அழைத்து வந்தவன் படுக்கையில் படுக்க வைத்தான்.அன்று முழுவதுமே அவளை ஒரு அசைவு கூட இல்லாமல் அப்படியே பார்த்துக்கொண்டான். தாங்கு தாங்கு எனத் தாங்கியவன்.
காலை, மதியம், இரவு என மொத்த சமையலும் செய்துவிட்டு அவளுக்குப் பணிவிடைகள் செய்தான். மூன்று நாட்களும் உபசரிப்பு ஏகபோகமாக இருந்தது. அவனுடைய அரவணைப்பில் மூச்சு முட்டியவளுக்கு, அவனிடம் எப்படி உண்மையைச் சொல்லப் போகிறோம் என குற்ற உணர்ச்சியில் தவித்தாள்.அந்த மாத இறுதியிலேயே மீனா மற்றும் ராம் இருவருக்கும் கல்யாணம் பிரம்மாண்டமாக நடை பெற்றது. அதற்கு உமையாளை அழைத்துச் சென்றான்.அதே நேரம் இங்கே அபிநந்தன் ஊருக்குக் கிளம்ப மீனாவின் தந்தை தியாகராஜன் அவனிடம் தனிப்பட்ட முறையில் பேசினார்.
தொடரும்.