Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
403
மேடம் வரும் போது வண்டியோட நுனியில் உட்கார்ந்துட்டு வந்தீங்க? இப்போ என்ன ஆச்சு? என சைடு கண்ணாடியின் வழியாக மலரின் முகத்தை பார்த்தான் வெற்றி.

"இன்னிக்கி தான் எனக்கு கல்யாணம் ஆச்சு?"

"அதுக்கு?" என வெற்றி சிரித்துக் கொண்டே பார்த்தான்.

"புதுசா கல்யாணம் ஆனவங்க அவங்க புருஷனை விட்டு பிரியவே மாட்டாங்களாம்! அப்படியே பசை போல ஒட்டிக்க தோனுமாம்! நான் கூட பொயின்னு தான் நினைச்சேன். ஆனால் இப்போ பசை மாதிரி ஒட்டிக்க தோணுது புருசன் கூட" என மலரின் கைகள் வெற்றியின் இடையை வளைத்து பிடித்திருந்தது.

"ஓ அப்படியா சரி சரி!" என ஓட்டுவதில் கவனம் செலுத்தினான் வெற்றி.

அப்போ பொண்ணுக்கு மட்டும் தான் ஒட்டிக்க தோணுது போலயே மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லைன்னு நினைக்கிறேன். என மலர் அவளது கையை எடுக்க வர, என்ன பண்றது? புது பொண்டாட்டி பக்கத்தில் போறதுக்கு ராத்திரி வரைக்கும் காத்திருக்கனுமே! அப்புறம் விடுங்கன்னு சொன்னால் கூட விடியற வரை விட மாட்டேன். என்றான் அவளின் மென் கைகளில் அழுத்தம் கொடுத்து.

மலரின் முகத்தில் வெட்கம் தாண்டவம் ஆடியது. உனக்கு பசிக்குதா? என வெற்றி கேட்க... இல்ல அத்தை நமக்காக வீட்டில் காத்துட்டு இருப்பாங்க. நம்ம சீக்கிரமா வீட்டுக்கு போவோம்ங்க! என கூறினாள்.

"அம்மா வீட்டு சாவிய வெளி பாத்ரூம் பக்கம் வச்சிட்டு போயிடுவாங்க. இன்னிக்கி வீட்டுக்கு வர மாட்டாங்க டி!"

"ஏன்? எங்கே போவாங்க? டெய்லியும் பொற்கொடி அக்கா வீட்டில் தங்கினால் அவங்க மாமியார் எதுவும் சொல்ல மாட்டாங்களா?" என மலர் வினவினாள்.

பிரகாஷ் என்னோட சொந்த தாய்மாமன் பையன் என்றான் வெற்றி.

ஓ அப்படியா? அது தான் அவரு அத்தை கிட்ட பையன் மாதிரி ரொம்ப உரிமையா நடந்துக்கிறார். என்றாள் மலர்.

சரி வா ரெஸ்டாரன்ட் போலாம் என அவளை ஒரு 5 ஸ்டார் சைவ ஹோட்டலுக்கு அழைத்து சென்றான். அந்த இடம் மிகவும் க்ளாசியாக இருந்தது.

அந்த ஆம்பியன்ட்சை கண்கள் விரிய பார்த்தவள். "உங்களுக்கு தான் ஹோட்டல்ல சாப்பிடுறது எல்லாம் பிடிக்காதே! எப்படி இன்னிக்கி கூட்டிட்டு வரீங்க?"

இது ரிடையர்ட் ஆர்மி ஆபிசர் ஹோட்டல். எனக்கு அவர் ரொம்ப பழக்கம். வான்னு அடிக்கடி கூப்பிடுவார். அப்பா கூட ஒர்க் பண்ணவர். அதான் இன்னிக்கி டைம் கிடைச்சது வந்தேன். என்றான் வெற்றி.

மிஸ்டர் வெற்றி மாறன் சாதாரண ஆள் ன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன். கமிஷ்னர்ல இருந்து ரெஸ்டாரன்ட் வரைக்கும் எல்லா இடத்திலும் பவர் தான் என தன் கணவனை மலைத்து பார்த்தாள் மலர்விழி.

மீல்ஸ் இரண்டு ஆர்டர் செய்தான் வெற்றி. மலருக்கு பிடித்த சில ஸ்டாட்டர்ட் உணவுகளை ஆர்டர் செய்து வாங்கி கொடுத்தான். மலர் சந்தோசமாக சாப்பிட்டாள். அவள் வாழ்நாளில் முதன் முறையாக ரெஸ்டாரன்ட் வந்து சாப்பிடுகிறாள். ஹாஸ்டல் விட்டால் வீடு.. அதுவும் கொஞ்ச நாளில் இல்லாமல் போக ஹாஸ்டல் படிப்பு , இப்பொழுது வேலை என வட்டமடித்து கொண்டிருந்த அவளின் வாழ்க்கையில் புயலாக வந்தான் வெற்றி மாறன். அவளை பூ போல பார்த்து கொள்கிறான்.

உணவு முடித்து பில் கொடுக்கும் நேரம் ஹோட்டல் முதலாளி நேராக வெற்றியின் அருகில் வந்து கட்டிக் கொண்டார் அவனை. மை பாய் எப்டி இருக்க?

நீங்களே சொல்லுங்க? என அவரின் தோளை இடித்தான் வெற்றி..

ம்ம் பரவாயில்லையே வாயை திறந்து பேச கத்துக்கிட்ட? இது உன்னோட மனைவியா? என மலரை பார்த்து கேட்டார் ரிட்டயர்ட் கர்னல் வில்சன்.

வணக்கம் சார் என மலர்விழி கூற... வில்சன் வெற்றியின் காதை பிடித்து திருகி ஏன்டா கல்யாணத்துக்கு கூப்பிடல? என முறைத்தார் அந்த மீசைக்காரர்.

இன்னிக்கி தான் கல்யாணம். அது தான் எங்க கல்யாண சாப்பாடு உங்க ஹோட்டலில் என புருவத்தை தூக்கினான் வெற்றி. பிராடு என சொல்லிய படி பொதுவான விசயத்தை பேசி விட்டு.. மலர் விழி ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வரணும் என வில்சன் அழைக்க.. கண்டிப்பா வரோம் சார் என்றாள் அவளும்.

அவன் தான் என்னை அப்படி கூப்புடுறான். நீ எனக்கு பொண்ணு மாதிரி மா! என்றார் வில்சன்.

சரிங்க பா கண்டிப்பா வரோம் என இருவரும் விடை பெற்றார்கள்.

பில் என வெற்றி கேட்க... சுட்டு பொசுக்கிடுவென் ராஸ்கல் என வில்சன் மீசையை நீவி விட்ட படி மிரட்ட.. அங்கிருந்து வெளியே வந்தவன் வண்டியில் அமர்ந்ததும். சாரி கர்னல் பே பண்ணிட்டேன் என மலர் சீக்கிரம் உட்காரு என அவர் வருவதற்குள் ஓடி விட்டான் வெற்றி.

வில்சன் அவனை முறைத்து கொண்டே ராஸ்கல் கையில் மாட்டு டா! என கத்தினார். அவன் மறைந்ததும் சிரிப்பு தான் வந்தது. நல்லாருக்கணும் ஜீசஸ் என வேண்டி கொண்டு உள்ளே சென்றார்.

வீட்டுக்கு போலாமா? என மலர்விழி சொல்ல.. அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும். என நேராக அவர்கள் போட்டோ ஸ்டுடியோ சென்றார்கள். வித விதமான போஸ்களில் நிறைய போட்டோ மலர்விழி வெற்றியை பிரமிப்புடன் பார்த்தாள். இந்த மனுஷனை எவள் விட்டுட்டு ஓடினாள். ஹான் அவள் நல்லாருக்கனும் அவளால தான் என்னோட மாமா எனக்கு கிடைச்சிருக்கார் என அவன் மேல் நேசம் இன்னும் அதிகமானது.

6 போட்டோ ஃப்ரேம் வீட்டுக்கே டெலிவரி செய்ய சொல்லி விட்டான்.

"இப்போ வீட்டுக்கு தானே!"

அப்படியும் வச்சுக்கலாம் என வெற்றி கூற... எங்க வேணாலும் கூட்டிட்டு போங்க உங்க கூட வர நான் ரெடி என மலர் விழி அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

அடுத்து அவர்கள் நேராக சென்றது. ஆதரவற்ற முதியோர் இல்லம். இரவு உணவை ஏற்பாடு செய்திருந்தான். அனைவரிடமும் பேசி வாழ்த்துக்களை பெற்று விட்டு மலர்விழி அவனுடன் சந்தோசமாக வந்தவள். இன்று மிகவும் சந்தோசமாக இருந்தாள். வீடு நோக்கி பயணம் ஆரம்பித்தது.

சரியாக அவர்கள் வீட்டை அடையும் நேரம். மாமா! என அவனை நெருங்கி அழைத்தாள் மலர்.

"சொல்லு டி!"

வீட்டுக்கு போய் சொல்லலாம்ன்னு நினைச்சேன். ஆனால் இதுக்கு மேலே என்னால காத்திருக்க முடியாதுன்னு தோணுது. I love you மாமா இங்கே இதயத்தில் இருந்து. I love you so much வெற்றி மாறன் என்றவள் அத்தோடு நில்லாமல் அவனது பின் கழுத்தில் முத்தமிட்டாள்.

"மலரே!"

மாமா பிளீஸ் இப்போ எதுவும் சொல்லாதீங்க! வீட்டுக்கு போயிட்டு நைட்டு பார்த்துக்கலாம். என்னை பார்க்காதீங்க வெட்கமா இருக்கு என்றாள் மலர்விழி.

"முடியல டி! நீ சாப்பிடும் வரைக்கும் கூட காத்திருக்க மாட்டேன்."

எனக்கு சாப்பாடே வேணாம்! மாமா மட்டும் போதும்! ஓகே வா மாமா? என மலர் கூற.. அப்போ உன்னையே சாப்பிட போறேன் என வெற்றி வண்டியை நிறுத்தி விட்டு இறங்க... மலர்விழிக்கு சிந்து அழைத்தாள்.

அட அக்கா கூப்பிடுது! கோவிலில் எடுத்த போட்டோ எல்லாம் சேர் பண்ணேன். என ஆசையுடன் சொல்லிக் கொண்டே அட்டன் செய்தாள் மலர்விழி.

"சொல்லு கா!"

"வாழ்த்துக்கள் மலடு ரொம்ப சந்தோசமா இருக்கு டி!" என சிந்து உற்சாகத்துடன் கூற... நானும் தான் கா எதிர்பார்க்கவே இல்ல என சொல்லிய படி வெற்றியின் பின்னால் சென்றாள் மலர்விழி.

"வெற்றி!" என பல்லவி அழைக்க, "அண்ணா!" என இளமாறன் குரல் கேட்டது.

அக்கா நான் அப்புறம் கூப்பிடுறேன் என போனை வைத்தவள் திரும்பி பார்க்க, பல்லவி மற்றும் பொற்கொடி இருவரும் பதட்டத்துடன் நின்று கொண்டிருக்க, பிரகாஷ் ஒற்றை இருக்கை சோபாவில அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரில் புதியவர்கள் இருவர். வெற்றியை பார்த்ததும் இளமாறன் எழுந்து நின்றான்.

மாறா இது உங்க அண்ணன் வெற்றி மாறன் அம் ஐ கரெக்ட் என ஜெகபதி பாபு புன்னகையுடன் கூற, ஸ்ருதி தனக்கு எதிரில் நின்று கொண்டிருக்கும் வெற்றியையும் மலரையும் பார்த்தாள்.

அண்ணா! என இளமாறன் தவிப்புடன் அருகில் நெருங்கினான்.

வெற்றி என பல்லவி உருக்கமாக அழைத்தார். தனது அன்னையை பார்த்தான் புரியாமல்.

மலர்விழியின் அருகில் பொற்கொடி வந்து அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

இளமாறன் வெற்றியின் அறைக்குள் செல்லும் மலர் விழியை ஒரு பார்வை பார்த்தான். ஏற்கனவே தெரியும். தான் வராத காரணத்தால் வெற்றி மலரை திருமணம் செய்து கொண்டான் என்று.

வெற்றி இப் இப்படி வந்து உட்காரு! என உடல் நடுக்கத்துடன் அழைத்து அமர வைத்தார் பல்லவி. வெற்றி என்ன செய்வானோ? என்ற பயம் தான். இளமாறனை அடித்து விட்டால் என்னை செய்வது? என உள்ளுக்குள் ஓடி கொண்டிருந்தது.

சிவந்த கண்களுடன் தன் அன்னையை பார்த்தான் வெற்றி.

ஓகே மிஸ்டர் வெற்றி உங்களுக்காக தான் உங்க அம்மா, அண்ட் தம்பி நாங்க எல்லாருமே வெயிட் பண்ண வேண்டியதா போச்சு என குத்தி காட்டும் தொனியில் பேசினார் பாபு.

"எனக்காக நீங்க எதுக்கு வெயிட் பண்ணனும்?" என மிடுக்குடன் கம்பீரமாக அமர்ந்தான் வெற்றி.

களுக் என சிரித்து விட்டார் பாபு.

வெற்றி அதே தொனியில் அமர்ந்திருந்தான்.

அது என்னோட பொண்ணும் உங்க தம்பி ரெண்டு பேரும் சிம்பிளா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டாங்க.

வெற்றி அமைதியாக பார்க்க, அதனால ரிசப்ஷன் பண்ண எனக்கு ஐடியா இருக்கு. அதே போல இப்போ என்னோட செல்லம் கன்சீவ்! அதுக்காக தான் இங்கே நாங்க வந்தோம். இனி அவள் இங்கே தான் இருக்க போறா!

வெற்றி அவ்விடத்தை விட்டு எழுந்தவன். ஸாரி டூ சே திஸ்! எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல எனக்காக நீங்க வெயிட் பண்ண வேண்டிய அவசியமும் இல்லை. உங்க பொண்ணு! உங்களோட சம்மந்தி வீடு நீங்க வரலாம் போகலாம். என்ன வேணாலும் விழா எடுங்க. இந்த வீட்டில் எனக்கு என்ன உரிமை இருக்கோ அது அத்தனையும் உங்க மருமகனுக்கு கூட இருக்கு. என் கிட்ட சொல்ல.... ஒன்னும் இல்ல... எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. ஐ டோண்ட் கேர்! என சொல்லி விட்டு வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு அவனது அறை பக்கம் சென்றவன்.

"மலரு" என அழைத்தான் கம்பீர குரலில்..

சொல்லுங்க என ஓடி வந்தாள்.

ஆபீஸில் இருந்து சரவணன் கால் பண்ணான் நான் போயிட்டு வந்துடுறேன். நீ பார்த்துக்கோ என சொல்லி விட்டு யாரையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான் வெற்றி.

பல்லவிக்கு கண்ணீர் கொட்டியது. பாபு அவமானத்தில் முகம் கறுத்து எழுந்தவர். ஸ்ருதி! என அழைக்க, போயிட்டு வாங்க டாடி! அரேஞ்ச்மென்ஸ் பண்ணிட்டு போன் பண்ணுங்க என புன்னகையுடன் கூறினாள்.

இளமாறன் பதட்டத்துடன் விலவிலத்து போய் நின்றான். மாறன்!!

"கர்னல்" என இளமாறன் முன்னால் வர.. என் பொண்ணை பத்திரமா பார்த்துக்கோங்க! என்றவர் ஓரடி சென்று... உங்க கிட்ட இப்படி ஒரு மரியாதை கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை என சொல்
லி விட்டு கிளம்பினார்.

மலர்விழி..?

வெற்றி.. ?

பல்லவி...?

இளமாறன் ..?

அடுத்து என்ன நடக்கும்?

வருவான்.
 
Top