Episode -2

அது யார் தெரியுமா ஜாயின் கமிஷ்னர் பொண்ணு. அந்த பையனோட முகம் ரொம்ப பரிட்சையமா இருக்கே? ஹான் அவன் கூட போலீஸ் தான். ம்ம் பேர் கூட ஹான் சத்ய தேவ். என அங்கு கூடியிருந்த வக்கீல்கள் முதல் காவலர்கள் வரை அனைவரும் இரண்டு பக்கமும் நின்று கொண்டிருந்த இளம் ஜோடிகளை தான் பார்த்து கிசுகிசுத்து பேசிக் கொண்டார்கள். சத்ய தேவ்வின் குடும்பத்தில் அம்மா மகி  அப்பா சூர்யா இருவரும் வந்திருந்தார்கள். ஏன் கமிஷ்னர் கூட வந்திருந்தார். ரிதமின்  தந்தை அது தாங்க நம்ம ஹீரோயின் அப்பா இன்பா எந்த முடிவும் எடுக்க முடியாமல் இருக்க ரிதமின் தாய் விவேகா வருத்தத்துடன் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்தார். மகி வருத்தத்துடன் தன் மருமகளின் பக்கம் பார்வையை பதித்தார். கூலிங் கிளாஸை போட்ட படி கெத்தாக இங்கே நடக்க கூடிய விவாகரத்தை பார்க்க வந்திருந்தாள் ஸ்ருதி. சைலன்ஸ் என்ற சத்தத்துடன் ஜட்ஜ் நுழைந்தார்.

இரண்டு பேரையும் பார்த்து விட்டு என்ன பிரச்னை மா? எதுக்கு இந்த சின்ன வயசில இவ்வளவு பெரிய முடிவு? என கண்ணாடியை மூக்குக்கு தள்ளிய படி கேட்டார். சத்ய தேவ் எதிரில் நிற்பவளை எந்த சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான். பிடிக்கல. நான் எனக்காக கல்யாணம் பண்ணிக்கல. எதிரில் நிற்பவரொட குடும்பமும் என்னோட குடும்பமும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணா நல்லாருக்கும் ன்னு நினைச்சு பண்ணாங்க. ஆனால் அது ஒத்து வரல.. என்னால புருஷனா பார்க்க முடியல பிளீஸ் விட்டுடுங்க. என்றாள் ரிதம்.

என்ன மா கல்யாணம் பண்ணும் போது கேட்டு தானே பண்ணாங்க என மீண்டும் ஜட்ஜ் கேட்டார். ஸ்டாட்டிங் செட் ஆகுன்னு தான் தோணுச்சு. ஆனால் அவன் போலீஸ்சா இருக்கான். என்னை விட அவனுக்கு வேலை தான் முக்கியம். என்றாள். கண்களால் எரித்து விடும் அளவுக்கு பார்த்தாள் ரிதமின் தாய் விவேகா. ஜட்ஜ் சிரித்த படி நீங்க கூட போலிசா இருந்தீங்கன்னு கேள்வி பட்டேனே? என கொக்கி போட்டார். ரிதம் ஒரு பெரு மூச்சை விட்ட படி எனக்கு அவனோட பிஸிக்கள் ரிலேசன்ஷிப்ல சாட்டிஷ்ஃப்பேக்சன் இல்ல என அந்த நீதி மன்றத்தில் கூறி விட்டாள் படுபாவி பாதகத்தி. சூர்யா அதற்கு மேல் அங்கு அமர பிடிக்காமல் எழுந்து கொள்ள, விவேகா மகியை பார்த்து மன்னித்து விடுங்கள் என கையெடுத்து தன் சம்மந்தியிடம் கூறினார். சிவன்யா முன்னால் வந்து யுவர் ஹானர் அவங்க பொய் சொல்றாங்க இது அவங்க கன்சீவ் ஆன ரிப்போர்ட் இது எங்க அண்ணா! சாரி என்னோட க்லைன்ட் ஸ்பேம் டெஸ்ட் ரிப்போட் என நீட்டியவள். நான் குறுக்கு விசாரணை பண்ண விரும்புகிறேன் என ஆரம்பித்தாள். “எனக்கும் சம்மதம் டைவர்ஸ் கொடுத்திடுங்க”  என சத்தம் வந்தது. சத்ய தேவ் தான் கூறியிருந்தான். அனைவர் பார்வையும் அவன் மீதிருக்க, ரிதமின் பார்வை அவன் மேல் படிய வில்லை அலட்சிய புன்னகையுடன் நின்றிருந்தாள். ஜட்ஜ் வருத்தத்துடன் பெண்ணின் தந்தை  இன்பாவை பார்த்தார்.

இன்பா கண்கள் சிவக்க நின்றிருந்தார். ஹப்பா என இருந்தது ரிதமுக்கு.. எப்போ பேப்பர்ஸ் கிடைக்கும்? என பறந்தாள். உங்களுக்கு மூணு சிட்டிங் கவுன்சிலிங் எழுதி இருக்கேன் மா! “அய்யோ ஏன் அப்படி பண்ணீங்க?” என வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாள் ரிதம். நீங்க நினைக்கிற மாதிரி பிரிச்சிட்டு போக முடியாது மா. சம்மந்தப்பட்ட ரெண்டு ஆட்களும்  முடியவே முடியாது என்கிற பட்சத்தில் தான் அதை பண்ண முடியும். நீங்க வாழ வேண்டிய வயசு. நம்ம சட்டம் என்னைக்கும் மனங்களை சேர்த்து வைக்க சரியாக வாழ தான் இந்த சட்டங்கள். ஒருத்தருக்கு அநீதி கிடைச்சாலும் அது நீதி தேவதை கையில் இருக்கும் தராசு நெறி தவறுவது போல…  நீங்க கவுன்சிலிங் அட்டன் பண்ணுங்க. நெக்ஸ்ட் கேஸ் யார் என ஜட்ஜ் அடுத்தது சென்று விட்டார். வெளியே வந்ததும் யார் முகத்தையும் பார்க்காமல் வேக வேகமாக அவ்விடத்தை விட்டு சிட்டாக பறந்து விட்டாள் ரிதம். அண்ணா இப்போ என்ன பண்றது? சித்தி என அவனது சித்தி மகள் சிவன்யா வருத்தத்துடன் வந்து நின்றாள். அண்ணனின் மனைவி ரிதம் அவளின் சிறு வயது தோழி இந்த சம்பவத்தில் தான் மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து நிற்கிறது. ரிதம் வீட்டுக்கு சென்றதும் அவளின் அறையில் இருந்து வேகமாக தேவையான உடமைகளை எடுத்து வைத்தவள். பெங்களூரில் இருக்கும் அவளுக்கு சொந்தமான இரண்டு அப்பார்ட்மென்ட் சென்று விடலாம் என திட்ட மிட்டபடி பேக் செய்தாள்.

அதற்கு காரணம் இந்த விவாகரத்தில் இரண்டு குடும்பங்களுக்கும் விருப்பம் இல்லை. ஆண்மைக்கு இலக்கணமே அன்பான சத்ய தேவ் தான்  அவனை போய் அத்தனை பேரின் முன்னிலையில் அவமான படுத்தி விட்டாள் அதுவும் ஆண்மையை காரணம் காட்டி… அவள் கதவை திறக்க போகும் நேரம் டக் டக் என பூட்ஸ் சத்தத்துடன் மேலே வந்து கொண்டிருந்தான் சத்ய தேவ். இதயம் ரிதமுக்கு வேகமாக துடிக்க ஹே தைரியமா ஃப்பேஸ் பண்ணனும். என தனக்கு தானே சொல்லி கொண்டவள். திரும்ப கதவை எட்டி உதைத்து கொண்டு உள்ளே வந்தான் சத்ய தேவ். அன்பானவனாக  என்றால் இல்லை இப்பொழுது  அடங்காதவனாக… ஹே ராஸ்கல் எதுக்கு உள்ளே  வந்த வெளியே போ! அது தான் கோர்ட்டில் சொல்லிட்டாங்களே என வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாள் ரிதம். சத்ய தேவ் ஒரு அதிரடி புன்னகையை படற விட்டவன். அவனது சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழட்டி கொண்டே அருகில் நெருங்கினான். ஹே வேணாம் கிட்ட வராத! ஹே சத்ய தேவ்! எங்கே டா இருக்க? இந்த நாயை கடி வாடா வாடா என ரிதம் ஆசையாக வளர்க்கும் சத்ய தேவ் நாய்க்குட்டியை அழைத்தாள். சத்ய தேவ் வேகமாக அவளின் அருகில் வந்தவன். அவளை சுற்று போட்டு கன்னத்தை முரட்டு கைகளால் அழுத்தி வருடினான். கண்களில் கொஞ்சம் கூட கோபம் இல்லை. முழுக்க முழுக்க தாபம் வழிந்து கொண்டிருந்தது. அதை விட அதிகாரம் தூள் பறந்தது. ஹே எதுக்கு டா கிட்ட வர? ஹே போடா!.. என ரிதம் கத்திக் கொண்டே நகர அவளை சுவற்றில் கொஞ்சம் தள்ளி மோவாயை பிடித்து முத்தமிட ஆரம்பித்தான் சத்ய தேவ். தைய தைகா என குதித்துக் கொண்டிருந்த அவளின் சப்த நாடியும் மின்சாரம் தாக்கியது போல அவனது முத்தத்தில் ஒரு நொடி ஸ் ஸ்தம்பித்து போனது. ஹே விட்.. க்ம்.. ப்க்.. ஹத்.. ப்ம் என முத்தத்தில் முக்கி முனகி திண்டாடி கொண்டிருந்தாள் ரிதம்.

சத்ய தேவ் அவளின் இரண்டு கைகளையும் மேலே தூக்கி பிடிக்க அவளின் அங்க ஸ்தனங்களின் நடுவில் முகம் புதைத்து கொண்டான். சிறிது நேரம் அங்கே அவனது பெயரை இடது மார்பில் பச்சை குத்தியிருப்பாள். அங்கே கைகள் செல்ல அதை தட்டி விட்டாள் வேக மூச்சுடன். சத்ய தேவ்  ஆவேசமாக  உதட்டை சிறை பிடித்த படி கொஞ்சம் கொஞ்சமாக அவனது கூடலின் நகர்வுகள் ஒவ்வொன்றாக செல்ல, ரிதம் ஆவேசமாக அவனை விலக்க போராடிய படி வயிற்று பகுதியில் கை வைத்து மறைத்துக் கொண்டாள். “வா போலாம்!” என அவளின் கையை பிடித்து இழுத்தான் சத்ய தேவ். ஹே நான் டைவர்ஸ் பண்ண புரோசஸ் போயிட்டு இருக்கு. உனக்கு வெட்கமாவே இல்லையா டா? மானம் கெட்டவனே! என ரிதம் கூற, உன்னை திருப்தி படுத்த எனக்கு என்ன வெட்கம்? வா போலாம் என அவளை இழுக்க மார்பில் முட்டி நின்றவலின் பார்வை அவ்வப்பொழுது வயிற்றில் படிந்தது. ரிதம் ஒரு பெரு மூச்சை விட்டு நான் வர மாட்டேன் போ! உன் கூட என்னால வாழ முடியாது. எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல போய் தொலை. என்றாள்.

சைலு என்னோட நான் கட்டின தாலிய கழட்டி கொடுக்க மாட்டாள். நீ தான் ரிதம் சோ கொடு. என்றான் சத்ய தேவ். (யாரு டா இந்த சைலு? கதையை படிக்க படிக்க உங்களுக்கே தெரியும். )இந்தா டா ராஸ்கல் என தாலியை அவன் முன் விட்டெரிந்தாள் ரிதம்.ஓகே என எடுத்து பாக்கெட்டுக்குள் போட்டு கொண்டவன். மீண்டும் நெருங்கினான். என்ன டா வேணும் கேடு வந்தவனே! போடா என கத்தினாள். “என் குழந்தை வேணும்? இதோ இப்போ வயிற்றில் வளர்ந்துட்டு இருக்கே! என்னோட குழந்தை வேணும். அண்ட் நீ வேணும்.””குழந்தையா? என்ன குழந்தை? எந்த குழந்தையும் இல்ல போயிடு சத்ய தேவ். எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல” அன்பா சொன்னா கேட்க மாட்டாள் ரிதம் இராவடி கொஞ்சம் அடாவடி வேணும் போலயே. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு நீ வேணும். வாடி என அவளை அலேக்காக தூக்கி கொண்டு நடந்தான் சத்ய தேவ்.இரண்டு கால்களையும் ஆட்டிக் கொண்டே இறங்க முயற்சி செய்து கொண்டே  எங்கே டா தூக்கிட்டு போற? என்னை விடு..விட்டு தொல டா நாயே! ஹே சத்ய தேவ் எங்கே இருக்க வந்து இந்த நாயை கடிங்க டா என கூற மூன்று நாய்கள் ஓடி வந்தது.

அவளின் குரலுக்கு செவி சாய்த்து. சத்ய தேவ் நாயை பார்த்து  காற்றில் முத்தமிட்டு விசில் அடிக்க, அனைத்து நாய்களும் வழி விட்டு நின்றது. ரிதம் துள்ளிக் கொண்டே டாடி என்னை சேவ் பண்ணுங்க என்னை கொலை பண்ண தூக்கிட்டு போறான். என கத்தினாள் ரிதம். இன்பா மற்றும் விவேகா எதுவும் பேசாமல் நின்றார்கள். விவேகா அற்ப புழுவை பார்ப்பதை போல தன் மகளை பார்த்தார். என்னை கேட்க ஆள் இல்ல டி! என்னை தடுக்க இங்கே யாரும் இல்ல. என்றவன் கொஞ்சம் சத்தமான குரலில் மாமா நீங்க தாத்தா ஆகிட்டீங்க. அத்தை நீங்க பாட்டி ஆகிட்டிங்க எங்க அம்மா கிட்ட போன் பண்ணி சொல்லிடுங்க என சொல்லி விட்டு கிளம்பினான். எதனால் இந்த விவாகரத்து? என்ன ஆனது? நாளை பார்க்கலாம்

நாளை ; போ நீ என்னோட சோல்ஜர்னு ப்ரூஃப் பண்ணு என  ருத்ரணிடம் கூறினான் பிளாக் ஈகில் வருவான்.. AA கதைய கொஞ்சம் தள்ளி வச்சிட்டு புதுசா படிங்க.. ஈச் அண்ட் எவரிதிங்க் எல்லா கேரக்டரும் கவர் பண்ண போறேன். முதல் அத்தியாயத்தில் சொன்ன மூன்று பாத்திரங்களும் முழுமையாக எழுதுவேன். இன்னிக்கி epi எப்படி இருந்தது சொல்லிட்டு போங்க..

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.