🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
3. கண்கள் உன்னை தேடுது மானே (தேனே)
கண்கள் உன்னை தேடுது மானே
📖 கண்கள் உன்னை தேடுது மானே · Chapter 3 of 93

கண்கள் உன்னை தேடுது மானே (தேனே)

  • 10 Jul 2025
  • 613 reads
  • ☆ No ratings yet
  • 8 min read

அத்தியாயம்-3

என்னா டீச்சர் உன்னோட ஸ்கூலில் இருந்து வரதுக்கு இவ்வளவு நேரமா? என ரீயூனியன் தோழி பட்டாலங்கள் மற்றும் தோழர்களும் கேட்டுக் கொண்டே கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

பிரபு மான்வியை முறைத்தான். 

என்ன டா ஆச்சு? என கார்த்திகா கேட்க… 

இவளை கூட்டிட்டு வந்ததுக்கு 5000 fine கொடுக்க வச்சுட்டா! இனி இவளை பிக் அப் பண்ண போக மாட்டேன் கார்த்திகா! ஒழுங்கா அவ கிட்ட இருந்து பணத்தை வசூல் பண்ணி கொடு என தன் அக்காவிடம் புகார் கூறினான் பிரபு. 

என்ன டி சொல்றான் பிரபு? என கார்த்திகா கேட்க., வர வழியில் போலீஸ் புடிச்சிட்டாங்க டி! 

அவ்ளோ வேகமா வண்டி ஓட்டினயா பிரபு? என காதை பிடித்து திருகிய கார்த்திகா. இரு டா நாயே உன்னை அப்பா கிட்ட சொல்றேன். என மிரட்டினாள். 

சரி சரி பிரச்னை பண்ணாத. பாவம் டி! அறியா பையன் தெரியாம பண்ணிட்டான். பிரபு உனக்கு என்ன வேணும் சொல்லு அக்கா வாங்கி தரேன் என மான்வி சமாதானம் செய்ய… எனக்கு 5000 மட்டும் கொடு மான்வி என முறைத்தான் பிரபு கோபத்தில். 

அதன் பின் கொண்டாட்டங்கள் கூத்துகள் ஆரம்பித்தது. என்ஜினீயரிங் முடித்து விட்டு சம்மந்தமே இல்லாமல் B.Ed படித்த ஒரே ஆள் நம்ம மான்வி தான். அதை விட கிண்டர் கார்டனில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். 

அவளுடன் படித்த மாணவர்கள் அனைவரும் IT யில் வேலை செய்கிறார்கள். மான்விக்கு ஒரு கொள்கை. பிடிச்ச வேலையை செய்யணும். அதையும் ரசிச்சு செய்யணும். எந்திரம் மாதிரி பணத்துக்கு பின்னாடி ஓட கூடாது. மழலையர் பள்ளியில் வேலை செய்வது சொர்க்கம் அவளுக்கு. அங்கு தானே எதிர்கால இந்தியாவின் விழுதுகள் முளைக்கிறது. 

கோபியும் மோகனும் மான்விக்காக காத்திருந்தார்கள். கோபி மற்றும் மல்லிகா தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். அதில் மூத்தவள் மைதிலி, இடையில் மோகன், கடை குட்டி மான்வி. 

மைதிலி மற்றும் மான்வி இருவரும் தாய் சொல்லுக்கு கட்டு பட்டவர்கள். மோகன் தன் தந்தையை போல..  மல்லிகாவின் அண்ணன் மகனை திருமணம் செய்து கொண்டாள் காதலித்து. அதனால் அவளின் கணவன் சுபாசுக்கு பயங்கர மரியாதை அந்த வீட்டில்.  அதே போல மான்வியை சுபாசின் தம்பி பிரகாசுக்கு கட்டி கொடுத்து கோபியின் ரிடயர்ட்டில் வரும் பணம், மற்றும் சொத்து வீடு என அனைத்தையும் ஆட்டய போடலாம் என நினைக்கிறார். ஆம் கோபி பத்திர ஆபிஸில் கணக்கராக வேலை செய்கிறார். அடுத்து புரொமோஷன் தான். அவரை வைத்து நிறைய காரியங்களை சாதிக்கும் என்ன  மல்லிகாவின் அண்ணன் கருணாகரனுக்கு.  ரெண்டு பொண்ணு கூடவே பொன்னும் பொருளும் வருது. அதுவும் தங்கச்சி பொண்ணுங்க சொல்லவா வேண்டும். 

“மான்வி பணத்தை கொடுக்கல உண்மையாகவே ஜானை தூக்கிட்டு போயி ப்ளூ கிராசில் விட்டுடுவேன்” என பிரபு அவளை இறக்கி விட்ட படி கேட்டான். மணி 10.30 ஐ தாண்டி இருந்தது. கொண்டாட்டங்கள் முடிந்து அம்மணிக்கு வீட்டுக்கு போகும் எண்ணமே இல்லை. சரி போவோம் தன்னை கேட்க யாருக்கு தைரியம் என இஷ்டத்துக்கு விடியற்காலை கூட வருவாள். ஆனால் இன்று மல்லிகா என்றும் இல்லாமல் வீட்டுக்கு சீக்கிரமாக வா என சொன்ன காரணத்தில் நேரமாக வந்தாள். 

நாளைக்கு காலையில உனக்கு பணத்தை கொடுக்கிறேன் கொஞ்சம் பொறுமையா இரு டா! சம்பளம் வந்ததும் வழக்கம் போல எனக்கு பாக்கெட் மணி பணம் வெறும் 3000 தான் டா இருக்கு. நான் நாளைக்கு அம்மா கிட்ட கேட்டு உனக்கு தரேன். 

இல்ல உன்னை நம்ப முடியாது என அவளின் கையில் இருக்கும் மோதிரத்தை கலட்ட முயற்சி செய்தான் பிரபு. 

பிரபுஊஊஊ! என கோபத்தில் கத்தினாள் மான்வி. 

அதில் கொஞ்சம் பதறியவன். அக்கா! அது வண்டிய சர்வீஸ் விட்டு ஆயில் மாத்த சொல்லி அப்பா கொடுத்த பணம். இப்போ போனால் என்னை வண்டை வண்டையா கேட்பார். 

மான்வி கோபமாக அவனை பார்த்து முறைத்தவள். இன்னும் பத்து நிமிசம் பத்தே நிமிஷம் வெயிட் பண்ணு பணத்தோட வரேன். என சொடக்கு போட்டு கூறியவள் நேராக திருட்டு பூனையாக மாறி உள்ளே சென்றாள். 

டாடி! நான் உங்க லிட்டில் பிரின்ஸஸ் என்னை மன்னிச்சிடு என சொல்லி அவரது வேலட்டில் இருந்து இரண்டு 500 தாள்கள் மற்றும் தன் அண்ணன் மோகன் வேலட்டில் இருந்து பணத்தை தீவிரமாக தேடி கொண்டிருந்தாள் மான்வி. தண்ட எருமை மாடு! தடி தாண்டவ ராயன் நோட்டா மாத்தி வச்சா என்ன கேடு இவனுக்கு என காலர் சட்டையை தூக்கி விட்ட படி கொண்டை போட்டுக் கொண்டு அவள் திரும்ப… அங்கே கைகளை கட்டிய படி நின்றிருந்தான் மோகன். 

மோ… மோகா!! என மான்வி அவனிடம் பர்ஸை நீட்டி…  5000க்கு சில்லறை இருக்கா என எதுவுமே நடவாதது போல கேட்டாள். 

“அம்மா கிட்ட வாங்கி தரட்டுமா? மாடு!” 

மாடு என்ற வார்த்தையை கேட்டதும் உள்ளுக்குள் கோபம் பரவியது. ஆனாலும் அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் 5000  தண்ட செலவு என தெரிந்தால் அவ்வளவு தான் என நினைத்தவள். அண் அண்ணா! என அந்தர் பல்டி அடித்தாள். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

மோகன் அவளுக்கு அருகில் வந்தவன். கண் முன்னால் போனை எடுத்து 5000 தான! 

“ஆமா” என்று உடுக்கை மண்டையை ஆட்டினாள். 

சரி என 5000 த்தை உள்ளீடு செய்தவன் send பட்டனை தொடுவதற்கு முன் தங்கையை பார்த்தான். 

“மோகா அனுப்பு டா!” என  மான்வி ஆவலாக பார்க்க..  அதுக்கு முன்னாடி எனக்கு நீ ஒரு பேவர் பண்ணனும். 

என்ன? என மான்வி புருவம் சுருக்க..   அப்போ போ! அனுப்ப மாட்டேன். நாளைக்கு பிரபு அம்மா அப்பா முன்னாடி நிப்பான். என மோகன் கூறினான். 

என்ன பண்ணனும் சொல்லி தொலை. என முகத்தை திருப்பினாள் மான்வி. 

பெருசா ஒன்னும் இல்ல ரெண்டு நாளைக்கு நான் சொல்றத நீ கேட்கணும். நான் என்ன வேலை சொன்னாலும் நீ செய்யணும். கூடவே அம்மா மேலே சத்தியம் பண்ணு! 

என்ன மாதிரி வேலை? என மான்வி கேட்க.. மோகன் சாதாரண தொனியில் பெருசா ஒன்னும் இல்ல ரெண்டு நாள் ஸ்கூல் லீவ் போடு நம்ம பொண்ணு பார்க்க போறோம். எனக்கு. 

இதுக்கும் அம்மா மேலே சத்தியம் பண்றதுக்கும் என்ன சம்மந்தம்? என மான்வி கேட்க..  

மோகன் அவனது வலையை விரித்தான் மான் குட்டி சிக்க…  பொன் மலரை பொண்ணு பார்க்க போறோம். 

எதே! நீ என்ன சொன்ன? எனக்கு தான் தப்பா கேட்டுச்சு போல.. 

“பொன் மலர் தான் என் பொண்டாட்டி! எனக்கு அவள் மேலே சின்ன வயசில் இருந்தே பிரியம்.  அம்மாவும் அம்மா வீட்டு ஆளுங்க பண்ண  பிரச்னையில் நான் ஏன் என்னோட ஆசைய விட்டு கொடுக்கணும்? அப்பாவை போயி பேச சொல்லிட்டேன். அத்தைக்கு விருப்பம். அதனால் நாளைக்கு போறோம். இதை அம்மா உன் கிட்ட வந்து சொல்லுவாங்க! இந்த கல்யாணத்தை நடக்க விடாமல் பண்ண கூடவே சேர்த்து உனக்கு கல்யாணம்ன்னு கூட சொல்லுவாங்க அதனால் எனக்கு பொன்மலர் கிடைக்கும் வரை நீ சப்போட்டா இருக்கணும். பெரியவளை விட நீ கொஞ்சம் அறிவானவ! எல்லாத்தையும் யோசிச்சு தனிச்சு முடுவெடுக்குற ஆளு அது தான் உன் கிட்ட சொல்றேன். சொல்லு உன்னோட முடிவு என்ன?” 

மான்வி தலையை பிடித்து கொண்டு அமர்ந்தவள் முன் கார்வண்ணன் வந்து நின்றான். “மோகா அங்க அந்த கருவாயன் இருப்பான் டா!  அந்த பொன்மலர் உனக்கு அவளே தான் வேணுமா? அவள் ஒரு மினி கண்ணன் டா! அந்த முகிலன் பெரிய லா பேசுவான். அந்த கண்ணன் ஒரு இரிட்டேடிங் பெல்லோ உனக்கு லவ் பண்ண வேற ஒரு பொண்ணு கிடைக்கலயா?” 

சரி விடு உன்னோட வேலையை பாரு! உனக்கு மைதிலி தானே முக்கியம். இனி எதுக்கும் உன் கிட்ட வந்து நான் நிக்க மாட்டேன் என வேகமாக அவனறைக்கு சென்றான். 

என்ன டா ஆச்சு? என கோபி கேட்க.. 

ப்பா நீங்க இன்னும் தூங்கல? என அதிர்ச்சியுடன்  மோகன் கேட்க..  மான்வி சொல்ற வார்த்தையில் தான் மோகா எனக்கு நிம்மதியே வரும். என் அக்கா பாவம் டா! நான் அவள் கூட உறுதுணையாக இருக்க வேண்டிய நேரத்தில் உன்னோட மாமன் குடும்பம் திட்டம் போட்டு பிரிச்சிட்டாங்க என வருந்தினார் கோபி. 

ப்பா அவள் வருவா! பாருங்க! அவள் உங்க பொண்ணு பா! அம்மா மேலே கண்மூடித்தனமாக பாசம் நம்பிக்கை பயம் இருந்தாலும் மான்வி சுயநலவாதி இல்ல.. மைதிலி மாதிரி மான்வி இருக்க மாட்டாள். என சொல்லி முடிக்கும் நேரம் மோகா என அழைத்தாள் மான்வி. 

மோகன் தன் அப்பாவை பார்த்து சிரித்து விட்டு பாத்தீங்களா! மான் வலையில் சிக்கி விட்டது என முகத்தை மாற்றியவன். சொல்லு என்ன விசயம் என கொட்டாவி விட்டான். சரி உனக்காக வரேன். உனக்காக மட்டும் தான். என்றாள் மான்வி. 

அம்மா வந்து உன் கிட்ட கல்யாணத்தை நிறுத்தர மாதிரி எதுவும் சொன்னால் நீ பின் வாங்க மாட்டியே! சத்தியம் பண்ணு! என கையை நீட்டினான். 

மோகா சின்ன பிள்ளை தனமா பண்ணாத டா! மான்வி வாக்கு கொடுத்தால் கொடுத்தது தான். நீ பணத்தை எடு! இதோ அனுப்புறேன் என மோகன் பணத்தை தட்டி விட போக..  டேய் 5000 அ பிரபுவுக்கு அனுப்பிட்டு ஒரு 5000 எனக்கு அனுப்பு. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

உனக்கு எதுக்கு? 

அம்மாவை முதல் முறையா எதிர்க்க போறேன். அதும் நீ அந்த கருவாச்சிய ஆசை பட்ட ஒரே காரணத்துக்காக என்றாள் மான்வி. 

அப்டியா என் செல்ல தங்கை ஹானஸ்டி என 10000 போட்டு விட்டான். 

மோகா! என அவள் அதிர்ந்து பார்க்க.. இது என்னோட தங்கச்சிக்காக என்றான். 

சரி இரு வரேன் என வேகமாக வெளியே சென்றவள் பிரபுவை திட்டி தீர்த்து விட்டு பணத்தை கொடுத்த திருப்தியில் படுக்கைக்கு சென்றாள். 

டேய் உங்க அம்மா? என கோபி கேட்க..  அம்மாவுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்தேன். அதனால் நாளைக்கு காலையில் எட்டு மணிக்கு தான் எழுவார்கள் என கூறினான் மோகன். 

கோபி நிம்மதியுடன் கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கணும் என வேண்டி கொண்டார். 

* 

மா நீ நிஜமா தான் சொல்றயா? அவள் அண்ணனை கட்டிப்பாளா? கண்ணன் அண்ணனுக்காக மட்டும் தான் இதுக்கு நான் ஒத்துக்கிறேன் என பொன்மலர் கூறினாள். 

எனக்கு நம்பிக்கை இருக்கு! என் தம்பி என்னை கை விட மாட்டான். என முழுதாக நம்பினார் மகேஸ்வரி. 

மான்வி – கார்வண்ணன் சந்திப்பு எப்படி இருக்குமோ? 

பார்ப்போம். 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!