பூங்கொடி பேசுவதை கேட்டவனின் முகம் அப்படியே மாறி போனது. கோவமாக அல்ல கவலையாக.. கைகளில் சொடக்கு போட்டபடி "நீ என்னை பிடிக்கலன்னு சொல்றதுக்கு உனக்கு அருகதை இல்ல. சோ என்னோட டாடிகிட்ட போயி எதையாவது காரணம் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லு!"
"நீ பேசிறதுல இருந்தே தெரியுது. இந்த கல்யாணத்தில் உனக்கு விருப்பம் இல்லன்னு. அதனாலே நீயே சொல்லிடு பாப்பா!" என்றான் அன்பு செல்வன்.
"சொன்னேனே! கெஞ்சி பார்த்தேன். எங்க டாடி ஒத்துக்கள! உன்னை கல்யாணம் பண்ணிகிறதும் பாழ் கிணத்தில் விழுந்து விழுறதும் ஒன்னு தான். எங்க டாடி என்னோட எக்ஸ்ப்லனேசனை ஏத்துக்கல! உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு சொல்லிட்டாங்க! பிளீஸ் எனக்கு உன்னை கட்டிக்குறதுல துளி கூட விருப்பம் இல்ல. அது ஹைப்போதெட்டிகள் தின்கிங்"
"சாரி உனக்கு தான் இங்கிலீஷ் தெரியாதே! நடக்காத விசயம். அது தான் என்றவள் எங்க டாடிகிட்ட சொல்லிடு. நான் புறப்படுறேன் என அவ்விடத்தை விட்டு நகர்ந்தவள் சட்டென நினைவு வந்தவளாய் இதோ பார் நான் இங்கே வந்து உன்கிட்ட பேசின எந்த விசயமும் அப்பாவுக்கு தெரிய கூடாது. இது உன்னோட டிசிசன் மாதிரி பேசுற!!" என்று விட்டு வேகமாக சென்றுவிட்டிருந்தாள்.
அன்பு செல்வன் ஒரு பெரிய மூச்சை விட்டபடி டூட்டிக்கி சென்று விட்டான்.
பூங்கொடி எதையும் பெரிதாக அலட்டி கொள்ளாமல் கிரீன் ட்ரெண்ட்ஸ் சென்றவள் ஃபேசியல் செய்து விட்டு நேராக வீட்டுக்கு வந்தாள்.
ஜெயக்கொடி, தனக்கொடி, சந்தனகொடி என அனைவரும் அவளை வித்தியாசமாக பார்த்தார்கள்.
யாரும் திருமண பேச்சை வீட்டில் பேசவே இல்லை. ஒரு வாரம் எந்த பிரச்னையும் இல்லாமல் சென்றது.
பூங்கொடி மனதில் கண்டிப்பா அந்த வில் அம்பு அப்பா கிட்ட கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிருப்பான். அதான் எல்லாரும் அமைதியா இருக்காங்க. சரி திங்கட் கிழமையில் இருந்து காலேஜ் கிளம்பிடலாம் என முடிவெடுத்தவளாக புன்னகையுடன் அவளது அறைக்குள் சென்று மதிய உணவை உண்டு விட்டு குட்டி தூக்கம் போட்டாள்.
அவள் எழும் போது வீடே மாறி இருந்தது. அனைத்து இடங்களிலும் தோரணை அலங்காரங்கள் விளக்கு வெளிச்சங்கள் சீரியல் செட்டுகள் என விழாக்கோலம் போல மாறி இருந்தது வீடு.
கண்களை தேய்த்து கொண்டு வெளியே வந்தவளின் முகம் கோபத்தில் சிவந்தது. பாப்பா சீக்கிரம் வா! என அழைத்து அமர வைத்தார்கள். திருமண சடங்குகள் மற்றும் சீர் விழா நடந்தது. சக்கரவர்த்தி, அன்னலட்சுமி இருவரும் வந்திருந்தார்கள். அவர்களிடம் சீருக்கான புடவை இருக்க.. சந்தனம் மற்றும் முத்து இருவரும் அதை வாங்கி கொண்டார்கள். ஓரிடத்தில் நெல் குவித்து வைக்க பட்டு அதில் ஒரு பையன் பொம்மை மற்றும் ஒரு பெண் பொம்மை இரண்டும் கிழக்கு திசையை பார்த்தவாறு நிற்க வைக்க பட்டிருந்தது.
என்ன நடக்குது சித்தி? என பற்களை கடித்தபடி பூங்கொடி கேட்க..
தாய்மாமன் சீர் செய்ய வந்திருக்காங்க இந்த புடவையை கட்டிட்டு வா அமுலி என அவளை அழைத்து சென்று அறைக்குள் விட்டார்.
பூங்கொடியின் கண்களில் கோபத்தின் ஆற்றாமை தாங்காமல் கண்ணீர் கொட்டியது. அவ்வளவு தூரம் சொல்லியும் இவன் என்னை! என்னை கல்யாணம் பண்ண வந்துட்டான். அய்யோ என வீட்டில் இருக்கும் கண்ணாடியை வேகமாக உடைத்தாள். அது தமார் என்ற சத்தத்துடன் சுக்கு நூறாக உடைந்தது.
ஹே என்ன டி பண்ணிட்டு இருக்க? என்ன சத்தம் அது என வேகமாக உள்ளே நுழைந்தாள் மணிமேகலை.
கைகளை இறுக்கி மடக்கியவள் வேகமாக போனை எடுத்து எனக்கு இப்போ அந்த பொறம்போக்கு கிட்ட பேசணும் ஏற்ப்பாடு பண்ணு இப்போவே! என கத்தினாள்.
யாரு பூங்கொடி? என மணிமேகலை கேட்க..
அந்த அன்பு செல்வன் ராஸ்கல் கிட்ட பேசணும் என குதித்தாள்.
"அண்ணா இங்கேயே வந்திருகாப்ல வெளியே தான் இருக்காப்ள! அவர் கிட்ட பேசணுமா நீ?"
என்ன வீட்டுக்குள்ள இருக்கானா? என வேகமாக வெளியே சென்றாள். பாப்பா இன்னும் நீ புடவை கட்டிக்கலயா? நேரமாச்சு சீக்கிரம் விருந்து இருக்குது காலையில நேரமே கல்யாணம் இருக்கு. இப்போ மெட்டி போடுற சடங்கு இருக்கு என சிவராமன் லிஸ்ட் போட்டார்.
இதோ ப்பா என பற்களை கடித்தபடி உள்ளே சென்றவள் வேண்டா வெறுப்பாக கண்ணீரை உள் இழுத்து கொண்டு புடவைக்கு மாறி இருந்தாள். கழுத்தில் நெக்லஸ் ஆரம், காதில் ஜிமிக்கி தோடு கையில் வளையல் என நிஜமாகவே பயங்கர அழகாக இருந்தாள். ஹே பூங்கொடி இந்த புடவை நிஜமாவே உனக்கு ரொம்ப அழகா இருக்கு. என மணிமேகலை சைட் அடித்து விட்டாள்.
மாமன் மாலை போடணும் என சடங்கு செய்பவர் கூற.. ராம்ராஜ் வேஷ்டி சட்டையில் அழகாக வந்திருந்தான் அன்பு செல்வன். அவளின் கழுத்தில் சம்மங்கி மாலையை போட்டு விட்டான்.
அருவருப்பாக முகத்தை சுளித்தாள். சக்கரகார்த்திக்கு வாரிசு இருக்கா? மூணு பொண்ணுங்கன்னு தானே கேள்வி பட்டென். இத்தனை லட்சணமா ஒரு பையனா? அப்படியே சக்கரவர்த்திய பார்த்த மாதிரியே இருக்கே! என பெரியவர் கூற..
லட்சணம் பெரிய லட்சணம் இவன் பக்கத்தில நான் நின்னா அவலட்சணமாக தான் இருக்கும். என நினைத்தவள் கைகளை மடக்கி கொண்டாள். அவளின் கூர்மையான நகம் அவளின் உள்ளங்கையை பதம் பார்த்தது. இரத்த கீறல் கூட ஏற்பட்டது.
ம்ம் மெட்டி போட்டு விடணும் தாய்மாமன் தான் போடணும். என்றார் சடங்கு சொல்லும் பாட்டி.
மாப்பிள்ளையும் தாய்மாமனும் ஒன்னு தான் என சிவராமன் வந்து மெட்டி பாக்ஸை நீட்ட..
மண்ணிக்கணுங்க இதோ அன்பு ஏற்கனவே வாங்கிட்டு வந்துட்டான் என அன்னலட்சுமி நீட்டினார்.
அன்பு செல்வன் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க.. அப்படியா!! சரி போட்டு விடுங்க என சடங்கு பாட்டி கூறவும். மாப்பிள்ளை நீங்க கீழே மண்டி போடுங்க. அமுலி நீ காலை எடுத்து மாமாவோட தொடை மேலே வையு டா! மாமா உனக்கு மெட்டி போட்டு விடட்டும் என்றார் சிவராமன்.
வேஷ்டியை நேர்த்தியாக மடித்து கட்டியபடி அன்பு அமர..அவனை முறைத்து பார்த்தபடி நின்றாள் பூங்கொடி.
ம்ம் காலை எடுத்து மேலே வை கண்ணு என சடங்கு பாட்டி கூற..
அமுலி காலை எடுத்து வை மா! என்றார் சிவராமன் வேண்டா வெறுப்பாக காலை வைத்தாள்.
இரண்டு பாதங்களையும் மென்மையாக பிடித்து மெட்டியை போட்டு விட்டான்.
பாப்பாவுக்கு பொட்டு வச்சு நெல் தூவி ஆசிர்வாதம் பண்ணு கண்ணு! என சடங்கு பாட்டி கூற..
அரிசி தான போட்டு ஆசிர்வாதம் பண்ணுவாங்க என மணிமேகலை கேட்க..
அனைவரும் அவளை பார்த்தார்கள். சடங்கு பாட்டி சிரித்தபடி நெல்லில் இருந்து தான் அரிசி வருது அது தான் தொடக்கம் அரிசி அதோட கடைசி நிலை. ஒரு நெல்லு மணிய வச்சு இன்னொரு நெல்லு மணிய பயிரிட முடியும். ஆனால் ஒரு அரிசிய வச்சு அரிசி பயிரிட முடியுமா? நெல்லு போட்டால் நெல்லு விளையும் சொல்லு போட்டால் சொல்லு விளையும். அரிசிய கடசியா போட்டு அனுப்புவாக அதுக்கு பேர் வாய்க்கு அரிசி. இப்போ கல்யாணம் நடக்க போகுது. பொன்னும் மாப்பிள்ளையும் நெல்லு மணி போல அவங்களோட வாழ்க்கை விளைச்சலாக செளிச்சு வாழணும்ன்னு நெல்லு போட்டு ஆசிர்வாதம் பண்றோம். அந்த காலத்துல இருந்து இது தான் நம்ம காலம் காலமா செஞ்சிட்டு வரோம். ஆனால் இப்போ கலாச்சாரம் பண்பாடு எல்லாமே மாறி அரிசி போட்டு வாழ்த்திட்டு இருக்காங்க அரிசி போடுறது இந்து கலாச்சாரம் நெல்லு மணி போட்டு ஆசிர்வாதம் பண்றது நம்ம தமிழ் கலாச்சாரம். தமிழ் வேற ஹிந்து வேற என்றார் சடங்கு பாட்டி.
பூங்கொடி மற்றும் அன்பு செல்வன் இருவரையும் நெல் மணிகளை தூவி ஆசிர்வாதம் செய்தார்கள். அன்னம் சக்கரவர்த்தியின் அருகில் தான் இருந்தார். அவரிடம் மூன்று பெண்களுமே பேச முன் வரவில்லை. ஆனால் அன்னம் தவிப்புடனும் ஆசையுடனும் மூவரையும் பார்த்து வழிய பேசி சிரிக்க முயற்சி செய்தார். ஆனால் அனைத்தும் தோல்வியையே தழுவியது.
சரி சாப்பாடு ரெடி சாப்பிட போலாம் நேரமே தூங்கணும். காலையில் கல்யாணம் இருக்குது. என பந்திக்கி சென்றார்கள்.
ஹலோ! உன்னை தான் டா! நில்லு! என பற்களை கடித்தபடி அழைத்தாள் பூங்கொடி.
அன்பு மவுனமாக திரும்பினான்.
"உன்கிட்ட என்ன டா சொன்னேன்? எதுக்கு டா இங்கே என்னோட வீட்டுக்கு வந்த? உனக்கு வெட்கமா இல்லையா?" என பூங்கொடி கொதித்து எழுந்தாள்.
அன்பு செல்வன் அவளை பார்த்து, என்னை கட்டிக்க விருப்பமில்லாத உனக்கும் கொஞ்சம் கூட விருப்பம் இல்ல.. நீ போலீஸ்ல கம்ப்லைன்ட் பண்ணு. கட்டாய கல்யாணம் பண்றாங்கன்னு. எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. என்னால நீ கஷ்ட பட கூடாதுன்னு தான் இதை சொல்றேன். என்றான்.
பூங்கொடி அவனை முறைத்து பார்க்க.. அன்பு செல்வன் முன்னால் சென்று விட்டிருந்தான்.
பூங்கொடி வேகமாக போலீசுக்கு போன் செய்தாள்.
ஹலோ!! போலீஸ் ஸ்டேசன் எங்கே இருந்து பேசுறீங்க? என்ன பிரச்னை? என அடுத்தடுத்து கேள்விகள் கேட்கப்பட.. அமுலி என சிவராமன் பின்னால் அழைத்தார்.
பூங்கொடி கண்களை இறுக்கி மூடி திறந்தவள். ப்பா என போனை கட் செய்தபடி திரும்பினாள்.
சிவராமன் தன் மகளின் அருகில் வந்து கைகளை பிடித்து கொண்டு வெளியே அழைத்து சென்றார்.
பூங்கொடி எதுவும் பேசாமல் வெளியே சென்றாள்.
அமுலி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.
சொல்லுங்க ப்பா!
"உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல அப்படி தானே"
பூங்கொடி..?
தொடரும்..