நெஞ்சோடு கலந்தவளே -9
அவளை எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு ஒரு அணைப்பைக் கொடுத்தான். இந்த ஒரு வார காலமும் அவன் வாழ்க்கை மாறிவிட்டது. அவனுடைய செயல்கள் அனைத்திலும் உமையாள் இருக்கிறாள்.அவளின் மென் உதட்டில் முத்தம் வைத்துக்கொண்டே குளியலறைக்குத் தூக்கிச் சென்றான். அரை மணி நேரம். அவளை எதுவும் செய்யவில்லை. ஆனால் அணைத்துக்கொண்டே ஒரு குளியல். அவனுடைய முகத்தைப் பார்க்கப் பெண்ணவளுக்கு அசிங்கமாகவும், அவமானமாகவும் இருக்க, அவனுக்கு முதுகு காட்டினாள்.அவள் வெட்கத்தில் திரும்பி நிற்கிறாள் என சிவா நினைத்துக்கொண்டான். அதன் பின் வெளியே வந்தார்கள். அவள் உடை மாற்றிவிட்டு நகர, அப்படியே தூக்கிப் படுக்கையில் போட்டுக்கொண்டான். வேகமாக அவளின் மாராப்பை விலக்கி வாசம் பிடிக்க ஆரம்பித்தான்.
ஆண், பெண் பார்த்து இருவருக்கும் பிடித்து நிச்சயம், திருமணம் என அனைத்தும் செய்து பிடித்த தம்பதிகள் கூட இந்த அளவுக்குக் கூடி இருக்க மாட்டார்கள். இங்கு வந்ததிலிருந்து அவளை விட்டு ஒரு நிமிடம் கூடப் பிரியவில்லை ஆணவன்.அவனுடைய மூச்சு முட்டும் முத்தமெல்லாம் அவளுக்குச் சாவும் நிலையை கொடுக்கும்.
பிடிக்காது எனக் கத்த வேண்டும் போல இருந்தது. ஆனால் நிராகரிக்க பெண்களுக்கு வாய்ப்பு இருக்கிறது எனத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேச முற்பட்டாள்.”என்னங்க!” எனப் பதட்டத்துடன் அழைத்தாள்.மூன்று முறை அழைத்திருப்பாள்.”ம்ம்” என அவளின் இடையிலிருந்து தலையைத் தூக்கினான்.”எனக்கு! எனக்கு இது பிடிக்கலை! ப்ளீஸ் விட்டுடுங்க!” என அழுகையை அடக்கிக்கொண்டு கூறினாள்.சிவாவின் புருவம் முடிச்சு போட வேகமாக அவளிடம் இருந்து விலகினான். சட்டையைப் போட்டுக்கொண்டு சோபாவுக்குச் சென்றுவிட்டான்.உமையாள் எழுந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவள்.
உடையைச் சரி செய்துகொண்டு டீயைத் தயாரித்து அவளுக்கு ஒரு கஃபும் அவனுக்கு ஒன்றும் எடுத்துக்கொண்டு சென்றாள்.”வேண்டாம்!” என ஒற்றை பதில் கூட இல்லை, அந்தக் கோப்பையைப் பார்த்ததும் வேறு புறம் திரும்பி கொண்டான்.இரவு உணவு சாப்பிட அனைத்தையும் போட்டு வைத்துவிட்டு அவனை அழைக்கச் சென்றாள்.மனுஷன் லேப்டாப்பில் சின்சியர் வேலை! அவளும் காத்திருந்தாள். அது வேறு வழி இல்லை என்பதால்,மணி பத்தை நெருங்க, ‘வேண்டாம்’ என கூட சொல்லவில்லை, கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.”என்னங்க சாப்பாடு?” என அவள் பின்னால் செல்ல,பதில் இல்லை.பனிரெண்டு மணிக்கு வந்தான். அவள் சாப்பிட்டு சோபாவில் உறங்கிவிட்டாள்.சிவா நேராகப் படுக்கைக்குச் சென்றான்.
அடுத்த நாள் பரபரப்புடன் விடிந்தது. டீ செய்து நீட்டினாள்.அவனிடம் பதில் இல்லை. காலை, மதியம் என இரண்டு வேளையும் உணவைச் செய்து தயாராக வைத்தாள். சாப்பிடாமல் கிளம்பினான்.’என்னாச்சு? என உள்ளுக்குள் போராட்டம். எதுக்கு இப்படி பண்ணி நம்மளைக் கொல்றான். கஷ்டப்பட்டு எல்லாத்தையும் செய்து கொட்டனுமா! ச்ச!’ என நினைத்துக்கொண்டாள்.ஆஃபீஸில் ரண கொடூரமாக முகத்தை வைத்துக்கொண்டு திரிந்தான். நேற்று வீட்டுக்குச் செல்வதில் காட்டிய ஆர்வம் இன்னைக்கு இல்லாமல் போக, அரக்கன் கோபத்தில் இருக்கிறான் என நட்பு வட்டங்கள் எதுவும் பேசவில்லை.
மாலை வேலை முடிந்ததும் தார் சாலையில் அந்தக் கார் எங்கு செல்வது என தெரியாமல் போய்க்கொண்டிருந்தது. உணவு இறங்கவில்லை. பனிரெண்டு மணிக்கு வந்து சேர்ந்தான். யாரிடம் போன் செய்து கேட்பது என தெரியாமல் பக் பக் என அமர்ந்திருந்தாள்.சிவா வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவள் தூங்கி விழுந்தாள். காலிங் பெல் சத்தம் கேட்க… வேகமாக கதவைத் திறந்தாள்.சிவா நேராக பாத்ரூம் சென்று குளித்து முடித்துப் படுக்கைக்குச் செல்ல,”என்னங்க சாப்பாடு!” என உமையாள் அவனிடம் கேட்க…தன் முன்னால் ஒருத்தி இருக்கிறாள் என்பதையே மறந்து அவளைக் கடந்து உள்ளே சென்றான்.உமையாள் மருகிக்கொண்டே நின்றவள். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ என யோசித்துக்கொண்டே மீண்டும் சோபாவில் போய் ஐக்கியமாகிவிட்டாள்.
அவளின் மனதில் குழப்பம்தான். ஒட்டிக்கொண்டு திரிபவன் இன்று முகத்தைக் கூடப் பார்க்காமல் சென்றதில் அத்தனை நிம்மதி! ஆனால் இந்த அமைதி எதற்காக? ஒன்றும் புரியவில்லை.சரி என வேறு வழி இல்லாமல் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.
சிவா தலையை கோதிவிட்டபடி நிமிர்ந்து பார்க்க, அங்கே உமையாள் அவனைப் பார்த்துக்கொண்டே நின்றாள்.அவளைப் பார்த்த அடுத்த நொடி முகத்தை மாற்றிக்கொண்டான்.”இப்போ உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு இப்படி நடந்துகிறீங்க?” எனக் கேட்டாள்.”என்ன வேணும்னு உனக்குத் தெரியலைல்ல! அப்போ எதுக்கு வந்து கேட்கிற? கிளம்பு!””உங்களுக்காகத்தான் ரெண்டு நாளும் சமைச்சு சமைச்சு கீழே கொட்டுற அளவுக்கு வேஸ்ட் அது அதுதான்!” எனத் தயங்கிக்கொண்டே கூறினாள்.
சிவா அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல முற்பட,உமையாள் கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “என்னங்க! ப்ளீஸ்! சொல்லுங்க! என்ன வேணும்? நான் எதுவும்…” என ஆரம்பிக்க,சிவா அவளைப் பார்த்து “எனக்குப் பசிக்குது!””வாங்க உங்களுக்காகத்தான் சமைச்சு வச்சிருக்கேன்,” என அழைத்தாள்.
சிவா எதுவும் பேசாமல் படுக்கையில் படுத்துக்கொண்டான். என்ன சொல்வான்? அவளின் மேல் கோபம்! இது நிச்சயமாகப் பழி உணர்வு இல்லை.”என்னங்க!” என அவள் மீண்டும் அழைக்க,எதுவும் சொல்லாதே என்பது போலக் கையை நீட்டினான்.உமையாள் பெருமூச்சுடன் அந்த இடத்தை விட்டு ஹாலுக்குச் சென்றாள்.அவளுடைய வாழ்க்கையே நிம்மதி இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதில் சோறு ஒரு கேடா? என நினைத்து உணவை விடுத்து படுக்கையில் சரிந்தாள்.
அந்த வீட்டில் இரண்டு படுக்கை, ஆனால் இன்னொரு படுக்கை அறை பூட்டி தான் இருந்தது. சிவா அந்தப் படுக்கையைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. உமையாள் கேட்டுக்கொள்ளவும் இல்லை.அவளின் புரட்டிப் போட்ட வாழ்க்கையை நினைத்து மீண்டும் புழுங்கி கண்ணை மூடினாள்.அடுத்த நாள் காலை சமைப்பதற்கே வெறுப்பாக இருந்தது.
‘திங்கவும் மாட்டான். செய்து செய்து கீழே கொட்ட வேண்டுமா?’ என உள்ளுக்குள் ஆதங்கத்துடன் சமைத்தாள்.மணி ஒன்பதைத் தாண்டி இருக்க இன்னும் சிவா எழுந்த பாடில்லை!’என்ன இந்நேரம் தடாலடியாக வெளியே வருவார். என்னாச்சு?’ என நினைத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள். சிவா இன்னும் படுக்கையில்தான் இருந்தான்.
“என்னங்க?” எனத் தயங்கிக்கொண்டே அழைத்தவள். அருகில் சென்று பார்த்தாள்.அவன் முகமே சுணங்கிப் போயிருக்க,”என்னாச்சு?” என இன்னும் அருகில் சென்றவள், தயக்கத்துடன் அவனுடைய தலை மேல் கை வைத்தாள்.காய்ச்சல் கொதித்தது.”அச்சோ!” என அவள் வாய்மொழியில் சொல்ல,சிவா அந்த சத்தத்தைக் கேட்டு மெதுவாகக் கண் விழித்தவன்….?
காய்ச்சலில் இருக்கும் சிவாவை உமையாள் எப்படிச் சமாளிக்கப் போகிறாள்? அவர்களின் உறவில் ஒரு மாற்றம் ஏற்படுமா?