Episode-5
மலர்விழி உற்சாகமாக ஆடி அசைந்து இடுப்பை வளைத்து ராகமாக பாடியவள். முகமெல்லாம் சிரிப்பும் பரவசமும் மின்ன யிப்பியை இன்னும் கொஞ்சம் போட்டுக் கொண்டு வரலாம் என நினைத்தவள் வைப் பண்ணி கொண்டே திரும்ப அங்கே வெற்றி நின்றிருந்தான்.
ஹக் என சிலையை போல அமைதியாக நின்றாள். “என்ன செய்வது?” என தெரியவில்லை. மூக்கின் கீழ் உதட்டின் மேல் வியர்வை முத்துக்கள் பூக்க அப்படியே நின்றாள். “இப்போ என்ன பண்றது? அய்யோ போச்சு வழக்கம் போல பூமர் மாதிரி கருத்து சொருகல் நடக்கும்” என நொந்து கொண்டே பார்த்தாள்.
வெற்றி மெல்ல உள்ளே வந்தான் அவளை நோக்கி. அந்த நேரம் “நீ தொடுவதை தொட்டுக்க சொந்தத்துல வரைமுறை இருக்கா!” என்ற வரிகள் ஓடிக்கொண்டிருக்க, “ஹே மலரு இவ்வளவு சவுண்ட் வச்சு கேட்டதுக்கு காது ஜவ்வு கிழியும் வரை இப்போ கிளாஸ் நடக்க போகுது பேசாமல் நீயே காலில் விழுந்திடு” என நினைத்துக் கொண்டவள் மெல்ல திரும்ப, திடீர் ஆச்சரியம் வெற்றி டீவி ரிமோட்டை எடுத்து பாடலில் சத்தத்தை குறைத்து விட்டு அறைக்குள் நுழைந்தான்.
இது நிஜம் தானா? என திரும்பி சுற்றிலும் பார்த்தாள். வெற்றி அறைக்குள் செல்வது தெரிந்தது. ரொம்ப நிம்மதி என மீதியை ஒரு கிண்ணத்தில் போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
அதன் பின் டீவியில் நிறைய பாடல்கள் அனைத்தையும் அவன் வைத்து விட்டு சென்ற சத்தத்திலேயே கேட்டாள்.
இங்கே பிரகாஷ் பொற்கொடியின் வீட்டில், பல்லவியின் அக்கா சரஸ்வதி வந்திருந்தார்.
சரி நடந்தது நடந்து போச்சு கல்யாணத்துக்கு வராத பையன பத்தி பேச என்ன இருக்கு? கல்யாணம் ஆனவங்களை பத்தி பேசலாம் பல்லவி என்றார் சரவதி.
ஒரு பெரு மூச்சை விட்ட பல்லவி முகத்தில் கொஞ்சம் குழப்பத்துடன் இன்னும் மாறல சரசு. வெற்றி அப்படியே தான் இருக்கான் என்றார்.
சரி அதை விடு ரெண்டு பேருக்கும் நடக்க வேண்டிய விசயங்களை ஏற்பாடு பண்ணியா? என்னாச்சு? என சரஸ்வதி கேட்க, நீ எதை பத்தி கேட்கரன்னு எனக்கு புரியல? என பல்லவி பார்க்க , நீ மூணு புள்ளை பெத்தவ மாதிரியா பேசுற? உன் மகள் வீட்டு வாரிசு மட்டும் போதுமா மகன் வீட்டு வாரிசு உனக்கு வேணாமா? என கேட்டார் சரஸ்வதி.
என்ன கா சொல்ற? என்னால அந்த இளமாறன வீட்டுக்குள் சேத்துக்க முடியாது. என் குடும்ப மானம் மொத்தத்தையும் குழி தோண்டி புதைச்சிருக்கான். அது மட்டுமா? அந்த மலரு புள்ளை வாழ்க்கை அவள் மனசுல ஆசைய வளத்து விட்டு வேணாம்னு சொல்லிருக்கான். என பல்லவி பேச, அய்யோ என சலித்து கொண்டவர் பல்லவி கிழவி ஆகிட்டேன்னு நிரூபிக்காத என சரஸ்வதி சொல்ல, நீ தான் டி கிழவி என்றாள் வீம்புடன்.
கனி தனது அம்மச்சிகள் இருவரையும் எட்டி பார்த்தபடி, அம்மா அம்மச்சி சண்டை போடுறாங்க என்றாள்.
சரஸ்வதி பல்லவியை முறைத்து கொண்டே மக்கு பல்லவி நான் வெற்றிய பத்தி பேசிட்டு இருக்கேன். இப்போ அங்க நான் வாரமல் இருக்க காரணம் என்ன தெரியுமா? நம்ம வீட்டுக்கு வந்தால் நம்ம மருமக பொண்ணுக்கும் சரி பையனுக்கும் சரி அவங்க ரெண்டு பேருக்கும் நடந்த எதிர்பாரா கல்யாணம் தான் நினைவுக்கு வரும். அதனால் தான் வரல.. என்றார்.
இப்போ என்ன சொல்ற? என பல்லவி கேட்க, சின்ன பாப்பி என கனியை பார்த்த சரஸ்வதி உன்னோட பல்லவி அம்மாச்சி ஒரு மக்கு மூட்டை என்றாள்.
கனி சிரித்துக் கொண்டே பொற்கொடியிடம் சொல்ல ஓடி விட, சரஸ்வதி பல்லவியிடம் வெற்றிக்கும் மலருக்கும் சீக்கிரம் சடங்கு ஏற்பாடு பண்ணு. நீ பேசின லட்சணத்திலயே தெரியுது அதை பண்ணிருக்க மாட்டேன்னு.
அக்கா என பல்லவி அசட்டு சிரிப்புடன் பார்க்க, ரெண்டு பேரும் தாம்பத்திய வாழ்க்கைய தொடங்கி மலரு மாசமாகிட்டான்னு வை ஊரு வாய வளைகாப்பு போட்டு அடைச்சிடலாம். எல்லாருக்கும் அந்த கல்யாணம் எப்படி நடந்ததுண்ணு பேசிக்க மாட்டாங்க. வெற்றி மாறன் நம்ம மருமக கூட சேர்ந்து புள்ளை பெத்த விசயத்தை தான் பேசுவாங்க. யாருக்கும் அங்க வீட்டுக்கு வர எந்த கூச்சமும் இருக்காது என்றார்.
அக்கா நீ இருக்கியே வேற லெவல். என பல்லவி சொல்ல, சரஸ்வதி மெதுவாக பல்லவியின் காதுகளில் அனைத்து விடயத்தையும் சூசகமாக கூறி விட, சரி கா நீ சொன்ன மாதிரியே செய்கிறேன் என வெற்றி மற்றும் மலரின் அடுத்த கட்ட வாழ்க்கையை ஆரம்பித்து வைக்கும் திட்டத்தை செயல் படுத்த முடிவெடுத்தார்.
அம்மா இன்னும் வரலையே? என வெற்றி போன் எடுக்க, அத்தை பொற்கொடி அக்கா வீட்டுக்கு போயிருக்காங்க. என மெதுவாக எட்டி பார்த்தாள் மலர். அவளின் மூலம் விசயத்தை தெரிந்து கொண்ட வெற்றி சரி என ஃப்ரெஷ்சாக பாத்ரூம் சென்றான்.
பல்லவி வரும் போதே மல்லிகை பூவுடன் வந்தவர். அக்கா சொன்னது போல எல்லாமே நடக்கணும் சாமி நீ தான் அதுக்கு உறுதுணையாக இருக்கணும் என வீட்டுக்குள் வந்தார்.
மலரு என பல்லவி அழைக்க, அத்தை வந்துட்டீங்களா? எப்படி இருக்கீங்க? என நலன் விசாரித்தாள்.
நான் நல்லாருக்கேன் மா! ஆனால் நீ இல்லாம தான் வீடே வெறிச்சோடி போயிடுச்சு என்றார் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு. அது அப்படி இல்ல த. ஹாஸ்டல் வேலையும் பார்க்கிறேன் போயி தான் ஆகணும் என்றாள் மலர். நீ எதுக்கு ரெண்டு வேலைக்கு போற? உன் புருஷன் ஓடா வேலை செஞ்சு கொட்டுறது எல்லாம் உனக்கு தானே!
“ஹாங்” என மலர் விழிக்க, அது வந்து மா நீ டீச்சர் வேலைக்கு போ! எந்த பிரச்னையும் இல்ல எனக்கு முன்ன மாதிரி நெப்பு தெரிய மாட்டுக்கிது வெற்றி வீட்டுக்கு வர எட்டு மணி ஆகிடும் சில நாள் இன்னும் கூட தாமதம் ஆகும். நீ வீட்ல இருந்தீன்னா கொஞ்சம் நல்லாருக்கும். இது என்னோட விருப்பம் தான். ஆனால் உனக்கு எது சரியோ அதை செய் என சரஸ்வதி சொன்னதை செய்யல் படுத்தி உள்ளுக்குள் சமைக்க சென்று விட்டார்.
மலருக்கு இப்பொழுது என்ன செய்வதென்று தெரிய வில்லை. இப்போ என்ன பண்றது? என யோசித்துக் கொண்டிருந்தவள். அத்தைக்காக இருப்போம் என அவள் உள்ளே சென்றாள். பல்லவியுடன் உதவிக்கு நின்றாள். இட்லி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னியுடன் பல்லவி தயார் செய்து விட மூவரும் சேர்ந்தே சாப்பிட்டார்கள்.
வெற்றி வழக்கம் போல நேர்த்தியாக உண்டு விட்டு கைகளை கழுவி விட்டு அறைக்கு சென்றான். மலர் பல்லவியுடன் பேசிக் கொண்டிருந்தவள் படுக்கைக்கு செல்ல போக, “மலரு” என அழைத்தார்.
“அத்தை”
இரு மா நான் வரேன் என சமையலறைக்குள் சென்றவர். பாலை சுண்ட காய்ச்சி அதில் ஜாதிக்காய் பொடியை கலக்கி அதனுடன் ஏலக்காய் பொடியை தூவி மேட்ச் செய்தார் பல்லவி.
அத்தை என்ன பண்றீங்க? என மலர் உள்ளே வர, அதற்குள் பல்லவி பாலை கலக்கி விட்டு வா வா மலரு அதோ ஃப்ரிட்ஜ்ல பூ இருக்கு பொற்கொடி கொடுத்து விட்டது வச்சுக்க, இங்கே திரும்பு நான் வச்சு விடுறேன் என பல்லவி மொட்டு மல்லிகையை வைத்து விட்டார்.
அத்தை இப்போ வச்சா அது வேஷ்ட் நான் நாளைக்கு காலையில் வச்சுக்குறேன் என மலர் கூற, “அப்படி சொல்ல கூடாது. புது தாலி போட்டிருக்கவ தலை நிறைய பூ வச்சுக்கணும். இந்தா இதை வெற்றி கிட்ட கொடுத்திடு! அவன் வேண்டாம்னு சொல்லுவான். அப்போ இதை கீழ தான் ஊத்தனும்னு சொல்லிடு” என்றார் பல்லவி.
அப்படி சொன்னால் என்னாகும்? என மலர் கேள்வியாக மாமியாரை பார்க்க, அவர் சிரித்துக் கொண்டே சாப்பாட்டை வேஸ்ட் பண்ண அவனுக்கு பிடிக்காது. என்னை திட்டிட்டு அவனே குடிச்சிடுவான் என சிரித்துக் கொண்டே கூறினார்.
உடனே களுக் களுக் களுக் என சிரித்தாள் மலர். பல்லவி உதடு பிரிக்காமல் சிரித்து விட்டு போ மா. நம்ம சத்தம் போட்டு சிரிச்சா திட்டுவான். உங்களுக்கு டஸ்ட்பின் இல்லையா எதுக்கு இப்படி சிரிக்கிரின்னு போரே நடக்கும் என்றார்.
மலர் இன்னும் சிரித்துக் கொண்டே அத்தை அதுக்கு பேர் டிசிப்லின் என்றாள். அதே தான் மா என அவர் தண்ணீரை பிளாஸ்கில் எடுத்துக் கொண்டு படுக்கை அறைக்கு சென்றார்.
மலர் சிரிப்பை அடக்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள். கதவை சாத்திடு சத்தம் போடாமல் தூங்கு என்றவன் திரும்பி படுக்க லைட் எரிந்து கொண்டிருக்க, கரன்ட் வேஸ்ட் ஆகும் என வெற்றி கூற, உடனே உதடு மடித்து சிரிப்பை அடக்கியவள் பாலை நீட்டினாள்.
“என்னது இது?”
“பால் அத்தை கொடுத்தாங்க” என்றாள் மலர்.
எனக்கு வேணாம் என்று வெடுக்கென கூறினான்.
ஓகே என அவள் டம்லருடன் பாத் ரூம் செல்ல, ஹே எங்கே போற? என வெற்றி அதட்டினான்.
நீங்க குடிக்கலன்னா கீழே ஊத்த சொன்னாங்க என்றாள் மலர்.
ஹே ஹே பின்னாடி வா! அதை என் கிட்ட கொடு! என்றான். மலருக்கு சிரிப்பு வெடித்து கொண்டு வெளியே வருவது போல இருக்க கஷ்ட பட்டு கட்டு படுத்தியவள் அவனிடம் நீட்ட வெற்றி வாங்கி ஒரே மூச்சில் குடித்தான்.
நான் பாத் ரூம் போறேன் என வேகமாக உள்ளே ஓடி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள். காமெடி மெட்டீரியல் என நினைத்தவள் ஒரு வாறு தன்னை சரி செய்து கொண்டு வெளியே வந்தாள்.
வந்ததும் எங்கே ஆள காணோம் என தேடினாள். வெற்றி அந்த டம்லரை கழுவி வைத்து விட்டு வேகமாக நடந்தான். என்ன பன்றாரு? என மலர் எட்டி பார்த்தாள்.
டேய் லைட்ட போட்டுட்டு என்ன பண்ற? என பல்லவி கேட்க, பால் ஒரு டம்ளர் எதுக்கு கொடுத்த? அதை டைஜசன் பண்ணனும். பால் ஹெவியா இருக்கு! நீ இருக்கியே என திட்டினான்.
அவ்வளவு தான் மலர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். அய்யோ சரியான காமெடிடா சாமி என மலர் படுக்கையில் விழுந்தவள். வெற்றி வருவதற்குள் தூங்கி விட்டாள்.
அரை மணி நேரம் கழித்து வெற்றி படுக்கை அறை வந்தான். அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு வெற்றிக்கு விழிப்பு தட்டியது.
மல்லிகை மணம் வீச மலர்விழி அருகில்.
தொடரும்…