Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
160
சன்மதிய பார்த்தேன் என ராதா சொன்னதும் அதற்கு செழியன் எதுவும் பேச வில்லை. அமைதியாக இருந்தான்.

ராதாவின் முகத்தில் விரக்தியும் அவமானமும் உள்ளுக்குள் இழையோடியது. செழியன் தூங்க சென்று விட்டான். இருவருமே சாப்பிட வில்லை. அப்படியே உறங்கி போனார்கள்.

ஜீவா! ஜீவா ஜீவா என பூனை குட்டி போல அவன் பின்னால் சுற்றி கொண்டிருந்தாள் வானதி.

என்ன டி வேணும்? எதுக்கு என் பின்னாடி சுத்திட்டு இருக்க? அந்த மாதுளை பழம் பினிஷ் பண்ணியா? தண்ணி எவ்ளோ குடிச்ச? என கேட்டுக்கொண்டே சென்றான்.

"நான் எல்லாத்தையும் சாப்பிட்டேன். வா கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணு!" என அவனது உதட்டில் முத்தமிட்டாள்.

வேக மூச்சுடன் கஷ்ட பட்டு விலக்கி விட்டவன். "என்ன டி பண்ற? இந்த மாதிரி நேரத்தில் கொஞ்சம் கவனமா இருக்கணும்." என்றான் ஜீவா.

"நீ தான் என்னை விட கவனமாச்சே! அதெல்லாம் மெதுவா பண்ணுவ! வா ஜீவா"

"வானதி உனக்கு வெட்கம் இல்லையா? நீ ரொம்ப மாறிட்ட"

"எனக்கு உன் கிட்ட வெட்கமே இல்ல அதுக்கு காரணம் கூட நீ தான்" என இருவரும் பேசி கொண்டிருக்கும் போது காலிங் பெல் சத்தம் கேட்டது.

இரு யாருன்னு பார்க்கிறேன் என கதவை திறந்தான். எதிரில் சங்கவி மற்றும் கார்த்திக் இருவரும் நின்றிருந்தார்கள்.

சங்கவி ஜீவாவை பார்த்ததும் உள்ளே வந்து விட்டாள்.

ஹே சங்கவி என வானதி வந்தவள். அங்கே கார்த்திக் நிற்பதை பார்த்து, கார்த்திக் உள்ளே வா!.. என்றாள்.

ஜீவா எதுவும் சொல்லாமல் கிச்சன் பக்கம் சென்று விட கார்த்திக் அதே இடத்தில் நின்றான்.

"என்ன டா உள்ளே வா!" என வானதி அழைத்தாள்.

கார்த்திக் சங்கவியை முறைத்து பார்த்தான். அவளோ திரும்பி கொண்டாள்.

உன் புருசன் கூப்பிடாம எப்படி உள்ளே வரது? என கார்த்திக் மெல்ல முனுமுனுக்க, ம்ம் உள்ள வர சொல்லு என சொல்லிக் கொண்டே ஜீவா சங்கவியிடம் ஜுஸ் நீட்டினான்.

"தேங்க்ஸ் டாக்டர் சார்!" என வாங்கி கொண்டாள்.

என்ன சிஸ்டர் இந்த பக்கம்? என ஜீவா அமர்ந்தபடி கடுமையான முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.

சங்கவி கார்த்திக்கை பார்க்க, வானதி அவனுக்கு ஜுஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.

கார்த்திக் நேராக சங்கவியின் அருகில் சென்று அமர்ந்தான் ஒட்டி கொண்டே.. வானதி ஜீவாவின் அருகில் அமர்ந்தாள்.

ஜீவா தள்ளி அமர இங்கே சங்கவி தள்ளி அமர்ந்தாள்.

கார்த்திக் அவளின் கைப்பையை பிடுங்கி பத்திரிக்கையை எடுத்து "க்கும் சின்னு மா! எனக்கு மேரேஜ் வந்திடு " என்றான்.

டாக்டர் சார் வந்துடுங்க என இன்னொரு இன்விட்டேஷனை எடுத்து நீட்டினாள் சங்கவி.

ஜீவா பத்திரிக்கையை சங்கவியிடம் வாங்கி கொள்ள, இன்னொரு பக்கம் கார்த்திக்கிடம் வானதி வாங்கி கொண்டாள்.

அதை வாங்கி பிரித்தவன் சிஸ்டர் இன்னும் கொஞ்சம் யோசிச்சுருக்கலாம். என கார்த்திக்கை வெறுப்பேற்றும் பொருட்டு கூறினான் ஜீவா.

அன்னிக்கு கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு என் கிட்ட போனில் அந்த கத்து கத்துனா? எதுக்கு கார்த்திக் இவளை கல்யாணம் பண்ற?

தப்பு பன்றவன் மனுசன். மன்னிக்கறவன் பெரிய மனுஷன். அதனாலே கவிய நான் மன்னிச்சுட்டன் டி என கார்த்திக் கூற, ஜீவா வானதியை முறைத்தான்.

டாக்டர் சார் எங்க வீட்ல எல்லாருக்கும் ஒகே அதனால் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன். என் அண்ணனோட அறிவுரை எனக்குள்ள யோசனையை கொடுதுச்சு. அதான் சரின்னு ஒத்துக்கிட்டென் என்றாள் சங்கவி.

கார்த்திக் சங்கவியை முறைத்து பார்த்தான். "இந்த ஆளு முன்னாடி என்னை அவமான படுத்திட்டா பாவி நீ வெளியே வாடி" என நினைத்தான்.

ஜீவாவின் உதட்டில் புன்னகை ததும்ப கண்ணாடியை மூக்குக்கு தள்ளினான்.

"ஹே நீ ஏன் ஹாஸ்பிடல் வரதில்லை?" என கார்த்திக் கேட்க.. மார்னிங் சிக்னஸ் அதிகமா இருக்கு அதான் வறதில்லை என்றாள் வானதி.

ஓ என கூறியவன் முகம் திடீரென புன்னகை ததும்ப ஹே!! வானதி வாலு!.. என சந்தோஷம் பொங்கியது கார்த்தியின் முகத்தில்..

சங்கவி சிரித்த படி வாழ்த்துக்கள் டாக்டர் சார் என்றாள்.

தேங்க்ஸ் சிஸ்டர் என்றான் ஜீவா.

உடனே போனில் கேக் ஆர்டர் செய்தவன் வானதி வாலு என எழுதி இருந்த கேக்கை வெட்டி ஊட்டினான் கார்த்திக்.

டாக்டர் சார் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்.

உனக்காக வரேன் என்றான் ஜீவா.

வானதி சங்கவியை பார்க்க, கார்த்திக் ஜீவாவின் முன்னால் சென்று கல்யாணத்துக்கு வாங்க என தயக்கத்துடன் அழைத்தான்.

வர முடியாது என அவனது முகத்தில் அடித்தாற்போல கூறி விட்டு உள்ளே சென்றான் ஜீவா.

கார்த்திக் வருத்தத்துடன் இந்த ஆள் கூட எப்படி டி இருக்க? அந்த ஆள் பாப்பா மட்டும் உன்னோட..

"வானதி!" என ஜீவா குரல் கொடுக்க... இதோ வரேன் ஜீவா என உள்ளே ஓடி விட்டாள் ஜீவனின் நதி.

இவளை திருந்த வைக்க முடியாது. என பெரு மூச்சை விட்ட படி சென்றான். அதற்குள் லிஃப்ட் பட்டனை அழுத்தி விட்டாள் சங்கவி.

கவி நில்லு டி வெயிட் பண்ணு டி என கார்த்திக் சொல்லிக் கொண்டே லிப்டில் கால் வைக்க அதற்குள் லிஃப்ட் பட்டனை அழுத்தி விட்டாள் சங்கவி. லிஃப்ட் கீழ் தளம் இறங்கி விட்டது.

இவளை என முனகி கொண்டே நின்றான். பக்கத்தில் இன்னொரு லிஃப்ட் கதவுகள் திறக்க வேகமாக அதில் ஏறி கொண்டான். கீழே சென்று அவளை பிடிக்க வேண்டும் இன்று விடவே கூடாது எவ்ளோ கொழுப்பு இருக்கும் அந்த ஜீவா முன்னாடி என்னை இப்படி இன்சல்ட் பண்ணிட்டா! வீட்ல சொண்ணதுக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிறாளா? அப்போ என்னை லவ் பண்ணலயா? டேய் அது தான டா உண்மை அவள் எப்போ டா உன்னை லவ் பண்ணா? நீ தான் அவளை லவ் பண்றேன்னு சொல்லிட்டு இருக்க என கார்த்திக்கின் மனம் காரி துப்பியது.

சங்கவி அவளது பையை மாட்டிக் கொண்டு அப்பார்ட்மென்ட் வாசலுக்கு வெளியே சென்று கொண்டிருந்தாள்.

எங்கே போனா? அதுக்குள் காணோம்? என காரை எடுத்தவன் நேராக தேடிக் கொண்டே செல்ல, பின்னழகு குலுங்க அவள் நடப்பது தெரிய.. வரேன் டி! என குதூகலத்துடன் அருகில் சென்றவன் எதுவும் சொல்லாமல் அவளின் கை பையை பிடுங்கி கொள்ள.. .

அய்யோ திருடன் என திரும்பி பார்த்தாள். அங்கே கார்த்திக் இருக்க, அய்யோ கொலைகாரன் என்னை காப்பாத்துங்க என கத்தினாள்.

கார்த்திக் சுற்றிலும் பார்த்துக் கொண்டே நச்சென கன்னத்தில் முத்தம் பதித்து இப்போ காரில் ஏறல இங்கேயே லிப் கிஸ் கொடுப்பேன். என மிரட்டினான்.

கன்னத்தை பிடித்துக் கொண்டே நேராக எதுவும் பேசாமல் காரில் ஏறி கொண்டாள்.

காரை வேகமாக ஓட்டினான். சங்கவி அவனிடம் பேசி.. ஆமா எப்பொழுது பேசினாள்? அவன் வீட்டில் நடந்த அந்த சம்பவத்தை தவிர இது வரை அவள் பேசவே இல்லை.

காரில் குறுக்கி கொண்டு அமர்ந்தாள். ஆள் அரவம் இல்லாத இடத்துக்கு போய் வண்டியை நிறுத்தியவன். கைகளை விலக்கி விட்டு என்ன டி திமிரா? எதோ வாழ்க்கை பிச்சை போடுற மாதிரி சொல்ற?

"ஆமா டா உன்னை எனக்கு... என்னை டென்ஷன் பண்ணாத ஒழுங்கா இறக்கி விடு! நான் உன் பொண்டாட்டி இல்ல." என முகத்தை திருப்பி கொண்டாள் சங்கவி.

"இறக்கி விட முடியாது!"

கோபமாக சங்கவி அவன் பக்கம் திரும்ப, உதட்டில் முத்தமிட ஆரம்பித்தான். "கவி லவ் யூ டி! எனக்கு வாழ்க்கை பிச்சை போட மாட்டியா? என முத்தத்துக்கு இடையில் அவன் கூற அவளின் கண்கள் அகல விரிந்தது. இப்போதைக்கு கொஞ்சம் முத்த பிச்சை, கொஞ்சம் கட்டி பிடிக்கிறது, கொஞ்சம் எட்ச்சில் பிச்சை இதெல்லாம் கொடு அப்புறம் கூடவே வாழ்க்கை பிச்சை" என கூறி அவளை இழுத்து கணக்கில்லா முத்தங்களும் கட்டி அணைத்து உதடு பதித்து பல்தடதத்தையும் கொடுத்தவன் கைகள் எல்லை மீறி மொட்டுகளை கசக்கியது.

கார்த்திக் என அவனை கஸ்ட பட்டு விலக்கி விட்டாள் சங்கவி.

ஏன் டி? என்னை உனக்கு பிடிக்க மாட்டிக்கிது?

"நீ ஏன் டா இப்படி இருக்க? நான் வானத்தில் இருந்து குதிச்ச மாதிரி நடந்துக்கிற? நாராசமா பேசுற? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல"

கார்த்திக் ஏக்கத்துடன் பார்த்தான்.

சங்கவி உதட்டு எரிச்சலை அடக்கி கொண்டு, நான்! எனக்கு உன் மேலே லவ் வரல கார்த்திக்..

அவன் முகம் வருத்தத்தை அப்பட்டமாக பிரதிபலித்தது. ஆனால் உன்னை எனக்கு...

கார்த்திக் அவளை திரும்பி பார்க்க, உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம் தான்.

அவன் முகத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. உங்க வீட்லுக்காக சம்மதம் சொல்ற அப்படி தான! என ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்தான்.

இல்ல எனக்காக! எனக்கு உன்னை பிடிக்கும். என்றாள் சங்கவி.

கார்த்திக் ஆசையுடன் அவளை பார்க்க, ஆனால் ஒரு கண்டிசன்! என சங்கவி கூற,

"என்னை பிடிக்கும்ன்னா பிரென்ட்டா பிடிக்கும் ன்னு சொல்லாத அதுக்கு நீ பிடிக்கலன்னு கூட சொல்லு."

எனக்கு கார்த்திக்கை பிடிக்கும் ஆனால் இது பிரென்ட் கார்த்தியா பிடிக்கல அவன் ஒரு சிடுமூஞ்சி என கூறினாள் சங்கவி.

கார்த்திக் உணர்வுகள் பொங்க அருகில் நெருங்க, கொஞ்சம் இரு இது காதல் இல்ல. பிடிக்கும் மட்டும் தான்...

ஓகே காதல் பொறுமையா வரட்டும் இப்போதைக்கு இது போதும் என முத்தமிட்டான்.

அவனது முத்தம் அவளின் விரல்களின் சிறையில் கொடுக்கப்பட்டது.

என்ன கவி..

"ஹான் சங்கவி! இந்த பக்கத்தில் வர வேலைய வச்சுக்காத!"

ஏன் டி! என அவனது தாப உணர்வுகள் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.

கார்த்திக் உங்க அம்மாவுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லன்னு எனக்கு தெரியும். அதனாலே அவங்க எப்போ என்னை ஏத்துக்கறாகளோ அப்போ தான் உன்னோட நான் சேர்ந்து.. I mean உன் கூட பிசிக்களா.. புரியுதா? என இரு புருவம் தூக்கினாள்.

அதுக்கும் முத்தத்துக்கும் சம்பந்தமே இல்ல. எங்க அம்மாவுக்கு உன்னை பிடிக்கும். என இழுத்து முத்தமிட்டவனை தள்ளி விட்டாள் சங்கவி.

இங்கே வானதி ஜீவாவிடம், அவங்க கல்யாணத்துக்கு போகலாம் தான ஜீவா?

ஜீவா..?

தொடரும்..
 

Author: Pradhanya
Article Title: Episode -37
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Jeni Shiva

New member
Joined
Oct 29, 2024
Messages
10
Epdiyo Karthik kavi wedding dhaa history of Pradhanya novels la ivlo seekiram nadakkudhu... Naa sure ah ivanga wedding ku vandhuruven pa
 
Top