Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
159
இப்போ என்ன டா பிரச்னை உனக்கு? என மனோஜ் குமார் கண்ணாடியை மூக்குக்கு தள்ளிக் கொண்டே கேட்டான்.

ஜீவா அமைதியாக இருக்க, டேய் சொன்னால் தானே தெரியும் என தெரிந்து கொண்டே தெரியாததை போல கேட்டான்.

மனோஜ் புன்னகையுடன், "உன்னை போயி புரபோஸ் பண்ணி அந்த பொண்ணு பின்னாடி போக கூடாதுன்னு தான் சொன்னேன். அவளை லவ் பண்ண கூடாதுன்னு சொல்லலையே? என்ன அவளை நீ லவ் பண்றயா!"

ஜீவா வேகமாக எழுந்து மனோஜின் அருகில் வந்தவன். என்ன டா சொல்ற? இந்த பெயின என்னால தாங்க முடியல புதுசா இருக்கு மனோஜ். அவள் சின்ன பொண்ணுன்னு சொன்ன! வேணாம் டா நான் தொந்தரவு பண்ண மாட்டேன் இது தப்பு என கூறினான்.

மனோஜ் சிரித்த படி தூரத்தில் இருந்து பார்க்கலாம். அவளை மெண்டலா பிசிக்களா டிஸ்டர்ப் பண்ண கூடாது. அவ்ளோ தான். இப்போ தான் 11th படிக்கிறா. இந்த வயசுல ஹார்மோன் கொஞ்சம் நிறைய வேலை செய்யும் அவளுக்கு. அதை ஹேண்டில் பண்ணவே அவளுக்கு கஷ்டமா இருக்கும் அந்த நேரத்தில் நீ போயி இன்னும் டிஸ்டர்ப் பண்ண கூடாது.

ஜீவா கொஞ்சம் அதிர்ச்சியுடன் அவள் 11 th ஆ உனக்கு எப்டி தெரியும்? என கேட்க... தெரியும் ஏன் நீ பார்க்க போறியா?

இல்லல்ல என ஜீவாவின் உதட்டில் புன்னகை பூத்தது.

"நீ அவளை தூரத்தில் இருந்து பாரு. உன்னோட பாஸிட்டிவ் வைப் அவள் தான். சோ உன்னோட ஸ்டடீஸ்ல கான்சன்ட்ரேட் பண்ணு. அவள் ஸ்கூல் முடிக்கட்டும் காலேஜ் ஜாயின் பண்ணட்டும் நீயும் அதுக்குள் காலேஜ் படிப்பை முடிச்சிடுவ அதுக்கு அப்புறம் போய் அப்ரோச் பண்ணு டா! சரியா இருக்கும்" என்றான் மனோஜ்.

அப்போ எனக்கு அவள் கிடைப்பாளா மச்சான் என ஜீவா இதயம் படபடக்க கேட்க.. "அதுக்கு தான் ஜீவா சொல்றேன். இது டீன் அவளுக்கு இப்போ அப்ரோச் பண்றது சட்டபடி தப்பு அவளோட வாழ்க்கையும் பாதிக்க படும். நீ ஸ்ட்ராங்கா இருக்கணும். உன்னை வேணாம்னு சொல்ல அவள் கிட்ட ரீசன் இருக்க கூடாது டா! எப்போவும் ஏன் டா காதலிச்சோம் அப்டின்னு மட்டும் after love ல ஃபீல் பண்ண கூடாது. சோ அந்த அளவுக்கு நம்ம வீக்கா இருக்க கூடாது. இது தான் என்னோட சைக்களாஜிக்கால் டேர்ம்"

அப்போ அவளை நான் பார்க்கலாம். ஆனால் பேச கூடாது. லவ் பண்ணலாம் ஆனால் டிஸ்டர்ப் பண்ண கூடாது அப்படி தானே!

அதே தான் என மனோஜ் கூற.. அப்போ ஓகே டா இது போதும் என ஜீவா உற்சாகமாக மச்சி ட்ரிங்க் பண்ணலாம் டா என கூற..

OH ஆல்கஹால் உள்ளே போனதும் CHO ஆல்டிஹைடா மாறும் டா ஸ்லோ பாய்சன்.

ஜீவா சிரித்த படி பாராசிட்டமால் பெயின் கில்லர் தலை வலி மாத்திரை கூட ஆல்டிஹைட் தான். அதை எடுத்துக்கலயா? அது போல தான் மச்சி வாடா வாடா என இழுத்து சென்று மனோஜ் குமாரை வற்புறுத்தி குடிக்க வைத்தான்.

அப்போ ஒயின் டிரை பண்ணலாம். என இருவரும் குடித்து சத்தமில்லாமல் முதிர்வு தன்மையுடன் கொண்டாடினார்கள். மனோஜ் சொன்னது ஜீவாவுக்கு சரியென பட.. அனைத்து இடங்களிலும் உற்சாகமாக சுற்றி திரிந்தான். ஒரு மாதம் விடாமல் வானதியை கண்காணித்ததில் நதிமகள் வாரம் ஒருமுறை வீட்டுக்கு சென்று வருவது தெரிந்தது.

திங்கட் கிழமை அதே அரசு பேருந்து பயணம். என வானதியை இன்ச் இஞ்சாக எட்டத்தில் நின்று ரசித்தான் ஜீவா. அவளது பார்வை ஒன்றே போதும் அவன் பட்டம் வாங்க..

ஜீவா அவளை ரசிப்பதை அருகில் இருக்கும் சங்கவி கண்டு கொண்டாள்.

சங்கவி வானதியின் காதுகளில் ஹே வானு உன் கிட்ட ஒரு விசயம்? நான் சொன்னதும் டக்குன்னு பார்க்காத அங்கே ஒரு பையன் உன்னையே பார்த்திட்டு வரான் டி! கண்ணை நகர்த்தரது கூட இல்ல என்றாள்.

வானதி அவளிடம் நானே இன்னிக்கி மட்டும் தான் பஸ்ஸில் வரேன். அப்புறம் ஹாஸ்டல் போயிடுவேன் டி! அப்புறம் என்ன? இந்த ஒரு நாள் கூத்துக்கு தேவையில்லாத வேலை எனக்கு எதுக்கு என கூறி அவளை அமைதி படுத்தினாள்.

சரி என்னமோ சொல்ற! நீ சொல்றது கூட சரி தான் ஒரு நாள் தானே வரோம் என பள்ளி வந்ததும் தோழிகள் இருவரும் இறங்கி கொண்டார்கள்.

வானதி பார்க்காமல் இருப்பது ஜீவாவுக்கு பிரச்சனையே இல்லை. இந்த ரசித்தல் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. ஆறு மாதம் அப்படியே ஓடி விட தேர்வு முடிவுகள் வந்தது.

ஜீவா அனைத்து பரிட்சையிலும் அவனது முழு புரிதல் திறன் மொத்தத்தையும் இறக்கி வெற்றி பெற்றான். அரியர் பேப்பர் அனைத்தும் ஒரே அட்டம்ட்டில் பாஸ்.. உள்ளுக்குள் இனம் புரியா உணர்வு.. எல்லாமே அவள் தான் அவளால் தான் மனோஜ் சொன்னது சரி தான் என்னோட பூஸ்ட் என உற்சாகத்துடன் அவளை பார்க்க கிளம்பினான்.

11 th முடித்து 12 th மே மாத விடுமுறையில் ஸ்பெசல் கிளாஸ் நடைபெற்று கொண்டிருந்தது. மதிய நேரம் ஜில் வாட்டர் பாக்கெட் வாங்கலாம் என வானதி மற்றும் சங்கவி இருவரும் வந்தார்கள்.

பங்குனி வெயில் பல்லை காட்டி கொண்டு இருந்தது. கூடவே சித்திரை வர போகிறது. ஆனால் ஜீவாவுக்கு பனிமலை பொழிவது போல இருந்தது. இத்தனை வெயிலா என வியர்த்து வடிந்து நின்றார்கள் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள்.

வானதியை பார்த்த அடுத்த நொடி உற்சாகமானான். தலையை கோதிய படி வானதியை பார்த்தான் இரட்டை ஜடை, பள்ளி சீருடை சுடிதார். ஒரு கையில் வாட்ச் இன்னொரு கையில் பிளாஸ்டிக் வளையல் நெற்றியில் ஒரே ஒரு குட்டி ஸ்டிக்கர் பொட்டு கழுத்தில் id கார்ட் அவ்வளவே ...

ஜீவா வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்துக் கொண்டிருக்க, இந்த முறையும் சங்கவி பார்த்து விட்டாள்.

ஹே வானு! அந்த பையன்.. வந்துட்டான் டி இன்னிக்கும். பாரு உன்னை தான் பார்க்கிறான் என சங்கவி கூற..

ஹே பஸ் ஸ்டாப்பில் நிக்க தான் செய்வாங்க விடு கண்டுக்காத என வானதி தண்ணீரை வாங்கி கொண்டு அதை கன்னத்தில் வைத்து பார்த்தவள். குடிச்சா நல்லாருக்கும் அய்யோ அப்படியே fridge உள்ளே போயி உட்கார்ந்துக்க தோணுது என இருவரும் பேசிய படி சாலையை கடக்க முயற்சி செய்ய திடீரென ஒரு வயதானவர் மயங்கி விழுந்தார்.

அய்யயோ அய்யா என்னாச்சு என அனைவரும் சூழ்ந்து கொள்ள, வெளியே வந்து கொண்டிருந்த மாணவ மாணவிகள் அனைவரும் வேகமாக ஓடினார்கள்.. வானதி மற்றும் சங்கவி இருவரும் மற்ற மாணவர்களை போலவே ஓடி சென்று பார்த்தார்கள்.

என்ன ஆச்சு? ஹே என்னாச்சு? இந்த தாத்தாவுக்கு என மாணவர்கள் சுற்றி கொள்ள பயணிகள் கூட இருந்தார்கள்.

கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. யாராவது போய் ஒரு எல்கட்ரோலைட் ors வாட்டர் வாங்கிட்டு வாங்க குயிக் குயிக் என ஜீவா கொஞ்சம் கத்தினான். வேகமாக அங்கிருக்கும் ஒரு இளைஞன் மற்றும் ஒரு நடுத்தர வயது பெண்மணி வாங்கி வந்தார்கள்.

யாரு பா தம்பி நீ? என ஆம்புலன்ஸ்க்கு சொல்லுங்க... என பயணி ஒருவர் சொல்ல..

நானும் டாக்டர் தான் இது ஃபர்ஸ்ட் எயிட் என அந்த தாத்தாவுக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து ors கொடுத்தான் ஜீவா.

அவர் கைகள் நடுங்க வியர்த்து வழிந்தார். ஜீவா அவரிடம் உங்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் வந்திருக்கு. சோ வெயிலில் வரத அவாய்ட் பண்ணிடுங்க இந்த வாட்டர் மொத்தமும் குடிங்க. இது எமர்ஜென்சி.. எதுக்கும் ஒரு தடவை ஹாஸ்பிடல் போய் ஃபுல் பாடி செக் அப் பண்ணிக்கோங்க என்றான் ஜீவா.

அங்கிருக்கும் மக்கள் அனைவரும் அந்த தாத்தாவிடம் அக்கறையுடன் பேசி விட்டு ஜீவாவிடம் தம்பி உங்களை பாராட்டியே ஆகணும் சரியான நேரத்தில் அவரை காப்பாற்றி இருக்கீங்க என்றார்கள்.

எல்லாரும் அதிகமா தண்ணி குடிங்க.. அப்போ தான் இந்த பிராப்ளம் வராது என கூறி கொண்டிருக்கவே அந்த தாத்தா கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்துக்கி வந்தவர். கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னார் ஜீவாவுக்கு.

வானதி பிரமிப்புடன் ஜீவாவை பார்க்க, இவன் தான் டி பஸ்ஸில் உன்னை பார்த்தது. இவன் டாக்டரா இருப்பான்னு expect பண்ணல என சங்கவி கூறினாள்.

வானதி...?

ஜீவா…?
ஆசை தொடரும்…
 

Author: Pradhanya
Article Title: Episode-16
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top