Episode-16
அன்பில் திணறும் உமையாள்சிவா மற்றும் உமையாள் இருவருக்கும் திருமணமாகி முழுதாக மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. உமையாள் ஆபீஸில் கூட ரீஜாயின் செய்துவிட்டாள். சிவா ஆபீஸ் செல்லும்போது அவளையும் கொண்டு சென்று விட்டுவிட்டு, அவனது ஆபீசுக்குச் செல்வான். உமையாள் எத்தனையோ முறை அவனிடம் உண்மையைச் சொல்ல முயன்றாள்.
ஆனால் அவனது அலாதி அன்பில் அதை மூட்டைகட்டி தூர வீசிவிட்டாள்.“என்னங்க” என்னும் அழைப்பு அப்படியே மாறி, “மாமா”வாக மாறி இருந்தது அவ்வப்பொழுது. அதுவும் அவன் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த ‘மாமா’. இந்த அழைப்பு இல்லையென்றால், ‘என்னை எப்படி நீ காதலிச்ச?’ என அவன் கேட்க, அந்த வார்த்தையில் சில நேரம் பயத்தில் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி என அவளின் ஓவர் திங்கிங் ஒவ்வொரு உபாதையும் கொடுக்க, அவளுக்குக் காய்ச்சல் வந்து ஹாஸ்பிடல் சென்றதிலிருந்து இருவருக்குள்ளும் தாம்பத்தியம் இல்லை.
காய்ச்சலும் மாதவிடாயும் சேர்ந்து வர, உடல் உறவின் காரணம்தான் பயப்படப் பெரிதாக ஒன்றும் இல்லை என மருத்துவர் கூறியிருந்தும் சிவாவுக்கு மனம் கேட்கவில்லை. அன்றிலிருந்து இன்று வரை பொத்திப் பொத்தி அவளைப் பாதுகாக்கிறான்.எப்பொழுதும் அவன் அப்படித்தான் இருப்பான். வீட்டில் படபடவென தட்டச்சு செய்யும் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. இருவரும் தீவிரமாக வேலையில் இருந்தார்கள். ஒரு வழியாக முடித்து எடுத்து வைத்தவன், அவளைப் பார்க்க இன்னும் அவள் வேலையைச் செய்துகொண்டிருந்தாள்.
“உமையா!” என அவனது கணீர் குரல். அதற்கு அர்த்தம் ‘லேப்டாப் எடுத்து வைடி’ என்று பொருள். “இதோ மாமா,” என அவள் வேலையில் முனைப்புடன் இருக்க, சிவா கைகால்களை முறுக்கி உடல் சோம்பல் முறித்தவன், சாப்பிட அனைத்தையும் எடுத்து வைத்தான்.“உமையா!” என மீண்டும் அழைத்தான். “என்னங்க, கடைசி வந்துட்டேன். இன்னும் ரெண்டு நிமிஷம்,” எனச் சொல்லிக்கொண்டே அவள் வேலையைத் தொடர, மூன்றாவதாக அவன் அழைக்கவில்லை. நேராக அருகில் வந்துவிட்டான். “என்ன பழக்கம் உமையா?” என அவன் மிரட்ட, “இப்போவே அனுப்பணும், ப்ளீஸ். ஆனால் அது லோட்ல அப்படியே நிக்குது பாருங்க,” என லேப்டாப்பைத் திருப்பிக் காட்டினாள்.லேப்டாப்பின் திரையை உற்றுப் பார்த்தவன், அவளுக்கு அருகில் அமர்ந்து வேக வேகமாக ஏதோ செய்தான். உமையாள் கண்களை அகலமாக்கி அவனைப் பார்த்தாள்.
ஆம், சிவா அவளின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு முத்தம் கூடக் கொடுக்க மாட்டான். எங்கே முத்தமிட்டு அவளுக்கு மீண்டும் ஒன்றும் நினைவு வந்துவிட்டால், அந்தக் காய்ச்சல் வந்து பீரியட்ஸில் சுணங்கிப் படுத்துவிட்டால் உயிர் போய்விடும் அவனுக்கு. அதனால் அவன் அன்பில் திணறடிக்க, அவளுக்கு சிவா மிகவும் இயல்பாகிப் போனான்.“அவ்வளவுதான்டி! பாரு, முடிஞ்சது,” என அவன் காட்டிட, “மிஸ்டர் சிவா பயங்கர அறிவுஜீவி!” என கண்களில் மலைத்துப் போவது போல ஒரு பார்வையை விட்டாள்.
“சரிங்க வாங்க,” என அழைத்துச் சென்று இருவரும் உணவைச் சாப்பிட்டார்கள். அவளின் கள்ளம் கபடமற்ற முகத்தைப் பார்த்து, ‘திரைகடல் ஓடி திரவியம் தேடு’ என்ற வரிகளுக்கு ஏற்ப அவளிடம் ‘உன் தேடலைத் தொடங்குடா’ என ஆண்மை ஒவ்வொரு நிமிடமும் விரைக்கும். ஆனால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டுவிடுவான்.மீனா – ராம்: ஒரு புதிய அத்தியாயம்இந்நிலையில் மீனாவின் கணவன் ராம் ஒரு பெரிய ஆன்சைட் ப்ராஜெக்ட் டீலிங் அவனுக்குக் கிடைத்திருக்க, அதற்காக அவள் பார்ட்டி கொடுக்கத் திட்டமிட்டிருந்தாள்.
“நிச்சயம் எல்லாத்தையும் கூப்பிடணுமா? தேவையில்லாத செலவு பண்ற,” என அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டு கேட்டான் ராம். “அதுதான் நம்ம பெர்மனென்ட்டா அப்ராட் செட்டில் ஆகப் போறோமே! அதுக்குத்தான் ஒரு சின்ன பார்ட்டி,” என மீனா மெதுவான குரலில் கூற, அவளின் தோள்பட்டை இரண்டும் அழுத்திப் பிடிக்கப்பட்டது. “ஹிஸ்ஸ்” என முனகிக்கொண்டே அவள் பார்க்க, “எதுக்குடி கத்துற?” என அவளின் ரகசியத்தைக் கசக்கினான். “வ… வலிக்குது,” என அவள் கண்களில் நீர்த் துளிகள் துளிர்க்க, “வலிக்கும் தான். அதைத் தாங்கிக்கணும். இந்த வலியே தாங்கிக்க முடியலைன்னா நாளைக்கு என் பிள்ளையை எப்படிச் சுமப்ப?” என அவளின் உதட்டை நசுக்கிக்கொண்டே காமுக கண்களால் அவளின் வதனத்தைப் பார்த்தான். மீனா கண்களை மூடித் தாங்கிக்கொண்டாள்.
“மீனா!” என மோகத்தில் அழைத்தான். “எனக்காக இந்த ஒரு தடவை, ப்ளீஸ்,” என மீனா கேட்க, ராம் கண்கள் சிவந்து, “அந்தப் பிரகாஷ் உன்னைத் தலையில் தொட வர்றான். அந்தக் கணேஷ் சிரிச்சு சிரிச்சு பேசுறான். அந்த சிவா உன்னை ‘டி’ போட்டு கூப்பிடுறான்,” என உச்சகட்ட கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான்.மீனா வேகமாக அவன் உதட்டில் முத்தம் வைத்தவள், “ப்ளீஸ் ராம். இந்த ஒரு தடவை, பிஸ்னஸ் பார்ட்டிதானே!” என அவள் கேட்க, அலேக்காக அவளை அவனுக்கு மேல் கொண்டு வந்தவன், ராஜாவாகப் படுத்துவிட மீனா சேவகம் செய்ய ஆரம்பித்தாள்.
“வந்து தொலையட்டும் சனியனுங்க. இனி ஃபாரினா உன்னை வந்து பார்ப்பாங்க,” எனக் கூறிக்கொண்டே குலுங்கும் அவளின் உடலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ராம். ஆசை பொண்டாட்டி பேரழகியாக இருக்க வேண்டும். கூடவே அரண்மனை கிளியாக இருக்கணும் என காத்திருந்து கட்டியிருக்கிறான். ஆயிரம் பெண்களுடன் சல்லாபத்தில் இருப்பவனுக்கு மீனா என்பவள் மட்டும் அரியணை அலங்கரிக்கும் ராணியாக இருக்க வேண்டும்.இதுதான் மீனாவின் விதியோ? பார்ப்போம் அடுத்து என்ன நடக்கிறது என்று.
இதோ பார்ட்டிக்கான நாளும் வந்தது. கணேஷ், பிரகாஷ், திவ்யா, வானதி என அனைவரும் வந்தனர். பெண்களுக்கு அவள் ஃபாரின் செல்வதில் வருத்தம். அவர்கள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டே இருக்க, “ஏண்டி திவ்யா இப்படி இருக்கீங்க? நம்ம டெய்லி வீடியோ கால் பேசலாம்,” என்று மீனா சமாதானம் செய்ய முயன்றாள்.கணேஷ் அவளைப் பார்த்துவிட்டு, “ஆமாம், நீ இருக்கிறதால கொஞ்சம் ரிலாக்ஸா ஆபீஸ்ல சுத்திக்கிட்டு இருந்தோம். இப்போ ஆபீஸ் யாருக்கு கை மாறப் போகுதுன்னு தெரியலையே, வர்றவன் எப்படி இருப்பானோ அந்தப் பயமும் எங்களுக்கு இருக்குமா?” என்று கூறினான்.
மீனா முறைத்துக்கொண்டே, “அப்போ நான் போறது உங்களுக்குக் கவலையா இல்லை. ஆபீஸ்ல ஜாலியா சுத்துறதுதான் உங்களுக்கு வேணுமா?” என்று பொய் கோபம் கொண்டு அவர்களைப் பார்க்க, பிரகாஷ் கணேஷின் தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு, “அப்படி எல்லாம் இல்ல மீனு! நாங்க உன்னை ரொம்ப மிஸ் பண்றோம் தெரியுமா? உன்னை மாதிரி லீட் பண்ண யாராலயும் முடியாது. நாங்க மிஸ் பண்றோம்டி,” என்று அவன் கொஞ்சலாகத் தன் நண்பியைப் பார்த்து கூறிக் கொண்டிருக்க, “ஆமாம், சிவா எங்கே?” என்று மீனா அனைவரையும் பார்த்துக் கேட்டாள். வானதி கோபமாகப் பார்த்துக்கொண்டே, “அதுதானே பார்த்தோம்! நாங்க எல்லாம் உனக்கு முக்கியம் இல்ல. சிவாதான் உனக்கு முக்கியம்,” என்று முறைக்க, “அப்படி இல்லைடி. இன்னும் அவனோட பொண்டாட்டியை நான் பார்க்கவே இல்லை,” என்று மீனா கூறினாள்.
“நீ மட்டுமா பார்க்கல? எங்களுக்கும் இன்னும் அவன் காட்டவே இல்லை. பொத்திப் பொத்தி வச்சிட்டு இருக்கான். மூணு மாசம் ஆகிப்போச்சு வீட்டுப்பக்கம் வரவாடான்னு கேட்டா, யாரும் வந்துடாதீங்கன்னு மிரட்டுகிறான்,” என்று அனைவரும் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.“என்ன, ஒரே கொண்டாட்டமா இருக்கு?” என்று பின்னாலிருந்து ராமின் குரல் கேட்க, பட்டாளம் மொத்தமும் வாயை மூடிக்கொண்டார்கள். “அது… அது ஒண்ணும் இல்லை சார்,” என்று அவர்கள் தயங்க… ராம் தன்னை இயல்பாகக் காட்டச் சிரித்துக்கொண்டே, “சும்மா வந்து பார்த்தேன். நீங்க பேசிட்டு இருங்க.
பட் மீனா, நீ மட்டும் வாயேன். உன்னை ஒருத்தருக்கு இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கணும்,” என்று அவன் அழைத்துச் சென்றான்.“இதோ,” என மீனா அவன் பின்னால் சென்றாள்.அவர்கள் செய்வதையே பார்த்த வானதி, “இவரு நல்லவரா? கெட்டவரா? பார்க்க ரொம்ப பயங்கரமா இருக்காரு. எப்படி மீனா இவரை சமாளிக்கிறா?” என்று பயந்து கொண்டே கேட்டாள்.இப்படியே அரை மணி நேரம் செல்ல, மீனாவை ராம் விட்ட பாடில்லை. திவ்யா மீனாவையும் ராமையும் போட்டோ எடுத்துக்கொண்டே, “கண்டிப்பாக நாம் இங்கே இருப்பது அவருக்குப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன். அதனால்தான் மீனாவை நம்ம பக்கமே அனுப்ப மாட்டேங்கிறார்,” என்று கூறிக் கொண்டே அந்தப் படத்தை அபிநந்தனுக்கு ஷேர் செய்தாள்.
“ஏன் இந்தப் போட்டோவை யாருக்கு அனுப்புற?” என்று கணேஷ் கேட்க, “அது வந்து,” என்று தயங்கினாள் திவ்யா.பிரகாஷ் முறைத்தபடி, “ஒரு மாசத்துல வரேன்னு சொன்னா இன்னும் ஆளக் காணோம். என்ன அவன் எப்ப வரத்தான் உத்தேசம்?” என்று அபிநந்தனைப் பற்றிக் கேட்டான்.கணேஷ் எகத்தாளமாக, “அவன் எப்படி வருவான்? குற்ற உணர்ச்சி அவனை கொன்னுருக்கும். மீனா கல்யாணத்தைப் பார்த்திருப்பான். இப்படி ஒரு பொண்ணை மிஸ் பண்ணிட்டானே! அவனைவிட முட்டாள் வேற யாருமே இல்லை,” என்று கூறினான்.உடனே திவ்யா தயங்கிக்கொண்டே, “அவன் வராமல் இருக்கக் காரணமே மீனாவோட டாடிதான். ப்ராஜெக்ட் 3 மாசம் எக்ஸ்டென்ட் பண்ணி இருக்கார்,” என்று கூறினாள்.
அது எதற்காக என்று மூவருக்கும் புரிந்து போனது. மீனா கடைசி நேரத்தில் திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று மீனாவின் தந்தை தியாகராஜன் இப்படி ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறார். அவருக்கும் தெரியும் மீனா அபிநந்தனை உயிருக்கு உயிராக நேசிக்கிறார் என்று. தியாகராஜன் காதலுக்குத் தடை சொல்லவில்லை, அவருக்கும் அபிநந்தனின் மீது நல்ல அபிப்பிராயம் இருக்கத்தான் செய்தது.“சரி சரி வாங்க. இதுக்கு மேல இங்க இருந்தா கடுப்பா இருக்கு. அவளை விஷ் பண்ணிட்டு நாம இங்க இருந்து கிளம்பறதுதான் நல்லது,” என்று வானதி கூற, அதைக் கேட்ட இளைஞர்களுக்கும் சரி என்று பட, அவர்கள் நால்வரும் சென்று ராம் மற்றும் மீனா இருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, ‘ஏர்போர்ட் வருகிறோம்’ என்று சொல்லிச் சென்றார்கள்.‘நீங்க வராமல் இருப்பதே நல்லது’ என்று நினைத்துக் கொண்டான் ராம்.சரியாக அவர்கள் நால்வரும் வெளியே சென்ற சில நொடிகளில் சிவாவும் உமையாளும் அந்தப் பார்ட்டிக்கு வந்தார்கள்.
தொடரும்.