Episode 211
இன்பா அனைத்து ரவுடி கும்பல் ஆட்களிடமும் தகவல் சொல்லி இருந்தான். மொத்தம் அந்த நகரில் 5 கும்பல் அது இல்லாமல் திருட்டு கடத்தல் என இருக்கும் அனைத்து தாதாவையும் சந்திக்க ஏற்பாடு செய்து இருந்தான்.
அவனது போலீஸ் ஜீப் நேராக அந்த கடற்கரை ஓரம் சென்றது. அனைவரும் காத்து இருந்தனர். இங்கே வசுமதி விவேகா காணாமல் போன விஷயம் கேள்வி பட்டு நேராக கங்காவை காண அவரது வீட்டுக்கு வந்தார்.
கங்கா அழுது கொண்டு இருக்க வசுமதி அவர் அருகில் சென்றார். மேடம் என்று அழுது கொண்டே எழ அழ வேண்டாம் மா விவேகாவுக்கு எதுவும் ஆகாது என் பையன் அவளை பத்திரமா கூட்டி வருவான் என்று அணைத்து கொண்டார். வெண்பா, தேவகி இருவரும் விஷயம் கேள்வி பட்டு வந்தனர்.
சங்கர், மணி, பரமசிவம், பாலு என நான்கு முக்கிய குழுக்கள் வந்து இருக்க இதில் விடுபட்டது லிங்காவின் குழு தான். இன்பா தன்னுடைய துப்பாக்கியை கையில் எடுத்து கொண்டு லோகேஷிடன் வந்து நின்றான்.
பாலு, சார் இப்போ எதுக்கு வர சொல்லி இருக்கீங்க அந்த அளவுக்கு பெரிய காரியம் எதுவுமே நான்க செய்யவே இல்லையே.. இன்பா, எல்லாரும் வந்தாச்சா என்று அவனை அலட்சியமாக பார்க்க..
சங்கர், லிங்கா மட்டும் இன்னும் வரல என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே லிங்கா அவனது கும்பலுடன் வந்தான்.
இன்பாவின் பார்வை அவனை துளைத்து கொண்டு இருக்க என்ன வேணும் ACP சாருக்கு இப்போ இந்த திடீர் சந்திப்பு எதுக்குன்னு தெரிந்து கொள்ளலாமா…
இன்பா, என்ன ஆளும் கட்சி பக்கம் இருக்கும் தைரியத்தில் பேச்சு சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு போல..
லிங்கா, சார் என் பேச்சு கொஞ்சம் ஆளுமையாக தான் இருக்கும்.. லோகேஷ் இன்பாவுக்கு சைகை காட்டிட சரி என்று பேச ஆரம்பித்தான்.
இன்பா, ம்ம் இப்போ என் வேலையை காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.. என்று சொல்லி அந்த ஏரியா நெட்வொர்க் கட் செய்தனர்.
இன்பா அங்கு இருக்கும் அனைவரையும் ஒரு பார்வை பார்க்க எல்லாம் அவர்களுக்குள் பார்த்து கொண்டனர்.
சார் எதுக்கு வர சொன்னீங்க எங்களுக்கு நிறைய வேலை இருக்கு..
இன்பா கிட்ட தட்ட ஒரு 20 நிமிடம் அப்படியே அவர்களை பார்த்து கொண்டு இருந்தானே தவிர எதுவும் செய்ய வில்லை.
அந்த தாதாக்கல் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள லிங்காவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
லோகேஷ் சிறிது நேரத்தில் கட்டை விரலை காட்ட இன்பா அந்த நெட்வொர்க் ஆன் செய்ய சொல்ல அங்கு இருக்கும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் போன் ரிங் அடிக்க அனைவரும் திடுக்கிட்டு போன் எடுக்க ஹலோ ஹலோ ஹலோ என்று ஒரே கூச்சலாக இருந்தது.
இன்பா அந்த நெட்வொர்க் மீண்டும் ஆஃப் செய்ய சொல்ல..
பரம சிவம், என்ன சார் எங்க வீட்டில் இருந்து போன் வருது என்ன ஆச்சு.. ஹே உனக்குமா ம்ம் எனக்கும் என் பையன் கால் பண்ணி இருக்கான்.
இன்பா, லோகேஷ் ஆன் பண்ணு டா..
உடனே ஆன் செய்ய மீண்டும் போன் வர எடுத்து பேசியவர்களின் முகம் மாறியது.
என்ன சார் எதுக்கு எங்க பசங்களை தூக்கினீங்க..
இன்பா, இப்போ குட்டி சங்கர் தாதா ips, வெட்டு பரம் சிவம், இப்படி படம் எடுக்க போறேன் அதான் உங்க பசங்களை தூக்கி விட்டேன்.
உடனே அவர்கள் அனைவரும் ஷாக் ஆகி முன்னால் வர ஹே பேரு நல்லா இல்ல போலீஸ் படம் எடுக்க போறேன் அதுவும் ரவுடி வாரிஸ வச்சு அப்போ டைட்டீல் மாஸா இருக்கணும் சோ ” போலீசா இல்ல வாரிசா” முடிவு பண்ணி சொல்லுங்க பார்ப்போம்..
பாலு, சார் எங்க பசங்களுக்கு மட்டும் எதுவும் ஆச்சு இந்த ஏரியா மொத்த ரவுடியும் இறக்கி சம்பவம் செய்வோம்..
இன்பா, ஓ இதே இடத்தில் உங்களை கட்டம் கட்டி தூக்கி இருக்க எனக்கு இது தெரியாதா எனக்கு டைம் இல்ல நான் சொல்வதை கேட்டால் எந்த பிரச்னையும் இல்லை.. உங்க வேலையை பார்த்து கொண்டு நீங்க போயிட்டே இருக்கலாம்..
சங்கர், என்ன விஷயம்? எங்க பசங்களுக்கு எதுவும் ஆக கூடாது..
இன்பா, உங்கள் டீம் ல யாரோ ஒருத்தன் இந்த அண்ணா பூங்கா இருக்க ஏரியாவில் ரெண்டு பேரை தூக்கி இருக்கான். எனக்கு ரெண்டு பேரும் இப்போ உடனே எந்த சேதாரமும் இல்லாமல் வேணும்..
பாலு, அது எப்படி நாங்க தான் செய்து இருப்போம் அப்டின்னு நீங்க இப்படி முடிவு எடுக்கலாம்..
இன்பா, டேய் **** என்னை டென்ஷன் பண்ணாதீங்க உங்க பசங்க கூட பொண்ணுங்களையும் தூகட்டுமா..
ஹே ACP என்று சத்தம் பொலக்க அவர்கள் ஒளித்து வைத்து இருந்த துப்பாக்கி எடுத்து நீட்ட..
இன்பா, டேய் **** நான் தான் பேசிட்டு இருக்கேன்ல என்ன சத்தம்..
உங்க பசங்களுக்கு என்ன ஆகும் அப்டின்னு சொல்ல வேண்டாமா..
அவர்கள் தங்களுக்குள் பார்த்து கொள்ள இன்பா உங்களுக்கு இன்னும் 10 நிமிடம் தான் டைம் நான் யாரையும் எதுவும் செய்ய மாட்டேன் எவன் தூக்கினானோ அவன் இப்போ எந்த இடத்தில் இருக்கானோ அதுக்கு பக்கத்தில் இருக்க போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் இறக்கி விட்டு அவங்க ஸ்டேஷன் போயிட்டா நான் யாரையும் எதுவும் செய்ய மாட்டேன்.. இல்ல உங்க வாரிசு எல்லாருக்கும் எதை நினைத்து அந்த பையனை தூக்கிட்டு போனீர்களோ அதை செய்து விடுவேன்…
பரம சிவம், என்ன சார் பிளான் நாங்க எதுவும் பண்ணல சார்..
இன்பா, உங்க பசங்க கிட்ட இருக்க கிட்னி ஹார்ட் எல்லாம் எடுத்து விட்டு பிராய்லர் கோழியை வேகமா வளர போடும் ஊசியை போட்டு விட்டு விடுவேன் அப்புறம் உங்க பசங்க எல்லாம் ரெக்க பட்டையை அடித்து கொண்டு போக வேண்டியது தான் எப்படி வசதி..
சரி இப்போ எனக்கு டைம் இல்ல இன்னும் 15 நிமிடம் தான் சீக்கிரம் வேலையை முடிஞ்சா சரி இல்ல இப்போவே கால் பண்ணட்டா! அனைவருககும் யாரு செய்து இருப்பார்கள் என்று கேள்வி கேட்டு கொண்டு ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டி கொண்டு இருக்க.. .
லோகேஷ், இது சரி வராது இன்பா நம்ம அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது தான்..
சார் சார் இருங்க என்று யார் யாருக்கோ போன் செய்ய லிங்கா ஜெகாவுக்கு கால் செய்தான்.
ஜேஹா இங்கே ஒவ்வொரு அடிகளாக விவேகாவை நோக்கி நெருங்க விவேகா கண்களில் கண்ணீருடன் ராகுலை இறுக்கமாக பிடித்து கொண்டு இருந்தாள். அவன் அவள் அருகில் சென்று முகவாயை பற்ற ராகுல் விவேகா வை பிடித்ததும் அவனிடம் இருந்த மொத்த பலத்தையும் திரட்டி அவன் மூக்கில் குத்து விட..
ஜெகா, ஹே **** என்னடா உன்னை போட்டு தள்ள முடியாமல் போச்சே என்று அவனை எட்டி உதைக்க விவேகா, ஹே பிளீஸ் அவனை எதுவும் செய்யாத விட்டு விடு..
ம்ம் அப்படியா கண்ணு குட்டி சும்மா சொல்ல கூடாது டி சும்மா சின்னதா இருந்தாலும் உன் முகம் கண்ணு போதை தான் டி என்று சொல்லி கொண்டே மீண்டும் நெருங்கினான். விவேகா சுற்றிலும் பார்க்க அவர்களை சுற்றி அடியாட்கள் முகமூடியுடன் நின்று கொண்டு இருந்தனர்.
அந்த இடம் இருட்டாக இருக்க ராகுல் விவேகா எனக்கு பயமா இருக்கு.. ஹே அழ கூடாது செல்லம் நான் இருக்கேன் உனக்கு எதுவும் ஆகாது கடவுள் கிட்ட பிரே பண்ணிக்கோ செல்லம் என்று சொல்லி கொண்டே பின்னால் நகர்ந்தாள்.
ஜெகா, ஓ வேண்டிக்கோ நான் தான் டி உனக்கு கடவுள் எனக்கு சேவை செய்தால் உன்னை விட யோசிப்பேன் டி என்று சொல்லி கொண்டே நெருங்க விவேகா பின்னால் நகர்ந்து கொண்டே இருந்தாள்.
டேய் நட்டு என்று அவன் கத்த பாஸ்.. அந்த பையனை இவளை விட்டு பிரிங்க அவளை தூக்கி கொண்டு நான் காருக்கு போகனும்.. விவேகா மனம் கடவுளே இப்போவே எனக்கு செத்து விட வேண்டும் போல் இருக்கே ராகவ் ராகவ் என்று நினைத்து கதறி அழ..
ஜெகா, ஹே என்ன இது பாப்பா அழ கூடாது ஒன்னும் இல்ல நான் இருக்கேன் மாமா கிட்ட வந்திடு பார்ப்போம்..
விவேகா, அப்பா பயமா இருக்கு பிளீஸ் ராகவ வர வைங்க என்று அழுது கொண்டே அவள் நான் வர மாட்டேன் எங்களை விட்டு விடு பிளீஸ் பிளீஸ் என்று அவள் கெஞ்ச ஹே வாடி என்று அவள் துப்பட்டாவை பிடித்து தூக்கி எறிந்தான்.
நட்டு ராகுலை பிடித்து கொள்ள விவேகா இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டே ஓட பார்க்க…
ஜெகா அந்த காரில் அமர்ந்து கொண்டு செல்லம் எங்கே போற சரி போ டேய் கன் எடுத்து வந்து இதோ இவனை போடுங்க டா என்று ராகுலை காட்ட விவேகா அப்படியே நின்றாள்.
ஹே பிளீஸ் அவனை விடு டா அவன் குழந்தை மாதிரி நீங்க எல்லாம் மனுசங்க தானா என்று கதறி அழ..
என்ன செல்லம் என்னை தப்பா நினைக்க வேண்டாம் டி எனக்கு இங்கே வலிக்குது என்று அருகில் நெருங்கியவன் நீ ஒத்துழைத்தால் அவனை ஒன்னும் பண்ண மாட்டேன் எப்படி வசதி என்று அவளை அணைக்க வர..
அந்த கூட்டத்தில் இருக்கும் அனைவரின் போன்களும் ஒரே நேரத்தில் அடிக்க… ஜெகா, டேய்***” என்று கத்தி கொண்டே போனை எடுத்து காதில் வைக்க லிங்கா, ஜெகா நான் சொல்றத கேளு அந்த ACP இங்கே எல்லாரையும் நம்மல போட ரெடி பண்ணி விட்டான் டா இன்னும் 10 நிமிடத்தில் நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது நீ இருக்க இடத்துக்கு பக்கத்தில இருக்க போலீஸ் ஸ்டேஷன் கிட்ட அந்த ரெண்டு பேரையும் விட்டு நடையை கட்டி விடு உனக்கு உடனே மும்பைக்கு பிளைட் டிக்கெட் போடுறேன் கொஞ்ச நாளைக்கு அங்கே இரு டா..
ஜெகா, முடியாதுன்னு சொன்னா என்ன செய்வ..
லிங்கா, ஓ இப்படி பேசும் அளவுக்கு தைரியம் வந்து விட்டதா கொஞ்சம் உன்னை சுற்றி பாரு டா..
என்ன லிங்கா சொல்ற…
லிங்கா, உன் இடத்துக்கு இப்போ போட்டி வந்து விட்டது நான் ம்ம் என்று ஒரு வார்த்தை சொன்னால் நட்டு ராஜா உன்னை சம்பவம் பண்ணிட்டு உன் இடத்துக்கு வந்து விடுவான் எப்படி வசதி..
ஜெகா, ச்ச **** என்று கத்தி விட்டு சரி நான் செய்து விடுகிறேன் என்று சொல்லி போன் வைத்தான்.
விவேகா அதே இடத்தில் கண்களில் கண்ணீருடன் நின்று கொண்டு இருக்க ஜெகா, டேய் ரெண்டு பேரையும் காரில் ஏற்று என்று விவேகாவை தின்பது போல் ஒரு பார்வை பார்க்க அவள் கூனி குறுகி போனாள்.
சரியாக போலீஸ் ஸ்டேஷன் ஒரு பத்து அடி இருக்கும் தொலைவில் அவளை இறக்கி விட்டு விவேகாவை அருகில் இழுத்து அவள் வாசனையை நுகர்ந்து கொண்டவன் மிஸ் ஆகிட்ட டி ஆனால் உன்னை விட மாட்டேன் என்று சொல்லி விட்டு காரை எடுக்க விவேகா வழியும் கண்களோடு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்றாள்.
உடனே லோகேஷ்க்கு போன் வர இங்கே லிங்காவுக்கும் போன் வந்தது. அடுத்த நொடி இன்பா, ம்ம் உங்க பசங்க எல்லாம் உங்க இடத்தில் தான் இருக்காங்க இனி இந்த மாதிரி என் கிட்ட மோதினால் நான் சொன்னதை செய்து விடுவேன் என்று சொல்லி கொண்டே ஜீப்பில் அவன் ஏற
லிங்கா, உடனே நட்டுவிருகு கால் செய்தான். டேய் ஜெகாவை அந்த பேட்டை சுடுகாட்டு பக்கம் சம்பவம் பண்ணிட்டு கால் பண்ணு.. நட்டு, தலைவா என்ன ஆச்சு.. லிங்கா, டேய் மடையா *** இவனை தேடி தான் இப்போ அந்த ACP வரான் நம்ம பேரை சொல்லி விட்டால் மொத்தமா கைலாசம் போக கூட விட மாட்டான் அந்த இன்பா உயிரோட புதைத்து விடுவான் டா.. சீக்கிரம் பண்ணிட்டு கால் பண்ணு.. என்று லிங்கா போன் வைக்க..
இங்கே விவேகா ராகுல் சேப் என்று வருனுக்கு தகவல் சொல்ல வசுமதி, நான் சொன்னேன் தானே இப்போ பாரு மா விவேகா பத்திரமா வந்து விடுவாள்.. செல்வம், மேடம் சொல்வதை போல் சின்ன குட்டி சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடுவாள். என்று சமாதானம் செய்ய ஆதி கங்கா அருகில் போய் அமர்ந்து கொண்டான். வெண்பா, தேவகி என அனைவரும் அவளை தேற்றினர்.
கங்கா, மித்ரன் யெஸ் மேம்.. இந்த நியூஸ் எந்த ஒரு மீடியாவிலும் வர கூடாது அதுக்கு என்ன செய்யனுமோ அதை பண்ணுங்க இதில் ஒரு பொண்ணு வாழ்க்கை அடங்கி இருக்கு.. ஓகே என்று சொல்லி வருண், மித்ரன் இருவரும் அந்த வேளையில் இறங்கினர்.
லோகேஷ், இன்பா நீ சொன்னதை போல் அது லிங்கா தான் டா… இன்பா, இப்போ எனக்கு அந்த ஆள் வேண்டும் டா.. மச்சி அது ஜெகா டா.. ம்ம் அவன் இப்போ எந்த அந்த இடத்தை விட்டு எங்கேயும் போக விடாத செக் போஸ்ட் செக்யூரிட்டி அலாட் பண்ணு எனக்கு அவன் உயிரோட வேணும்.. என்று சொல்ல..
லோகேஷ் எதுவும் பேசாமல் இன்பா சொன்னதை அப்படியே செய்தான். அடுத்த அரை மணி நேரத்தில் விவேகா, ராகுல் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் வந்து விட அங்கு உள்ள காவலர்கள் அனைவரும் சல்யூட் செய்து நின்றனர்.
அந்த SI, சார் அவங்க ரெண்டு பேரும் உள்ளே இருக்காங்க.. கூடவே லேடிஸ் கான்ஸ்டபிள் இருக்காங்க என்று நடந்து கொண்டே பதில் அளிக்க இன்பா,எந்த பதிலும் சொல்ல வில்லை அவனுக்கு இப்பொழுது ஒன்று மட்டுமே வேண்டும் அவள் வேண்டும் விவேகா வேண்டும் இது மட்டுமே நினைவில் இருக்க அவன் உள்ளே வந்த அடுத்த நொடி அங்கு இருக்கும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்.
அந்த SI , சார் நீங்க உள்ளே போங்க நான்… என்று பேச வர திரும்பி ஒரே ஒரு பார்வை மட்டும் தான் பார்த்தான். அந்த SI வாயை மூடி கொண்டு சென்று விட இன்பா டக் டக் என்று காலடி சத்தத்துடன் அவள் பின்னால் நிற்க விவேகா ராகுலை அணைத்து கொண்டு இருந்தவள் மெதுவாக கண்களை திறந்து பார்க்க இன்பா அவள் முன் காக்கி உடையில் கம்பீரமாக நிற்க அவள் ரா.. ராகவ்.. என்று கண்களில் கண்ணீருடன் ஓடி சென்று பாயிந்து கட்டி கொள்ள அவள் உடல் எல்லாம் நடுங்கியது.
விவேகா,நீ நீ மட்டும் வராமல் இருந்து இருந்தால் நான் செத்து போயிருப்பேன் டா அவன்! அவன்! என்னை என்று அழுது கொண்டே அவள் திக்கி திணற என்னால் உன்னை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. என்று அவன் நெஞ்சில் புதைத்து கொண்டு அழ
இன்பா, என்னுடையவளை தூக்க எவனுக்கு தைரியம் இருக்கு!பேபி நான் இருக்கேன் டி யாரும் உன் மூச்சு காற்றை கூட நெருங்க முடியாது டி.. என்று அவன் அவள் இதழில் முத்தமிட விவேகா அவனை முகம் எல்லாம் முத்தமிட்டாள். விவேகா இன்பாவை கட்டி கொள்வதை பார்த்த ராகுல் அவனும் வந்து இன்பாவை கட்டி கொண்டான்.
லோகேஷ் ஜெகாவை வளைத்து பிடிக்க மற்ற முகமூடி அணிந்த ஆட்கள் எல்லாம் தப்பித்து ஓடி விட ஜெகா வசமாக மாட்டி கொண்டான். அவனை அங்கு அருகில் உள்ள பேட்டையில் உள்ள குடோனுக்கு அழைத்து சென்றனர்.
இங்கே இன்பா அவளின் இதழில் ஒரு ஆழ்ந்த முத்தம் கொடுக்க விவேகா அவனை தடுக்க வில்லை..
பின் இன்பா அவளை அணைத்து பேபி பெட்ல நான் தான் டி வின் பண்ணேன்.. விவேகா அழுது கொண்டே அவனை பார்த்து முறைத்து இப்போ இப்போ இது ரொம்ப முக்கியமா…
இன்பா, உன்னை கோப படுத்தி பார்க்கனும் போல் ஆசையா இருக்கு வேற ஒன்னும் இல்ல
ஆனால் நீ தான் அழு மூஞ்சி அஞ்சலி பாப்பா மாதிரி இருக்க.. ராகவ் இந்த கண்ணீர் நிற்க மாட்டிங்குது என்று துடைத்து கொண்டே இருந்தவள் ராகுல் அனைத்து கொண்டு இருப்பது நினைவு வர
விவேகா, சரி என்னை கொஞ்சம் விடு நான் தள்ளி நிற்கிறேன்..
இன்பா, என்ன ஆச்சு என்று இன்னும் இறுக்கி அணைக்க.. விவேகா, ஹே ராகுல் இருக்கான் டா… அவனும் தான் பேபி என்னை கட்டி கொண்டு இருக்கான் நம்ப வேலையை நம்ப பார்ப்போம் டி என்று மீண்டும் இதழ் நோக்கி குனிய அந்த நேரம் லோகேஷ் போன் செய்தான்.
ம்ம் என்ன ஆச்சு..
லோகேஷ், நீ வந்தால் கச்சேரி ஆரம்பம் மச்சி..
ம்ம் இதோ இப்போவே வரேன் என்று சொல்லி விட்டு அவள் இதழில் ஒற்றி எடுத்தான்.
விவேகா துப்பட்டா இல்லாமல் இருப்பதை பார்த்து விட்டு அவனது காக்கி சட்டையை கலட்டி அவளுக்கு போட கொடுத்தான். ஹே வேண்டாம் நான் முடியை முன்னால் போட்டு கொள்கிறேன்.
பேபி வியர் பண்ணு டி … என்று கர்ஜனை செய்ய உடனே எதுவும் சொல்லாமல் போட்டு கொண்டாள். அதில் இன்பராகவன் என்று பேட்ச் அதை வருடி பார்த்தாள்.
பின் இன்பா அவளின் கையை பிடித்து கொண்டு வெளியே வந்தான்.
அடுத்து என்ன நடக்கும்..
தொடரும்..
இந்த episode உங்களுக்கு பிடித்து இருந்ததா கதையின் போக்கு எப்படி இருக்கு இந்த வேகம் போதுமா…
Comment pannunga அப்படியே வெண்ணிலா ஸ்டோரி படித்து விட்டு கமென்ட்ட போட்டு விடுங்க..
Episode 212
( இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனையே மீண்டும் இதில் வரும் அனைத்து கதாபாத்திரம் எல்லாம் வெறும் கற்பனை கதையே)
இன்பா, பேபி வியர் பண்ணு டி … என்று கர்ஜனை செய்ய உடனே எதுவும் சொல்லாமல் போட்டு கொண்டாள். அதில் இன்பராகவன் என்று பேட்ச் அதை வருடி பார்த்தாள்.
இன்பா,நீ என் நேமை டச் பண்ண வேண்டாம் அதுக்கு பதிலா என்னை டச் பண்ணலாமே…
ம்ம் பன்றேனே ஆனால் இங்கே ராகுல் இருக்கானே..
பேபி என்ன டி இன்னிக்கி ஒரு மாதிரி இருக்க இது டார்ஜ்லிங் தானா..
விவேகா நாக்கை கடித்து கொண்டு ஹான் சீக்கிரம் வா போலாம் டைம் ஆகுது…
பின் இன்பா அவளின் கையை பிடித்து கொண்டு வெளியே வந்தான். அங்கு இருக்கும் அனைவரும் இன்பாவின் முகத்தையும் விவேகாவையும் மாறி மாறி பார்க்க..
விவேகா, சார் என் கையை கொஞ்சம் விடுங்க என்று சுற்றியும் அந்த காவலர்களை பார்த்து கொண்டே சொல்ல..
இன்பா அவளின் தோல் மேல் கைகளை போட்டு கொண்டு நடந்து வந்தான். விவேகா, டேய் ராகவ் இவங்க போய் வசுமதி மேம் கிட்டயும் வருண் கிட்டயும் சொன்னால் நான் அவ்ளோ தான் நீ முதலில் தள்ளி நட..
ம்ம் முடியாது போய் சொல்லட்டும் அப்போ தான் சீக்கிரம் உன்னை என் வீட்டுக்கு தூக்கிட்டு போக முடியும்..
அந்த லேடிஸ் கான்ஸ்டபிள் இருவரும் இன்பாவை பார்த்து கொண்டு இருக்க..
விவேகா, டேய் இந்த பொண்ணுங்க ரெண்டும் உன்னை பார்க்கனும் அப்டின்னு பிளான் பண்ணி தானே இந்த ஷர்ட்டை எனக்கு கலட்டி கொடுத்து ஃப்ரீ ஷோ காட்டிட்டு இருக்க..
இன்பா, ஹே என்ன டி நான் எது பண்ணாலும் அதை தப்பா கொண்டு போய் முடிக்கிற..
ம்ம் நல்லா ஹீரோயிசம் பண்ணு டா ஆனால் எனக்கு நீ எப்பொதும் சீரோ தான்…
இன்பா, அவளின் மேல் உள்ள பிடியை இருக்கி ம்ம் நான் உன் பக்கத்தில் 10,100, 1000… ஜீரோ வாக சேர சேர உன் இடம் மதிப்பு கூடிக்கிட்டே போகும் டி.. என்று சிரித்து அதுவும் மிகவும் மெதுவாக பேசி கொண்டே வர.. ராகுலை ஒரு பக்கம் அணைத்து கொண்டு அவன் உதட்டில் வழியும் எட்சிலை தான் கை குட்டை கொண்டு துடைத்து விட்டான்.
இன்பாவின் இந்த அவதாரத்தை பார்த்து ஒரு பக்கம் ஆச்சரியம் அதிர்ச்சி இப்பொழுது தான் அந்த SI மற்றும் அங்கு இருக்கும் அனைவருமக்கும் இன்பா இந்த கிட்நாப் விஷயத்தில் எதற்கு இவ்வளவு தீவிரம் காட்டினான் என்று புரிந்தது. அனைவரும் முகத்தில் ஒரு சிறிய சிரிப்புடன் அவர்கள் இருவரையும் பார்க்க..
இன்பா, மிஸ்டர் முருகவேல்… சார் என்று அருகில் வந்து சல்யூட் அடித்து நின்றான். பேட்டை பக்கத்தில் இருக்க குடோனுக்கு டூல் பாக்ஸ் எடுத்து கிட்டு வந்திடுங்க என்று சொல்லி விட்டு அவளுக்கு ஜீப் கதவை திறந்து விட்டவன் ராகுலுக்கு சாக்லேட் வாங்கு கொடுத்து விட்டு இருவரையும் அழைத்து சென்றான்.
இரவு மணி 7.45 ஆனது.. அங்கே குடோனில் ஜெகாவை கை கால் கட்டி வைத்து விட்டு லோகேஷ் காத்து கொண்டு இருக்க இன்பா விவேகா, ராகுலுடன் வந்தான்.
பேபி இங்கேயே வெயிட் பண்ணு நான் உடனே வருகிறேன் என்று போனை பார்த்து கொண்டே இறங்கி நிற்க அதற்குள் முருகவேல் டூல் கிட் எடுத்து கொண்டு வந்தார்.
சார் என்று அவர் வந்து நிற்க..
இன்பா, இவளோ நேரமா வேகம் பத்தாது மிஸ்டர்..
அந்த si, சார் ஸாரி சார்..
வாட் சாரி என்று சொல்லி அவர் கைகளில் இருக்கும் டூல் கிட்டை உள்ளே எடுத்து போக சொல்ல முருகவேல் அதை கொண்டு சென்று லோகேஷ் நிற்கும் இடத்தில வைத்து விட்டு வர அதற்கு முன் ஏற்கனவே சாதனா, கீர்த்தி இருவரும் இருக்க அவர்களுக்கு இன்பா கால் செய்து வெளியே வர சொன்னான்.
இன்பா, சாதனா நீங்க ரெண்டு பேரும் இங்கே இவங்க பக்கத்தில் இருங்க நான் சொல்லும் போது இவளை உள்ளே அனுப்பணும்..
ம்ம் ஓகே சார் என்று சொல்லி அவர்கள் விவேகா பக்கத்தில் நிற்க..
இன்பா உள்ளே சென்றான். முருகவேல் ஓரமாக நின்று கொண்டு இருக்க.. ஹலோ மிஸ்டர் இங்கே நின்று கொண்டு என்ன பண்றீங்க..
சார்..
ம்ம் உள்ளே வாங்க என்று சொல்ல அவன் முகத்தை துடைத்து கொண்டே வேகமாக இன்பாவின் பின்னால் சென்றான். சாதனா, விவேகா அண்ணாவுக்கு கால் பண்ணி தரேன் பேசுகிறாயா..
ம்ம் மேம் என்று சொல்ல அவள் வீட்டில் எல்லோரிடமும் பேசி கொண்டு இருந்தாள்.
இன்பா உள்ளே சென்று முருகவேலை பார்க்க.. லோகேஷ், ம்ம் அதை ஓபன் பண்ணுங்க மிஸ்டர்.. ஜெகா, டேய் என்னடா பண்ண போறீங்க நான் யாருன்னு தெரியும் தானே ஆளும் கட்சி ஆளு..
இன்பா, ஓ இது வொர்த் இல்லாத நியூஸ் ஆல்ரெடி உன்னை போட சொல்லி லிங்கா ஆள அனுப்பி வைத்து இருக்கான் இப்போ நான் உன்னை வெளியே விட்டாலும் நீ க்ளோஸ் உன்னை க்ளோஸ் பண்ணாமல் அவன் ஓய மாட்டான்..
ஜெகா இதை கேட்டு ஷாக் ஆகி பார்க்க.. இன்பா அந்த டூல் பாக்ஸ்ல இருந்து வெட்டும் பொருட்கள் என சில வற்றை எடுத்து கொண்டு ஜெகா அருகில் வர என்னை விட்டு விடு உனக்கு எல்லா தகவலும் நான் சொல்றேன் பிளீஸ் நான் அப்ரூவரா மாறி விடுகிறேன்..
இன்பா கன்னக்குளி தெரிய சிரித்து விட்டு அப்ரூவராக மாற போகிறாயா! எந்த கேஸ்க்கு மாற போற?
ஜெகா படபடத்து கொண்டே 14 என்று பதில் சொல்ல இன்பா காதை தேய்த்து கொண்டே ஓ இந்த கேஸ் பற்றி கேட்க தான் உன்னை தூக்கிட்டு வந்தேன்னு உனக்கு தோணுதா ம்ம் அதுவும் சரி தான் ஆனால் என்று இன்பா நிறுத்த..
அவன் படபடத்து கொண்டே இன்பாவை பார்க்க இன்பா, நீ என்று அருகில் அவன் விரல் நகத்தை அந்த இடுக்கி கொண்டு பிய்த்து எடுக்க.. ஜெகா துள்ளினான். வேண்டாம் ACP என்னை விட்டு விடு என்று அவன் துள்ள..
இன்பா அவன் அருகில் வந்து உனக்கு எவ்ளோ தைரியம் டா இந்த கை தானே அவள் கையை பிடித்தது. என்று சொல்லி பத்து விரலிலும் நகத்தை பிடுங்கி எடுக்க அவன் கத்தும் சத்தம் வெளியே ராகுலுக்கு கேட்க அவன் பயந்து விவேகாவை அணைத்து கொள்ள
விவேகா, மேம் என்ன ஆச்சு..
சாதனா, அது ஒன்னும் இல்ல மா நீ கண்டுக்காத விடு என்று சொன்னாள்.
அவன் பயத்தில் ஒன்னுக்கே வந்து விட்டது.
இன்பா, “ஒரு கெட்டவன் நல்லவன் ஆனால் நாடு தாங்கும் அவனை வரவேற்கும் ஆனால் நல்லவன் கெட்டவன் ஆனால் நாடு தாங்குமா.. இதுள் டிவிஸ்ட்டு என்னான்னு கேட்டா நான் நல்லவனும் இல்ல கெட்டவனும் இல்ல ரொம்ப மோசமானவன்” என்று சொல்லி அவன் மூக்கில் சுத்தியல் எடுத்து அடித்தான்.
இன்பா, லோகேஷ்… என்று கத்த..
லோகேஷ் சிரித்து கொண்டே கடைசியில இன்பாவையும் சுத்தியல் எடுக்க வச்சுட்டாங்களே.. என்று கிண்டல் செய்ய..
ஜெகாவின் தலை தொங்கி கொண்டு இருக்க
இன்பா, டேய் அவளை உள்ளே கூட்டி வா டா.. யாரு மச்சி! வருண் தங்கையை கூட்டி வாடா..
லோகேஷ், எதுக்கு டா..
டேய் *** கூட்டி வா டா..
க்கும் இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல என்று சொல்லி விட்டு வெளியே சென்று..
லோகேஷ், பாப்பா.. விவேகா யாரோ என்பதை போல் சாதனாவிடம் பேசி கொண்டு இருக்க..
லோகேஷ், பாப்பா உன்னை தான்.. விவேகா திடுக்கிட்டு நானா! ம்ம் நீ தான் உன்னை இன்பா சாரு வர சொன்னாரு போவோமா!
ராகுல், விவேகா எங்கே போற..
இரு ராகுல் டார்லிங் நான் போயிட்டு உடனே வரேன்..
விவேகா அவனுடன் உள்ளே செல்ல அங்கே ஜெகாவை கட்டி வைத்து இருக்க அவன் அப்படியும் இப்படியும் பிரண்டு கொண்டு நிற்க முடியாமல் சிரம பட
லோகேஷ், மச்சி வந்து விட்டாள் டா.. என்று விவேகா வை காட்ட அவளின் முக வெளிப்பாடு குப்பன்று வியர்த்து போக ஜெகாவை ஒரு வித பயத்துடன் பார்க்க..
(இந்த கதையில் வரும் அனைத்தும் என்னுடைய கற்பனை மட்டுமே)
லோகேஷ், பாப்பா போ மா.. அவள் பயந்து கொண்டு அங்கேயே நிற்க இன்பா பேபி வாட் ஹாப்பன் கம் கம்..
லோகேஷ் இதை கேட்டதும் அதிர்ச்சி ஆகி என்ன பேபி யா!
இன்பா அவனை கண்டு கொள்ளாமல் விவேகா அருகில் சென்று அவள் கையை பிடிக்க ராக! ராகவ்! அவன்!அவன்! .. என்று திக்கி திணற பேச..
லோகேஷ், ராகவ் வா!..
அங்கே இன்னொரு ஆளும் இதை எல்லாம் உறைந்து போய் பார்த்து கொண்டு இருந்தான் வேறு யார் முருக வேல் தான்.. அதே இடத்தில் சிலையாக இருந்தான்.
விவேகாவை அணைப்பது போல் கூட்டி வந்து அவன் பேன்ட் ல இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து அவளிடம் நீட்டினான்.
லோகேஷ், என்ன டா நீ ஷாக் மேல ஷாக் கொடுக்குற.. இப்போ என்ன பண்ண போற…
இன்பா, ஒன்னும் இல்ல விவேகாவுக்கு கொஞ்சம் பிராக்டிஸ் தர போறேன் டா.. ஜெகா மெதுவாக கண்களை திறக்க அங்கே விவேகாவை பார்த்ததும் முழுதாக விழிக்க..
விவேகா இன்பாவின் நெஞ்ச அணைத்து கொண்டாள். பேபி இங்கே பாரு என்னை பாரு நான் இருக்கேன் என்று சொல்லி கையில் கன் வைத்து லோட் செய்தவன்.
இன்பா, ம்ம் சொல்லு எங்கே சுடலாம்?
என்ன சொல்ற ராகவ்?
ம்ம் நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..
ஜெகா அவளின் மேல் இருந்து பார்வையை விலக்காமல் வழியும் இரத்தத்துடன் பார்க்க..
விவேகா, அவன் என் முடியை பிடித்து என்னை விட மாட்டேன் அப்டின்னு சொன்னான் ராகவ் அப் அப்புறம் என் பக்கத்தில் என்று நடுங்கி கொண்டே அவள் சொல்ல..
இன்பா, ஓ இப்படி வேற பேசி இருக்கானா!
ஜெகாவுக்கு இப்பொழுது தான் இன்பா ஏன் இப்படி செய்கிறான் என்று புரிந்தது. எல்லாம் இவளுக்காக தான் செய்து இருக்கிறான்.
அந்த நேரத்தில் ஜெகா சிரிக்க..
லோகேஷ், ம்ம் கண்டு பிடித்து விட்டான் மன்னா என்று இன்பாவிடம் சொல்ல
இன்பா, “இனி எந்த பயனும் இல்லை”என்று சொல்லி பேபி இங்கே பாரு இப்போ உன்னோட இலக்கு அவன் தான் இனி தைரியமா இருக்கணும் என்று சொல்லி விவேகாவின் கையை பிடித்து ஜெகாவின் காலில் சுட அவன் கத்த கூட உடலில் தெம்பு இல்லை.. அந்த சத்தத்தில் விவேகா மிரண்டு அவனை அணைத்துக் கொண்டாள்.
இன்பா, சரி பேபி ஃபினிசிங் டச் நான் பண்ணிக்கிறேன் இப்போ வெளியே போய் வெயிட் பண்ணுங்க..
இன்பா, மிஸ்டர் முருக வேல் என்று ஒரு கர்ஜனை.. சார்.. என்று அவன் முன்னே வர..
ம்ம் இந்த பொண்ணை ஜீப் கிட்ட கூட்டி போங்க. யெஸ் சார் என்று சல்யூட் செய்து அவன் மேடம் வாங்க போலாம் என்று கூப்பிட..
ம்ம் நீ போ பேபி நான் வரேன் என்று ஒற்றை கண் அடிக்க..
லோகேஷ், டேய் இந்த ரணகலத்தில் கூட உனக்கு குதுகலம் கேட்குது.
விவேகா முருக வேல் கூட வெளியே சென்றாள்.
ஜெகா, ம்ம் உன்னை நான் ரொம்ப சாதாரணமா நினைத்து விட்டேன் ஆனால் நீ என்று திணறி பதில் சொல்ல..
ம்ம் நீ உயிரோடு இருப்பதே வேஸ்ட் பட் நீ உயிரோடு இருப்ப ஆனால் என்று ஒரு கோர புன்னகை சிந்த..
ஜெகா, வேண்டாம் பிளீஸ் என்னை கொன்று விடு..
இன்பா, வேண்டாம் டா உன்னை ஒரே முறை சுட்டு கொள்கிறேன் என்று அவன் இன்னொரு காலில் சுட அவன் மயக்க நிலைக்கு சென்றான்.
லோகேஷ், எத்தனை வருஷமா பாப்பா பின்னாடி சுத்தற
டேய் ட்ரூ லவ் யூ னோ?…
லோகேஷ், டேய் பதில் சொல்லு டா..
அது இப்போ 3 வருஷம் ஆக போகுது..
ம்ம் பார்த்தேன் பார்த்தேன் இதில் நீ பேபி வேற , அவள் ராகவ்ன்னு கொஞ்சுறா..
இன்பா, எனக்கு அவள் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண நேரம் இல்ல டா அதான் ரெண்டு பேரும் சேர்ந்து இப்போ டைம் ஸ்பென்ட் பண்ணோம்..
லோகேஷ், தோஷ சுட தெரியாத அவளுக்கு கன் எடுத்து ஆளை சுட சொல்லி கொடுத்திட்டு இருந்தியே அப்போவே தெரியுது டா..
என்ன தெரியுது..
நல்லா பண்ற டா லவ்வு இது வருணுக்கு தெரிந்தால் எப்படி இருக்கும்..
இன்பா, அவனுக்கும் சொல்லி கொடுப்பேன் டா..
லோகேஷ், என்ன..
வேற என்ன சுட தான் சொல்லி கொடுப்பேன் அட நீ வெற மச்சி அதை நினைத்தால் தான் டா பயமா இருக்கு இந்த வருண், என் மம்மி, வருணோட மாமா இவங்க எல்லார் கிட்டயும் எப்படி ஓபன் பண்ணி அவளை தூக்க போறேன்னு ஒன்னும் புரியல டா..
லோகேஷ், அது எல்லாம் சப்பை மேட்டர் சால்ட் வாட்டர் மச்சி உன்னால் முடியும் டா.. என்று பேசி கொண்டே வெளியே வந்தார்கள்..
விவேகா, இன்பாவை பார்த்து சார் வீட்டுக்கு கொண்டு விட்டு விடுங்கள்..
லோகேஷ், என்னா நடிப்பு பாப்பா பின்ற போ நீ இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்ல பாப்பா..
விவேகா, சார் என்ன பாப்பா சொல்றீங்க..
லோகேஷ், பேபியை விட இது நல்லா தானே இருக்கு..
இன்பா, டேய் கொஞ்சம் அமைதியா இரு டா..
லோகேஷ், சரி அவனை என்ன பண்றது.
இன்பா, மிஸ்டர் gh க்கு கால் பண்ணி இருக்கேன் அங்கே எனக்கு தெரிந்த டாக்டர் வருவாங்க அவங்க வேலையை முடித்து போனதும் எனக்கு கால் பண்ணி சொல்லுங்க என்று முருக வேல் கிட்ட சொல்ல ஓகே சார்..
மேலும் இன்பா, லோகேஷ் நீ கொஞ்சம் எல்லாம் இங்கே பார்த்து விட்டு கிளம்பு டா எனக்கு முக்கிய வேலை இருக்கு..
ம்ம் என்ன வேலை..
டேய் டைம் ஸ்பென்ட் பண்ணனும் டா..
ம்ம் போய் பண்ணு போ என்று வேறு பக்கம் பார்த்து சொல்ல…
விவேகா, சார்.. சார்.. .
என்ன பாப்பா..
வருண் கிட்ட இதை பற்றி சொல்லி விடாதீங்க..
என்ன சொல்ல கூடாது…
இன்பா, ஹே அவன் சொல்ல மாட்டான் நீ வாடி..
லோகேஷ், மச்சி ஒரு வேளை சொல்லி விட்டால் என்ன செய்வ..
உன்னையும் கூட்டு சேர்த்து விடுவேன்..
நான் சொல்ல மாட்டேன் போ பாப்பா பத்திரமா போயிட்டு வா..
அதன் பின் இன்பா அவளையும், ராகுலையும் அழைத்து சென்றான்.
விவேகா, ராகவ்..
ம்ம் இந்த ஷர்ட் கழட்டிடட்டுமா யாரும் எதுவும் நினைப்பாங்க டா..
இன்பா அவளை முறைக்க..
சரி சரி நான் கழட்ட வில்லை போதுமா… விவேகா சுற்றிலும் பார்த்து கொண்டே வந்த விவேகா டைம் என்ன? என்று அவனுடைய போனை எடுத்து பார்க்க இப்போ 9.00 ஆகிட..
ஹே மணி 9.00 ஆகி போச்சு அம்மா திட்டுவாங்க சீக்கிரம் வீட்டில் விடு..
இன்பா, உன்னை நான் ஒன்னும் கூட்டி வரல டி கிட்நெப் பண்ணிட்டு போயிருக்காங்க நினைவு இருக்கா..
அட ஆமா என்று ஒரு நிமிடம் அவள் உடல் நடுங்க இன்பா, லூசு பேபி பயம் வேண்டாம் நான் இருக்கேன் அவன் மேல பயம் போகனும் அப்டின்னு தான் உன்னை சுட சொன்னேன்.
ராகுல், விவேகா பூவா..
இரு டார்லிங் வீட்டுக்கு போய் ஜாணு கூட சாப்பிடலாம்..
இன்பா, டின்னர் போலாமா..
ஹே வேண்டாம் நீ வீட்டில் விடு டா என்று சொல்ல
இன்பா, சரி இவளோ ஹீரோயிசம் பண்ணி இருக்கேன் எனக்கு என்ன தர போற..
விவேகா, என்ன வேணும் உனக்கு சொல்லு..
இன்பா, ஐ வான்ட் யூ பேபி.. இந்த வார்த்தையை கேட்டதும் அவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் வேறு புறம் திரும்பி கொள்ள..
இன்பா தன் தலையை கோதி கொண்டே அவளை பார்க்க அவள் இவன் பக்கம் திரும்பவே இல்லை..
இன்பா, நான் fun பண்ணேன் டி சும்மா..
விவேகா, ஓ நான் கூட பயந்து போய் விட்டேன் டா என்று அவள் நார்மலாக பேச ஆரம்பிக்க ..
இன்பா, இப்போதைக்கு நீ வேணும் அதுக்கு அப்புறம் பேபி வேணும்..
விவேகா மீண்டும் ஷாக் ஆகி பார்க்க..
இன்பா, இது fun இல்லை ஐ ம் சீரியஸ் லி டாக்கிங் டூ யூ..
அவள் மீண்டும் வேறு புறம் திரும்பி கொள்ள இன்பா, இது விளையாட்டு இல்ல டி அப்புறம் நான் இப்படியே எவ்ளோ நாளைக்கு உன்னை பார்த்து கொண்டு இருப்பது அடுத்த கட்டத்துக்கு போகனும் தானே..
விவேகா, என்ன என்ன அடுத்த லெவல்?
இன்பா, பச்சையா நடிக்க வேண்டாம்..
விவேகா, ஓகே அதுக்கு நீ உன் மம்மி கிட்ட என்னை பற்றி சொல்லு நாளைக்கே அடுத்த லெவல்க்கு போலாம்.
இதை கேட்டதும் இன்பா சட்டன் ப்ரேக் போட்டு காரை நிறுத்தி விட்டு அவளை பார்க்க..
தொடரும்…
Comment konjam உங்களுக்கு பிடித்து இருந்தால் கூடவே வெண்ணிலா ஸ்டோரி யும் ரீட் பண்ணுங்க அதுகும் கமென்ட் பண்ணுங்க..
Episode 213
விவேகா, என்ன! என்ன அடுத்த லெவல்?
இன்பா, பச்சையா நடிக்க வேண்டாம்..
விவேகா, ஓகே அதுக்கு நீ உன் மம்மி கிட்ட என்னை பற்றி சொல்லு நாளைக்கே அடுத்த லெவல்க்கு போலாம்.
இதை கேட்டதும் இன்பா சட்டன் ப்ரேக் போட்டு அவளை பார்க்க..
விவேகா, ஹே என்ன அப்படி பார்க்கிற..
நிஜமாவா..
ம்ம் இனி என்ன நீ போய் தைரியமா என் மம்மி உன் மம்மி, அண்ட் முக்கியமா உன் அதிகாரத்தை மூட்டை கட்டி வச்சுட்டு வருண் கிட்ட அப்புறம் என் மாமச்சி கிட்ட எல்லாம் என்னை கட்டிக்க பெர்மிஷன் கேட்டு ஓகே பண்ணு.. அடுத்த நிமிடம் உடனே வந்து என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க வா நானும் ரெடி..
இன்பா, பேபி பிளான் கொஞ்சம் சேன்ஜ் பண்ணலாமா..
எப்படி..
ஃபர்ஸ்ட் அட்வான்டெஜ் எடுத்து அவுட் புட் கொடுத்து விடுகிறேன் அப்புறம் என் பேபி வந்து மற்றது பார்த்துக்கும் டி..
ம்ம் அப்புறம் கொன்றுவேன் டா இனி இது எல்லாம் முடித்து விட்டு வா பப்பி நாய்யே..
இன்பா வண்டியை ஓட்டி கொண்டே பேபி சரி கொஞ்சம் மட்டும் அட்வான்டெஜ் எடுத்துக்கவா..
ஹே கிட்ட வந்த பிச்சிடுவென்..
இல்ல நான் டச் பண்ணல..
பின்ன..
அந்த ஷோ மட்டும் காட்டு..
ராகவ் உன்னை உன்னை என்று சொல்லி அவள் அடிக்க ஹே ஹே வண்டி ஓட்டிட்டு இருக்கேன் டி.. என்று சொல்லி பேசி சிரித்து கொண்டே வீடு நோக்கி செல்ல அதற்கு முன்பே ரவி கங்காவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வசுமதியை அழைத்து சென்று விட அங்கே மித்ரன், தேவகி, பூஜா, வெண்பா, ஆதி, தேவி, அதிதி, செல்வம், கங்கா, லில்லி என அனைவரும் இருக்க
இன்பாவின் ஜீப் வந்து நின்றதும் கங்கா, லில்லி இருவரும் கண்களில் கண்ணீருடன் பார்க்க விவேகா இறங்கி ராகுலை இறங்க வைத்து கூட்டி வர லில்லி அழுது கொண்டே ராகுலை ஓடி சென்று அணைத்து கொண்டாள். கங்கா விவேகா என்று அழைக்க விவேகா அழுது கொண்டே அவளிடம் செல்ல முகம் எல்லாம் முத்தமிட்டு அணைத்து கொண்டாள்.
இன்பா அவர்களை பார்க்க லில்லி, சார் ரொம்ப நன்றி சார் நிஜமாவே விவேகா இல்லன்னா என் பையன் அவனுக்கு என்ன ஆகி இருக்கும் அப்டின்னு சொல்லவே முடியல என் அக்கா எதுவும் தவறா பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள்.
இட்ஸ் ஓகே மா.. ஜனனி, மாமா ரொம்ப தேங்க்ஸ் என் அண்ணாவை பத்திரமா கூட்டி வந்து விட்டீர்கள்.
இன்பா அவளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான். அதன் பின் இன்பா, உங்க கிட்ட ஒரு சின்ன விசாரணை இருக்கு நாங்க நாளைக்கு வந்து விசாரிப்போம்..
செல்வம், தம்பி உண்மையாவே ரொம்ப நன்றி என் பொண்ணை பத்திரமா கூட்டி வந்து விட்டீர்கள் உங்களுக்கு என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல..
இப்படி எல்லாம் பெரிய வார்த்தை பேசி என்னை சங்கடபடுத்த வேண்டாம்.. கங்கா இன்பா கிட்ட வந்து தம்பி என்று கை எடுத்து கும்பிட
இன்பா என்ன ஆன்டி நான் உங்களை ஆன்டியா நினைக்கில என் அத்தையா நினைக்கிறேன்..
விவேகா இதை கேட்டதும் அவனை பார்த்து மிரட்டுவது போல் முறைக்க.. வெண்பா, அண்ணா கிடைக்கும் கேப்பில் எல்லாம் இப்படி கோல் போடுற..
கங்கா, கண்களை துடைத்து கொண்டே என்ன தம்பி!
இன்பா, அதாவது அதி எனக்கு தங்கை மாதிரி நீங்க அவளுக்கு அத்தை தானே.. பிளீஸ் அழ வேண்டாம் அத்தை..
ஆதி, வெண்பா, பூஜா, அதிதி எல்லோரும் அவனை விசித்திரமாக பார்க்க..
அதற்குள் மித்ரன், வருண் இருவரும் வந்தனர்.
வருண் தன் தங்கையை பார்க்க அண்ணா என்று ஓடி வந்து அணைத்து கொண்டாள். விவேகா என்னால் தான் இது எல்லாம் என்னை மண்ணித்து விடு மா..
இல்ல அண்ணா அப்படி இல்ல இதுக்கு நீ காரணம் இல்ல என்று சொல்ல அவன் அவள் தலையில் முத்தமிட்டான்.
வருண் சார் என்று இன்பாவுக்கு நன்றி சொல்ல வாட் ஸ் திஸ் வருண் நீ போலீஸ்காரன் இது அவ்ளோ பெரிய விஷயம் இல்ல உன் பலவீனம் அதை பக்கத்தில வைத்து கொள்ள வேண்டும். இதுக்கு தான் நான் அவங்க ரெண்டு பேரையும் கோட்ரெஸ்லயே இருக்க சொன்னேன்..
மித்ரன், இன்பா விடு டா இனி பத்திரமா பார்த்து கொள்வான். விவேகா இன்பாவின் ஷர்ட் போட்டுகொண்டு நிற்க தேவி, விவேகா உள்ளே வா அந்த ஷர்ட்டை கலட்டி கொடுத்து விடு மா…
ம்ம் சரி அத்தை என்று தேவியுடன் உள்ளே சென்றாள். மித்ரன், அம்மா, வெண்பா வாங்க வீட்டுக்கு போலாம்..
இன்பா, ஹே வேண்டாம் ஆன்டி நீங்க நாளைக்கு வாங்க வெண்பா நீ உன் பிரென்ட் கூட இன்னிக்கி ஸ்டே பண்ணு மா…
தேவகி, சரி நீ இரு டி நான் கிளம்பரேன் நாளைக்கு சரவணன், மித்ரனுக்கு சாப்பாடு செய்யணும்.. சரி கங்கா கவலை வேண்டாம் நான் வரட்டுமா…
ம்ம் சரி அக்கா என்று சொல்ல மித்ரனுடன் கிளம்பினார். மித்ரன் பூஜாவை பார்க்க அவள் அவனை முறைத்து விட்டு திரும்ப..
மித்ரன், அய்யோ கொஞ்சம் போலீசா பேசினதுக்கு இப்படி முகத்தை தூக்கி வைத்து கொண்டு போறா..
இன்பா, என்ன டா கூஜா முறைத்து விட்டு போறா..
இல்ல மச்சி இந்த கிட்நாப் விஷயத்தை போன் பண்ணி அவள் தான்டா சொன்னா அப்போ கொஞ்சம் வொர்க் டென்ஷன் ல கோவமா பேசி விட்டேன் அதான் மேடம் இப்படி கோபமா போறா..
வெண்பா ஆதியை பார்க்க அவனும் ஒரு முறை பார்த்தான். இன்று அவளுக்கு மிகவும் சந்தோஷமான நாள் ஆதியுடன் ஐ மின் அவனுடைய மொத்த சொந்தமும் இருக்கும் வீட்டில் தங்க போகிறாள்.
உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகடித்து பறந்து கொண்டு இருந்தது. விவேகா உள்ளே சென்று குளித்து முடித்து வெளியே வந்து இன்பா வின் சட்டையை எடுத்து பார்த்து கொண்டு இருந்தாள்.
அவன் சட்டையை மடித்து அவனிடம் வெளியே சென்று கொடுக்க செல்ல தேவி, விவேகா எங்கே போற..
அத்தை அது ஹான் இந்த சட்டையை கொடுக்க போறேன்..
வேண்டாம் நீ கொஞ்சம் இங்கேயே உட்காரு என்று சொல்லி இன்பாவின் சட்டையை எடுத்து மடித்து விட்டு ஆதி! ஆதி! என்று அழைக்க..
என்ன மா.. அவள் மீண்டும் எதோ யோசித்து விட்டு ஹான் ஒன்னும் இல்ல அதி! அதி!..
என்ன மா..
தேவி, ம்ம் அந்த தம்பி சட்டையை துவைத்து கொடுத்து விடு விவேகா போட்ட சட்டையை மறுபடியும் எப்படி அது சரி வராது..
இதை கேட்டதும் விவேகாவுக்கு உள்ளுக்குள் எதோ ஒரு சோகம் தோன்ற ஆதி அவளின் முகத்தை பாவமாக பார்க்க..
அதி சரி என்று வாங்கி கொண்டாள்.
கங்கா, வருண் இன்பா தம்பியை உள்ளே கூப்பிடு ஒரு டீ குடித்து விட்டு போகட்டும்..
அதி, அத்தை டீ வேண்டாம் சாப்பிட்டு போகட்டும் மணி பாருங்க 9.00 ஆகி போச்சு..
தேவி, அதெல்லாம் வேண்டாம் அக்கா நீங்க டீ மட்டும் போட்டு கொடுங்க..
கங்கா பேச வர அதற்குள் செல்வம், ஹே உன் பேச்சு சரி இல்ல நம்ப சின்ன குட்டி இப்போ பத்திரமா வீட்டில் இருக்க அவர் தான் காரணம் நீ என்ன பேசிட்டு இருக்க..
அதி, அம்மா அப்படி தான் நீங்க விடுங்க பா நான் போய் அவரை உள்ளே கூட்டி வரேன்..
ஆதி, தேவி பின்னால் சென்றான். மா என்ன ஆச்சு இன்னிக்கி ஒரு மாதிரி பேசுறீங்க.
தேவி, ஒன்னும் இல்ல விடு ஆதி..
அம்மா.. என்று அவன் பின்னால் சென்று கட்டி கொள்ள..
தேவி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். ஆதி, மா இப்போ சொல்ல போரியா இல்லையா…
தேவி, நம்ம வேற அவங்க வேற பெரிய இடம் அவங்க கிட்ட அதிகமா பேசுவது எனக்கு பிடிக்கள டா…
ஆதிக்கு எதோ சந்தேகமாக இருந்தது. விவேகா பற்றி அம்மாவுக்கு சந்தேகம் வந்து விட்டது..
வெண்பா வெளியே இருந்தாள். குடும்பமாக அவர்கள் பேசுவார்கள் என்று வெளியே அமர்ந்து கொண்டு இருக்க..
இன்பா வருண் இருவரும் பேசி கொண்டு இருக்க வெளியே வந்த செல்வம் அவளை பார்த்து விட்டு வெண்பா பாப்பா..
அங்கில் என்று எழுந்து நின்றாள்.
செல்வம், என்ன மா இங்கே தனியா பொக்குண்னு இருக்க உள்ளே போ மா..
ம்ம் சரி அன்க்கில் என்று சொல்லி சந்தோஷ மன நிலையில் உள்ளே சென்றாள்.
அதி, அண்ணா, மாமா என்று அழைக்க.. இருவரும் திரும்பி பார்க்க அண்ணா உள்ளே வாங்க சாப்பிட்டு போங்க..
இன்பா, இல்ல மா நான் கிளம்புறேன்.. அண்ணா வாங்க.. மாமா சொல்லுங்க..
சார் வாங்க..
செல்வம், தம்பி வாங்க என்று சொல்ல இன்பா எந்த தயக்கமும் காட்டாமல் உள்ளே சென்றான்.
தேவி எதுவும் பேசாமல் அங்கே நடப்பதை பார்த்து கொண்டு இருந்தார். விவேகா அமைதியாக இருக்க வெண்பா அவளின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
கங்கா உள்ளே இருந்து விவேகாவுடைய அப்பாவின் சட்டையை எடுத்து கொண்டு அவன் முன் இதை போட்டுக்கொங்க..
ஆதி, சார் உங்க ஷர்ட் அது வாஷ் பண்ண போட்டு இருக்கு விவேகா யூஸ் பண்ணி இருக்கா சோ அப்படியே கொடுக்க கூடாது அதனால் தான்..
விவேகா கண்களில் இன்பாவை ஏக்கம் கொண்டு பார்க்க…
தேவி, அவர் காரில் தானே வந்து இருக்கார் அண்ணாவுடைய சட்டையை கொடுக்க வேண்டாம் அக்கா..
இதை கேட்டதும் இன்பா கங்காவிடம் இட்ஸ் ஓகே ஆண்டி ஐ லைக் திஸ் ஷர்ட் இட்ஸ் மை ஃபேவரட் கலர்.. என்று வாங்கி கொண்டான்.
கங்கா, உள்ளே பாத் ரூம் இருக்கு போய் ஃப்ரெஷ் ஆகி விட்டு போட்டுகொங்க..
இன்பா கண்ண குழி தெரிய சிரித்து விட்டு உள்ளே சென்றான்.
அதன் பின் சாப்பாடு தயாராக இருக்க செல்வம், ஆதி அமர்ந்து இருக்க கங்கா விவேகா, வெண்பா நீங்களும் வாங்க வந்து சாப்பிடுங்க.. வருண் இன்பா தம்பி எங்கே..
வருண், இதோ அவர் வருவாரு மா முதலில் அவருக்கு பரிமாறு அப்புறம் நான் சாப்பிடுறேன்..
இன்பா துடைத்து கொண்டே சாப்பிடும் இடம் வர அங்கே அனைவரும் கீழே அமர்ந்து இருக்க அவன் வித்தியாசமாக பார்த்தான்.
தேவி, இங்கே நாங்க கீழே தான் உட்கார்ந்து சாப்பிடுவோம் அது அவர்க்கு சிரமமா இருக்கும்..
இன்பா, அப்படி இல்ல ஆன்டி நான் கூட கீழே உட்காருவென் என்று சொல்லி ஆதி அமர்ந்து இருப்பதை போல் அவன் பக்கத்தில் கஷ்ட பட்டு அமர்ந்தான்.
வெண்பா, விவேகா, செல்வம், வருண், இன்பா, ஆதி என வரிசையாக அமர்ந்து இருந்தனர்.
அதி, தேவி, அனைவருக்கும் பரிமாற கங்கா இன்பாவின் அருகில் அமர்ந்து அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாற..
தேவி, அக்கா நான் விவேகாவை இனி எங்க வீட்டுக்கு கூட்டி போறேன் நீங்க அதி கூட கோட்ரெஸ் போங்க…
கங்கா, என்ன சொல்ற தேவி..
ம்ம் ஆமா இன்னும் ஆறு மாசம் தானே அங்கே ஆதி இருக்கான் இவளை பத்திரமா காலேஜ் விட்டால் வீடு என மாற்றி மாற்றி கூட்டி வந்து விடுவான்.
இதை கேட்டதும் ஆதி, வெண்பா, விவேகா, நால்வரும் ஆளுக்கு ஒன்றை நினைத்து கொண்டு மெதுவாக சாப்பிட
வருண், அத்தை தப்பா நினைக்க வேண்டாம். ஆதி இருக்கும் போது எப்படி நான் அவளை கோட்ரெஸ் கூட்டி போறேன்..
தேவி, இது என்ன புதுசா வருண் அவள் இல்லாமல் ஆதியால் இருக்க முடியாதே அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தானே..
விவேகா எதுவும் சொல்ல முடியாமல் இன்பாவின் முகத்தை அவ்வப்போது பார்த்து கொண்டே சாப்பிட இன்பா நன்றாக எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
தேவி அடுத்து பேச வர ஆதி, அம்மா போதும் விடுங்க..
தேவி, விவேகா மா நீ அத்தை கூட வந்திடு இனி நான் என் மருமகளை பார்த்து கொள்வேன்.
செல்வம் தேவி என்று ஒரு சத்தம் அவர் அமைதியாகி விட்டார்.
அவ்வளவு தான் இந்த வார்த்தை மூவருக்கு சீற்றத்தை கொடுத்தது. ஆதி, விவேகா ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள வெண்பா கண்கள் ஏனோ கலங்கி போனது. ஆனால் இன்பா அவன் பொருமையாக ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
அனைவரும் அமைதியாக சாப்பிட்டு முடிக்க வெண்பா நேராக படுக்கை அறை எழுந்து சென்று விட்டாள். இன்பா எழுந்து கைகளை கழுவி விட்டு கிளம்ப விவேகா அவனையே தான் பார்த்து கொண்டு இருந்தாள்.
இன்பா அந்த சட்டையை கை முட்டி வரை மடித்து விட்டு டக் இன் செய்து இந்த சட்டையில் புது வித தோற்றத்தில் இருந்தான்.
கங்கா, தம்பி பத்திரமா போயிட்டு வாங்க என்று வெளியே சென்று வழி அனுப்பி வைக்க சென்றாள்.
விவேகா அவள் பின்னால் செல்ல.. தேவி, விவேகா எங்கே போற மணி 10.00 உள்ளே போ..
ம்ம் சரி அத்தை..
இன்பா, கங்காவிடம் எதோ பேசினான். அவன் கிளம்பும் முன் ம்ம் ஓகே அத்தை நான் போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு செல்ல அவள் யோசனையாகவே உள்ளே வந்தாள்.
அதன் பின் ஆதி, சரி வீட்டுக்கு போலாம்.. தேவி, என்ன டா பேசிட்டு இருக்க இங்கே இருந்தே ஆகனும்..
ஆதி, அம்மா நான் வீட்டுக்கு போறேன் அப்பா நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க..
கங்கா, வருண் நீ?
அம்மா நான் இங்கேயே இருக்கேன்..
கங்கா, இல்ல மாமா இருக்காங்க நீ வீட்டுக்கு போ..
அதி, அத்தை அவள் நைட்டில் பயந்தா நான் இங்கேயே இருக்கேன்.
கங்கா, இல்ல நீ வருண் கூட போ மா என்று வழி அனுப்பி வைக்க இன்பா போகும் முன் அந்த இடத்துக்கு ரெண்டு போலீஸ காவல் வைத்து விட்டு சென்றான்.
விவேகா உள்ளே அறைக்கு வந்ததும் பெட்டில் படுத்து கொள்ள கூடவே தேவி உள்ளே வந்தாள்.
செல்வம், தேவி தேவி!
என்னங்க..
நீ பன்றது கொஞ்சம் கூட சரி இல்ல வாயை அடக்கு அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்.
கங்கா, அண்ணா என்ன பேசுற..
நீ கம்முன்னு இரு இது எனக்கும் அவளுக்கும் இருக்கும் விஷயம்..
தேவி அழுது கொண்டே நிற்க விவேகா சமாதானம் செய்ய போக
செல்வம், சின்ன குட்டி..
மாமாச்சி!
போ உள்ளே போய் தூங்கு..
அவள் எதுவும் சொல்லாமல் உள்ளே செல்ல..
செல்வம், ம்ம் நீ இங்கே கங்கா கூட தூங்கு நான் வெளி ரூமில் கட்டிலில் தூங்குறேன் என்று சொல்லி விட்டு சென்றார்.
தேவி அழுது கொண்டே நிற்க கங்கா, சரி விடு தேவி அண்ணா எதோ கோபத்தில் என்று பேச வர..
செல்வம் , கங்கா! என்று ஒரு அதட்டல் அவள் வாயை மூடி கொண்டு அடுக்கி போட்டு படுத்து கொண்டாள்.
இங்கே உள்ளே வெண்பா அமைதியாக படுத்து கொண்டு இருக்க விவேகா, ஹே டீச்சர் எங்க அத்தை சொல்றத எல்லாம் பெருசா எடுத்துக்க வேண்டாம்.. என்று அவளை கட்டி கொள்ள..
இல்ல ஒன்னும் இல்ல.. ஹே லூசு எங்க அத்தை நான் மிஸ் ஆனதில் அப்படி பேசுறாங்க மற்ற படி வேற எந்த எண்ணமும் இல்ல இப்போ கொஞ்சம் சிரி ஹே சிரி.. என்று சமாதானம் செய்தாள்.
விவேகா, ஹே எனக்கு ராகவ் கிட்ட பேசணும் போன் கொடு.. வெண்பா சிரித்து கொண்டே போன் நீட்ட அவன் சரியாக வீட்டில் அப்பொழுது தான் நுழைந்தான்.
ரவி, என்ன சார் சட்டை எல்லாம் புதுசா இருக்கு.. அவன் எந்த பதிலும் சொல்லாமல் மேலே ஏற.. வசுமதி, ராகவ் அப்பா கூப்பிடிராங்க நீ பதில் சொல்லாமல் போற உன் சட்டை எங்கே?
ம்ம் அது கொஞ்சம் என்று பேச வர வெண்பா கால் செய்தாள். மாம் இதோ வரேன் வசுமதி, சாப்பிட்டு போடா.. நான் ஆல்ரெடி சாப்பிட்டு விட்டேன். என்று சொல்லி கொண்டே அவன் அறைக்கு சென்று பூட்டி கொண்டான்.
ஹலோ..
ஹலோ ராகவ்..
ம்ம் சொல்லுங்க..
ஹே என்ன ஒரு மாதிரி பேசுற..
என்ன டி பேச சொல்ற இப்போ தானே பார்த்து விட்டு வந்தேன்.
விவேகா, என் அத்தை பேசியது நீ பெருசா எடுத்துக்க வேண்டாம்..
இன்பா, பேபி நீ எனக்கு தான் அதை நான் பார்த்து கொள்கிறேன் நிம்மதியா தூங்கு போ..
விவேகா, கொஞ்சம் தள்ளி வந்தவள் எனக்கு ஒரு கிஸ் கொடேன்..
இன்பா, ஹே பேபி வீட்டுக்கு வரவா..
எனக்கு ஒன்னும் வேண்டாம் போடா, நான் வைக்கிறேன்.
ஹே வைக்காத டி அப்புறம் நேரில் வந்து கொடுப்பேன்.
ம்ம் சொல்லு..
இன்பா, விவேகா ம்ம் ம்ம் ம்ம் இச்சு என்று சில முத்தம் கொடுக்க..
அவள் கண்களை மூடி வாங்கி கொண்டாள்.
இன்பா, ம்ம் இப்போ வந்து விடவா..
விவேகா, இடியட் வேண்டாம் எனக்கு இதுவே போதும்..
இன்பா, அப்போ எனக்கு..
முடியாது பக்கத்தில் வெண்பா இருக்கா..
ஹே சீட்டர்.. .
சரி போதும் நான் வைக்கிறேன்..
ஹே இரு இரு என்று இன்னும் நான்கு முத்தம் கொடுத்து விட்டு போன் வைத்தான்.
இங்கே அடுத்த நாள் அழகாக விடிந்தது. அனைவரும் காலேஜ் ல பிளேஸ்மென்ட் கேம்பஸ் இன்டர்வியூ ல பிஸியாக இருக்க இன்பா அந்த கேஸில் பிஸியாக இருந்தான்.
வெண்பா சுபாவின் கம்பனியில் செலக்ட் ஆகி இருக்க விவேகா RV solution ல அட்டென்ட் செய்து செலக்ட் ஆகி இருந்தாள். ஆதி கலந்து கொள்ள வில்லை.
சுபா – வினய் திருமண பத்திரிககை தயார் ஆனது அனைவருக்கும் கொடுக்கும் வேலையில் ரவி தீவிரமாக இறங்கினார்.
இங்கே ஆபீஸ் ல சரவணன் சூர்யா வந்ததை பார்த்து அவன் அறைக்கு வந்தவன் அவனை பார்த்து
என்னாச்சுசூர்யா உன்னோட முகம் சரியில்லையே
உன்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் நமக்கு spr ல இருந்து பெரிய புராஜக்ட் கிடைச்சு இருக்கு டா நான் இப்போ தான் ரகு கிட்ட பேசினேன் எல்லாரும் ஹாப்பி இன்னிக்கு அவங்க வீட்டில் டின்னர் சொல்லி இருக்கிறார்கள் என அவன் சொல்லி கொண்டே போக
சூர்யா அவனை பார்த்து
சரவணா….
ம்ம் சொல்லு சூர்யா….
நீ லவ் பண்ணிருக்கியா?
இதை கேட்ட உடனே சரவணன் அமைதியானான்.
என்னாச்சு நான் எதுவும் தவறாக கேட்டு விட்டேனா?
இல்ல சூர்யா என்று சொல்லி அங்கு உள்ள இருக்கயில் அமர்ந்து தன் முடியை கோதிக்கொண்டே தன் தாடியை தடவி கொண்டவனாக ம்ம்ம் நான் லவ் பண்றேன் என்ன பன்றது அவள் என்னை தேடி எனக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறாள். என் மேல அவளுக்கு நம்பிக்கை காதல் எல்லாமே அதிகம் ஆனால்…
ஆனால்..என்ன சரவணா ….
எனக்கும் அவளுக்கும் தகுதி இல்லை சூர்யா அவளுக்கு நிச்சயம் ஆகி விட்டது.
சூர்யா ஒர் கசந்த புன்னகை சிந்தியவன் எப்டி டா உன்னை மனசுல நெனைச்சு கிட்டு வேற ஒருவர் கூட கல்யாணம்
இல்ல சூர்யா நான் தான் அவள வேண்டாம் அப்டின்னு சொல்லிட்டு விட்டேன்.
சரவணன், நீ யாரையோ விரும்புற தானே
ம்ம் ஆமா ….
ஆனால் அவளுக்கு என் மேல நம்பிக்கை இல்லாமல் போயிடுச்சு
என்ன சொல்ற நீ
சூர்யா, அவளுக்கு என்னோட வீரத்தின் மேல் நம்பிக்கை இல்லை நான் ஆண்பிள்ளை தான் அப்படினு நிரூபிக்கனும் அவள் யாரா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல எனக்கு அவ வேணும்.
என்னடா சொல்ற
எனக்கு அவ மேலே ரொம்ப கோபம் ஆனால் அவளை நான் விட்டு தர மாட்டேன்
அவங்க என்ன பண்றாங்க சூர்யா
அவளுக்கும் நிச்சயம் ஆகிடுச்சு ஆனால் கல்யாணம் அப்டின்னு ஒன்னு நடந்தால் அது என் கூட தான்
நீயாவது உன்னோட காதல ஜெயிக்க வச்சுக்கோ டா
சூரியா, ம்ம் கண்டிப்பாக நான் அவளை மிஸ் பண்ண மாட்டேன்
உன்னை மாதிரி நான் ஒன்னும் கோழை இல்ல..
சரவணன் அவனிடம் ம்ம் நான் நீ சொல்ற மாதிரி கோழை தான் சூர்யா
சூர்யா, ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ சரவணா நமக்கான ஒன்னு வாழ்க்கையில் ஒரு முறை தான் கெடைக்கும் ஏன்னா இங்க லைஃப் ஒரு முறை தான் அதனால நம்ப அதை எதுக்காகவும் விட்டு தர கூடாது.
நான் சொல்றது உனக்கு இப்போ புரியாது நீ அந்த நிலைக்கு வந்தால் தான் புரியும் என்று சொல்லி விட்டு அவன் செல்ல..
சரவணன் யோசனையாக நின்றான்…
தொடரும்….
கமென்ட் பண்ணுங்க ரீட் பண்ணுங்க லைக் பண்ணுங்க .
Episode 214
இங்கே இன்பா காலேஜ் வந்து இருந்தான். Spr- சூரிய தேவ் கேஸ் தொடர்பாக பிரியா நந்தினியின் பெண் அதாவது ரவியின் தங்கை மகள் வந்து இருக்க லேப் வசதிக்காக காலேஜ் பயோ டெக் லேப்புக்கு அழைத்து வந்து இருந்தான்.
அன்று ஒரு நாள் அவன் கேஸ் விஷயமாக ஸ்டேஷனில் நைட் ட்டூட்டியில் 14 கேஸில் பிஸியாக இருக்க.. தானாக spr கேஸ் பற்றிய விவரம் அனைத்தும் தேஜு மூலமாக கிடைத்தது.
அன்று இரவு தேஜு ஒரு உயர் ரக கிளப் க்கு சென்று வருவதாக கூறி அவள் சென்றாள்.
அங்கு சென்ற தேஜுவை sp ன் ஆட்கள் follow செய்தனர். தேஜு மிகவும் அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டே தனக்கு தேவையான பானங்களை wine ஆடர் செய்து தன்னிலை மறக்கும் அளவுக்கு குடித்தாள்.
பின் அங்கு இருந்து நடு இரவில் தன் வாகனத்தை இயக்க முடியாமல் போய் ஒரு இடத்தில் மோதி விபத்து ஏற்படுத்தினாள்.
யாருக்கும் எந்த சேதமும் இல்லை அவளுக்கு மட்டும் சின்ன காயம் இதை கண்டறிந்து அங்கு வந்த காவல்துறை தேஜுவின் மீது குடித்து விட்டு வாகனம் ஓட்டியது, விபத்து ஏற்பட்டது போன்ற வழக்குகள் என சில தண்டனைக்கு உரிய வழக்குகள் தேஜுவின் மேல் போட்டு அவளை காவல்துறை கைது செய்தது.
காவல் நிலையம் உள்ளே வந்த தேஜுவிடம் வீட்டுக்கு கால் செய்து வர சொல்ல அவள் இன்பாவின் எண்ணுக்கு கால் செய்து அவனை வர சொன்னாள்.
ஆம் இது அவளுடைய திட்டம் தான் வெளியில் அவனை சந்தித்தால் கண்டிப்பாக sp கிட்ட மாட்டி கொள்வாள். அதற்காகவே வேண்டும் என்றே ஒரு விபத்து ஏற்படுத்தி இவ்வாறு செய்து இருக்கிறாள்.
இன்பா வந்ததும் அவனிடம் அனைத்து விவரங்களையும் கூறி கூடவே ஒரு pendrive கொடுத்து விட்டு
மிஸ்டர் இன்பா எப்படியாவது மகிழினி யை சூர்யா கிட்ட சேர்த்து விடுங்கள் இன்னும் 20 நாள் கழித்து மகிகும் sp க்கும் திருமணம் அப்டின்னு எனக்கு தெரிய வந்தது.
என்று அவள் சொல்லி பின் இன்னும் 10 நிமிஷத்தில் என்னை வெளியே எடுக்க ஆட்கள் வந்து விடுவார்கள் .
இன்பா அவளிடம் அந்த drug பத்தி சொல்லு என்று கேட்க
அது அது பத்தி எனக்கு தெரியாது அது என் அப்பவோட invention என்று கூறியவள் நாள் ஆக ஆக அதோட எபெக்ட் குறையும் நீ கவலை பட வேணாம் .
மகிக்கு கொஞ்சம் ratio குறைவா தான் கொடுத்து இருக்கேன் சூர்யாவுக்கு மட்டும் கொஞ்சம் அதிகம் அவ்ளோ தான்
அந்த pendrive ல நாங்கள் மகி எங்கே போறோம் , வருகிறோம் என்ற அனைத்து விவரமும் அதில் இருக்கு என்று தேஜு அந்த போதையில் கூறி மயங்கினாள்.
அவள் சொன்னது போலவே குரு ஆட்கள் தேஜுவை வெளியே எடுக்க வந்தனர் இன்பா எதுவும் பேச வில்லை.
அவர்கள் தேஜுவை வெளியில் அழைத்து சென்றனர் வெளியே செல்லும்போது ஒரு ஏக்கமாக ஒரு பார்வை பார்த்து விட்டு செல்ல
இன்பா அவளை பார்த்து கண்களால் நான் இருக்கிறேன் என்பது போல கண்களை சிமிட்டினான்.
தேஜு இப்போது நிம்மதியாக வெளியே சென்றாள்.
தேஜு வீட்டுக்கு சென்றதும் குரு கிட்ட இருந்து போன் வந்தது .
தேஜு என்னாச்சு உனக்கு அந்த இன்பா அவன் கிட்ட போய் மாட்டி இருக்க
இது அண்ணாவுக்கு தெரியாது
தெரிஞ்சா நீ அவ்ளோ தான்
தேஜு அவனிடம் எதுவும் பேச வில்லை சிறிது நேரம் கழித்து எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆ இருந்தது அது தான் drunk பண்ணேன்.
இப்படி ஆகும் என்று நான் எதிர்பார்க்க வில்லை .
சரி கொஞ்சம் கவனமாக இரு தேஜு என்று சொல்லி அவன் போன் வைத்தான்.
இப்பொழுது சேகரித்த தகவல் பற்றி விசாரித்து மகிழினியை spr வீட்டில் இருந்து மீட்க குருவை தக்க ஆதாரத்துடன் கைது செய்ய தான் பிரியாவை இப்பொழுது சந்திக்க வந்தான்.
விவேகாவுக்கு அவன் வந்து இருப்பது தெரிய கிட்ட தட்ட அவனை பார்த்தும் பேசியும் வெகு நாட்கள் ஆகி இருக்க அவனை காண பயோ டெக் லேப் பக்கம் சென்றாள்.
லோகேஷ், ஹே பாப்பா..
விவேகா பயந்து கொண்டே அண்ணா வருனும் வந்து இருக்கானா? இல்ல நானும் ராகவும் மட்டும் தான் வந்து இருக்கோம்..
அண்ணா கிண்டல் பண்ண வேண்டாம் என்று சொல்லிய அவள் கண்கள் அவனை தேடி அலை பாய
லோகேஷ், ம்ம் உள்ளே போ உன் ராகவ் உள்ளே இருக்கான் என்று சொல்ல..
ம்ம் ஓகே அண்ணா என்று சொல்லி விட்டு விவேகா உள்ளே செல்ல..
பிரியா, ஹே இன்பா எனக்கு டயர்டா இருக்கு பிளீஸ் ரெண்டு நாள் கேப் கொடு டா..
இன்பா, இட்ஸ் சீரியஸ் பிரியா இன்னும் மூணு நாளில் நான் எல்லாம் சப்மிட் பண்ணனும் அப்போ தான் அந்த குரு வை அரெஸ்ட் பண்ண முடியும் சூரியா மகிய மேரேஜ் பண்ண முடியும்.
பிரியா, சரி சரி எனக்கு தமயந்தி கையில் சாப்பிடணும் போல் இருக்கு நீ போய் கேரியர்ல ரவி மாமா கிட்ட சொல்லி எனக்கு பிடித்த ஐடம் எல்லாம் ரெடி பண்ணி அனுப்பி வை டா..
இன்பா, ம்ம் பண்றேன் ஆனால் நீ உன் மாமா கிட்ட சொல்லிடு என்னால் அவர் கிட்ட பேச முடியாது.
பிரியா, என் மம்மி உனக்கு ஆகாது ஆனால் என் கிட்ட பேசுவ.இன்னும் மாமக்கிட்ட சண்டை தான் போட்டு கொண்டு இருக்கியா..
ஹே டைம் வேஸ்ட் பண்ணாத டி சீக்கிரம் வேலையை பாரு..
பிரியா, நான் இங்கே வந்து இருப்பது என் மம்மிக்கு கூட தெரியாது டா கொஞ்சம் ரிலேகஸ் கொடேன் சுபா ஷாப்பிங் கூப்பிட்டாள் போயிட்டு வரவா..
கொன்றுவேன் ஒழுங்கா வேலையை பாரு டி..
அவள் வேறு புறம் திரும்பி அமர்ந்து கொள்ள..
இன்பா, பிரியா !பிரியா!
ம்ம் சொல்லு..
இன்பா, வொர்க் டென்ஷன் ல பேசிட்டேன்.
அப்போ எனக்கு நாண் வெஜ் மீல்ஸ் வேணும்…
ம்ம் சரி ரெடி பண்றேன் கொஞ்சம் வேலை பார்த்து அந்த ஃபைனல் ரிபோர்ட்ட ரெடி பண்ணு.. என்று சொல்லி அவளுக்காக வாங்கி வந்த உணவை நீட்ட இன்பா லவ் யூ டா என்னை விட முன்னாடி பிறந்து இருந்தால் உன்னை நானே தூக்கிட்டு போயிருப்பேன் டா..
இன்பா, உனக்கும் எனக்கும் 6மாசம் வித்தியாசம் அதான் நடக்கல தானே மெதுவா சாப்பிடும்.
பிரியா உணவை திணித்து கொண்டே சாப்பிட அவளுக்கு திடீர் என்று புறை ஏற அவன் தண்ணீர் எடுத்து கொடுத்து தலையை நீவி விட்டு அவளை அசுவாச படுத்துவதை
அப்பொழுது தான் அங்கே வந்து உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டு சரி போவோம் என்று வந்த விவேகா பார்த்து விட்டு பொறாமை மற்றும் யார் இவள் யாரிடமும் இன்பா இவ்வளவு நெருக்கம் காட்டியது இல்லை இப்பொழுது இவள் புதிதாக அதுவும் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று கற்பனை ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்க இதற்கு மேல் இங்கே நிற்க கூடாது என்று அவள் திடும்பவும் பிரியா அவளை பார்க்கவும் சரியாக இருந்தது.
பிரியா, ஹே கேர்ல் who are you?
விவேகா, சாரி ஃபார் தி டிசர்ப் யூ மேம் என்று சொல்லி விட்டு அவள் செல்ல
இன்பா, இப்போ என்ன நடந்தது விவேகா முகம் இப்படி இருக்கே என்று நினைத்து விட்டு சரி பிரியா நான் நாளைக்கு வரேன் என்று சொல்லி விட்டு வேகமாக அவளை பிடிக்க வர விவேகா அங்கே இல்லை.
லோகேஷ், என்ன டா என்ன ஆச்சு..
ஹே அவள் எங்கே டா..
லோகேஷ், பாப்பா உன்னை பார்க்க தான் வந்தாள் அப்புறம் எனக்கு தெரியாது மச்சி என்ன ஆச்சு..
இல்ல டா சண்டைக்காரி மாதிரி என்னை முறைத்து விட்டு ஓடி விட்டாள் அதான் என்று சுற்றிலும் தேட அதற்குள் வசுமதி ஜெகா விஷயமாக போன் செய்ய இன்பா வேறு வழி இல்லாமல் அரை மனதுடன் கிளம்பினான்.
இங்கே தேவகி, சரவணா எப்போ டா மீனாட்சி வீட்டில் பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றது.
இருங்க மா இன்னும் நாள் போகட்டும்.. நீ இப்படியே பேசிட்டு இரு எனக்கு நீ பன்றது சுத்தமா பிடிக்கல என்று அழுது கொண்டே செல்ல..
சரவணன் மா முதலில் நிச்சயம் வைக்க ஏற்பாடு பண்ணுங்க அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்.. இப்போ சந்தோஷம் தானே..
தேவகி, நிஜமா வா.. ம்ம் என்று சொல்லி விட்டு வெடுக்கென்று உள்ளே சென்றான்.
தேவகி சந்தோஷ மன நிலையில் உள்ளே சென்று மீனாட்சி வீட்டுக்கு கால் செய்து சொன்னதும் மீனாட்சி உடனே சரவணனுக்கு கால் செய்தாள்.
அவன் நினைத்தது போலவே அவள் போன் செய்ய உடனே மறுமுனையில் மீட் பண்ணலாம் என்று சொல்லி போன் வைத்து விட்டாள்.
அடுத்த நாள் அழகாக விடிந்தது. இன்பா நேராக சரவணனை பார்க்க வந்தான். சரவணன் பேச வர உடனே ஹே நீ பேச வருவதை கேட்க வரல நான் சூரியாவை பற்றி பேச வந்தேன்.. என் மேல் அவன் கோபத்தில் இருப்பான் அண்ட் என்று இன்பா அவனை பார்க்க..
சரவணன் அமைதியாக பார்க்க இன்பா, ம்ம் நல்ல பையன் ஆனால் நீ ரொம்ப கெட்டவன் சைக்கோ டா, சரி நான் விஷயத்துக்கு வரேன் நீ போய் சூர்யாவுக்கு மகியைப் பார்க்க ஹெல்ப் பண்ணு..
சரவணன், இன்பா ஊரில் உள்ள எல்லாரும் நல்லா இருக்கணும் அப்டின்னு நினைக்கிற ஆனால் உன் அக்காவுக்கு..
ஹே சொல்றத மட்டும் செய் டா தேவை இல்லாமல் பேசாத..
சரவணன், நான் ரவி சார் கிட்ட பேசுறேன்.. நீ யார் கிட்ட வேணாலும் சொல்லு உனக்கு அவரை பற்றி தெரியாமல் இருக்குமா.. என்று சொல்லி கொண்டே சென்றான்.
இங்கே கல்யாணத்துக்கு என்று spr, மகி என அனைவரும் துணி கடைக்கு வர ஒரு புறம் சூர்யா, ஜானு, ஒரு புறம் சுபா என சிரித்து கொண்டு புடவையை பார்க்க சரவணன் இப்போது சுபாவை பார்வையால் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
ஹே சூர்யா உன்னோட ஆளு உள்ளே வந்தாச்சு…
ம்ம் வந்து என்ன பண்ண சுபா அவளுக்கு என்னை யாருன்னு தெரியாத மாதிரி இப்போ அப்படியே ஆக்ட் விடுவா பாரு…
அத்தான் நீங்க தான் எப்போவும் சீண்டி கிட்டே இருக்கீங்க ,நீங்க இப்போவே போய் தட்டி தூக்க வேண்டியது தானே….
இல்ல ஜானு சில சம்பவம் செஞ்சு தான் அவளை ஏங்க வச்சு தூக்கனும்….
உடனே சரவணன், சூர்யா மகி கூட sp பின்னாடி குரு எல்லாரும் வராங்க டா…
சூர்யா, வரட்டும் டா நான் சொன்னது எல்லாம் சரியான நேரத்துக்கு தயாரா இருக்கா….
சரவணன் சுபாவை பார்க்க என்ன என்னை பார்த்தால் நான் என்ன செய்யட்டும்….
நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் நாங்க பார்த்துக் கொள்வோம்… என சரவணன் சொல்ல
சூர்யா உன் பிரென்ட் ரொம்ப ஓவரா பண்றான் ஸாரி பண்றாங்க நான் உனக்காக தான் வந்தேன் இந்நேரம் என்னோட வினய் எனக்காக கல்யாணம் அடுத்து ரிசப்ஷன் க்கு ட்ரெஸ் செலக்ட் பண்ண நாங்க போலாம் அப்டின்னு இருந்தோம்… இன்பா சொன்னான் உன் லவ் க்கு ஹெல்ப் பண்ணனும் அப்டின்னு ஒரே காரணம் தான்….
இதை கேட்டு சரவணன் மனது துடித்து போனது அவளோட வினய் அப்போ நான் யாரு…
அப்போ சுபா என்னை வேண்டாம் என்று உதறி விட்டாளா….
இப்போது சரவணன் சூர்யாவை பார்த்தான் தன் காதல் மனைவி அதுவும் இல்லாமல் சுயத்தை இழந்த நிலையில் கூட ஒருவரை ஒருவர் இப்படி நேசிக்கிறார்கள். நான் இது பற்றி இன்னும் யோசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
வென்பா சரவணா அண்ணா நீ எதுக்கு எப்போ பார்த்தாலும் இன்பா அண்ணா , சுபா மேடம் அவங்க என்னோட லேடி பாஸ் கிட்ட இப்படி முகம் காட்டுற….
சரி சாரி வென்பா மா….
என் கிட்ட கேட்காத சுபா அக்கா கிட்ட கேளு….
சாரி மிஸ் சுபத்ரா…
உன்னோட சாரி எனக்கு தேவை இல்ல சூர்யா ஏற்கனவே நானும் இன்பாவும் ஆல்ரெடி பக்காவா பண்ணிட்டோம்…
சூர்யா, இன்பாவுக்கு மூளை கொஞ்சம் கம்மி தான் சுபா பட் உனக்கு செம்ம மூளை இந்த மாதிரி எனக்கு ஒரு அக்கா இல்லயே…
அண்ணா உங்களுக்கு நான் இருக்கேன் எனக்கு அறிவு ஜாஸ்தி பட் பிரைன் குட்டி தான்…
ஓகே ஓகே இப்போ சீரியஸ் மோட்…
நான் சிக்னல் கொடுக்கும் போது நம்ப ஆரம்பிக்க வேண்டியது தான்.
ம்ம் டன் என அனைவரும் கை காட்டி கொண்டனர்.
நான் சிக்னல் கொடுக்கும் போது நம்ப ஆரம்பிக்கவேண்டியதுதான்.
ம்ம் டன் என அனைவரும் கை காட்டி கொண்டனர்.
மகி இவர்கள் 5 பேரும் பேசிக்கொண்டு இருக்க sp அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு மகிழினி கைய பட்டும் படாமல் கைகளை பிடித்து போக அவளும் சிரித்து கொண்டே சென்றாள்.
என்னடா சூர்யா…. என்று சுபா சொல்ல
விடு விடு சுபா என்று வாய் மொழியாக கூறினாலும் மனதில் வெந்து கொண்டு இருந்தான்.
நாமாக யாரிடமும் பேச கூடாது அவர்கள் தான் நம்மிடம் பேச வேண்டும் அதே கொள்கையில் சூர்யா அந்த புடவையை பார்த்து கொண்டு இருக்க உடனே குரு வந்தான்.
குரு, என்ன சரவணன் இங்கே….
ஹலோ சார்…. சூர்யா வீட்டில் முகூர்த்த புடவை எடுக்க வந்தோம்.
ஓ அப்படியா …. நாங்களும் அதே பற்பஸ் தான் ஓகே நீங்கள் பாருங்க….
இப்போது கொஞ்சம் அருகஅருகே வர இப்போது சூர்யா சிக்னல் செய்ய முதல் மெஷின் ஆரம்பம் ஆனது. அது பெருசா ஒன்னும் இல்லை spr பற்றிய ஒரு அனானிமஸ் செய்தியை சில வலைபக்கங்களில் போட்டு விட்டான்.
சரவணா ஓகே வா….
பயமா இருக்குடா …. சுபா, வேஸ்ட் பெல்லோ ….
சரவணன், ஹே நீ ரொம்ப ஓவரா பேசுற….
சுபா விடு …..
உன் ப்ரெண்ட ஃபோன் கொடுக்க சொல்லு நானே பண்றேன்….
அவள் பேசிய பேச்சில் செய்தியை போட அது காட்டு தீயாக பரவியது.
சூர்யா, சரி ஓகே சுபா நீ கீழே வெயிட் பண்ணு நான் சிக்னல் கொடுக்கும் போது வா..
கீழே காரில் தான் லேப் சிஸ்டம் எல்லாம் இருக்கு போ.. ம்ம் சரி சூர்யா என்று அவள் முன்னே செல்ல உடனே சரவணன், டேய் அவளுக்கு ஒன்னும் தெரியாது டா நீ தனியா அனுப்பாத டா..
சூர்யா, சரி நீயும் போ.. சரவணன் சரி என்று சொல்லி அவள் பின்னால் சென்றான். சுபா லிஃப்ட் ல செல்ல சரவணன் படிகட்டில் சென்றான்.
பேஸ்மென்ட் சென்று அங்கே அவர்கள் வந்த காரை பார்த்து கொண்டு இருக்க.. சரவணன் வேகமாக காருக்கு அருகே சென்றான்.
சுபா, ஹே நீ எதுக்கு இங்கே வந்த.. உனக்கு என்ன தெரிய போகுது சூரியா தான் என்னை அனுப்பினான். தள்ளு என்று சொல்லி காரில் ஏறிக்கொண்டு அடுத்த போன் காலுக்கு வெயிட் செய்தான்.
சுபா அவனை முறைத்து கொண்டே காரில் ஏறினாள். சரவணன், உங்களுக்கு டைம் வேஸ்ட் நீங்க இங்கே இருந்து கிளம்புங்க..
சுபா, அதை சொல்ல நீ யாரு டா உன் வேலையை நீ பாரு.. ம்ம் பார்க்கிறேன். சரவணனுக்கு மீனாட்சி கால் செய்தாள். சுபா இருப்பது தெரிய ம்ம் சொல்லு மீனு சாரி மீனாட்சி..
மீனாட்சி, ஹே என்ன பேச்சு எல்லாம் ஒரு மாதிரி இருக்கு..
சரவணன், நான் இன்னிக்கு நைட் உன்னை டின்னர்ல மீட் பண்றேன்.. நம்ப நிச்சயம் பற்றி பேசலாம். ஓகே பாய் டியர்.. என்று சொல்லி விட்டு சுபாவை பார்க்க அவள் மூக்கு எல்லாம் சிவந்து இருந்தது.
அத்தனை கோபம் ஆத்திரம் எல்லாம் அவளுக்கு உள்ளே ரணமாக இருக்க சரியாக அந்த நேரம் வினய் கால் செய்தான்.
சுபா ஒரு புன்னகை சிந்தி விட்டு ம்ம் சொல்லுங்க வினய்..
வினய், சுபா என்னோட பார்ட்னர்க்கு நேரில் போய் இன்விட்டேஷன் கொடுக்கணும் இன்னிக்கி நைட் பிளைட் உனக்கு போட்டு விட்டேன்.
ம்ம் கண்டிப்பா வரேன் இது என்ன கேள்வி இன்னும் கொஞ்ச நாளில் நீங்க பாதி நான் பாதி..
வினய், அவுட் டோர் ஷூட் இருக்கு
ம்ம் சரி டியர்.. என்ன அவுட் டோர் போட்டோ ஷூட் இருக்கா.. ஹில்ஸ் ஸ்டேஷன் போகணுமா..
மணாலி ஓகே டியர் நான் கொஞ்சம் வெளியே இருக்கேன் இன்னிக்கி நை ட் ஏர் போர்ட் ல மீட் பண்றேன் எனக்கு டிக்கெட் டிடைல்ஸ் சென்ட் மி..
சுபா கோபத்தில் நடுங்கும் கைகளுடன் அந்த டிக்கெட் ஓபன் செய்து பார்க்க
சரவணன் அவள் பேசியது அனைத்தும் கேட்க கேட்க உள்ளுக்குள் அவள் தன்னை விட்டு தூரமாக மிகவும் தூரமாக எட்டாம் கனியாக சென்று விடுவாளோ என்று தோன்ற அடுத்த நொடி சுபாவின் கையில் உள்ள போனை பிடுங்கி சுவிட்ச் ஆப் செய்தான்.
சுபா, ஹே யூ உனக்கு என்ன பைத்தியமா என்ன டா பண்ற என்று சொல்லி கொண்டே அவன் கையில் உள்ள போனை பிடிங்க..
சரவணன் அவள் கைகள் இரண்டையும் பிடிக்க முயற்சித்து கொண்டே . சுபா நான் அவ்ளோ சொல்லியும் என் பேச்சை கேட்காமல் எதுக்கு டி இப்படி பண்ற..
என்ன டி யா கொன்று விடுவேன் என்னை டி சொல்ல நீ யாரு டா உனக்கு என்ன உரிமை இருக்கு என்று அவனை அடித்து தள்ளி விட கைகள் ஓங்க..
சரவணன் அவளின் கைகளை பிடித்தவன் அவளின் முகத்தை ஒரு கையில் பிடித்து அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான். சுபாவுக்கு இவ்வளவு நேரம் இருந்த தைரியம் கோபம் ஆத்திரம் எல்லாம் எங்கே போனது என்றே தெரிய வில்லை.
அவனால் இதற்கு மேல் அவள் இல்லாமல் இருக்க முடியாது.. சுபா நீ ஏன் டி இப்படி பண்ற.. அவள் கண்களில் கண்ணீர் வழிய டேய் ராஸ்கல் என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரியுதா..
தொடரும்…
Comment konjam konjam like konjam ratings konjam drs
Episode 215
சரவணனால் இதற்கு மேல் அவள் இல்லாமல் இருக்க முடியாது.. சுபா நீ ஏன் டி இப்படி பண்ற.. அவள் கண்களில் கண்ணீர் வழிய டேய் ராஸ்கல் என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரியுதா..
சரவணன், சுபா நான் முடிவு பண்ணிட்டேன் நீ அவனை கல்யாணம் பண்ணிக்க கூடாது.
சுபா, உனக்கு என் மேலே என்ன அக்கரை அண்ட் இப்போ எதுக்கு கிஸ் பண்ண உன் மனசில் என்ன நினைத்து கொண்டு இருக்க நான் வினய்க்கு சொந்தம் ஆக போறேன் டா..
சரவணன் அவள் வாயை பொத்தினன். முடியாது அவனுக்கு உன்னை கல்யாணம் பண்ண விட மாட்டேன்.. சுபா, நான் வினயை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.
சரவணன், சுபா நான்!… எனக்கு!.. உன்னை… !
ஹே உன்னை பார்த்தாலே டிஸ்கஸ்டிங்கா இருக்கு முதலில் தள்ளி போ டா..
சரவணன் அவளின் கையை பிடித்து இழுக்க அவள் அவன் மார்பில் விழுந்தாள். ஹே என்ன பண்ற கையை விடு டா..
நீ எனக்கு வேணும்.. என்று சொல்லி அவள் தாடையை பிடித்து முத்தமிட்டான். சுபா அவனை தள்ளி விட முயற்சி செய்ய அவளை அவன் விட வில்லை.. அவள் கழுத்தில் முகம் புதைத்து கொண்டான். எத்தனை நாள் அவளை அள்ளி அணைக்க துடித்த கைகளை கட்டு படுத்தி இருப்பான் இதற்கு மேல் விட்டால் அவனுக்கு அவள் கிடக்கவே மாட்டாள் என்று உள்ளுக்குள் பயம் தொற்றிக் கொண்டது. அவளின் இடையை அழுத்தி பிடித்தான். அன்றே அவனுக்கு அந்த இடை பாடாக படுத்தியது. இப்பொழுது அவனின் பிடியில் திக்கு முக்காடி போனாள்.
சுபா வேகமாக அவனை தள்ளி விட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவன் கன்னத்தை பார்த்து ஒரு அரை விட்டாள். சரவணன் சிரித்து கொண்டே இந்த கன்னம் இதுலயும் அடி இனி நீ என்ன கொடுத்தாலும் நான் வாங்க ரெடி என்று அவன் தாடியை நீவி கொண்டே அவளை விழுங்கும் பார்வை பார்க்க..
சுபா,அவன் சொன்னதும் இன்னொரு கன்னத்திலும் அறைந்தாள். எனக்கு நீ வேண்டாம் நான் உன்னை என் மனசில் இருந்து எப்போதோ தூக்கி போட்டு விட்டேன் நான் என் டாடி செலக்ட் பண்ண வினய தான் கல்யாணம் பண்ணிபென். சோ நீ லூசு மாதிரி தெரு தெருவா தேவ தாஸ் மாதிரி அழையனும் அதை நான் பார்க்கனும் இது தான் டா எனக்கு ஆசை..
சரவணன், சரி டி நான் உன் டாடியே உன் கிட்ட வந்து “ஏஞ்சல் நீ சரவணனை கட்டிக்க மா” அப்டின்னு சொல்ல வைத்து உன்னை தூக்குறேன் டி..
சுபா, வாய்ப்பே இல்ல கனவிலும் நடக்காது. உனக்கு என்ன தகுதி இருக்கு.. என் டாடியே சொன்னாலும் நான் உன்னை கட்டிக்க மாட்டேன் உன்னை எப்பொவோ டஸ்ட் பின் ல போட்டு விட்டேன்.
சரவணன், ஓ அப்படியா சரி அதையும் பார்க்கிறேன், கல்யாணம் பண்ணத்துகு அப்புறம் உனக்கு இருக்கு என்று சொல்லி அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருந்தான். சுபா காரை திறந்து வெளியே செல்ல போக எத்தனிக்க ஹே எங்க டி போற.. கார் லாக் பண்ணி விட்டேன் அந்த வினய் கூட எங்கேயும் போன அங்கேயும் வருவேன் உன்னை தூக்குவென் டி என்று சொல்லி அவள் போனை பாக்கட்டில் போட்டு கொண்டான். டேய் போனை கொடு லாக் ரிலீஸ் பண்ணு நான் போகனும்..
சரவணன், உன்னை விட மாட்டேன் டி நேரா உன்னை வீட்டில் தான் கொண்டு போய் விடுவேன். இல்ல இப்போவே ரவி சார் க்கு போன் பண்ணி MNC கம்பனியுடைய புராஜக்ட் டிஸ்கஸ் பண்ண என் கூட நீ இருப்பதா சொல்லுவேன் டி என்று அவள் அருகில் நெருங்கி உட்கார்ந்தான்.
சுபா, சரவணன் எனக்கு அறுவெர்ப்பா இருக்கு பிளீஸ் தள்ளி போ..
இருக்கட்டும் பரவாயில்லை ஆனால் எனக்கு நல்லா இருக்கு என்று சொல்லி அவளையே பார்த்து கொண்டு இருக்க
சுபா, சரவணன் இப்போ என் டாடி யை சார்ன்னு சொன்ன சரி தானே உன்னால் என் டாட் கிட்ட தைரியமா பேச முடியாது டா நீ ஒரு மானம் கெட்ட மட சாம்பிராணி ஊர் முழுக்க பத்திரிக்கை கொடுத்தாச்சு பிளீஸ் நான் வினய்ன்னு fix ஆகி விட்டேன் தயவு செய்து என் வாழ்க்கையில் விளையாடாத என் டாடிக்கு அவமானம் என்னால் தேடி தர முடியாது. எனக்கு எல்லாமே டாட் தான்..
சரவணன், சுபா நான் சீரியசா சொல்லிட்டு இருக்கேன் நீ வேணும் அவ்ளோ தான்..
சுபா,சரவணன் நீ ஒரு உன்னை என்ன சொல்றதுன்னு தெரியல டா ஹிப்போபட்டாமஸ் நீ ஒரு கொரில்லா உன்னை நீ என் வாழ்க்கையை சீரழிக்க தான் டா பிளான் பன்ற என் டாடி உன்னை சும்மா விட மாட்டாரு..
அவனோ போடி இப்போ இறங்கி ஓடனும் அப்டின்னு டிரை பண்ணாத அப்புறம் உன்னை மொத்தமா… என்று நிறுத்தி விட்டு அவளை பார்க்க..
அவள் கண்கள் வெளியே வந்து விடும் அளவுக்கு பார்த்தாள். உன்னை மொத்தமா தூக்கிட்டு போயிடுவேன். என்று சொல்லி ஓட்டுநர் இருக்கைக்கு வந்தவன். காரை ஸ்டார்ட் செய்தான்.
சூரியாவுக்கு போன் செய்து வெண்பாவை வீட்டுக்கு கொண்டு விட சொல்லி விட்டான். சுபா எதுவும் பேசாமல் அமைதியாக வர சரவணன் அந்த சிட்டியை காரில் பெட்ரோல் தீரும் வரை ரவுண்ட் அடித்தான்.
இரவு 8.00 மணி இருக்கும் பெட்ரோல் பங்க் சென்று டேங்க் ஃபுல் செய்து விட்டு நேராக வீட்டுக்கு சென்று பார்க்கிங் செய்தான். ம்ம் சுபா இந்தா என்று கார் சாவியை நீட்டியவன் மீண்டும் அருகில் வந்து அவளது போனை ஆன் செய்து நீட்ட அதில் வினய் தான் கால் செய்து இருந்தான். அதன் பின் ரவி அதன் பின் ஆபீஸ் கால்ஸ் என நிறைய இருந்தது. சுபா அவனை எரிக்கும் பார்வை பார்க்க ஹே கோவ படாத செல்லம் பிளைட் மிஸ் ஆகி போச்சா நான் உன்னை மணாலி கூட்டி போறேன். என்று கண் அடித்து விட்டு நடக்க..
சுபா, உன் கனவில் கூட நான் கிட்ட வர மாட்டேன் டா.. சரவணன் நடந்து கொண்டே உன்னை கனவில் மொத்தமா.. என்று சொல்லி விட்டு மீதியை நான் உன்னை சொந்தம் ஆக்கி விட்டு சொல்றேன் டி என்று பறக்கும் முத்தம் கொடுத்து விட்டு ஓடி விட்டான்.
அவன் சென்றதும் அவள் கண்களில் கண்ணீர் வழிய எவ்வளவு நேரம் அங்கு நின்று அழுது இருப்பாள் என்று அவளுக்கே தெரிய வில்லை. அழுது கொண்டே இருந்தாள். பின் தன்னை ஒரு வாரு சரி செய்து கொண்டு நேராக வீட்டை நோக்கி நடந்தாள். சுபா மனதில் நல்ல வேலை இப்போவவது சொல்லி இருக்கான் அவனே டாட் கிட்ட பேசட்டும் என்று நினைத்து கொண்டு என்றும் இல்லாத மன மகிழ்க்சியில் வீட்டை நோக்கினாள்.
மீனாட்சி போன் செய்தாள். ஹே என்ன டா நினைத்து கொண்டு இருக்க நான் உன் லவ்வர், முறை பொன்னு மாதிரி மீனு சொல்ற என் சஞ்சய் கூட என்னை இப்படி சொன்னது இல்ல … அன்னிக்கே உன்னை வேண்டாம்ன்னு தானே சொன்னேன் இப்போ நிச்சயம் வரை வந்து விட்டது நான் எப்படி என்னோட சஞ்சய் கூட சேருவது..
சரவணன், ஒன்னும் கவலை பட வேண்டாம் நம்ம நிச்சயம் நடக்காது உனக்கு உங்க அப்பாவே சஞ்சயை கல்யாணம் பண்ணி வைப்பாரு நீ நிச்யத்துக்கு ஒத்துக்கோ..
மீனாட்சி, ஹே விளையாடாத சரவணன் இது சீரியஸ் விஷயம் நாளைக்கு மட்டும் எதுவும் சொதப்பல் ஆனது உன்னை கொன்றுவிடுவேன்…
மேடம் ஓவரா பேசாதீங்க நான் சொல்றத நம்புங்க.. என்று சொல்லி போன் வைத்தவன் நிம்மதியாக சாப்பிட்டு விட்டு இன்பாவுக்கு கால் செய்தான்.
சரவணன், இன்பா நான் சூரியா பற்றி உன் கிட்ட முக்கியமா பேசணும்..
நான் ரொம்ப பிசி நீ ஸ்டேஷன் வா.. என்று சொல்லி அவன் போன் வைத்தான்.
சரவணன் நேராக ஸ்டேஷன் கிளம்பி சென்றான். சுபா விஷயம் என்றால் நிச்சயம் பேசி இருக்கவே மாட்டான் அதனால் தான் சூரியாவை பற்றி கூறினான்.
இன்பாவுக்கு குரு பிரகாஷ் பற்றிய எல்லா ஆதாரமும் கிடைத்து இருந்தது இன்னும் ஒரு நாள் மட்டும் அமைதி காத்து விட்டு நேராக சென்று அவனை கைது செய்வது மட்டும் தான் பாக்கி அதனால் இதை மிகவும் ரகசியமாக வைத்து இருந்தான்.
சரவணன் நேராக ஸ்டேஷன் சென்று விட்டான். மித்ரன் டூட்டி முடிந்து கிளம்ப இவனை பார்த்து விட்டு சரவணா இங்கே என்ன பண்ற.. அவன் மிதிரனை முறைத்து பார்த்தான்.
மித்ரன், உன் கிட்ட பேசுவதே தப்பு தான் டா என்று நினைத்து விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.
இன்பா உள்ளே இருக்க சரவணன் வெளியே அமர்ந்து இருந்தான். அவன் வந்த விஷயம் தெரிந்ததும்
இன்பா, ம்ம் என்ன விஷயம்..
சரவணன் அவனை பார்த்து எப்படி சொல்வது என்று தெரியாமல் தயங்கி கொண்டே இருக்க..
என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு எனக்கு நிறைய வேலை இருக்கு..
சரவணன், இன்பா நான் வந்து எனக்கு சுபாவை..
என்ன?
சரவணன், நான் சுபாவை..
நீ சொல்றது புரியல சுபா உன்னோட தங்கை மாதிரின்னு சொல்ல வரியா..
சரவணன் தப்பு தப்பு தப்பு இல்ல டா..
இன்பா, ஹே **** எனக்கு நிறைய வேலை இருக்கு சீக்கிரம் சொல்லு..
சரவணன் சுற்றிலும் பார்வையை சுழல விட்டு இன்பா நான் சுபாவை விரும்புகிறேன்..
இன்பா எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் இதை எதுக்கு என் கிட்ட சொல்ற..
சரவணன், இது உனக்கு அதிர்ச்சியா இல்லையா!
இன்பா, நீ என்னை லவ் பண்றேன்னு சொன்னால் தான் அதிர்ச்சி இது அவ்ளோ பெரிய விஷயம் இல்ல அண்ட் இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல ஏன்னா நான் சுபா இல்ல சோ இதை அவள் கிட்ட சொல்லு போ.. என்று சொல்லி கொண்டே நடக்க
சரவணன் இதை எதிர் பார்க்க வில்லை. இன்பா பிளீஸ் நில்லு டா பிளீஸ் ஒரு நிமிடம்.
இன்பா, இப்போ என்ன டா ம*** உனக்கு வேணும்..
சரவணன், என்ன டா இப்படி பேசுற..
இன்பா, உனக்கு என்ன டா பிடுங்கி புண்ணியவான் மரியாதை வேண்டி இருக்கு நீ முதலில் யாரு டா …. .
சரவணன் இன்பாவிடம் கெஞ்சி கொண்டே நடந்தான். இன்பா அவனை எரிக்கும் பார்வை பார்க்க..
அவனோ இன்பா பிளீஸ் டா என்னால் சுபா இல்லாமல் இருக்க முடியாது நீ என்ன சொன்னாலும் நான் செய்கிறேன் எனக்கு ஹெல்ப் பண்ணு பிளீஸ்..
இன்பா, ஓ இது நல்ல டீலா இருக்கே ஆனால் அதுக்கு கொஞ்சம் யோசிக்கணும்..
என்ன யோசிக்கணும்..
இன்பா, நீ எந்த விதத்தில் எனக்கு உபயோகம் ஆவ எனக்கு பிராஃபிட் வேணும்.. ஆனால் அதுக்கு முன்னாடி உனக்கு நிறைய கொடுக்க வேண்டியது இருக்கே..
சரவணன் என்ன என்பதை போல் பார்க்க..
இன்பா, ம்ம் இப்போ என்ன பண்ற வந்து எனக்கு ஹெட் மசாஜ் பண்ணி விடு அடுத்து அதை அப்புறம் யோசித்து சொல்றேன்.
வா வந்து பண்ணு டா.. சரவணன் வந்து அவன் தலையை பிடித்து விட்டான். சிறிது நேரம் கழித்து இன்பா, எத்தனை வருஷம் லவ் பண்ற..
சரவணன், ம்ம்
உனக்கு காது கேட்குமா !கேட்காதா! தத்தி முண்டம், சொல்லு டா..
அது அது வந்து ஸ்கூல் படிக்கும் போது இருந்தே லவ் பன்றேன்…
ஓ அப்படியா சரி எனக்கு காலில் சொடுக்கு எடுத்து விடு வா..
சரவணன், என்ன?
ஹே செய் டா சுபா வேணும் தானே..
ம்ம் வேணும் அப்போ வா வந்து எடுத்து விடு என்று சொல்ல அவன் தயங்கி நிற்க இன்பா ஷி ஷாக்ஸ் எல்லாம் கலட்டி விட்டு அவன் முன் காலை நீட்ட சரவணன் சொடுக்கு எடுத்தான் அவன் சொடுக்கு எடுப்பதை இன்பா வீடியோ எடுத்தான்.
ம்ம் இப்போ ஓகே வா..
இன்பா, ம்ம் ஓகே ஆனால்..
ஆனால் என்ன..
இன்பா, உன்னோட டெடிகேசன் எப்படி இருக்கு அப்புறம் உன் தகுதி மயிரு இது எல்லாம் ஜட்ஜ் பண்ண எனக்கு டைம் வேணும்..
சரவணன் அவனை திடுக்கிட்டு பார்க்க..
அப்படி பார்த்தால் என்ன அர்த்தம்..
சரவணனுமக்கு தெரிந்து விட்டது இனி இன்பா அவன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டான் தன்னை அவமானம் செய்து பழி வாங்கி தான் ஹெல்ப் செய்வான் என்று நினைத்து கொண்டு” ம்ம் எவ்ளோ டைம் வேணும்”
ஒரு 15 நாள் வேணும்..
சரவணன், டேய் அவளுக்கு 14 தேதி கல்யாணம் டா..
ஓ அப்படியா அப்போ 13 நாள்..
இன்பா, சரி நான் ஒத்து கொண்டால் கூட மிஸ்டர் ரவி சந்திரன எப்படி சமாளிக்க போற..
சரவணன், பிளீஸ் டா உன் கிட்ட கெஞ்சி கேட்கிறேன் எதுவும் செய் டா..
இன்பா, அப்போ என் காலில் விழு டா..
அவன் வாயில் வார்த்தை இருக்கும் போதே சரவணன் உடனே விழ வர
இன்பா, “டேய் அவ்ளோ வெட்கம் கெட்டவனா டா நீ”
சரவணன், நான் அவளுக்காக என்ன வேணாலும் செய்வேன்.
இன்பா,நில்லு வேண்டாம்..
இல்ல இன்பா நான் விழுறேன்..
இன்பா, ம்ம் இதுக்கு இன்னும் நாள் இருக்கு இப்போ விழாத..
சரவணன் சிரித்து கொண்டே வர இன்பா, ஹேய் என்ன சிரிப்பு நீ விழனும் ஆனால் அது சுபாவை கல்யாணம் பண்ணிட்டு ஆசிர்வாதம் வாங்கணும் அண்ட் அப்புறம் உன் மூலமா எனக்கு நிறைய வேலை நடக்கணும்..
சரவணன், என்ன வேலை?
இன்பா அவன் கழுத்தை பிடித்து எதுக்கு டா இப்படி பண்ண உன்னால் எனக்கு எவ்ளோ பிரச்னை தெரியுமா..
சரவணன், ஹே கொஞ்சம் மரியாதை கொடு டா..
உனக்கு என்ன டா மயிரு மரியாதை இப்போ எங்கே கொண்டு வந்து விட்டு இருக்க தெரியுமா.. ஏற்கனவே எனக்கும் அவருக்கும் ஆகாது இப்போ போய் நான் சுபா விஷயத்தில் எதுவும் செய்தால் அவரு என்னை என்ன வென செய்வார் டா.. .
சரவணன், யாரு இன்பா…?
இன்பா, சுபாவுடைய டாடி தான்..
சரவணன் அவனை அணைத்துக் கொண்டு ஹே பிளீஸ் டா எதுவும் செய் அந்த வினய் வேண்டாம் அவள் வாழ்க்கை வீணாகி விடும் என் சுபா கஷ்ட பட கூடாது..
இன்பா, சரி நான் இளவழகன்க்கு கட்டி வைக்க சொல்றேன்..
டேய் அவள் எனக்கு வேணும் டா..
இன்பா, வெட்கம் கெட்டவனே அதுக்கு நீ தான் எதுவும் செய்யணும் இப்படி என் காலில் விழுவதுக்கு பதில் சுபா கிட்ட போய் சொல்லு டா..
சரவணன் சோர்ந்த குரலில் அது கஷ்டம் உன் டாட் சொன்னால் மட்டும் தான் அவள் எனக்கு கிடைப்பா ஆனால் அவர் கிட்ட எனக்கு பேச கஷ்டமா இருக்கு உனக்கே தெரியும் தானே நான் சுபாவை சரியாக காதலிக்க ஆரம்பித்த நேரம் தான் என் அப்பா இறந்தார் அதுக்கு அப்புறம் அது நான் அப்படியே விட்டு விட்டேன். அப்புறம் உன் அத்தை பசங்க பிரச்னை உன் டாடி பேசியது என்னால் டைஜஸ்ட் பண்ணிக்க முடியல.. இப்போ எனக்கு அவள் கை விட்டு போய் விடுவாள் அப்டின்னு உள்ளுக்குள் எதோ ஒரு மாதிரி இருந்தது அவளை நான் ராணி மாதிரி பார்த்து கொள்ள முடியும் அந்த அளவுக்கு என் தகுதியை வளர்த்து கொண்டேன் இப்போ நியூ அரைவல் அப்பர்ட்மென்ட் 2BHK வாங்கி இருக்கேன், இன்னும் ரெண்டு மாசத்துக்கு பிறகு இன்ஸ்டால்மென்ட் முடியுது. மித்ரன் கோட்ரெஸ்ல தான் இப்போ இருக்கேன். அது இல்லாமல் வெண்பா பெயரில் பணம் ஏற்கனவே மித்ரன், நான் ரெண்டு பேரும் சேர்ந்து தான் படிக்க வச்சுட்டு இருக்கோம். அவளுக்கு ஓரளவு நகை ரெடி பண்ணி விட்டேன். அம்மாவுக்கு பென்சன் வருது நாளைக்கு இருக்க வீடு கூட இல்லாமல் பொன்னு கேட்டு வர முடியுமா சொல்லு பார்க்கலாம். அதுவும் ஒரு தங்கை இருக்கும் போது நான் கல்யாணம் பண்ணி நின்றால் அது நல்லா இருக்குமா இது எல்லாம் தான் இன்பா எனக்கு பிரச்னை..என்று வருத்த பட..
இன்பா வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தான்.
சரவணன், நான் எல்லாம் ஆசையே பட கூடாதா.. என்று அவன் கண்கள் கலங்க..
இன்பா, டேய் லூசு மாதிரி பேசாத உனக்கு யாரும் இல்லன்னு சொல்லல, நீ தான் உன்னோடதுக்கு போராடனும் டா.. அண்ட் முதலில் சுபாவை சமாதானம் பண்ணு இப்போ என்னை கெட்டவனா மாற்றி விட்ட சரவணா நான் என் டாடிய இப்போ எதிர்க்க போறேன் ஏற்கனவே அவருக்கு என்னை சுத்தமா பிடிக்காது ஏழாம் பொருத்தம் இப்போ சுத்தம்….
சரவணன், இன்பா உன் கிட்ட வினய் பற்றி ஒரு ஃபைல் கொடுத்தேன் அது வச்சு பண்ணு..
அது குப்பை தொட்டியில் போட்டு விட்டேன் டா..
டேய் என்று எதோ பேச வர..
இன்பா, இல்ல அது அவள் கிட்ட இருக்கு..
சரவணா, எவள் அவள்?
உன் தங்கச்சி..
சரவணன் இன்பாவின் சட்டையை பிடித்து என்ன நீ வெண்பாவை லவ் பண்றயா!
இன்பா, அட சில்லறை நாயே நீ என் அக்கா வை லவ் பண்ற நான் உனக்கு வா டா நான் கல்யாணத்தை நிருத்துறேன் அப்டின்னு உனக்கு கட்டி வைக்கணும் ஆனால் உன் தங்கச்சி அப்டின்னா நீ சண்டைக்கு வருவ..
சரவணன், ஹே இல்ல இன்பா சாரி சாரி… .
இன்பா, நான் வெண்பாவை என் தங்கையா தான் பார்க்கிறேன்..
சரவணன், அப்போ அவள் யாரு?
அதுவா விவேகா தான்?
சரவணன், என்ன விவேகா! விவேகா !
ரெண்டு விவேகா இல்ல ஒரே ஒரு விவேகா தான் அது அவள் மட்டும் தான்..
சரவணன் உறைந்து நிற்க
இப்போ எதுக்கு இப்படி ஷாக் ஆகி பார்க்கிற..
சரவணன், அந்த பொண்ணு நல்ல பொண்ணாச்சே உன்னை எப்படி..
இன்பா, ம்ம் நான் தெரு பொறுக்கி அப்படி தானே உனக்கு சுபா இல்ல நீ கிளம்பு என் டார்ஜ்லிங்க நான் பார்த்து கொள்கிறேன்.
சரவணன், இன்பா பிளீஸ் நான் சும்மா சொன்னேன் நீ கிடைக்க விவேகா ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும். உனக்கு எல்லா இடங்களிலும் நான் ஹெல்ப் பன்றேன்.
ஓ அப்படி வாடா.. அண்ட் இனி இது நமக்குள்ள இருக்கணும் இதை பற்றி சுபா கிட்ட சொல்ல கூடாது.
சரவணன், அப்போ இதுக்கு தான் உன் அக்காவை எனக்கு கட்டி வைக்க ஹெல்ப் பண்ற சரி தானே..
இன்பா, வாட் ஹெல்ப்பா இன்னும் நீ வெயிட்டிங் லிஸ்ட் ல தான் இருக்க டா..
என்ன டா சொல்ற..
இன்பா, நீ சாதாரண காரியமா பண்ணி இருக்க என் டாட் அவரை எதிர்ப்பது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா போ இங்கே இருந்து கிளம்பு..
சரவணன் வேறு வழி இல்லாமல் அங்கே இருந்து கிளம்பினான்.
இன்பா, டேய் ஒரு நிமிடம்…?
சரவணன், என்ன?
தொடரும்…
Comment konjam ratings konjam share pannunga drs keep reading
Episode 216
இன்பா, ஒரு நிமிடம்..
என்ன டா..
ஹே கிவ் ரெஸ்பெக்ட் பட் நான் உனக்கு மரியாதை தர மாட்டேன்.
சரவணன், ம்ம் இட்ஸ் ஓகே சார்..
இன்பா, சரி அவளை நான் சொல்ற இடத்துக்கு நீ வர வை டா..
சரவணன் திகைத்து கொண்டே யார வர வைக்கணும்..
டேய் முட்டாள் நான் விவேகா பற்றி சொல்லிட்டு இருக்கேன் இங்கே வா.
சரவணன் அவன் அருகில் வந்ததும் இன்பா அவனுடைய திட்டத்தை சொல்ல அதை கேட்டதும் சரவணன் முகம் மாறியது இது இது தப்பு இன்பா..
இன்பா, நீ இல்லன்னா என்ன இதை செய்ய எனக்கு இன்னோரு அடிமை ரெடியா இருக்கான் போடா புண்ணியவான் ஆனால் சுபா உனக்கு இல்ல..
சரவணன், ம்ம் செய்றேன் ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கவா..
கேட்டு தொலை..
நீயும் அவளும் டபிள் சைடு தான..
இன்பா முறைக்க சரவணன், அவள் மிசஸ் இன்ப ராகவன் தான் போதுமா நான் உனக்கு ஹெல்ப் பண்ணி தொலைக்கிரென் என்று சொல்ல..
இன்பா, என் கண் முன்னாடி நிற்காதே ஓடி போயிடு..
சரவணன் சிரித்து கொண்டே எதோ மனதுள் உள்ள ஒரு பெரும் பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியில் வீட்டை நோக்கினான். ஆனாலும் இன்பா சொன்னது சரி மிக பெரிய ரிஸ்க் ரவி சந்திரன் சும்மா இல்ல அசைத்து பார்க்க முடியாதே என்று உள்ளுக்குள் கவலை எட்டி பார்க்க தான் செய்தது.
அடுத்த நாள் அழகாக விடிந்தது ஒரு பக்கம் கல்யாண வேலை முழு மூச்சாக சுபாவுக்கு சடங்குகள் என மிகவும் பிஸியாக சந்தோஷ மன நிலையில் இருந்தாள்.
இங்கே spr கேஸில் கைது செய்ய அனைத்து ஆதாரமும் சரியாக கிடைத்து விட குரு, spr என கைது செய்ய வாரண்டுடன் இன்பா அவர்கள் வீட்டை நோக்கி போலீஸ் படையுடன் கிளம்பினான்.
Spr மான் விழி கழுத்தில் தாலி கட்டும் நேரம் சரியாக அந்த நேரம் அர்ஜுன் வேகமாக spr அருகில் வந்தான்.
சார்…. என பயந்து கொண்டே அவசரத்தில் அழைக்க
அதே நேரம் துப்பாக்கி சத்தம் கேட்க ஏற்கனவே படபடப்பில் இருந்த மான் விழி அந்த சத்தத்தில் மயங்கி spr மேல் சாய்ந்தாள்.
பொம்மாயி ….
பொம்மாயி… என அவள் கண்ணங்களில் தட்ட அருகில் மாயா அவள் அருகில் வந்து மகி மகி என கண்களில் கண்ணீர் கொண்டு அவள் மேல் தண்ணீர் தெளிக்க போக,
இங்கு குரு யார் என திரும்ப அங்கு இன்பராகவன், கண்ணகுளி தெரிய புன்னகை முகத்துடன் சிரித்து கொண்டே வந்தான். பின்னால் மித்ரன், சாதனா, லோகேஷ், இன்னும் சில காவலர்கள் என இன்பா முன்னே நடக்க இவர்கள் பின்னால் வந்தனர்.
குரு என்னடா எதுக்கு இங்கே வந்த….
இது ரெண்டுல ஒன்னு தொடு குரு … என இன்பா தன் விரல்கள் நீட்ட,
குரு அவனை பார்த்து முறைக்க ,
இதுக்கு தான் அங்கே இருந்து வந்தாயா..
சும்மா தொடு….
குரு இன்பாவை நோக்கி அவன் சட்டைய பிடிக்க வர…
ஹே சில் சில் இப்போ எதுக்கு இவலோ கோபம் விடு நானே செலக்ட் பண்ணிக்கிட்டேன்.
ம்ம் இப்போ,
இங்கே யாருக்கோ கட்டாய கல்யாணம் பண்றாங்க அப்டின்னு எனக்கு கம்ப்ளைன்ட் வந்தது….
என்ன உளருர….
நானா … யார் அது கொடுத்தது….
அது சொன்னா எப்டி சப்புன்னு போயிடும் குரு நான் வேனும் னா அந்த கம்ப்ளைண்ட் காப்பி தரேன் பாருங்க பாஸ்….
குரு வேகமாக இன்பாவின் அருகில் அந்த காப்பியை பிடுங்க வர,
ஒரு நிமிடம் என்று கூறி கொண்டே spr தன் கழுத்தில் உள்ள மாலையை தூக்கி வீசி எழும் நேரம்
ஒரு நிமிடம்….
இன்னொரு குரல் கேட்க இப்போது spr, குரு , இன்பா, என அனைவரும் யார் என்று திரும்பி பார்க்க…
ஒரு நிமிடம்…
அது வேறு யாரும் இல்லை என்னோட சூர்யா சாரி மகிழினியின் சூர்ய தேவ்
அது (என்னோட டார்லிங்) சூர்ய தேவ் தான்!
என்ன சூர்யா இந்த பக்கம்… இன்று சூரியாவின் பார்வை, அவனுடய நடத்தை என அனைதும் வித்தியாசமாக இருந்தது.அதனால் குரு அவனிடம் கேட்க
சூர்யா spr யை தான் பார்த்து நடந்து கொண்டே வந்தான்.
குரு இப்போது சூர்யாவை பார்த்து நீ தான் கம்பிளைன்ட் கொடுத்தியா டா பேஸ்****..
பிளீஸ் உஷ்…. என்று இன்பா கை காட்டிட குரு spr ஐ பார்க்க
சூர்யாவின் பார்வை மாற்றத்தை புரிந்து கொண்ட spr இப்போது மகிழினி தலையை வருடி விட்டு எழுந்து வந்தான்.
ஷீலா வந்து மகியை செக் செய்து கொண்டு இருக்க …
அதற்குள் மான் விழி அந்த துப்பாக்கி சத்தத்தில் மயங்கி விழுந்து விட அவளை தூக்கி கொண்டு வெங்கட் மேலே செல்ல spr டாக்டரை வர வழைத்து விட்டு எழுந்தான். அறைக்கு செல்ல பின்னால் மாயாவும், ஷீலா வும் சென்றனர். அங்கு அவளை படுக்க வைத்து குளுகோஸ் ட்ரிப்ஸ் போடபட்டது.
என்ன வேணும் உனக்கு… என்று spr கேட்க
ம்ம் எனக்கு மகிழினி சூர்ய தேவ் (அல்லது) மான் விழி சூர்ய தேவ் வேனும்…என் பொண்டாட்டி வேனும் டா..
Spr அவன் அருகில் இன்னும் நெருங்க ஹே என் பொண்டாட்டிய கூட்டி போக வந்தேன் டா…
அவள் உன் பொண்டாட்டியா.. என்று spr ஒரு ஏளன புன்னகை சிந்தி விட்டு .அவ என் பொம்மாயி டா…
ச்ச்சீ…. என்று சூர்யா அவன் காதை தேய்த்து கொண்டே…அதை திரும்ப சொல்லாத…
இப்போது spr தன்னை சுற்றி ஒரு பார்வை பார்க்க அங்கு இருந்த உறவினர்கள் அனைவரும் கிளம்பினர்.
ஹே என்னாச்சு என்னோட டீர் க்கு நேற்று நல்லா தானே இருந்தா…
சண்டக்கோழி என்று சொல்லி கொண்டே sprயை தாண்டி செல்ல போக
ஹே நில்லு அவ எனக்கு பொண்டாட்டி ஆக போரவ …உன்னை யாருன்னு கூட அவளுக்கு தெரியாது.
இப்போது சூர்யா அவனை பார்த்து பாவமாக ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு…
ம்ம் சரி தான் என்னை அவளுக்கு யாருன்னு தெரியாது …
இப்போது குரு அருகில் வந்து என்ன குரு உங்க அண்ணா கிட்ட நீங்க சொல்லலையா…
Spr இப்போது குரு வை பார்க்க அண்ணா என்று அவன் எதோ சொல்ல வர..
ஒரு நிமிடம் மிஸ்டர் spr உங்க P.A ரொம்ப நேரமா உங்க கிட்ட எதோ சொல்லனும் அப்டின்னு வெயிட் பண்றாங்க கொஞ்சம் என்னன்னு பாருங்க..
இப்போது இன்பா சூர்யாவை பார்த்து மச்சி என்னையும் கொஞ்சம் சேர்த்துக்கோ டா எனக்கு போர் அடிக்குது.
இரு மச்சி இன்னும் ஒரு ரவுண்டு அடுத்து உன்னோட டர்ன்…
ஓகே … ம்ம் ஓகே மச்சி ரொம்ப டைம் எடுதுக்காத..
இதை எல்லாம் பார்க்க பார்க்க குரு நெருப்பாக அவன் பார்வை இருந்தது.
Spr கிட்ட அர்ஜுன் , சார் நம்மோட ஷேர்ஸ் எல்லாம் இங்கே பாருங்க RV, SS, future solution கம்பனி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி இருக்கு இப்போ அடுத்து என அவன் எல்லாம் சொல்ல
Spr முகம் அப்படியே நெருப்பு போல் சூடானது.
இதெல்லாம் யாரு பண்ணது என சொல்லும் நேரம்..
Spr இதுக்கு எல்லாம் நான் தான் காரணம் அடியேன் நானே! என சூர்யா சொல்லி விட்டு இப்போது
நான் பொ** இல்லை இப்போ உங்களுக்கு ப்ரூஃப் ஆகி இருக்குமே .
ஹே அப்போ அன்னிக்கு எங்க அண்ணயா பற்றிய செய்தி அதுக்கு காரணம் நீ தானா… என கேட்டு கொண்டு குரு சூரியாவின் அருகில் வர
பிளீஸ் ச்சில் குரு பிரகாஷ் கடைசியாக சண்டை காட்சிய வச்சுக்கலாம் ஓகே …
ம்ம் அது நான் தான் நான் மட்டும் இல்லை இதோ இந்த இடியட் இன்பாவும் தான்..
மச்சி என்ன புகழாத டா…
சரி நான் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
எங்கே விட்டேன் ம்ம்.. ஹான் குரு நீங்க உங்க அண்ணகிட்ட எதும் சொல்லலயா..
Spr இப்போது தன் தம்பியை பார்க்க அண்ணா அவன் சொல்றத நீ நம்பாத …
சொல்லு குரு என்னாச்சி..
அண்ணா வதிணா இவனை லவ் பண்றா..
அப்போ அவளுக்கு எல்லாம் நியாபகம் வந்துடுச்சா.
இல்ல அண்ணா இவன் அப்புறம் இந்த போலீஸ் நாய் இன்பா எதோ வேலை பண்ணி வச்சு இருக்கான்…
இப்போது spr க்கு இந்த விஷயம் ஒரு இடி இறங்கியது போல் இருந்தது.
சூர்யா இப்போது இன்பாவை பார்த்து போதும் மச்சி இப்போ உன்னோட டர்ன்..
தேங்ஸ் மச்சி..
இன்பா spr அருகில் வந்து அந்த மூன்று அரெஸ்ட் வாரன்ட் நீட்டினான்.
ஒன்று கட்டாய கல்யாணம்
இன்னொன்று விவகாரத்து வாங்காமல் திருமணம் செய்ய போவதற்கு
உடனே spr சூர்யாவை பார்க்க , என்ன பார்க்க வேண்டாம்…
இப்போ ஒரு பார்வை அவளை பார்த்தால் போதும் உடனே கரைந்து என் கூட சேர துடிப்பா நான் கம்பிளைன்ட் பண்ணனும் அப்டின்னு அவசியம் இல்லை…
இப்போது இன்பா,மூன்றாவது உங்க ஹாஸ்பிடல் ரகசியம் நீலா கருதரிப்பு மருத்துவமனை மொத்த விஷயமும் கண்டு பிடித்து விட்டேன்.
அதற்கு உண்டான மொத்த எவிடேன்ஸ் எல்லாம் இதோ என்று கொடுக்க அந்த நேரம்
அந்த அனைத்தும் அர்ஜுன் வாங்கி பார்த்து விட்டு இப்போது spr யை பார்த்து ஆமா ஸார்..
தேஜூவை பார்த்து இன்பா சிநேகமாக புன்னகைத்தான். ஆனால் அதை spr பார்த்து விட்டான்.
சரி இப்போ குரு நீங்களா வந்திடுங்க
இதுக்கு தான் கிட்ட தட்ட மூன்று வருடமா காத்து இருந்தேன்.
சரி சார் நான் வந்த வேலையை பார்க்கிறேன் நீங்க ரெண்டு பேரும் ஸ்டேஷன் வாங்க.. என இன்பா இருவரையும் அழைக்க
இப்போது சூர்யா , இன்பா அந்த ரெண்டு கம்பிளைன்ட்ட நான் டீல் பண்ணிகுறேன் ..
இதுல என் பொண்டாட்டி பேரு அடி படும் என்று சொல்ல உன் இஷ்டம் என்று இன்பா தலை அசைத்து விட்டு அவன் கையில் விலங்கு மாட்டிட வர
இப்போது spr ஹே இதுக்கு பின்னாடி நீ ரொம்ப வருத்த பட போற மிஸ்டர் என் தம்பியை விட்டு விடு…
இப்போது spr CM, மினிஸ்டர் என கால் செய்ய இன்பா spr ஐ பார்த்து பத்து நிமிடம், இல்லை 5 நிமிடம், அப்படியும் இல்லனா ரெண்டு நிமிடமாவது உங்க தம்பிய நான் ஜெயில போடுவேன். என்று சொல்லி
சார் சட்டம் தன் கடமையை செய்யும். என்று சொல்லி கொண்டே அவனை அழைத்து கொண்டு சூர்யா அருகில் வந்த இன்பா
இன்பா, மச்சி அடுத்து ஸ்ட்ரைட்டா ஃபர்ஸ்ட் நைட் தான் போல ம்ம் என்ஜாய் பண்ணு
ஹே கொஞ்சம் *** போடா என்று இருவரும் சில கெட்ட நல்ல வார்த்தை பேசி விட்டு
விஷேசதுக்கு போன் பண்ணு மச்சி… என இன்பா கிண்டல் செய்து விட்டு கிளம்பினான்.
Spr கூட சண்டையிட்டு மீண்டும் சூரியா இரண்டாவது முறையாக மான் விழிய திருமணம் செய்து கொண்டான். Spr தேஜு வை திருமணம் செய்து கொண்டான்.
இங்கே இன்பா அவனை பிடித்து கொண்டு வெளியே வர மொத்த மீடியாவும் அங்கே இருக்க அவர்கள் கேள்விகளை அடுக்கி கொண்டே செல்ல
குரு டேய் **** உன்னை உன்னை நான் சும்மா விட மாட்டேன் டா என் அண்ணயாவையும் என்னையும் நீ ரொம்ப சீண்டி விட்டாய் இன்பா இதுக்கு நீ நிச்சயம் அனுபவிப்ப..
இன்பா காதை தேய்த்து கொண்டே குரு சார் தேன் மிட்டாய் சாப்பிடுறீங்களா..! இல்ல ஆரஞ்சு மிட்டாய் வேணுமா! மித்ரன், லாலி பாப் வாங்கி கொடு டா.. இதை கேட்டு இன்பா கண்ண குழி தெரிய சிரித்து கொண்டே குருவை பார்க்க அவன் மூக்கு சிவந்து கோபத்தில் கொந்தளித்து கொண்டு இருந்தான்.
இன்பா, “இன்னிக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமான நாள் நீங்க ஜெயில்ல போய் தண்டனை வாங்க போற செய்தி எல்லார் காதிலும் தேன் வந்து பாயும் சோ ஒரு மிட்டாய் சாப்பிடுங்க சூப்பரா இருக்கும்”.
குரு அவனை எரிக்கும் பார்வை பார்க்க இன்பா அந்த மிட்டாயை வாயில் போட்டு கொண்டான்.பின் இன்பா அவனை பார்த்து “ப்ளடி ஸ்வீட் ” உன் லுக்க இப்போ அங்கே விடு உன்னை மொத்த ஆந்திரா, தமிழ் நாடு அப்புறம் கர்நாட்கா முக்கியாமா உன்னோட ப்ரெண்ட் அண்ட் ஆக்டர் சித்தார்த் கிருஷ்ணாவுக்கு ஒரு ஹாய் சொல்லு..
அங்கே மீடியா அனைத்தும் குரு கிட்ட மாற்றி மாற்றி கேள்வி கேட்டு கொண்டு இருக்க இன்பா அதை ரசித்து கொண்டே பார்த்தான். குரு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அப்படியே நின்றான்.
இன்பா, ம்ம் போதும் guys சாரை நீங்க அடிக்கடி மீட் பண்ணலாம் அவர் இனி கோர்ட் போலீஸ் ஸ்டேஷன் என மாறி மாறி வருவாரு அப்போ பார்த்து கொள்ளலாம்.
குரு முகத்தில் அவமானம், வெறி, கோபம், என அனைத்தும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது.
இன்பா அவனை நேராக ஸ்டேஷன் கூட்டி சென்று குருவை உள்ளே அழைத்து சென்றான்.
இன்பா அங்கு இருக்கும் மேஜையின் மீது அமர்ந்து கொண்டு அவனையே பார்த்தான். அங்கு நிசப்தம் மட்டுமே குடி கொண்டது. சாதனா, கீர்த்தனா, மித்ரன், லோகேஷ் என குருவுடைய பார்வை அவர்களை சுற்றி இன்பாவின் மேல் வந்து நின்றது.
அந்த போலீஸ் ஸ்டேஷன் கொஞ்ச நேரத்தில் பரபரப்பானது. அவனை கைது செய்து அரை மணி நேரம் அவ்வளவு தான் அந்த இடத்தில் வழக்கறிஞர்கள் கூட்டம் வழிந்தது. அதன் பின் ஒரு சில நொடிகளில் spr கார்பரேட்ஸ் கிரிமினல் லாயர் அவனை பெயில் எடுக்க வந்து இன்பாவிடம் தி ஃபேமஸ் கிரிமினல் லாயர் சத்ரபதி நீட்டினார்.
இன்பா, அதை வாங்கி படித்து விட்டு மிஸ்டர் குரு பிரகாஷ் நீங்க கிளம்பலாம்.
குரு, என் அண்ணயாவ சாதாரணமா நினைத்து விட்ட உன்னை என்று அவன் பேச வர…
இன்பா, வேண்டாம் சஸ்பென்ஸ உடைத்து விடாத அப்புறம் எனக்கு கிக்கு இருக்காது டா போ நான் உன் அடுத்த அடிக்கு காத்து கொண்டு இருக்கேன் டா..
குரு, டேய் பாஸ்***
டேய் *** நீ முதலில் செய் டா என்று மெதுவான குரலில் சொல்ல ம்ம் உன்னை சுற்றி இருக்கும் இந்த நாய் கூட்டத்துக்கும் இதே நிலை தான் என்று சொல்லி விட்டு கிளம்பியவன்
குரு, ம்ம் இந்த அளவுக்கு பேசுவன்னு நான் எதிர் பார்க்கல அந்த ****சூரியா அப்புறம் உனக்கு இருக்கு டா நீ சொன்னது மாதிரியே சஸ்பென்சோட பண்றேன் ஆனால் அடுத்த அடி உன்னால் எழ முடியாது டா என்று சொல்லி விட்டு கிளம்பினான்.
மித்ரன் கொஞ்சம் பதட்டம் கொண்டு ‘என்ன இன்பா இப்படி சொல்லிட்டு போறான்’. லோகேஷ் அவனிடம் இப்போ உடனே எதுவும் அவன் செய்ய மாட்டான்னு நான் நினைக்கிறேன் நீ என்ன டா சொல்ற..
இதை கேட்ட இன்பா, ம்ம் பார்ப்போம் என்ன செய்ய போறான் ஆனால் நீங்க எல்லாரும் கவனமா இருக்கணும். என்று சொல்லி விட்டு சென்றான்.
குரு கைதானது மீண்டும் விடுதலை ஆன வீடியோ மற்றும் செய்திகள் எல்லாம் பரவியது. ஆனால் தவறு நீலா ஹெல்த் கேர் செண்டர் மேல் தான் என்று பகீரகமாக நிரூபிக்க பட்டு இருந்தது.
குரு விடுதலை ஆன இரண்டு நாளில் தேஜுவின் தந்தை நாதன் அனைத்து குற்றமும் ஒப்பு கொண்டு சரணடைந்து விட்டார்.
இந்த செய்திகள் அனைத்தையும் செய்தி தாளில் படித்து கொண்டு இருந்தாள் விவேகா. ஹே ப்ராடு பயலே யார் கிட்ட அன்னிக்கு கொஞ்சி பேசிட்டு இருந்த எப்போ என்னை வந்து சமாதானம் பண்ணுவ என்று சீப்பை எடுத்து அவனுடைய படத்தை அடித்தவள் அவளாகவே சிரித்து கொண்டு இருந்தாள். அவளுக்கு தெரியும் அது பிரியா இன்பாவின் அத்தை மகள் முக்கிய குறிப்பு அவள் இன்பாவை விட பெரிய பெண் இருந்தாலும் அவளிடம் அதீத உரிமை முதலில் அந்த வருனி இப்பொழுது பிரியா அந்த காண்டு தான் வேறொன்றும் இல்லை.
கதவு தட்டும் சத்தம் கேட்டது. வருண் தான் வந்து இருந்தான் தனியாக வர வில்லை. கூடவே இன்பாவும் வந்து இருந்தான். என்ன வருண் இப்போ வந்து இருக்க? அம்மா வர இன்னும் டைம் ஆகும் அண்ட் உன் வேலையை முடித்து விட்டு வரலாம் தானே..
வருண்,சார் ஒரு நிமிடம் இருங்க என்று சொல்லி விட்டு அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றான். விவேகா அவர் எதோ ஒரு கேஸ் ஃபைல் என் கிட்ட கொடுத்ததா சொல்றாரு ஆனால் எனக்கு நினைவு இல்ல மா அதான் ஆனால் அதை கொடுக்கும் போது நீயும் கூட இருந்தியாம் அது என்ன கேஸ் ன்னு தெரியல இப்போ வேற அது கிடைக்கல நான் அவ்ளோ தான் உனக்கு எதுவும் நினைவு இருக்கா..
விவேகா, இல்லையே எனக்கு நினைப்பு இல்ல அண்ட் அவர் அப்படி எதுவும் தரல எதோ குடித்து விட்டு சாரி ஸாரி எதோ உலருகுறார் நீ தைரியமா போய் சொல்லு டா…
இல்ல விவேகா என்று அவன் தயங்கி நிற்க அவள் தலையில் அடித்து கொண்டு வா நானே சொல்றேன் என்று வெளியில் வந்தாள்.
சார் என்ன ஃபைல் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க. நீங்க எதுவும் என் கிட்ட கொடுக்கல இன்பா வருணை பார்த்து கொண்டே உன் சிஸ்டர் தானே உனக்கு கொரியர் வேலை பண்ணினாள்.
ம்ம் ஆமா சார்..
இதை கேட்ட இன்பா குரலில் கொஞ்சம் கடுமையுடன் ம்ம் அப்போ அவங்க கிட்ட தான் அது இருக்கும் கொஞ்சம் நல்லா தேட சொல்லு இல்ல பின் விளைவு ரொம்ப மோசமா இருக்கும்..
இதை கேட்டதும் வருண் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளே செல்ல இன்பா எழுந்து வெளியே சென்றான். விவேகா அவன் பின்னால் சென்று என்ன வேணும் எதுக்கு என் அண்ணா வை டார்ச்சர் பண்றீங்க..
இன்பா, சரவணன் கொடுத்த ஃபைல் அதை நான் தூக்கி போட்ட ஃபைல் உன் கிட்ட தானே இருக்கு அது தான் வேணும் உன் அண்ணன் கிட்ட கொடு..
அவள் மிகவும் ஏமாற்றத்துடன் உள்ளே சென்று அந்த ஃபைல வருணிடம் நீட்டினாள் அதை அவள் புத்தக அலமாரியில் வைத்து இருந்தாள்.
வருண் அவளிடம் இருந்து அதை கோபமாக பிடிங்கி கொண்டு இன்பாவிடம் நீட்ட ம்ம் கொஞ்சம் சரி இல்ல வருண் உன்னை நல்லா கவனிக்க வேணும்.
இன் புட்ட கொஞ்சம் ஸ்ட்ராங்கா கொடுத்தால் தான் அவுட் புட் சீக்கிரம் வரும் போல
விவேகா….?
தொடரும்….
Konjam comment konjam ratings konjam share pannunga like pannunga drs
Episode 217’
வருண் அவளிடம் இருந்து அதை கோபமாக பிடிங்கி கொண்டு இன்பாவிடம் நீட்ட ம்ம் கொஞ்சம் சரி இல்ல வருண் உன்னை நல்லா கவனிக்க வேணும்.
“இன் புட்ட கொஞ்சம் ஸ்ட்ராங்கா கொடுத்தால் தான் அவுட் புட் சீக்கிரம் வரும் போல” என்று சொல்லி விட்டு அந்த கூலர்சை ஸ்டைலாக போட்டு கொண்டு அவளை ஓர கண்ணால் பார்த்து விட்டு கிளம்பினான்.
பப்பி நாயே என்று வாய்க்குள் முனகி கொண்டே நின்றாள். வருண் அவள் அருகில் வந்து “எப்படி விவேகா உன் கிட்ட அந்த ஃபைல் வந்தது நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்,இப்படி கேஸ் ஃபைல் எல்லாம் எடுத்து படிக்க கூடாது.இது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா?”
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க சரி நான் வருகிறேன் என்று சொல்லி கிலம்பினான். இங்கே செல்வத்துக்கு ஊரில் தன் தாயிடம் இருந்து போன் வந்தது.
கங்கா, செல்வத்தின் அப்பா ராமசாமி அவர்கள் உயர் இரத்த அழுத்தம் காரணமாக கீழே விழுந்து விட்டார். இப்பொழுது ஹாஸ்பிடல் அழைத்து கொண்டு சென்று இருக்கிறோம் என அழுது கொண்டே சொல்ல இதை கேட்டதும் கங்கா, செல்வம், தேவி இருவரும் உடனே ஊருக்கு கிளம்பினர்.
செல்வம் வருணிடம் “மாப்பிள்ளை சின்ன குட்டி யைப் அங்கே கோட்ரேஸ் கூட்டி போயிடுங்க” இதை கேட்ட தேவி பேச வருவதற்குள் விவேகா, இல்ல மாமச்சி வருணும், அதியும் இங்கே வரட்டும் இங்கே தான் கொஞ்சம் இடம் பெருசா இருக்கும் அதனால் நான் அங்கே போகல..
ம்ம் விவேகா சொல்றது சரி தான் அதி,நீயும் வருணும் இங்கே வந்து விடுங்கள். ஆதி அவளை பத்திரமா பார்த்து கொள் என்று சொல்லி விட்டு அவர்கள் மூவரும் கிளம்பினர்.
“என்ன அங்கே போனால் ஆன்கிரி பேர்ட அடிக்கடி பார்க்கலாம் பட் வாண்டடா இந்த ஜெர்க் ஜம்ப் எதுக்கு டி” என்று ஆதி கேட்க
ஹே உனக்கு அப்புச்சி பற்றி கவலை இல்ல அவனை பற்றி எதுக்கு பேசுற என்று உள்ளே நடந்தாள். ஆதி, என் தாத்தாவை பற்றி எனக்கு தெரியும் ஸ்டீல் பாடி சோ ஒன்னும் ஆகாது என்று அவன் அவளின் பின்னால் சென்றான்.
நீ இப்போ காரணம் சொல்லு டி என்று அவன் கையை பிடிக்க விவேகா, ஓ உனக்கு அவளை பார்க்க தோணுது அப்படி தானே நீ போ.. ஆதி, நீ யாரை சொல்ற.. ஹே நடிக்காத டா சீக்கிரம் கல்யாணம் பண்ணி தாத்தா கிட்ட காமி போ..
நீ எதுக்கு வென்பாவை பற்றி இப்போ பேசுற விவேகா சிரித்து கொண்டே நான் அவளை பற்றி தான் சொண்ட்ரண்ணு உனக்கு எப்படி தெரியும் என்று அவள் சிரிக்க அது அது நான் சும்மா சொன்னேன் போடி என்று அவன் செல்ல..
விவேகா அவன் கைகளை பிடித்து அருகில் அமர்த்தி கொண்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர். அதன் பின் எதுவும் பேசாமல் காலேஜ் கிளம்ப அங்கே இனியாழ் தான் டிரெண்டிங் டாப்பிக்கில் இருந்தாள்.
விவேகா, இதுக்கு தான் நான் அங்கே போக மாட்டேன்னு சொன்னேன் இப்போ இவள் டெய்லியும் எதோ ஒரு காரணம் சொல்லி அங்கே போறா..
யாழினி சிரித்த முகத்துடன் விவேகாவை பார்த்து கொண்டே வந்தாள். ஆதி அவள் வந்ததும் முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டான். என்ன யாழ் உன் முகம் டால் அடிக்குது..
அது ஒன்னும் இல்ல அண்ணாவுக்கு மேரேஜ் சோ கண்டிப்பா நீ, மைதிலி, அண்ட் சிவா அண்ட் ஆதித்யா எல்லாம் வரனும் என்று இன்விட்டேஷன் நீட்ட விவேகா அதை சிரித்து கொண்டே வாங்கினாள்.
அவள் மனதில் ஒரு சிறு சஞ்சலம் ‘ராகவ் சொன்னானே இந்த கல்யாணம் நடக்குமா!’ எப்படி இவள் ஆசையாக இருக்கிறாள் இவளுடைய அண்ணா எப்படி இதை ஏற்று கொள்ள போகிறார். என்று யோசித்து கொண்டு இருக்க யாழினி, விவேகா நீ கட்டாயம் வரனும் என்று சொல்லி ஆதி அருகில் போய் நின்று சிவாவை அழைத்தாள்.
சிவா, என்ன யாழ் என்னை கூப்பிடுற ஆனால் ஆதித்யாவை கூப்பிட வில்லையா! யாழினி, விவேகாவை கூப்பிட்டால் அவனை கூப்பிட தேவையில்லை அதான் நான் விவியை கூப்பிட்டேன் சோ கட்டாயம் ஆதி வருவான்.
இதை கேட்டதும் மைதிலி, சிவா, ஏன் ஆதியே பிரமிப்பாக பார்த்தான். இவள் இவள் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள் இத்தனை நாள் மிகவும் சுமுகமாக போகிறது இது தான் இவளுடைய உண்மையான முகமா என்று யோசித்து கொண்டு இருந்தான்.
நாட்கள் நகர நகர ஒரு வித பயம் எடுத்தது. கங்கா, செல்வன் சென்று ஒரு வாரம் ஆகி விட்டது.
ரவி கல்யாண வேலையில் மும்முரமாக இருக்க சரவணன் சுபா பின்னால் சுற்ற வில்லை அவனுக்கு அவள் மேல் பயமாக இருந்தது.
எதாவது செய்து விட வேண்டும் என்று அவன் ஒரு திட்டத்தை தீட்டி கொண்டு இருந்தான். கல்யாணம் நெருங்கும் நேரம் ஆதியின் தாத்தா இறந்து விட விவேகா, ஆதி, அதி, வருண் என அனைவரும் கிளம்பி விட்டனர்.
கல்யாணத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் என இருக்க..
இன்பா சரவணனை அழைத்தான். ம்ம் என்ன டா ஆச்சு எதுக்கு வர சொன்ன?இன்பா தலையை அழுத்தி கோதி கொண்டே டேய்*** இத்தனை நாள் எதுக்கு டா இவளோ பெரிய விஷயத்தை மறைத்த பேசாமல் மித்ரனுக்கு மாற்றா நீ போலீஸ்ல சேர்ந்து தொலைக்க வேண்டியது தானே..
இப்போ என்ன ஆச்சு எதுவும் பிரச்னையா! என்று ஒரு வித பதட்டத்தில கேட்க இன்பா, நான் எதிர் பார்க்க வில்லை டா இந்த வினய் இவ்வளவு மோசமான ஒரு ஆளா இருக்கானே!
எனக்கு போலீஸ் வேலை எல்லாம் செட் ஆகாது என்னோட புரோஃப்பசன் தான் முக்கியம் டா என்று தலையை கோதி கொண்டே சொன்னான். இன்பா அவன் கோதிய முடியை பிடித்து த்த்து இது எல்லாம் ஒரு கொள்கை..
சரவணன், ஏன் நீ மட்டும் மட்டமா ஒரு கொள்கை வைத்து இருக்கியே?நான் எதுவும் சொன்னேனா!
என்ன அது?
அதான் உன்னோட 69 என்று சொல்லி உதடு கடித்து ஹான் உன்னோட ஜோடி IPS தான்னு ஊரு ஃபுல்லா சொல்லிட்டு திரியுர..
இன்பா, ஹே திரும்ப சொல்லு..
அது உன்னோட ஜோடி IPS ன்னு..
இன்பா, டேய்*** இப்போ சொல்லல நான் உன்னை மாத்திடுவென்..
அது 69 டங்க் ஸ்லீப் ஆகி போச்சு டா..
இன்பா இதை கேட்டதும் அதிர்ச்சி ஆகி இந்த 69 அ யார் கிட்ட டிரை பண்ண உன்னை சுபா கிட்ட சொல்லவா?
டேய் டேய் நான் கனவில் கூட இப்படி நினைத்தது இல்ல டா பிளீஸ் இப்படி மாட்டி விடாத..
இன்பா, அதை அப்புறம் பார்க்கிறேன் என்று சொல்லி அவனை உற்று பார்த்தான்.
சரவணன், இப்போவாவது புரிந்து கொண்டாயே அதுவே போதும் இப்போ அடுத்து என்ன பண்ண போற..
உன்னை நான் ரொம்ப சாதாரணமா நினைத்து விட்டேன் ஆனால் நீ இருக்கியே என்று இன்பா முகத்தில் கோபமும் சிரிப்பும் சேர்ந்து இருந்தது.
சரவணன், இன்பா பிளீஸ் சுபா கிட்ட சொல்லாத டா நான் சில படம் தான் பார்ப்பேன்.
இன்பா, நீ போய் தாத்தா கிட்ட சொல்லிடு..
இதை பற்றி யாரு கிட்ட சொல்.. சொல்லணும்.. சொன்னால்.. என்று சரவணன் திக்க
இன்பா, டேய்*** எல்லாம் என் நேரம் இதை சொல்ல வேண்டாம் வெட்கம் கெட்டவனே!, அந்த வினய் பற்றி போய் சொல்லி தொலை, அதாவது கிருஷ்ணன் தாத்தா கிட்ட போய் சொல்லு டா, என்னை இவளோ பேச வைக்கிற நாயே..
சரவணன், சரி ரவி சார் கிட்ட யாரு சொல்றது. இன்பா ஒரு பெரு மூச்சை விட்டு ம்ம் நான் தான் அதுவும் சுபா விஷயத்தில் அவர் தப்பு பண்ணிட்டாரு அப்டின்னு சொன்னேன்னு வச்சுக்கோ..
என்ன நடக்கும் ?
ம்ம் எல்லாமே நடக்கும் இதுக்கு மொத்த காரணமும் நீ தான் டா நாயே என்று அவனை தள்ளி விட்டு கோபமாக வெளியே சென்றான் மீண்டும் உள்ளே வந்து அங்கு இருக்கும் தண்ணீர் ஜாடியில் உள்ள நீரை அவன் முகத்தில் ஊற்றி விட்டு சீக்கிரம் தாத்தா கிட்ட போய் பேசி தொலை நாயே என்று சொல்லி விட்டு சென்றான்.
வினய் பற்றிய மொத்த விஷயமும் அர்ஜுன் சேகரித்து குரு கிட்ட கூறினான். குரு அதை பார்த்து விட்டு ஒரு குரோத புன்னகை சிந்தி விட்டு நேராக spr கிட்ட இதை கூறினான்.
அர்ஜுன், சார் இப்போ அடுத்து என்ன பண்ணனும். குரு ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு இப்போ நான் அந்த கல்யாணத்துக்கு போகனும் ஒரு நல்ல பூங்கொத்து ரெடி பண்ணு..
இங்கே கவ்யா இன்பாவை பார்க்க முயற்சி செய்து கொண்டே இருந்தாள். சுபாவின் கல்யாணத்துக்கு நான்கு நாட்கள் லீவு போட்டு இருந்தான்.
கவ்யா தன் தந்தைக்கு போன் செய்தாள். சத்ய மூர்த்தியிடம் “டாடி எதாவது பண்ணி அந்த போலீஸ வர வைங்க இந்த கல்யாணம் நடந்தால் அந்த வினய் தங்கச்சி இன்பா கூட எப்படியும் ஒட்டி விடுவாள்.”
இல்ல மா இப்போ சூழ்நிலை சரி இல்ல என்னால் இப்போ ஊருக்கு வர முடியாது லேட் ஆகும் நான் கூடிய சீக்கிரத்தில் வந்து உன் படிப்பு முடிவதற்குள் அந்த நளன் கிட்ட பேசி உனக்கும் அவர்கும் கல்யாணம் ஏற்பாடு பண்றேன் நீ எதை பற்றியும் கவலை படாத என்று சொல்லி வைத்து விட்டார்.
வருண் மட்டும் டூட்டிக்கு மீண்டும் வந்து விட்டான். விவேகா, ஆதி, அதி, கங்கா, தேவி, செல்வம் என அனைவரும் ஊரில் இருந்தனர்.
இனியாள் கவ்யாவுக்கு போன் செய்து அவளிடம் சீக்கிரமே இன்பா weds இனியாள் அப்டின்னு எதிர் பார்க்கலாம் என்று வெறுப்பேற்றி விட்டு போனை வைத்து விட..
எதுவும் செய்யணுமே என்று அவள் யோசித்து கொண்டு இருக்க அவள் நினைவில் ரவிசந்திரன் வந்தார். ம்ம் கவ்யா யூ டூ இட் என்று தனக்கு தானே சொல்லி கொண்டு வேலையை ஆரம்பித்தாள்.
வாழை மரம் தன் குழையுடன் வரவேற்பது போல் இரு புறம் தலை சாய்ந்து இருக்க உள்ளே மங்கள வாத்தியங்கள் ஒரு பக்கம் இசைந்து கொண்டு இருந்தது. ரவி சந்திரன் பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிளைக்கே டஃப் கொடுப்பது போல் அங்கும் இங்கும் ஓடி கொண்டும் அனைவரையும் கவனித்து கொண்டு இருந்தார். கூடவே அவருக்கு இணையாக வசுமதி சேர்ந்து கொண்டார்.
ஒரு பிரம்மாண்ட மண்டபத்தில் அனைத்து சொந்த பந்தமும் கூடி இருக்க வினய் வெற்றி களிப்பில் சுபாவை இன்னும் கொஞ்ச நேரத்துல சொந்தம் ஆக்கிகொள்ள போகிறோம் என்று நினைத்து கொண்டு அதே பூரிப்பில் தயாராகி கொண்டு இருந்தான்.
ஒரு பக்கம் போட்டோ வீடியோ எடுத்து தள்ளி கொண்டு இருந்தனர். அதற்கு மட்டும் வினய் கிட்ட தட்ட 5லட்சத்தில் புக் செய்து இருந்தான். பெரிய வீட்டு கல்யாணம் முக்கிய புள்ளிகள் அனைவரும் வருவதால் அதற்கு போலீஸ் பாதுகாப்பு கூட கேட்டு இருந்தான்.
சுபா அவளது அறையில் மயில் பச்சை வண்ண முகூர்த்த புடவையில் அழகு சிலையாக தயாராகி கொண்டு இருக்க அருகில் பிரியா, வருணி, யாழினி, இனியாழ் என அனைவரும் இருந்தனர்.
தேவகியுடன், மித்ரன், வெண்பா, திருமணத்துக்கு வந்து இருந்தனர். வசுமதி அனைவரையும் வரவேற்று அமர வைத்தார்.
வசுமதி வெண்பாவிடம் எங்கே மா வாயாடியை காணோம்!
ஆன்டி அவங்க தாத்தா தவறி விட்டார்கள் அதனால் அவள் ஊரில் இருக்கா வருண் அண்ணா வருவாங்க அப்டின்னு நினைக்கிறேன்.
ஓ அப்படியா சரி உள்ளே போ சுபா அக்கா அங்கே இருக்கா மித்ரன் இது தான் வர நேரமா எங்கே சரவணன்?
அவன் வருவான் மேடம்..
டேய் !
சாரி சாரி வருவான் ஆன்டி என்று சொல்லி மித்ரன் அங்கே லோகேஷ் போன் பேசி கொண்டு இருப்பதை பார்த்து அவனு நோக்கி சென்றான்.
இங்கே வெண்பா உள்ளே சென்று சுபாவை பார்க்க அவள் வெண்பா உங்க வீட்டில் எல்லாம் வந்தாச்சா!
ம்ம் மேம் இன்னும் சரவணன் மட்டும் கொஞ்ச நேரத்தில் வருவான்.
இதை கேட்டதும் இதயம் படபடத்து கொண்டு இருந்தது நல்லதே நடக்கும் சுபா இல்ல அப்டின்னா இது தான் உன் விதி என்று ஏற்று கொள்ள வேண்டும் என்று முதன் முதலில் அவள் கண்களில் ஒரு அச்சம் தோன்றியது
சிபி, அருண், சக்ரவர்த்தி, வென் மதி, மதிவாணன், சுரமஞ்சரி, இளவழகன், நளன், தமயந்தி, சந்திர நந்தினி, கபிலன்(நந்தினியின் மகன் ), கலையரசன்(நந்தினியின் கணவன்) என அனைவரும் அங்கங்கே அவர்கள் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் பேசி கொண்டு இருந்தனர்.
வெண்மதி, அண்ணா அம்மாவும் அப்பாவும் எங்கே காணோம் என்று மதிவணனிடம் கேட்க
சுரமஞ்சரி, இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவார்கள் அண்ணி இப்போ தான் கால் பண்ணேன். என்று அவன் வென்மதிக்கு பதில் அளித்தாள்.
அந்த நேரம் நான்கு காவலாளிகளுடன் நடுவில் கம்பீரமாக குரு பிரகாஷ் கைகளில் ஒரு பொக்கேயுடன் மண்டபத்தில் நுழைந்தான். அவனை அர்ஜுன் பின் தொடர்ந்தான்.
வசுமதி அவனை ஒரு வித அதிர்ச்சியுடன் அப்படியே நின்று பார்த்து கொண்டு இருக்க அங்கு வந்து இருக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் குரு பிரகாஷ் வருவதை பார்த்து எழுந்து நின்று மரியாதை செலுத்தி கொண்டு இருக்க..
அவன் ஒரு எளன புன்னகையுடன் நடந்து வந்து கொண்டு இருந்தான். ரவி, ஹே மதி என்ன அப்படியே நிக்கிற வசுமதி, இவரை யாரு இன்வைட் பண்ணது.. ரவி அதை நான் தான் உன் கிட்ட கேட்கணும் எங்கே உன் புள்ளை இது என் ஏஞ்சல் கல்யாணம் அவனால் எதுவும் பிரச்னை வந்தது. அப்புறம் நீ இது வரை பார்க்காத ஒரு ரவி சந்திரனை பார்ப்ப என்று மிரட்டல் விடுத்து விட்டு செல்ல..
மித்ரன் குரு பிரகாஷ் வந்து இருப்பதை பார்த்து விட்டு இன்பாவை தேடி சென்றான்.
தொடரும்..
அடுத்து என்ன நடக்கும் ?
சுபா கல்யாணம் யாரு கூட உங்க எதிர் பார்ப்பு நிறைவேருமா…?
நாளைக்கு தான் கல்யாணம் சீன்..
Konjam comment konjam rating and share like keep reading drs
Episode 218
மித்ரன் குரு பிரகாஷ் வந்து இருப்பதை பார்த்து விட்டு இன்பாவை தேடி சென்றான். லோகேஷ் இண்பாவுக்கு அழைத்து கொண்டே நடக்க மித்ரன் இணைந்து கொண்டான்.
“ஹே என்ன டா இந்த குரு பொக்கேயொட வந்து இருக்கான் இந்த இன்பா எங்கே?” என்று கேட்டு கொண்டே மித்ரன் நடக்க லோகேஷ், அவன் போன் எடுக்க மாட்டின்றான் டா..
இரு இங்கே தான் எங்கேயும் இருப்பான் என்று அங்கு இருக்கும் அறையை செக் செய்து கொண்டே செல்ல இன்பா ஒரு இடத்தில் அமர்ந்து போனில் கேம் விளையாடி கொண்டு இருந்தான்.
அந்த போனில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க அங்கே இன்பா வை பார்த்து இருவரும் அதிர்ச்சி ஆகி அவன் அருகில் எத்தனாவது லெவல்? இன்பா, ம்ம் 78th லெவல் என்று திடுக்கிட்டு திரும்பி பார்த்தான்.
லோகேஷ், டேய் இங்கே என்ன நடக்க போகுத்துன்னு தெரியல நீ பாட்டுக்கு இங்கே கேம் விளையாடிட்டு இருக்க அங்கே யாரு வந்து இருக்காங்கன்னு தெரியுமா!
யார் வந்து இருக்கா? என்று போனை ஆப் செய்து விட்டு அவர்கள் இருவரையும் பார்த்தான்.
மித்ரன் கொஞ்சம் படபடப்புடன் அந்த குரு பிரகாஷ் வந்து இருக்கான் டா. வசு மேம் டென்ஷனா இருக்காங்க, அண்ட் அவன் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்து விட்டான் இப்போ என்ன செய்ய போறான்னு தெரியலயே.
ஜஸ்ட் ச்சில் பார்த்து கொள்ளலாம் டா லோகேஷ் ரெண்டு பேரும் போங்க நான் பின்னால் வருகிறேன். இப்போ என்ன டா வா நம்ப ஒன்றாக போலாம்.
இன்பா ஒரு பார்வை அழுத்தமாக பார்க்க அவர்கள் இருவரும் அமைதியாக சென்றனர்.
எங்கே இருக்கீங்க? என்று போனில் பேசினான் மறு முனை என்ன பதில் சொன்னதோ ஒரு வித கோபத்துடன் மேலே இருந்து கீழே இறங்கி வந்தான். ம்ம் ஆட்டம் ஆரம்பித்து விட்டது மிஸ்டர் ரவி சந்திரன் அப்படி என்ன செய்து விட போகிறார் கூல் ராகவ் இப்போ நீ இன்ப ராகவனா மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.
மணவறையில் ஓம குண்டம் முன் அந்த குருக்கள் மாப்பிள்ளையை அழைத்து வாங்க என்று சொல்ல வினய் அவனுடைய நட்பு வட்டத்துடன் வந்தான் அவன் அருகில் யாழினி, அவளுடைய அம்மா லக்ஷ்மி வர சிரித்த முகத்துடன் சந்தோஷ மன நிலையில் வந்தவன் சபையினர் அனைவருக்கும் வணக்கம் சொல்லி அமர்ந்தான்.
இன்பா எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் கீழே இறங்கி வந்தான் அவன் அருகில் லோகேஷ், மித்ரன் வந்து நின்று கொண்டனர். ரவி இன்பாவை ஒரு பார்வை பார்த்து விட்டு வசுமதியை பார்த்தார்.
அந்த குருக்கள் மந்திரம் சொல்ல சொல்ல அவனும் பின்னால் சொல்லி கொண்டே இருக்க சிறிது நேரத்தில் மணப்பெண் அழைத்து வாங்கோ என்று சொல்ல சுபா வந்து வினய் அருகில் அமர்ந்தாள்.
குருக்கள் அர்ச்சதை தட்டை நீட்ட அதை இனியாழ் வாங்கி கொண்டு அங்கு இருந்த அனைவருக்கும் கொடுக்க அங்கு இருப்பவர்கள் ஆசிர்வதித்து அர்ச்சதை அரிசியை எடுத்து கொண்டனர்.
மீண்டும் மேடைக்கு கொண்டு வந்து குருகளிடம் நீட்டிட அதை வாங்கிய குருக்கள் அந்த மஞ்சள் கயிற்றால் சுற்ற பட்ட 7 சவரன் மாங்கல்ய கொடியை வினய் முன் நீட்ட அவன் சுபாவின் கழுத்தில் மூன்று முடிச்சும் அவனே போட்டான். அர்ச்சதை அனைவரும் தூவ சுபா கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தாள்.
சுபா…!
சுபா…!
இப்போவே கனவு கொண்டு இருக்கிறாயா நீ இன்னும் கொஞ்ச நேரத்துல என் தேவதையாக மாற போற அண்ட் இப்போ நம்ப மாலை தான் மாற்றி கொள்ள போறோம் என்று காதல் வார்த்தைகள் அவள் காதுக்குள் பேசினான் வினய்.
அப்போ இது கனவா!
ச்ச இவளோ கொடுமையா இருக்கே என்று சுபா வின் உள்ளம் நடுங்கியது. அந்த குருக்கள் மணப்பெண்ணை அழைத்து வாங்கோ! என்று அவர் சொல்ல வினய் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.
சுபா முகத்தில் எதோ ஒரு மூலையில் அத்தனை தவிப்பு தன் காதல் கை கூடிய நிலையில் அது கை சேருமா என்ற ஏக்க ம் தான் இப்பொழுதே அந்த மாலையை தூக்கி எறிந்து விட்டு ஓட வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் ரவி முகம் அந்த கண்ணகுழி சிரிப்பை பார்த்த அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கோழைக்கு காதல் தேவை இல்லை என்று நினைத்து கொண்டே அமர்ந்தாள்.
வென்மதி, என்ன அண்ணா இன்னும் அப்பா அம்மா, வரல.. உடனே மதிவாணன் எழுந்து செல்ல போக குருக்கள், பொன்னுடைய தாய்மாமன், அத்தை வாங்கோ என்று சொல்ல மதிவானன், மஞ்சரி இருவரும் எழுந்து சடங்கு மாலை பாத பூஜை என செய்ய கிளம்பினர்.
அதே போல் வினய் வீட்டில் மாமா, அத்தை என அவர்களும் சடங்கு செய்ய.
ஒரு நிமிடம் இந்த குரு என்ன செய்கிறான். ஹான் குரு பார்வை மணமெடையை தான் பார்த்து கொண்டு இருந்தது. ரவிக்கு ஏனோ மனம் எல்லாம் கொஞ்சம் பாரம் தன் ஆசை மகளை திருமணம் செய்து கொடுக்க போகிறோம் என்ற அந்த உணர்வு இருக்க வசுமதி அவர் கைகளை பிடித்து கொண்டார்.
இன்பா மண மேடை, மண்டப வாசல், குரு, வினய், சுபா என பார்வையை சுழல விட்டு கொண்டு இருக்க
குரு எழுந்தான். அந்த அரங்கத்தில உள்ள மொத்த கூட்டமும் அவனை பார்க்க இன்பா அவனை பார்த்து கொண்டே நின்றான். குரு நேராக ரவியின் அருகில் செல்ல வசுமதி பதட்டத்தில் நின்று கொண்டு இருந்தார்.
குரு, சார் எனக்கு கொஞ்சம் டைம் இல்ல இப்போ வினய்க்கு கல்யாண வாழ்த்து சொல்லி விட்டு கிளம்புகிறேன்…
ரவி, ஓகே மிஸ்டர் என்று நிறுத்த ம்ம் என்னோட நேம் குரு பிரகாஷ் என்று கைகளை நீட்டினான். ரவி அவன் கைகளை கொடுக்க குலுக்கி விட்டு இன்பாவை ஒரு பார்வை பார்த்து கொண்டே மேலே ஏறினான்.
வசுமதி, ராகவ் என்ன டா இது என்று கேட்க இன்பா கண்கலால் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு நின்றான்.
குரு வினய் கைகளில் அந்த பொக்கேயை கொடுத்து கைகளை குலுக்கி ஒரு இரு வார்த்தைகள் பேசி விட்டு கீழே இறங்க..
அந்த குருக்கள், மாங்கல்யம் ஆசிர்வாதம் பண்ணுங்க.. என்று சொல்ல இனியாழ் அந்த தட்டை வாங்கி கொண்டு கீழே இறங்கி குரு சார் என்று அழைக்க அவன் சிரித்த முகத்துடன் திரும்பினான். ம்ம் சொல்லுங்க.. இந்தாங்கா என்று சொல்லி அரச்சதை தட்டு நீட்ட குரு இன்பாவை பார்த்து கொண்டே அதை தொட்டு வணங்கி விட்டு கொஞ்சம் எடுது கொண்டான்.
அனைவரிடமும் கொடுக்க அர்ச்சதை எடுத்து கொண்டு இன்பாவின் பார்வை வினய் மீது இருந்தது. சுபா எதுவும் சொல்லாமல் உதடு துடிக்க கண்களில் நீர் கோர்க்க குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து இருந்தாள் இதயம் வெடித்து விடும் அளவுக்கு துடித்தது.
வசுமதி, என்னங்க இன்னும் அப்பாவும் அம்மாவும் வரல கொஞ்சம் வெயிட் பண்ணலாம் தானே இன்னும் டைம் இருக்கு.. ரவி அவளை எரிப்பது போல் ஒரு பார்வை தான் பார்த்தார். வசுமதி அமைதியாகி விட்டார். உன் குடும்பம் தான் டி எனக்கு பிரச்னை அப்படி உன் அப்பாவுக்கு என்ன வெட்டி முறிக்கும் வேலை ஒரு ஆர்மி மேன்க்கு டைம் பஞ்ச்சுவல் இருக்கணும் தானே.. என்று சொல்லி கொண்டு இருக்கும் போது
இன்பாவின் போனுக்கு அழைப்பு வந்தது. இன்பா அதை எடுத்து பேசி விட்டு முன்னே நடந்து வந்தன். அதே நேரம் ரவியின் போனிலும் திரும்ப திரும்ப அழைப்பு வந்து கொண்டே இருக்க அதை அவர் சைலன்டில் போட்டு விட்டார்.
வசுமதி போதும் எதுவும் பேச வேண்டாம். என்று சொல்லி விட்டு பார்வையை மாப்பிள்ளை பெண் மீது செலுத்தினார். அந்த குருக்கள் தாலியை எடுத்து உயர்த்தி காட்டி வினய் கைகளில் கொடுத்து
கெட்டி மேளம்!
கெட்டி மேளம் ! என்று சொல்ல அனைவரும் அர்ச்சதை தூவ சுபா கண்களில் நீர் கொட்ட ஒரே நேரத்தில் இரண்டு சத்தம் “நிறுத்துங்க!” இன்னொன்று இந்த “கல்யாணம் நடக்காது!”என்று சொல்லி வினய் எழுந்து நின்றான்.
லோகேஷ், மித்ரன் ஒரு சேர” இன்பா என்ன டா இது இப்படி பண்ற? “
அனைவரது கைகளும் அப்படியே நின்றது. என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று ஒருவரை ஒருவர் பார்த்து கேட்டு கொள்ள கூட்டத்தில் சலாலப்பு ஏற்பட்டது. சுபா ஒரு பெரு மூச்சை விட்டு கண்களை திறந்தாள்.
வினய், இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்லி மாலையை கலட்டி விட்டு எழுந்தான். ரவி, என்ன ஆச்சு மாப்பிள்ளை என்று கேட்டு கொண்டே முன்னால் வர வசுமதியின் பார்வை இன்பாவின் மேல் இருந்தது.
அவர் ராகவ் என்ன ஆச்சு இப்போ எதுக்கு நிறுத்துங்க அப்டின்னு கத்தின! வினய் அந்த மாலையை கலட்டி வீசி விட்டு மண மேடையில் இருந்து கீழே இறங்கினான். ரவி தவித்து கொண்டே வினய் கிட்ட என்ன ஆச்சு எல்லாம் சரியா தானே இருக்கு..
இல்ல சார் இந்த கல்யாண மேடை ஏறும்போது தான் என்னோட காதல் புரிந்தது. வினயின் அப்பா செந்தில் அவன் சட்டையை பிடித்து என்ன வினய் இது விளையாட்டு என்று அடிக்க வர வினய், அப்பா நான் தீபிகாவை லவ் பண்றேன் அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று சொல்லி விட்டு அந்த மண்டபத்தை விட்டு செல்ல ஆரம்பித்தான்.
ரவி கோபத்தில் ஹலோ மிஸ்டர் வினய் உங்க மனசில் என்ன நினைத்து கொண்டு இருக்கீங்க என்று பேசி கொண்டே வினயின் சட்டையை பிடிக்க குரு வினயை சட்டென்று அவன் பக்கம் இழுத்து கொண்டான்.
ரவி அவனை பார்வையில் துளைத்து எடுக்க குரு அவன் கண்ணாடியை கலட்டி கொண்டே விருப்பம் இல்லாத கல்யாணத்தை வற்புறுத்தி கட்டாய கல்யாணமா மாத்த போறீங்களா என்ன அதுக்கு என்ன தண்டனை அப்டின்னு உங்க மனைவி பையன் கிட்ட கேளுங்க..
அண்ட் மிஸ்டர் ரவிச்சந்திரன் நீங்க தப்பு பண்றீங்க வினய் சொன்னதுக்கு முன்னாடி உங்க பையன் நிறுத்துங்கன்னு சொன்னானே அதை முதலில் கேளுங்க.. என்று சொல்லி விட்டு இன்பாவை பார்க்க அந்த இடத்தில் உள்ள மொத்த கூட்டமும் ஒரு துளி சத்தம் இல்லாமல் ரவிசந்திரனை தான் பார்த்தது.
மதிவாணன், சக்ரவர்த்தி, நளன், சிபி, இளவழகன், நந்தினி என அனைவரும் இன்பாவின் அருகில் வந்து மாற்றி மாற்றி கேள்வி கேட்க
வசு, ராகவ் என்ன டா இது எதுக்கு இப்படி சொன்ன..
ரவி கோபத்தில் உதட்டை கடித்து கொண்டே” அவன் எப்படி சொல்லுவான் கடைசியா அவன் நினைத்ததை சாதித்து விட்டானே” என்று வேக நடையுடன் ரவி இன்பாவின் அருகில் வர அதற்குள் வசுமதி ரவியின் கோவத்தை பார்த்து இன்பா கன்னத்தில் ஓங்கி அரை விட்டாள்.
ம்ம் இன்டர்ஸ்டிங்கா இருக்கே என்று குரு அங்கே உள்ள சேர்ரில் அமர வினய் தயக்கத்துடன் சார் என்று நிற்க
குரு, அர்ஜுன் பாதுகாப்பா கூட்டி போ..
ஒகே பாஸ் என்று அவன் இரண்டு காவலாளிகள் கூட காரில் பாதுகாப்பாக அனுப்பி வைக்க இங்கே இணியாள், யாழினி கண்கள் கலங்கி அதிர்ச்சியுடன் நின்று கொண்டு இருந்தனர்.
அந்த இடத்தில் உள்ள அனைவர் பார்வையும் இன்பாவின் மேல் தான் இருந்தது. ரவி அவன் அருகில் நெருங்கி வர
வசுமதி, அப்போ இது எல்லாம் உனக்கு முன்னாடியே தெரியும் அப்படி தானே சொல்லு டா வாயை திறந்து சொல்லு என்று அவன் சட்டையை பிடிக்க..
இன்பா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
வசுமதி, கண்களில் கண்ணீருடன் ஏன் டா இப்படி மண்ணு மாதிரி நிக்கிற வாயை திற..
ரவியின் காதுகளில் ச்ச இவளோ பெரிய பிஸ்னஸ் மேனா இருந்து என்ன செய்ய இப்படி பொன்னு கல்யாண மணமேடையில் இருந்து வேண்டாம் அப்டின்னு சொல்லி விட்டு போயிட்டான். இந்த ரவி தீர விசாரித்தாரா? இல்லையா? இந்த இன்பா வேற கல்யானத்தை நிறுத்துங்கன்னு சொன்னான் அப்போ முன்னாடியே எல்லாம் தெரிந்து இருக்குமா! என்ன குடும்பம் இது என்று ஆள் ஆளுக்கு ஒவ்வொன்று பேசினர்.
குரு, அர்ஜுன் எதுவும் ஸ்நாக்ஸ் சொல்லு இன்னும் நல்லா இருக்கும்..
அவன் திகைத்து கொண்டே நின்றான்.
சுபா மணமேடையில் இருந்து “டாடி போதும் வேண்டாம்” என்று சொல்லி கொண்டே எழ
இந்த கல்யாணம் நடக்கும் அதுவும் இன்னிக்கே இப்போவே நடக்கும் என்று சொல்லி கொண்டே கிருஷ்ணன் உள்ளே வர அவர் பின் பாவையும் வந்தார்.
அனைவரும் சத்தம் வந்த திசையை பார்த்தனர்….
தொடரும்…
Comment பண்ணுங்க like pannunga இன்னும் மாப்பிள்ளை வரல.. சீக்கிரம் வா டா மாப்பிள்ளை..
ம்ம்
Episode 219
சுபா மணமேடையில் இருந்து “டாடி போதும் வேண்டாம்” என்று சொல்லி கொண்டே எழ
இந்த கல்யாணம் நடக்கும் அதுவும் இன்னிக்கே இப்போவே நடக்கும் என்று சொல்லி கொண்டே கிருஷ்ணன் உள்ளே வர அவர் பின் பாவையும் வந்தார்.
ரவி உட்பட அனைவரும் திரும்பி வாசலை பார்க்க அங்கே கிருஷ்ணன் வேகமாக வந்து கொண்டு இருந்தார்.
சுபா மேடையில் இருந்து எழுந்து நிற்க கிருஷ்ணன், சுபா சிட் டவ்ன்! அவள் அப்படியே நிற்க ஐ சே சிட் டவுன்..
கிருஷ்ணன் நேராக இன்பா அருகில் வந்து வசுமதி என்ன இது ராகவ் மேலே இருந்து கையை எடு?
நந்தினி, அண்ணா எல்லாம் நீ கொடுக்கும் இடம் இப்போ பாரு நம்ம சுபா குட்டி இந்த நிலைக்கு வந்து நிக்கிறா..
வசுமதி கண்களை துடைத்து கொண்டே எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க அந்த நேரம் கவ்யா மண்டபத்தில் நுழைந்து கொண்டே இந்த கல்யாணத்தை நிறுத்துங்க ! என்று அவள் எல்லாம் முடிந்த பின் பேச வர யாரு டா இவள் புதுசா எல்லாம் முடிந்ததும் லேட்டா முதலில் இருந்து ஆரம்பிக்கிறா! என்று பார்த்தனர்.
இனியாழ் அவளை ஆச்சரியமாக பார்க்க குரு அவளை அதற்கும் மேல் பார்த்தான் அவன் மனதில் “காதலனை சேவ் பண்ண காதலியா இருக்கட்டும் தட்டி தூக்குறேன் டி”
அவளையே எல்லோரும் பார்க்க அப்பொழுது தான் ஏற்கனவே கல்யாணம் நின்று விட்டது என்று தெரிந்தது. அந்த நேரம் சரவணன் உள்ளே வந்தான். நேராக தேவகி அருகில் சென்று நின்று கொண்டான்.
தேவகி வருத்தமாக சரவணா கல்யாணம் நிண்ணு போச்சு டா பாவம் சுபா டா, அய்யோ ரவி அண்ணா பாவம் டா..
வெண்பா, ம்ம் இந்த வினய் ரொம்ப மோசமானவன் போல அவனால் இன்பா அண்ணாவை வசு ஆன்டி அடித்து விட்டார்கள் சரவணா! என்று அவளும் வருத்தப்பட்டு சொல்லி கொண்டு இருக்க சரவணன் இன்பாவை அங்கே இருந்து பார்த்தான்.
இன்பா இப்பொழுது பேசினான். அவன் கிருஷ்ணனிடம் தாத்தா நான் அவர் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். நந்தினி, எதுவா இருந்தாலும் இங்கேயே பேசு டா உன்னால் என் அண்ணனுக்கு என்ன என்ன நடக்குமோ!
நளன், கொஞ்சம் அமைதியா இரு நந்து இல்ல அவ்ளோ தான்..
ரவி கண்கள் எல்லாம் சிவந்து இருந்தது.” இனி பேச என்ன இருக்கு எல்லாரும் கிளம்புங்க இந்த கல்யாணம்”.. என்று உதடு கடித்து தன் கவலையை மறைக்க
தாத்தா அவர் கிட்டயும் அவங்க மனைவி கிட்டயும் ஒரே ஒரு தடவை பேசி விட்டு கிளம்புகிறேன் சொல்லுங்க என்று இன்பா விறைப்பாக பதில் சொல்ல
கவ்யா அங்கில் எவ்ளோ தடவை உங்களுக்கு டிரை பண்ணேன் தெரியுமா யாரும் இன்பராகவன் சாரை எதுவும் சொல்லாதீங்க..
இன்பா, கவ்யா உன்னை யார் இங்கே வர சொன்னது கீப் சைலண்ட தாத்தா சொல்லுங்க என்று சொல்லி விட்டு அங்கே இருக்கும் மணமகள் அறைக்கு சென்றான்.
சக்கரவர்த்தி ரவியின் அருகில் சென்று சகளை போங்க ராகவ் சொல்றத கேளுங்க மதிவாணன், வசு போ மா அவன் உன்னையும் தானே கூப்பிட்டான் என்று சொல்ல கிருஷ்ணன், வசுமதி, ரவிசந்திரன் என மூவரும் அறைக்குள் செல்ல
மதிவாணன் மற்றும் சக்ரவர்த்தி இருவரும் அங்கு உள்ளா உறவினர்கள் அனைவரையும் கல்யாணம் நடக்கும் என்று சொல்லி அமர வைத்தனர்.
குரு கவ்யாவை பார்த்து கொண்டு இருக்க அவள் நினைவில் இவனை! இவனை எங்கோ பார்த்தது போல் இருக்கே!யார் இவன்? என்று யோசித்து விட்டு ஒரு இடத்தில் நின்று கொண்டு இருந்தாள்.
மித்ரன் கவ்யா அருகில் வந்து பேச்சு கொடுக்க அவள் வினய் பற்றிய அனைத்து விஷயமும் கூறினாள்.
தமயந்தி அழுது கொண்டே மேடைக்கு சென்று தன் பேத்தியை அணைத்து கொள்ள நந்தினி, “சுபா செல்லம் நீ கவலை படாதே விட்டு தள்ளு டா அவனிடம் இருந்து நீ தப்பித்து விட்டாய்” என்று சொல்லி
அவள் யாழினி, இனியாளை பார்த்து “உங்களுக்கு இன்னும் இங்கே என்ன வேலை? உங்க பையன் செய்த தப்புக்கு என் அண்ணபையன் இப்போ எல்லாததையம் வாங்கி கட்டி கொண்டு நிற்கிறான்.” என்று சொல்லி அவர்களை அப்படி இப்படி என்று கிழியோ கிழி என்று திட்டி தீர்த்து விட அதற்கு மேல் அவர்கள் அங்கு இருந்து கிளம்ப
அதை கவ்யா புன்னகை முகத்துடன் பார்த்து நிறைவாக புன்னகைத்து கொண்டே இனியாழ் அருகில் சென்று அவளை இன்னும் வெருப்பெற்றி அனுப்பி வைத்தாள்.
அங்கே உள்ளே இன்பா, “இந்த வினய் விஷயம் ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் தெரியும், அப்படியே நான் வந்து உங்க கிட்ட சொன்னால் நீங்க நிச்சயம் என்னை நம்ப மாட்டிங்க”
ரவி, “நான் நம்ப மாட்டேன்னு இவன் எப்படி சொல்லலாம் “என்று கைகளை இறுக்கி மூடி திறந்தார்.
அவன் சிறிது நேரம் கழித்து அதனால் தான் நான் வெயிட் பண்ணேன். ஆனால் எனக்கு தெரிந்த விஷயம் இது இல்ல..
வசுமதி, என்ன விஷயம்?
இன்பா அந்த அறையில் உள்ள அவன் பேக்ல இருந்து ஒரு ஃபைல எடுத்து நீட்டி விட அதை வசுமதி திறந்து பார்க்க பார்க்க இன்பா பேச தொடங்கினான்.”அந்த சாக்லேட் ஃபேக்டரி ல இருந்து வர எல்லா இனிப்பிலும் ஒரு போதை பொருள் சேர்த்து இருக்கான் அது இரத்தத்தில் கலந்து போனால் கூட நம்மால் பிரிடிக்ட் பண்ண முடியாத அளவுக்கு கிரிமினல் மைன்டோட வேலை செய்து இருக்கான்.” என்று சொல்லி
வசுமதியை பார்த்து நீங்க ஹேண்டில் பண்ணிட்டு இருக்க அந்த குழந்தைகளோட கேஸ் அதுக்கு காரணம் இது தான் அண்ட் அது மட்டும் இல்லாமல் டீன் ஏஜ் பசங்க பிள்ளைகளுக்கு ஹார்மோன் சேன்ஜ பண்ற சில வேலை எல்லாம் அந்த புரோடெக்ட் ல மிக்ஸ் பண்ணி இருக்கான்.
அண்ட் இந்த கல்யாணம் எதுக்கு தெரியுமா? என்று வசுமதி, ரவி இருவரையும் பார்த்து விட்டு ஒரு புன்னகையுடன் தாத்தா உங்க பொன்னும் போலீஸ்(வசுமதி) நானும் போலீஸ்
அது இல்லாமல்
அவன்க கணவர் பிஸ்னஸ் கிங் சோ இந்த இடத்தில் இருந்தால் தப்பை மூடி மறைத்து விட்டு ஜாலியா சேஃப்பா இருக்கலாம். என்று சொல்லி நிறுத்தி விட வசுமதி, ரவியின் முகம் எல்லாம் மாறி போனது.
வசுமதி கண் கலங்கிய முகத்துடன் ராகவ். என்று அருகே வர தாத்தா என்று கிருஷ்ணன் அருகில் சென்று ஆக மொத்தத்தில்” உங்க பொண்ணுக்கும்,அவருடைய கணவருக்கும் கல்யாணம் நின்று போனது தான் இப்போ பிரச்சனையே தவிர சுபா வாழ்க்கை முக்கியம் இல்ல,”
ஆனால் எனக்கு சுபா முக்கியம் அண்ட் இன்னொரு விஸயம் இதை நான் அன்னிக்கே சொல்லாமல் இருந்தது என்னுடைய தப்பு தான் ஆனால் இன்னிக்கி அந்த வினய் சொல்லிட்டு போனது புது கதை இனி அவங்களே முடிவு பன்னட்டும். என்று சொல்லி இரண்டு அடி வைத்தவன் தாத்தா “நான் கல்யாணத்தை நிறுத்துங்க அப்டின்னு சொல்ல வரதுக்கு முன்னே வினய் சொல்லி விட்டான் .”
சோ இதை நான் நிறுத்தல அண்ட் ஒரு அப்பாவா சுபா விஷயத்தில் அவர் தோர்த்து போயிட்டாரு ஆனால் என் மாம் வளர்ப்பு சரின்னு இப்போ நான் ஜெயித்து நிரூபித்து விட்டேன். இந்த ஸ்டேடஸ் பார்த்து இப்போ சுபா வாழ்க்கை கேள்வி குறியில் நிக்குது சோ உங்க மாப்பிள்ளை கிட்ட அதை தூக்கி போட சொல்லி விட்டு அடுத்து என்ன பண்ணனுமோ அதை பண்ணுங்க..
” இந்த விஷயம் எல்லாம் கண்டு பிடித்து சுபாவை காப்பாற்றியது எல்லாம் சரவணன் தான்” நான் இல்ல அதனால் ஸ்டேடஸ பார்க்காமல் உங்க மாப்பிள்ளையை அவனுக்கு ஒரு நன்றி சொல்ல சொல்லுங்க என்று சொல்லி விட்டு அந்த அறையை திறந்து கொண்டு வெளியே வந்தான். நேராக மேலே ஏறி அவன் தங்கி இருக்கும் அறைக்கு சென்றான்.
அவன் பின்னால் யாரும் செல்ல வில்லை. கவ்யா வேகமாக அவனுக்கு ஈடு கொடுத்து படியேறி செல்ல அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்து” கெட் அவுட் கவ்யா”என்று கத்தி விட்டு சென்று விட்டான்.
சரவணன் கொஞ்சம் எட்ட நின்று இன்பாவுக்கு அழைக்க இன்பா, டேய் *** கொன்றுவேன் என்று சொல்லி போனை சுவிட்ச் ஆப் செய்தான்.
அந்த அறையின் உள்ளே வசுமதி அமர்ந்து அழுது கொண்டு இருக்க கிருஷ்ணன், வசுமதி என்ன இது என் பொண்ணு இப்படி கண் கலங்களாமா! என்று சொல்லி விட்டு ரவியை பார்த்து மாப்பிள்ளை அவன் சும்மா பேசிட்டு போறான் நீங்க அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க இப்போ கூட நீங்க தான் ஜெயித்து இருக்கீங்க ஏன்னா ராகவ் உங்க இரத்தம் இப்போ கூட டைம் இருக்கு நம்ம சுபாவுக்கு இதே முகூர்த்ததில் ஒரு பையனை கல்யாணம் பண்ணி வைத்து விடலாம்..
ரவி எதையோ யோசித்து விட்டு மாமா நான் சரவணனை பார்க்கனும் ம்ம் இப்போவே வர சொல்றேன் என்று சொல்லி வெளியே வந்த அவர் சரவணனை அழைக்க
சரவணன் சுபாவை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்றான்.
இதற்கு மேல் அங்கு குரு பிரகாஷ்க்கு போர் அடிக்க சரி கிளம்பலாம் அர்ஜுன் என்று போகும் முன் ஒரு முறை கவ்யாவை நன்றாக பார்த்து விட்டு சென்றான்.
வெளியில் இருக்கும் அனைவருக்கும் உள்ளே என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரிய வில்லை. நந்தினி மனதில் இவனா! இவனை ஏன் அண்ணா கூப்பிடிறான் ஒரு வேளை இவனுக்கு சுபாவை கட்டி வைத்து விடுவார்களோ விட கூடாது என்று நினைத்து கொண்டு வேகமாக நந்தினி அந்த அறையை நோக்கி சென்றாள்.
அங்கே உள்ளே சரவணன் தயங்கி கொண்டே உள்ளே வர கிருஷ்ணன், ம்ம் உள்ளே வா டா என்று அழைக்க
வசுமதி அவனை பார்த்து விட்டு ராகவ் எல்லாம் சொன்னான் நீ தானா அது? அவன் திடுக்கிட்டு பார்க்க ரவி அவனை எந்த ஒரு உணர்வும் இன்றி பார்த்து கொண்டே வர உள்ளுக்குள் புயல் கிளம்பியது.
ரவி அவன் அருகில் வந்ததும் எதுவும் பேசாமல் கட்டி அணைத்து கொள்ள சரவணனுக்கு என்ன செய்கிறார் இந்த இன்பா என்ன சொன்னான் என்று நினைத்தவன். தண்ணில்லைக்கு வந்து சார்..! என்ன கவலை பட வேண்டாம் பார்த்து கொள்ளலாம் என்று ஆறுதல் மொழி சொல்ல..
ரவி அவன் கைகளை பிடித்து தடவி கொண்டே எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல நான் தான் உன்னை தவறா நினைத்து விட்டேன். என்று சொல்லி கொண்டு இருக்க..
கதவை டப் என்று திறந்து கொண்டே நந்தினி கோபத்தில் “அண்ணா இப்போ என்ன காரியம் செய்து கொண்டு இருக்க, இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன், சுபாவுக்கு இவன்! இந்த சரவணனை எப்படி உன்னால் யோசிக்க முடியுது.”
கிருஷ்ணன் சுபா சரவணன் விஷயத்தை பற்றி ஆரம்பிக்கலாம் என்று நினைத்து பேச வரும் நேரம்
நந்தினியே அவர் மனதில் இருந்ததை சொல்லி விட வசுமதி ரவி சந்திரனை தவிப்பாக பார்த்தாள்.
அவள் மனதில் சரவணன் நல்ல பையன், சிறு வயது தோழனின் மகன் அதை விட பொருப்பானவன்,ஆனால் இதை ரவி ஒத்துக்கொள்ள வேண்டும் அது நடக்காது என்று ஒரு பெரு மூச்சை விட்டு நந்தினியை முறைத்து பார்த்தாள்.
சரவணன் ரவியிடம் இருந்து விலக அவர் நந்தினியை பார்த்து கண்ணகுளி தெரிய சிரித்து கொண்டே “ம்ம் இப்போ தான் நந்தினி ஒரு நல்ல விஸ்யம் சரியாக யோசித்து இருக்க”.. என்று சொல்லி விட்டு இப்பொழுது சரவணன் கையை பிடிக்க
நந்தினி, அண்ணா இப்போ என்ன பண்ணிட்டு இருக்க நான் சொல்றது புரியலையா!
ரவி, “ஏன் புரியல நல்லா புரியுது மா” என்று அவர் சரவணனை பார்த்து ” என் ஏஞ்சல கட்டிக்க உனக்கு விருப்பமா! சரவணன் உனக்கு என் பெண்ணை பிடிக்குமா? “
சரவணன் தயங்கி கொண்டே கிருஷ்ணனை பார்க்க வசுமதி சந்தோஷ மனநிலையில் சரவணா சரின்னு சொல்லு டா? இதுவே சேகர் இருந்து இருக்க எப்படி இருக்கும் தெரியுமா! சரின்னு சொல்லு டா என்று கேட்க
நந்தினி, அண்ணா உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல அவள் பேச்சை கேட்காத என்று அடுத்து பேச வர..
ரவி, நந்தினி நீ இன்னும் கொஞ்ச நாளில் மருமகன் எடுக்க போற, அப்படி மட்டும் இல்லாமல் இருந்தால் உன் கன்னம் ரெண்டும் இந்நேரம் பழுத்து இருக்கும்,
ஒழுங்கா வாயை அடக்கு! வசுமதியை இனி மரியாதை இல்லாமல் பேசின, இதோட நம்ம உறவு அவ்வளவு தான் என்று சொல்லி அவர் பார்வையை சரவணன் பக்கம் திருப்பி பார்த்து
“ம்ம் உன்னை நான் கட்டாய படுத்த விரும்ப வில்லை சரி வேண்டாம் விடுங்க “என்று அவர் பிடித்து இருந்த கைகளை விட சரவணன் நந்தினியை பார்த்து விட்டு
“எனக்கு சுபாவை கட்டிக்க விருப்பம் அண்ட் மனப்பூர்வமாக சம்மதம், எனக்கு சுபாவை பிடித்து இருக்கு சார் ” ஆனால் என்று கையை பிடித்து கொள்ள..
ரவி அவனை கட்டி கொண்டு என்ன விஷயம் மாப்பிள்ளை எதுவா இருந்தாலும் சொல்லுங்க? அவன் தயங்கி கொண்டே அது சுபாவுக்கு! என்று சொல்ல..
கிருஷ்ணன், ம்ம் டூ மச் ராஸ்கல் என்று சொல்லி கொண்டே சரவணன் தோல் மேல் கைகளை போட அவன் தாத்தா! என்று பம்பினான்.
ரவி, மாமா அவர் என்னோட மாப்பிள்ளை என்று கிருஷ்ணனிடம் சொல்லி விட்டு அண்ட் நீங்க அதை பற்றி கவலை பட வேண்டாம் மாப்பிள்ளை என் பொண்ணு நான் சொன்னால் எதையும் செய்வா நீங்க கிடைக்க அவள் கொடுத்து வச்சு இருக்கணும். என்று சொல்லி விட்டு வாங்க என்று அழைத்து சென்றார்.
ரவி வசுமதியிடம் நீ தேவகியை அழைத்து வா அவங்க கிட்ட பேசணும். வெண்பா, தேவகி இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்க வசுமதி அவர்களை அழைத்து விஷயத்தை சொல்ல தேவகிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
அவள் சரவணனிடம் கேட்க போக மித்ரன் இதை கேள்வி பட்டு அம்மா இப்போ நமக்கு சுபா வாழ்க்கை தான் முக்கியம் நம்ம மீனாட்சி வீட்டுக்கு பேசி புரிய வைத்தால் புரிந்து கொள்வான்க..
அவளும் என்ன சொல்வது என்று சரி என விட்டு விட கிருஷ்ணன் அனைவரையும் அமர சொல்லி மங்கள வாத்தியம் இசைக்க தொடங்க சொல்ல..
ரவி கிருஷ்ணனிடம் அருகில் சென்று உங்க உங்க.. ம்ம் வசுமதியை பொண்ணு கேட்கும் போது கூட இவளோ தயக்கம் இல்லையே இப்போ மாப்பிள்ளைக்கு என்ன தயக்கம்.. என்று சிரித்து கொண்டே கேட்க
ரவி, அது உங்க பேரனை வர சொல்லுங்க என்று சொல்லி விட்டு வெடுக்கென்று அந்த இடத்தில் இருந்து சரவணன் இருக்கும் அறைக்கு சென்றார்.
கிருஷ்ணன் சிரித்து விட்டே போன் செய்ய அது சுவிட்ச் ஆப் என்று இருந்தது. சிபி, லோகேஷ், மித்ரன், என அனைவரும் நின்று கொண்டு இருக்க அவர்கள் அருகில் சென்று ம்ம் சீக்கிரம் ராகவ கூட்டி வாங்க..
ம்ம் சரி தாத்தா என்று சொல்லி விட்டு அவர்கள் மேலே சென்றனர். குருக்கள் ஓம குண்டம் வளர்க்க சுபா அந்த இடத்தை விட்டு எழவே இல்லை.
நந்தினி தன் அண்ணன் திட்டிய சோகத்தில் ஒரு இடத்தில் வந்து அமர்ந்து கொள்ள
பிரியா, “அம்மா என்ன ஆச்சு இப்போ சுபாவுக்கு மாப்பிள்ளை யாரு மா சஸ்பென்ஸ உடையேன் எனக்கு வேற ரொம்ப பசிக்குது இங்கே ஐடம் வேற வா வான்னு அழைக்குது மாம். “
இதை கேட்டதும் நந்தினி முறைத்து விட்டு போடி என்று வேறு இடம் சென்று அமர்ந்து கொண்டாள்.
சுபா பாவையிடம் பாட்டி வேண்டாம் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் அண்ட் தமயந்தி நீ டாடி கிட்ட சொல்லு நான் ஹாப்பியா தான் இருக்கேன்.
பாவை தமயந்தி இருவரும் அவளை நினைத்து அழ அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து இருந்த போட்டோ, வீடியோ ஆட்களை வர சொல்லி விட்டு ரவி சரவணன் கைகளை பிடித்து கொண்டு அந்த அறையில் இருந்து வெளியே வர அனைவரின் பார்வையும் அவர்கள் மீது இருக்க..
சரவணன் பார்வை சுபாவின் மீது இருந்தது. உள்ளுக்குள் சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் அதை விட அவன் மீது ஆயிரம் மடங்கு கோபம் தான் இருந்தது.
சுபா அவனை பார்த்ததும் மாலையை கலட்ட போக ரவி சுபத்ரா என்று ஒரு சத்தமிட்டான். அவள் அமைதியாக நின்று கொண்டாள். குருக்கள் ம்ம் உட்காரு மா என்னாச்சு? சுபா அவரை முறைக்க
சரவணன் மனம் அய்யோ செம்ம கோபத்தில் இருக்காளே! இ்வ்ளோ தூரம் வந்து வெண்டாமுனு சொல்லி விட்டால் ,நான் இன்பா கிட்ட வாங்கிய அடி ,அப்புறம் அவன் இன்னிக்கு வாங்கிய அடிக்கு எல்லாம் அர்த்தம் இல்லாமல் போயிடுமே! என்று உள்ளுக்குள் ஒரு ஜெர்க் அடித்தது.
ரவி அவனை மணமேடையில் அமர வைத்து விட்டு சுபா அப்பா சொன்னா கேட்பியா? மாட்டியா? ம்ம் கேட்பேன் டாடி ஆனால் என்று அவனை முறைக்க சரவணன் அவளை பார்த்து ஒற்றை கண் சிமிட்டினான். ரவி, ஷ்ஸ்.. இங்கே பாரு மாப்பிள்ளையை இப்படி எல்லாம் முறைக்க கூடாது.
டாடி என்று மீண்டும் சுபா எழ முயற்சி செய்ய சரவணன், மாமா அவளை கட்டாய படுத்த வேண்டாமே என்று சொல்லி அவனுடைய பங்குக்கு எழ ரவி, மாப்பிள்ளை இருங்க நான் பார்த்து கொள்கிறேன்.
சரவணன், உங்களுக்காக மட்டும் தான் மாமா என்று எக்க சக்க பிட்டுகளை போட்டு வைத்தான். ரவி சுபா கைகளை பிடித்து இவரை விட நல்ல மாப்பிள்ளை எங்கேயும் இருக்க மாட்டாரு அதனால் “ஏஞ்சல் நீ சரவணனை தான் கல்யாணம் பண்ணிக்கனும் அது தான் டாடியொட விருப்பம் அப்படி இந்த கல்யாணம் நடக்குல நான் ஒரு அப்பாவா தோர்த்து போனதா உன் தம்பி சொல்லிட்டு போயிட்டான். இனி உன் முடிவு! என்று அவர் அவளை பார்க்க..
‘டாடி எனக்கு சம்மதம் உங்களுக்காக மட்டும் தான்’ என்று சொல்லி திரும்ப ரவி அவள் கைகளை எடுத்து சரவணன் கைகளில் வைத்து மாப்பிள்ளை என்று பேச வர அவன் “கெட்டியாக பிடித்து கொள்வேன் மாமா இனி அவளை விடவே மாட்டேன்.”
ரவிக்கு இது போதுமே..
தொடரும்…
நாளைக்கு தான் கல்யாணம்..
என் ராகவ் என்ன பண்றான் ம்ம் நாளைக்கு பார்க்கலாம்.
அடுத்து விவேகா – இன்பா சந்திப்பு தான் இப்போ இன்னும் அடுத்த கட்டத்துக்கு போயாச்சு..
Comment konjam ratings konjam share pannunga like podunga drs
Episode 220
ரவிசந்திரன் சுபாவிடம் சரவணனை கல்யாணம் பண்ணிக்கொள்ள சொல்ல அவள் உங்களுக்காக மட்டும் தான் சம்மதிக்கறேன் என்று சொல்லி திரும்பி கொள்ள ரவி அவள் கைகளை சரவணன் கைகளில் பிடித்து தர அவள் கைகளை சரவணன் கெட்டியாக பிடித்து கொண்டான்.
ரவி மனநிறைவுடன் அதை பார்த்து விட்டு அனைத்தும் ஆரம்பிக்கலாம் என்று சொல்ல மங்கள வாத்தியம் முழங்கியது. மணமேடையில் பாவை, தமயந்தி, வெண்மதி, வசுமதி, மஞ்சரி, பிரியா, என அனைவரும் இருக்க வசுமதி கீழே இறங்கி தேவகியையும், வெண்பா, என அழைத்து கொண்டு வர..
தேவகி அவரிடம் நான் இங்கேயே இருக்கேன் மேல வரல வசு என்று தயங்கி கொண்டே வராமல் இருக்க..
தேவகி அடி வாங்க போற எனக்கு இப்போ எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா ஒழுங்கா இப்போ என் கூட மேல வந்து நிக்கிற சரியா என்று இழுத்து செல்ல கூடவே அவர் ஹேய் வெண்பா இனி மேம் ஆன்டி எல்லாம் சொன்ன அடி பின்னிடிவென் அழகா மாமி சொல்ற புரியுதா..
ம்ம் என்று சிரித்து கொண்டே தலையாட்டினாள். தேவகி, சரி வரேன் வசு இப்போ விடு.. ம்ம் என்று சிரித்து கொண்டே அழைத்து சென்றார். அவர்கள் தயக்கதுடன் ஏறி நிற்க பாவை அவர்கள் இருவரிடமும் பேசி சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்.
குருக்கள் பிரியாவிடம் அரச்சதை தட்டை கொடுத்து விட்டு மந்திரம் ஓத
சுபா, ஹே என் கையை விடு டா! என்று சொல்லி உதறினாள்.
சரவணன் உன் டாடி அதான் என்னோட மாமா கொடுத்த கை இனி விடவே மாட்டேன் டி! அண்ட் ஓவரா சீன் போடாத என்று சொல்லி அவனது கால் பெரு விரல் கொண்டு அவளுடைய உள்ளகால் பாதத்தை புன்னகைத்து கொண்டே வருட சுபாவிற்கு கோபம் ஒரு பக்கம் கூச்சம் ஒரு பக்கம் என திண்டாடி போனாள்.
அவள் கோபத்தில் அவனை முறைத்து கொண்டே கொஞ்சம் தள்ளி அமர தமயந்தி அவளை பார்த்து விட்டு
சுபா கண்ணு மாப்பிள்ளை பக்கத்தில் வா டா..
சுபா, பாட்டி! என்று புருவம் நெருக்கி கத்த வெண்மதி, சுபா என்ன இது நீ பன்றது சரி இல்ல..
ம்ம் சரி சித்தி என்று வேறு வழி இல்லாமல் அவள் அவன் பக்கத்தில் கொஞ்சம் நெருங்கி அமர்ந்தாள்.
சரவணன் முன்பு கொஞ்சம் வருடியவன் இப்பொழுது வித்தியாசமாக வருட அவள் முகம் எல்லாம் ஒரு மாதிரி ஆனது கூச்சத்தில் நெளிந்தாள்.
சரவணன் கொஞ்சம் புன்முறுவலுடன் “இது கொஞ்சம் தான் டி நீ வீட்டுக்கு வா அப்புறம் இருக்கு” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லி விட்டு குருக்கள் பக்கம் கவனம் செலுத்தினான்.
இங்கே மேலே சிபி, லோகேஷ், மித்ரன், இளவழகன் என அனைவரும் இன்பா இருக்கும் அறைக்கு வந்து கைகள் ஓயும் வரை தட்ட அவன் திறக்கவே இல்லை எந்த பதிலும் இல்லை. லோகேஷ் எதையோ யோசித்து விட்டு ம்ம் சிபி இளவலகன் இருவரையும் தாத்தா கிட்ட சொல்லி விட சொல்ல அவர்கள் கீழே இறங்கி சென்றனர் அதன் பின்
லோகேஷ் மித்ரனிடம் எதோ கூற அதை கேட்டு “அவன் மச்சி எப்படி டா இப்படி பின்ற”..
‘ம்ம் அப்படி தான் இப்போ பாரு’ என்று சொல்லி விட்டு..
லோகேஷ் கொஞ்சம் சத்தமாக “ஹலோ பாப்பா என்ன மா திடீர் தரிசனம்! இன்னிக்கி செம்ம அழகா இருக்கியே !உன் ராகவ் தரிசனத்துக்கு வெயிட்டிங் போலயே!”
மித்ரன், ‘விவேகா திடீர்னு சர்ப்ரைஸ் பண்ற’.. என்று சொல்ல சட்டென்று கதவு திறந்தது. அது துறந்த அடுத்த நொடி மித்ரன் லோகேஷ் இருவரும் உள்ளே பாய
இன்பா “டேய் விடுங்க டா மித்ரன் I will kill you! தள்ளி போங்க டா” என்று லோகேஷ் மித்ரன் இருவரையும் தள்ளி விட்டு வேகமாக வெளியே சென்று பார்க்க அங்கே யாரும் இல்லை.
இன்பா கோபமாக அவர்கள் இருவரையும் முறைத்து விட்டு உள்ளே வந்து அமர்ந்தான்.
லோகேஷ் சிரித்து கொண்டே “விவேகா அப்டினாலே நம்ம இன்பா சாருக்கு அச்சோ! இல்ல ராகவ் சாருக்கு விவேகம் இல்லாமல் போயிடுதே என்னா வேகம்!”
இன்பா தன் தலையை கோதி கொண்டே “டேய் ஒழுங்கா ஓடி போயிடுங்க நான் செம்ம டென்ஷன்ல இருக்கேன்.”
இன்பாவின் இன்னொரு போனுக்கு வருணி அழைக்க ஹே வை டி என்று கட் செய்தான். மித்ரன் இன்னொரு போனை எடுத்து பார்க்க இத்தனை நேரமும் கீழே நடந்த அனைத்து விஷயமும் வருணி நேர்காணலில் போனில் இன்பாவுக்கு காட்டி கொண்டு இருந்தாள்.
மித்ரன்,” டேய் நான் உன்னை ரொம்ப சாதாரணமா நினைத்தேன். இது என்ன டா? வருணி உனக்கு லைவ்ல காட்டி கொண்டு இருந்து இருக்கிறாள் ஃப்ராடு பய டா நீ!”
லோகேஷ் எழுந்து நின்று” சரி இன்பா கீழே வா உனக்கு தான் எல்லாரும் வெயிட் பண்றாங்க.” நான் வரல, நீங்க போங்க என்று அவன் படுக்கையில் விழுந்தான்.
மித்ரன் அவனிடம் “மச்சான் வாடா,இனிமே நம்ப உண்மையாவே மச்சான் டா! இப்படி அடம் பண்ணாத இன்பா வா கீழே போலாம் அதுவும் உன் அக்கா கல்யாணம் டா.”
லோகேஷ், அவனுக்கு நம்ம ஒரு பொருட்டே இல்ல இந்நேரம் பாப்பா கூப்பிட்டால் வந்து இருப்பான். ஹான் இந்நேரம் பாப்பா வீட்டுக்கு வந்து இருப்பான்னு நினைக்கிறேன் வருண் சொன்னான்.
அந்த நேரம் கிருஷ்ணன் வந்தார். லோகேஷ், மித்ரன் இருவரும் வெளியே செல்ல ராகவ் வா போலாம் இது என்ன ஹேபிட்? அவனோ எழுந்து மரியாதை நிமித்தமாக நின்று கொண்டு நான் வரல மேன் என்று உதடு துடிக்க சொல்ல
கிருஷ்ணன் அவனின் தோல் மேல் கைகளை போட்டு கொண்டு” வசுமதி மட்டும் உன்னை ஸ்லாப் பண்ணாமல் இருந்து இருக்க ரவி உன்னை அடித்து இருப்பாரு டா!”
தெரியும் தாத்தா ஆனால் என்னால் வர முடியாது.
“ராகவ் என் பொன்னு எப்படி துடித்து போனாள் தெரியுமா? உன்னை ஒரு நாளும் திட்டியது கூட இல்ல அப்டின்னு உள்ளுக்குள் நீ பேசாமல் போனதை அந்த கவலையை மறைத்து இருக்கா டா!”
இன்பா அமைதியாக இருக்க கிருஷ்ணன் அவனிடம் நீ மட்டும் இப்போ வந்தால் பாப்பா விஷயத்தில் எல்லா இடத்திலும் ஈவன் வசுமதி கிட்ட சொல்லும் போது கூட நான் உனக்கு சப்போட்டா இருப்பேன் அப்புறம் உன் இஷ்டம் என்று வெளியே செல்ல போக..
ஸ்டாப் இட் அவர் புன்னன்கைத்து கொண்டே திரும்ப இங்கே கன்னத்தில் ஸ்லாப் மார்க் தெரியுதா? இல்ல வா போலாம்..
இன்பா, ஒன் கண்டிசன் இருக்கு?
என்ன?
நான் யாரு கிட்டயும் போய் பேச மாட்டேன். புரியல டா! அதாவது உங்க பொன்னும் அண்ட் உங்க பொண்ணு கூட இருக்கவர் கூடவும் Idon’t talk anymore.
ம்ம் சரி என்று சொல்லி அழைத்து சென்றார். இன்பா, கிருஷனனுடன் கீழே வர அதை பார்த்து விட்டு ரவி குருக்களிடம் தாலி கட்ட சொல்லி சைகை கொடுக்க
குருக்கள் சாமியை ஒரு முறை வேண்டி கொண்டு
கெட்டி மேளம்!
கெட்டி மேளம்! என்று சொல்ல
உடனே சரவணன் சுபாவின் கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டி கொண்டே” I love you சுபத்ரா! இனி நீ என்னோட சுபா, இந்த சரவணனுடைய சுபா, உன்னை கஷ்ட படுத்தியதுக்கு சாரி டி,” என்று சொல்லி இரண்டு முடிச்சு போட சுபா கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது.
தமயந்தி ‘வெண்பா ம்ம் இப்போ நீ தான் மூன்றாம் முடிச்சு போடனும்’ என்று சொல்ல அவளும் சிரித்த முகத்துடன் போட்டு விட தேவகிக்கு மனதில் நல்ல படியாக திருமணம் முடிந்தாலும் சேகரின் நினைவில் கண் கலங்க வசுமதி அவள் கைகளை பிடித்து கொண்டாள்.
இன்பா எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் இருக்க அவனுக்கு போன் கால் வர அதை பார்த்து விட்டு அவள் தாலி கட்டி முடித்ததும் மணமகள் அறைக்கு போன் பேச சென்று விட்டான்.
கவ்யா ரவியின் அருகில் சென்று வினய் பற்றிய விவரம் எல்லாம் சொல்ல அவர் அதான் எந்த பிரச்னையும் இப்போ இல்லையே என கண்ணகுளி தெரிய சிரித்து விட்டு ம்ம் ஓகே சாப்பிட்டு போ மா.
“ம்ம் அண்ட் உங்க சிரிப்பு ராகவ மாதிரியே செம்மையாக இருக்கு” என்று சொல்லி விட்டு செல்ல ரவி திகைத்து பார்த்தார். ‘இவனை என்ன பன்றது எல்லா பொண்ணுங்களையும் மயக்கி வச்சு இருக்கானே!’ என்று நினைத்து கொண்டு மற்ற வேலையை பார்க்க சென்று விட்டார்.
இன்பா உள்ளே சென்று தன் சூட்கேஸில் இருந்து போலீஸ் உடையை எடுத்து போட்டு கொண்டு ரெடியாக சரவணன் உள்ளே நுழைந்தான். இன்பா!
ம்ம் சொல்லுங்க மிஸ்டர் சரவணன் என்று எந்த வெளிப்பாடும் இல்லாமல் தன் காலில் சாக்ஸ் போட்டு கொண்டே கேட்டான். சரவணன் அவனை சட்டென்று கட்டி அணைத்து கொண்டு ரொம்ப நன்றி மச்சான் என் வாழ்க்கையை கொடுத்து இருக்க..
இன்பா,உனக்கு நான் ஒன்னும் வாழ்க்கை கொடுக்கல இன்பேக்ட் சொல்ல போனால் நீ வசமா அவள் கிட்ட மாட்டிக்கிட்ட டா…
ம்ம் பரவாயில்லை டா அவள் என் சுபா..
ம்ம் ஆமா யாரு இல்லன்னு சொன்னது உன் சுபா அவளோட உருவம் பாதி ரவி சந்திரன் அண்ட் முழுசா சந்திர நந்தினி அவள் என்னோட அத்தை மாதிரி இனி உன் பாடு என்று சொல்லி எழுந்து நின்றவன்.
ம்ம் சீக்கிரம் டைம் ஆகுது..
சரவணன் புரியாமல் என்ன டா சொல்ற?
டேய் வந்து காலில் விழு டா..
சரவணன் தயங்கி கொண்டே நிஜமா விழனுமா..
பின்ன நான் சும்மா சொண்ணெண்ணு நினைத்தாயோ வா டா! என்று இன்பா அதட்ட
சரவணன் அவன் காலில் உண்மையாகவே விழுந்தான். இன்பா, இனி டெய்லியும் இதே போல் சுபா கிட்ட விழ போற அப்புறம் இனிமே அவள் கிட்ட நல்லா அடி மிதி வாங்கு டா என்று சொல்ல அவன் எழுந்து நின்றான்.
இன்பா அவனை சட்டென்று கட்டி கொண்டு “ம்ம் உன்னோட பொருளுக்கு நீ தான் போராடி பெரனும் அதுக்கு என்ன வேணாலும் செய்யலாம் இனி என் அக்காவை பத்திரமா பார்த்துக்க ரொம்ப பிடிவாதகாரி டா அட்ஜஸ்ட் பண்ணிக்க.” என்று சொல்ல
சரவணன் ம்ம் இனி அவளை நான் என்னுடைய ராணி மாதிரி பார்த்து கொள்வேன் டா.. அண்ட் இப்போ எங்கே கிளம்பி விட்டாய் நம்ப ஒன்றாக சாப்பிடலாம் டா.
இன்பா, இப்போ கடமை அழைக்குது அப்புறம் நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு?
என்ன விஸ்யம்?
என்ன விஷயமா அடுத்து உன்னை முட்டி போட வைக்கணும் போலயே!
டேய் கொஞ்சம் தெளிவா சொல்லு டா?
இன்பா, எல்லாம் என் நேரம் என் பேபி விஷயம் என்ன ஆச்சு..
சரவணன், இன்பா இப்போ தான் டா தாலி கட்டி இருக்கேன் வீட்டுக்கு போய் ரெண்டு நாள் போகட்டும் ஆல்ரெடி எனக்கும் சுபாவுக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண ஏற்பாடு பண்ணி விட்டேன் விவேகா இன்னுக்கி தான் வீட்டுக்கு வந்து இருக்காளாம் அண்ட் கட்டாயமா சாட்சி கையழுத்து போட அவளை கூட்டி வந்து விடுவேன் நீ கவலை படாத டா என்று சொல்லி ஒரு பெரு மூச்சை விட்டான்.
இன்பா மிடுக்குடன் வெளியே வந்தான். சுபாவை சுற்றி அனைவரும் இருக்க தேவகியுடன் பேசி கொண்டு இருந்தாள். சரவணன் அவள் அருகில் சென்று நின்று கொள்ள இன்பா நேர் கொண்ட பார்வையுடன் வெளியே செல்ல பிரியா, அத்தை இன்பா போலீஸ் ட்ரெஸ்ல கிளம்பி விட்டான் பாருங்க என்று ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டே சொல்ல..
வசு திரும்பி பார்த்தவர் பின் தவிப்போடு அவனிடம் பேச போக இன்பா வேகமாக நடக்க ஆரம்பித்தான். அவர் வேகமாக அவன் அருகில் சென்று கொண்டே ராகவ் என்று அழைக்க ஒரு நிமிடம் நின்றான் பின் திரும்பி பார்க்காமல் சென்று விட்டான்.
வசு அதே இடத்தில் நின்று கொண்டு தூர சென்று மறையும் அவன் உருவத்தை பார்க்க கிருஷ்ணன், அவனை கொஞ்சம் தனியா விடு மா என்று சொல்லி கொண்டே வந்தார்.
அப்பா ராகவ்! ராகவ்!என்று கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வர என் கிட்ட பேசாமல் என்னை பார்க்காமல் போறான் பா என்று தந்தையின் மார்பில் சாய்ந்து கொள்ள
ரவி இதை எல்லாம் பார்த்து விட்டு க்கும் என்று தொண்டையை சரி செய்து கொண்டே வந்தார். உடனே கிருஷ்ணன் சரி மா நீ வந்தவங்களை கவனி என்று சொல்லி விட்டு அவர் சென்று விட வசுமதி கண்களில் கண்ணீர் நிற்காமல் ஓட ரவி அவள் கண்களை பாத்து அழுதியா!
இல்ல சிரித்து கொண்டு இருக்கேன் என அவரை பார்த்து முறைத்து கொண்டே நடக்க ஹே இப்போ எதுக்கு கோபம் இன்னும் நீ யங் இல்ல இப்போ நீ ஆபீஸியலா ஆன்டி ஆகி விட்ட தெரியும் தானே..
வசுமதி கண்களில் கண்ணீர் நிற்காமல் மூக்கை உறிஞ்சி கொண்டே ம்ம் சரி உங்களால் தான் எல்லாமே என் ராகவ் என் கிட்ட பேசாமல் போயிட்டான் என் ராகவ் ஒரு பார்வை கூட பார்க்கல என் பையன் பசி தாங்க மாட்டான் உங்களால் தான் இத்தனையும் நடந்தது. என்று குமுறி குமுறி அழ
ரவி, ஹே நான் ஒன்னும் அவனை அடிக்கல நீ தான எல்லார் முன்னாடியும் அடித்த இப்போ இதுக்கு நான் காரணம் அப்டின்னு சொன்னால் என்ன அர்த்தம்! என்று சொல்லி அவள் அருகில் நெருங்கி வர நீங்க! நீங்க! என் பக்கத்தில் வர வேண்டாம் தள்ளி போங்க என்று ரவியை தள்ளி விட மதி ஓவரா பண்ணாத டி!
ம்ம் நான் தான் அடித்தேன் நான் மட்டும் சும்மா இருந்து இருக்க நீங்க என் பையனை அடித்து இருப்பீங்க அது இன்னும் அவனுக்கு அவமானமா இருக்கும் அதான் இப்படி செய்தேன். ரவி, அதான் இப்போ கூட உன்னை விட்டு கொடுக்காமல் தானே பேசிட்டு போனான் மக்கு மதி!
என்ன என்று மீண்டும் அழுது கொண்டே கேட்க ரவி ஒரு பெரு மூச்சை விட்டு நீ தான் அவனை சரியா வளர்த்து இருக்க நான் சுபா விஷயத்தில் தோர்த்து போயிட்டெண்ணு சொல்லிட்டு போனானே உன் காதுள அது விழ வில்லையா!
அய்யோ என் பையன் சொன்னானே! என்று மீண்டும் அழ ரவி, ஹே நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கோம் அவளை நினைத்து அழாமல் இப்போ அவனை நினைத்து நீ ஒவேர் சீன் போடுற டி!
வசுமதி, சுபாவை என் ப்ரெண்ட் பையனுக்கு கட்டி கொடுத்து இருக்கேன் அவள் நூறு மடங்கு சந்தோஷமா இருப்பா நான் எதுக்கு அழனும் ஆனால் அந்த வினய் க்கு கட்டி இருந்தால் என்ன நடந்திருக்கும் நினைத்து பாருங்க நீங்க சுத்தம் வேஸ்ட் என் ராகவ் சொன்னது சரி தான் என்று தன்னை சரி செய்து கொண்டு பேச..
ரவி கண்ணகுழி தெரிய சிரித்து கொண்டே அப்போது கூட இன்டைரக்டா நான் தான் வின் பண்ணேன்.
எப்படி ?
ஹே இப்படி எல்லாம் கண்ணை உருட்டாத டி அப்புறம் எனக்கு மோட் மாறுது..
அவள் ரவியை தீயாக முறைக்க ம்ம் சொல்றேன் கேளு ஏன்னா அவன் என் இரத்தம் அதை நான் சொல்லல எல்லாரும் அப்படி தான் சொல்றாங்க என்று அவள் கன்னத்தில் முத்தமிட
வசுமதி ரவியை தள்ளி விட்டு வெளியே சென்றாள். ஹே சொன்னாலும் சொல்ல வில்லை என்றாலும் அது தான் உண்மை என்று சொல்லி கொண்டே பின்னால் சென்றார்.
இங்கே இன்பாவுக்கு மை விழி கால் செய்தாள். இன்பா அவளிடம் நிதானமாக “மை விழி நீ எதுக்கும் டென்ஷன் ஆக வேண்டாம். அந்த குரு கிட்ட தேவை இல்லாமல் பேசாத அண்ட் அவன் கொடுக்க போகும் DNA ரிப்போட் வாங்கி விடு நம்ப அதை கிராஸ் செக் பண்ணலாம். அந்த நிதின் பிளட் சாம்பிள் அண்ட் முடி சாம்பிள் வாங்கிக்கோ நான் மற்றது பார்த்து கொள்கிறேன்.”
மை விழி அவனிடம் சரி அண்ணா என்று சொல்லி விட்டு போன் வைத்தாள். அதன் பின் மை விழி இன்பா சொன்னதை போலவே நிதின் கிட்ட சாம்பிள் வாங்கி கொண்டு குரு கிட்ட இருந்து ரிப்போர்ட் வாங்கி விட்டு அவனை கண்டு கொள்ளாமல் சென்று விட
குரு இன்பாவுக்கு கால் செய்தான்.இன்பா ம்ம் சொல்லு டா***! குரு , டேய் பாஸ்**! இன்பா சூடான மூச்சு காற்றை வெளி விட்டு இன்னும் உன் கிட்ட நான் நிறைய எதிர் பார்க்கிறேன்.
குரு ஒரு கோர புன்னகையை சிந்தி விட்டு “உன் அக்கா கல்யாணத்தை இந்த குருவிளையாடல் பண்ணி அத்தனை பேர் முன்னாடி உன் ஆசை அம்மா அடிக்கும் போது எவ்ளோ நல்லா இருந்தது தெரியுமா!
இன்பா, வாட்!
தொடரும்…
இன்னிக்கு episode எப்படி இருந்தது. Ratings imean review ல போய் இந்த கதையோட brief explanation யாரு கொடுக்கரீங்களோ நான் இன்ஸ்டா ல memory வீடியோ பண்ண போறேன் அண்ட் இதுக்கு உங்க support தேவை…
இப்போ உங்க comments க்கு நான் வெயிட்டிங்