Episode -8

“எப்போ மணி மாலை 6 ஆகும்?” எனக் காத்துக்கொண்டிருந்தான் சிவா! லேப்டாப்பில் பேருக்கு எதையோ தட்டிக்கொண்டிருந்தான்.அருகில் அமர்ந்திருந்த திவ்யா அவனுடைய செய்கையைப் பார்த்துவிட்டு, “என்னடா சிவா? ரொம்ப அவசரம் போல நிமிஷத்துக்கு நிமிஷம் டைம் பார்த்திட்டு இருக்க? என்ன விஷயம்?” எனக் கேட்டுக்கொண்டே அவன் பக்கம் திரும்பினாள்.”ஒன்னும் இல்ல திவி!” என வேலையை கண்டினியூ செய்தான் சிவா.பின்னால் சிரிப்பு சத்தம் கேட்க, வானதி அருகில் வந்து “ஹே திவி! இப்பதான் சிவா கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்காப்புல, புதுப் பொண்டாட்டி வீட்ல வெயிட்டிங்! அப்புறம் சாருக்கு டைம் தானே பார்க்க தோணும்!” எனச் சிரித்தாள்.

சிவா அவர்கள் பேச்சைக் கவனித்தாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் வேலையில் கவனமாக இருப்பது போலப் பாவனை செய்தான். “க்கும்! எப்போ ட்ரீட் கொடுக்கப் போற? கூடவே மிசஸ் சிவாவை எங்களுக்கு எப்போதான் காட்டப் போற? கல்யாண போட்டோ காமிடா! தங்கச்சி மா எப்படி இருக்காங்க? அப்படின்னு பார்க்கலாம்னா ஓவரா பிகு பண்ணிக்கிற?” எனச் சொல்லிக்கொண்டே பிரகாஷ் வந்தான். அப்படியே ஒவ்வொருவராக வந்து அமர்ந்தனர்.”இப்போ டைம் பார்த்தது ஒரு குத்தமாடா உங்களுக்கெல்லாம்!” என சிவா அனைவரையும் பார்க்க,”நீயா ட்ரீட் தரியா? இல்ல நாங்க உன்னோட காபி கப்பை உடைச்சு ட்ரீட்டை உருவாக்கவா?” என நட்பு வட்டங்கள் அவனைச் சுற்றிப் போட,சிவா அவனுடைய வாலெட்டிலிருந்து கார்டை எடுத்து அவர்கள் முன் வைத்தவன், “என்ன வேணுமோ போய் கொட்டிகோங்க!” எனச் சொல்லிவிட்டு மணி பார்க்க, பஞ்சிங் டைம் வந்துவிட்டது. வேகமாக லாக் அவுட் செய்தான்.”அடேய் ராசா! எங்களுக்கு ட்ரீட்டா முக்கியம்?” என கணேஷ் கார்டை எடுத்து வானதி கிட்ட கொடுக்க,வானதி தீவிர முகத்துடன், “ஒழுங்கா மிஸஸ்ஸைக் கூட்டிட்டு வா! இல்ல நாங்க மொத்த டீமும் அங்கே வந்து இறங்கவா? உன்னை டோலி கூட நெருங்கவே விட மாட்டோம்! என்ன சொல்ற?” என இடுப்பில் கை வைத்துக்கொண்டு அனைவரும் சிவாவைப் பார்க்க,சிவா கொஞ்சம் கடுமையான முகத்துடன், “வீட்டுப் பக்கம் வந்தீங்க அதோட நம்ம உறவு கட்டு! ட்ரீட் என்னமோ வாங்கிக்கோங்க! மத்தபடி என்னை எதுவும் கேட்காதீங்க!” என அவன் செல்ல,”டேய் டேய் தப்பிக்கப் பாக்குறியா? உன்னைப் பத்தி நாங்க தங்கச்சி மா கிட்ட எதுவும் சொல்ல மாட்டோம் நில்லுடா சிவா!” என அனைவரும் கத்த,சிவா கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டான். அவன் பின்னால் வேகமாக வந்து சேர்ந்துகொண்டார்கள் அனைவரும்.”இப்போ என்னதான் வேணும்? எதுக்கு டார்ச்சர் பண்றீங்க?” என அனைவரையும் பார்த்தும் சிவா கத்தினான்.

“டேய் இப்படியே அந்தப் பொண்ணு கிட்ட மூஞ்சைக் காமிக்காத! பயந்து போய் இன்னைக்கு நீ வேண்டாம் என்று ஓடிடப் போறா! எதுக்குடா இப்படி சிடுசிடுன்னு மூஞ்சை வச்சிருக்க?” என்று திவ்யா சொல்லிக்கொண்டே சிரிக்க,”அவன் அப்படி இல்லனாத்தான் ஆச்சரியம்,” என்று சொல்லிக்கொண்டே கணேஷ் வந்தான்.”இப்போ என்ன பிரச்சனை? உன் பொண்டாட்டியை எங்களுக்கு காட்ட மாட்டியாடா?””கல்யாணத்துக்கும் எங்களால வர முடியல! அட்லீஸ்ட் போட்டோவில் காண்பிப்பியான்னு பார்த்தால், அதையும் பண்ண மாட்டேங்குற! அப்படி மறைச்சு வச்சிருக்கியா? அவ்வளவு லவ்வா? சத்தியமா சொல்றேன்டா உன்னோட பொண்டாட்டி எங்க எல்லாருக்குமே தங்கச்சிதான்! நீ திவ்யாவுக்கும், வானதிக்கும் கூடப் பொறக்காத அண்ணன்! அதேபோல எனக்கு, கணேஷுக்கு, நிதிலேஷ் எல்லாத்துக்குமே உன் பொண்டாட்டி தங்கச்சிடா,” எனக் கூறினான் பிரகாஷ்.

சிவா – இமையாள் என்று “ம்ம் இமையாள் எங்களோட தங்கச்சி” என்று அனைவரும் சொல்லி அவனை நார்மலாக்க ட்ரை செய்ய,”இமையாள் இல்லை உமையாள்,” என்று சிவா அவளை நினைத்து முதன்முறையாகக் கூறினான்.”தப்பா சொல்லிட்டோமா?” என்று பிரகாஷ் யோசிக்க,திவ்யா யோசித்துக்கொண்டே “இல்லையே பத்திரிகையில இமையாள்ன்னு தானே போட்டு இருந்துச்சு!” என்று அவர்களுக்காக அடிக்கப்பட்ட ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில் பார்த்த நினைவில் வைத்து கூறினாள்.”உமையாள் தான்,” என்று அவன் வேகமாக நடந்தான்.

“சரி ஏதோ ஒன்னு எப்ப காட்டப் போற?” என்று அவர்கள் கேட்க,”ப்ளீஸ் என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க! இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்! நான் காட்டுறேன்!” என்று கூறினான் சிவா.வானதி ஒரு பெருமூச்சு விட்டு, “அப்போ ட்ரீட் இல்லையா?” என்று கேட்க,”நீங்க போய் சாப்பிடுங்க,” என்று சிவா கூறிக்கொண்டே வெளியே வந்தான்.”இந்த ட்ரீட்டுக்கான காரணமே? உன் பொண்டாட்டியை நம்ம குரூப்ல ஐக்கியம் ஆக்குவதற்குத்தான்! அவங்க வரலைன்னா எங்களுக்கு எதுக்கு ட்ரீட்டு எதுக்கு? இந்தா!” என்று கார்டைத் திருப்பிக் கொடுத்தார்கள்.சிவா மறுக்காமல் வாங்கிக்கொண்டான்.”அடப்பாவி பேச்சுக்காகக் கூட கூட்டிட்டு வரேன்னு சொல்ல மாட்டியா?” என்று வானதி கேட்க,”நான் தான் சொல்றேன்ல! இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், அதுக்கப்புறம் கூட்டிட்டு வரேன். ப்ளீஸ்! என்னை புரிஞ்சுக்கோங்க! நான் கொஞ்சம் டென்ஷனா இருக்கேன்! அவ்வளவுதான் சொல்ல முடியும்!” என்று சிவா வேகமாக அவனுடைய காரில் ஏறினான்.

நீ டென்ஷனா இல்லாம இருந்தால் தான் ஆச்சரியம்!’ என சொல்லிக்கொண்டேவானதி, திவ்யா இருவரும் ஒவ்வொரு பக்கமும் ஏறிக்கொள்ள, “ப்ளீஸ் ரெண்டு பேரும் பிரகாஷ், கணேஷ் கூடையும் போங்க! எனக்கு முக்கியமான வேலை இருக்கு!” என்று சிவா காரை ஸ்டார்ட் செய்தான்.”அந்த முக்கியமான வேலை உன் பொண்டாட்டி தானே,” என்று பெண்கள் சொல்லிச் சிரிக்க, கூடவே ஆண் நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

சிவா அவர்களை முறைத்துவிட்டு வேகமாக காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.’இவன் எப்போதான் சிரிச்சுப் பேசப் போறான்? எப்போ பாரு டென்ஷனாவே திரியிறான்.’உடனே வானதி சிரிப்பை அடக்கி கொஞ்சம் நார்மலாக வந்தவள். “அபி வந்துட்டா எல்லாமே சரியா போயிடும்! அதனால்தான் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சை வச்சிருக்கான். இந்த நாய் சிரிச்சு பேசும் ஒரே ஆளு அபி மட்டும் தானே!” என்று அவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு அவரவர் வீட்டுக்குக் கிளம்பினார்கள்.சிவா நேற்று ஆபீஸ் முடித்து வந்த நேரத்தை நினைவில் வைத்தவள். அதற்கு முன்பாகவே சமையல் வேலை அனைத்தையும் முடித்தாள்.

அவள் சிந்தையில் இன்று கீதா கிட்ட பேசியதுதான் நினைவில் வந்தது.”எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு கீதா!” என கூறிவிட்டாள் உமையாள்!”என்ன யாழினி! என்ன சொல்ற?” எனக் கீதா திடுக்கிட்டுக் கேட்க,”அது பெரிய கதை இப்போதைக்குச் சொல்ல முடியாது. நான் நேரில் வரும் போது சொல்றேன்,” என உமையாள் குரல் தழுதலுத்தது.கீதாவுக்கு மிகவும் கஷ்டமாகிப் போக, வருத்தத்துடன் “சரி எனக்கு என்ன என்ன பேசுறதுன்னு தெரியல யாழினி! சாரி! இப்போ இப்போ எப்படி இருக்க? எங்கே இருக்க?” எனக் கேட்டாள்.”சொல்றேன்! ஆனால் அதுக்கும் முன்னாடி எனக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் கிடைக்க எதுவும் வழி இருக்கான்னு பார்த்து கேட்டுச் சொல்றியா?” என உமையாள் கேட்டாள்.

கீதா ஒரு பெருமூச்சு விட்டு வேலையில் கவனம் செலுத்தியவள். “சரி எனக்கு இன்னைக்கு நைட் டூட்டி போய் விசாரிச்சு என்ன பிராசஸ் அப்படின்னு கேட்டுட்டு சொல்றேன்!””ம்ம் சரி!””நீ ரிசைன் பண்ணலயா?” எனக் கீதா கேட்க,”லீவு எக்ஸ்டென்ட் பண்ணிருக்கேன். நீ விசாரிச்சு சொன்னதும் அடுத்த ஸ்டெப் எடுக்கணும்! ஒர்க் ஃப்ரம் ஹோம் இல்லன்னா வேலையை விட்டு நின்னுட்டு வேற எதுவும் தான் பண்ணனும்!” என உமையாள் கூறினாள்.”

சரி விடு கேட்டு உனக்கு நாளைக்கு இன்ஃபார்ம் பண்றேன்,” எனச் சொல்லி போன் வைத்தாள் கீதா!காலிங் பெல் சத்தம் கேட்க, வேகமாக கதவைத் திறக்க ஓடினாள் உமையாள்.இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. ‘வந்துட்டார். இனி என் நிம்மதி போச்சு!’ என முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு கதவைத் திறந்தாள் உமையாள்.

அவளைப் பார்த்த அடுத்த நொடி சிவாவுக்கு ஏதோ ஒரு நிம்மதி. வேகமாக உள்ளே வந்தவன், சோபாவின் மேல் லேப்டாப் பையை போட்டுவிட்டு கார் சாவியை மாட்டியவன், பின்னால் இருந்து தழுவிக்கொண்டான்.’பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை’ எனக் கத்த வேண்டும் போல இருந்தது அவளுக்கு.சிவா அவளை முன்னால் திருப்ப, வேகமாக விலக முயற்சி செய்தாள்.”என்னடி!” எனக் காட்டுப்புலி உறுமுவது போல சத்தம்.”க… கதவு!” எனத் திக்கித் திணறி வார்த்தையை உதிர்த்தாள்.

கதவு திறந்திருக்க, சிவா உமையாளைத் தழுவியது அவர்களுக்கு எந்தப் பிரச்சனையையும் ஏற்படுத்துமா? சிவா, உமையாள் பற்றிய உண்மையை தன் நண்பர்களிடம் எப்போது சொல்வான்?

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.