Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
402
சக்கரவர்த்தி கயிற்று கட்டிலில் அமர்ந்திருக்க.. தண்ணீர் எடுத்து நீட்டினார் அன்னலட்சுமி.

என்ன வேணும் மாப்பிள்ளை என் சொத்து நிலபுலன் எல்லாத்தையும் என்னோட மூணு பொண்ணுங்க தனக்கொடி, ஜெயக்கொடி, சந்தனகொடி மூணு பேருக்கும் எழுதி கொடுத்திட்டேனே? என்கிட்ட இருக்கிறது இந்த வீடு மட்டும் தான் அது என்னோட பையன் அன்பு செல்வனுக்கு தான். அதையும் கேட்காதீங்க மாப்பிள்ளை இது என் மகனுக்கானது. என சக்கரவர்த்தி குமுறலுடன் பேசினார்.

அன்னலட்சுமி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.

தனக்கொடி தன் தந்தையை பார்த்து உங்க பேத்தியோட வாழ்க்கை பிரச்னைக்காக வந்திருக்கோம். உங்க பையன் அதான் உங்க ரெண்டாவது மனைவியோட பையன.. என அவர் பேச வர..

அன்னலட்சுமியின் முகத்தில் கவலை ஒட்டி கொண்டது.

தனம் கொஞ்சம் கம்முன்னு இரு என அதட்டிய சிவராமன். மாமா உங்க கிட்ட உதவி கேட்டு வந்திருக்கோம்.

அன்னலட்சுமி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க...

சக்கரவர்த்தி நிலைகொள்ளாமல் என் பையன் அன்பு செல்வனை பிறந்ததை குத்தமா சொல்லி சொத்தை பிரிச்சிட்டு பிறந்தவன் உறவு வேணாம்னு வெட்டி விட்டு போன என் பொண்ணு தனக்கொடிக்கு இன்னிக்கி எப்படி என் பையன் நியாபகம் வந்தது? என கேட்டார்.

ஏனுங்க கம்முன்னு இருங்க என அன்னலட்சுமி தடுக்க..

மாமா அவள் எதோ கூறுகெட்டு பேசிட்டா! பழசை மறந்திடுங்க. இப்போ அன்பு என்னோட மகள் பூங்கொடிய தான் கட்டிக்கனும். அவன் தானே தாய்மாமன். நீங்க என்ன சொல்றீங்க? என சிவராமன் கேட்க..

அன்னம் தண்ணி வை என தன் தாயை செல்லமாக அழைத்தபடி கன் டெக்டர் டூட்டி முடித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தான் அன்பு.

அங்கிருக்கும் தன் அக்கா மாமாவை பார்த்ததும் புரியாமல் நின்றான் அன்பு.

அன்பு உன்னோட அக்கா பொண்ணு பூங்கொடிய நீ கல்யாணம் பண்ணிக்கனுமாம்! உங்க அக்கா கேட்டு வந்திருக்கா என்ன சொல்ற என சக்கரவர்த்தி கேட்டார்.

***

ஹே பூங்கொடி நின்னுபோன உன்னோட கல்யாணத்தை நடத்த... உஉன்னோட தாய்மாமன் அன்புசெல்வனுக்கு உன்னை கட்டி கொடுக்க கேட்கிறதுக்காக உங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் அங்கே போயிருக்காங்க டி! என்றாள் மணிமேகலை.

என்னால அந்த வீட்டுக்கு மருமகளா போக முடியாது. எனக்கு அவன் வேணாம்.

ஹே அவர் உன்னோட தாய்மாமன். என மணிமேகலை கூற..

அவன் ரெண்டாம் தாரத்து மகன். ச்சீ நான் அந்த வீட்டுக்கு மருமகளா போக மாட்டேன். அவன் ஒரு கண்டெக்டர் நான் என்ஜினியரிங் கிராஜுவேட் நான் போய் அந்த ஆளை கட்டிக்க மாட்டேன் என்றாள் பூங்கொடி.

****

இதோ திருமணம் அன்பு செல்வன் பூங்கொடியின் கழுத்தில் தாலி கட்டி இருந்தான்.


"மன்னவன் பூங்கொடி மார்பிலே"

விரைவில்
 

Usha

Member
Joined
Oct 8, 2024
Messages
56
Super, anpu character epdi erukum intha poonkkodi knjm timir matiri teriuthu
 

Jeni Shiva

Member
Joined
Oct 29, 2024
Messages
77
Prologue semma❤️❤️... Awaiting sister
 
Top