Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
402
அத்தியாயம்- 11
டேய் விடுங்க டா! முரளி உன்னை போலீசில் பிடிச்சு கொடுக்காம விட மாட்டேன். வெட்கமா இல்லையாடா உங்களுக்கு? சோத்துல உப்பு போட்டு தான சாப்பிடுறீங்க? தனியா போற பொண்ணு கிட்ட தகராறு பண்றீங்க? டேய் விடுங்க டா பொட்டைகளா? தைரியம் இருந்தால் என் வீட்டுக்காரர் கூட இருக்கும் போது மோதுங்க டா! யாராவது வாங்களேன் என மலர் விழி கத்தினாள்.

அவளின் வாயை பிரபு பொத்தி விட, நாங்க பொட்டையா ஆண்பிள்ளையான்னு இப்போ உன் கிட்ட நிருபிக்கிறோம். என்ன மச்சி? என சொல்லிக் கொண்டே அவளின் தலை முடியை கொத்தாக பிடித்தான் ரமேஷ்.
வாடா முரளி என நண்பனை அழைத்தான். க்ரூர எண்ணத்துடன் அருகில் நெருங்கிய முரளி. நீ எனக்கு தான்னு இத்தனை நாளாக விட்டு வச்சிருந்தேன். ஆனால் இப்போ என்னோட பொருள் வேற ஒருத்தனுக்கு போயிடுச்சு அதை பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியாது. என சொன்ன முரளி அவளின் முகத்தை அருகில் இழுத்தான்.

வேணாம் முரளி என மலரின் கண்களில் நீர் கொட்டியது. இதயம் வேக வேகமாக துடிக்க, வியர்வை ஒரு பக்கம் வழிந்தது.
முரளி சொல்றத கேளு என மலர் கதறினாள். டேய் வாய பொத்துங்க டா! என ரமேஷ் சொல்ல, முரளி வேணாம் என மலர் சொல்லி முடிப்பதற்குள் வாய் பொத்தினான். முரளி காம பார்வையுடன் அவளின் மாராப்பில் கை வைக்கும் நேரம். "மலரு!!" என முன்னால் குரல் கேட்டது.

வெற்றி மாறன் தான் கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்தான். யாரது? என முரளியின் கூட்டாளிகள் மொத்தமாக திரும்பி பார்க்க, வெற்றி ஆவேசமாக அருகில் வந்தவன். இரண்டு கைகளிலும் ரமேஷ், பிரபு இருவரின் கழுத்தை பிடித்து நசுக்கி தள்ளி விட்டான். டேய் யாரை அடிக்கிற? யாரு டா நீ? என மணி வேகமாக அடிக்க வர, அவனது நெஞ்சில் ஆவேசமாக எட்டி உதைத்தான் வெற்றி.

"அய்யோ அம்... ஆ!!" என கத்திக் கொண்டே எட்டி நின்று விழுந்தான் மணி.
டேய் உன்னை என வெங்கடேஷ் மலரின் வாயில் இருந்து கையெடுத்து விட்டு அருகில் இருக்கும் செங்கல் ஒன்றை எடுத்துக் கொண்டு ஆவேசமாக வெற்றியின் மேல் வீச வர, இந்த பக்கம் பிரபு எழுந்து வெற்றியின் கழுத்தை பிடித்தான்.

"மாமாஆஆ" என மலர்விழி ஒரு பக்கம் கத்த, முன்னால் வந்த வெங்கடேசின் கீழ் பாகத்தை நோக்கி உதைத்தான் வெற்றி கழுத்தை பிடித்திருந்த பிரபுவை தலை முடியை பிடித்து ஆவேசமாக பிடித்து கீழே தள்ளினான் வெற்றி.

முரளி ஒரு வித பதட்டத்துடன் ஹே வேணாம் விட்டுடு என அவ்விடத்தை விட்டு நகர, அவனை வளைத்து பிடித்த வெற்றி கன்னம் கண்ணமாக அறைந்த படி, எவ்ளோ தைரியம் இருந்தால் ஒரு பொண்ணு மேல கை வைப்ப? உன்னைய விடவா அடிச்சேன் என ஒவ்வொரு விரலாக படக் படக் என சத்தம் கேட்கும் வண்ணம் உடைத்து தள்ளினான் வெற்றி.

"டேய் விட்ராஆஆஆஆ!" என சுருண்டு விழுந்தான் முரளி.

என் பொண்டாட்டி மேலே இப்போ கைய வையிங்க டா என கை சட்டையை மடித்து விட்ட படி விழுந்து கிடக்கும் அனைவரையும் சினம் கொண்ட சிங்கமாக பார்த்தான் வெற்றி.

ஆளுக்கு ஓரிடத்தில் கிடந்தார்கள். எழுந்து நிற்க முடிய வில்லை. மலர் அதே இடத்தில் நடுங்கி கொண்டே கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருக்க, அருகில் சென்றவன் மலர் ஒன்னும் இல்ல நான் இருக்கேன் என வெற்றி சொல்லி முடிக்க வில்லை. அதற்குள் தாவி அணைத்து கொண்டாள் மலர் விழி.

அவனது சட்டையில் முகம் புதைத்தபடி நடுங்கி கொண்டே அழுதாள் மலர். இல்ல மா நான் வந்துட்டேன்ல ஒன்னும் இல்ல மலர்! அழாத டி! என சொல்லிக் கொண்டே வெற்றி அவளின் தலையை வருடி விட, மலரின் கண்ணீர் அவனது இதயத்தை நனைத்தது. உள்ளுக்குள் இனம் புரியா உணர்வு ஏற்பட அங்கே விழுந்து கிடந்தவர்களின் மேல் கோபம் கொழுந்து விட்டு எரிய உடனே கமிஷ்னருக்கு போன் செய்தான் வெற்றி.

கமிஷ்னர் வெற்றி மாறனுக்கு சீனியர் கமெண்டோவாக பட்டாலத்தில் பணி புரிந்தவர். பாதியிலேயே வேலையை விட்டு இங்கு வந்து IPSல் தேர்வாகி பணி புரிகிறார். கமாண்டோ வெற்றி மாறன் ஸ்பீகிங்.

"சொல்லு மாறா!"

வெற்றி சுருக்கமாக விவரத்தை எடுத்து கூற அடுத்து பத்தாவது நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் சபின்ஸ்பெக்டர் என ஒரு படையுடன் வந்து 5 காளி பசங்களையும் அள்ளி கொண்டார்கள். புரோபர் கம்பிளைன்ட் கொடுங்க சார் வெளியவே வராத படி பண்ணிடுறோம் என கூறினார்கள்.

"இப்போ உடனே நேரில் வரேன் நீங்க முன்னாடி போங்க சார் என்னோட மிசஸ் கொஞ்சம் பயந்துட்டாங்க" என வெற்றி கூற, ஓகே சார் பொறுமையா வாங்க என சொல்லிய படி அங்கிருந்து போலீஸ் வேன் சென்றது.

மலர்!... மலர்விழி! ஒன்னும் இல்ல மா! இங்கே பாரு அவங்களை போலீஸ் புடிச்சிட்டு போயிட்டாங்க! என வெற்றி ஆறுதல் கூற, அவள் இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டு ஒரு வேளை நீங்க வராமல் போயிருந்தா? என்னோட நிலைமை என மலர்விழி இன்னும் புதைந்து அழுதாள்.

ஹே ஹே இங்கே பாரு மா அது தான் நான் வந்துட்டேனே! திங்க் பாசிட்டிவ். ஒன்னும் ஆகல மலரு என அவன் முடிந்த மட்டும் சமாதானம் செய்தான்.

"மலரு ஒன்னும் இல்ல வா வீட்டுக்கு போலாம் டி! நான் இருக்கும் வரை உன்னோட நிழலை கூட யாரையும் தொட விட மாட்டேன். எதுக்கு பயம் ஹான் உனக்கு பயம் இருக்க கூடாது நீ தைரியமா இருக்கணும்" என சொல்லிக் கொண்டே எப்படியோ அங்கிருந்து நேராக வீட்டுக்கு அழைத்து வந்தான் வெற்றி.

நல்ல வேளை வீட்டில் பல்லவி இல்லை. பொற்கொடியின் வீட்டுக்கு சென்றிருக்க கூடும் என நினைத்தான். அவளை அறைக்குள் அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்தான்.

அவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்க, ஹீட்டர் போட்டிருக்கேன் நீ குளிச்சிட்டு வா! அப்போ இன்னும் பெட்டரா ஃபீல் பண்ணுவ. என சொன்ன படி அவளை பாத் ரூமில் தள்ளினான். அதே விசும்பலுடன் மலர் குளிக்க சென்றாள்.

அடுத்த நொடி வீட்டை பூட்டியவன். வண்டியை வேகமாக விட்டான் போலீஸ் ஸ்டேசன்க்கு ஏற்கனவே சரவணனை வர சொல்லியிருந்தான் வெற்றி. சரவணன் ஓவர் ஆல் பார்மாலிட்டியை முடித்திருக்க, வெற்றி வந்ததும் கையெழுத்து போட்டு கொடுத்தான்.

இப்போ எப்டி டா இருக்காங்க மலர்!

வெற்றி ஸ்டேஷனில் இருந்து கிளம்பி கொண்டே வீட்ல விட்டுட்டு ஓடி வந்தேன் டா! அவள் பார்க்கும் போது நான் வீட்டில் இருக்கணும். அம்மா வேற தங்கச்சி வீட்டுக்கு போய்ட்டாங்க நான் வரேன் டா சரவணா என சிட்டாக பறந்திருந்தான்.

மலர் குளித்து முடித்து வெளியே வரவும் வீட்டின் கதவு திறக்கவும் சரியாக இருந்தது. உடனே பதட்டத்தில் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள, யாரது என அழைத்தாள்.

நான் தான் வந்துட்டேன் என அறைக்குள் நுழைந்தான் வெற்றி. அவனை பார்த்ததும் தான் நிம்மதி வந்தது அவளுக்கு, இப்போ ஓகே வா என கேட்டுக் கொண்டே அவளின் அருகில் அமர்ந்தான்.

ம்ம் என்றாள்.

வாய் வார்த்தைக்காக தான் அப்படி கூறுகிறாள் என நன்றாக தெரிந்து கொண்டான் வெற்றி. எதுவும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

விசும்பும் சத்தம் கேட்டது.

வெற்றி மெல்ல நெருங்கி அமர்ந்தான் அவளின் பக்கம். மலர் அப்படியே விசும்பலுடன் இருக்க, அவளின் எண்ணத்தை திசை திருப்பும் பொருட்டு, மலரு உன் கிட்ட ஒரு விசயம் கேட்கணும்.

அவள் வெற்றியை திரும்பி பார்த்தாள்.

நான் சண்டை போட்டுட்டு இருக்கும் போது, மாமான்னு கூப்பிட்ட மாதிரி ஃபீலிங்! அப்படி எதுவும் என்னை கூப்பிட்டியா? என முகத்தை பார்த்தான் வெற்றி.

கண்களை துடைத்துக் கொண்டவள். ம்ம் கூப்பிட்டேன். என தலையை குனிந்து கொண்டே கூறினாள்.

வெற்றி ஒரு வித ஆர்வத்துடன் ஏன் அப்படி கூப்பிட்ட? கனி தான் என்னை மாமா சொல்லும்? நீ ஏன் அப்படி கூப்பிட்ட? என ஆசையுடன் பார்த்தான்.

உங்களுக்கு பிடிக்கலன்னா நான் கூப்புடல என மலர் தலையை குனிந்து கொண்டே சொல்ல, ஹே இல்ல அது ஒரு டிஃபரண்ட் ஃபீல் கொடுக்குது என அவளின் கையை பிடித்தான் வெற்றி.

அதன் பின் தயக்கத்துடன் கையை எடுத்துக் கொள்ள நினைத்தான். மலர் அவன் அருகில் நெருங்கி தோல் மேல் சாயிந்து கொண்டாள். இதை வெற்றி எதிர் பார்க்கவில்லை. அவன் அவளின் தோல் மேல் கை போட்டுக் கொண்டான்.

மெல்லிய குரலில் மலர் பேசினாள். அக்கா சொன்னது உங்களை மாமான்னு கூப்பிடடனுன்னு. கல்யாணத்துக்கு முந்தியே உங்களை அப்படி தான் கூப்பிடனும்னு நினைச்சேன்.

உன்னை விட வயசுல பெரியவன் நான் அதனால் இந்த மாமாவா என அவனது தாடைகள் இருக, தோல் பட்டையில் இருந்து கையை விலக்க நினைத்தான் வெற்றி.

அப்டின்னு நான் சொன்னேனா? என அவனது முகத்தை அன்னார்ந்து பார்த்தாள் மலர்.

"பின்ன எதுக்கு?"

என்னங்கன்னு சொல்றது கொஞ்சம் அன்னியமா தெரியுது. அது தான் மாமா சொன்னேன். கனிமொழி போல என்னை நீங்க பார்த்துப்பீங்கன்னு நினைச்சு கூப்பிட்டேன்.

கனிய நான் எப்டி பார்த்துப்பேன்? வண்டியில் ரவுண்ட் கூட்டிட்டு போவேன், சாக்லேட் வாங்கி கொடுப்பேன், ஐஸ் கிரீம் வாங்கி தருவேன். அவள் கேட்டது எல்லாமே செய்வேன் அது போலவா உன்னை பார்த்துக்கணும்? என வெற்றி வெள்ளந்தியாக கேட்டான்.

அது சின்ன பாப்பாவுக்கு ஓகே பெரிய பாப்பாவுக்கு அது கூட இன்னும் நிறைய இருக்கு. உங்களுக்கு அதெல்லாம் சொல்லி தரணும் வேணாம் நான் உங்களை வாங்க போங்க சொல்றேன் என மலர் நகர்ந்து கொள்ள, இந்த விலகல் அவனுக்கு அவஸ்தையை தந்தது.

என்ன பண்ணனும் சொல்லு டி! என அவன் தோள் மேல் இறுக்கி ஒட்டி அமர்த்தி கொண்டான்.

இருவரும் எதுவும் பேச வில்லை. வெற்றி மெதுவாக உன்னோட மனசுல மாறன் இருக்கானா? எனக்கு தெரியும் உனக்கு கொஞ்சம் இல்ல ரொம்ப தயக்கமா இருக்கு. I know உன்னோட expectations அ பூர்த்தி செய்யுற மாதிரி நான் இல்ல. என்றான் வெற்றி உடைந்த குரலில்.

"சரி தான்" என்றாள் மலர்

இந்த வார்த்தை இன்னும் ரணத்தை கொடுத்தது வெற்றிக்கு?

அடுத்து அவள் சொன்ன விசயத்தில் வெற்றி...?

வருவான்.
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
126
It proves again that it is one of our all time favourite 💖Story Sister already padicha story thaan but padika padika interesting ah irukunga Sister that's your unique style of story writing Sister👌👌👌🔥🔥🔥👍😍.
 
Top