EPISODE – 15
“தியா” என உதடுகள் முனுமுனுக்க அப்படியே சோபாவில் சரிந்தான் ராணா. அவளை முதன் முதலாக சந்தித்த அந்த நொடி இப்பொழுது கூட நினைவில் இருக்கிறது. அவளுக்கு இல்லையா? என்பது தான் அவனது ஐயம்.
இவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது? என யோசித்துக் கொண்டே மிருதி கடைசியாக ஒரு யுக்தியை கையாள முயற்சி செய்தாள். தன்னை அழகாக அலங்கரித்து கொண்டவள் நேராக அருகில் வந்து அவன் உறங்கி கொண்டிருக்கும் சோபாவின் முன் நின்றாள்.
க்கும் என தொண்டையை கணைத்தாள். ராணா கண்களை திறக்காமல் வீட்டில் நான் இருக்கும் போது உன்னை எங்கேயும் விட மாட்டேன்னு உனக்கு தெரியும் தானே! எதுக்கு இப்படி மூச்சு முட்ட ரெடி ஆகி என் முன்னாடி வந்து நிக்கிற? என்ன விசயம் என கேட்டான்.
மிருதியா உச்சகட்ட அதிர்ச்சியில் சிலை போல நின்றாள். இப்படியே நின்னா? என்ன அர்த்தம்? பதில் சொல்லு. என மெதுவாக கண்களை திறந்து பார்த்தான் ராணா.
அவள் முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் உருண்டு கொண்டு நிற்க, மெதுவான குரலில் எப் எப்படி? நா … நான் இங்கே இருக்கிறது வந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும்? என கேட்டாள்.
என்ன விஸ்யம் சொல்லு? என ராணா மெதுவாக கண்ணை திறந்து பார்த்தான். அவன் முன்னால் அழகு பதுமையாக வந்து நின்றாள் மிருதி. மெல்லிய தங்க செய்யின் கழுத்தை அழுத்தமாக பிடித்து கொண்டிருக்க, இறுக்கி பிடித்த தங்க வண்ண ஜாக்கெட், சிவப்பு வண்ண ஜார்ஜெட் புடவையில், இரண்டு பக்கமும் முடி எடுத்து பின்னி அப்படியே விரித்து விட்டவள். அவனை ஒரு வித பதட்டத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அவளின் கண்களை கூர்மையாக பார்த்தான் ராணா! அவள் உடனே சேலையின் தலைப்பு முந்திய சுற்றிக் கொண்டு நின்றிருந்தாள். என்ன விசயம்? என மெல்லிய குரலில் கேட்டான்.
அது எனக்கு வீ… வீட்ல இருக்க ஒரு மாதிரி இருக்கு. நான் கோவிலுக்கு போயிட்டு வரட்டுமா? எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையே என இதழ் வளைத்து கூறினான் ராணா.
எனக்கு நம்பிக்கை இருக்கு. என்னோட மனசுக்கு நிம்மதி வேணும். என மெதுவாக தலையை நிமிர்ந்து பார்த்தவள். போயிட்டு வரட்டுமா? பிளீஸ் என கெஞ்சினாள்.
வேணாம் எனக்கு இப்போ என அவளின் புடவை முந்திய இழுத்தான். அவள் முகம் தூக்கி வைத்துக் கொண்டு சுளித்தாள். மெல்ல மெல்ல வேக மூச்சுடன் அவளை தூக்கி கொண்டவன் முத்தமிட்ட படி அவளின் வாசனையை உள் இழுத்துக் கொண்டு படுக்கை அறைக்கு சென்றான்.
அவனது கைகளில் துவண்ட கொடியாக இருந்தாள் மிருதி. சாமி கிட்ட எப்படி என்னை விட்டு தப்பிச்சு ஓடலாம்ன்னு தானே pray பண்ண போற? சரி தானே? என்றான் சூடான முத்தங்களை அவளின் கழுத்துக்கு வழங்கி கொண்டே… அப் அப்படி இல்லை. உங்களை அப்படி ஏமாத்திட்டு எப்படி போக முடியும்? நான் எனக்கு ஹான் எங்க அப்பாவை பார்க்கணும் போல தோணுச்சு கோவிலுக்கு போயிட்டு வர மாதிரி போய் அப்பாவை பார்க்க நினைச்சேன். என்றாள்.
அப்பாவை பார்க்கணுமா? என்றவன் அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். மிருதி அவளின் சங்கு கழுத்தை பிடித்துக் கொண்டு சத்தியமா அப்பாவை பார்க்கணும் அதுக்கு தான் போறேன் என்றாள்.
அவளை மெதுவாக படுக்கையில் உருட்டி விட்டான் பூ பந்து போல, அவள் மூன்று சுற்று போய் அவனை பார்க்க, எதுவும் பேசாமல் அவனது சட்டையை கழட்டி போட்டவன். அருகில் நெருங்கி முக சுளிப்புடன் உடையை களைய ஆரம்பித்தான்.
என்.. என்னாச்சு…? என மிருதி கேட்க.. இந்த சாரி டிஸ்டர்ப் பண்ணுது? இதை ரிமூவ் பண்ண எவ்ளோ கஷ்டம்? Oh yaar.. என முனகி கொண்டே உடையை விலக்கினான். மிருதியாவின் மனதிலும் முகத்திலும் அப்பட்ட அதிர்ச்சி அப்போ நான் இவனை எந்த இடத்திலும் ஈர்க்கவே இல்லையா? என்று தான் தோன்றியது. என்ன மனிதனாக இருப்பான் இவன்? இல்லை இல்லை இவன் மனிதனே இல்லை. அசுரன் என பெரு மூச்சை அவள் விடும் நேரம் ஆவேசமாக உதட்டை கடித்து கவ்வி இருந்தான்.
மிருதி மனதுக்குள் முகத்தில் பிடிக்காத மாதிரி காட்டிக்க கூடாது. அவனை ஆதரித்து அவனை முழுதாக நம்ப வைக்க வேண்டும் என நினைத்தவள். பின்னந்தலையை வாகாக பிடித்துக் கொண்டு ராணாவின் முத்தத்தில் கரைந்து உருகுவது போல காட்டிக் கொண்டவள் ஆத்மார்த்தமாக கலவியில் ஈடுபட்டாள்.
புருவங்கள் இரண்டும் மேலே ஏற அவளை காந்த கண்களுடன் பார்த்தவன். அவளின் மோவாய் பிடித்து வெட்கம் கொண்ட முகத்தை ஆராயிந்தான். அவள் வெட்கத்தில் முகத்தை மூடி கீழ் உதட்டை கடித்துக் கொள்ள.. அவளின் கையை விலக்கி விட்டவன். உதட்டில் கள் உண்டு கண்களில் கலந்து போதை ஆனான்.
அங்கங்கள் இரண்டும் குழந்தையை அரவணைத்து கொஞ்சுவது போல இந்த வளர்ந்த அசுர குழந்தையை அரவணைத்து கொஞ்சியது அவளின் மார்பு. அந்த கூடல் ராணாவுக்கு பல கதை சொன்னது. அனைத்தும் முடிந்ததும். அவனது மார்பில் தலை சாய்த்து கொண்டாள். ராணா மெதுவாக வில்லத்தனமான ஒரு புன்னகை சிந்தினான். ஆனால் அவளை அப்படியே விட்டு விட வில்லை தலையை வருடி கொடுத்து அவனது கைகள் அவளின் உடலில் அலைபாயிந்தது. அவனது மார்பில் உரிமையுடன் சாயிந்தவள்.
என்னங்க? என அழைத்தாள்.
என்னங்க?
என்னங்க? என மூன்றாவது அழைப்பில் தான்
“ம்ம்” கொட்டினான்.
நான் எங்க அப்பாவை போய் பார்த்திட்டு வரட்டுமா? என பவ்யமாக கேட்டாள்.
எதுக்கு போய் பார்க்கணும்? போன் இருக்கே அதுல வீடியோ கால் பண்ணி பேசு.
இல்ல அது நான் இருக்கிற இடம் தெரியாது. வீட்டுக்கு வந்து தங்குன்னு சொல்றாங்க அதனால் தான் பிளீஸ் நான் போயிட்டு வந்துடுவேன் என்றாள்.
ம்ம் போயிட்டு வா! என்றான்.
அவள் கண்களில் மின்னல் வெட்டியது. எழுந்தவன் அடுத்த தேடலுக்கு வித்திட்டு வித்தகன் ஆகி போனான். இப்படியே இருக்க அடுத்த நாள் அவனிடம் பெர்மிஷன் கேட்டவள். எந்த சத்தமும் இல்லாமல் சென்று வந்தாள்.
ராணா அவளின் முகத்தை பார்த்தவன். எதையும் கண்டு கொள்ளாமல் நகர்ந்தான். தேங்க்ஸ் என அருகில் போய் நின்றாள்.
எதுக்கு? என லேப் டாப்பில் அவனது விரல்கள் தட்டச்சு செய்து கொண்டே அவளை ஒரே பார்வையில் மட்டுமே தீண்டியது.
என்னை வீட்டுக்கு விட்டீங்களே! அதான் என புன்னகையுடன் நின்றாள்.
ராணா நன்றாக உடலை வளைத்து முறித்து நெட்டி எடுத்தவன். குளிக்கலாமா? என எழுந்தான்.
அவள் ஒன்றும் புரியாமல் அவனை பார்க்க, உன்னோட தேங்க்ஸ் வேணாம். எனக்கு குளிக்க கம்பனி கொடு என அனுமதி கேட்க வில்லை அள்ளி அணைத்துக் கொண்டு சென்றான்.
மிருதி எதுவும் பேசாமல் ஒரு வித பதட்டத்துடன் இருந்தாள். கணக்கில்லாத முத்தங்கள் எல்லை கடந்து சென்றது. அவளின் ஒட்டு குடல் ஆப்பிரேசன் செய்த தையலை வருடி கொண்டே முத்தமிட்டான். அவள் ஈரத்தில் ஊறிய சந்தன கட்டை போல அவனுக்கு வாசம் கொடுத்தாள். வாசலை கொடுத்து திறந்து வைத்தாள்.
இப்படியே ஒரு வாரம் சென்று விட.. மீண்டும் வந்தாள்.
ம்ம் அப்பாவை பார்க்க போகணுமா?
ஆமா என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ம்ம் போயிட்டு வா” என்றான் ராணா..
போறேன் என்றவள் ராணாவின் சிங்கத்தின் கோட்டையில் இருந்து தப்பித்து நரியின் கையில் மாட்டிக் கொண்டாள்.
கார்கோடன் அவளை கட்டம் கட்டி தூக்கி விட்டான்.
அடுத்து என்ன நடக்குமோ
வருவான்.