Promo -2
“சீதா மகாலட்சுமி… இந்த வீட்டோட மருமகள், என்னோட அண்ணன் பொண்ணு!” என்று அத்தை வீரலட்சுமி பெருமையோடு அழைத்து வந்து சேர்த்த அறை அது!
திடீர் கல்யாணத்தின் அதிர்ச்சியிலிருந்து மீளாத சீதா, அந்தப் பெரிய அறைக்குள் தனியாக நின்றிருந்தாள். கழுத்தில் பாரமாய் தொங்கும் புதுத் தாலி, அவள் ‘முத்துபாண்டியனின் மனைவி’ என்பதை அவளுக்குள் அழுத்தமாய் சொல்லிக் கொண்டிருந்தது.
கல்லூரிப் படிப்பைத் தொடர்வதைப் பற்றி அத்தையிடம் பேச வேண்டும் என்று நினைத்தபடி, தன் வீட்டில் எப்போதும் அணியும் அவளுக்குப் பிடித்தமான அந்தத் தளர்வான சட்டையின் பட்டன்களை அவள் போட்டுக் கொண்டிருந்த அந்த நொடில்தான்…
“என்னோட ரூம்ல என்னடி பண்ற?!” — அறையின் கதவை அதிரச் செய்து உள்ளே நுழைந்தான் முத்துபாண்டியன்!
திடுக்கிட்டுத் திரும்பிய சீதாவின் கண்கள் பயத்தில் விரிந்தன! அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை… தன் கணவன் முத்துபாண்டியன் மருந்துக்கும் போதைக்கும் அடிமையாகிக் கிடக்கிறான் என்று!
“ம… மாமா!…” என்று அவள் திக்கித் திணற, அவனது போதை ஏறிய கண்கள் சீதாவின் மீது நிலை குத்தி நின்றன!
அடுத்தஜோடி 😎 முத்து பாண்டியன் திடீர் கல்யாணம் சீதா மகாலட்சுமி