Episode -53
என்னாச்சு அதுக்குள்ள என நினைத்தபடியே மேலே சென்றாள் நிலா.
“சொல்லுங்க!! அதுக்குள்ள குளிச்சிடீங்களா?”
இங்கேயே வெயிட் பண்ணு! நான் வரேன்! என பாத் ரூமில் இருந்து சத்தம் கேட்டது. அப்படியே கட்டிலில் அமர்ந்தாள். குளித்து முடித்து ருத்ரன் வெளியே வர..
“சொல்லுங்க!”
தலையை துவட்டி விடு!! என அவன் கட்டிலில் அவள் நின்று கொண்டு…
கல்யாண வளையல் கலகலக்க குலுங்கி கொண்டே தலையை துவட்டி விட்டாள்.
“ப்ச்!! எனக்கு அந்த சத்தம் பிடிக்கல கழட்டி வை!!”
அனைத்து வளையலும் ட்ராவுக்கு சென்றது. ருத்ரனது கைகள் மெல்ல அவளின் இடைக்கு ஊர்ந்தது.
என்ன ப.. பண்றீங்க? என மூச்சு வாங்கி கொண்டே கேட்டாள்.
என்னோட மருதாணி கை அச்சு இங்கே இருக்கான்னு பார்க்கணும். ஏன் நான் பார்க்க கூடாதா? சொல்லு!! என அவளை வேகமாக விலக்கி நகர்த்தினான்.
“அச்சோ சாரி! நீங்க பார்க்கலாம்.”
ருத்ரன் அவளை முறைத்து பார்த்தான். நிலா அவனை சமாதானம் செய்யும் பொருட்டு இல்ல நான் சும்மா கேட்டேன். இனிமே எதுவும் கேட்க மாட்டேன். என அவன் அருகில் நெருங்கினாள்.
“ப்ச் தள்ளி போடி!”
சாரிங்க பிளீஸ்! பிளீஸ் தீரா!! என அவளின் புடவையை கீழே இறக்கி கொண்டவள். மெல்ல குனிந்து இருக்கு. உங்களோட கை அச்சு. இப்போ சிவந்து போச்சு. மருதாணி சிவப்பு. என அவனுக்கு அருகில் நெருங்கி அவனது இறுகிய கைகளை எடுத்து வைத்தாள்.
ருத்ரன் அவளை விட்டு விலக.. பிளீஸ்!! என கெஞ்சி கொண்டே அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
Wait wait!..
இது அவளாகவே கொடுக்கும் முதல் முத்தம். ருத்ரன் அவளை விலக்கி விட்டு, நல்லா தெரிஞ்சுக்கோ! நான் எப்போ வேணாலும் என்ன வேணாலும் பண்ணுவேன். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நிக்கணும். நிக்கிற! புரியுதா? என் கிட்ட கேள்வி கேட்கிற வேலைய விட்டுடு! எனக்கு பிடிக்காது. நீ என்னை கேள்வி கேட்கிற வேலைய இன்னையோட விடுற!! இன் கேஸ் உனக்கு விருப்பம் இல்லன்னா சொல்லி தொலை நான் வர மாட்டேன். எனக்கு வற்புறுத்த புடிக்காது. என்றான்.
“சரி இனி அப்படி பண்ண மாட்டேன்..”
இது தான் லாஸ்ட் வார்ணிங் என சொல்லி கொண்டே அவளை சட்டென இழுத்தவன் உதட்டை கவ்வி கொண்டான். அவனாக விடும் வரை அவள் காத்திருந்தாள். (அவன் விடவே மாட்டான் டி.) சிறிது நேரம் கழித்து அவளின் உதட்டை துடைத்து விட்டான்.
இப்போ வாங்க போலாம் எனக்கு ரொம்ப பசிக்குது. என்றாள் நிலா. அவளின் முகத்தில் களைப்பும் சோர்வும் தெரிய..
இனி காலையில் எழுந்ததும் பட்னியா இருக்காத பாரு முகம் பொடுக்குன்னு போயிருச்சு ( வாடி போயிடுச்சு) மார்னிங் சூப் எடுத்துக்கோ! இட்ஸ் ஹெல்தி. வாமிட் வராது. உனக்கு மிட் நைட்ல பசிச்சா கூட சொல்லு! நான் வரேன் கம்பனிக்கு என அவளின் உதட்டில் முத்தமிட்டான்.
ம்ம் சரி என இருவரும் கை கோர்த்து கொண்டு சென்றார்கள்.
வா வந்து உட்காரு! என ருத்ரன் அவளை அமர வைத்து உணவு பரிமாறினான்.
நீங்க?
நீ சாப்பிடு!! என காத்திருந்தான்.
மெல்ல மெல்ல சாப்பிட ஆரம்பித்தாள்.
மா போமோ ஜுஸ் போட்டியா? என ருத்ரன் கத்த..
எடுத்திட்டு போடி என்று இன்பா தன் மனையிடம் ஊற்றி கொடுத்தார்.
விவேகா எடுத்து கொண்டு செல்ல, இட்லி சாப்பிட்டு ஜுஸ் குடி!! டெய்லி முட்டை சாப்பிடு! என ருத்ரன் சொல்லி கொண்டிருக்க..
விவேகா தன் மகனை பெருமையுடன் பார்த்தவர். ஹே அங்கே பாரு! எவ்ளோ பாசமா என் பையன் அவனோட பொண்டாட்டிய பார்த்துக்கிறான்? நீயும் தான் இருக்கியே எனக்கு ஜுஸ் போட்டு கொடுத்தியா! ஊட்டி விட்டியா?
மாசமா இருக்கும் போது மேடம் எங்கே இருந்தீங்க? என இன்பா கேட்க.. ..
விவேகா திடுக்கிட்டு இல்ல ராகவ் சும்மா உள்ளலாய்க்கு கேட்டேன். வா வா உனக்கு பசிக்கும் கறிய மூட்டு (அள்ளி) வறுத்து வச்சிருக்கேன். வா சாப்பிடு தங்கம்.
இன்பா புன்னகையுடன் நான் இன்டர்மிடன்ட் பாஸ்டிங்ல இருக்கேன். நீ சாப்பிடு எனக்கு வேணாம்.
விவேகாவின் முகம் மாற.. என்ன முறைக்கிற? என இன்பா கேட்டார்.
எதுக்கு இப்போ டயட் உனக்கு?
ஹே நான் யங் பெல்லோ! உன்னை மாதிரி ஓல்ட் லேடி இல்ல. என இன்பா கூறி கொண்டிருக்க..
மா என ருத்ரன் கத்தினான்.
இரு நாயே உன்னை வந்து வச்சிக்கிறேன் என வெளியே சென்றார்.
மா முட்டை வேக வச்சு ஒயிட் மட்டும் எடுத்திட்டு வாங்க என்றான்.
பிளீஸ் வேணாம் மாமி! என நிலா கூற..
இப்போ நீ சாப்பிடுற! என்று அதட்டிய ருத்ரன் ஒரு முட்டையின் வெள்ளை கருவை வற்புறுத்தி ஊட்டி விட்டான்.
இன்பா வெளியில் வந்து தன் மகனை பார்த்தார். விவேகாவும் அதே போல தான் நின்றிருந்தார்.
இதுக்கு மேலே வேணாம் என நிலா அழும் நிலைக்கு செல்ல.. சரி போ!! என கூறினான்.
நிலா நெஞ்சம் பதைக்க அங்கும் இங்கும் நடந்தாள். உள்ளுக்குள் ஏனோ போல இருந்தது.
மா எனக்கு ஜுஸ் முட்டை போதும் என இரண்டு முட்டைகள் மற்றும் அதனுடன் ஜுஸ் குடித்தான்.
“கறி குழம்பு உங்க அப்பா வச்”
“ஹே என இன்பா அதட்ட”
“தீரா நான் கஷ்ட பட்டு கறி குழம்பு வச்சிருக்கேன் டா சாப்பிடு தங்கம்”
இல்ல மா எனக்கு கறி குழம்பு வேணாம். சிக்கன் தந்தூர் பண்ண சொல்லுங்க உங்க வீட்டு காரரை என்று விட்டு மேலே சென்றான்.
எவ்ளோ கொழுப்பு அந்த நாய்க்கு?
செஞ்சு கொடு ராகவ்! இதுவே உன் பொண்ணா இருந்தால் செய்வ தான? என விவேகா சொல்ல.. இன்பா தீவிரமாக முறைத்தவர். அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்ற ஒரே காரணத்துக்காக சும்மா விடுறேன். இல்லன்னு வை கன்னம் பளுக்கும் டி!! என சொல்லி விட்டு தந்தூர் செய்ய சென்றார்.
நிலா ஸோபாவில் அமர்ந்திருந்தவள் இரவில் ஏற்பட்ட களைப்பில் மெல்ல சாயிந்தபடி உறங்கி இருந்தாள்.
மெல்ல அவளை படுக்கையில் தூக்கி வந்து பூ போல் கிடத்தினான். மெதுவாக கண்களை திறந்தவள். அவனை பார்த்து திடுக்கிட்டாள். கண்ணை மூடி தூங்கு என அவளின் அருகில் படுத்து கொண்டான்.
எப்படி தூக்கம் வரும்? பக்கத்தில் இருக்கிறானே ராட்சசன். அவள் அவனுக்கு முதுகு காட்டி திரும்பி கொள்ள.. அவள் முதுகை தடவிய படி போனில் செய்திகளை படித்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் எழுந்து பாத்ரூம் சென்று வந்தவள் கீழே செல்ல திரும்பினாள்.
எங்கே போற?
கீழே!!
வா பக்கத்தில் என ருத்ரனின் கண்கள் மாறி இருந்தது. மெல்ல அவனருகில் சென்றாள். முத்த சத்தங்கள் வேகமாக சிறிது நேரத்தில் துவண்டு படுக்கையில் கிடந்தாள்.
வந்துச்சே ஃபீலிங்ஸ் தான் அவனுக்கு அவளை பார்த்தால்..
புது புடவையில் கீழே சென்றாள் குளித்து முடித்து. மதிய சாப்பாட்டை நால்வரும் சேர்ந்து உண்டார்கள். ருத்ரன் மற்றும் இன்பா இருவரும் சிக்கன் சாப்பிட.. மனையாள் இரண்டும் ஆட்டு கால் குழம்பில் சாப்பிட்டார்கள்.
நிலா வா மேலே என போகும் போது அழைத்து சென்று விட்டான். அவள் மாலை வரும் போது புது புடவையில் இருந்தாள்.
விவேகா குழப்பத்துடன் அமர்ந்திருக்க.. என்ன டி ஒரு மாதிரி இருக்க? என கேட்டார் இன்பா.
ராகவ்! அந்த நிலா பொண்ணு காலையில் இருந்து மூணு புடவை மாத்திருச்சு! என விவேகா கூற..
அதனாலே என்ன?
டேய் மடையா? நான் சொல்றது புரியலயா? என விவேகா ஒரு அடி போட்டார்.
இன்பா அதிர்ச்சியுடன் பார்க்க, அய்யோ உன் பையன் இப்படி இருக்கான்!! என விவேகா தலையை பிடித்த படி அமர்ந்தார்.
மூணு தடவையா? விவேகா வாயேன் நம்மலும்!..
செருப்பு பிஞ்சி போகும் போடா என அங்கும் இங்கும் நடந்தவர். நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்..
என்ன? என இன்பா சோர்வுடன் கேட்க..
விவேகா மேலே சென்றார். ஹே லூசு கிறுக்கி எங்கே போற? என இன்பா தடுக்க..
விடு என உதறி விட்டு சென்றார் விவேகா.
இங்கே ருத்ரன்…?
****
அறையில் ஓரிடத்தில் லேப் டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான் நிவாஸ். இந்த ஒரு வாரமும் நரகம் போல ஓடியது. இப்பொழுது கூட அதே மன நிலையில் தான் இருக்கிறது கால சூழ்நிலை.
நிவாஸ் சாப்பாடு ரெடி!! என கண்மணி போய் நிற்க..
பதில் இல்லை.
எங்கு சென்றாலும் எப்படி சென்றாலும் அவளுக்கு கிடைப்பது ஒதுக்கம் தான். அவளிடம் நிவாஸ் பேசுவதும் இல்லை. படுக்கையில் அவன் தூங்குவதில்லை. தரையில் அடுக்கி போட்டு உறங்குகிறான். எல்லா இடத்திலும் நிவாஸ் அவளை விலக்கி கொள்கிறான்.
நிவாஸ் என அவள் அழுது கொண்டே அணைக்க..
நிவாஸ் அவளை தள்ளி நிறுத்தினான்.
நிவாஸ் நான் எனக்கு நீங்க கிடைக்க வேணும்னு.. என்று அழுது கொண்டே கண்மணி கூற..
நிவாஸ் கண்கள் சிவக்க நான் ரொம்ப ரொம்ப வெறுக்கிற முதல் ஆளு யாரு தெரியுமா? அவன் தான் அந்த ருத்ரன். எனக்கு அவனை புடிக்காது. எப்போவும் புடிக்காது.
நிவா!! என அவள் அழுது கரைந்து அழைக்க .
போதும் மீனாட்சி!! நீங்க எனக்கு பெரிய துரோகம் பண்ணிருக்கீங்க!! நான் தோர்த்து போய்ட்டேன் என் வாழ்க்கையில்.. am a looser! அதுவும் அவன் கிட்ட.. உன்னால என்னோட தங்கச்சி வாழ்க்கை போச்சு! என்னோட வாழ்க்கை போச்சு டி! இப்போ நல்லா ஒரு விசயம் புரிஞ்சி போச்சு டி!!
நிவா நான் என்ன சொல்ல வரேன்னு கேளு! என தலுதலுத்த குரலில் வந்தாள் மீனாட்சி.
நிவாஸ்…?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
