Episode -7
தேடுதல் வேட்டைஅதிகாலை மணி நான்கைத் தொட சிவா அவளைத் தொட்டான். இந்த ஒரு வார காலத்தில் அவளுக்கு இது சலித்துப் போயிருந்தது. அவளின் உணர்வுகளும் கூடவே மறத்துப் போயிருந்தன.”ஹே என்னடி தூக்கம்! நான் இன்னைக்கு ஆபீஸ் போயிடுவேன்! அதுக்கப்புறம் தூங்கிக்கோ! வேற என்ன வேலை வெட்டி முறிக்கப் போற?” என அதட்டிக்கொண்டே அவள் மேல் படர்ந்தான் சிவா! உமையாள் சோர்வில் பசை போல் ஒட்டிய கண்ணிமைகளை கஷ்டப்பட்டு இமைத்துப் பார்த்தாள்.
அவள் பார்த்த அடுத்த நொடி வேகமாக அவளின் உதட்டில் பாய்ந்தான் சிவா! முத்தமிட்டு தடித்த உதடுகளை, அவளின் உதடுகளை அவனுடைய வாய்க்குள் அடக்கிக்கொள்ள வேண்டும் போல தோன்றியது அவனுக்கு.அவளால் அந்த முத்தத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல் படுக்கையில் உள்ள விரிப்பை இறுக்கிப் பிடித்தாள்.சிவா இத்தனை நாள் அவளின் செய்கையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இன்று அவளின் முகத்தையும் கைகளையும் பார்த்தான். தன்னைத் தழுவும் நேரத்தில் படுக்கை விரிப்பை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறாள் எனப் பார்வை அவளைக் கொய்து கவ்வி இருக்க, மோகத்தில் இருந்தவனுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை.
அடுத்தடுத்து எனத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டான்.அவளைச் சுகித்துக்கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றியது. ஆனால் உமையாள் மனதில், ‘தினமும் இதையேதான் சொல்கிறான். ஆபீஸ் போறேன்! ஆபீஸ் போறேன்! அப்படின்னு சொல்லிவிட்டு நீ என்னை மயக்கிட்ட! என்னடி பண்ண? என்னை ஏதோ பண்றடி! என் மேல் சூனியம் வச்சிருக்கியா?’ எனக் கேட்டுக்கொண்டே அவளிடம் எல்லை மீற ஆரம்பிப்பான்.இன்றும் அதே போல்தான் கூறுகிறான். ‘என்ன செய்வானோ? சீக்கிரம் விட்டால் போதுமே! எனக்குக் குளிக்க வேண்டும், சமைக்க வேண்டும்’ என அவளுடைய வேலைகள் பட்டியலாகக் காத்துக்கொண்டிருந்தது.
சிவா அவளை அங்கம் அங்கமாக களவாடிவிட்டு முத்தெடுத்த சந்தோஷத்தில் அவளின் மேலேயே விழுந்தான். அதற்கும் உமையாள் கிட்ட இருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை! அவள் இப்படி இருப்பது, தனக்குக் கொட்டிக்கொட்டி சுகந்தத்தைக் கொடுப்பது அத்தனையும் மிகவும் பிடித்திருந்தது. ராஜ போதையாக அவளை உணர்ந்தான்.ஏழு மணிக்கு எழுந்தவள், வேகமாக குளித்து முடித்து காலை உணவு, வழக்கம் போல மதிய உணவு என அனைத்தையும் பம்பரமாகச் சுழன்றுகொண்டே செய்து முடித்தாள்.உடலை நெளித்து சோம்பல் முறித்துக்கொண்டே வந்தவன், நாசியில் உணவின் வாசனை சுவை அரும்பிகளைச் சுண்டி விட, ஆண்மகனின் வேட்கை இந்த வாசனைக்குச் சொந்தக்காரியின் மேல் பார்வை சென்றது.
‘இன்னிக்கும் லீவு போடலாமா?’ எனத் தொண்டை குறுகுறுத்தது. அவனுக்குப் பெண் பித்து! அது அப்படி இல்லைங்க, உமையாள் பித்து!அவன் போனை எடுத்து கம்பனியில் பேச, எதிர்முனையில் என்ன சொல்லப்பட்டதோ! “இடியட்ஸ்!” என மனதில் திட்டிக்கொண்டே “வரேன்” எனப் போனை வைத்தான்.அவன் ஒரு பெருமூச்சு விட்டு பால்கனியிலிருந்து உள்ளே வர, இன்ஸ்டன்ட் காபி ஆளை மயக்க ஒரு மிடுக்காக குடித்துக்கொண்டிருந்தாள் உமையாள்.அவளைக் கண்டுகொள்ளாமல் உடையை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தவன், எண்ணம் முழுவதும் தன் முத்தத்தில் தடித்த இதழ்களில், சிவக்க சிவக்க பதமான உதட்டில், காபி கப்பையும் காபியையும் தழுவும் உதட்டின் மீது இருக்க,அடுத்த நொடி கதவு தடாலடியாகத் திறக்கப்பட்டது. படபடக்கும் கூர்விழிகளில் சிவாவைப் பார்த்தாள் உமையாள்.
அவள் குடித்துக்கொண்டிருந்த காபிக் கப்பைக் வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.”என்னங்க உங்களுக்கு கா… காபி!” என மெதுவான குரலில் சொன்னவள், அவனைப் பார்த்தாள்.”சீக்கிரம் குடிச்சு முடி!””என்ன?” என அவள் பார்வை வேண்டா வெறுப்பாக அவனைப் பார்த்தாள்.உமையாள் பதட்டத்துடன் அவனைப் பார்க்க,சிவா அந்தக் காபிக் கப்பைப் வாங்கி அருகில் வைத்தவன், உதட்டுடன் அவனுடைய உதட்டை ஒட்டிக்கொண்டான். இனிப்பாக இருந்தது. விலகவே எண்ணம் இல்லை. அப்படியே தூக்கிக்கொண்டு குளியலறை சென்றான். அரை மணி நேரக் குளியல் முக்கால் மணி நேரம் போனது.
ஒவ்வொரு முறையும் களைத்துப்போனது அவள் உணர்வுகளும் தான்! அதன் பின் அவளுடன் வெளியே வந்தான். எதையோ சாதித்த உணர்வு! அவளை ஆசையுடன் பார்த்தான்.உமையாள் எந்த சலனமும் இல்லாமல் உடை மாற்றிக்கொண்டு உணவை எடுத்து வைத்தாள். ஃபார்மல் உடையில் பாந்தமாக உணவு மேஜைக்கு வந்தவன், இரண்டு பசியும் நீங்க திருப்தியுடன் சாப்பிட்டு முடித்து ஆபீஸ் கிளம்பினான்.’நிஜமாவே ஆபீஸ் போறான்!’ எனச் சோர்வுடன் சோபாவில் அமர்ந்தவளுக்குச் சோர்வு பின்னி எடுத்தது. அப்படியே தூங்கிப் போனாள். அவனுடைய அழிச்சாட்டியத்தில் இந்த ஒரு வாரமும் அனைத்தும் செத்துக்கிடந்தாள்.
மதியம் எழுந்தவள் நினைவில் தான் ஆபீஸ் வேலை நினைவுக்கு வந்தது. ‘இத்தனை நாள் எந்த தகவலும் சொல்லாமல் போயிட்டோமே? இப்போ என்ன பண்றது?’ என நினைத்தவள், ‘ஹான் முதலில் போன் பேசணும்! அதுக்கப்புறம் வீட்டில் இருந்தே ஒர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிக்கொள்வோம்!’ என முடிவுடன் அவள் அக்கவுண்ட் வைத்திருக்கும் அந்தத் தனியார் பேங்க் சென்று லோன் அப்ளை செய்தாள்.
ஹேண்டிராய்டு போனை வாங்கிக்கொண்டு அதற்குண்டான சிம் கார்டு என அனைத்தையும் முடித்துவிட்டு ஆக்டிவேஷனுக்குக் காத்திருந்தாள். ஒரு நாள் சென்றது. அடுத்த நாள் முதன்முதலில் தன் அலுவலகத் தோழி கீதாவுக்கு அழைத்தாள்.”ஹே என்னடி அக்கா கல்யாணத்துக்குப் போய் அங்கேயே செட்டில் ஆகிட்ட போல? இங்கே ஹாஸ்டல் வார்டன் உன்னைக் கேட்டு டார்ச்சர் பண்ணுது! மேடம் எப்போ வரதா உத்தேசம்? நம்ம தனி வீடு போலாம் அப்படின்னு சொன்ன என்ன ஆச்சு யாழினி?” எனக் கேட்டாள் கீதா.யாழினி என்கிற உமையாள் தன்னைச் சரி செய்துகொண்டு பேச ஆரம்பித்தாள்.
அவள் வேலைக்குச் செல்வது தெரிந்தால் சிவா என்ன செய்வான்? உமையாளின் இந்த புதிய முயற்சி, அவளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருமா?