Episode-3
மலரு அசந்து தூங்குது இப்போ என்ன பண்றது? என பொற்கொடி கேட்க, தூங்கட்டும் எழுப்ப வேணாம் கண்ணு. பாவம் மலரு அவளுக்கும் வெற்றிக்கும் சாப்பாடு சூடா ஹாட் பாக்ஸில் போட்டு வைக்கிறேன். நைட்டு அவன் வந்ததும் ரெண்டு பேருக்கும் பரிமாறிட்டு நான் போய் தூங்குறேன் நீ போ மா! பிரகாஷ் க்கு பூஸ்ட் கலக்கி வச்சிருக்கேன் தூங்கும் போது எப்போவும் குடிப்பான். அதையும் எடுத்திட்டு போ என மருமகனுக்கு கரிசனமாக கவனித்து அனுப்பி வைத்தார் பல்லவி. அண்ணன் மகன் அல்லவா அதனால் பிரகாஷ் கூட இந்த வீட்டில் ஒருத்தன் தான்.
பல்லவி டிவியை போட்டு விட்டு அப்படியே பார்த்துக் கொண்டே கீழே தலையனையுடன் படுத்தவர் எப்படி கண் அசந்தார் என்றே தெரிய வில்லை. வெற்றி அவனது வேலைகளை முடித்து விட்டு பத்து மணிக்கு வந்து சேர்ந்தான். வந்ததும் ஆள் இல்லாமல் ஓடி கொண்டிருந்த டிவியை பார்த்து கோபம் வந்தது. யாருக்கும் பொறுப்பு இல்ல என சொல்லிக் கொண்டே டிவியை ஆஃப் செய்தவன் கீழே அவனுக்காக காத்திருந்து உறங்கி போன அம்மாவை பார்த்து எதுக்கு கீழே படுத்தாங்க அப்புறம் முதுகு வலி வந்ததுன்னா ஹாஸ்பிடல் போகனும் கொஞ்சம் கூட ஹெல்த் மேலே அக்கறை இல்ல என நினைத்துக் கொண்டே அவனது அறையை திறக்க சாவியை எடுத்தான். அதற்கு முன் கதவு திறந்திருந்து, என்னோட ரூம் கதவை திறக்க யாருக்கு தைரியம் என மனதில் நினைத்தவன் அதே கோபத்துடன் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் வெற்றி மாறன்.
அறையில் அவனது படுக்கையில் இருந்தவளை பார்த்து உள்ளுக்குள் கோபம் வந்து சேர்ந்தது. எவ்வளவு திமிர்? அடுத்தவங்க ரூமுக்குள் பெர்மிஷன் கேட்காமல் அதுவும் என்னோட bet ல ஒய்யாரமா தூங்க இவளுக்கு யாரு உரிமைய கொடுத்தது? என மலரை அடுத்த நொடியே அறையில் இருந்து வெளியே தள்ளி விட வேண்டும் என கோபம் தோன்ற அதே கோபத்துடன் அருகில் சென்றான். “ம்க்கும்” என தொண்டையை கணைத்தான். அவளிடம் அசைவு இல்லை. வேகமாக சென்று ac மற்றும் fan switch இரண்டையும் ஆஃப் செய்தவன். அவளின் குவிக்கப்பட்ட உடமைகள், சேரில் அவளது புடவை, அவள் அணிந்திருந்த ஆபரணங்கள் என அனைத்தும் இருக்க, இடியட் என்னோட ரூம்… ச்ச அழுக்கு பண்ணிட்டா! என அருகில் வந்தான் வெற்றி மாறன்.
ஒரு சில நொடிகளில் அவளின் முகத்தில் வியர்வை பூக்க இயற்கை அழைப்பும் வருவது போல ஒரு உணர்வு மெல்ல கண்களை தேய்த்து விழித்தாள் மலர் விழி. அவளுக்கு எதிரில் கோபத்துடன் கடுவன் பூனையாக சீறுவது போல நின்றிருந்தான் வெற்றி மாறன். “இவர் இப்போ எதுக்கு நம்மள இப்படி பார்த்திட்டு நின்னுட்டு இருக்கார்.” என வேகமாக எழுந்து அமர்ந்தாள்.
எழுந்திரு யாரை கேட்டு என்னோட ரூமுக்குள்ள வந்த? என வெற்றி எடுத்த எடுப்பில் கேள்வி கணைகளை விட, விதிர்விதித்து பார்த்தாள் மலர்.
ஆமா அங்கே என்ன? ஹான் உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? உனக்கு 5 மினிட்ஸ் தான் டைம் அதுக்குள்ள அதை க்லீன் பண்ற! Go fast என மிரட்டினான் வெற்றி.
P. E.T சாருக்கு பயப்படும் மாணவர்கள் போல அவனது அதட்டலில் பயந்தவள் வேகமாக அவளின் புடவை நகை என அனைத்தையும் எடுத்து வைத்தாள் மலர் விழி.
மாறன் பாத் ரூம் சென்று வெளி வந்தவன். அவளை பார்த்ததும் என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்க? உன்னோட திங்ஸ் எல்லாம் எடுத்திட்டு போ! என்னால யார் கூடவும் ரூம share பண்ணிக்க முடியாது என்றான் மாறன்.
எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு எங்கே போறது? என மலர் விழி மெல்லிய குரலில் சொல்ல, பூந்துண்டில் முகத்தை துவட்டி கொண்டே அவளை பார்த்தவன். இந்த வீட்டுக்கு உன்னை யாரு கூட்டிட்டு வந்தா? என கேட்டான்.
அத்தை என மெல்லிய குரலில் கூறினாள்.
“ம்ம் அவங்க கிட்ட கேளு போ” என கழுத்தை பிடித்து துரத்தாத குறையாக கூறினான் மாறன். அவனது பேச்சுக்களையும் நடத்தையையும் பார்த்து மலர் விழிக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.
இவன் மனிதன் தானா? ஒரு பெண்ணை மதிக்க தெரியுமா? இவன் தானே காலையில் தன் கழுத்தில் தாலி கட்டினான்? என வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக தோன்றியது மலர் விழிக்கு.
விதியே என நினைத்தவள் வேறு வழி இல்லாமல் அவளது பொருட்களை எடுத்துக் கொண்டே வெளியே வர, கண்ணை தேய்த்த படி எழுந்த பல்லவி பையை தூக்கி கொண்டு வெளியே வரும் மலர்விழியை பார்த்து பதறி போனவர். கண்ணு மலரு என்னமா ஆச்சு? அதுவும் இந்நேரத்தில் பையை எடுத்துக்கிட்டு எங்கே போற? என அவளின் அருகில் வந்தார்.
மலர் உள்ளே இருக்கும் மாறனை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் மாமியை பார்த்தாள். சொல்லு மா கண்ணு என்னாச்சு? என அறைக்குள் எட்டி பார்த்தவர். என்ன மலரு அவன் எதுவும் சொன்னானா? என பல்லவி கேட்க, நான் தான் வெளியே போக சொன்னேன்? இப்போ உங்களுக்கு அதுல என்ன பிரச்னை என இரவு உடைக்கு மாறிய வெற்றி தன் அன்னையின் முன் நின்றான்.
மலரின் முகத்தை பார்த்த பல்லவிக்கு பாவமாக இருக்க, அந்த மொத்த கோபமும் வெற்றியின் மீது திரும்பியது. மலரு இது உன்னோட ரூம் உள்ளே போ மா! போ என அவர் கண் காட்டிட.. மா இது என்னோட ரூம் காது கேட்கலையா உங்களுக்கு? என அதட்டலுடன் கூறினான் வெற்றி.
ஆமாண்டா இது என்னோட வீடு அதுல இந்த ரூம் உன்னோடது இல்ல.. உங்களோடது என இருவரையும் பார்த்து கூறினார் பல்லவி.
“மாஆ!” என வெற்றி கத்த, அத்.. அத்தை விடுங்க இங்கே நான் தான் எக்ஸ்ட்ரா லக்கேஜ்… என மலர் கூற, அம்மா என்ன பேச்சு இது நீ இந்த வீட்டு மகாலட்சுமி என கூறியவர் தன் மகனை பார்த்து, இந்த ரூம் உனக்கு எப்படி சொந்தமோ அதே போல இங்கே நான் தங்க வச்ச மலரும் உனக்கு சொந்தம் என்றார்.
பல்லவி சொன்னதை கேட்டு மலர் திகைத்து விழித்தாள். மா உனக்கு பைத்தியமா? என வெற்றி பேச வர, வாயை அடக்கு டா எல்லாம் தெரியும். நான் சொன்னதுல என்ன தப்பு? அவள் கழுத்தில் நீ தானே தாலி கட்டின? அப்போ அவளுக்கும் இங்கே சம பங்கு இருக்கு. என் கிட்ட தேவையில்லாம பேசாத இப்போவே படபடப்பு அதிகமாருக்கு என கூறியவர். இழப்பு வாங்கினார்.
வெற்றி அதற்கு மேல் எதுவும் பேச வில்லை. மலரையும் தன் அன்னையையும் முறைத்து பார்த்தான். பல்லவி மெதுவாக அவன் முன் நடந்து வெளியே சென்றவர் வா டா வந்து சாப்பிடு! நீயும் வா மலரு வா மா என அழைக்க, மலர் வெற்றியின் அறைக்குள் இருந்த பாத்ரூம் சென்று விட்டு வெளியே வந்தாள்.
“ஹலோ” என சொடக்கு போட்டான் வெற்றி. மலர் மெதுவாக திரும்பி பார்க்க, சாப்பிட்டு முடிச்சதும் உன் கிட்ட பேசணும் வெயிட் பண்ணு என சொல்லி கொண்டே வெளியே சென்றான். என்ன பேச போறார் என நினைத்தவள் ஒரு பெரு மூச்சை விட்டு சென்றாள்.
பல்லவி இருவருக்கும் பரிமாற தட்டை ஆராய்ச்சி செய்தான் வெற்றி, டேய் ஒழுங்கா சாப்பிடு என அதட்டினார். எழுந்து சென்று மீண்டும் ஒருமுறை தட்டை கழுவி வந்து சாப்பிட ஆரம்பித்தான்.
வெற்றி பருக்கையை கூட வீணாக்கவில்லை. அவ்வளவு நேர்த்தியாக சாப்பிட்டு முடித்தான். மலரின் கண்கள் அவனை வினோத பிறவி போல பார்த்தது. இனி நம்ம வாழ்க்கை இப்படி ஒரு ஆள் கூட நான் எப்படி குப்பை கொட்ட போறேன்? என உள்ளுக்குள் சோர்வாக உணர்ந்தாள்.
சாப்பிட்டு முடித்து அறைக்கு சென்றதும் உடனே படுக்க சென்றாள் மலர். அறைக்குள் வந்த வெற்றி கதவை சாத்தி விட்டு கண்டிசன் அனைத்தையும் வரிசையாக சொல்ல, மலருக்கு தான் மலைப்பாக இருந்தது. ஒன்றா இரண்டா ரெண்டா ஆசைகள் இல்லை அனைத்தும் கண்டிசன் தான்.
வெற்றி பேச ஆரம்பித்தவன் கட்டிலில் தலையணை மதில் சுவற்றை கட்டிக்கொண்டு, எனக்கு ரூம் ரொம்ப டிசிப்லினா இருக்கணும். இந்த அறையில் உன்னோட முடி எங்கேயும் உதிர கூடாது. சத்தம் போட்டு பேச கூடாது. பொருட்களை ஃபிஷ் மார்கெட் மாதிரி பரப்பி வைக்க கூடாது டிசிப்லினா இருக்கணும். அண்ட் எனக்கு ஆர்மில இருக்கும் போது வெளியே போனால் என்னோட தின்கஸ் இருக்க இடத்தை பூட்டி பழக்கம் ஆகி போச்சு அதனால நான் எப்போ வெளியே போனாலும் பூட்டிட்டு போயிடுவேன் அதனால் உனக்கு இன்னொரு சாவி தரேன் நீயும் பூட்டிக்கோ திறந்துக்கோ. நீயும் நானும் ரூம் மெட்ஸ் எனக்கு இந்த கல்யாணம் அண்ட் முக்கியமா பொண்ணுங்க மேலே இன்டர்ஸ்ட் இல்ல சோ நான் என்ன சொல்ல வரேன்னு புரியுது தானே என பார்த்தான் அவளை.
ம்ம் என இட வலமாக தலையை ஆட்டினாள். உடனே கோபம் வந்தது அவனுக்கு. என்ன பதில் இது தலையை ஆட்டுற? வாய திறந்து சொல்லு என அதட்டினான் வெற்றி.
நீங்க சொன்ன எல்லா கண்டீசனும் எனக்கு ஓகே என கூறினாள் மலர்.
அதற்கும் விறைப்பாக முகத்தை வைத்துக் கொண்டவன். சரி அவ்ளோ தான் நமக்குள் பேச ஒன்னும் இல்ல என அவனது பக்கம் சென்று படுத்துக் கொண்டான்.
மலர் ஒரு பெரு மூச்சை விட்ட படி… அவள் படுத்து கொண்டாள். தூக்கம் வர வில்லை. உடனே போனை எடுத்து ஸ்குரோல் செய்தாள்.
ப்ச் என்ன பழக்கம் படுக்கையில் போன் use பண்ற? உனக்கு டிசிப்லின் இல்லையா? என குரல் மட்டும் கேட்டது.
மலருக்கு வெற்றியின் பேச்சை கேட்க கேட்க கோபமும் ஆத்திரமும் சேர்ந்து அய்யோ என்னை இப்படி பூமர் மாதிரி ஒரு ஆளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களே என உள்ளுக்குள் வருத்தம் அழுகை அனைத்தும் தோன்ற விசும்பினாள் மலர்.
அழறயா என கேட்டான் வெற்றி.
இல் இல்லை என தயங்கி கொண்டே கண்ணை துடைத்தாள்.
ஓகே ஆனால் அழரதா இருந்தால் வெளியே போயி அழுதிட்டு வா! எனக்கு ஆழ்ந்த தூக்கம் அவ்ளோ சீக்கிரம் வராது. கொஞ்சம் டிஸ்டர்ப் ஆனாலும் விடிய விடிய தூக்கம் வராது. சோ எனக்கு சத்தம் வரவே கூடாது என கூறினான் வெற்றி.
சாரி இன் இனி அழ மாட்டேன் என மலர் பற்களை கடித்த படி கூறினாள்.
அடுத்த நாள் காலை தலையணை மதில் சுவர் தரையில் கிடக்க வெற்றி மாறனின் இடையில் கால் போட்ட படி ஒட்டி தூங்கி கொண்டிருந்தாள் மலர்.
வருவான்.