Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
159
அவள் பள்ளிக்குள் சென்றதும் ஒரு பெரு மூச்சை விட்ட படி வானதி சென்ற திசையை பார்த்தான் ஜீவா. கடைசியாக அவள் திரும்பி திரும்பி பார்த்து விட்டு சென்றது நினைவு வந்தது. உள்ளுக்குள் புது வித உணர்வு முதன் முறையா திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டு போகிறாள். நினைக்க நினைக்க இளமை துள்ளல் ஒரு பக்கம் வேகமாக துள்ளியது. அவளின் திகைப்பான பார்வை சொல்லியது. அவளோட மனசுல முதன் முதல்ல ஒரு நல்ல விஷயத்துக்காக பதிந்து விட்டேன் என நினைத்தான் ஜீவா.

இப்படியே நாட்கள் நகர்ந்தது. இனி ஜீவா எங்கு இருந்தாலும் ஒரு முறை பார்ப்பாள் என நினைத்தான் ஜீவா. ஆனால் அதன் பின் வந்த நாட்களில் அவள் ஹாஸ்டல் விட்டு தண்ணீர் குடிக்க கூட வெளியே வரவே இல்லை. பள்ளி திறக்க 4 நாட்களே உள்ள நிலையில் பள்ளி நிர்வாகம் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விட்டது. மூன்று நாட்கள்.

மதியமே கிளம்ப சொல்லி விட்டார்கள். வானதி உற்சாகமாக கிளம்பினாள். மூணு நாள் நல்லா படுத்து தூங்கனும் நல்லா சாப்பிடணும் என ஆயிரம் நினைவுகளுடன் பேருந்தில் ஏறினாள். சங்கவி அவளது ஸ்டாப் வந்ததும் இறங்கி விட வானதி மட்டுமே பேருந்தில் இருந்தாள். அதே அரசு பேருந்து தான் அவ்வளவாக கூட்டம் இல்லை.

வானதி ஜன்னலோரம் சாய்ந்து கொள்ள அவளின் பின் சீட்டில் ஜீவா அப்படியே சாய்ந்து கொண்டான். டிக்கெட் என நடத்துநர் அருகில் வர.. அண்ணா ஒரு பெட்ரோல் பங்க் ரவுண்டானா. என வானதி டிக்கெட் எடுத்துக் கொண்டாள்.


ஜீவா தீவிரமாக யோசித்தான். இவள் எதுக்கு அங்கே இருந்து இங்கே ஹாஸ்டலில் வந்து தங்கி படிக்கிறா கிட்ட தட்ட முக்கால் மணி நேரம் தானே என தோன்றியது. சரி பப்ளிக் எக்சாம் அதனால் இருக்கும் என நினைத்துக் கொண்டான்.

தம்பி நீ எங்கே பா! என நடத்துநர் கேட்க... பெட்ரோல் பங்க் என்றான் ஜீவா. பணத்தை கொடுத்து டிக்கெட்டை வாங்கி கொண்டான். தன் முதுக்குக்கு பின்னால் குறுகுறுவென பார்வை யாரோ பார்ப்பதை போன்று ஒரு உணர்வு வானதிக்கு. மெல்ல தலை சாய்த்து திரும்பி பார்த்தாள் அவனே தான் டாக்டர்.

அவளை பார்த்ததும் இதயம் படபடக்க ஜன்னல் பக்கம் திரும்பி கொண்டான். வானதிக்கு இது நாள் வரை சங்கவி சொன்ன அனைத்தும் மண்டையில் ஓட அவனை திரும்பி பார்த்து முறைத்தாள். ஜீவா நிமிர்ந்து கூட பார்க்க வில்லை.

"நகத்தை கடித்த படி எதுக்கு இவன் நம்மள ஃபாலோ பண்றான்?" என உள்ளுக்குள் தோன்றியது. இல்லல்ல அவனுக்கு வேலையா இருக்கும். டாக்டரா இருக்கான் என நினைத்துக் கொண்டு விட்டு விட்டாள். இருந்தாலும் ஜீவாவின் மீது தான் மொத்த எண்ணமும். முக்கால் மணி நேரம் கழித்து அவளின் ஸ்டாப் வர உற்சாகத்துடன் இறங்கினாள்.

கொஞ்ச தூரம் நடந்தவள் பின்னால் திரும்பி பார்க்க, அங்கே ஜீவா அவளின் பின்னால் வந்தான். போதும் பொறுமை என அனைத்தும் காற்றில் பறந்தது. அவன் பக்கம் திரும்பி அவனுக்கு முன்னால் சென்றவள்.

"ஹலோ எதுக்கு என்னை ஃபாலோ பண்றீங்க?" என மூக்கு விடைக்க கோபத்துடன் கேட்டாள்.

ஜீவா மெய் மறந்து அவளை பார்த்தான். அவளின் குரல் தான் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது மண்டையில். ஹலோ உங்களை தான் என புருவம் சுருக்கி பார்த்தாள்.

உங்களை நான் டிஸ்டர்ப் பண்ணலல்ல நான் என்னோட விசயத்தில் பிஸி என்றான் ஜீவா. அந்த வார்த்தை வருவதற்கே தடுமாற்றம். இதயம் வேகமாக துடித்தது ஜீவாவுக்கு. அவளுக்கும் அதே நிலை தானா? என வானதியின் ட்ரூத் ரிவீல் பிலாஸ் பேக் வரும் போது உங்களுக்கு தெரியும்.

வானதி அதற்கு மேல் பொறுமை இழந்து நீங்க டாக்டர்ன்றதாள மரியாதை கொடுக்கிறேன். சோ இனி என் பின்னாடி சுத்துற வேலை வச்சுக்கிடீங்க நான் எங்க அண்ணா கிட்ட சொல்லிடுவேன் என்றவள். அவனை திரும்பி பார்க்காமல் சென்று விட்டாள்.

ஒரு நிமிசம் என ஜீவா அழைக்க... வானதி நிற்கவே இல்லை. நீங்க படிச்சு முடிக்கிற வரைக்கும் வெயிட் பண்றேன். பிளீஸ் எந்த டிஸ்டர்ப்பும் பண்ண மாட்டேன். அதுக்கு அப்புறமும் என் மேலே எந்த எண்ணமும் உங்களுக்கு இல்லன்னா டிஸ்டர்ப் பண்ணல உங்க பக்கமே வர மாட்டேன் என உருக்கமான குரலில் கூறினான்.

வானதி நிற்கவே இல்லை.. அவள் வேக நடையிட்டாள். மூன்று நாட்கள் விடுமுறை அப்படியே சென்றது. வானதியின் காதுகளில் திரும்ப திரும்ப அவன் கடைசியாக சொல்லி விட்டு சென்ற வார்த்தைகள் தான் திரும்ப திரும்ப கேட்டது. தூக்கத்தை தொலைத்து மூன்று நாளும் மந்திரிச்சு விட்ட கோழி போல திரிந்தாள். அய்யோ எங்கிருந்து டா வரீங்க என்று இருந்தது அவளுக்கு.

சங்கவி போன் செய்து ஹே மார்னிங் 8.10 இனி பிசிக்ஸ் கிளாஸ் அது shuffle ஆகி வருமாம். Evening chemistry... அதுவும் shuffle ஆகி மேத்ஸ், பயாலஜின்னு மாத்தி மாத்தி வரும் எனக்கு 12 ஆப் நினைச்சு பயமா இருக்கு டி என படபடப்புடன் கூறினாள்.

சரி அடிச்சுக்காத டி! அதெல்லாம் ஒன்னும் இல்ல அந்த ஓட்டமே பத்தாது. அதை விட அதிக ஓட்டம் ஓடனும் அப்போ தான் நிறைய கட் ஆஃப் வாங்கினால் தான் நம்ம கவுன்சிலிங் அட்டன் பண்ணி MBBS போக முடியும் என கூறினாள் வானதி.

எனக்கு என்னமோ நான் நர்ஸ் ஆவேனான்னு கூட தெரியல... நான் ஆவரேஜ் ஸ்டூடன்ட் டி! உன் கூடவும் கார்த்திக் கூடவும் என்னால போட்டி போட முடியாது. எனக்கு என்ன முடியுமோ அதை படிக்கிறேன் என சங்கவி சொல்ல.. ஹே லூசு உன்னை போல தான் நானும் கார்த்திக்கும் படிக்கிறோம் தேவையில்லாம உன்னை நீயே கம்மியா நினைக்காத என வானதி கூறி அவளை சமாதானம் செய்து போனை வைத்தாள். தன் அண்ணனின் நோக்கியா பட்டன் செட்டிள் ஹெட் செட் போட்டு சூரியன் எப்எம் கேட்பது அலாதி பிரியம் வானதிக்கு..

அந்த மருத்துவனின் நினைவை மறக்க.. தன்னையே மறக்க ஹெட் செட் காதுகளில் வைத்துக் கொண்டாள். அருகில் வந்த வான்மதி அவளை முறைத்து அரை மணி நேரத்தில் எனக்கு கொடு இல்ல அம்மா கிட்ட சொல்லுவேன். என மிரட்டி விட்டு சென்றாள்.

வேற என்ன போன் சண்டை தான். முதலில் இரைச்சல் சத்தம் கேட்டது. அலை வரிசையை மாற்றினாள். பாதி பாடலில் இருந்து வந்தது.

அஞ்சாதே ஜீவா…

நெஞ்சோடு வா வா…

ஆனந்த பூவே அன்பே வா… ஜல்…

அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு…

வா வா ஆனந்த பூவே அன்பே வா… வரிகள் உள்ளுக்குள் இனம் புரியாத உணர்வுகள் தன் இதயத்துக்கு ரெக்கை கட்டி விட்டது போல ஒரு உணர்வு.

காதல் தப்பென்று சொல்ல…


அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல…

காதல் தப்பென்று சொல்ல…

அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல… என்ற வரிகளில் வெடுக்கென முளித்தாள். அய்யோ என் நேரம் இப்படியா? என மூன்று நாட்களுக்கு முன்னால் ஜீவா சொன்ன விஷயங்கள் காதில் ரீங்கார மிட்டது.

இரவு நேரத்து போாில்…


நீ என்னை எப்போது வெல்ல… மூச்சு வாங்கி கொண்டே வானதி ஹெட் செட்டை பிடுங்க நினைக்க...

ஆண் : பெண்மை தோற்றாலும்…


ஆண்மை தோற்றாலும் முடிவில்…

இருவரும் வென்றாக வேண்டும்… ஜீவாவின் தன்னடக்கம் அவனது முதிர்வு பேச்சு பிடித்து தான் போனது.

பெண் : ஒவ்வொரு காலையின் போதும்…


உன் மாா்பில் நான் தூங்க வேண்டும்… என உடல் முழுவதும் இசை மெல்ல மெல்ல அதிர்வுகளை ஏற்படுத்தி பட்டாம் பூச்சி பூக்க செய்தது அடி வயிற்றில் முதன் முதலில் அவளுக்கு தோன்றும் புதுமையான உணர்வு அதை சொல்ல வார்த்தைகள் இல்லை.. பயம் படபடப்பு அதனுடன் உள்ளங்கை உள்ளங்கால் வியர்த்து போனது.

ஆண் : காலங்கள் முடிகின்ற போதும்…


உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்… உதட்டை கடித்துக் கொண்டு கண்ணை மூடினாள்.

பெண் : மீண்டும் மீண்டும்…


நாம் காதல் ஜென்மம் காணலாம்… இது தப்பு வானதி! இது நமக்கு செட்டாகுமா? என ஹெட் செட்டை காதில் இருந்து எடுத்தாள்.

வானதிஇஇ! என அன்னை கத்தும் சத்தம் கேட்க.. இதோ மா என வேகமாக வந்தாள். போனை கொடு என வந்து நின்றாள் சன்மதி. ஹே நீ ஆல்ரெடி போன் வச்சிருக்க இப்போ எனக்கு வேணும் நான் அண்ணன் கிட்ட சொல்லிட்டேன் என வான்மதி போனை பிடுங்கி கொண்டு ஓடினாள்.

என்னமோ பண்ணுங்க டி என வானதி நேராக தன் அன்னையின் பக்கம் சென்று அம்மா அக்காவும் வான்மதியும் சண்டை போட்டுக்கிறாங்க என போட்டு விட்டாள்.

அங்கு ரகளை ஆரம்பித்தது. அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு உறங்க ஒரு லட்சுமியின் ஒரு பக்கம் வானதி இன்னொரு பக்கம் வான்மதி. போட்டி தான்.

நீ டெய்லி என் கூட தூங்க மாட்டியே இன்னிக்கு என்ன என வான்மதியை பார்த்து லட்சுமி கேட்க... ஓ உன் சின்னு மா தான் உன் கூட படுக்கணும் நான் உனக்கு வேணாம் அப்படி தானே! என முகத்தை தூக்கினாள்.

ஹே இல்ல டி! நீ எருமை மாடு மாதிரி காலை மேலே போடுற! வலிக்குது என பார்த்தார்.

அப்போ போ! என வான்மதி திரும்பி கொள்ள.. என்னோட வான் கோழி மயிலு என லட்சுமி கொஞ்சினார். வானதி உதடு பிரியாமல் சிரித்துக் கொண்டே தன் அன்னையை கட்டி அணைத்து தூங்க ஆரம்பித்தாள்.

அடுத்து என்ன நடந்திருக்கும்?
ஜீவா அவளின் கண் முன் வந்தானா? வானதியின் மனதில் என்ன இருக்கிறது?

ஆசை தொடரும்...
 

Author: Pradhanya
Article Title: Episode-17
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

vedha

New member
Joined
Oct 7, 2024
Messages
28
நம்ம ஜீவா வா இது 🥰🥰🥰🥰🥰👍
 
Top