Episode -1

“என்ன சம்மந்தி இப்படி சொல்றீங்க இது மட்டும் என்னோட தங்கச்சி மலர்விழிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?” என பதட்டத்துடன் மாறனின் அன்னை பல்லவியிடம் அழுதுகொண்டே புலம்பினாள் சிந்து..”அய்யோ நாங்க மட்டும் என்னமா பண்ணுவோம்? எங்களுக்கும் அதிர்ச்சி தான்! இப்படி அவன் பண்ணுவான்னு கனவில் கூட நினைச்சு பார்க்கல சிந்து. உங்களை போல தான் எங்க வீட்டில் எல்லா சொந்தக்காரர்களுக்கும் சொல்லியாச்சு. ஆனால் இப்போ வந்து சின்னவன் இப்படி பண்ணுவான்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல” என சேலையின் தலைப்பால் கண்ணீரை துடைத்துக் கொண்டே கூறினார் பல்லவி. சிந்து தலையில் அடித்துக் கொண்டே என்னோட தங்கச்சி வாழ்க்கை இப்படி ஆகி போச்சே! என அழுது கொண்டே கீழே அமர்ந்தார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சிந்துவின் கணவன் முரளிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இந்த காரணத்தை வைத்தே மலர்விழியை தான் தம்பிக்கு கட்டிக் கொடுக்க நினைத்தான். முரளியின் தம்பி மோகன் சரியான பொறுக்கி வேலை வெட்டி இல்லாமல் சண்டையை இழுத்துக் கொண்டு, பெண்களிடம் சில்மிஷம் செய்து கொண்டிருக்கிறான். அவனை திருத்த ஒரு பெண் வேண்டும் என முரளியின் அம்மா சரசுவுக்கு மோகனது தலையில் கட்டி வைத்து விட்டால் தன்னை தொந்தரவு செய்ய மாட்டான். அதே போல அவனுக்கு யாரும் பெண் கொடுக்க முன் வர வில்லை. அதை விட முக்கிய விசயம் மோகன் மற்றும் முரளி இருவருமே உடல் வளைந்து உழைக்க மாட்டார்கள். மாடு மாதிரி வீட்டுக்கு ஒருத்தி உழைத்து கொட்ட வேண்டும் அதை ஜன்பமாக செலவு செய்து சொகுசாக வாழ வேண்டும். குறுக்கு வழியில் எப்படி பணக்காரர்கள் ஆகலாம் என ஒரே ஒரு சிந்தனை தான் இருவருக்கும் அதற்கு இழிச்ச வாய் மற்றும் அடிமையாக வேண்டும் அதற்கு தான் இந்த சிந்து மற்றும் அவளை போலவே இன்னொரு அடிமை மலர்விழி. அது நடந்திடும் போலயே என நின்றார் முரளி. அந்த நேரம் அங்கு வந்த மலர்விழி தன் வருங்கால அத்தையை பார்த்து என்ன அத்தை இன்னும் ரெண்டு நாளில் கல்யாணத்தை வச்சிட்டு வந்திருக்கீங்க? இளமாறன் வந்துட்டாரா? எதாவது கல்யாணத்தை பத்தி பேசணுமா? என ஆயிரம் கேள்விகளை துருவி துருவி கேட்டாள். பல்லவி என்ன பதில் சொல்வாள். பட்டாளத்தில் ஆர்மியில் வேலை செய்யும் இளமாறன் அங்கேயே அவனது உயர் அதிகாரியின் மகளை திருமணம் செய்து கொண்டான் என எப்படி கூறுவார்? அழ மட்டுமே முடிந்தது அவரால். மலர் தன் அக்காவை பார்த்தவள் எதுக்கு அக்கா அழுதிட்டு இருக்க? என்னாச்சு என மலர் கேட்க, என்ன டி சொல்லுவேன் நான்? எதை சொல்லுவேன் என கதறி அழுதாள் சிந்து. நான் சொல்றேன் என முரளி முன்னால் வந்து விவரத்தை கூறினான். மலரு உன்னை வேணாம்னு உங்க அக்கா பார்த்த மாப்பிள்ளை அங்கே பட்டாளத்தில் அவனோட பெரிய ஆபிசர் பொண்ணை கல்யாணம் பண்ணி கிட்டானாம். அதுக்கு அர்த்தம் என்னன்னா? உன்னை தூக்கி போட்டுட்டானாம். வேணாம்னு இதுக்கு தான் நான் சொன்னேன் மோகனை கட்டி வைக்கிறேன்னு.மோகன் என்ற பெயரை கேட்டதுமே முகத்தில் அருவருப்பு ஒட்டிக் கொண்டது மலருக்கு. அந்த க்ரூர எண்ணம் பிடித்தவனிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று தான் இந்த திருமணம். ஆனால் இளமாறன் இப்படி செய்வான் என இப்பொழுது கூட நம்ப முடிய வில்லை அவளால், இல்ல அத்தை அப்படி இல்ல தானே சொல்லுங்க அப்படி இல்லன்னு சொல்லுங்க அத்தை என கதறினாள் மலர். பல்லவியால் அடுத்து பேச முடிய வில்லை. என்ன பேசுவார்? அது தானே உண்மை. போன் செய்து அசால்ட்டாக கூறி விட்டு வைத்து விட்டான் இளமாறன். அப்போ மலரின் வாழ்க்கை அந்த கொடூரன் மோகனின் கையிலா? இல்லை நடக்கவே நடக்காது என உறுதியுடன் இருந்த சிந்து கடவுளே எனக்கு நல்ல வழி காட்டு என அப்படியே அமர்ந்திருந்தாள். இன்னொரு பக்கம் போதையில் மட்டையான தன் தம்பி மோகனை எழுப்பி மலர் விழிக்கு திருமணம் செய்ய எழுப்பி அவனை தயாராக்கி கொண்டிருந்தான் முரளி. தம்பி பொண்டாட்டி தான் பொண்டாட்டி என உள்ளுக்குள் இந்த க்ரூர எண்ணமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் மலர் விழியை சிந்து கல்லூரி ஹாஸ்டலிலேயே படித்து வெளியே வந்ததும் உடனே M.Sc, B.Ed என அனைத்தையும் முடித்து ஒரு தனியார் பள்ளியில் வார்டனாகவும் அதன் கூடவே பள்ளியில் கணித ஆசிரியையாகவும் பணிபுரிய சொல்லி விட்டாள் சிந்து. இந்த விடயங்கள் அனைத்தையும் தனது அன்னையிடம் சொல்ல வேண்டும் என புன்னகையுடன் கிளம்பினான் முரளி. விடிந்தால் கல்யாணம். தனது நிலையை எண்ணி நொந்து அமர்ந்திருந்தாள் மலர். தன்னை திருமணம் வரை அழைத்து கொண்டு வந்து இப்பொழுது விட்டு சென்ற இளமாரனை நினைக்க நினைக்க கொல்லும் வெறி வந்தது மலர் விழிக்கு. எத்தனை காதல் பாஷைகள் பேசினான்? எத்தனை உறுதி மொழி கூறினான்? ஆனால் இன்று இன்று என மூக்கின் நுனியில் கண்ணீர் சொட்டு சொட்டாக ஒழுகி கொண்டிருந்தது. அந்த நேரம் தடாலடியாக உள்ளே நுழைந்தாள் சிந்து. தன் அக்காவை நிமிர்ந்து பார்த்தாள் மலர். எழுந்திரு கல்யாணத்துக்கு நேரம் ஆகுது. என அவளை அழைத்தாள். அக்கா என்ன சொல்ற? எனக்கு புரியல என மலர் விழிக்க.. நான் சொல்றது காதில் விழுதா இல்லையா? உன்னோட கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் தான் இருக்கு கோவிலில் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை காத்திருக்காரு. மண்டபத்தில் சொந்த பந்தம் எல்லாம் வந்தாச்சு வா போலாம் என தன் மகன் கோகுலையும் தூக்கி கொண்டு கிளம்பினாள் சிந்து. கண்ணை துடைத்துக் கொண்ட மலர் தன் அக்காவிடம் என்ன கா சொல்ற? மாறனுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே! அங்கே போய் நான் என்ன பண்ணுவேன்? என்னை இப்பிடியே விட்டுடு கா நான் கண்ணியாஸ்த்ரி ஆகிடுறேன் என கூறினாள் மலர் விழி. தேவையில்லாம பேசி 25 வயசுல என் கிட்ட அடி வாங்காதே வா போலாம் அவ்ளோ தான். என அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் சிந்து. ஒரு ஆட்டோ அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்க, என்ன கா எதுவுமே சொல்லாம திடு திப்புன்னு இப்படி பண்ற? அப்போ அந்த குடிகார உதவாக்கரை மோகனுக்கு என்னை கட்டி வைக்க போறியா என சிந்துவை பார்த்து கேட்டாள் மலர்விழி. ச்சீ அவனை நான் மனுசன் லிஸ்ட்லயே வச்சதில்ல. அவனை போய் எப்படி டி நான் உனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பேன். உன் அக்காவை நீ இவ்வளவு தான் புரிஞ்சு வச்சிருக்கியா? என கேட்டுக் கொண்டே தன் தங்கையை பார்த்தாள் சிந்து. அப்புறம் என்ன கா? எதுவும் சொல்லாம இப்படி கூட்டிட்டு வந்தால் எனக்கு என்ன தெரியும்? சொல்லு? என்ன கா? என மலர் துருவி துருவி கேட்டாள். அதற்குள் முருகன் கோவில் வந்து விட அங்கே பல்லவி நின்றிருந்தார்.”அக்கா என்ன நடக்குதுன்னு சொல்லு” என அதட்டல் குரலில் கேட்டாள் மலர். சிந்து எதையுமே சொல்லாமல் தரதரவென இழுத்து வந்து விட்டாள். அங்கே இறங்கியதும் இளமாறனது அக்கா பொற்கொடி கூட இருந்தாள். அய்யோ என்ன நடக்குது? எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல என மலர் சொல்ல, சிந்து மலரை இழுத்துக் கொண்டு உடை மாற்ற கோவில் சத்திரம் அழைத்து வந்தவள்.” நீ மாரனை கட்டிக்க போற?” மலர் அதை எதிர்த்து பேச வர, வெற்றி மாறனை கட்டிக்க போற என்றாள் சிந்து. “வெற்றி மாறனா?” என பெயரை கேட்டதும் உள்ளுக்குள் இனம் புரியாத பயமும், பதட்டமும் தோன்றியது. யார் இந்த வெற்றி மாறன்? பல்லவி மற்றும் பாண்டியனுக்கு மூன்று பிள்ளைகள் பாண்டியனும் மிலிட்டரி மேன் தான். அவர்களின் மூத்த மகன் வெற்றி மாறன், அதன் பின் மகள் பொற்கொடி , மூன்றாவது மகன் தான் இளமாறன். வெற்றி மாறனுக்கு 35 வயது . மிலிட்டரி மேன், வாட்ட சாட்டமான உடல் வாகு, திராவிட நிறம், அந்த கண்கள் அய்யோ பார்வையில் எரித்து சாம்பலாக்கி விடுவான். அவனை பார்த்தாலே அனைவருக்கும் ஒரு வித பயம் தான். வெற்றியை பார்த்தால் எந்த ஒரு பெண்ணும் நின்று பார்த்து விட்டு செல்லும். வெற்றி செக்யூரிட்டி ஏஜென்சி மற்றும் பத்திர ஆபிஸ் வைத்திருக்கிறான். இன்னும் திருமணம் ஆக வில்லையா? என்பது தான் அனைவருக்கும் கேள்வியாக இருக்கிறது. விடுமுறைக்கு ஊருக்கு வந்து இளமாறனை போலவே ஒரு பெண்ணை பார்த்து விட்டு ஊருக்கு சென்றான். வெற்றிக்கு பார்த்த பெண் ஏற்கனவே ஒரு பையனை விரும்பி இருந்ததால் பெற்றோரின் வற்புறுத்தலின் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கிறாள் போல. அனைத்து ஆண்களை போலவும் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்த வெற்றியை மண மேடையில் விட்டு சென்று அவள் காதலித்த பையனுடன் ஓடி சென்று விட்டாள். அப்போதில் இருந்து பெண்கள் என்றால் வெறுப்பு என இன்னொரு பட்டியல் தயார் செய்து அதில் போட்டு வைத்திருக்கிறான். எந்த பெண்ணிடமும் பேச மாட்டான். அத்துடன் திருமணம் மூட்டை கட்டி வைக்க பட்டது. அப்படி இருந்த வெற்றியை டேய் அந்த பொண்ணை நீ கட்டிக்கல நானும் அப்பாவை மாதிரியே செத்து போயிடுவேன். அப்பா நிராசையோட போய்ட்டார் நானும் செத்து போறேன் என பல்லவி பயம் காட்ட, அதன் விளைவு இப்போது முறைத்த படி மலர் விழியின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டிருந்தான் மாறன் வெற்றி மாறன். இந்த திருமணம் நடந்து விட்டதே என வெந்து கொண்டு பார்த்து கொண்டிருக்கும் முரளியும் வெற்றி மாறனும் ஒரே வயது என்பது குறிப்பிட தக்கது. மலர் தன் அக்காவை அழுது கொண்டே பார்க்க, தன் தங்கையின் திருமணம் நன்றாக முடிந்து விட்டதே என எண்ணி நிம்மதி பெரு மூச்சை விட்டாள் சிந்து. வெற்றி தன் அன்னையை பார்வையால் எரித்து கொண்டிருந்தான். அவனது விரல் நுனி கூட மலர்விழியின் மேல் பட வில்லை..வருவான்.

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.