Episode -6
சிவாவின் விரல்கள் வேகமாக அந்த கீ போர்டில் நாட்டியமாடி முடித்து சோம்பல் முறிக்கும் நேரம் மணி 12:00 ஐ நெருங்கி இருந்தது. ஆனால் உடலில் களைப்பே தெரியவில்லை. ஏனோ தூக்கமும் வரவில்லை.‘எப்படி இன்னைக்கு இத்தனை ஆக்டிவாக இருக்கிறோம்?’ என யோசித்துக்கொண்டே எழுந்தவன், லேப்டாப்பை எடுத்து வைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலைப் பார்த்தான். காலியாக இருந்தது. இத்தனை நேரமும் அவனுக்குத் தன்னுடன் ஒரு பெண் இருக்கிறாள் என்ற நினைப்பே இல்லை.
சிவா நேராக கிச்சன் சென்று பாட்டிலை நிரப்பிக்கொண்டு வெளியே வர, அங்கே சோபாவில் படுத்திருப்பவளைப் பார்த்தான். இப்போழுதுதான் கண்களுக்கு அவள் தெரிகிறாள்.சாந்தமாக உறங்கிக்கொண்டிருக்கிறாள். ஆம், அமைதியான கண்களுக்கு சொந்தக்காரி! அவளுடைய மூக்கு, உதடு எனப் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறிக்கொண்டிருக்க, சமையல் அறையிலிருந்து வந்த கொஞ்சமே வெளிச்சத்தில் அவளை அணுஅணுவாக ரசித்துக்கொண்டிருந்தான் சிவா!‘ச்ச இவளை எதுக்கு நான் ரசிக்கணும்?’ என உள்ளுக்குள் புகைச்சல் கிளம்ப, முறைத்துவிட்டு நேராகப் படுக்கைக்குச் சென்றுவிட்டான்.
புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வருவதாக இல்லை என அடம் பிடித்தது.கண்களை மூடியவனுக்குத் தன்னுடைய எதிர்பாராத திருமணம் கண்ணுக்குள் இழையோட, கண் சிவந்துபோனது. திருமணம் முடிந்த அந்த நாள் சிவாவின் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் அனைவரும் பேசிய பேச்சுக்கள் காதில் ரீங்காரம் போலக் கேட்டது.’கல்யாணப் பொண்ணு மட்டும் இல்லாமல் மச்சினிச்சி மேலயும் கண்ணு வச்சிருக்கான். நல்லவேளை அந்தப் பொண்ணு எல்லார் முன்னாடியும் சொன்னதால அக்கா விலகிட்டா? இல்லைனா ரெண்டு பேரையும் மெயின்டெயின் பண்ணியிருப்பான்’ என அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வாய் இருக்கிறது என்பதால் இஷ்டத்துக்குப் பேசிவிட, அந்த வார்த்தைகளைக் கேட்கக் கேட்க மொத்த கோபமும் உமையாள் மீது திரும்பியது.
இதில் தவறு செய்த இமையாள் எந்தக் கவலையும் இல்லாமல் சென்றுவிட, மாட்டிக்கொண்டது உமையாள், சிவா இருவரும் தான். உண்மையைச் சொன்னால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என உமையாள் ஒரு பக்கம்… ‘தன் இத்தனை நாள் வாழ்க்கையும் ஒரே நாளில் தலைகீழாக திருப்பிப் போட்டுவிட்டாளே பாவி! இவள்கிட்ட நான் பேசியது கூட இல்லையே!’ என சிவா ஒரு பக்கம்… மொத்தத்தில் அடுத்து என்ன நடக்கும் என விடை தெரியா பயணத்தில் இருவரும் இருக்க,உமையாள் வாய் திறந்தால் கதையே வேறு என இருக்க, அதற்குள் கோபத்தில் பாய்ந்துவிட்டான் சிவா! இப்படியே சிவா அவன் பக்கம் இருக்கும் விசயத்தை யோசித்துக்கொண்டிருக்க, கடுப்பாகிப்போனவன் எழுந்து அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தான்.உமையாள் வெளியே தூங்கிக்கொண்டிருப்பது தெரிய, ‘நான் இங்கே தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். இவளுக்குத் தூக்கம் வேறு ஒரு கேடா!’ என நினைத்து அவளின் அருகில் சென்று நெருங்கினான்.
உமையாள் ஆழ்ந்த தூக்கத்தைத் தழுவும் நேரம் அவளைத் தழுவ வந்திருந்தான் சிவா! அதுவும் அர்த்த ராத்திரியில்..”ஹேய்!” எனப் புலியின் கர்ஜனையுடன் அவளின் அருகில் உருமலுடன் நெருங்கினான்.வெடுக்கென அவள் விழிக்க, முன்னால் இருந்த டீபாய் தடுமாறி அவள் மேலேயே தெரியாமல் விழுந்துவிட்டான். உமையாள் பதட்டத்துடன் “என் என்னங்க?” எனத் திக்கித் திணறிப் பேச வர,அவளிடம் இருந்து எழுந்திருக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தவன், சட்டென எழுந்து நின்றான்.உமையாள் உடை கசங்கி கீழே சரிய, வேகமாக அதை எடுத்து சரி செய்துகொண்டே அவனைப் பார்த்தாள்.ஒரு இரண்டடி வைத்தவன், பின்னால் திரும்பி அவளைப் பார்க்க, “எதுவும் வேணுமா? எதுக்கு இங்கே வந்தீங்க?” எனத் தட்டுத்தடுமாறிக் கேட்டுவிட்டாள்.
அவளின் படபடத்த விழிகளிலும் மொட்டு உதட்டிலும் இருந்து பார்வை வருவதாக இல்லை. அவனுடைய இளமை அவனைச் சோதிக்க உந்தித் தள்ளியதில் அருகில் நெருங்கியவன், எதுவும் சொல்லாமல் அவளின் இடையைப் பிடித்து அவன் புறம் இழுத்து உதட்டில் முத்தமிட ஆரம்பித்தான்.’எப்படியோ என்னை மயக்கற! ஆனால் பாரு நீ நினைக்கிறது எப்போதுமே நடக்காது! உன்னை நான் காதலாகப் பார்க்கவே மாட்டேன்டி! என்னோட இந்த பக்கம் மட்டும் தான்டி நீ!’ எனச் சொல்லிக்கொண்டே அவளைத் தூக்கிச் சென்றான்.’இவனை நான் எதுக்குக் காதலாகப் பார்க்கணும்? உன்னை நான் லவ் பண்ணவே இல்லைடா!’ என உமையாளுக்குக் கத்த வேண்டும் போல இருந்தது.
‘என்னைத் தொடாதே! எனக்குப் பிடிக்கவில்லை’ என அவனைத் தள்ள வேண்டும் போல இருந்தது. ஆனால் சொல்ல முடியாதே! வாய் திறந்து கூறினால் தன் குடும்பம் மானம் காற்றில் பறக்கும்! என நினைத்துக்கொண்டிருந்தவளைப் படுக்கையில் கிடத்தினான்.அவளின் கண்ணைப் பார்த்தான். கடைக் கண்ணில் நீர் வழிந்துகொண்டிருக்க, சிவா மனதில் ‘என்னோட காதல் கிடைக்கவில்லையே’ என அழுகிறாள் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டான். அதனால் உதட்டில் புன்னகை. ‘என்னோட நிராகரிப்பு மட்டும் தான்டி உனக்குக் கிடைக்கும். காதல் கிடைக்காது’ எனத் திருப்திப் புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
மோகம் தலைக்கு ஏறியது. உதட்டில் வேகமாக முத்தமிட்டவன், கொஞ்சம் கொஞ்சமாகக் கழுத்துக்கு வந்தான். கட்டிலை இறுக்கிப் பிடித்துக்கொண்ட பெண்ணவளுக்கு, ‘என்னுடைய சரீரத்தை இப்படியே பூமி இழுத்துக்கொள்ளக் கூடாதா? இஷ்டமில்லாத தொடுதல்! என்னை விட்டுவிடுங்கள்’ அப்படியே கத்த வேண்டும் போல இருந்தது.அவனுடைய கண்கள் அவளின் வதனத்தில் நிலைத்திருக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவளுள் தஞ்சமடைந்தான்.
‘ஒரு பெண்ணுக்குள் இத்தனை சுகந்தமா!’ எனக் கண்கள் அவளின் முகத்தைப் பார்க்க, அவள் கஷ்டப்படுவது தெரிய, புருவத்தைச் சுருக்கியவன், “ஹே அழாதே எனக்குப் பிடிக்காது!” என அவளின் கன்னத்தைப் பிடித்தான். மெதுவாக அவள் உடல் அதிர்வதில் முனகிக்கிடக்க,உள்ளுக்குள் இன்னும் வேகமெடுத்தான். அவளின் சத்தம் ஏதோ ஏதோ செய்தது. பிடித்துப்போனது.
முதல் முறை சங்கமம் முடிந்து இப்போழுது மூன்றாவது முறை என உமையாள் மொத்தமும் சிவனுக்குள் இருந்தாள்.அடுத்த நாள் காலை எழுந்துகொள்ளவே தாமதமாகிப் போனது, அதிலும் அவளை விடவில்லை. இப்படியே ஒட்டிக்கொண்டே இருந்தவன், சூடு சொற்களில் அவளை அவ்வப்போது சுட்டெரிக்கத்தான் செய்தான்.அந்த நேரம் பார்த்து உமையாள் வேலையில் சேரும் நேரமும் வந்தது.உமையாள் தன் அலுவலக வேலைக்குச் செல்லத் தொடங்கினால், இந்த இருண்ட வாழ்க்கை அவளுக்குச் சிறு வெளிச்சத்தைத் தருமா? அல்லது சிவாவின் கோபமும், வன்முறையும் மேலும் தீவிரமடையுமா?