வானதி ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வரவும் இரவு டியூட்டிகாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான் கார்த்திக்.
ஹை கார்த்திக்! என வானதியின் முகம் பிரகாசிக்க, உடனே அவனுக்கு அழைத்தாள் போனில்.
அழைப்பு வந்ததும் வண்டியை நிறுத்தி எடுத்து பார்த்தான். வானதி வாலு என மின்னியது எழுத்துக்கள். கோபம் தான் வந்தது ஒரு பக்கம் அதை விட பதட்டம் இந்நேரம் போன் பன்றாளே! ஒரு வேளை அந்த அரக்கன் அவளை எதுவும் கொடுமை பன்றானா? என பதட்டத்துடன் போனை எடுத்து பேசினான். ஹே என்னாச்சு? ஒன்னும் பிரச்னை இல்லையே! நீ நல்லா தானே இருக்க? இந்நேரத்தில் போன் பண்ற? என வரிசையாக கேள்விகள் வர, வானதிக்கு ஒரு பக்கம் நெகிழ்ச்சியாக இருந்தது. தன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறான். என நினைத்தாள்.
ஹே வானதி! பதில் பேசு நான் உடனே வரேன்! என வண்டிய திருப்ப, இருங்க டாக்டர் சார் நானே வரேன் என அவனை நோக்கி நடந்தாள் வானதி. எங்கே இருக்க நீ? பிரச்னை இல்லையே என மீண்டும் பரிதவிப்புடன் தேடினான் கார்த்திக். எனக்கு என்ன பிரச்னை? இதோ வந்துட்டேன் உங்க பொடனிக்கு பின்னால தான் இருக்கேன் ஓவர் ஓவர் என்றாள் வானதி குறும்புடன்.
அவளை பார்த்ததும் தான் கார்த்திக்கு உயிரே வந்தது. அவளை எரித்து விடுவது போல முறைத்தான். டேய் அப்படி பார்க்காத நான் கருகி போயிடுவேன் என்றாள்.
என்ன பண்ற?
ரிஜாயின் பண்ணிட்டேன்! என அழகாக கண்ணை சிமட்டி கொண்டே கூறினாள் வானதி.
சரி பாரு என அவன் கிளம்ப... டேய் இரு எங்கே ஓடுற? என் கிட்ட பேசுவியா பேச மாட்டியா? என வானதி அவனை பார்த்தாள்.
பேச முடியாது! நகரு! என்றான் வீராப்புடன். அந்த நேரம் பார்த்து செவிலி உடையில் இன்னொரு பக்கம் போனை நோண்டிய படி நடந்து சென்றாள் சங்கவி.
ஹே சங்கவி! என வானதி கிட்ட தட்ட கத்தினாள்.
யாரது என வெடுக்கென திரும்பி பார்த்தாள் சங்கவி. வா வா நான் இங்கே இருக்கேன் என வானதி கைகளை அசைக்க, அங்கே கார்த்திக் அருகில் நின்றிருந்தான்.
ஏற்கனவே அவளுக்கும் அவனுக்கும் சண்டை வேறு. ஒரு பெரிய மூச்சை விட்டவள். புன்னகையுடன் என்ன மேடம் மேரேஜ் லைஃப் எப்படி போகுது என சங்கவி கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள்.
எனக்கு நல்லா தான் போகுது! இவன் என் கிட்ட பேச மாட்டிக்குறான் டி! பேச சொல்லு என வானதி கோரிக்கை வைக்க, சுத்தம் என தோன்றியது சங்கவிக்கு. அந்த நேரம் பார்த்து அவளுக்கு போன் வர கார்த்திக்கை பார்க்காமல் வாணதியின் பக்கம் திரும்பியவள். ஹே சீனியர் நர்ஸ் கால் பண்றாங்க போயே ஆகணும் நான் கால் பண்றேன் சின்னு மா! என வேகமாக போனை அட்டன் செய்து சிட்டாக பறந்து விட்டாள்.
வானதி அவளை பார்த்து விட்டு போனை நோண்டி கொண்டிருக்க, ஹே அடங்காதவலே என அழைத்தான் கார்த்திக்.
நீ தான் பேச மாட்டேன்னு சொல்லிட்டல்ல இனி என்னோட காது கேட்காது என்றாள் பொய் கோபத்துடன்...
இப்போ எப்படி போவ வானதி! என கார்த்திக் கேட்க.. உனக்கென்ன அக்கறை போ! உன்னோட வேலைய பார்த்திட்டு என்றாள் முகத்தை தூக்கி கொண்டு.
உன்னோட வேலை அப்படி! சொல்ல சொல்ல கேட்காமல் அந்த அரக்கனை கல்யாணம் பண்ணிட்ட! என கார்த்திக் கூற, வானதியின் முகம் சுனங்கி போனது.
சரி அப்படி முகத்தை வச்சிக்காத சகிக்கல! என்றவன். வருத்தமா இருக்கு சின்னு மா! நீ தெரிஞ்சே வில்லங்கத்தை கட்டிக்கிட்ட! அது தான் வருத்தம் வேற ஒன்னும் இல்ல.. நீ சின்ன வயசில் இருந்து கஷ்ட படுவதை பார்த்திருக்கேன். உன்னோட கல்யாண வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும். ஆனால் நீ என பெரு மூச்சை விட்டான் கார்த்திக்.
என் ஜீவா என்னை கண்ணுக்குள் வச்சு பார்த்துக்கிறார். நீ தேவை இல்லாம கவலை படாதே கார்த்திக் என வானதி தன் கணவனை விட்டு கொடுக்காமல் பேசினாள்.
சந்தோஷமா இருந்தால் எனக்கு அது போதும். உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் என காத்திருந்தான்.
நீ கிளம்பு எனக்கு இப்போ ஆட்டோ வரும் என வானதி கூற.. முகத்தை அப்படி வச்சிருக்காத டி! பார்க்க சகிக்கல... நாளைக்கு மீட் பண்ணலாம் என்றவன் வெயிட் பண்ணவா என கேட்டான்.
இல்ல நீ ஒர்க் பாரு! நாளைக்கு பார்ப்போம் என வானதி கூற, சாப்பிட்டியா? என கேட்டான் கார்த்திக்.
வீட்டுக்கு போய் தான் என வானதி கூற.. அப்போ காபி! என கார்த்திக் இறங்கி வர, இரு நானே வரேன் என அருகில் உள்ள கடையில் இரண்டு காபி வாங்கி வந்தவள் அவனுக்கு கொடுத்து இருவரும் பருகினார்கள்.
கார்த்திக் வேறு புறம் பார்த்துக் கொண்டே குடித்தான். வானதி மெதுவாக அவனை பார்த்தவள். கோபம் வந்தால் நாலு அடி கூட அடி நாயே இப்படி ஃபார்மலா பேசி சாவடிக்காத என வானதி கூற.. அதில் அழகாக முறைத்தவன் நாளைக்கு வரேன் உன் காது என் கையில் தான்! என சொல்லி சிரித்து விட்டு சின்னு மா டைம் ஆச்சு நான் கிளம்புறேன். நீ வீட்டுக்கு போனதும் எனக்கு ஒரு மெசேஜ் போடு என கூறினான் அக்கறையுடன்.
சரி டா! பை பை என கை அசைத்தாள். கார்த்திக் பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்து நகரவும் அவனுக்கு எதிரில் இருந்து இறங்கிய படி ஜீவா நடந்து வந்தான். இவ்வளவு நேரமும் புன்னகை முகத்துடன் பேசிய கார்த்திக்கின் முகம் கடுமையை தத்தெடுத்து கொண்டது.
ஆனால் கார்த்திக் கின் பார்வை ஜீவாவின் மீது படிய, ஜீவா கர்வத்துடன் சென்றான். ஆனால் உள்ளுக்குள் கோபமும் ஆத்திரமும் கனன்று கொண்டிருந்தது. இவனை என்ன செய்தால் தகும் என ஒருவர் மாற்றி ஒருவரை நினைத்து கொண்டார்கள்.
இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் அப்படி என்ன தான் பிரச்னை? ஃபிளாஷ் பேக் வரும் போது தெரியும்.
வானதி அவளது போனில் ஆட்டோகாரருக்கு அழைத்தாள். அண்ணா எப்போ வருவீங்க? என கேட்க.. எதிரில் ஜீவா வந்து நின்றான்.
கண்ணு சவாரிய விட போயிட்டேன் மா! இப்போ உடனே கிளம்புறேன் ஒரு பத்து நிமிடம் மா என ஆட்டோ கணபதி அவளிடம் சொல்ல.. இல்ல அண்ணா நாளையில் இருந்து என சொல்வதற்குள் போனை பிடுங்கினான் ஜீவா.
என்ன பண்றீங்க? என வானதி அவனை பார்த்தாள்.
உன் அண்ணனும் அம்மாவும் இதை தான் சொல்லி கொடுத்து வளத்தார்களா? என்ன? என ஜீவா பதமாக பேசினான் ஊசி வார்த்தைகளை ஏற்றும் விதமாக...
தேவையில்லாம பேசாதீங்க! என பொங்கினாள் வானதி.
யாரு நானா? சாப்பாடு வேணுமா தண்ணி வேணுமா ன்னு கேட்டியே டி! வேலைக்கு போறதுக்கு முன்னாடி என் கிட்ட ஒரு வார்த்தை சொன்னயா? என்ன வளர்ப்பு இது? மயிரு என நடந்த படியே திட்டினான் வெளிப்படையாக..
வானதி பேச வர, ஹே உனக்கு பேச ரைட்ஸ் இல்ல டி! என் கிட்ட சொல்லாமல் வர! ஹான்! என்றவன் வேகமாக முன்னால் நடந்தான்.
காரில் ஏறியதும் வானதி அழுகையை அடக்கி கொண்டு அழ ஆரம்பித்தாள் சத்தம் வராமல். கண்களில் நீர் கொட்டியது. வீடு வரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை.
அவர்களின் அறைக்கு சென்றதும் வானதி போனை எடுத்து கார்த்திக்கு மெசேஜ் செய்தாள். நான் வீட்டுக்கு வந்துட்டேன். என டைப் செய்து சென்ட் பட்டனை தொடும் நேரம்.. போன் பிடுங்க பட்டு வீசி அடிக்க பட்டது.
ஜீவா? என வானதி குரலை உயர்த்த... என்ன பண்ற? அவனுக்கு எதுக்கு மெசேஜ் பண்ற? உனக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே! அப்புறம் எதுக்கு முன்னால் காதலன் நினைப்பு? அப்புறம் ஏன் என்னை கல்யாணம் பண்ண?
என்னை கொன்னுடு ஜீவா பேசாம! உன்னோட மனசாட்சியை தொட்டு சொல்லு! நான் என்னோட மனசுல கார்த்திக் இருக்கானா? உனக்கு அப்படி தான் தோணுதா? என கண்களில் நீர் கோர்க்க பேசினாள்.
ஜீவா எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
வானதி அவனை வெற்று பார்வையுடன் கடந்து குளிக்க சென்றவள். வேலைக்கு போறதை சொல்லிட்டு போயிருக்கனும் அதனால் தானே இத்தனை பிரச்னை? தப்பு என் மேலே தான்! என நினைத்தவள் குளித்து முடித்து உடையணிந்து கொண்டு அவன் முன் வந்தாள் ஒரு பெரு மூச்சை விட்ட படி நான் வேலைக்கு போக போறேன் என ஆரம்பிக்க, அதே நேரத்தில் ஜீவா அவளிடம் இனி நீ வேலைக்கு போக வேணாம் என கூறினான்..
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். நீ வேலைக்கு போகாத! எனக்கு குழந்தை வேணும்! என ஜீவா மீண்டும் தீர்க்கமாக சொல்ல, இல்ல நான் வேலைக்கு போகனும் இது என்னோட தனிப்பட்ட விசயம்! என்றாள் வானதி.
நீ சிங்கிள் இல்ல விருப்ப படும் போது வேணாம்ன்னு என்னை தூக்கி எறிய! நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிருக்கோம் எனக்கு நீ வேலைக்கு போறது பிடிக்கல அவ்ளோ தான் போகாத .
நான் போவேன் என மீண்டும் கூறினாள் வானதி.
வேலைக்கு போயிட்டு குழந்தை பெத்துக்க ரொம்ப கஷ்டம்! என ஜீவா சொல்ல.. வரட்டும் பார்த்துக்கலாம்! ஆனால் நான் வேலைக்கு போவேன் அவ்ளோ தான் என சொல்லி விட்டு வானதி படுக்கையின் பக்கம் செல்ல, அவளை வளைத்து பிடித்தவன். வானதி நீ போக கூடாது!
"நான் போவேன்" என விடாப்பிடியாக நின்றாள்.
எதிர்த்து பேசுற? இதை தான் உன் அண்ணகாரன் சொல்லி கொடுத்தானா? நீ வேலைக்கு போனால் எனக்கு கவுரவ குறைச்சலா இருக்கும் என ஜீவா சொல்லி முடித்தான்.
வானதி அவன் பக்கம் திரும்பியவள். நான் தான் உங்க பொண்டாட்டின்னு நீங்க தெரியாமல் சொல்லிட்டால் கூட அப்படி ஒரு வார்த்தை என்னோட வாயில் இருந்து ஒருநாளும் சொல்ல மாட்டேன்.
எப்டி சொல்லுவ? புருஷனா நீ எதிர் பார்த்தது உன்னோட காதலனை ஆனால் நான்? நான் எப்படி என ஜீவா பேச வர..
கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. வானதி அவனை ஏறிட்டு பார்த்தவள். என் புருஷனுக்கு என்னால எங்கேயும் அவமானம் வேணாம். அப்படி நான் நடந்துக்க மாட்டேன். என்றவள் படுக்க சென்றாள்.
வானதி என அழுத்தி உச்சரித்தான் ஜீவா!
அவள் கண்க
ளில் நீருடன் மெல்ல திரும்பி பார்க்க, அடுத்த கட்டம் ஆரம்பித்தது.
நெருக்கம் தொடரும்...

Author: Pradhanya
Article Title: Episode-12
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.