Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
402
"நீ ரெடியா?" என பின் கழுத்தில் முத்தமிட்டான் ரகுவரன்.

"ம்ம்' என ஒற்றை பதிலில் முடித்தவள் கண்ணாடியில் தனக்கு பின்னால் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் ரகுவரனை பார்த்தாள்.

பாச பச்சை வண்ண சட்டையை போட்டவன். தலையை கோதியவாரு அவளின் முன் வந்து பட்டன் போடுவதற்காக நின்றான்.

"என்ன?" என்பதை போல சீதா பார்க்க..

"ம்ம் போடு!" என கண்களில் சைகை காட்டினான்.

சீதா அவனது சட்டை பட்டன் அனைத்தையும் போட்டு விட்டாள். வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்தான்.

இவனுக்கு பெண் பித்து தான் பிடித்திருக்கிறது. பார்வையால் கற்பழிப்பது இது தானோ! கிராதகன் ராட்சசன்! என உள்ளுக்குள் நெருப்பு கனன்று கொண்டிருந்தது.

இருவரும் கீழே வரவே அங்கே சதாசிவத்தின் தாய் ரகுவரனது பாட்டி பாக்கியம் அமர்ந்திருந்தார்.

பாட்டி என கம்பீர குரல் கனிந்திருந்தது. "ராமா! என் தங்கம்! பாட்டி கிட்ட சொல்லாம கல்யாணம் செஞ்சுட்ட!! ஒரு வார்த்தை என்கிட்ட சொல்ல தோணலயா! உன் மேலே நான் கோபமா இருக்கேன்." என முகத்தை தூக்கி வைத்து கொண்டார்.

"இல்ல பாட்டி திடீர்னு நடந்திடுச்சு! என ரகுவரன் சீதா லட்சுமியிடம் இது என்னோட பாட்டி! ஆசிர்வாதம் வாங்கிக்கோ" என சொல்லி விட்டு பாக்கியத்தின் காலில் விழுந்தான்.

உஷா மற்றும் சிந்து இருவரும் வாயை பிளந்தபடி பார்த்தார்கள். "பார்த்தியா இவங்க கேள்வி கேட்பாங்கன்னு பார்த்தால் இதென்ன இப்படி ஆகி போச்சு!" என பார்த்தார்கள்.

பாக்கியம் சிரித்தபடி எனக்கு இன்னிக்கி தான் ரொம்ப சந்தோசம். என சீதாவுக்கு நெட்டி முறித்தவர். கையில் இருந்த வைர வளையலை கழட்டி அவளுக்கு அணிவித்தார்.

"இல்ல பாட்டி வேண்டாம் என சீதா கழட்ட போக.. பொண்ணு கழட்டாத!! கழட்ட கூடாது." என விடாப்பிடியாக கூறினார்.

சீதா என்ன செய்வது என தெரியாமல் அப்படியே நிற்க... "கழட்ட கூடாது சீதா!" என ரகுவரனின் குரல் கம்பீரமாக ஒலித்தது.

"என் பேத்தி பேரு சீதாவா?" என ஆச்சரியத்துடன் பாக்கியம் கேட்க..

"என்ன பார்த்திட்டு இருக்க? உன்னோட பேர் என்னன்னு சொல்லு!" என ரகுவரன் அதட்ட..

"என்னோட பேர் சீதா லட்சுமி பாட்டி" என அவரை பார்த்தாள்.

"ராமன் சீதா ஜோடி பொருத்தம் சரியா அமைஞ்சிருக்கு எனக்கு ரொம்ப சந்தோசம் ராமா!!" என பாக்கியம் கடவுளை கும்பிட்டார்.

"இவன் ராமனா? இவன் இராவணன்!!" என நினைத்து கொண்டாள்.

"சரி ராசா நீங்க பத்திரமா பார்த்து போயிட்டு வாங்க!" என்றவர் சுமதி என ஆதிக்கமாக அழைத்தார்.

"அத்தை!" என சுமதி ஓடி வந்தார்.

"என் பேத்திக்கு குங்குமம் அப்புறம் பூ வச்சு ஆசிர்வாதம் பண்ணி அனுப்பி விடு" என்றார்.

"இதோ அத்தை" என அவசர அவசரமாக உள்ளே சென்ற சுமதி அவர் சொன்னதை போலவே சீதாவுக்கு பூ வைத்து குங்குமம் வைத்து அனுப்பினார்.

சதா சிவத்திடம் பரத் மற்றும் சந்துரு இருவரும் வேலை விசயமாக பேசி கொண்டிருக்க..

ரகுவரன் தன் அப்பாவின் முன் சென்றான். சதா சிவம் ஒரு சின்ன தலை அசைப்புடன் அனுப்பி வைத்தார்.

ரகு கிரிக்கு அழைத்து அவன் வெளியே செல்வதை கூறி கொண்டே வண்டியில் ஏறினான். சீதா எதுவும் பேசாமல் ரகுவரனின் பின்னால் சென்று விட்டிருந்தாள்.

"எங்கே செல்கிறோம்?" என்ன ஏது என எதையும் சொல்லவில்லை ரகுவரன்.

சீதா உடல் களைப்பில் உறங்கியிருந்தாள். கார் கொண்டை ஊசி போல வளைந்து செல்லும் சாலையில் சென்றது. மெல்ல முழித்து பார்த்தாள் சீதா. தலை சுற்றுவது போல தெரிந்தது. கிட்ட தட்ட திருச்சியில் இருந்து நான்கு மணி நேரத்தில் ஏர்காட்டை அடைந்திருந்தார்கள்.

"பசிக்கும் உனக்கு.கொஞ்சம் வெயிட் பண்ணு கிட்ட தட்ட வந்துட்டோம். உனக்கு பாத்ரூம் வந்தால் சொல்லு!" என பேசினான் ரகுவரன்.

சீதா எதையும் பேசாமல் ஜன்னலோரம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அவளின் நினைவுகள் கொஞ்சம் பின்னோக்கி சென்றது.

வீட்டின் முன் சதாசிவம் அவரது ஆட்களுடன் வந்தார். அதே போல சீதாவின் தந்தை சுந்தர மூர்த்தியிடம் சீட்டு போட்டு ஏமார்ந்தவர்களில் பாதி பேர் அங்கு நின்றிருந்தார்கள்.

விஜயா அவர்களிடம் தவணை கேட்க முயற்சி செய்ய.. "செல்லாது! உன் புருசன் லட்சக்கணக்கில் ஏமாத்திட்டு போகல! கோடி கணக்கில் ஏமாத்திட்டு போயிட்டான். ஒன்னு பணத்தை எடுத்து வை! இல்லன்னா வீட்டு பத்திரத்தை எடுத்து வை நான் பணத்தை செட்டிள் பண்ணிக்கிறேன்" என்றார் சதாசிவம்.

"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? லேடிஸ் தனியா இருக்க இடத்தில வந்து பிரச்னை பண்றீங்களா? போலீஸ்ல உங்க மேல கம்ப்லைன்ட் கொடுப்பேன். எங்க அப்பா யாரையும் ஏமாத்தள! உங்களோட பணம் எல்லாம் சரியா வந்து சேரும் ஒழுங்கா இந்த இடத்தை காலி பண்ணுங்க" என கத்தி கொண்டு வந்து நின்றாள்.

சதா சிவம் அவள் பேசுவதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை புன்னகையுடன் யாருக்கோ அழைத்தார்.

அடுத்த நொடி கோபிநாத் இன்ஸ்பெக்டர் வந்து நின்றார். சதா சிவம் சிரித்தபடி உங்களுக்கு ஏன் சிரமம் ன்னு நானே போலீஸ கூப்பிட்டுட்டேன் கோபி கொஞ்சம் அவங்க கிட்ட பேசு என்னன்னு பாரு என்றார்.

இதோங்க ஐயா என கோபி நாத் சீதாவிடம் வந்து பேச..

"சீதா கொஞ்சம் கம்முன்னு இருக்கியா நீ!! சார் பிளீஸ் எங்களுக்கு டைம் கொடுங்க" என விஜயா அழுதபடி கூறினாள்.

"அவங்க கிட்ட என்ன பேச்சு!! கோபி!! பத்திரத்தை கேளு தேவையில்லாம பேச வேணாம்." என்றார் சதா சிவம்.

"சரிங்க ஐயா" என கோபி முன்னேற..

"ஒரு நிமிசம் நில்லுங்க" என ஒரு குரல்.. சீதா முதல் சதா சிவம் முதற்கொண்டு அங்கிருக்கும் அனைவரும் திரும்பி பார்க்க..

ரகுவரன் அவனது பட்டாளத்துடன் வந்து சேர்ந்தான்.

"இவனா?" என சீதா அதிர்ச்சியடைய.. ரகுவரா நீ என்ன இந்த பக்கம்? என்னாச்சு? என சதாசிவம் கேட்க..

"இருங்க பா ஒரு நிமிசம்" என அவன் நேராக சென்றது சீதாவின் முன்.

"இந்த ஆளோட பையன் தான் இந்த ரவுடியா?" என அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

"உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்." என ரகுவரன் கூற..

விஜயா ஒன்றும் புரியாமல் பார்த்தார்.

வாங்க என ரகுவரன் அழைக்க..

"டேய் எங்க அம்மாவை எதுக்கு டா கூப்பிடுற?" என சீதா மூக்கு விதைக்க வந்தாள்.

"ஹேய் மரியாதை இல்லாம கூப்பிடுற!!" என சதா சிவம் எழுந்தார்.

"ப்பா இருங்க" என ரகுவரனின் ஒத்தை சொல்லுக்கு கட்டுப்பட்டவர் அவளை முறைத்து பார்த்தார்.

விஜயா பதட்டத்துடன் ரகுவின் பின்னால் சென்றார். அவருடன் சீதா பிடிவாதமாக வர கிரி அவளை பாதியிலேயே தடுத்தான்.

பத்து நிமிடங்கள் கழித்து விஜயா நேராக சீதாவின் பக்கம் வந்தவர். "உன்னை அந்த தம்பி கூப்பிடுறாங்க போ சீதா! நல்ல முடிவா எடுப்பன்னு நான் நம்புறேன்" என கூறினார்.

'என்ன முடிவு? இந்த அம்மா என்ன சொல்லுது?" என புரியாமல் சீதா சென்றாள்.

ரகுவரன் அவளின் முன் ஒரு செக் புக்கை வைத்தவன். "உன்னோட பிரச்னை என்னன்னு எனக்கு தெரியும் கிட்ட தட்ட ஒரு கோடிக்கு மேலே உங்க அப்பா எடுத்திட்டு போய்ட்டதாக சொல்றாங்க."

"அது உண்மையில்ல!" என சீதா கத்த..

"உண்மை இல்ல தான். ஆனால் அதை அவங்க ஏத்துக்க மாட்டாங்களே! இப்போ உங்க அப்பாவை எல்லா இடத்திலும் போலீஸ் தேடுது அவர் தலைமறைவாக இருக்கார் அது தெரியுமா உனக்கு" என்றான் ரகுவரன்.

சீதாவின் கண்களில் நீர் கோர்க்க இயலாமையுடன் திணறினாள்.

ரகுவரன் அவளின் முன்னால் வந்து "என்னை கட்டிக்கோ உன்னோட முழு விருப்பத்தோடு உன்னோட சம்மதத்தோட என்னை கல்யாணம் பண்ணிக்க! அடுத்த செக்கண்ட் எல்லாத்தையும் நான் சரி செய்யறன். உனக்கு பத்து நிமிசம் தான் யோசிக்க டைம். இல்ல நானே பார்த்துக்கிறேன் அப்டின்னு சொன்னா ஓகே நான் போறேன். நல்லா யோசி" என்றான்.

சீதா அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவள். "இப்படி பிளாக் மெயில் பண்ணி கட்டிக்க நினைக்கிறீங்க! உங்களுக்கு மனசாட்சி இருக்கா!" என ஆற்றாமையில் கேட்டாள்.

"உன்னோட விசயத்தில் எனக்கு எல்லாமே அப்பாற்பட்டது தான். நீ வேணும். அதுவும் உன்னோட விருப்பத்தோட! உன்னை கஷ்ட படுத்தி அடிச்சு என்னை லவ் பண்ணுண்ணு டார்ச்சர் பண்ண எனக்கு விருப்பம் இல்ல அதான்" என்றான் சாதாரணமாக..

சீதா அவனிடம் "எனக்கு கடனாக கொடுங்க நான் திருப்பி தந்திடுறேன்" என கேட்டாள்.

ரகுவரன் ஒரு பெரு மூச்சை விட்டு "உன்னை ரிஸ்க் எடுத்து தான் நான் கல்யாணம் பண்றேன். நீ கடன் வாங்கிட்டா அது எங்க அப்பாவுக்கு கீழே வந்திடும். என்னமோ பண்ணு! நான் சம்மந்த பட மாட்டேன். நீ என்னை கட்டிகிட்டா உன்னை யாரும் நெருங்க முடியாது. அப்புறம் உன் இஷ்டம்" என்றான்.

சீதாவுக்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. அதே இடத்தில் நின்றாள் நிராயுதபானியாக..

"பத்து நிமிசம் முடிஞ்சு போச்சு நீ உன்னோட விசயத்தை பார்த்துக்கோ!" என நகர்ந்தான் ரகு.

"இல்ல! இருங்க! உ.. உங்.. உங்க.. என திக்கி திணறியவள். அழுதபடி உங்களை கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மந்தம்." என்றாள்

ரகுவரன் முகம் சிரிக்க வில்லை. ஆனால் கண்கள் பிரகாசித்தது. நேராக அவளின் அருகில் நெருங்கியவன் அவளின் உதட்டை நோக்கி குனிந்து கவ்வி கொண்டான்.

சீதா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்ன நினைத்து கொண்டிருக்கிறான் வேகமாக அவளது உதட்டை கடித்து கொண்டானே!! என்று முனுக்கென கண்ணீர் கொட்டியது.

சீதா தலையை குனிந்த படி நின்றிருக்க.. வா போலாம் என அவளின் கையை பிடித்து அழைத்து சென்றான்.

ஒரு நிமிசம் என சீதா தடுத்தாள். என்ன? என ரகுவரன் பார்த்தான்.

சீதா...?

தொடரும்..
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
126
Raghuvaran rowdy aaga irunthalum Seetha vishayathula his love 💞 for Seetha seems to be true Sister 👌👌👌🔥🔥🔥👍😍.Seetha Raghu voda love 💖 ah purinjipa seekiramey nu ninaikirom Sis 🤗🤩.
 

Mani

Member
Joined
Dec 25, 2024
Messages
61
Semma ❤️
 
Top