Episode -3

இனிய உதயமாகும் காலைப் பொழுதிலிருந்து இருளும் இரவும் சூழும் வேளை வரை, உமையாளின் வாழ்க்கை அக்னிப் பரிட்சையாகவே இருந்தது. அபிநந்தனுடனான அவளது இனிமையான கடந்தகால நினைவுகள் ஒருபுறம், சிவாவின் வெறுப்பும், நிதர்சனத்தின் கடுமையும் மறுபுறம் என அவள் மனம் அலைபாய்ந்தது. இந்த இரு துருவங்களுக்கு இடையில் உமையாளின் பயணம் எப்படித் தொடரும் என்பதை இனி காணலாம்.

மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த அறையைப் பார்த்ததும் சிவாவுக்குச் சினம் பொங்கியது. இத்தனை நாட்களும் இமையாள்தான் தன் மனைவியாக வருவாள் என்று நினைத்தவனுக்கு இன்று உமையாள்! பெயரில் இருவருக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். “என்ன செய்ய? எவ்வளவு தைரியம் இருக்கும்? என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து தாலி கட்டிக்கிறாள்? இவளை சும்மாவே விடக் கூடாது. இனி இந்த சிவா யாருன்னு காட்டப் போறேன்,” என நினைத்துக்கொண்டே விடிய விடிய விழித்திருந்தான். எப்போது தூங்கினான் என அவனுக்கே தெரியவில்லை. அடுத்த நாள் பரபரப்புடன் விடிந்தது.
மறுவீடு அழைக்க சந்திரன் மற்றும் மாதவி இருவரும் வந்திருக்க, மூர்த்தி மற்றும் சித்ரா இருவரும் பேச வரும் நேரம், சிவா அவனுடைய அறையிலிருந்து டிப் டாப்பாக வெளியே வந்தவன், “இன்னும் என்ன பேச வேண்டி இருக்கு! சொல்லுங்க!” எனக் கேட்டான்.
மாதவி தயங்கிக்கொண்டே, “மாப்ளை இதுல உமையாள்…” எனச் சொல்ல வர,
“என்னை மன்னிச்சிடுங்க மாப்ளை! பொண்ணு ஆசைப்பட்டாள் அதனால்தான்!” என மூர்த்தி சமாதானம் செய்ய முன்வர,
“உங்களுக்கு இது விளையாடுற விசயமா இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்ல,” என்றான் சிவா.
“மூர்த்தி, சிவா போதும் விடு!” என்றார் மூர்த்தி.
“அப்பா! நீங்க கம்முன்னு இருங்க!” எனச் சொன்ன சிவா, “சரி அது எப்படியோ போகட்டும். நான் கிளம்புறேன்மா,” என அவனுடைய பேக் எடுத்துக்கொண்டு வந்தான்.
“என்ன டா சிவா!” என்றார் மூர்த்தி.
“மாப்ளை உங்களை மறுவீடு அழைக்க வந்திருக்கோம்!” என்றார் மாதவி.
சித்ரா இதைக்கேட்டு விரக்திப் புன்னகை சிந்தி, “இருக்கிற கொஞ்ச மானத்தையும் எங்களால் கப்பல் ஏற்ற முடியாது,” என்றார்.
சந்திரன் தயக்கத்துடன் “அக்கா!” என அழைக்க,
“போதும் சந்திரா! ஏற்கனவே பண்ணது மனசு குளிர்ந்து போச்சு!” எனச் சொல்லிவிட்டு சித்ரா எதுவும் பேசாமல் தன் கணவரை முறைத்தார்.
மூர்த்தி எதையும் கண்டுகொள்ளாமல், “சிவா உன் பொண்டாட்டியையும் கூட்டிட்டு போறதான!” என்றார்.
மாதவி, சந்திரன், சித்ரா என அனைவர் பார்வையும் உமையாள் மீது விழ,
சிவா, “ஆமாம்மா! அவளும் தான்! இந்த கல்யாணம் எனக்கு விளையாட்டு இல்ல,” என உள்ளுக்குள் “எல்லாம் உங்களுக்காகத்தான்! இவளைப் பார்க்கப் பார்க்கப் பத்திக்கிட்டு வருது!” என்று நினைத்துக்கொண்டே வெளியில் பணிவுடன் கூறினான்.
மூர்த்தி தன் மகனைப் பற்றித் தெரியாதவரா என்ன? ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், “சரி கிளம்புப்பா! பத்திரம்,” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.
சிவா தன் அத்தையை அழைக்க, அவருடன் முகம் எல்லாம் அழுது சிவந்து பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக வந்து நின்றாள் உமையாள்.
மாதவிக்கு தன் பெண்ணைப் பார்த்ததும் சப்த நாடியும் ஆட்டம் கண்டது. அவர் அழுகையை அடக்கிக்கொண்டே, “உமையாள்! தங்கம்!” எனத் தன் பெண்ணிடம் செல்ல, சித்ரா மற்றும் சிவா இருவரும் அவர்களை முறைத்துத் தள்ளினார்கள்.
மூர்த்தி, “நல்ல வேலை நீங்க வந்ததும் நல்லதா போச்சு! சரி ரெண்டு பேரையும் வழி அனுப்பி வச்சிடுங்க,” என்றார்.
மாதவி, “அண்ணா ஒரு தடவை ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தால் நல்லா இருக்கும்,” என்றார்.
“வேணாம்! எனக்கு லேட் ஆகுது! அப்படி கூட்டிட்டு போறதா இருந்தால் உங்க பொண்ணு மட்டும் வரட்டுமே! என்ன நான் சொல்றது?” என சிவா சொல்ல, இதைக் கேட்டதும் சந்திரன், “வேணாம் வேணாம் மாப்ளை! நீங்க அவளை கூட்டிப்போங்க! இன்னொரு நாள் நாங்க சீரோட வீட்டுக்கு வரோம்!” என்றார்.
“அய்யோ நீங்க பண்ணதே பெரிய சீர் இதுக்கு மேல வேணுமாமா!” என சித்ரா பக்கம் திரும்பி சிவா கேட்க,
சித்ரா, “விடு டா கண்ணா! எப்படி இன்னைக்கே கிளம்பிப் போற?” என்றார்.
“எனக்கு இனி நிறைய வேலை இருக்கு! நான் போறேன்மா!” என்றான் சிவா.
“மூர்த்தி, சிவா!”
“பா போயிட்டு வரோம்!” எனச் சொல்லிவிட்டு அவன் உமையாளை ஒரு பார்வை பார்க்க,
மாதவி, “என்னை மன்னிச்சிடு! மாப்ளை உன்னை பார்க்கிறார். எதுவா இருந்தாலும் போன் பண்ணுடி!” என்றார்.
“சரி மா!” என அவள் அழுதுகொண்டே சிவா பின்னால் வர,
சிவா, “உன் அப்பா வாங்கி கொடுத்த போனை அவர் கிட்டயே கொடுத்துட்டு வா!” என்றான்.
உமையாள் ஒருவித பதட்டத்துடன் அவனைப் பார்க்க,
“சொன்னது புரியலையா!”
“மூர்த்தி, சிவா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் கொஞ்சம் வர முடியுமா!”
“சொல்லுங்க கேட்கிறேன்.”
“கொஞ்சம் உள்ளே வாடா!” என வேகமாகச் சென்றார் மூர்த்தி. சிவா அவரின் பின்னால் சென்றான். இருவரும் ஒரு சில நிமிடம் கழித்து வெளியே வந்தார்கள்.
சித்ரா தன் கணவரை ஏகத்துக்கும் முறைத்துப் பார்க்க, அதை அவர் கண்டுகொள்ளவில்லை. சிவா நேராக உமையாள் அருகில் சென்று, “வா அம்மா அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்கணும்,” என மூர்த்தி மற்றும் சித்ராவிடம் ஆசிர்வாதம் வாங்கி, அதேபோல சந்திரன், மாதவியிடம் வாங்கினார்கள்.
அதன் பின் நேராக சிவா முன்னால் செல்ல, மாதவி, “உன் மாமனார், மாமியார் கிட்ட சொல்லிட்டு போடி பொண்ணு!” எனச் சொல்ல,
உமையாள் நேராக மூர்த்தியிடம் செல்ல. மூர்த்தி, “அவனை கொஞ்சம் பொறுத்துக்க மா! அவன் வைரம் மாதிரி!” என்றார்.
“சரிங்க மாமா!” எனத் தலையாட்டினாள்.
உமையாள் சித்ராவின் அருகில் வர, உடனே சித்ரா வேகமாக உள்ளே சென்று விட்டார்.
மாதவிக்கு மிகவும் வருத்தமாகப் போக, வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. மூர்த்தி, “சரி நீ போ மா அவன் வெளியே வெயிட் பண்றான்!” எனச் சொல்ல,
உமையாள் அங்கு இருக்கும் அனைத்துப் பைகளையும் சிரமப்பட்டு எடுத்துக்கொண்டு குட்டி வாத்து போலத் தத்தி தத்தி நடந்து மூச்சு வாங்கச் சென்றாள்.
“ம்ம் சீக்கிரம்!” என சிவா அதட்ட, உமையாள் பயந்துகொண்டே அனைத்தையும் உள்ளே வைத்தாள். அதன் பின் தன் அம்மாவைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே காரில் ஏற,
“மகாராணி வாங்க வாங்க! இன்னும் மெதுவா வாங்க! ஹே சீக்கிரம் ஏறுடி!” என அவன் அதட்ட,
உமையாள் கண்கள் கலங்க டாட்டா சொல்லிக்கொண்டே ஏற கார் கிளம்பியது.
மாதவி நெஞ்சம் பதைக்க, “சாமி என் பொண்ணு அவளை நீதான் பக்கத்தில் துணையாக இருந்து காக்கணும்,” என நினைத்தாள்.
ஆறு மணி நேரப் பயணத்துக்குப் பின் சென்னை வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருக்கும் அப்பார்ட்மென்ட் சொசைட்டியை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்து அவனுடைய பார்க்கிங்கில் வந்து நிறுத்தினான்.
உமையாள் தூங்கிக்கொண்டிருந்தாள். “மகாராணி! வந்தாச்சு!” எனச் சத்தம் வர வெடுக்கென விழித்தாள்.
சிவா, “C3 706 வந்துடு,” எனச் சொல்லிவிட்டு அவளை அதே இடத்தில் விட்டு வேகவேகமாகச் சென்றுவிட்டான். உமையாள் ஒரு பெருமூச்சு விட்டு அனைத்துப் பைகளையும் எடுத்துக்கொண்டு குட்டி வாத்து போலத் தத்தி தத்தி நடந்து மூச்சு வாங்கச் சென்றாள்.
அங்கே வீட்டுக்குச் சென்றதும் காலிங் பெல் அடித்தாள். கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவன் திறக்கவே இல்லை. உமையாள் களைப்புடன் திரும்பத் திரும்ப அடிக்க,
“ஹே அறிவு கெட்டவளே!” எனக் கோபத்துடன் கதவைத் திறந்தான். “இல் இல்லங்க அ அத் அது வந்து!” எனத் தயங்கிக்கொண்டே அவள் பேச, அதற்குள் உள்ளே சென்றுவிட்டான்.
உமையாள் அனைத்துப் பைகளையும் எடுத்துக்கொண்டு உள்ளே வந்தவள். அந்தப் பையில் இருக்கும் அனைத்தையும் எடுத்து தனித்தனியாக வைத்து செட்டில் செய்தாள்.
சிவா குளித்து முடித்து வெளியே வந்தவன், “ஹேய்!” என்றான்.
அவள் வெடுக்கெனத் திரும்ப,
“சமைக்கத் தெரியுமா?”
உமையாள் அப்படியே பார்க்க,
“ஹே வாயைத் திறந்து சொல்லு எனக்கு இப்படி இருக்கிறது எல்லாம் சுத்தமா பிடிக்காது.”
“ஹான் த் தெரியும்!”
சிவா, “சரி இந்தா காசு கடைக்குப் போய் மட்டன், சிக்கன், மீனு எல்லாம் வாங்கிட்டு வந்து மட்டனைக் குழம்பு வச்சு, கறி அரிச்சு வறுத்துடு, சிக்கனை செமி கிரேவி பண்ணு, மீனை பொரிச்சிடு! நான் முக்கியமா வெளியே போகணும். வீட்டுக்கு வந்ததும் இது எல்லாம் ரெடியா இருக்கணும்!” எனக் கிளம்பி விட்டான்.
ஒருவேளை உமையாள் அவன் கிட்ட தெரியாதுன்னு சொல்லி இருக்கலாம். ஆனால் அதுக்கும் தலைவன் பிளான் வச்சிருப்பான்.
உமையாள் ஒரு பெருமூச்சு விட்டு குளித்து முடித்து நடந்தே ரொம்ப தூரம் சென்றவள். அவன் சொன்ன அனைத்தையும் வாங்கிக்கொண்டு கால் வலிக்க நடந்து வந்தாள். காய்கறி என அனைத்தையும் வாங்கி வந்து சமையல் அறையை சுத்தம் செய்து சமைக்க மாலை ஆறு ஆகிவிட்டது. வேக வேகமாக சமைக்கும் போது அவள் நினைவு அப்படியே கொஞ்சம் சிந்தையில் மூழ்கியது.
(நினைவில்)
அபி, “யாழினி (உமையாள்) வீக் எண்ட் மட்டும் என்னோட சமையல் உனக்கு ஓகேவா!”
“ஏன் வீக் எண்ட் மட்டும்?” என உமையாள் கேட்க,
அபி புன்னகையுடன் “அந்த ரெண்டு நாள் உனக்கு ரெஸ்ட் மட்டும் தான்! சோ என் யாழினி பேபியை நான் அப்படி பார்த்துப்பேன்.”
யாழினி, “அப்போ டெய்லி இல்லையா நந்து!”
அபிநந்தன், “டெய்லி உனக்கு கிச்சன்ல என்னால் முடிஞ்ச சின்ன சின்ன வேலை செஞ்சு கொடுப்பேன்.”
“என்ன வேலை?”
“மம்ம் யாழினி கன்னத்தில் முத்தம், இடுப்பைக் கட்டிக்கிட்டு பின் கழுத்தில் ஒரு முத்தம்,” என அபி சொல்ல,
யாழினி, “இது ஹெல்பா ப்ராடா!”
“தரக்கூடாதா! அப்போ உன்னை பெட் ரூம் தூக்கிட்டு போயி!” எனச் சொல்ல வர,
இங்கே நினைவில் கதவு காலிங் பெல் ஓயாமல் அடித்தது.
உமையாள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கை கழுவிவிட்டு சாதம் விசில் வந்தால் போதும் என கதவைத் திறக்க, அங்கே சிவா சுதியுடன் நின்றிருந்தான்.
உமையாள், “வாங்க எல்லாமே சமைச்சிட்டேன்,” என அவள் உள்ளே செல்ல,
சிவா, கொஞ்சம் நிதானத்துடன் உள்ளே வந்து கதவைச் சாத்திவிட்டு நேராக படுக்கைக்குச் சென்றான்.
“ஹே இங்கே வாடி?” எனச் சத்தம் கேட்க, உமையாள் அவன் இருக்கும் திசை பக்கம் சென்றாள்.
உமையாள், சிவாவின் இந்த கடுமையான சொற்களையும், நடத்தையையும் எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறாள்? அபிநந்தனின் நினைவுகள் அவளுக்குத் துணையாக இருக்குமா?

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.