Episode – 4
இரவு எப்பொழுது தூங்கினோம் என இருவருக்குமே நினைவில்லை. அதிகாலை 5 மணிக்கு எழுவது வெற்றியின் பழக்கம். இன்று தாமதமாக 6 தொட்டது. மெதுவாக கண்ணை முழித்து பார்த்தான். “ச்ச எப்போவும் 5 மணிக்கு எழுந்துப்போம் இன்னிக்கு ஆறு மணி சரி இல்ல வெற்றி நம்ம பாதை எங்கேயும் கோணல் ஆக கூடாது” என தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.
அப்பொழுது தான் எதோ வித்தியாசம் அருகில் பெண்மையின் வாசம் “இது என்ன புது ஸ்மெல் ஆனாலும் பிளசன்ட்டா இருக்கு” என சொல்லி வாயை மூட வில்லை..கூடவே மிகவும் நெருக்கத்தில் ஒரு பெண் தனது கட்டிலில் என யோசிக்க நேற்று நடந்த கல்யாண கூத்து நினைவுக்கு வந்தது. அதை விட மலரின் வாழைத்தண்டு கால்கள் வெற்றியின் இடையை மேல் இருக்க, அவளின் மென்மைகள் இரண்டும் மெல்ல முட்டிக் கொண்டிருந்தது. சொல்ல போனால் மார்பும் மார்பும்.. மலர் மற்றும் மாறன்.
ச்ச இந்த பொண்ணு டிசிப்ளின் இல்ல என கோபம் வர ஹே.. ஹேய் உன்னை தான்! என்றவன் மலர்விழி! மலர்விழி என உரக்க அழைத்தான் வெற்றி.
ம்ம் இன்னும் கொஞ்சம் நேரம் மேனகா என அவள் கனவில் உலர, வாட் மேனகா வா? ஹலோ நான் வெற்றி மாறன் நகருன்னு சொன்னேன்! என்ன பண்ணி வச்சிருக்க மலர்விழி! உனக்கு கொஞ்சம் கூட டிசிப்ளின் இல்ல! ஒரு ஆண்பிள்ளை மேலே காலை போட்டுட்டு இருக்க! என பற்களுக்கு இடையில் வார்த்தைகள் கடித்து துப்பினான் வெற்றி.
அவனது குரலில் தூக்கம் கலைந்தவள் வெடுக்கென எழுந்து அமர்ந்தாள்.
வெற்றி அவளை முறைத்துக் கொண்டு எழுந்தவன். இது தான் லாஸ்ட் வார்னிங் மைன்ட் இட் என கூறி கொண்டே குளியலறை சென்றான். அய்யோ என இதயம் வேகமாக துடித்தது. “ச்ச ஹாஸ்டலில் படுத்த பழக்கத்தில் மேனகான்னு நினைச்சு இப்படி பண்ணிட்டேனே!” என தலையை சொரிந்து கொண்டே அமர்ந்தாள்.
பல்லவி அவளுக்கு காபி எடுத்து வர, “அத்தை நானே வரேன் நீங்க கொண்டு வர வேணாம்” என மலர் சொல்ல, “இல்ல மா பரவால்ல வாங்கிக்கோ” என நீட்டினார் வாங்கிக் கொண்டாள் மலர். ஆசையாக குடித்தாள். இது போல தாய் கொடுத்து குடித்ததில்லை. மலரின் தந்தை சரி இல்லை தாய் கஷ்ட பட்டு படிக்க வைத்து ஆளாக்கினார் சிந்துவை. தந்தை கணேசன் குடித்து குடித்து மஞ்சள் காமாலையில் போய் சேர்ந்து விட, இரண்டு பெண்களையும் வைத்து கொண்டு மலரின் தாய் கலா படாத கஷ்டங்களை சந்தித்தார். மலர்விழி எட்டாம் வகுப்பு படிக்கும் போது கணேசன் வீட்டு சொத்து தகராறில் மொத்த கணேசனின் அண்ணன் தம்பி மார்கள் ஏமாற்றி விட அந்த வேதனையில் கமலம் இறந்து விட்டார்.
சிந்து காலேஜ் படிப்பில் இருக்கும் போது செய்தி கேட்டதும் அவளுக்கு பொறுப்புகள் அதிகமானது. ஒரு பக்கம் இறந்து போன அன்னை இன்னொரு பக்கம் மலர்விழி என வாழ்க்கை மொத்தமும் திசை மாறியது. வெற்றி வேகமாக புறப்பட்டு அறையை பூட்ட வர, “என்னங்க நான் இருக்கேன்!”என எதிரில் வந்து நின்றாள் மலர்
வெற்றி அவளுக்கு பதில் சொல்லாமல் இரண்டு எட்டுக்கள் வைத்தவன். “இன்னொரு முக்கியமான விசயம் வீக்லி ட்வைஸ் நான் என்னோட ரூம மாப் போடுவேன். சோ இப்போ நீ வந்திருக்க ஒன் டே விட்டு ஒன் டே மாப் போடணும்.”
“சரி பண்ணிடறேன்” என மலர் கூற, நான் “உன்னை பண்ணவே சொல்லல!” என வெற்றி அவளை கடுமையான பார்வையுடன் எதிர் கொண்டான். “அப்புறம் எதுக்கு என் கிட்ட சொன்னீங்க?” என மனதில் நினைத்தாள் மலர்.
வெற்றி கண்கள் இடுங்க அவளை பார்த்தவன். “உன்னோட திங்க்ஸ் எதுவும் கீழே இருக்க கூடாது. எனக்கு என்னோட ரூம் ரொம்ப ஹைஜீனா இருக்கணும். தேவையில்லாத சின்ன குப்பை கூட போட்டுடாத முக்கியமா பொண்ணுங்க முடி என் கண்ணில் படவே கூடாது என நடந்தான். யார் இவன்? அய்யோ இப்போவே கண்ணை கட்டுதே!” என அவனது பழக்க வழக்கங்கள் எதுவும் மலருக்கு பிடிக்கவும் இல்ல அதில் தன்னை புகுத்தி கொள்ள மோசமாக உணர்ந்தாள்.
“ஹேய்” என மீண்டும் அழைத்தான் வெற்றி. சொல்லுங்க என மலர் பார்க்க, “எக்காரணத்தை கொண்டும் என் அம்மாவை அந்த ரூமில் விடாத” என எச்சரித்து விட்டு சென்றான். இப்படியே ஒரு வாரம் ஓடியது வெற்றியின் குண நலன்களுக்கு கொஞ்சம் கூட ஒத்து போகாமல் திண்டாடி கொண்டிருந்தாள் மலர்.
அறையில் ஆங்காங்கே தலை முடி உதிர்ந்து இருக்க, “மலர்விழி என்ன இது இத்தனை முடி கொட்டிருக்கு? இந்த ரூமோட ஹைஜீன் லெவல் குறைஞ்சுகிட்டே வருது திட்டினான்.
அவள் சாப்பிட்டு போட்ட சாக்லேட் பேப்பர் அவன் கண்ணில் பட “என்ன மலர்விழி நீ சின்ன குழந்தையா? சாக்லெட் சாப்பிட்டு டிசிப்ளின் இல்லாம தூக்கி தரையில் போடுற குட்டி பொண்ணு கனி கூட இந்த வயசுல டிஸிப்ளினோட நடந்துக்குறா! உனக்கு என்ன?” என திட்டினான். பாத்ரூமில் சல்லடையில் அவளின் முடி சுலந்து கொள்ள திட்டினான். Fan வேகமாக ஓடியதால் திட்டினான். இப்படி எதாவ்து ஒரு காரணத்துக்காக அவனிடம் திட்டு வாங்கி கொண்டே இருந்தவள் அழத்தான் செய்தாள் மலர்.
ஒரு ரூம் மெட்டாக கூட மலரால் அவனை ஏற்றுகொள்ள முடிய வில்லை. அவனுடன் கொஞ்சமும் தனக்கு செட்டாகாது என நினைத்த மலர் அவள் பணிபுரியும் பள்ளியில் தங்கி செல்ல முடிவெடுத்தவள் வாரம் இறுதி மட்டும் வீட்டுக்கு வர முடிவெடுத்தாள்.
அத்தை!!
என்ன கண்ணு எதுவும் வேணுமா? என பல்லவி கேட்க, இல்லங்க அத்தை நான் வார கடைசி மட்டும் வீட்டுக்கு வரதா முடிவெடுத்துட்டேன். என்ன கண்ணு சொல்ற என பதட்டத்துடன் அருகில் வந்தாள் பல்லவி. அத்தை அது நீங்க பதட்டபடும் அளவுக்கு ஒன்னும் இல்ல. எனக்கு இங்கே இருந்து போயிட்டு வர ரொம்ப டயர்டா இருக்கு. நான் வாரம் ஒரு தடவை வரேனே என கூறினாள் மலர்விழி.
பல்லவி திகைத்து போய் என்ன சொல்வது என தெரியாமல் நின்று கொண்டிருக்க, அத்தை பிளீஸ்! என அருகில் வந்தாள். அதுக்கில்ல மா உன்னோட புருசன் இதுக்கு சம்மதிப்பானா? என கேட்டார்.
மலருக்கு மனதில் அவரை நினைச்சு தான் கவலை பட்டீங்களா? அவருக்கு நான் இங்கே இருந்து போகனும் அப்போ தான் இன்னும் சந்தோசமா இருப்பார் என நினைத்து பெருமூச்சை விட்டவள். அத்தை நீங்க கவலை படாதீங்க! நான் அவர் கிட்ட பேசுகிறேன் என கூறினாள் மலர்.
என்னமோ சொல்ற? ஆனால் சரி மா நீ உனக்கு விருப்ப படி செய் என கூறி விட்டு வேலையை செய்யலானார். ஹப்பா அத்தை ஒத்துக்கிட்டாங்க இனி அந்த பூமர் கிட்ட ஈசியா பேசி கிளம்பிடனும் என இரவு படுக்கையில் அவனுக்காக காத்திருந்தாள் மலர்விழி.
உணவை முடித்து விட்டு அரை மணி நேரம் அமர்ந்திருந்தான். அதன் பின் அறைக்கு வந்தான் வெற்றி. என்னங்க உங்க கிட்ட ஒரு விசயம். நமக்குள் எந்த விஷயமும் இல்லன்னு சொல்லிட்டேனே என அவனது பார்வை அவள் மீது திரும்ப, அவனை பார்த்து முறைத்தாள் மலர்.
என்னை பார்த்து முறைக்கிறயா? என வெற்றி கேட்டான்.
அதில் அதிர்ச்சியாக பார்த்தவள். இல்ல அது வந்து நான் ஹாஸ்டல் போறேன். வீக்லி ஒன்ஸ் தான் வருவேன் அத்தை கிட்ட சொல்லிட்டேன் அப்படியே உங்க கிட்டயும் என கூறினாள் மலர்.
வெற்றி எந்த உணர்வும் இல்லாமல் ம்ம் சரியான முடிவு போ என சொல்லி விட்டு படுத்துக் கொண்டான். இருவருக்கு நடுவிலும் எதுவும் இல்லாத போது எதை பற்றி யோசிப்பார்கள்? அதனால் எதையும் நினைக்க வில்லை சொல்ல போனால் நிம்மதி தான் வந்தது.
அடுத்த நாள் காலை அவள் அனைவருக்கும் டாட்டா காட்டி விட்டு ஹாஸ்டல் பறந்து விட வாழ்க்கை சீராக சென்றது. அவர்கள் இருவருக்கும் நடுவிக் உள்ள உறவு? பார்ப்போம்
வெற்றி ஒரு வேலை விசயமாக அவள் பணிபுரியும் பள்ளிக்கு சென்றான். செக்யூரிட்டி ஆட்கள் தொடர்பாக ஹெட் மாஸ்டர் அழைத்திருந்தார். சிஸ்டர் மெர்சி தான் தலைமை ஆசிரியராக இருந்தார். அவரிடம் வேலை தொடர்பாக ஆட்களின் மாற்றுதல் யார் யார் வருவார்கள்? பிரச்னை என்றால் என்னை கூப்பிடுங்க என சொல்லி விட்டு வெளியே வந்தவன் கண்களில் வந்து விழுந்தாள் மலர் விழி.
இவள் இங்கே தான் வேலை செய்யறாளா? ம்ம் என ஒற்றை பதிலுடன் சென்று விட்டான். அந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை மாலை பிரகாஷ் மலர்விழியை அழைத்து வந்து வீட்டில் பாப்பா!! என அழைத்தான்.
“சொல்லுங்க அண்ணா”
அத்தை நைட்டு வருவாங்க மா! நீ வீட்டை பூட்டிகிட்டு உள்ளே இரு என்று விட்டு பிரகாஷ் சென்று விட்டான்.
வீட்டுக்குள் வந்தாள் மலர்விழி இப்பொழுது வீட்டில் யாருமே இல்லை. ஹப்பா ஃப்ரீயா இருக்கலாம் என உடையை மாற்றி விட்டு வந்தவள். வயிறு வேறு பசித்தது ம்ம் லைட்டா எதுவும் செஞ்சு சாப்பிடுவோம் என சமையலறை சென்றவள் மீண்டும் வெளியே வந்து வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றாள்.
அண்ணா யிப்பி நூடில்ஸ் கொடுங்க என இரண்டு பாக்கெட் வாங்கினாள். பல்லவி வருவதற்குள் இதை செய்து சாப்பிட்டு கொண்டே டீவி பார்க்கலாம் என வந்தவள் டாப் மற்றும் பாட்டம் என இரவு உடையில் இன்னும் சின்ன பெண் போல தெரிந்தாள் டீவியில் அவளுக்கு பிடித்த பாட்டை ஓட விட்டவள். பத்து நிமிடங்களில் யிப்பி தயார் செய்து ஸ்பூனில் சுழற்றி ஒரு வாய் போட்டுக் கொண்டு வந்து சோபாவில அமர்ந்தாள்.
அந்த நேரம் டீவியில் அவளுக்கு பிடித்த பாடல் ஓட மலர் விழியின் முகம் சந்தோசத்தில் மின்னிட டீவியில் சவுண்டை அதிகம் வைத்தவள் பின் பாட்டு பாடிக் கொண்டே யிப்பி நூடில்சை வாயில் சுழற்றினாள்.
பெண் : ஏன் மம்முத அம்புக்கு ஏன்
இன்னும் தாமசம் ஆஆ..
ஆண் : அடியே ஏன் அம்மணி
வில்லு இல்ல இப்போ
கை வசம் ஆ…
பெண் : ஏன் மல்லு வேட்டி
மாமா மனசிருந்தா மார்க்கம்
இருக்குது
ஆண் : என்னை பொசுக்குன்னு
கவுக்க பொம்பளைக்கு நோக்கம்
இருக்குது
பெண் :என் சேலைக்கு கசங்கி விடும்
யோகம் என்னைக்கு ஆ..
ஆண் :அட என் வேட்டிக்கு அவிழ்ந்துவிடும்
யோகம் என்னைக்கு ஆ.. என மலர் பாடிக்கொண்டே இன்னும் மேகி போட திரும்ப அங்கே வெற்றி நின்று கொண்டிருந்தான்.
மலர்விழி…?