Episode -5
உமையாள் தன் கனவை நினைத்து லயத்திருக்க, அந்த நேரம் காலிங் பெல் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்க, கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டே வந்து கதவைத் திறந்தாள். அங்கே சிவா சுதியுடன் நின்றுகொண்டிருக்க, அதைக் கவனிக்காத உமையாள் அவனை உள்ளே வர வழிவிட்டு, “வாங்க! நீங்க கேட்ட எல்லாமே சமைச்சு போட்டுட்டேன்,” எனக் கூறினாள்.சிவா நேராகத் தள்ளாடிக்கொண்டே அவனுடைய படுக்கையறைக்குச் சென்றான். உமையாள் அனைத்தையும் எடுத்து டைனிங் டேபிளில் அடுக்கிவிட்டு, கைகளைத் துடைத்துக்கொண்டே முகத்தைத் துடைக்க,”ஹே இங்கே வாடி!” எனக் கர்ஜிக்கும் குரல் கேட்டது.”என்னங்க? சாப்பாடு ரெடி! நீங்க சொன்னபடி செஞ்சிட்டேன்!” என சிவா இருக்கும் அறைக்கு வந்தாள். தள்ளாட்டத்துடன் ஒரு பார்வையை அவள் மேல் பதித்தான்.
உமையாள் மீண்டும் உணவைப் பற்றிப் பேச வர, “எதுக்குடி என்னைக் கல்யாணம் பண்ண? அக்காவை கல்யாணம் பண்ண வந்த இடத்தில தங்கச்சியை மயக்கி கட்டிக்கிட்டான் அப்படின்னு ஒரு பேரை எனக்கு எதுக்கு வாங்கிக் கொடுத்த? உங்க அண்ணனைக் காப்பாத்தினதுக்கு, உன் குடும்பத்தை பைனான்ஸ்காரன்கிட்ட இருந்து காப்பாத்தினதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்!” என அவனுடைய மனதில் இருக்கும் அனைத்து பாரத்தையும் கொட்டிக்கொண்டிருந்தான் சிவா.உமையாள் என்ன சொல்வாள்? தனக்கும் இந்தக் கல்யாணத்தில் துளிகூட விருப்பம் இல்லையே! மனதை ஏற்கனவே ஒருவனுக்குக் கொடுத்துவிட்டு வெறும் ஜடமாகத்தானே சிவாவின் தாலியைச் சுமந்துகொண்டிருக்கிறாள்.
வேலை நிமித்தமாகச் சென்ற அபிநந்தனுக்கு என்ன பதில் சொல்வது என இதயம் யாரோ வாள் கொண்டு அறுப்பது போல இருந்தது.உமையாள் அசையாமல் நின்று கொண்டிருக்க, வியர்த்து வடிந்த அவளின் வதனம் மீது சிவாவின் பார்வை படர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவளின் மேல் பார்வை ஊறிட, தள்ளாடிக்கொண்டே எழுந்து நின்றான். அவள் வெடுக்கென அவனைப் பார்க்க, ஒரே பிடியில் படுக்கைக்குக் கொண்டு வந்தான். சிவாவின் மொத்த எடையையும் அவளின் மேல் போட, கண்களில் வழிந்தோடும் நீருடன் “என்ன பண்றீங்க? என்னை விடுங்க!” என அழுதுகொண்டே அவள் திமிர,சிவா அவளின் மாராப்பை உருவி கீழே போட்டான்.
“மிஸ்டர் சிவா! ப்ளீஸ் லீவ் மீ! நான் இதுக்குத் தயாரா இல்ல!” என அவள் அவனை விலக்கும் பொருட்டு என்னென்னவோ செய்து பார்த்தாள். அவன் காதில் விழவில்லை!உமையாள் அழுதுகொண்டே அவனிடம் போராட, அழுத்தமான வார்த்தைகளுடன் அவள் காதில் வார்த்தைகள் வந்து சேர்ந்தது. “நீதான் என்னை லவ் பண்ணியே! அதான் என் பாணியில் லவ் மேக்கிங் பண்ணிட்டு இருக்கேன். உன்னை இனி அணுஅணுவாக லவ் மேக் பண்ணப் போறேன்!” எனச் சொல்லிக்கொண்டே அவளின் செவ்விதழைக் கொய்து கொண்டான். போதையில் என்ன செய்கிறோம் என அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவளிடம் தான் அத்துமீறிக்கொண்டிருக்கிறோம் என நன்றாகவே தெரிந்தது.அந்த இரண்டு உதடுகள் துடித்துக்கொண்டிருந்தது.
சிவா வன்மையுடன் மென்று தின்ன, இப்போழுதுதான் அந்த மது வாசம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்தது. அவளுக்குக் குமட்டிக்கொண்டு வருவது போல இருக்க, “ஹே என்னடி!” என கொஞ்சம் கொஞ்சமாகப் பல் தடம் கொண்டு மொத்த தேகத்திலும் முத்திரை பதித்தான்.இருவரின் மொத்த உடையும் அறையில் சிதறிக் கிடக்க, “நந்து! நான் செத்துப்போயிட்டேன்! நான் உனக்குத் தகுதி இல்லாதவளாகிட்டேன்டா!” என இதயத்துக்குள் புழுங்கி அழுதவள், விட்டில் பூச்சி போல சிவாவின் தொடுதலில் துடித்தாள். வாழை குருத்துப் கால்களுக்கு இடையில் தன்னுடைய ஆண்மையை நிலைநாட்டினான்.
உமையாள் பேசா மடந்தையாக அவனுடன் ஒன்ற முடியாமல் தகித்துக்கொண்டிருந்தாள். அவனுடைய ஒவ்வொரு தொடுதலும் உடலில் கன்னி சிவந்து கிடக்க, உயிர் மட்டுமே மிஞ்சியது அவளிடம்! அந்த மனது நந்தனுடன் சேர்ந்து மாய்த்துக்கொண்டது. அப்படியே தூக்கம் அவளை ஆட்கொள்ள, ஒரு சில நொடிகளில் உறங்கிப்போனாள்.”ஹே பசிக்குது எழுந்து வாடி!” என அவளை உலுக்கினான்.கண்களைத் திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு விழித்தாள். சிவா எதிரில் அவளின் கண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய பார்வை அவளின் கண்ணில் மட்டுமே இருக்க, உமையாள் கொஞ்சம் குனிந்து தன்னைப் பார்த்தாள்.சிவா அருவருப்பாக முகத்தை வைத்துக்கொண்டு வேறு புறம் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
அவள் கண்களில் நீர் கொட்டியது. “உனக்கு அஞ்சு நிமிஷம் டைம்! சீக்கிரம் வந்து சேருற,” எனச் சொல்லிக்கொண்டே சென்றான். ஒரு பெருமூச்சு விட்டு வேகமாகத் தலைக்குக் குளித்து வெளியே வந்தாள் உமையாள்.சிவா அவனுடைய போனை நோண்டிக்கொண்டிருக்க, உமையாள் உணவைச் சூடு செய்து அனைத்தையும் போட்டுக்கொண்டு வந்து மீண்டும் மேஜையில் அடுக்கினாள்.”வாங்க!” என மெல்லிய வார்த்தையில் அழைக்க,வந்து சேர்ந்தான் கோபக்கார கார்வண்ணன், கருப்புப் பேரழகன். கையை உதறி விட்டுக்கொண்டே உணவை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.
சிவா ஒரு வாய் வைத்ததும் அப்படியே எதிரில் நின்றுக்கொண்டிருப்பவளின் மேல் பார்வை சென்றது. அந்த மேஜையின் மீது சிந்திய தண்ணீர் துளிகளில் விரலை வைத்து கோலம் போட்டுக்கொண்டிருந்தவள், மனதும் வாழ்க்கையும் அழிந்த கோலமாகிப்போனதை நினைத்து உள்ளுக்குள் சொல்ல முடியாத குமுறல் ஏற்பட்டது.சீமை பட்டை, ஜாதிக்காய், ஜாவித்திரி என அனைத்தும் சேர்த்து ஊறிய கறி அவன் வாயில் உள்ள சுவை அறும்புகளைத் தூண்டிவிட, இதுபோல ஒரு பிரியாணி சாப்பிட்டதே இல்லை அவனுக்கே தெரியும்! அவன் உதட்டில் சுவையைத் தாண்டிய ஒரு ஏளனம் குடிகொண்டது. ‘அக்காவுக்கு வரப்போகும் கணவரைத் தன் கணவனாக நினைத்து காதலித்திருக்கிறாள். இவள் எப்படியாப்பட்ட பிறவி’ என ஒரு பக்கம் கோபமும் வந்தது.ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் மொத்த பிரியாணியும் உள்ளே தள்ளியவன், தண்ணீர் குழம்புக்குத் தாவியிருந்தான். “ஹே இன்னும் ஊற்று!” என்னும் அதட்டல்தான்! உமையாள் படபடத்த விழிகளில் அவனுடைய வட்டிலில் உணவைப் போட்டுக் கொடுக்க, நாட்டுக் கோழி வறுவல், அதை முடித்துவிட்டு இறுதியில் மோர் என வயிற்றுப் பசிக்கு அவள் செய்த உணவையும், கோபப் பசிக்கு அவளையும் உணவாக்கி முடித்திருந்தான்.உமையாள் அனைத்தையும் சுத்தம் செய்துகொண்டிருக்க, அந்த நேரம் சிவாவின் போன் அலறியது. மணி 7.30 இருக்கும். மதியம் நடந்த ஏடாகூட சம்பவத்தில் நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் ஒரே ஒரு கேள்வி எனக்குங்க? இந்த சிவா பையன் உமையாளைக் கோபத்தில் பழி வாங்குவதை நியாயமாக எடுத்துக்கொள்ளலாம்! ஆனால் இமையாள் நினைவு இதுவரைக்கும் அவனை வாட்டவே இல்லையே! ஏன்? அதை பொறுத்திருந்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.
போன் மீண்டும் சத்தமிட புருவம் சுருக்கிக்கொண்டே போனை எடுத்துப் பார்த்ததில் புது எண். “ஹலோ யாரு?” எனக் கரகரத்த குரலில் கேட்டான் சிவா.”மாப்பிள்ளை நான் மாதவி பேசுறேன். உமையாள் கிட்ட பேசணும்!” எனத் தயங்கிக்கொண்டே பதில் அளித்தார்.சிவா நேராக போனை எடுத்துக்கொண்டு உமையாள் கிட்ட நீட்ட, அவள் சிவந்த விழிகளில் ஏற இறங்க அவனைப் பார்த்தாள்.”ம்ம்” என்று ஒரு கர்ஜனை. அடுத்த நிமிடம் வாங்கி காதில் வைத்தாள்.சிவா நேராக படுக்கை அறை சென்று கண்ணாடியில் தன்னுடைய முகத்தையும் தாடியையும் சரி செய்துகொண்டே அவனுடைய வதனத்தையும் முகத்தையும் பார்த்தான்.
“மா!” என்ற சக்தியே இல்லாத ஒரு குரலில் பேசினாள் உமையாள்.”பொண்ணு,” என மாதவி துடித்துக்கொண்டே, “நான் மாப்ளை கிட்ட வந்து எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறேன்! அவளுக்கு மாற்று நீ இல்ல… உனக்காக உன் கூட வாழ அபி தம்பி காத்திருக்கும்,” எனச் சொல்ல வர,உமையாள் இறுக்கி மூச்சை இழுத்துவிட்டவள், “யார் நினைச்சாலும் மாற்ற முடியாது மா! இப்போ நான்… நான்! அவருக்கு சொந்தமாகிட்டேன் உடலால!” எனக் குமுறிக்குமுறி நெஞ்சு வெடிக்க, மருகிக்கொண்டே நின்றாள்.மாதவிக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. தலையில் பலத்த அடி போல வலி! “என் என்னே சொல்ற?” எனத் தயங்கிக்கொண்டே பெற்ற பெண்ணிடம் கேட்க முடியாத விசயங்களைத் தயங்கிக்கொண்டே கேட்டார்.
அவரால் நம்ப முடிய வில்லை. பிடிக்காத ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட ஆண் எப்படி ஒரே நாளில்! “அய்யோ என் மகள் என்ன கொடுமை அனுபவித்திருப்பாளோ!” எனப் பெற்ற வயிறு பற்றிக்கொண்டு எரிய, அந்த மொத்த கோபமும் இமையாள் மீது திரும்பியது.”இல்ல மா! நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல அவரு தொட்டு தாலி கட்டிட்டாரு! என்னால் இனி… வேற ஒருத்தரை முடியாது மா!” என அப்படியே மலுப்பிவிட்டாள். ஒரு தாயிடம் இதைப்பற்றி சொன்னால் அவள் துடித்து விடுவாளோ! அந்தக் கவலைதான் வேறு ஒன்றும் இல்லை.மாதவி அவள் பேசுவதைக் கவனித்துவிட்டு, “அதுதானே பொண்ணு! ஊர் உலகம் என்ன பேசினால் என்ன? எனக்கு உன் வாழ்க்கை முக்கியம் டா நிச்சயமா இந்தக் கல்யாணத்தை அபி தம்பி பெருசா எடுத்துக்காது! நீ நம்பர் கொடு நான் பக்குவமா எடுத்து சொல்றேன்.
சிவா மாப்பிளை, அபி தம்பி ரெண்டு பேர் கிட்டயும் பேசி இமையாள் பத்தி சிவா மாப்பிளைக்கு எடுத்துச் சொல்லி…” என அழுதுகொண்டே “எனக்கு மனசு கேட்க மாட்டிக்குது டி!” என அழுதுகொண்டே கூறினார்.உமையாள் ஒரு பெருமூச்சு விட்டு, “இப்படித்தான் என் வாழ்க்கை இதுதான் என் வாழ்க்கை அப்படின்னா யாரால மாற்ற முடியும் விடு மா! நீ என்னை நினைச்சு கவலைப்படாதே!” எனக் கூறினாள்.”சாப்பிட்டியா பொண்ணு!” என மாதவி கேட்க,”ம்ம் சாப்பிட்டேன் மா! வந்ததும் ஆபிஸ் கிளம்பிப் போறதுக்கு முன்னாடியே எனக்கு எல்லாப் பொருளும் வாங்கி கொடுத்திட்டு போனாரு! நான் சமைச்சு வச்சு இருந்தேன். மதியமா வந்தாரு!” எனக் கூறினாள்.
“உன் கிட்ட கோபமா பேசுறாரா?” என மாதவி கேட்க,”இருக்கத்தானே மா செய்யும். கோபம் இல்லாம இருக்குமா! பார்த்துக்கலாம் விடுங்க,” என உமையாள் கூறினாள்.”சரி இனி நீ வேலைக்குப் போக வேணாம்!” என மாதவி சொல்ல,உமையாள் மனது விழித்துக்கொண்டு, “எனக்கு இருக்கிற ஒரே ஸ்ட்ரெஸ் பஸ்டரே அதுதான் மா! கொஞ்ச நாள் போகட்டும். இமையாள் கல்யாணத்தை காரணம் காட்டி ஒர்க் ஃப்ரம் ஹோம் தான் வாங்கி இருந்தேன். ஆனால்,” என வார்த்தைகள் உள்ளே சென்றது.மாதவி கூட வெம்பிக்கொண்டே நின்றார்.உமையாள் பெருமூச்சு விட்டு, “பார்த்துக்கலாம். நீங்க கவலைப்படாதீங்க,” எனச் சொல்லிவிட்டு போனை வைக்க,மாதவி அதே இடத்தில் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தார்.
பேசி முடித்ததும் உமையாள் போனை எடுத்து வந்து டிரெஸ்ஸிங் டேபிளின் முன் நின்றுகொண்டிருந்தவன் பக்கத்தில் வைத்துவிட்டுச் செல்ல,சிவா அவளை இழுத்து பிடித்தான்.உமையாளின் பெண்மை நடுக்கம்கொண்டு துடிக்க,சிவா அவளின் முந்தியை இழுக்க, மாராப்பு சரிந்து கீழே விழுந்தது. ஆனால் அவன் கண்ணில் எந்த ஒரு சபலமும் இல்லை. முந்தியின் நுனியை எடுத்து அவனுடைய போனைத் துடைத்துக்கொண்டே அவளுடைய கண்களைப் பார்த்தவன்,”நீ தொட்டுப் பேசிய அழுக்கு! மயக்கம் எல்லாம் என் மேலே ஒட்டக் கூடாது. அதுக்குதான் துடைச்சிட்டு இருக்கேன்!” எனக் கூறிவிட்டு படுக்கையில் அமர்ந்து லேப்டாப் எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.உமையாள் சாப்பிடவில்லை. அனைத்தையும் எடுத்து சூடு செய்து ஆரவைத்து குளிர்சாதன பெட்டியில் எடுத்து வைத்துவிட்டு வெளியே வர வயிறு சத்தமிட்டது. அவளுக்கு இப்பொழுது ஆறுதல் தண்ணீர் மட்டுமே. ஒரு டம்ளரில் எடுத்து வானம் பார்த்து குடித்து அரை குறையாகத் துடைத்தவள், நேராக அவளின் வாழ்க்கையில் நடந்த திடீர் சுனாமியை நினைத்து அப்படியே கண்களை மூட நித்ரா தேவி அவளைத் தழுவும் நேரம்,சிவா அவளைத் தழுவ வந்தான். அர்த்த ராத்திரியில்…
இந்த அர்த்தராத்திரியில் உமையாளுக்கு என்ன காத்திருக்கிறது? சிவாவின் இந்த வெறுப்பு எப்போது முடிவுக்கு வரும்?