Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
160
அம்மு என வீராவின் உதடுகள் துடிக்க சர்வமும் அவளுக்கு ஏங்கியது. இது மோகம் என்று கொச்சை படுத்த முடியாது. அவளின் மேல் இருக்கும் காதல். ஆம் அதிரடிக்காரனுக்கு காதல் ஆரம்பித்தது விட்டது. இனி அவனது அதிரடி காதல் வேட்டை அம்முவை சுற்றி..

அம்முஉஉ என வேகமாக எழுந்தான். சத்ய தேவ் ப்ளூ டூத்தை தடவிய படி எங்கே டா வீரா என மெல்ல கேட்டான்.

இதோ வரா டா! என் அம்மு டா! இதோ நடந்து வரா! என் அம்மு என வீராவின் குரலில் நேசமும் பிரிவும் நன்றாகவே தெரிந்தது.

பிளாக் ஈகிலின் பார்வை முகத்தை மறைத்துக் கொண்டு வரும் பெண்ணின் மீது படிய, சத்ய தேவ்க்கு பொறி தட்டியது. அப்போ அம்முவும் ரதியும் ஒன்னு தானா? என நினைத்தவன். டேய் இடியட் அர்ஜுன் சொன்ன ரதியும் நீ தேடிட்டு இருக்க அம்முவும் ஒரே பொண்ணு டா நாயே! உனக்கு பக்கத்தில் தான் அம்மு இருந்திருக்கா! அந்த அர்ஜுன் தான் அவளை பத்திரமா பார்த்திருந்துறுக்கான். என்றான் சத்ய தேவ்.

வீராவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் புரிய ஆரம்பித்தது. அப்போ அவங்க அக்கா வோட ஹார்ட் சர்ஜரிக்கு பணத்துக்காக தான் என் அம்மு என நெஞ்சம் பதைத்தது.

இங்கே அம்மு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே உள்ளுக்குள் கமரி கொண்டு வந்தாள்.

சக்தி நான் தப்பு பண்ணிட்டேன் டா! என் அம்மு!. அவளை நான் புரிஞ்சுக்கல. நான் மிருகம் டா! ஆனால் இனி அப்படி ஒன்னு நடக்காது அவளை பத்திரமா பார்த்துப்பேன் என உறுதியாக கூறினான் வீரா.

பிளாக் ஈகில் சக்தியின் பக்கம் திரும்பி "இதோ வந்துட்டா நீ கேட்ட ரதி!"

அப்போ நாங்க கிளம்பறோம் என சத்ய தேவ் நகர, இன்னொரு பக்கம் வீரா சக்தியை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

"ஹே என்ன பண்ற? அப்படியே கிளம்பிட்ட..?" என பிளாக் சிரித்துக் கொண்டே கேட்க, "வேற என்ன பண்ணனும்?"

"அவளோட ஒர்த் 50 கோடி!. அதை எடுத்து வச்சிட்டு கூட்டிட்டு போ!"

**தா என்ன டா? என சத்ய தேவ் பாய.. பின்னால் இருந்து "ஒரு குரல் 100 கோடி கொடுக்கிறேன்." என வந்தது.

குரல் வந்த திசையை கஷ்ட பட்டு எட்சிலை விழுங்கி கொண்டு பார்த்தாள் அம்மு.

"வரே வா! 100 கோடியா?" என பிளாக் திரும்பி பார்க்க, ஹே பைத்தியகார தனம் பண்ணாத டா B* என சத்ய தேவ் கத்தினான்.

வீரா என அம்முவுக்கு உள்ளுக்குள் நிம்மதி பொங்கினாலும், இந்த இடத்தில் இப்படிபட்ட சூழலில் தான் நான் அவரை சந்திக்க வேண்டுமா என தேகம் நடுங்கியது. நல்ல வேளை ரதி என்று தான் அழைத்து வந்தார்கள். அப்போ வீராவுக்கு நான் யாருன்னு தெரியாது. நான் அம்மு என வீராவுக்கு தெரிய கூடாது என்று கடவுளிடம் வேண்டி கொண்டாள்.

நீ இரு சக்தி!. இவன் சொன்னது மாதிரி பணம் கொடுத்தே நான் கூட்டிட்டு போறேன் அதுக்கு அப்புறம் எவனும் அவள் பக்கத்தில் நெருங்க கூடாது. அவள் என்னோட புரோபர்ட்டி என கர்ஜித்தான் வீரா.

பணத்தை எடுத்து வை!. என பிளாக் ஈகில் சாதாரணமாக நின்றான்.

வீரா அவ்விடத்தை சுற்றி பார்த்து விட்டு போன் செய்ய நூறு கோடி 5 ட்ராலியில் வந்தது.

ரூபேஷ் பெட்டியை பார்த்து வாயை பிளந்தவன். அவளோ பேரழகியா இவள் என ஒரு நொடி அம்முவின் பக்கம் பார்வை சென்றது.

கண் இமைக்கும் நொடியில் அம்முவை அவனது கை வளைவுக்குள் கொண்டு வந்தான் வீரா.

ஹக் என துள்ளினாள் அம்மு. மருண்ட விழிகள் இன்னும் பயத்தை வெளி படுத்தியது.

"என்ன பண்ற? அவள் மேலே இருந்து கைய எடு. பணத்தை எண்ணாமல் அவளை உனக்கு கொடுக்க முடியாது" என துப்பாக்கியை தூக்கினான் பிளாக்.

அரிசந்திரா! உன்னை இப்போவே கொண்ணு புதைக்க பத்து நிமிசம் ஆகாது. என சத்ய தேவ் வார்த்தைகளை கடித்து துப்ப, "உனக்கும் என் பொண்டாட்டி சைலகாவுக்கும் கல்யாணம்ன்னு கேள்வி பட்டேன். அங்கே போய் பெர்ஃபார்ம் பண்ண நீ உயிரோட போகனும் அது நியாபகம் இருக்கா?" என கேட்டான் பிளாக் ஈகில்.

சத்ய தேவ் கண்களில் நெருப்பு பொங்க பார்த்தான். நீ விடு எண்ணிகோங்க டா! *த்தா என்றான் வீரா.

ரூப்பேஷ் மற்றும் பிளாக் ஈகிலின் ஆட்கள் அனைவரும் அமர்ந்து பணம் எண்ணும் மிஷன் வைத்து மொத்த பணத்தையும் எண்ணினார்கள்.

அரை மணி நேரம் தேவைப்பட்டது. ம்ம் 100 கோடி இருக்கு தலை என்றான் குணால்.

இப்போ கூட்டிட்டு போ! என்றவன் மூவரையும் பார்க்க அந்த நேரம் அவர்களை சுற்றிய படி ஜீப் வந்து நின்றது.

பிளாக் ஈகில் அம்முவின் முகத்தை மறைத்த துணியை உருவவும் தனா ஜீப்பில் இருந்து இறங்கவும் சரியாக இருந்தது.

ஹே என வீரா அவனது பிஸ்ட்டலை பிளாக்கின் நெற்றி பொட்டில் வைத்தவன். அம்முவின் முகத்தை அவனது கோட்டில் புதைத்து கொண்டான்.

தனா யாரென சக்திக்கு தெரியாது. துட்சாதனனை மட்டுமே தெரியும். சக்தி ஒரு பக்கம் தனா ஒரு பக்கம் வானத்தில் பட்டாசு வெடித்தது.

துதன் சக்தியை பார்த்ததும் பாய்ந்தான். போடா பொட்டை என சத்ய தேவ் சத்தமாகவே கூறினான்.

அவனது கைகளை தனா பிடித்து கொண்டான். வீரா அம்முவை அணைத்த படி காருக்குள் அமர வைத்தான்.

பிளாக் தாவிய படி 100 கோடி பார்ட்னர்! அவளுக்கு 100 கோடி! இதுல fire என்ன தெரியுமா? சத்ய தேவ் பணம் கொடுத்து வாங்கிட்டு போயிருக்கான். அது தான் பார்ட்னர். இப்போ நம்ம யாருன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கும் தான என குதித்தான்.

அவனை எதுவும் பண்ணனும் தனா? என துதன் கண்களில் க்ரூரம் மின்னியது.

பார்ட்னர் இப்போ விட்டு பிடிப்போம். இன்னும் நாள் போகட்டும் முதல்ல இந்த நைட் மார்க்கெட் பெஸ்டிவல சக்சஸ்ஃபுல்லா முடிச்சிட்டு அவனை செய்யலாம். முதல் போனிய அவன் ஆரம்பிச்சு வச்சிருக்கான் என்றான் பிளாக் ஈகிள்.

துதன் பெரு மூச்சை விட்டு சரி என விட்டுவிட்டு உள்ளே சென்றார்கள்.

பிளாக் எங்கே அவள் அம்மு? இப்போவே நான் கூட்டிட்டு போகனும். நீங்க ரெண்டு பேரும் நல்ல படியா முடிச்சு வையுங்க என எழுந்தான்.

பார்ட்னர் என பிளாக் ஈகில் சிரித்து கிண்டலடித்த படி போனை செய்து ஹே அம்மு வ தூக்கிட்டு வாங்க டா..

டேய் எவனொட விரலும் அவள் மேலே பட கூடாது. அவளை நான் வச்சுக்க கூப்பிடல! கட்டிக்க போறேன் எனக்கு அவள் வேணும் என்றான் தனா!

டேய் அன்னிய கூட்டிட்டு வாங்கடா என்றான் பிளாக்.

பத்து நிமிடங்கள் ஆனது. அம்முவின் தரிசனம் இன்னும் கிட்ட வில்லை.

என்ன பிளாக் ஈகில்? என்ன ஆச்சு?

ஒரு நிமிசம் என போன் செய்து உடனே பேசினான். குணால் பதட்டத்துடன் அம்முன்னு இல்லையே!

"டேய் மடையா! பெங்களூர்ல இருந்து தூக்கிட்டு வந்த குட்டி எங்கே டா? போங்க அவள் முதல் பத்துல இருக்கா தேடி பாரு" என்றான் பிளாக்.

பத்து நிமிடங்கள் ஆனது.

தலை என மூச்சு வாங்க ரூப்பேஷ் மற்றும் குணால் இருவரும் வந்து நின்றார்கள்.

எங்கே டா பொண்ணு?

தலை அந்த பொன்னை தான் 100 கோடிக்கு வித்திட்டோம். என்றார்கள் அடியாட்கள்.

"என்னாச்சு பிளாக்? எங்கே அம்மு?" என தனா கோபத்துடன் கேட்டான்.

அது வந்து.. என பிளாக் ஈகில் தயக்கத்துடன் நின்றான்.

என்னன்னு சொல்லு? என்னை பார்க்க அவளுக்கு பயமா என்ன? மத்தவங்களுக்கு தான் நான் வில்லன் ஆனால் அவளுக்கு நான் என்னைக்கும் ஹீரோ தான் என்றான் தனா.

பிளாக் ஈகில் பதட்டத்துடன் "அது வந்து சத்ய தேவ் அந்த பொண்ணை தான் பார்ட்னர் வாங்கிட்டு போய்ட்டான்." என சொல்லி முடிப்பபதற்குள் அந்தரத்தில் பறந்தான்.

எனக்கு அவள் வேணும் டா *த்தா? என பிஸ்டலை ட்ரிக்கர் செய்து சுட குறி வைத்தான்.

தனா தனா என்ன பண்ற? என இன்னொரு பக்கம் துட்சாதனன் விலக்கி விட முயற்சி செய்ய, பிளாக்கின் கண்கள் வானத்தை நோக்கியது. குரல்வளை நன்கு நசுங்கியது. உயிர் விடும் தருவாயில் தூக்கி வீச பட்டான் தனாவால்.

மூச்சு வாங்கிக் கொண்டே இரும்பிய பிளாக். தட்டு தடுமாறி எழுந்தான். தனா அங்கும் இங்கும் நடந்து கொண்டே நீ என்ன பண்ணுவயோ தெரியாது அவள் எனக்கு வேணும். இப்போ உடனே இந்த பணத்தை விட்டெரிஞ்சுட்டு எனக்கு அம்முவை கொண்டு வந்து சேர்க்கிற என கட்டளையிட்டான்.

அந்த இடத்துக்கு வந்த ஜிட்டு விவரத்தை கேட்டு விட்டு அவளை வாங்கிட்டு போனது சாதாரண ஆள் இல்ல. அவன் தான் ஆறு மாசமா அம்மு கூட லைவ் செக்ஸ் சேட் பண்ணிட்டு இருந்தான். கிட்ட தட்ட 200 கோடி அந்த பொண்ணுக்காக செலவு பண்ணுவான்.

இப்போ 100 கோடி கொடுத்து வாங்கிட்டு போயிட்டான். அவன் அவளை தர மாட்டான் என கூறினான்.

பிளாக் ஈகிலின் முகம் இந்த விசயத்தை கேட்டதும் இரத்த பசை இழந்து போனது.

தனா அவளை தூக்கிட்டு வரலாம் அவள் உன்னோட பொருள் என துட்சாதனன் புறப்பட்டான்.

நீ இரு நானும் அவனும் போறோம் என பிளாக் ஈகிலை ஓங்கி உதைத்தான் வயிற்றில்.

பிளாக் ஈகில் வலியை பொறுத்துக் கொண்டு தனாவின் பின்னால் சென்றான்.

இங்கே காரில் நிசப்தம் மட்டுமே இருந்தது. சத்ய தேவ் காரை ஓட்டி கொண்டு இன்னொரு பக்கம் நைட் மார்கெட்டில் விலை போகும் பெண்களை காப்பாற்ற போனில் பிஸியாக இருந்தான்.

இந்த நிசப்தம் என்பது அம்மு மற்றும் வீராவுக்கு இடையில் தான்..

வீராவின் கைகள் அவளின் கரத்தை பாதுகாப்புடன் பற்றி இருந்தது.

அம்மு என மெதுவாக அழைத்துக் கொண்டே அவளின் மென் விரலுக்கு முத்தமிட்டான்.

அம்மு அவனுடன் சேர்வாளா?

அம்மு..?

தொடரும்.
 

Author: Pradhanya
Article Title: Episode -12
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Magi

Member
Joined
Oct 6, 2024
Messages
41
Veera ennathan try panran🤔 ammu avala accept pannuva la🥴 ila thirumba Ava akka kooda poiruvala
 
Top