Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
160
கண்களில் நீர் வழிய கத்திக் கொண்டிருந்தவளை பார்த்தவன். எதுவும் பேசாமல் சென்றான் ஜீவா.

தலையை பிடித்த படி வானதி அமர்ந்தாள். இந்தா இதை குடி என நீட்டினான்.

நிமிர்ந்து பார்க்க சில்வர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர். எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டாள் வானதி.

அவளுக்கு எதிரில் அமர்ந்தவன். வானதியின் கைகளை பிடித்து வருடிய படி "எதுக்கு இத்தனை டென்ஷன்? உன் கிட்ட அஞ்சு மாசத்துக்கு முன்னாடி நான் என்ன சொன்னேன்? ஹான்!. வேலைக்கு எல்லாம் போக வேணாம். எனக்கே உன்னை விட ஏழு வயசு அதிகம். நம்ம கல்யாணம் பண்ணதும் குழந்தைக்கு தான் டிரை பண்ண போறோம் அதனால வீட்ல இருன்னு வந்த நாளில் இருந்து சொன்னேன். ஆனால் நீ என்ன பண்ண? நான் என்னமோ உன்னை கொடுமை பண்ற மாதிரி வேலைக்கு போயே தீருவேன்னு போன. இப்போ என்னாச்சு? நீ மாசமாகிட்ட"

"இன்னும் கொஞ்சம் நாள் போயிருக்கலாம். என்னோட வாழ்க்கைய என்ஜாய் பண்ணவே இல்ல. அதுக்குள் மாசமாகிட்டேன்" என்றாள் வானதி.

வயசான ஆளை கட்டிக்கிட்டா அப்படி தான் நடக்கும் என புன்னகையுடன் கூறினான் ஜீவா.

"என்ன வயசு உங்களுக்கு ஆகி போச்சு?" என வானதி துள்ளினாள்.

"எனக்கு இப்போ 33 வயசு உங்களுக்கு இப்போ தான் 26 முடிய போகுது. சோ நீ வேற ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லியிருக்கணும்" என்றான் சாதாரணமாக.

"ஜீவா! எதுக்கு ஜீவா என்னை சித்ரவதை பண்ற?" என அழுதாள் வானதி.

ஹே நான் என்ன பண்ணேன்? உனக்கு மூட் ஸ்விங்ஸ் அதிகமா இருக்கு. தேவையில்லாம கண்ட்த போட்டு யோடிச்சிட்டு இருக்காத வானதி. பேபி என அவன் ஆரம்பிக்க..

குழந்தை குழந்தை குழந்தை உனக்கு குழந்தை தான் முக்கியமா? நான் முக்கியம் இல்லையா என கத்தினாள் வானதி.

எதுக்கு வானதி டென்ஷன் ஆகுற? கூல் என அவன் ஆசுவாச படுத்த முயற்சி செய்ய, உனக்கு நான் முக்கியம் இல்லல்ல! உனக்கு குழந்தை மட்டும் தானே வேணும் நான் செத்து போறேன். என அவள் கூறி முடிக்க, ஓங்கி விட்டான் ஒரு அரை..

ஹக் என துள்ளினாள்.

பளார் என அரை அந்த அறையில் எதிரொலித்தது.

அவளின் கண்களில் நீர் கொட்டி கொண்டிருக்க, ஜீவா எதுவும் பேசாமல் கதவு வரை சென்றவன். "ரெண்டு பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்திட்டு இப்போ உங்க அண்ணனுக்கு உங்க அம்மா பொண்ணு தேடிட்டு இருக்காங்க. நீ எதுவும் பண்ணிக்கிட்டா அவங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும். உன்னோட வாழ்க்கை உன்னோட விருப்பம் இதுல நான் சொல்ல என்ன இருக்கு. இது வரைக்கும் நீ நினைச்சத மட்டும் தான பண்ணிட்டு இருக்க. என்ன வேணாலும் பண்ணு." என்று விட்டு நகர்ந்தான்.

சிறிது நேரத்தில் ராதா கிளம்பி வந்தார். நிறைய முறை காலிங் பெல் அடித்து பார்த்துவிட்டு போன் செய்தார்.

மா!..

நான் வெளியே இருக்கேன் டி! கதவை திற.. உனக்காக வீட்ல இருந்து ஈரல் செஞ்சு கொண்டு வந்திருக்கேன் என்றார்.

வானதி மெல்ல எழுந்து கண்ணாடியில் முகத்தை பார்த்தார்.

அழுது அழுது கண்கள் சிவந்திருக்க கூடவே கண்ணம் வீங்கி இருந்தது. ஆனால் விரல் அச்சு இல்லை. மெல்ல எழுந்து சென்று கதவை திறந்தாள்.

அவளின் முகத்தை பார்த்ததும் பொத்தென பையை கீழே விட்டுவிட்டார் ராதா.

"மா ஒன்னும் இல்ல"

என்ன டி இது கண்ணெல்லாம் சிவப்பா இருக்கு. கண்ணன் வீங்கி இருக்கு. தம்பி... தம்பி உன்னை..

அய்யோ அம்மா அதெல்லாம் இல்ல. தலை பாரம் தலைக்கு குளிச்சிட்டு அப்படியே படுத்தேன். ஒரு பக்க கண்ணம் வீங்கிடுச்சு காதுல பொதக் பொதக்குன்னு தண்ணி சத்தம் கேட்குது சளி பிடிக்கிற மாதிரி இருக்கு என்றாள் வானதி.

அதுக்குன்னு இப்படி கண்ணம் வீங்குமா? உண்மைய சொல்லு"

நீ வீட்டுக்குள்ள வா! என முன்னாள் சென்றாள் வானதி.

"ஹே சொல்லு டி! வீட்டுக்கு அனுப்புறேன்னு என் கிட்ட சொன்னாரே! என் புள்ளைக்கு என்னாச்சு?" என ராதா முன்னால் வந்தார்.

மா நான் அழுதேன் தான். ஆனால் அதுக்கு அவர் காரணம் இல்ல.

எதுக்கு அழுத? என ராதா நெஞ்சம் படபடக்க நின்றார்.

அது சொன்னால் நீ வறுத்த படுவ?

என்ன டி விளையாட்டு மயிறு பண்ணிட்டு இருக்கியா? நான் செழியன வர சொல்லட்டுமா? என கொந்தளித்தார்.

மா அது அவரு என்னை அங்கே நம்ம வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறேன். அங்கே இருந்தே ஹாஸ்பிடல் போறேன்னு சொன்னார். இப்போவே கிளம்ப சொன்னார். என வானதி கூற, அப்புறம் என்ன அந்த தம்பி சொன்னது சரி தான.. என்றார் ராதா.

ஆனால் எனக்கு அங்கே நம்ம வீட்டுக்கு வர விருப்பம் இல்ல. என கூறி முடித்தாள் வானதி.

ராதா எதுவும் பேசாமல் அவளின் முகத்தை பார்க்க, "அம்மா நான் தப்பா சொல்லல. எனக்காக அவர் அங்கே வந்து இருக்கிறது சரியா படல அதை தான் சொன்னேன். அதுல என்னை திட்விட்டு போய்ட்டார். நீயே சொல்லு மருமகன் மாமியார் வீட்டில் வந்து தங்கினால் நல்லா இருக்குமா? அதான் என் பேச்சை அவர் கேட்கலன்னு எனக்கு அழுகை வந்திடுச்சு."

ராதா சமையலறை சென்று கடாயில் ஈரல் போட்டு சூடு செய்தார்.

"என்ன மா எதுவும் பேசாம இருக்க?" எதுவும் பேசு மா?" என வானதி தாயின் பின்னால் சென்றாள்.

"என்ன பேச சொல்ற? உன்னை பார்த்துக்க முடியலன்னு தானே அந்த தம்பி அப்படி சொல்லுது. உனக்கு நம்ம வீட்ல வந்து தங்க ரொம்ப பிரஸ்டீஜ் பிரச்னை"

"மா அப்படி இல்ல. உனக்கு புரியாது. ஹாஸ்பிடல் போயிட்டு வந்து அந்த ட்ரெஸ் எல்லாம் டிரை வாஸ்க்கு கொடுக்கணும். நாங்க அங்க வந்தால் அண்ணனுக்கு செலவு அதிகமாகும். இவர் பணம் கொடுப்பேன்னு நிப்பார் அண்ணன் வாங்காது." என்றாள் வானதி.

"அப்போ நீ வா! தம்பி வாரத்தில் ஒரு முறை வந்திட்டு போகட்டும்."

"இல்ல என்னால அவரை விட்டு வர முடியாது."

ஓ கல்யாணம் ஆகிட்டா அம்மா வீடு ரெண்டாம் பட்சம் தான் போல என சிரித்தார் ராதா.

"நான் எனக்கு ஜீவாவை விட்டு வர முடியாது."

ராதா புன்னகையுடன் பார்த்தவர். எனக்கு தெரியும் மாப்ளை சொக்க தங்கம் டி உன்னை நல்லா பார்த்துப்பார். நீ வர வேணாம் உன் விருப்ப படி இரு நான் உனக்கு தேவையான எல்லாம் டெய்லி வந்து செஞ்சு கொடுத்திட்டு நைட்டுக்கு கூட சமைச்சு வச்சிட்டு போறேன் என்றார்.

சரி என அவள் நகர, இரு ஈரல் ஒரு பிளேட் சாப்பிடு.

மா ஒரு பிளேட் முடியாது. எனக்கு அஞ்சு துண்டு போதும் எனக்கு வாமிட் வருது என வானதி கூற, அமர வைத்து மொத்தத்தையும் ஊட்டி விட்டவர். கூந்தலை நன்கு காய வைத்து சிடுக்கு எடுத்து பின்னி விட்டார்.

இரவுக்கு சமைத்து வைத்து விட்டு கிளம்பினார் ராதா.

மா இருந்துட்டு போயேன். என வானதி கூற.. ராதா சிரித்த படி சம்மந்தி வீட்டில் தங்க கூடாது. என கண் சிமட்டிய படி கிளம்பினார்.

பால் கணி வழியாக தன் அன்னையை பார்த்தவள். மீண்டும் படுக்கைக்கு சென்று அழ ஆரம்பித்தாள்.

ஜீவாவுக்கு நான் முக்கியம் இல்ல. குழந்தை தான முக்கியம். என படுத்துக் கொண்டு புலம்பியவள். வளைகாப்பு போட்டு என் வீட்டுக்கு கூட்டிட்டு போகும் போது உன் கிட்ட நான் எல்லா விசயத்தையும் சொல்றேன் ஜீவா. அப்போ உனக்கு என்னோட நிலமை புரியும். நான் உன்னை மிஸ் பண்ணி எவ்ளோ ஏங்கி தவிச்சேன்னு தெரியும். என புலம்பிய படி கிடந்தாள்.

செழியன் மிஸ்ட் கால் செய்திருக்க, ராதா போனை பார்த்து விட்டு செழியன் கூப்பிட்டிருக்கான். என அழைத்தவர். ஹலோ தம்பி வீட்டுக்கு வந்திட்டியா? நான் வானதி வீட்டில் இருந்து புறப்ட்டுட்டென் பஸ்சுக்கு வெயிட் பண்றேன் டா என போனில் பேசி கொண்டே நின்றார்.

அந்த நேரம் ராதாவின் அருகில் சிவப்பு நிற கார் வந்து நின்றது. அவர் போனில் கவனத்தில் இருக்க, பின் சீட் கார் கண்ணாடி மெதுவாக கீழே இறங்கியது.

அம்மா என அழைத்தாள் சன்மதி.

ராதா போனை கட் செய்தவர் திரும்பி பார்க்க காரில் இருந்து இறங்கினாள் சன்மதி. அம்மா என கண்களில் நீர் கோர்க்க அருகில் நெருங்கினாள்.

டவுன் பஸ் அதே நேரம் வர ராதா அவளை அற்ப புழு போல பார்த்து விட்டு பேருந்தில் ஏறினார்.

சன்மதி அதே இடத்தில் நின்றாள்.

இங்கே சங்கவி ஜீவாவின் முன்னால் நின்றிருந்தாள்.

பத்திரிக்கையை பிரித்து பார்த்தவன். "அது தான் வீட்லயே சம்மதம் வாங்கிட்டானே இன்னும் என்ன பிரச்னை சங்கவி உனக்கு?"

சங்கவி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

"எதுக்கு மா அழற? இனி என்ன மாத்த முடியும். நல்ல பையன் கட்டிக்கோ மா! பிடிவாதமா உன்னை கட்டிக்க முயற்சி பண்ணிருக்கான் நல்லது தானே" என்றான் ஜீவா.

அண்ணா என தேம்பி அழுதவள். கார்த்திக் நடித்து அரங்கேற்றிய நாடகத்தையும் அவர்களின் வீட்டில் அனைவரும் தனியாக பார்த்து விட்ட விவரத்தை கூறினாள்.

என்ன மா சொல்ற? என ஜீவா திடுக்கிட்டு கேட்டான்.

"ஆமா அண்ணா! எனக்கு அவமானமாக இருக்கு. அவனை ந.. நான் வெறுக்கிறேன் என் என்னை எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தி.. எல் எல்லாரும் என்னை என்ன நினைச்சிறுப்பாக?" என தேம்பி கொண்டே கூறினாள்.

"சரி இப்போ என்ன மா பண்ண முடியும்? அவங்க தான் உங்க வீட்ல வந்து பேசி கல்யாணத்துக்கு ஒகே சொல்லிட்டாங்க தான!"

அவங்க அம்மாவுக்கு என்னை சுத்தமா பிடிக்கல என தலையை குனிந்த படி கூறினாள் சங்கவி.

ஜீவா அவளுக்கு தண்ணி கிளாஸ் கொடுத்தவன். ஜஸ்ட் ரிலாக்ஸ் என அவளை சாந்த படுத்தினான்.

கண்களை துடைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஜீவா அவளிடம் நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. உனக்கு கார்த்திக்கை பிடிக்குமா பிடிக்காதா? உனக்கு அவனை கட்டிக்க பிடிக்களயா? அவன் மேலே அந்த பிசிக்கள் அட்ராக்சனும் இல்லையா? சொல்லு தெளிவா சொல்லு. உன் விருப்பம் தான் முக்கியம். நீ சொல்லு நான் மத்ததை பார்த்துக்கிறேன். என பார்த்தான்.

சங்கவி...?

தொடரும்..
 

Author: Pradhanya
Article Title: Episode -35
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Revathipriya

Member
Joined
Oct 14, 2024
Messages
30
Achooo intha Sanghavi vera ippo Jeeva ta enna solla poralo theriyalaiyeh😔. Karthik unnaku karma is rombavey boomerang ah thaan iruku pola🤭. Anyhow Story is Superb and very interesting Sister 👌 👌 👌 🔥🔥🔥 👍 😍.
 
Top