LOVE UNDER ARREST PART 10

by Pradhanya kuzhali
50 views

Episode 231

இங்கே வெண்பாவுக்கு நேற்று காலேஜ் ல நடந்த அனைத்து விஷயமும் அவளுடைய தோழிகள் மூலம் தெரிய வந்தது. 

ஆதி யாழினிக்காக அருண் கூட சண்டையிட்டது. சட்டை எல்லாம் கிழிந்து அவளுக்காக ஆபீஸ் ரூம் சென்றது அவர்கள் இருவரையும் பற்றி தான் பேச்சுகள் ஓடி கொண்டு இருந்தது. 

இதை அனைத்தும் கேட்க கேட்க வெண்பா வுக்கு இதயம் வெடிப்பது போல் இருந்தது. யாருக்காகவும் எதற்காகவும் ஆதியை அவள் விட்டு தர மாட்டாள். அவனே வேண்டாம் என்று சொன்னால் கூட அவளால் அவன் இல்லாமல் இருக்க முடியாது. ஆதி அவள் மனதில் காதலனாக வந்து சேர்ந்து கிட்ட தட்ட இரண்டு வருடம் ஆகிறது. 

காலேஜ் படிப்பு  முடிந்த பிறகு சொல்லி விடலாம் என்று தான் நினைத்தாள். ஆனால் இப்பொழுது நிலைமை கை மீறி இருக்கிறது. நாளைக்கே ஒரு முடிவு எடுத்து விட வேண்டும். படுக்கைக்கு சென்றாள் இரவு முழுவதும் அவன் எண்ணம் தான்.. 

அடுத்த நாள் என்ன நடக்க போகிறதோ என்று விடிந்தது. விவேகாவுக்கு மைதிலி மூலம் அனைத்து விஷயமும் தெரிந்தது. காலேஜ் சென்ற பின் ஆதியிடம் இதை பற்றி கேட்கலாம் என்று நினைத்து கொண்டே கிளம்பினாள்.

இங்கு இன்பா அவள் சென்றதும் நேராக அவன் தன் போலீஸ் உடைக்கு மாறி நேராக காவல் நிலையம் சென்றான்.

இதில் தான் கவ்யா இன்பாவுடன் இணைய போகிறாள். 

கிராமப்புறம் நகரமயமாதலில்  விளைநிலங்களை  மனை நிலங்களாக்கி அதில் புதிதாக பண்ணை வீடு அடுக்கு மாடி குடியிருப்பு என இருக்கும் குறிப்பிட்ட இடத்தில் அங்கு குடியேறி உள்ள தொழிலதிபர்கள், பணக்காரர்கள், அரசு ஊழியர்கள் என தேர்ந்தெடுத்து அவர்களை முழுவதும் கண்காணித்து அவர்கள் எந்த சமயத்தில் வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டு உள்ளே நுழைந்து திருடும் கும்பல் .

இது அதிகமாக ஈரோடு, கோவை  போன்ற மாவட்டங்களில் மிகப்பெரிய கும்பல் திருட்டு தொடர்பாக குற்றவாளிகளை கண்டறிய தான் இன்பா செல்கிறான்.

அந்த கேஸ் தொடர்பான மீட்டிங் இன்பா, மித்ரன், ஆகாஷ், வசுமதி, விஷால், சாதனா, கீர்தனா என மீட்டிங் ஹாலில் அனைவரும் இருக்க வசுமதி அந்த கேஸ் பற்றி விளக்கினார்.

அனைவருக்கும் அந்த கேஸ் கோப்புகள் கொடுக்க பட வாங்கி கொண்டு வசுமதி கூறியதை கேட்க தொடங்கினர். அந்த விளக்கம் கேட்ட பின் அனைவரும் பதில் தர தொடங்கினர். 

இன்பா வீட்டில் வசுமதி தன் மகனுக்கு பரிமாறி கொண்டு இருக்க ரவி அவர்கள் அறையில் இருந்து ஆபீஸ் கிளம்ப தயாராகி விட்டு  சாப்பிட அமர உடனே இன்பா எழுந்தான். 

ரவி வசுமதியிடம்   அவனை உட்கார சொல்லு டி நான் தனியா  முக்கியமா பேசணும். இன்பா இதை கேட்டதும் மாம் எனக்கு டைம் இல்ல.. வசுமதி! என்று அவர் கத்த மாம் என்று அவன் ஒரு பக்கம் கத்தினான். 

வசுமதி, என்னக நீங்க எதுக்கு என் பையன் கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கீங்க. எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீங்க மட்டும் தான்.. 

ரவி அவளை இழுத்து எனக்கு சர்வ் பண்ணு என சொல்ல உடனே அவள் ரவிக்கு உணவு பரிமாறினாள். இன்பா, மாம் எனக்கு ஊட்டி விடுங்க நம்ம போலீஸ் நமக்கு டைம் கான்சியஸ் ரொம்ப முக்கியம். என்று வசுமதியை ஒரு பக்கம் இழுத்தான். 

அவள் நொந்து போய் உங்க ரெண்டு பேரை வச்சு கிட்ட எனக்கு சமாளிக்க முடியல எதுக்கு என்னை இப்படி கொடுமை பண்றீங்க.. இன்பா, மாம் நான் என்ன பண்ண எனக்கு எரிச்சலா இருக்கு இவரு எதுக்கு இங்கே இருக்காரு நீங்க இவருக்கு டைவர்ஸ் கொடுங்க இல்ல தமயந்தி வீட்டுக்கு அனுப்புங்க.. 

வசுமதி கோபமாக ராகவ் என்ன டா ஓவரா பேசுற.. ரவி ஒரு தந்திர புன்னகையை சிந்தி விட்டு ம்ம் நான் போறேன் ஆனால் போறதுக்கு முன்  நான் சொல்ல வரைத கொஞ்சம் உன் பையனை நிதானமா கேட்க சொல்லு.. 

இன்பா விடாபிடியாக முடியாது என்று சொல்ல ரவி, சரி வசு என் மாமனார் பீச் ஹவுஸ் வாங்கி வச்சு இருக்காரு அதோட சாவி உன் பையன் கிட்ட இருக்கு வாங்கி தா என்று சொல்ல.. 

வசுமதி அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள். இன்பா இதை கேட்டதும் அவரை உதடு துடிக்க முறைத்து கொண்டே என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க.. 

ம்ம் அப்படி என் வழிக்கு வாடா! என்று சொல்லி பேச தொடர்ந்தார். வசு வழக்கம் போல் இருவருக்கும் இடையில் மாட்டி கொண்டு முளித்தார். 

ரவி நான் புதுசா ஒரு கம்பனி வாங்கி இருக்கேன் அதை உன் பேரில் மாற்றனும். இன்பா, என்ன பேசுறீங்க தெரிந்து தான் இப்படி பேசுறீங்களா! ரவி அவனை தீர்க்கமாக பார்த்து எனக்கு வேற பையன் இல்ல அதனால் வேற சான்ஸ் இல்ல நீ மட்டும் தான் இருக்க உன் பேரில் தான் மாற்ற முடியும். 

மாம் என்று உதடு துடிக்க வீடே அதிரும் படி அவன் கத்த ரவி ஹேய் கொஞ்சம் கத்த வெண்டாமுன்னு சொல்லு டி அவன் சத்தத்தில் இடிந்து விழுந்து விட போகிது. 

இன்பா, மாம் நான் கவர்மென்ட் சர்வன்ட் நான் எப்படி கம்பனி என் பேரில் வாங்க முடியும். வசுமதி, ம்ம் ஆமா ராகவ் சொன்றது சரி தாங்க… 

ரவி, பீச் ஹவுஸ் ரிஜிஸ்டர் பண்ணது போலவே செய்யலாம் மிஸ்டர் இன்ப ராகவன்  என்று இரு புருவமும் தூக்க அதற்கு மேல் இன்பாவால் எதுவுமே பேச முடிய வில்லை. ரவியை வைத்த கண் வாங்காமல் பார்த்து விட்டு கோபமாக அவனுடைய போன் மற்றும் தொப்பியை எடுத்து கொண்டு வேகமாக சென்றான். 

ரவி அவன் சென்றதும் மெதுவாக சாப்பிட ஆரம்பிக்க வசுமதி அய்யோ என் பையனை சாப்பிட கூட விட மாட்டிங்களா. பாதியிலேயே போய் விட்டான். ரவி அவளை இழுத்து இப்படி தத்தி மாதிரி இருக்காத டி உன்னை அவன் மேல் பாசததை காட்டாத அவன் எல்லாம் உன்னை பார்க்க மாட்டான் நான் தான் உன்னை பார்த்துக்க போறேன். அண்ட் அந்த நாய் கிட்ட சொல்லி  இன்னிக்கி 3 மணிக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் வர சொல்லு

அவள் சரி  என்று சொல்லி விட்டு இப்போ ராகவ் நீங்க சொன்னதுக்கு ஒத்துகொண்டானா! ம்ம் நான் ரவி சந்திரன் டி உனக்கு போலீஸ் மூளை தான் ஆனால் உன் பையனை பற்றி வரும்போது நீ ஒரு பிள்ளை பூச்சி ஆனால் நான் அப்படி இல்ல அவன் என்ன செய்வான் எங்கே போவான் எல்லாமே எனக்கு அத்து படி.. 

ம்ம் இதில் ஒன்னும் குறைச்சல் இல்லை என்று சொல்லி விட்டு பரிமாற ரவி அவளை சீண்டி கொண்டே சாப்பிட்டார். ரவி சொன்னது போலவே இன்பா மூன்று மணிக்கு வந்து சேர்ந்தான். 

ஒரு வக்கீல் பத்திரங்களை சரி பார்த்து டாக்குமென்ட்டுடன் ரெடியாக இருக்க ரவி டேய் ராஸ்கல் இங்கே வா! இன்பா கடுமையான முகத்துடன் அருகில் வந்தான். ம்ம் டெய்லியும் அவுட்டிங்கு, மீட்டிங்கு ,தேட்டர் அப்டின்னு சுற்றி கொண்டு இருப்பதா எனக்கு தகவல் வருது.. 

ஆமா அப்படி தான் சுத்துவேன் உங்களுக்கு என்ன! டேய் ஓவரா ஆட்டம் போடாத உன் திமிரை கொஞ்சம் குறைத்து கொள் அதை விட கொழுப்பு ரொம்ப அதிகம் புரியுதா! இப்போ வந்த வேலையை பார்க்கலாமா பஸ்ட் ஆப் ஆல் நான் மாம் காக மட்டும் தான் இங்கே வந்தேன். மற்ற படி உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கல.. 

ரவி ம்ம் நானும் அவளுகாக அப்புறம் அந்த பொண்ணுக்காக உன்னை விட்டு வச்சு இருக்கேன் இல்ல நடப்பதே வேற என்று அவன் தோள் மேல் கைகளை போட்டு இருக்கி பிடிக்க இன்பாவின் முகம் வலியில் மாறியது.

ரவி அவன் முக மாற்றத்தை கண்டதும் அவனை விட்டார். அதன் பின் அந்த புது கம்பனியை இன்பாவின் பெயரில் வாங்கி விட்டு அதற்கு வருமான வரி மற்றும் தொழில் வரி மொத்தமும் கட்டி விட்டு அவனது பெயரில் சுடசுட டாக்குமென்ட் ரெடி ஆனது. Digital marketing technology and solutions என்ற கம்பெனியை தன் மகன் பெயரில் வாங்கினார். 

அங்கே திடீர் என்று விஸ்வநாதன் ரவிச்சந்திரனின் காலேஜ் ப்ரெண்ட் வர ஹே நளசந்திரன்! டேய் விஷ்வா ஹவ் ஆர் யூ மேன்! ம்ம் நான் நல்லா இருக்கேன். அப்புறம் என்ன இந்த பக்கம்

 ரவி, அது ஒன்னும் இல்ல ஒரு பிஸ்னஸ் விஷயமா நானும் என் பையனும் வந்தோம். என்று சொல்ல இன்பா அந்த டாக்குமென்டை திருப்பி பார்த்து கொண்டு இருந்தான். 

விஸ்வநாதன், ஹே உன் பையன் உன்னை போலவே இருக்கான் டா காலேஜ் டேஸ்ல இப்படி தானே இருந்த என்று சொல்லி விட்டு இன்பாவை பார்க்க அவன் முகம் கடுமைதுடன் படித்து கொண்டு இருந்தது. 

நளசந்திரன் அப்புறம் உன் பிஸ்னஸ் எல்லாம் உன் பையன் தான் கவனித்து கொள்கிறானோ? அந்த நேரம் இன்பா அருகில் வர இல்ல விஷ்வா இது என் பையன் ACP. ஓ அப்படியா சரி எனக்கு பொன்னு இருக்கு இப்போ தான் காலேஜ் ஃபைனல் இயர் எப்படி கல்யாண பேச்சு உன் மகனுக்கு இப்போ கல்யாணம் பண்ண ஐடியா இருக்கா! 

இல்ல விஷ்வா இப்போதைக்கு இல்ல எதிர்காலத்தில் கல்ட்டி விட்டால் நிச்சயம் சொண்ட்ரன். அவர் விநோதமாக என்ன சொல்ற டா? உடனே ரவி அவரிடம்  இல்ல எதிர் காலத்தில் சொல்றேன்.விஸ்வநாதன், டேய் சசியனை பார்த்தியா! ஏன் என்ன ஆச்சு? என்று ரவி கேட்க அவன் குடும்பத்தோடு பெங்களூர் செட்டில் ஆகி விட்டான். ஓ அப்படியா சரி நான் பார்த்து பேசி கொள்கிறேன் என்று ரவி சொல்ல ம்ம் சரி நளசந்திரன் என்று சொல்லி அவர் இன்பாவை வியப்பாக பார்த்து விட்டு சென்றார். 

இன்பா அவர் அருகில் வந்து அது என்ன நளசந்திரன்! என்று கேள்வியாக கேட்க ரவி என்னை காலேஜ்ல அப்படி தான் கூப்பிடுவாங்க. இன்பா அவனை உருதது பார்த்து அது தான் ஏன்னு கேட்டேன். 

அது என் கிளாஸ் ல ரெண்டு  N. ரவிசந்திரன் அதனால் ஒரு அடையாளத்துக்கு அப்படி கூப்பிடுவாங்க.. இதை கேட்டதும் இன்பா சிரித்து கொண்டே “பார்த்து அந்த இன்னொரு ரவி சந்திரன் கூட உங்க டாட்க்கு பிறந்து இருக்க போறாரு!” 

டேய் ஸ்லம் டாக் என்று அவர் பற்களை கடித்து கொண்டு பேச வர ஓவரா பண்ணாதீங்க நீங்களே தேன் மொழி, பூங்கொடி அப்டின்னு சுற்றி கொண்டு இருக்கீங்க அப்போ உங்க டாட் அதை விட இருப்பாரு அதான் சொன்னேன். என்று நடந்து சென்றவன். ரவியை பார்த்து அவ்ளோ நேரம் என்ன பேசிட்டு இருந்தீர்கள்? 

ரவி, அது ஒன்னும் இல்ல அந்த விஷ்வா பொன்னு ஃபைனல் இயர் படிக்குதாம் உன்னை மாப்பிள்ளை கேட்டான். இன்பா முகத்தை கடுமையாக வைத்து கொண்டு அதுக்கு நீங்க என்ன சொன்னீர்கள்? 

நானா என்று இழுத்து வேண்டாம் விடு . இப்போ சொல்லுங்க ஓவரா பண்ண வேண்டாம். ரவி கட்டாயம் சொல்லனுமா! ம்ம் சொல்லணும். ரவி சிரித்து கொண்டே நடந்து செல்ல இன்பா அவர் காருக்கு போய் திறக்காத வாரு நின்று கொண்டான். 

ஹே என்ன டா இப்படி சைல்டிஷா நடந்து கொள்கிற உன்னை எப்படி அந்த பொன்னு லவ் பண்ணுது. அது உங்களுக்கு தேவை இல்லாத விடயம் அந்த விஷ்வநாதன்  கிட்ட என்ன பேசினீர்கள்? 

அது அவன் மாப்பிள்ளை கேட்டான்.. ம்ம் அதுக்கு அப்புறம் என்ன? என்று இன்பா வினவ.. ரவி சிரித்து கொண்டே இன்னும் கொஞ்ச நாளில் ” நீ மயக்கமா கலக்கமா மனசுல”… என்று பாட்டு பாடுவ அதுக்கு அப்புறம் சொல்றேன்னு சொல்லி விட்டேன். 

இன்பா ஒன்றும் புரியாமல் இதுக்கு என்ன அர்த்தம்? ரவி புருவம் சுருக்கி போலீஸ்க்கு இதுக்கு அர்த்தம் தெரியலையா! டென்ஷன் பண்ணாதீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க? 

ரவி அவனை பார்த்து அதாவது உன்னோட ஆளு இன்னும் கொஞ்ச நாளில் கலட்டி விட்டுவிடும் அதுக்கு அப்புறம் சொல்றேன்னு சொன்னேன். இப்போ புரியுதா.. 

இதை கேட்டதும் இன்பாக்கு கோபம் தலை தூக்க அப்படி மட்டும் எதுவும் நடந்தது. உங்களை! உங்களை!நான்! நான் சும்மாவே விட மாட்டேன். என்று சொல்லி கார் கண்ணாடியை ஓங்கி அடித்து உதைத்து விட்டு சென்று விட்டான். 

ரவி அவன் போவதை பார்த்து சிரித்து கொண்டே அவன் அடித்த இடதக்தை பார்க்க அது விரிசலில் இருந்தது. ரவிக்கு அவனை கோபபடுத்தி பார்க்க மிகவும் பிடிக்கும் அதற்காக தான் இப்படி சொன்னார். ஆனால் அதே போல் கூடிய சீக்கிரத்தில் நடக்க போகிறது என்று அவர் கனவிலும் நினைத்து பார்க்க வில்லை. 

இங்கே காலேஜ் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டு இருந்தது. விவேகா காலேஜ் வந்ததும் ஆதிக்கு முன் யாழினியே அனைத்து விஷயமும் கூறினாள். மதிய உணவு வேளை வர விவேகா ஆதியிடம் டேய் வெண்பாவுக்கு இந்த விஷயம் தெரியுமா! 

ஆதி எந்த வெளிப்பாடும் இல்லாமல்  தெரிந்தால் என்ன நான் எதுவும் செய்ய வில்லை என் கூட படிக்கும் பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணேன் அவ்ளோ தான்..

விவேகா, சரி இன்னிக்கு எதோ நடக்க போகுது அப்டின்னு என் மனசு சொல்லி கிட்டு இருக்கு பார்ப்போம். என்று சொல்லி அவள் சாப்பிட செல்ல சாப்பிட்டு முடித்து வகுப்புக்கு வந்தனர். 

வெண்பா அங்கே யாழினி அருகில் அமர்ந்து இருந்தாள். விவேகா ஆதி, வெண்பா இருவரையும் மாறி மாறி பார்க்க ஆதி அவளை கண்டு கொள்ள வில்லை. 

அவளும் பொறுத்து பார்த்தாள். ஆதியின் பார்வை அவள் மேல் இல்லை என்பதை தெரிந்து கொண்டு எழுந்து போகும் போது விவேகாவிடம் ஹே அவனை இப்போவே நான் பார்க்கனும் வெளியே வர சொல்லு என்று சிரித்து முகத்துடன் சொல்லி சென்று விட்டாள். 

விவேகா எப்படி அவனிடம் சொல்வது என்று யோசித்து கொண்டு இருக்க அதற்குள் இனியாள் யாழினியை அழைக்க உடனே அவள் முன்னால் சென்றாள். 

இந்த நேரத்தை பயன் படுத்தி ஆதி ஹே ஆதி.. அவன் திடுக்கிட்டு எதுக்கு டி இப்படி கத்துர என்று சொல்லி கொண்டே திரும்பினான். விவேகா அவனிடம் ஹே வெண்பா வெளியே வெயிட் பண்றா உன்னை வர சொன்னா! 

ஆதி, என்னால் போக முடியாது. விவேகா, ஹே அவள் ரொம்ப கோபமா இருக்கா டா ஒழுங்கா போ..  முடியாது என்று சொல்லி அவன் செல்லாம இருக்க.. 

வெண்பா ரொம்ப நேரம் காத்திருந்து விட்டு கோபமாக இரு டா உன்னை நான் சாயங்காலம் பார்த்து கொள்கிறேன் என்று பற்களை நரணரதது கொண்டே கிளம்பினாள். 

மாலை ஆனது காலேஜ் முடிந்து அனைவரும் அவர்களுடைய பஸ் நோக்கி நடந்து செல்ல யாழினி எப்படியும் விவேகா, ஆதியுடன் வருவாள் வெண்பாவுக்கு தெரியும் அதனால் போன் செய்தாள். 

ஆதி வெண்பா அழைக்கவும் உடனே அதை ஏற்காமல் விட்டு விட அவள் மூன்று முறை முயற்சி செய்தாள். ஆனால் ஒரு முறை கூட அவன் எடுக்கவே இல்லை. 

இந்த முறை கோபம் கொண்டு வெண்பா ஆதியின் பேருந்துக்கு சென்று விட்டாள். அவனுக்கு முன் காத்திருக்க.. ஆதி இவள் எதுக்கு இங்கே நிக்கிரா ஒரு வேளை நான் போன் எடுக்காமல் விட்டதுக்கு கேட்க வந்து இருப்பாளோ என்று நினைத்து கொண்டே ஆதி வந்தான். 

அதன் வெண்பா அவனை வழி மறித்து இப்போ ஒழுக்கமா உன் அக்கா வீட்டுக்கு இப்போவே வர அதான் அதிதி அவங்க தானே உன்னோட அக்கா! 

முடியாது..கொஞ்சம் வழிய விடு என்று அவன் அவள் முகத்தை பார்க்காமல் பேச.. 

வெண்பா சரி நான் இதை உன் அக்கா கிட்ட டீல் பண்ணிக்கனும்  போலயே என்று சொல்லி அவள் செல்ல.. 

ஆதி அவள் அருகில் சென்று என்ன விஸ்யம் என்ன என் அக்கா கிட்ட பேச போற.. 

சொல்ல முடியாது போடா… 

ஹே சொல்லு.. என்று அவன் வெண்பாவின் பின்னால் சென்றான். 

வெண்பா அப்போ கண்டிப்பா தெரியனுமா! 

ம்ம் சொல்லு என்ன விசயம்? 

வெண்பா அவனை எழனமாக பார்த்து விட்டு அப்போ அங்கே வா சொல்றேன் என்று சொல்லி விட்டு வேகமாக அவளுடைய பேருந்தில் ஏறி கொண்டாள். 

ஆதி பெரு மூச்சை விட்டு வேறு வழி இல்லாமல் வெண்பாவின் பேருந்துக்கு சென்றான். அங்கே உள்ள அவனது தோழர்கள் என்ன மச்சி இந்த பக்கம் ? 

அதுவா என் அக்கா வீட்டுக்கு போகனும் அதான் என்று வெண்பாவை பார்க்க அவள் மனதில் வாடா மவனே அத்தனை கொழுப்பு என் போனை எடுக்க என்ன டா கேடு என்று திட்டி முறைத்து கொண்டே அவனை பார்த்தாள். 

ஆதி அவளை அவ்வப்பொழுது பார்க்க வெண்பா வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள். ஆதி மனம் என்ன இவள் இன்னிக்கு ஒரு மார்க்கமா இருக்கா என்று நினைத்து கொண்டு அதன் பின் அவன் திரும்பவே இல்லை.. 

கோட்ரஸ் ஸ்டாப்பிங் வந்தது. அனைவரும்  இறங்கி கொண்டனர். வெண்பா முன்னால் நடந்து செல்ல ஆதி அவளின் பின்னால்  வெண்பா! வெண்பா! 

என்ன என்று முறைத்து கொண்டே கேட்டு நடந்தாள். 

ஹே என்ன என் அக்கா கிட்ட சொல்ல போற அதை சொல்லு ?

வெண்பா நீ கேட்டதும் நான் சொல்லிடுவெனா என்னை காலையில் இருந்து எப்படி அலைய விட்ட என்று நினைத்து கொண்டு ம்ம் நீ உன் அக்கா வீட்டுக்கு போ நான் உனக்கு கால் பண்றேன்.. 

ஹே இப்போவே சொல்லிட்டு போ.. 

என் இஷ்டத்துக்கு தான் சொல்லுவேன் என்று சொல்லி வேகமாக அவள் வீட்டுக்கு சென்றாள். 

ஆதி மனதில் இப்படி கடிப்பு அடிக்கிராலே என்று நினைத்து கொண்டே சென்றான். 

வெண்பா வீட்டுக்கு சென்றதும் முகம் கழுவி உடையை மாற்றி விட்டு  கூந்தல் விரித்து விட்டு ஒரு குட்டி கிளிப் போட்டு கண்ணுக்கு மையிட்டு அந்த மையில் ஒரு குட்டி போட்டு அதற்கு மேல் சந்தனம் வைத்து தன்னை அழகாக இருக்கிறேனா என்று ஒரு முறை பார்த்தாள். 

ம்ம் நீ அழகி தான் வெண்பா என்று சொல்லி கொண்டே தன்னை தானே சிருஷ்டி களித்து முத்தமிட்டு கொண்டாள். 

அதன் பின் நேராக அதிதி வீட்டுக்கு சென்றாள். ஆதி அமர்ந்து போனை நோண்டி கொண்டு இருக்க வெண்பா , விவேகா!  விவேகா! என்று சொல்லி கொண்டே வந்தாள். 

அதி உடனே வெளியே வந்து பார்க்க அதே நேரம் ஆதியும் திரும்பி பார்த்தான். அவன் மனம் இன்னிக்கு திருவிழா போல வந்து இருக்காளே என்று அவள் மேல் அலை பாய மிஸ்டர் ஆதித்யா என்று அவன் IPS மற்றும் UPSC தட்டி எழுப்ப உடனே பார்வையை திருப்பி கொண்டான். 

வெண்பா, அக்கா இன்னிக்கு விவேகா வரேனநு சொல்லி இருந்தால் அதான் பார்க்க வந்தேன். அவள் வரலயா! 

இல்ல என் தம்பி தான் வந்து இருக்கான். 

வெண்பா, சரி அக்கா நான் கிளம்புறேன். 

அதி, இரு வெண்பா டீ சாப்பிட்டு போ மா.. இல்ல அக்கா பரவாயில்லை.. 

அட உட்காரு வெண்பா என்று அமர வைத்து விட்டு உள்ளே சென்றாள். 

அவளுடைய அக்கா உள்ளே சென்ற அடுத்த நொடி டேய்.. 

ஆதி மும்முரமாக அவனுடைய லைப்ரரி புத்தகத்தில் இருந்து போனை வைத்தை எதோ ஒரு படிப்பு தொடர்பாக தேடி கொண்டு இருக்க.. 

டேய்!  டேய் ஆதி!.. 

இப்போ இப்போ என்னையா கூப்பிட்ட.. 

உன் பேரு தானே ஆதி! 

ம்ம்.. 

அப்போ உன்னை தான் கூப்பிட்டேன். 

என்ன விசயம் எதுக்கு வர சொன்ன.. 

வெண்பா அவனை பார்த்து  நீ சொன்னது சரி தான்..  நான் ஒத்துக்குறேன்!

ஆதி புரியாமல்   என்ன ஒத்துக்கற! 

வெண்பா,நான் உன் கிட்ட தோர்த்து போய் விட்டேன். 

என்ன சொல்ற.. 

வெண்பா ஒரு பெரு மூச்சை விட்டு விடயத்தை சொல்ல… 

ஆதி… ? 

தொடரும்… 

Sorry for the delay drs oru one week ud konjam late aagum.. comment pannunga 

Episode 232

ஆதி புரியாமல்   என்ன ஒத்துக்க போற 

வெண்பா,நான் உன் கிட்ட தோர்த்து போய் விட்டேன். 

என்ன சொல்ற.. 

வெண்பா ஒரு பெரு மூச்சை விட்டு விடயத்தை சொல்ல ஆரம்பித்தாள். 

அவன் கண்களை பார்த்து நீயாவே என் கிட்ட வந்து சொல்லுவன்னு பார்த்தேன். ஆனால் அது நான் கிழவி ஆனால் கூட நடக்காதுன்னு தெரிந்து போய் விட்டது. 

அதனால… 

 என்ன அதனால என்று ஆதி கேட்க வர 

அதனால I Love you ஆதித்யா… நான் உன்னை காதலிக்கிறேன். என்று இரு புருவமும் தூக்கி அவனை பார்க்க 

ஆதி திடுக்கிட்டு அமர்ந்தான். அவனுக்கு திடீர் என்று மூச்சு வேகமாக உடனே இதயம் வேகமாக துடிக்க கொஞ்சம் ஆக்சிசன் தேவைப்பட்டது. 

உடனே அவன் எழுந்து வெளியே  சென்றான். வெண்பா வுக்கு துளி கூட வெட்கம் இல்லை. மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.  ஒரு ஆண்பிள்ளை பையன் தான் காதலை சொல்ல வேண்டுமா என்ன ஒரு பெண்ணும் தன் காதலை வெளிப்படுத்தலாம். 

அவளுக்கு காதலை சொன்ன மகிழ்ச்சி உள்ளுக்குள் புது ரத்தம் பாயிந்தது. உடல் எல்லாம் சிலிர்த்து கொள்ள உடலில் உள்ள முடிகள் எல்லாம் கம்பி போல் நின்றது. அவள் தானாக சிரித்து கொண்டு அமர்ந்து இருக்க அந்த நேரம் அதிதி டீ எடுத்து வந்தாள். 

 அதிதியைப் பார்த்ததும் அக்கா என்று வெண்பா எழுந்து நிற்க..

ம்ம் உட்காரு மா எதுக்கு என்னை பார்த்ததும் எழுந்து நிக்கிற சும்மா தான் கா என்று சொல்லி அவள் மறுபடியும் அமர்ந்து கொண்டாள். 

ஆதி வெளியே சென்றதும் இதயம் படபடக்க அங்கும் இங்கும் நடந்தான். இங்கு என்ன நடக்கிறது! என்று அவனுக்கு ஒரு நிமிடம் தெரியவே சில மணி நேரம் பிடித்தது. அவள் சொன்ன அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒரு கள்ள சிரிப்பு அவன் உதட்டில் தோன்றியது வேக மூச்சுவிட்டு அவனுடைய தலையை கோதிக் கொண்டே சிரித்துக்கொண்டு ஒரு நிமிடம் குதித்தே விட்டான். 

அதிதி ஆதி எங்கே என்று பார்த்துவிட்டு உடனே வெளியே செல்ல அங்கு ஒரு இடத்தை பார்த்துக் கொண்டு தலையை கோதிக் கொண்டே நிலைத்து  நின்று கொண்டிருந்தான். ஆதி! ஆதி! என்னடா பண்ற?  டீ கேட்டுக்கொண்டே இருந்தியே வா, வந்து குடி, என்று சொல்லி அதிதி அழைக்க…

ம்ம் வரேன் நீ போ என்று சொல்லி அவன் வெண்பாவை பற்றி நினைத்து கொண்டே இப்பொழுது எப்படி அவள் முகத்தில் விழிப்பது என்று யோசித்து கொண்டு திரும்பி பார்க்க அதி அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள். 

ஆதி அவளிடம்  உள்ள போ என்று சொல்லிவிட்டு அவன் சொல்ல அதிதி உள்ளே சென்றாள். அதன்  பின் வெண்பா அவன் வருகிறானா!  என்று ஒவ்வொரு மிடுக்கு குடித்துக் கொண்டு எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்க… 

அவன் வந்தான் ஆதி அவளை மறந்தும் அவள் பக்கம் பார்க்கவில்லை. 

வெண்பா அவன் முகம் மாற்றத்தை  முகத்தை ஆராய ஏதோ ஒரு புத்துணர்வு ஒரு ஓரத்தில் தெரியத்தான் செய்தது. அவள் உடனே போனில் அவனுக்கு கால் செய்தாள்.  அங்கு அமர்ந்து கொண்டே அவனுடைய போனுக்கு மீண்டும் மீண்டும்  கால் செய்ய அவன் அதை பார்த்து கட் செய்தான். 

அதிதி உள்ளே செல்ல அக்கா நான் டீ குடிச்சிட்டேன் போயிட்டு வரேன்.  என்று சொல்லி வெளியே செல்ல…. சரி போயிட்டு வா வெண்பா என்று சொன்னதும் அவள் வெளியே சென்றாள். வெண்பா  வெளியே கொஞ்ச தூரம்  சென்றதும் ஆதிக்கு மறுபடியும்  அழைத்தாள். 

இவ்வளவு நேரம் என்னை  டார்ச்சர் பண்றதுக்குன்னே இருக்காளே  இன்னிக்கு வேற ஒரு தினுசா இருக்கா. ஒரு வேளை விவேகா சொன்னது போல் காலையில் பேசாமல் விட்டத்தில் இந்த கிருக்கு தனம் பண்ணிட்டு இருக்காளா!  நான் எப்படி அவாய்ட் பண்றது?  ஐயோ ஒண்ணுமே புரியலையே!  என்று கைகளில் நெட்டி எடுத்துக் கொண்டு அவன் போனை பார்த்துக் கொண்டிருக்க..

அதிதி போன் விடாமல் அடிக்க அதை பார்த்து கடுப்பாகி  எடுத்து பேசுடா விடாம அடிச்சிட்டு இருக்கு தானே…

இல்ல… 

ஏய் நீ  இப்போ எடுக்கிரியா இல்ல நான் எடுக்கவா என்று அருகில் வர

நீ போ எனக்கு தெரியும்… 

ஓவரா பேசுற ஒன்னும் சரியில்ல டா உன்னைi  அப்பா கிட்ட சொல்லட்டுமா… 

எடுத்து பேசறேன் நீ போடி என்று சொல்லிவிட்டு போனை எடுத்து 

 வெண்பா எடுத்த வார்த்தையில் இப்போ உன்னை நான் உடனே பாக்கணும் வெளிய வா…

முடியாது…

இப்ப நீ வரல உங்க அக்காவ கூப்பிட்டு சொல்லிடுவேன்!

என்ன சொல்லுவ? 

நான் உங்க தம்பியை லவ் பண்றேன்னு சொல்லுவேன் 

வெண்பா அவனிடம் இப்போ எப்படி வசதி?  வெளியே வரயா இல்லனா, உங்க அக்கா கிட்ட சொல்லட்டுமா! 

ஒன்னும் பண்ணி வைக்காத, நான் உடனே வரேன்.  என்று சொல்லிவிட்டு அவன் வேக வேகமாக அந்த டீயை குடித்துவிட்டு எழுந்து சரி அதி நான் கிளம்புறேன். எனக்கு டைம் ஆச்சு…

என்னடா வந்ததும் போற இன்னைக்கு இருந்துட்டு போடா…

இல்ல அதி உன்  ஞாபகம்  இருந்தது, அதனால தான் வந்தேன்.  அதான் பார்த்துட்டேனே! அது உன்னோட டீயும் குடிச்சிட்டேன். நான் இப்ப கிளம்புறேன். வீட்டுக்கு போற சரியா  டா!

ம்ம் நான் போயிட்டு கால் பண்றேன்.  பாய் பாய் என்று காலில் சுடுதண்ணி ஊற்றிக் கொண்டது போல வேகமாக சென்றான்.

அதிதி, சரி ஓகே பார்த்து போயிட்டு வா என்று சொல்லி அவள் வேலை  பார்க்க சென்று விட்டாள்.

ஆதி வெளியே வந்து கர்சிப் பிடித்து தன்னுடைய முகத்தில் பூத்த வியர்வையை துடைத்துக் கொண்டு அவளுக்கு போன் செய்தான்.  

ஆதி அவளுக்கு போன் செய்ய தனது போனை  எடுக்க…

அதை தெரிந்து கொண்டவள் போல் அவனுக்கு கால் செய்தாள்.

 வெண்பா அவனிடம் ஹலோ நீ வெளியே வந்தது, எனக்கு தெரியும் நீ நேரா அப்படியே ஸ்ட்ரைட்டா வந்து ஒரு லஃப்ட் அப்படியே  ஒரு ரைட்டு அண்ட்  ஸ்ட்ரைட் வந்தேனா அங்க கார் செட் இருக்கும், அங்க வந்துடு. ஓகே என்று சொல்லி வைத்து விட

 அவன் கொஞ்சம் தடுமாறி கொண்டே இன்னும் என்னென்ன எல்லாம் பண்ண போறாளோ!  ஐயோ என்று புலம்பிக்கொண்டே அங்கு சென்றான்.

ஒரு தோரணையாக வெண்பா நின்று கொண்டிருந்தாள்.  அவன் அருகே வந்ததும் வெண்பா அவனிடம்  அப்புறம் என்ன உன் முகம் ஒரு மாதிரி கலவரமா இருக்கு? 

நான் எப்பவும் போல தான் இருக்கேன்.என்று  தன்னை இயல்பாக காட்டி கொண்டான். 

சரி நீ எப்படி வேணா இருந்துட்டு போ.  நான் சொன்னதுக்கு நீ பதில் சொல்லவே இல்ல.. என்று அவனை உற்று நோக்கினாள்.

என்ன சொல்லணும்…

டேய் டென்ஷன் பண்ணாத இந்த வெண்பா யாருன்னு தெரியும்ல! இந்த வெண்பா உங்கிட்ட லவ் யூ சொல்லி இருக்கா?நீ எவ்வளவு கொடுத்து வைத்த பையன் தெரியுமா? 

ஆதி ஓ அப்படியா எனக்கு தெரியாதே ! 

 டேய் ஒழுங்கா பதில் சொல்லிட்டு போடா?  என்று அவனை நோக்கி அடிகள் வைதது அருகில் வந்தாள். 

ஆதி என்ன ஓவரா மிரட்டுர!

ஆமாண்டா நான் மிரட்டுறேன் இப்போ சொல்ல போறியா? இல்லையா? அவன் திருத்திருவென்று மொழித்து நின்று கொண்டிருக்க 

வெண்பா சரி பதில் சொல்ல வேண்டாம். 

இப்பொழுது அவன் அவளை நிம்மதியாக பார்க்க

வெண்பா அவனிடம் நீ பதில் சொல்ல வேண்டாம் ஆனால்.. 

ஆனால் என்ன ? என்று அவன் கேள்வியாக பார்க்க

எனக்கு ஆரஞ்சு மிட்டாய் வேணும், கொடுத்துட்டு போ! 

ஆதி, என்கிட்ட இப்போ இல்ல…

ஏன் இல்ல எப்பவும் வச்சிருப்பில்ல  உன் அத்தை பொண்ணுக்கு மட்டும் தேன் மிட்டாய் வைத்திருக்கும் போது இப்போ உன் மாமி பொண்ணுக்கு ஆரஞ்சு மிட்டாய் வைத்திருக்கனும் தானே.  அது தானே நியாயம்… என்று வெண்பா அவனை பார்த்து கேட்க 

யாரு மாமி பொன்னு எனக்கு அப்படி யாரையும் தெரியாது என்று தலையை கோதி கொண்டு அவளை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்து கொண்டு பதில் அளித்தான். 

ஆதி மேலும் அவளிடம் நீ கேட்ட மிட்டாய் நிஜமா என்கிட்ட இல்ல… 

வெண்பா அவனை தீர்க்கமாக பார்த்து பொய் சொல்லாத நீ எப்பவும் வச்சிருப்ப எனக்கு தெரியும்… 

ஹே நிஜமா இல்ல நம்பு ..

இப்ப கூட உன் பேக்ல இருக்கு என்று அவனை தீயாக முறைத்தாள்.

அடிப்பாவி அதையும் பா.. பார்த்துட்டாலா என்று ஜெர்க் அடித்து  ஆமா!.. ஆமா மறந்துட்டேன்! என்று சொல்ல..

அவள் உடனே சரி யாருக்கு கொடுக்க வச்சிருக்க? 

ஆதி அவளின் முகத்தை பார்த்து நான் யாருக்கு கொடுத்திருப்பேன் என்று நீ நினைக்கிற! என்று அவளை சீீண்டி பார்க்க கேட்டான். 

வெண்பா மிகவும் கோபமாக கண்கள் சுருக்கி அந்த யாழினிக்கு கொடுத்தனு மட்டும் என்கிட்ட சொன்ன! உன்ன நான் இங்கேயே புதைச்சு போட்டுருவேன் டா!

ஏன் நான் அவளுக்கு  கொடுக்க கூடாதா என்ன  என்று ஆதி அவளை பார்த்து கேட்க

ஆமா நீ கூடாது  என் ஆளு தெரியும் இல்ல கொன்றுவேன் என்று வெண்பா  சொல்ல

ஆதி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். ம்ம் எடு டா என்று அதட்ட அதன் பின்  அவன் பைகளில் இருந்து அந்த ஆரஞ்சு மிட்டாய் எடுத்து அவள் முன்னீட்ட அதை வாங்கி வாயில் போட்டவள்… 

தன்னை சுற்றி ஒரு பார்வையைப் பார்த்து சுழல விட்டு அவனை பார்க்க அவன் மும்முரமாக பேக்கை போட்டு பேக் செய்து கொண்டு இருந்தான். 

சட்டென்று அவன் அறிகில் ஒவ்வொரு அடிகலாக வர ஆதி எதேட்சியாக அவளை பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி ஆகி திக்கி திணற ஹே இப் இப்போ எதுக்கு கிட்ட வர! அதான், நீ கேட்டத நான் கொடுத்து விட்டேனே! அங்கேயே இருந்து பேசு.. 

ம்ம் நீ கேட்டது கொடுத்து விட்ட இப்போ எனக்கு கொடுக்க தோணுதே.. 

அவன் எட்சிளை விழுங்கி கொண்டே அவளை பார்க்க ஹே மிட்டாய் தான் என்று கைகளை நீட்டியவள் அவனை ஒரே பிடியில்  பிடித்து இழுத்து  அவன் உயரத்திற்கு எக்கி நின்று கண்களை மூடி இதழில் முதல் முத்தம் பதிக்க  அந்த ஆரஞ்சு மிட்டாய் அவன் வாய்க்கு சென்று விட்டது. 

அவனது பையை கீழே தவற விட்டான். உடலில் புது இரத்தம் பாயுந்தது. அவன் சிந்தையில் என்னை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள் என்னை நானே தொலைத்து விட்டேன் என்று காதுகளில் ஒலித்தது. 

வெண்பா அவனிடம் அவன் கண்களை பார்த்து நீ எதுக்கு அவளுக்கு ஐ மீன் யாழினிக்கு ஃபேவரா பேசுற அப்படின்னு எனக்கு தெரியாது. ஆனால் உன் மனசுல நான் மட்டும் தான் இருக்கணும்! புரியுதா!

நான் மட்டும் தான் இருக்கணும் தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு இருந்த உன்ன சும்மா விடமாட்டேன்.  அப்புறம் பொதச்சிடுவேன் என்று அவன் உதட்டை பிடித்து கிள்ளி விட்டு ஓடி விட்டாள்.

ஆதிக்கு அந்தமும் புரியவில்லை இங்கு என்ன நடப்பது! என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்று ஒன்றுமே புரியாமல்  என்று முழித்துக் கொண்டிருக்க அவனது வாயில் சாக்லேட் இருந்தது.

திருட்டுத் தனம் மொத்தமும் கத்து வச்சிருக்காலே என்று நினைத்துக் கொண்டு அவள் சென்ற திசையை பார்த்து நின்று கொண்டிருந்தான்.அவன் உதடுகளை வருடி  சுயநினைவுக்கு வந்தவன் குதித்துக் கொண்டு நேராக வீட்டுக்கு சென்றான். 

அந்த இரவு இருவருமககும் தூக்கம் போனது இருவரும் மாறி மாறி கனவில் செண்று கொண்டு இருந்தனர். 

அடுத்த நாள் அழகாக விடிந்தது வழக்கம்போல் கல்லூரி செயல்பட தொடங்கியது இன்னும்  ஒரு மாதம் 15 நாட்கள் தான் இருக்கிறது.

ஒரு பக்கம் பிராக்டிகல்ஸ் ப்ராஜெக்ட் ஓரளவு முடிந்திருக்க ஸ்டடி லீவ் வரை சென்று விட்டது. அருண் விவேகா விடம் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்து இருந்தான். ஆதி அன்று அருண் சொன்ன விஷயத்தை விவேகாவுடம் சொல்ல வில்லை எப்படியும் அந்த அருணால் ஒன்றும் செய்ய முடியாது இன்பா இருக்கிறார் என்று அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை ஆனால் இருவருடைய குழுக்களும் எங்கு பார்த்தாலும் முட்டி கொண்டது. 

 வெண்பா சில இடங்களில் நோட்டம் விட்டு அங்கும் இங்கும் ஆதியை  பார்த்துக் கொண்டிருக்க… 

அவன் அவளைப் பார்த்து வெண்பா பாபபக்கத்தில் அவள் இருக்கும் திசை பக்கம் போகவே மாட்டான் போகும்போது எல்லாம் உதட்டை ஈர படுத்திக் கொண்டு வெண்பா  அவனைப் பார்த்து ஒரு லுக்கு விடுவாள். 

அவ்வளவு தான் இவனுக்கு இதயமே வெடித்து விடும் அளவுக்கு துடிக்கும் அவன் முற்றிலும் அவனது கட்டுப்பாட்டை இழந்து இருப்பான்.

அதற்காகவே அவள் இருக்கும் பக்கம் அவன் போகவே மாட்டான். அதன் பின் தேர்வு சமயம் வர அனைவரும் சின்சியராக படித்துக் கொண்டிருந்தனர்.   யுனிவர்சிட்டி எக்ஸாம் முடிந்து இப்பொழுது லீவும் வந்துவிட்டது. 

 விவேகா ஆதி அவரவர்கள் வீட்டில் இருந்தனர். 

இன்பா சில கேஸ் விஷயமாக பிஸியாகிவிட்டான். அந்த ஜெகா மற்றும் லிங்கா  அந்த 14 கேஸ்  விஷயமாக இந்த கிட்நாப் கேஸ் விஷயத்தில் பிஸியாகிவிட்டான். 

இங்கே வீட்டில் விவேகா யாரிடமும் பேசாமல் சாப்பிடாமல் இருந்தாள். என்ன காரணம் அது ஒரு குட்டி காரணம் தான் இப்போ கேம்பஸ் இன்டர்வியூல RV solution of technology என்ற கம்பனியில்   செலக்ட் ஆகி இருக்கிறாள். அதனால் அதற்கு தான் வேலைக்கு போவேன் என்று விடாப்பிடியாக சொல்லி விட்டு சாப்பிடாமல் உண்ணா விரதம் போராட்டம் கூட சென்று விட்டாள். 

இப்பொழுது அவளை பெங்களூர் அனுப்ப வேண்டும் அதற்கு தான் இந்த ஆர்ப்பாட்டம். 

கங்கா அவளை பார்த்து இப்படியே எத்தனை நாள் டி இருக்க போற நீ தலைகீழா நினனு தண்ணி குடித்தால் கூட நான்  உன்னை அனுப்ப மாட்டேன் புரியுதா! என்று சொல்லி விட்டு கங்கா அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். 

விவேகா மூக்கை உறிஞ்சி கொண்டே எதுக்கு மா என்னை படிக்க வச்ச மாடு மேய்க்க விட்டு இருக்கலாமே! 

கங்கா, ம்ம் நானும் உன் அப்பா கிட்ட சொன்னேன் அவரு தான் கேட்க மாட்டாமல் படிக்க வச்சு இப்போ உன் கொட்டத்தை அடக்க ஆள் இல்ல.. 

விவேகா இதை கேட்டதும் இன்னும் அழுது கொண்டே நீ உன்னை நான் மாமா கிட்ட சொல்றேன். நான் நிச்சயம் போவேன் என்று சொல்லி மீண்டும் அழ உடனே கங்கா உள்ளே இருந்து அவளை அடிக்க தோசை திருப்பியை எடுத்து கொண்டு வர அதற்குள் அவள் உள்ளே சென்று கதவை பூட்டி கொண்டாள். 

அடுத்த நாள் செல்வம் வீட்டில் ஒரு புயல் வீசியது. வருண், அதிதி, தேவி, செல்வம், ஆதி, என அனைவரும் அமைதியாக இருக்க விவேகா மாமசசி நீங்க சொல்லுங்க நான் பெங்களூர் போகட்டுமா! 

ஆதி கூட அங்கே தான ரிசல்ட் வர வரைக்கும் கோச்சிங் கிளாஸ் சேர போரான்.  இந்த அம்மாவுக்கு வேற வேலை இல்ல அத்தை நீங்க சொல்லுங்க? அட்லீஸ்ட் ஒரு மூணு மாசன் மட்டும் அங்கே வேலை செய்கிறேன் எனக்கு ஆசையா இருக்கு பிளீஸ் என்று அனைவரிடமும் கேட்டு அழுது புரண்டு கெஞ்சினாள். 

செல்வம் அவளை பார்த்து அழாத சின்ன குட்டி கங்கா அவளை அனுப்பு ஆதி அங்கே தானே இருக்கான் நீ கவலை படாதே!

கங்கா இதை கேட்டதும் அண்ணா இப்படி நீ செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து தான் அவள் இப்படி ஆடி கொண்டு இருக்கா இவள் வேலை செய்ய ஒன்னும் அவசியம் இல்ல வருண் நான் வேலைக்கு போறேன் இவள் அதிக்கு துணையா வீட்டோடு இருக்கட்டுமே! 

தேவி இதை கேட்டதும் உடனே அக்கா வேண்டாம் விவேகா போயிட்டு வரட்டும் ஆதி இருக்கான் உங்களுக்கு என்ன கவலை அவன் பத்திரமா பார்த்து கொள்வான். என்று சொல்ல கங்கா அமைதியாக இருந்தாள். 

விவேகா வருண் கிட்ட போய் அண்ணா அம்மா கிட்ட சொல்லேன் நீ சொன்னால் தான் அம்மா கேட்கும் என்று சொல்ல வருண் மா அனுப்புங்க அவள் போயிட்டு வரட்டும் என்று சொல்ல கங்கா சரி என்று சொல்லி விட்டு அவளிடம் பேசாமல் உள்ளே சென்றாள். 

விவேகாவுக்கு முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எறிந்தது. எப்படியோ பெங்களூர் போக போறோம் ஜாலி ஜாலி என்று உற்சாகமாக சுற்றி திரிந்தாள். 

இங்கே இன்பா சூர்யா கூட 

கதவு தட்டும் சத்தம் கேட்டு கண்களை திறந்தான். சூர்யா அவனது அறையில் இருந்தான்.

சூர்யா இன்பாவின் வருகைக்காக காத்து கொண்டு இருந்தான். சூர்யா நிமிர்ந்து பார்க்க அது இன்பாவே தான்… அவனை பார்த்த அடுத்த நொடி எழுந்து அவன் அருகில் வந்து சீக்கிரம் சொல்லு டா அவ மகி.. மகியை பற்றி சொல்லு டா… ? அவளுக்கு ஒன்னும் ஆகல தானே… 

இன்பா, நான் ரெண்டு விஷயம் கொண்டு வந்து இருக்கிறேன் டா… இதை கேட்டதும் அவன் அதே இடத்தில் நிற்க… அவளுக்கு ஒன்னும் இல்ல தானே.. என்று சூர்யா திரும்ப திரும்ப கேட்க 

சூர்யா ஜஸ்ட் ஸ்டாப் இட் டேம்ன்…!

இதை கேட்டதும் சூரியா பின்னால் திரும்பி நின்று கொண்டான் அவன் கண்கள் கலங்கி போனது. இன்பா அவன் தோள்களின் மேல் கைகளை வைக்க அவன் அப்படியே நின்றான். 

முதலில் கேட்ட விஷயத்தை சொல்லிடறேன்.. என்று சொல்லி சூரியாவின் கைகளில் ஒரு பத்திரத்தை நீட்டினான். அது விவாகரத்து பத்திரம் அதில் மகிழினி கையெழுத்து இருந்தது. இது எனக்கு ஏர்போர்ட்ல உள்ள போஸ்ட்  பாக்ஸ்ல கிடைத்தது. 

சூரியா அடுத்ததாக அவன் வாயில் இருந்து அடுத்து என்ன..? சூர்யா அவ உயிரோட தான் இருக்கா.. இதை கேட்டதும் அவனுக்கு உயிர் வந்தது. அவன் திரும்பி இன்பாவை அணைத்து கொண்டான்.எனக்கு தெரியும் என் மனசு சொல்லிச்சு இனி நான் சக்தி கிட்ட போய் சொல்லுவேன் அம்மா சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடுவாள் இப்போ தான் எனக்கு எப்படி இருக்கு தெரியுமா என்று மீண்டும்  இன்பாவை கட்டி அணைத்து கொண்டான்.

இன்பா , ஆனால்… அவன் ஆனால் என்ன? நீ அவளை தேட முயற்சி செய்ய வேண்டாம். சூரியா அவன் சட்டையை இறுக்கி பிடித்து அடிக்க வந்து நான் ஏன்டா தேட கூடாது.. மகி எனக்கு வேணும் அவளால் என்னை விட்டு பிரிந்து இருக்க முடியாது. 

அப்படின்னு நீ சொல்ற அவ தானே உன்னை விட்டு போயிருக்கா.. 

இன்பா, இதுல நிறைய பேர் இன்வால்வ் ஆகி இருக்காங்க டா.. யாரா இருந்தால் எனக்கு என்ன என் மகி எனக்கு வேணும்..

இன்பா , அவனை நேராக பார்த்து அவளுக்கு நீ வேண்டாம்னு போயிட்டா டா..  

அந்த பெங்களூர் to டெல்லி பிளைட் விபத்தில் அவள் மாட்ட வில்லை ஆனால் இங்கே இருந்து போற மற்ற நாடுகளுக்கு எல்லாம் டிக்கெட் வாங்கி இருக்கா டா… அதிலும் அந்த விபத்தில் எல்லா தகவலும் அழிந்து போச்சு அந்த விபத்து எதெட்சையா நடந்து இருக்கலாம் ஆனால் அவள் செய்தது எல்லாம் உன்னை விட்டு போகனும் அப்டின்னு பண்ணி இருக்கா டா..

இன்பா, ஒரு வேளை அவள் டெல்லி போகும் பிளைட்ல போயிருந்தால் என்ன டா பண்ணி இருப்ப அவள் நமக்கு கிடைத்து இருக்க மாட்டாள்.

சூர்யா எதுவும் பேசாமல் அவன் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தான்.

இன்பா, உன் காதல் உண்மை அது தெரியும் போது அவளே வருவா ஒரு வேளை பழசு எல்லாம் நினைவுக்கு வரும் போது நிச்சயம் வருவா டா… 

சூர்யா, நியாபகம் வந்து கிட்ட தட்ட ரெண்டு மாசம் ஆகி விட்டது..

இன்பா, அப்போ இந்நேரம் அவளுக்கும் நினைவு வந்து இருக்குமா ..அப்படி என்ன டா உங்களுக்குள் நடந்தது. அமுத சுரபி இங்கே எப்படி வந்தாள். 

யாராவது எதுவும் .. அவள் spr வீட்டில் இருந்தது பற்றி உங்க வீட்டில் யாருக்கும் தெரிந்து இருக்குமா… மகி நல்ல பொண்ணு டா தீடீர்ன்னு என்னாச்சு… 

சூர்யா ஒரு பெரு மூச்சு விட்டு இனி அவள் எனக்கு வேண்டாம் இன்பா… என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விட்டு வேக வேகமாக அந்த அறையை விட்டு வெளியே சென்றான். 

இன்பா அவன் கையில் ஒரு காகிதம் வைத்து இருந்தான் அதை அப்படியே பாக்கெட்டில் வைத்து கொண்டான். அவள் எழுதிய கடிதம் அதை நீ படித்து பார்த்தால் இன்னும் நொந்து போயிடுவ டா..உன்னை விட்டு அவளால் இருக்க முடியாது கட்டாயம் உன் கிட்ட வந்து விடுவாள் என்று நினைத்து கொண்டு அவன் திரும்பினான். 

அதன் பின் இன்பா சொன்னதை போல் ஒரு நான்கு மாதம் சத்ய தேவ் அங்கு மை விழியுடன் இருக்க இன்பா அவனை ஆர்மி ஸ்கூல்ல போய் சேர்த்து விடலாம் என்று முடிவு எடுத்து விட்டு இன்பா பெங்களூரில் இருந்து தமிழ் நாடு செல்லவும். விவேகா RV solutions கம்பனியில் வந்து சேர பெங்களூர் வரவும் சரியாக இருந்தது. 

இன்பா பெங்களூரில் இருப்பது பற்றி அவளுக்கும் தெரியாது விவேகா இங்கே வருவது பற்றி இன்பாவுக்கும் தெரியாது. இப்படியே நாட்கள் நகர விவேகா அவளுக்கென புது போனை செல்வம் வாங்கி தந்தார். 

அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது. இனியாள் புதிய திட்டத்துடன் காத்து கொண்டு இருந்தாள்.

தொடரும்… 

Episode 233

இன்பா பெங்களூரில் இருப்பது பற்றி அவளுக்கும் தெரியாது விவேகா இங்கே வருவது பற்றி இன்பாவுக்கும் தெரியாது. இப்படியே நாட்கள் நகர விவேகா அவளுக்கென புது போனை செல்வம் வாங்கி தந்தார். 

இன்பா அங்கு இருந்து கிளம்பவும் அவள் அங்கே ஹாஸ்டல் சேரவும் சரியாக இருந்தது. 

ஆதி ஒரு UPSC கோச்சிங் செண்டரில் தேர்வுக்காக சேர்ந்து இருந்தான். இது வருனுடைய ஏற்பாடு.. விவேகா புது போன் வாங்கி இப்பொழுது தான் ஒரு வாரம் ஆகி இருந்தது.

இன்பாவுடைய இரண்டு எண்களையும் போனில் பதிவு செய்து வைத்து இருந்தாள்.

அவனிடம் பேச வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரே உற்சாகம் ஆனால் அது அனைத்தையும் கஷ்டபட்டு அடக்கி கொண்டு ரிசல்ட் வந்த பின் அவனை சந்திக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தாள். 

இங்கே இனியாள் வீட்டில் ஓரமாக அழுது கொண்டு இருக்க தீபிகா அப்பொழுது தான் அவளுடைய அறையில் இருந்து எழுந்து வந்தாள்.

ஆம் வினய் தீபிகாவை திருமணம் செய்து கொண்டான்.

அவனுக்கு அவள் மேல் விருப்பம் இல்லை ஆனால் அவள் வயிற்றில் அவனுடைய குழந்தை இருந்தது. அந்த ஒரு காரணத்துக்காக செய்து கொண்டான். 

தீப்பிகாவை பார்த்ததும் இனி யாள் கோபத்தில் அவளை நெருங்கி எல்லாம் உன்னால் தான் டி எல்லாம் உன்னால் மட்டும் தான் எனக்கு இன்பா கிடைக்காமல் போய் விட்டார். என்று கத்தி கொண்டே அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டே அவள் எல்லா பொருளையும் போட்டு உடைக்க

வினய், என்ன மா இது இப்படி செய்தால் என்ன அர்த்தம்..

அண்ணா! நீ பேசாதே பேசாதே நீ செய்த சின்ன தப்பு என்னோட மொத்த வாாழ்க்கைகையும் போச்சு நான் அந்த காலேஜ்க்கே ராணி ஆகி இருப்பேன் ஆனால் இப்போ இப்போ மொத்த காலேஜ்ம் என்னை பார்த்து சிருக்கிது கேலி கிண்டல் பேசுது இதை எப்படி நான் மாற்றுவது நீ எனக்கு கெட்டது பண்ணி இருக்க அண்ணா என்று அழுது கொண்டே அவள் அறைக்கு ஓடினாள். 

வினய் மனம் தன் தங்கையின் நிலையை நினைத்து மிகவும் வேதனை கொண்டது. அதே சமயம் குரு அவனிடம் சரவணன் – சுபா காதல் விஷயம் பற்றி கூறி இருக்க இதுக்காக எதுவும் செய்ய வேண்டும் என்று நினைத்து ஒரு திட்டத்தை தீட்டினான். 

வினய் இனியாளை பார்க்க சென்றான். நான் சொல்றத கேளு சுவீட்டி நீ அந்த வீட்டுக்கு மருமகளா போக ஒரு வழி இருக்கு! என்று கதவுக்கு அருகில் போய் சொல்ல.. 

ஒரு சில நிமிடம் கழித்து கதவு திறந்தது. என்ன அண்ணா சொல்ற? என்று கண்களை துடைத்து கொண்டே கேட்க வினய் விவரம் சொன்னதும் அவள் முகத்தில் பிரகாசம் எட்டி பார்த்தது.

மேலும் அவன் நீ இந்த விஷயத்தில் அந்த ரவி சந்திரன் கிட்ட போக கூடாது. அவர் இன்பாவுக்கு எதிரி மாதிரி தான் தோணும் ஆனால் அவங்க பாண்டிங் டோட்டல் டிஃபரண்ட்

சோ நீ நேரா அந்த வசுமதி கிட்ட உன் விஷயத்தை பற்றி பேசுற ஆனால் அதுக்கு முன் நான் சொன்ன இந்த முக்கியமான விஷயம் செய்தால் உனக்கு தான் வெற்றி

என்று அவன் சொல்ல சரி அண்ணா நீ சொன்னது போலவே செய்கிறேன். என்று சொல்லி அடுத்த நாளுக்காக காத்திருந்தாள். 

விவேகா முதல் முறையாக வீக் எண்ட ஆதி இல்லாமல் தனியாக ரயிலில் பயணம் செய்து வர போகிறாள் அந்த நினைவில் அவள் சந்தோஷமாக இருக்க இங்கே நடப்பது எதுவும் அவளுக்கு தெரிய வில்லை. 

சில வலை தளத்தில் இனியாழ் பற்றிய செய்திகள் வர தொடங்கியது. அவன் தான் ஆட்களை வைத்து தயார் செய்து இருந்தான். இந்த இனியாழ் தற்கொலை முயற்சி செய்து இருக்க அதை வினய் போன் செய்து வசுமதி கிட்ட சொல்லி இருக்கிறான். 

வசுமதி உடனே இன்பாவுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல அவனுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. இதுக்கு நம்ம தான் காரணமா நாம் தேவையில்லாத அந்த பெண்ணை சஞ்சலம் செய்து விட்டோமோ என்று தோன்றியது. உடனே இன்பா இதை எப்படி கையாள்வது என்று யோசித்து கொண்டு சென்றான்.

ஆனால் இந்த விஷயம் வினய் சூழ்ச்சியால்  வேறு விதமாக கையாள பட்டது. வசுமதி ஏற்கனவே இனியாளை பார்க்க சென்று இருக்க அவள் ஹாஸ்பிடலில் இருந்தாள்.

இன்பா, என்ன ஆச்சு எதுக்கு இப்படி ஒரு விஷயம் செய்து இருக்க? 

இல்ல எனக்கு நீங்க என் கிட்ட எப்பொதும் போல் பேசுவதே இல்ல என்னை எல்லோரும் காலேஜ்ல ரொம்ப தப்பா பேசினார்கள் என்னால் தாங்க முடியல..

அண்ட் உங்களை பார்க்கனும் போல் இருந்தது என்னால் எந்த முகத்தை வைத்து கொண்டு பார்ப்பது என்று தெரியாமல் அந்த கோபத்தில் வருத்தத்தில் இப்படி செய்து விட்டேன். என்னால் தானே உங்களுக்கு இந்த சிரமம்.. 

இன்பா, நீ என்னை பற்றி தவறான எண்ணம் வளர்த்து கொண்டு இருக்காத எனக்கு உன் மேல் எந்த ஒரு எண்ணமும் இல்லை.. 

அவளோ இல்ல நான்  என்று அவள் எதோ சொல்ல வர அவன் மிகவும் கோபமாக நான் சொல்வதை புரிந்து கொள் இதுக்கு மேல் என்ன நடந்தாலும் நான் உன்னை பார்க்க வற மாட்டேன். என்று சொல்லி விட்டு அவன் வெளியே செல்ல அந்த இடத்துக்கு மீடியா வந்து குவிந்தது. இன்பா அனைத்து மீடியா பத்திரிக்கையாளர் களையும் பார்த்து ஒரு முறை கடுமையான பார்வையை வீசினான். 

 அவர்கள் பயந்து கொண்டே  எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் ஆள் ஆளுக்கு அவர்களாகவே முடிவு செய்து சில விஷயத்தை எழுதி போட ஆரம்பித்தனர். ஒரு விஷயம் திரித்து திரித்து இப்பொழுது அது இன்பா Vs இனியாழ் என்றும் இன்பா மனதில் இனியாழ் என்றும் பத்திரிக்கைகளில் வர ஆரம்பிக்க

அங்கு உள்ள ஒவ்வொருவரும் பேசி கொள்ள ஆரம்பித்தனர். அப்போ இந்த பொண்ணுக்காக தான் இன்பா அக்காவை அந்த வினய் கட்டிக்க நினைத்து இருக்காரு போல.. அதனால் தான் அந்த வசுமதி இன்பாவை அடித்து இருக்காங்க என்று ஒரு புது புரளி கிளம்ப இது எதையும் அறியாமல் விவேகா வந்து இறங்கினாள். 

அவர்கள் வீட்டுக்கு புதிதாக ஒரு வரவு வரப்போகிறது. அதிதி மாதமாக இருக்கிறாள்.அதனால் நேராக கோட்ரெஸ் சென்று அவளை பார்க்க வேண்டும் என்று நினைத்தாள். அப்படியே அந்த இடியட் இன்பாவின் நினைப்பு அதிகமாக இருந்தது. 

ம்ம் வரேன் டா இடியட் என்னை பற்றி நினைத்தயா பக்கத்தில இருக்கும் போது மட்டும் அட்டை போல ஒட்டி கிட்டு இருப்பான் ஆனால் தூரம் சென்றதும் என்னோட நினைப்பு அந்த பப்பி நாய்க்கு வரவே மாட்டிண்குது..

என்று சிரித்து கொண்டே போனை எடுத்து பேச அதற்குள் வாட்ஸ் அப்பில் அவர்களது காலேஜ் குரூப்ல செய்திகள் வந்து குவிய தொடங்கியது. அப்படி என்ன நடந்தது என்று அதை உள்ளே திறந்து பார்க்க விவேகா வின் முகம் சட்டென்று மாறியது. 

செல்வம் அந்த நேரத்தில் விவேகாவுக்கு கால் செய்தார். சின்ன குட்டி எங்கே இருக்க? ம்ம் மாமா நான் இங்கே வந்து விட்டேன் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் கோட்ரஸ்ல இருப்பேன். 

விவேகா மாமா என்று அழைத்ததும் அவள் குரலில் உள்ள மாற்றத்தை கவனித்த செல்வம் சின்ன குட்டி என்ன ஆச்சு உன்னோட குரல் ஒன்னும் சரி இல்லையே! ஒன்னும் இல்ல மாமச்சி நான் நல்லா இருக்கேன் என்று சொல்ல அதற்குள் தேவி போனை வாங்கி விவேகா நீ நேரா இங்கேயே வந்திடு மா அங்கே கொட்ராஸ் போக வேண்டாம். 

விவேகா ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு என்னை சரியாக புரிந்து வைத்து இருப்பது நீங்க மட்டும் தான் அத்தை நான் நேரா வீட்டுக்கு வரேன் என்று சொல்லி கண்களில் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டே செல்வம் வீட்டுக்கு சென்றாள். 

ஆதியால் வர முடிய வில்லை இன்னும் தேர்வுக்கு குறைந்த நாட்கள் தான் இருக்கிறது அதனால் அவன் முழு கவனமும் படிப்பில் மட்டுமே இருந்தது. 

விவேகா நேராக செல்வம் வீட்டுக்கு வந்தாள். அதியை பார்த்ததும் ஓடி சென்று அணைத்து அழ கங்கா, தேவி, செல்வம், வருண் என அனைவரும் திகைத்து பார்த்தனர். 

தேவி அண்ணா பார்த்தியா இதுக்கு தான் நான் அவளை போக வேண்டாம் அங்கே அனுப்ப வேண்டாம் அப்டின்னு சொன்னேன் இப்போ எப்படி அழுகிறாள் பாரு என்று சொல்லி கங்கா கண்களிலும் கண்ணீர் வர.. 

உடனே விவேகா அம்மா நான் நல்லா இருக்கேன் நம்ம அதி வயிற்றில் நிச்சயம் பையன் தான் இருப்பான் நீ வேணாலும் பாரேன் என் அப்பா எனக்கு கிடைக்க போறாங்க அதி செல்லம் உன்னால் எனக்கு எங்க அப்பா கிடைக்க போறாங்க என்று நினைத்து அழ கங்காவும் சேர்ந்து அழுதாள். அதியின் கண்கள் கலங்கியது. 

அதன் பின் அவள் உள்ளே சென்றதும் விவேகா அவர்களுடன் மிகவும் இயல்பாக பேசி சிரித்து விளையாடி விட்டு பழைய விவேகாவாக தன்னை மாற்றி கொண்டாள். முன்பு இருந்ததை விட நிறைய சாப்பிட்டு விட்டு நேராக அனைவருமதானும் 10.00 வரை அரட்டை அடித்து விட்டு பின் களைப்பாக தூங்க சென்றாள். 

எப்பொழுது விடியும் என்று காத்திருந்தாள். அப்பொழுது தான் இங்கு இருந்து மீண்டும் பெங்களூர் செல்ல முடியும் அதனால் அதையே நினைத்து கொண்டு இருந்தாள். ஆனால் கண்களில் கண்ணீர் வரவே இல்லை. அடுத்த நாள் விடிந்ததும். வேகமாக தன்னை தயார் படுத்தி கொண்டு எப்படி வந்தாலோ அதே போல் மீண்டும் கிளம்பி விட்டாள். 

கங்கா, விவேகா எதுக்கு டி இப்படி வந்ததும் வராததுமா கிளம்பி போற நாளைக்கு ஒரு நாள் இருக்கலாமே! 

விவேகா, மா நாளைக்கு தான் ஆதிக்கு ஹாஃப் டே லீவு அதனால் நானும் அவனும் கொஞ்சம் சுற்றி பார்க்க போவோம். சோ மன்டே எனக்கு ஆபீஸ் ல நிறைய வேலை இருக்கு நான் போயே ஆகனும்.. 

தேவி ஆதி கூட நேரம் செலவிட போகிறாள் என்று தெரிந்ததும் உடனே அவள் அக்கா விவேகா இன்னிக்கே போகட்டுமே அப்போ தான் சரியா இருக்கும் என்று அனுப்பி வைக்க.. 

செல்வம் அவளை ட்ரெயின் ஏற்றி விட்டு வர விவேகா…? 

விவேகா வண்டியில் ஏறிய அடுத்த நொடி இந்த பக்கம் செல்வம் செல்ல அவள் கண்களில் கண்ணீர் கொட்டியது.மனம் முழுவதும் பாரமாக இருந்தது. 

இது உண்மை தான் அவன் அவளை பார்க்க சென்று இருக்கிறான். கூடவே வசுமதி மேம் போயிருக்காங்க இதுக்கும் மேல என்ன இருக்கு நான் எதுக்கு அவனை நினைக்கணும் அப்படியே நான் நினைத்தாலும் இந்த ஊர் நம்மல என்ன பேசும் அவள் கிட்ட இருந்து இந்த இன்பாவை நான்! என்று உதடுகள் துடிக்க அவள் அழ ஆரம்பித்தாள். 

அங்கே எதிரில் இருக்கும் ஒரு குழந்தை இவள் அழுவதை பார்த்து அக்கா என்ன ஆச்சு என்று கேட்க உடனே அவள் கண்களை துடைத்து கொண்டு ஒன்னும் இல்ல பாப்பு என்று தலையாட்டினாள். 

இதயம் அவளுக்கு குத்துவது போல் இருந்தது. எதுக்கு இந்த தீரா காதல் வேதனை இவனை விட்டு எங்காவது சென்று விட வேண்டும் எப்படி தான் மனத ஒரு நிலைக்கு கொண்டு வந்தாலும் நம்மை இப்படி ஒரு நிலைக்கு தள்ளும் இந்த காதல் வேண்டாம். இது நமக்கு எட்டாத கனி இந்த முறை நாம் மிகவும் ஸ்ட்ராங்கா இருக்கணும். என்று நினைத்து கொண்டே ஊருக்கு சென்றாள். 

நேராக ஆபீஸ் சென்று தன்னை பிசியாகி கொண்டாள். இரவு பகல் என தொடர்ந்து வேலை பார்த்து கொண்டு இருந்தாள். ரகு, என்ன விவேகா இப்படி பண்ணி வச்சு இருக்க? அவள் அதிர்ச்சி ஆகி என்ன ஆச்சு சார் இந்த கோடிங் சரியா தான் இருக்கு நீங்க ஒரு முறை செக் பண்ணி பாருங்க.. 

ரகு முகம் உடனே மாறி சிரித்து கொண்டே நான் சும்மா சொன்னேன் எதுக்கு மா இப்படி ஓவரா டைம் பார்த்து உன் உடம்பை வருத்தி கொள்கிறாய்.  முகம் எல்லாம் ஒன்னும் சரி இல்ல.. 

விவேகா சிரித்து கொண்டே சார் புராஜக்ட் நமக்கு கிடைத்து விட்டது தானே! ம்ம் அது நமக்கு கிடைத்து விட்டது மா ஆனால் நீ இப்படி பண்றது தப்பு மா நாலு நாள் லீவ் எடுத்துக்க ரெஸ்ட் எடுத்து கொண்டு ஆபீஸ் வா.. 

விவேகா, இல்ல சார் அது அது வந்து என்று அவள் சொல்ல வர உடனே  அடி வாங்க போற ஒழுக்கமா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு என்று சொல்லி கொண்டே கார்த்திக் உள்ளே வந்தான். 

அவள் குட் மார்னிங் சார் என்று சொல்லி விட்டு சார் ஒரு வீடு பார்க்கனும் அப்டின்னு சொன்னேனே என்ன ஆச்சு எதுவும் கிடைத்ததா! ரகு, ம்ம் நான் ஃபீனிக்ஸ் கம்பனி ஹெட் கிட்ட பேசுறன் மா அவங்களுக்கு தெரிந்த வீடு ஒன்னு இருக்கு… 

ம்ம் ஓகே சார் என்று சொல்லி விட்டு விவேகா சென்றாள். இன்பா, அவளை பற்றி வெண்பா கிட்ட விசாரித்தான். என்ன ஆச்சு உன்னோட தோழி எங்கே ஆளையே காணோம்! 

அண்ணா எவ்ளோ கூலாக இருக்க.. என்ன பண்ண சொல்ற வெண்பா என்று கேட்டு கொண்டே அவன் அமர்ந்தான். வெண்பா, விவேகா இடத்தில நான் இருந்தால் இவளோ பொறுமையா இருக்க மாட்டேன் துவைத்து பிழிந்து காய்ய போட்டு விடுவேன். 

இன்பா, இப்போ என்ன ஆச்சு ! என்ன என்ன ஆச்சா இங்கே பாரு இது நம்ம காலேஜ் குரூப் இதில் என்ன வந்திருக்கு பார்த்து நீயே தெரிந்து கொள்.. 

அதை பார்த்து அவன் பெரு மூச்சை விட்டு இப்படி எல்லாம் எதுமே நடக்கல.. 

வெண்பா, இப்போ விவேகா உன் கிட்ட இதை தான் கேட்பா அந்த வீடியோ போட்டோஸ் ல இருப்பது நீயா! இல்லையா அப்டின்னு கேட்பா!.. 

ம்ம் இதில் என்ன சந்தேகம் என் பேபி ய எப்படி ஒகே பண்ணனும் அப்டின்னு எனக்கு தெரியும்..  

வெண்பா, அண்ணா டுவிஸ்ட் அங்கே தான் இருக்கு.. 

என்ன? 

அவள் உன்னை பற்றி கேட்க மாட்டாள்.. 

பின்ன என்று இன்பா கேட்க.. 

வெண்பா, அவள் வசுமதி ஆன்டி பற்றி கேட்பாள் என்ன பண்ணுவ.. 

இன்பா இதை கேட்டதும் யோசனையில் இருக்க…? 

அங்கே விவேகா… ? 

தொடரும்… 

Episode 334

வெண்பா, அவள் வசுமதி ஆன்டி பற்றி கேட்பாள் என்ன பண்ணுவ.. 

இன்பா இதை கேட்டதும் யோசனையில் இருக்க, வெண்பா அவளுடைய போன் நீட்டி இங்கே பாரு என்னோட நம்பர், மித்ரன் நம்பர் எல்லாம் பிளாக் பண்ணி வச்சு இருக்கா யாரு கிட்டயும் பேசுறது இல்ல.. 

இன்பா என்ன பிளாக் பண்ணி வச்சு இருக்காளா! 

ம்ம் அவள் புதுசா போன் வாங்கி இருக்கா இப்போ பெங்களூர்ல இருக்கா! 

அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி போனு, அதை விட பெங்களூர் எல்லாம் ஷாக் கொடுக்க இன்பா, அந்த ஆதி யை விட்டு பிரியவே மாட்டாளே அவனும் அங்கே இருக்கானா! 

வெண்பா சலித்து கொண்டே அண்ணா நீ கரெக்டா கணிச்சு இருக்க ஆதி UPSC கோச்சிங் கிளாஸ் ஜாயின் பண்ணி இருக்கான். இவளும் அங்கே கேம்பஸ்ல செலக்ட் ஆன கம்பனி ல ஜாயின் பண்ணி இருக்காள். 

அப்போ ரெண்டு பேரும் எங்கே ஸ்டே பண்ணி இருக்காங்க? என்று இன்பா வினவ அவள், ஆதி அங்கேயே ஸ்டே இவள் மட்டும் ஹாஸ்டல்ல இருக்கா.. 

இன்பா, சரி அவன் எந்த கோச்சிங் அகாடமி சேர்ந்து இருக்கான்? 

அண்ணா நீ இத்தனை கொஸ்டீன் கேட்பதுக்கு பதில் அந்த இனியாழ் விஷயத்தை சரி செய்து விவேகா விஷயத்தை வசு ஆன்டி கிட்டயும் ரவி அண்கில் கிட்டயும் சொல்லி விடேன். 

இன்பா ஒரு பெரு மூச்சை விட்டு அது அவ்ளோ ஈஸி இல்ல வெண்பா அந்த இனியாழ் அண்ணன் வினய் இப்போ குரு கிட்ட இருக்கான்.

அந்த குரு இப்போ MP எலக்சன்ல பார்ட்டிஸ்பெட் பண்ற மாதிரி எனக்கு செய்தி வந்தது. அந்த இனியாழ் பற்றி எனக்கு தெரியும் இவளோ தைரியமான பொன்னு இல்ல, அவளுக்கு பின்னாடி பெரிய உந்துதல் இருக்கு.

சோ இதை ஷாட் அவுட் பண்ண கொஞ்சம் டைம் எடுக்கும் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்தால் நாளைக்கு என் பக்கம் எல்லா தவறும் திரும்பி விடும்.

வெண்பா, அப்போ நீ இனியாழ் லவ் பண்றத ஏற்று கொள்கிறாய் ?

ஹே என்ன நீயே இப்படி பேசுற! 

அண்ணா நான் சொல்லல மொத்த காலேஜ்ம் அதை தான் சொல்லுது. இப்போ ரிசல்ட் மார்க் சீட் இஸ்யூ பண்ண போறாங்கோ அன்னிக்கு எல்லாரும் வருவாங்க அவளும் வருவா அப்போ எல்லார் பேசுவதும் கேட்பாள். நீ என்ன பண்ண போற.. 

இன்பா என்னைக்கு வருது ? ம்ம் காமிங் தார்ஸ்டே என்று வெண்பா சொல்ல.. எழுந்து வெளியே சென்றவன் அந்த நேரம் மித்ரன் போனுடன் உள்ளே வர போனை பிடுங்கி பூஜாவுக்கு கால் செய்தான். 

ஹே கூஜா அவள் கிட்ட பேசினியா? சார் அவள் என்னோட நம்பர பிளாக் பண்ணி இருக்கா ஊருக்கு வந்தால் நேராக ஆதி வீட்டுக்கு போயிட்டு அங்கே இருந்து கிளம்பி விடுகிறாள் இந்த பக்கம் வந்து கிட்ட தட்ட ஒரு மாசததுக்கு மேல ஆகுது. இன்பாவுக்கு எல்லா இடத்திலும் தடுப்பு சுவர் செய்து இருந்தாள். 

அவன் அதே இடத்தில் ஒரு சில நொடிகள் நின்று விட்டு வெண்பா கிட்ட திரும்ப அவளோ “அண்ணா சொல்ல மறந்து விட்டேன் அவள் ரகு அண்ணா கம்பெனியில் தான் வொர்க் பண்றா!”

இன்பா என்ன ரகு வா! ம்ம் உன்னோட சீனியர் அண்ட் சரவணன் ஸ்கூல் மேட் RV குரூப்ஸ் என்று சொல்ல இப்பொழுது தான் அவனுக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது. 

இன்பா கவலையில் அவன் வீட்டுக்கு சென்றான். அந்த நேரம் ரவி உள்ளே கிரிக்கெட் மேட்ச் பார்த்து கொண்டு இருக்க சரவணன், சுபா இருவரும் வருவதாக சொக்கி இருந்தனர். 

வசுமதி சமையல் அறையில் இருந்தார். அவன் கோபமாக இயலாமையிலும் மனம் நொந்து வந்து கொண்டு இருந்தான். அவளை பார்க்காமல் கிட்ட தட்ட முழுதாக ரெண்டு மாதம் ஆக போகிறது.

காலேஜ் படித்தால் கூட தூக்கி கொண்டு வந்து இருப்பான் இப்பொழுது ஜாப் வேலைக்கு சென்று விட்டாள். அவள் இலக்கை நோக்கி பறக்க ஆரம்பித்து விட்டாள். இப்பொழுது அவனுக்கு அது பிரச்னை இல்லை.

எப்படி இதை எல்லாம் சரி செய்வது என்ன வாழ்க்கை டா என்று மனம் நொந்து போக அவளை தீண்டாமல் கைகள் இரண்டும் சுணங்கி போனது.

இப்பொழுது மெயின் கோர்ஸ் மட்டும் தான் சாப்பிட வில்லை மற்ற அனைத்தும் செய்து விட்டான். அதனால் அவளுடைய அதீத நினைப்பு வாட்டி வதைக்க ஆரம்பித்தது. 

ரவி, க்கும்.. மதி சில்லுன்னு பைன் ஆப்பிள் ஜுஸ் கொண்டு வா டி என்று சொல்லி கொண்டே கொஞ்சம் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அவருடைய கவனம் டிவியில் தான் இருந்தது. இன்பா வந்தது எதுவும் அவருக்கு தெரியாது. 

இன்பாவுக்கு அன்று ரவி சொன்ன அனைத்தும் நினைவுக்கு வர டிவியை ஆஃப் செய்து எல்லா பிளக்ஸ்ம் பிடுங்கி விட்டான். என்ன டா ராஸ்கல் வந்ததும் குதிக்கிற? கொஞ்சம் பைதியம் பிடித்து விட்டதா! என்று அவனை பார்த்து கேட்க.. 

இன்பா, எல்லாம் உங்களால் தான் உங்க வாய் இருக்கே எல்லாம் போச்சு அவள் என்னை விட்டு போய் விட்டாள். நான் சந்தோஷமா இருப்பது உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காதா!

ரவி ஷாக் ஆகி என்ன சொல்ற நான் என்ன பண்னேன். இன்னும் என்ன பண்றதுக்கு இருக்கு என்று அங்கு இருக்கும் கண்ணாடி ஜாடியை கீழே தள்ளி விட்டு அவன் அறைக்கு சென்று விட்டான். 

வசுமதி என்ன சத்தம் என்று கேட்டு கொண்டே வெளியே வந்து பார்க்க அங்கு ஜாடி உடைந்து சிதறி கிடந்தது. என்ன ஆச்சுங்க  ராகவ் வந்துடனா! ரவி எதுவும் சொல்லாமல் மேலே இன்பாவின் அறைக்கு சென்றார்.

இன்பா வசுமதி தான் வந்து இருப்பார் என்று நினைத்து கொண்டு கதவை திறக்க அங்கே ரவி இருப்பதை பார்த்ததும் வேகமாக சாத்த வர அதற்குள் உடனே ரவி அவன் அறைக்குள் கால் வைத்தார். 

என்னை டென்ஷன் பண்ணாதீங்க கெட் அவுட் மை ரூம் என்று கத்த.. டேய் நீயும் கத்தினால் நானும் கத்துவென் ஆனால் உன்னை போல் நான் ஒன்னும் சைல் டிஷ் இல்ல.. இன்பா வேகமாக மூச்சு எடுக்க.. அவனை ஒரே பிடியில் தள்ளி விட்டு உள்ளே சென்றார். 

இன்பா டப்பெண்று கதவை சாத்திட்டு வெளியே செல்ல போக முதலில் உள்ளே வா.. நெவர்.. வான்னு சொன்னேன்! என்று ரவி குரலை உயர்த்த உடனே அவன் உள்ளே வந்தான். ரவி கதவை சாத்தி விட்டு கைகளை கட்டி கொண்டே அவனை பார்த்தார். 

இன்பா உடைந்து போய் அங்கே உள்ள லெதர் ஒன் சிட்டர் சோபாவில அமர்ந்தான். அவர் அறையை நோட்டம் விட அது மிகவும் சுத்தமாக இருந்தது. என்று பொய் சொல்ல மாட்டேன். சில இடங்களில் கேஸ் கட்டுகள் சில ஒரு இடததில் பெரிய ஸ்க்ட்ச் ஃபோர்ட் தொங்கி கொண்டு இருக்க அதில் எண்ணனவோ எழுதி இருந்தான். ஒரு நோட்டீஸ் போர்டில் சேப் ஸ்டிக்கர் காகித்தில் கேஸ் தொடர்பான ஹின்ஸ் எழுதி ஒட்டி இருந்தான். 

அந்த அறையின் ஓரத்தில் ஒரு குட்டி ஃப்ரிட்ஜ் அதை திறந்து பார்க்க சென்றார். இன்பா, சீக்கிரம் திறந்து பார்த்து விட்டு சீக்கிரம் போங்க எனக்கு வேலை இருக்கு என்று கண்களை மூடி கொண்டே சொன்னான். 

ரவி அதை துறந்து பார்க்க அதில் ஒரு பாட்டில் திறக்கப்படாத ஒயின் இருந்தது. அதை பார்த்து சிரித்தவர் அவனை பார்த்தார். இன்பாவும் அவரை பார்த்தான். அவனை தள்ளி விட்டு அந்த ஒன் சிட்டர் சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். 

அவன் தலையை கோதி கொண்டே உங்களை பார்க்கவே எரிச்சலா இருக்கு தயவு செய்து போங்க நீங்க பேசிய நெகட்டிவிட்டியால் தான் எல்லாம் நடந்தது. 

ரவி, டேய் ஒரு அளவுக்கு உருட்டு ஓவரா உருட்டாத.. 

நீங்க தான் எல்லார்ததுக்கும் ரீசன் யூ அண்ட் ஆர் தி ரஸ்பான்சிபில் என்று அங்கும் இங்கும் நடந்தான். ரவி, அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான். ம்ம் என்று அதட்ட உடனே அவன் வாங்கி குடிக்க செல்ல ரவி பேசினார். 

சரி இப்போ விவேகா உன் கிட்ட பேசாமல் பார்க்காமல் இருப்பதுக்கு நான் தான் காரணம் அப்படி தானே! 

ம்ம் ஆமா.. என்று அந்த தண்ணீரை குடிக்க 

ரவி, ஒகே ஆல் ரைட் நான் தான் தப்புன்னு நீ சொன்னதால் இது இடியட்டிக் திக்ஸ் ஆ இருந்தால் கூட நான் அக்சப்ட் பண்ணிக்கிறேன்.. 

இன்பா அவரை திடுக்கிட்டு பார்த்து நீங்க அக்சப்ட் பண்ணினால் என் பேபி எப்படி என் கிட்ட வருவா! உங்க ஸ்டுபிட் பேச்சை நிறுத்தி விட்டு இங்கே இருந்து தயவு செய்து போங்க.. 

ரவி, என்னால் முடியும்! அவளை வர வைக்க முடியும்! உன் கிட்ட பேச வைக்க முடியும்! 

இன்பா ஷாக் ஆகி எப் எப்படி முடியும்? 

அது உணக்கு எதுக்கு? இது தான் நான்  லாஸ்ட் அண்ட் ஃபைனல்லா இதை மட்டும் நான் செய்வேன். 

மற்ற படி உன் அம்மா கிட்ட நீ அவளை பற்றி எப்படி சொல்ல போற? என்ன சொல்லி சம்மதம் வாங்க போற?அதை பற்றி எனக்கு எந்த ஒரு கவலையும் இல்ல. இன்ஃபேக்ட் எனக்கு அது தேவையில்லாத ஒன்னு. நான் நடப்பதை வேடிக்கை மட்டும் தான் பார்ப்பேன். 

இன்பா திக்கி திணற அப்போ இப்போவே மாம் கிட்ட சொல்லனுமா! 

அது எனக்கு தெரியாது ஒன்லி அவளை உன் கிட்ட பேச வைப்பேன் இங்கேயே இருக்க கூட வைப்பேன். அவன் கண்கள் மின்ன.. 

டேய்***  உன் ரூம்ல இல்ல இந்த ஊரில் இருக்க வைப்பேன். இதுக்கும் மேல் உன் விஷயத்தில் தலையிட மாட்டேன். என்று சொல்லி விட்டு வெளியே செல்ல.. 

இது எப்போ நடக்கும்! என்னை ஏமாற்ற மாட்டீங்க தானே? ரவி, நீ அவளை ஏமாற்றாமல் இருந்தால் சரி என்று சொல்லி விட்டு கீழே சென்றார். 

இன்பா அவள் மார்க் சீட் வாங்க வருவாள் என்று காத்திருக்க அவள் வர வில்லை. அவன் மூளை நீ நேரா ரகு ஆபீஸ் போடா அவளை தூக்கிட்டு வந்திடு.. 

அவன் மனம் அவள் இருக்க கோபத்துக்கு எனக்கு தூக்கு தண்டனை கூட வாங்கி கொடுக்க தயங்க மாட்டாள். நம்ம பெங்களூர் போய் இந்த ஆதிய பார்த்து விட்டு வரலாம். என்று நினைத்து கொண்டே முடிக்க பட வேண்டிய ஒரு முக்கிய கேஸ் மற்றும் விசாரணை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு அதை முற்றிலும் முடிக்க மூன்று நாட்கள் ஆனது. 

வருண், மித்ரன், சாதனா மூவரும் இப்பொழுது அந்த லிங்கா பற்றிய விவரத்தை சேகரிக்க ஆரம்பித்தனர். அந்த 14 என்ற கேஸ்ல இன்னும் முடிய வில்லை. முக்கிய குற்றவாலியை நெருங்கும் தருணம் வந்து விட்டது. 

இங்கே சன் டே விடுமுறையில் விவேகா ஆதி இருவரும் ஒன்றாக அந்த மால்க்கு வருவது வழக்கம் அதே போல் இன்றும் வந்து இருக்க விவேகா கர்நாடக ஸ்பெசல் சாம்பார் சாதம், அப்பளம் என ஆர்டர் செய்து சாப்பிட ஆதி ஒரு அசைவ வகை முட்டை என ஆர்டர் செய்து சாப்பிட்டான். 

விவேகா ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டே அதி, வருணுக்கு பிறக்கும் குழந்தை பற்றி பேசி கொண்டு இருக்க ஆதி, விவேகா நீ நல்லா இருக்கியா! 

ஏன் எனக்கு என்ன நான் ரொம்ப நல்லா இருக்கேன்.

நிஜமா வா!..

இப்போ நம்ம வீட்டுக்கு தம்பி பாப்பா வர போகுது அண்ட் நல்ல வேலை நல்ல சம்பளம் நீயும் நினைத்த மாதிரி போலீஸ் ஆக போற அண்ட் நெக்ஸ்ட் இன்னும் ஆறு மாசம் கழித்து on-site புராஜக்ட் பற்றி யோசிக்க போறேன்.

எதிர்காலத்தில் இப்போ  app maker, ios app கொஞ்சம் extra கோர்ஸ் பண்ண போறேன். ஏற்கனவே ஒரு கோடிங் டிசைன் பண்ண ஐடியா இருக்கு அதில் மட்டும் கொஞ்சம் எஸ்பீரியன்ஸ் வந்திடுச்சு என்னோட செலரி லட்சத்தில் வந்திடும் .

  என்னோட லைஃப் ஸ்மூத்தாக போயிட்டு இருக்கு என்று வாயில் உணவுகளை போட்டாள். 

ஆதி, நீ ரொம்ப செயற்கையாக இருப்பது போல் எனக்கு தோணுது டி என்று டிஷ்யூ அவன்  எடுத்து உதடுகளை துடைத்தான். அவள் கைகள் ஒரு நிமிடம் நின்று விட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள். 

ஹே ஸ்டுபிட்டா பேச வேண்டாம் அண்ட் தேவையில்லாத யாரும், எதுவும் பேச வேண்டாம். அந்த “யாரும்”என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து சொல்லி இருந்தாள். 

ஆதி கண் கொட்டாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான். ஹே என்ன அப்படி பார்க்கிற இப்போ தான் அவள் உனக்கு கிஸ் பண்ணிட்டாளே இப்படி என்னை ரசிக்காத இனி நீ வெண்பாவுக்கு சொந்தம் ஆகி விட்டாய். 

ஆதி அவளின் காதை பிடித்து திருகி இப்படி பேசி பேச்சை மாற்றி நடிக்காத டி என்று அவளின் முகத்தை நிமர்த்தி பார்க்க அந்த மேஜையின் மீது முத்து முத்தாக கண்ணீர் துளிகள் கொட்டியது. ஆதி அவளை நெருங்கி அமர்ந்து பிளீஸ் அழுது விடு உன் மனசுல இருப்பதை சொல்லு டி.. 

அவளின் கண்களை துடைக்க துடைக்க நீர் நிற்க வில்லை. உதடுகள் நடுங்கியது. மூச்சு சூடாகியது. அவ்ளோ தான் ஆதி இது தான் என் வாழ்க்கை இதுக்கும் மேல் என்ன இருக்கு நான் நல்லா இருக்கேன். 

ஆதி, அப்போ கல்யாணம் எப்போ? 

விவேகா, அவனை பார்த்து அவனுடைய பேபி மட்டும் தான் என் வயிற்றில் வரல மற்ற படி அந்த கடைசி கட்டம் போயாச்சு ஆனால் அது நடக்கல எப்படி நான் இன்னொருத்தருக்கு துரோகம் பண்ண முடியும். எனக்கு யாரும் வேண்டாம் டா.. 

ஹே லூசு மாதிரி பேசாத இன்பா சார் உன்னைய ஏமாற்றி விட்டு வேற யாரையும் கட்டிக்கல ஒரே ஒரு ரூமர் வந்து இருக்கு அதை வைத்து கொண்டு நீ இப்படி அஸ்யூம் பண்ணிட்டு இருக்காத டி… 

என்ன ரூமரா! என்று வழியும் கண்ணீருடன் அவனை பார்த்து கேட்டாள். அவன் அவளின் கண்ணீரை துடைத்து கொண்டே ஹே பிளீஸ் போதும் அழாத என்று துடைத்து விட அவன் கைகளை பிடித்து எப்படி அது ரூமர் சொல்லு..

ஆதி, இன்பா சார் ஒன்னும் இந்த விடயத்தை பற்றி பேசல அது உனக்கு தெரியும் தானே.. 

விவேகா, ஆனால் வசு மேம் அங்கே தான இருந்தார்கள் இப்போ அவங்களுக்கு இனியாழ் பற்றியும் அவனை பற்றியும் தெரிந்து இருக்கும். 

இதை கேட்டதும் ஆதிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. விவேகா, இனியாழ் மேடம் சூசைட் ட்றை பண்ணி இருக்காங்க. இப்போ அவன் என்னை பற்றி சொல்வது அதை விட அபத்தமா இருக்கும் டா.. 

ஆதி, சரி அது எப்படி வேணாலும் இருக்கட்டும் நீ உன் வாழ்க்கையுடய அடுத்த கட்டத்துக்கு போகனும் தானே.. 

விவேகா, ம்ம் அதுக்கு நீ போஸ்டிங் வாங்கும் வரை டைம் இருக்கு.. 

அவன் அப்போ என்னை கட்டிக்க போறியா! 

விவேகா, நீ ஒன்னும் தியாகி ஆகி எனக்கு வாழ்க்கை தர வேண்டாம். 

ஹே என்ன டி இப்படி பேசுற.. 

விவேகா, அத்தைக்கு என் மேல் ரொம்ப பிரியம் சோ நீ போஸ்டிங் வாங்கிய அடுத்த நிமிடம் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லுவாங்க. 

என்ன டி சொல்ற? 

விவேகா, அத்தைக்கு அந்த இன்பா மேல் ஒரு சந்தேகம் இருக்கு சோ அவங்க கண்டு பிடித்து இருப்பார்கள். 

ஆதி ஷாக் ஆகி அப்போ உன்னை பற்றியும் தெரிந்து இருக்குமா! 

என் மேல் இல்ல ஆனால் அவன் மேல் இருக்கு என்று ஒரு பெரிய மூச்சை விட்டு சோ இன்னும் சாலிடா எனக்கு 1 வருஷம் டைம் இருக்கு இதை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி விட்டு.. 

எனக்கு பைன் ஆப்பிள்  ஜுஸ் வேண்டும். அண்ட் அந்த ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வா நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் என்று சொல்லி சென்றாள். 

ஆதிக்கு உடனே போன் வர அவன் விவரத்தை நான்கு வரிகளில் சொல்லி முடித்தான். மறு முனை ஒரு பெரு மூச்சை விட்டு போன் வைக்க உடனே ஆதி எழுந்து அவள் சொன்ன பண்டங்களை வாங்க சென்றான். 

இன்பா போன் வைத்து விட்டு நேராக தன்னை சரி செய்து கொண்டு அங்கே வந்தான். அதற்குள் ஆதி மெசேஜ் செய்து இருக்க அதை பார்த்து விட்டு  அந்த லொக்கேஷன் பார்த்து கொண்டே சென்றான். 

விவேகா ரெஸ்ட் ரூம் சென்று தன் முகத்தை கழுவி கொண்டு மீண்டும் அழ கூடாது என்று தனக்கு தானே ஆறுதல் கூறி கொண்டு வெளியே வந்தாள்.

தன் போனை நோண்டி கொண்டே நடந்து சென்றாள். திடீர் என்று அவள் கையை பிடித்து இழுக்க யார் என்று கோபத்தில் திரும்பி பார்க்க அங்கே இன்பா இருந்தான்.

விவேகா வுக்கு அவனை பார்த்து இன்னும் பற்றி கொண்டு வந்தது.   ஹலோ கையை விடுங்க..

அவன் இன்னும் அவள் அருகில் நெருங்கி பேபி என்ன ஆச்சு உன்னை பார்த்து ஒரு மாசத்துக்கு மேல் இருக்கும்  உன்னை பக்கானும் போல் இருந்தது ஆனால் நீ இப்படி பண்ற

என்று அவள் கைகளில் இருக்கும் போனை பிடுங்கி அவனுடைய எண்ணுக்கு ஒரு அழைப்பு விடுத்தான். விவேகா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஹே ஒழுங்கா என் கையை விடு என் போனை கொடு.. 

ம்ம் முடியாது.என்று அவள் அருகில் நெருங்க விவேகா அவனை தள்ளி விட்டு  கன்னத்தில் ஓங்கி அரை விட்டாள். இன்பா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அண்ட் அவனுக்கு அது வலிக்க வில்லை. ஏன் என்றால் விவேகா விஷயத்தில் அவனுக்கு சூடு சொரணை எதுவும் இல்லை. 

ம்ம் பிரவாயில்லை இதுக்கு உன்னை மொத்தமா தனியா கவனித்து கொள்கிறேன் என்று இன்பா அவள் கைகளை பிடித்து இழுத்து செல்ல.. ஹே விடு டா என்று சொல்லி அங்கே அருகில் நின்று கொண்டு இருந்த போலீஸ் ஆட்களை பார்த்து 

எஸ்கியூஸ்மி சார் என்று அவள் கத்த உடனே அந்த போலீஸ் கேங் மொத்தமும் திரும்பி பார்க்க அதில் DSP முகின் ரெட்டி பார்த்து விட்டு உடனே வேகமாக விவேகா வின் அருகில் வந்தான். 

ஹலோ மேம் என்ன ஆச்சு யார் இவன்! டேய் அந்த பொன்னு கையை விடு இல்ல உன்னை இப்போவே அரெஸ்ட் பண்ணி முட்டிக்கு முட்டி தட்டி விடுவேன். இன்பா, விவேகாவை பார்த்து கொண்டே  இவள் என் லவ்வரு புரியுதா மிஸ்டர் என் மேல் கோபத்தில் இருக்கா.. 

முகின், டேய் முதலில் அவங்க கையை விடு.. என்ன மிஸ்டர் மரியாதை குறையுது. டேய் உனக்கு என்ன டா மரியாதை என்று இன்பாவின் சட்டையை பிடித்து இழுகக விவேகா கொஞ்சம் பதட்டமாகி சார் ரொம்ப பெரிய பிரச்னை இல்ல.. என்று கைகளை உருவ மியறசி செய்து கொண்டே சொல்ல.. 

சுஜித், தீபக் சீக்கிரம் வாங்க என்று கைகளில் விலஙஉடன் வர சொல்ல விவேகா சார் பெருசா எதுவும் வேண்டாம். கொஞ்சம் தட்டி விட்டு விடுங்கள். 

இன்பா, ஹே இப்போ இதுக்கு உன்னை சும்மா விட மாட்டேன் டி அப்டின்னு மட்டும் நான் சொல்ல மாட்டேன் பேபி இவன்னக எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல..

சரி நீ போ உன்னை தூக்க வேண்டிய இடத்தில் தூக்குறேன் இவனுக முகத்தை பார்த்து எனக்கு மோட் ஸ்பாயிள் ஆகி போச்சு.. என்று சொல்லி அவள் கைகளை விட்டான். 

விவேகா அவனை முறைக்க முகின், நீ கவலை படாத மா இவன் மேல ஒரு கம்பிளைன்ட் கொடு இவனை நாங்க நல்லா கவனித்து கொள்கிறோம் என்று சொல்ல 

இல்ல சார் வேண்டாம் என்னை தொந்தரவு பண்ணாமல் இருந்தால் போதும்.. என்று சொல்ல நீ போ மா என்று அவளை கை காட்ட இன்பா அவளை பார்த்து கண் அடித்தான். 

முகின் அவன் சட்டையை பிடித்து அங்கே enn டா லுக்கு உன்னை லாக் அப் ல வச்சு லாடம் கட்டணும் என்று சொல்லி அவனை அடிக்க.. 

விவேகா அவனை பார்த்து கொண்டே சென்றாள்…!

இன்பா அவள் சென்றதும் அவன் அடிக்க ஓங்கிய கைகளை பிடிக்க.. 

முகின்…? 

இன்பா…? 

தொடரும்… 

Episoide 235

விவேகா படபடக்கும் இதயத்துடன் அவனை திரும்பி பார்த்து கொண்டே சென்றாள். அவன் எப்படி போனால் உனக்கு என்ன டி ஏமாற்றுகாரன்,மோசக்காரன் என்று  மனதில் திட்டி கொண்டே சென்றாள். 

முகின் அடிக்க கைகளை ஓங்க இன்பா அவளை திரும்பி பார்த்து கொண்டே இருந்தான். உடனே அவள் உருவம் கண்ணை விட்டு மறைய அடுத்த நொடி இன்பா முகின் கைகளை முறுக்கி பின்னால் இருந்து பிடிக்க.. 

 முகின்,பாவா! பாவா! அவள் போயிட்டா கொஞ்சம் என்னை விடு டா.. அந்த பொண்ணு உன்னை அடிக்கும் போது 32பல்லும் வெளியே தெரியும் அளவுக்கு வெட்கம் இல்லாமல் வாங்கிட்டு இப்போ என் கிட்ட உன் வீரத்தை காட்டுறியா பாவா! என்று இன்பாவின் பிடியில் முக்கி கொண்டே பதில் அளித்தான். 

டேய் நீ மட்டும் என்னை சும்மா விட்டியா ஓவரா பில்ட் அப் விடுற.. என்று சொல்லி பிடியை தளர்த்த முகின் மூச்சை சீராக்கி கொண்டே சும்மா சொல்ல கூடாது பாவா ஸ்டேட்க்கு ஒரு பொண்ணு கேரளாவில் ஜெஸி, ஆந்திராவில் சைத்ரா இங்கே எங்க ஊரில் இந்த பொன்னு உங்க ஊருள இனியாழ் ஒரே ஜமாய் தான்.. 

டேய் ***  அந்த ஜெஸி கலெக்டர் ,அந்த சைத்ரா IFS அண்ட் இந்த இனியாழ்  என்று நிறுத்தி டேய் உனக்கு எதுக்கு நான் எக்ஸ்பிளன் பண்ணனும்.என்று இன்பா பார்வையை கூறாக்கி பின்னால் திரும்பி பார்க்க திபக் சுஜித் இருவரும் சல்யூட் வைக்க அவன் பார்வையை முகின் பக்கம் திருப்பினான். 

முகின், பாவா நான் ஒன்னு கேட்கவா! ம்ம் கேட்டு தொலை என்று கண்ணத்தை தேய்த்து கொண்டே அருகில் உள்ள செரில் அமர்ந்தான். 

சைத்ரா, ஜெஸி, கிட்ட இல்லாதது இப்போ உன்னை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினாளே அவள் கிட்ட என்ன டா இருக்கு! 

ம்ம் இப்போ சொல்லியே ஆகணுமா! 

பாவா பிளீஸ் சொல்லு டா! என்று அவன் ஆர்வமாக கேட்க.. 

இன்பா அவள் அடித்த இடத்தை தேய்த்து கொண்டே எனக்கு பிடித்து இருக்கு இந்த ஒரு காரணம் போதுமே! எனக்கு அவளுக ரெண்டு பேரையும் பிடிக்காது. இவளை பிடித்து இருக்கு தட்ஸ் ஆல்.. 

முகின், என்ன உனக்கு ஒரு பொண்ணை பிடித்து இருக்கா! அப்போ  சாருக்கு IPS பொண்ணு வேண்டாமா! 

எனக்கு இவள் தான் டா வேணும் என்று தீபக் பக்கம் பார்வையை திருப்ப அவன் படபடத்து கொண்டே வந்து நின்றான். 

எனக்கு ஒரு லெமன் டீ ஆர்டர் பண்ணு.. 

ம்ம் யெஸ் சார்! என்று சொல்லி கொண்டே சென்றான். 

முகின், எப்படியோ சாருக்கு எங்க கர்நாடகா பொண்ணை ஓகே பண்ணி இருக்கீங்க! 

இன்பா, நீங்க தண்ணியே தர மாட்டீங்க உங்க பொண்ணு எனக்கு வேண்டாம் அவள் தமிழ் பொன்னு டா! என்று சொல்ல.. 

ஓ சூப்பர் என்று சொல்லி பொதுவாக சில விஷயம் பேசி விட்டு இன்பா, முக்கின் அப்புறம் நம்ம டீம்ல அந்த UP காரி பின்னாடி சுற்றி கொண்டு இரிந்தியே இப்போ என்ன ஆச்சு.. 

அவள் எல்லாம் செட் ஆகுல பாவா நான் என் மாமன் பொண்ணை கட்டி கொண்டேன். 

நாயே என்னை கூப்பிட்டியா! 

முககின், டேய் எத்தனை தடவை உனக்கு கூப்பிட்டேன் அதுவும் இல்லாமல் அந்த டைம் நீ சஸ்பென்ட் ல இருந்ததாக எனக்கு நியூஸ் வந்தது. சரின்னு விட்டு விட்டேன். இப்போ வீட்டுக்கு வரியா உனக்கு விருந்து போடுறேன். 

ம்ம் வரேன் மச்சி கூடிய சீக்கிரத்தில் வருகிறேன். 

முகின், பாவா இப்போ அரை வாங்கினவள உனக்கு சொந்தம் ஆக்கி கூட்டி வா திருவிழா பண்ணிடுவோம். 

இன்பா, மம்ம் நிச்சயம் வருவேன். ஆமா என்ன திடீரென இந்த இடத்தில இவளோ கூட்டம்! எதுக்கு இங்கே வந்து இருக்கீங்க? 

முககின், அதுவா இந்த சித்தார்த் ரவிசந்திரன் இருக்கானே தெரியுமா!

ஹே என்ன டா சொல்ற? 

மும்கின், சாரி பாவா உன்னை கிண்டல் பண்ண டிரை பண்ணேன். அந்த சித்தார்த் கிருஷ்ணன், தாரா கோவிந்த சேர்ந்து (a+b)2அப்டின்னு ஒரு படம் பண்ணி இருக்காங்க இன்னிக்கி 100 th டே அதனால் ரெண்டு பேரும் சேர்ந்து படம் பார்க்க வராங்க அதுக்கு பாதுகாப்புக்கு தான் வந்தேன். 

இன்பா சரி பாரு நான் கிளம்புறேன் என்று சொல்லி கிளம்பினான். இங்கே விவேகா கோபமாக ஆதி பக்கத்தில் வந்து அமர்ந்து ஒரே மூச்சில் அந்த ஜூசை குடித்தாள். 

ஆதி எந்த வெளிப்பாடும் இல்லாமல் என்ன ஆச்சு? டேய் நீ தானே நான் இங்கே இருக்கும் விஷயத்தை அந்த நாய் கிட்ட சொன்ன.. 

யார் கிட்ட சொன்னேன்? என்ன சொல்ற விவி! 

விவேகா வேகமாக அவன் போனை வாங்கி பார்க்க அதில் இன்பா நம்பர் இல்லை.. 

ஆதி, நீ ஒன்னும் கனடா, லண்டன்ல இல்ல டி இங்கே தான் பெங்களூர்ல இருக்க சோ உன்னையை கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டம் பட தேவையில்லை அவர் வருண் மாமா கிட்ட கூட கேட்டு வந்து இருப்பாரு.. 

விவேகா கைகள் இரண்டையும் தலையில் வைத்து கொண்டு அவன் கண்ணில் படாத இடத்துக்கு போனால் தான் எனக்கு நிம்மதி என்னை தொந்தரவு செய்ய வந்து விடுகிறான். என்று பற்களை கடித்து கொண்டு அவள் சொல்ல.. 

அவள் சொன்னதில் கோபம் கொண்டவன். நீ பண்றது ரொம்ப டூ மச்சா இருக்கு கொஞ்சம் வாயை அடக்கு டி என்று மிரட்டும் தொனியில் சொல்ல விவேகா அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். 

அதன் பின் இன்பாவை அவள் பார்க்கவே இல்லை. ஆனால் அவன் எண்ணில் இருந்து அழைப்புகள் செய்திகள் வாட்ஸ் அப் செய்திகள் என வந்து கொண்டே இருக்கும்..

 இன்பா அவளுக்கு கிட்ட தட்ட இந்த மூன்று மாதமும்  செய்திகள் அனுப்பி கொண்டு இருக்கிறான். I miss you baby..

I hug you baby….

Gud morning viveka! … 

Today I need you di?.. 

Today work அதிகம் நான் ரொம்ப டயர்டா இருக்கேன் ஒரு டீ ரெண்டு சால்ட் பிஸ்கட் சாப்பிடலாம் நீ வர்யா.. 

இல்ல டி நானே வரேன்…

இன்னிக்கி தான் நான் உன்னை முதன் முதலாக பார்த்தேன்.. 

எனக்கு Google photos மேரியிள் நீ என் கிட்ட லவ் சொன்ன நாள் அப்போ இன்னிக்கு வருண் கல்யாண நாள்! இன்பா வுக்கு அவள் செய்திகளை படிப்பதே போதுமானதாக இருந்தது. 

விவேகா மெசேஜ் எல்லாம் படித்து பார்த்து விட்டு ஒவ்வொரு எண்ணாக டெலிட் செய்து விடுவாள். எத்தனை முறை அவனை நிராகரித்தால் கூட புதிய நம்பரில் இருந்து வந்து விடுவான். 

ஆபீஸில் தலையை பிடித்து கொண்டே அமர்ந்து இருந்தாள். க்கும்.. என்று சொல்லி கொண்டே அவளுக்கு எதிரில் வந்து நின்றான் கார்த்திக்.. அவள் யாரோ என்பது போல் நிமிர்ந்து பார்க்க அது கார்த்திக் தான்.. 

சார் என்று எழுந்து நின்று என்ன விஷயம்? எல்லா மெயிலும் சென்ட் பண்ணிட்டேன். கார்த்திக் சிரித்து கொண்டே ம்ம் ஓகே மா நீங்க ஹவுஸ் ரெண்டுக்கு கேட்டிங்களே! ம்ம் ஆமா சார் இங்கே ஹாஸ்டல்ல ரொம்ப சிரமமா இருக்கு .. 

ம்ம் ஒன்னும் பிரச்னை இல்ல மா என் வீட்டுக்கு பக்கத்தில் தான் ரகு சார் சொன்னது தான் ஃபீனிக்ஸ் கம்பனி ஹெட் தான் இந்த வீட்டை ஏற்பாடு பண்ணி இருக்கார். 

ம்ம் ரொம்ப தேங்க்ஸ் சார் என்று சொல்லி கொண்டே ரெண்டு விஷயம் எல்லாம் பேசணுமே! 

அது ஒன்னும் பிரச்னை இல்ல வீடு சும்மா இருக்க கூடாதுன்னு தான் வாடைக்கைக்கு விடுறாங்க எனக்கு தெரிந்து அந்த வீடு பர்நிச்சர்ரைஸ்டு  உனக்கு 1BHK ஒகே தானே நீ மட்டும் தானே ஸ்டே பண்ண போற.. 

ம்ம் ஆமா சார் என்று சொல்ல அவன்  ரெண்ட் அகிரிமென்ட் ஓகே சொல்லிடவா மா.. 

ரெண்ட் எவ்ளோ சார் .. .

ம்ம் 15 k உனக்கு ஒகே வா மா! 

அவள் கொஞ்சம் யோசித்தாள். அதன் பின் ம்ம் ஓகே சார் இது பெங்களூர்ல ரொம்ப கம்மி வாடகை அதும் ஒரு பெரிய சொசைட்டி எனக்காக நீங்க இவளோ மெனகெட்டு ரெடி பண்ணி இருக்கீங்க… 

அப்படி எல்லாம் இல்ல மா என்று சொல்லி அவன் சரி என்று சொல்லி கிளம்ப.. 

ஆதியின் உதவியுடன் அந்த வீக் ஆஃப் ல புது வீடு வந்து சேர்ந்தாள். கார்த்திக் வீட்டின் எதிர் வீடு கார்த்திக் மை விழி இருப்பது 2BHK ஆனால் விவேகா குடியெரும் வீடு 1BHK விவேகாவுக்கு இந்த வீடு மிகவும் பிடித்து இருந்தது. அதுவும் இல்லாமல் மைவிழி யுடன் ஒட்டி கொண்டாள் அதனால் எதுவும் சுவையான உணவுகள் செய்தால் உடனே

விவேகா அந்த வீடு மிகவும் பிடித்து இருந்தது. அது ஆனால் குடியேறி இரண்டு மாதம் ஆகியும் இன்னும் வாடகை கொடுக்காமல் இருப்பதால் உடனே கார்த்திடம் ஓனர் பற்றி கேட்டு பணம் 

கார்த்திக் சூரியாவுக்கு போன் செய்தான். ஹலோ நான் கார்த்திக் பேசுறேன்.. 

சூர்யா, ம்ம் என்ன விஷயம்.. 

உங்க ப்ரெண்ட் வீட்டுக்கு எனக்கு தெரிந்தவங்க குடி வந்து இருக்காங்க…. 

சூர்யா, இப்போ அதுக்கு நான் என்ன பண்ணட்டும்.. 

கார்த்திக்,அவங்க ரெண்ட் அனுப்பணுமாம் அதுக்கு தான் bank details கேட்க போன் பண்ணேன். 

சூர்யா, எந்த வீடு? 

அவன் அந்த 1BHK தான் எங்க வீட்டுக்கு எதிர் வீடு.. 

நான் கூப்பிடுறேன் என்று சொல்லி கட் செய்து  விட்டு இன்பாவுக்கு அழைத்தான். 

ம்ம் *** சொல்லு டா என்று இன்பா ஸ்டேஷனில் களைப்பாக அமர்ந்தான். டேய் உன்னோட ஃப்ளாட்க்கு குடி வந்து இருக்காங்க அதுக்கு ரெண்ட் பற்றி அந்த கார்த்திக் கால் பண்ணான். 

ம்ம் சரி நான் கொடுக்கும் அக்கவுன்ட்டுக்கு பணத்தை போட சொல்லிடு என்று அந்த  டிரஸ்ட் பெயரில் உள்ள வங்கி கணக்கு எண்ணை அனுப்பினான். 

அதன் பின் கார்த்திக் அந்த வங்கி கணக்கை தர அதை வாங்கி கொண்டு விவேகா உடனே பணத்தை அனுப்பினாள். 

இன்பாவுக்கு டிரஸ்ட்ல இருந்து கால் வந்ததும் சரி என்று விட்டு விட்டான். இப்படியே ஆறு மாதம் ஆனது. 

அதன் பின் கார்த்திக் – மை விழி வளைகாப்பு  பங்ஷன் இருக்க அன்று அனைவருக்கும் விடுமுறையாக இருந்தது.

விவேகா தன்னை அழகாக தயார் படுத்திக் கொண்டு உள்ளே மை விழி க்கு ஒப்பனை செய்ய உதவி கொண்டு இருக்க… மை விழி இன்பாவை அழைத்து இருந்தாள். அதனால் அவன் உள்ளே வந்தான். அது மட்டும் இல்லாமல் நிச்சயம் விவேகா வருவாள் என்று நினைத்து இருந்தான். 

இன்பா உள்ளே வந்ததும் சக்தி ஓடி சென்று மாமு என கட்டி கொண்டான்.  

சக்தி, மாமு அங்கே கார்த்திக் சித்தாகக்கு எதோ செய்கிறார்கள் உனக்கு எப்போ மாமு இது எல்லாம் செய்வாங்க! 

ம்ம் உன்னோட மாமி ஓகே சொல்லி விட்டாள் சீக்கிரம் இந்த மாதிரி பங்ஷன் பண்ணலாம் சக்தி என்று அவன் சொல்ல.. 

சக்தி, மாமு மகி எப்போ வர போறா… இன்பா, அவன் வெற்று பார்வை பார்க்க.. மாமு போன தடவை உன் கிட்ட சொன்னதும் நீ மகி டாடி ரெண்டு பேரையும் என் கிட்ட கூட்டி வந்த இப்போ இந்த தடவை  எனக்கு மகி வேணும்…

இன்பா, என் சக்தி கவலை பட கூடாது. மகி இந்த முறை வர கொஞ்சம் லேட் ஆகும்..

ஏன்..

மகி கொஞ்சம் வேலையா வெளியே போயிருக்கா சீக்கிரம் நான் வர சொல்றேன். சக்தி ஏக்கமாக வருவா தானே… ம்ம் சத்தியமா வருவா… இதை அப்பா கிட்ட சொல்ல கூடாது… மாட்டேன் சொல்ல மாட்டேன். 

சக்தி, சித்துக்கு என்ன பண்றாங்க… சித்துவ எல்லாரும் பிளஸ் பண்றாங்க… அப்போ மகி ககும் இந்த மாதிரி பண்ணுவாங்கலா…. ம்ம் ஆமா..

சக்தி, அப்போ உனக்கு எப்போ பண்ணுவாங்க…

இன்பா இதை கேட்டு கண்ணகுலி தெரிய சிரிக்க.. 

அவனது தேவதை அவன் எதிரே தோன்றினாள். அவள் தான் விவேகா… சந்தன நிற தாவணியில் பச்சை வண்ண பிளவ்ஸ் என தங்க சிலையாக தான் இருந்தாள். அவன் மனம் இவ இவ  என்று நினைத்து கொண்டவன் சக்தி உன் முன்னாடி ஒரு பொன்னு இருக்காளா.. மம் ஆமா அவ பேரு விவி சித்து வீட்டுக்கு(பக்கத்தில்)வீட்டில் தான் இருக்கா…

இன்பா,  அவளை உனக்கு பிடிச்சு இருக்கா… ம்ம் ஜாலியா இருக்கும் நாங்க ஐஸ் கிரீம் சாப்பிடுவோம் மாமு.. அவன் மம் அவளை இனி மாமினு கூப்பிடு..

சக்தி,  மாமு உனக்கு அவளை  பிடிச்சு இருக்கா…

 இன்பா, உனக்கு பிடிச்சு இருக்கு அதனால் எனக்கும் பிடிச்சு இருக்கு , இப்போ நீ என்ன பண்ற நான் உனக்கு ஒரு கிஸ் தரேன் அதை போய் மாமி கிட்ட கொடுத்திட்டு வா.. அது தப்பு மாமு…

இன்பா, இல்ல சக்தி அவள் தானே மாமி அப்போ நான் மாமு கொடிதா தப்பு இல்லையே…

நிஜமாவா..

இன்பா, நானே போலீஸ் ips சோ IPS பொய் சொல்லுவாங்கலா நீயும் IPS தானே என்று சொல்ல அவன் டிங் டிங் என தலை அசைத்தான். அப்பொலுது விவேகா ரகு கிட்ட பேசி கொண்டு டீ கொடுக்க.. இன்பா சக்தியை இறக்கி விட அவன் நேராக விவேகாவிடம் சென்றான். 

மாமி.. மாமி… என்ன சக்தி

விவி சொல்லு… இல்ல நீ எனக்கு மாமி தான் என்னோட மாமு சொன்னாங்க என்று சொல்லி கீழே வா கீழே வா…

அவள் குனிந்து என்ன என்பது போல் கேட்க அவன் அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான். என்ன கிஸ் எல்லாம் பலமா இருக்கு என் மாமு தான் கொடுக்க சொன்னாங்க..

மாமி என்று அவன் சொல்ல இதில் கோபம் அடைந்த விவேகா யார் அது என் கிட்ட காட்டு.. வா மாமி நான் உன்னை கூட்டி போகிறேன் என்று சொல்ல அவள் சக்தி பிளீஸ் அப்படி கூப்பிடாத என்று மனதில அவன் அவன் இங்கு இருக்கிறானா என்று நினைத்து கொண்டே அவன் பின்னால் சென்றாள். 

இன்பா ரகு அருகில் சென்றான். டேய்.. சொல்லு இன்பா… உன் மேல இன்னும் எனக்கு கோபம் குறையல..

ரகு இதை கேட்டு அமைதியாகி விட..

ஒரு வழி இருக்கு… அவன் என்ன என்பது போல் பார்க்க..

ஆமா உன் கிட்ட இப்போ ஒரு பொண்ணு பேசிட்டு போனாள் தானே அவளை எப்படி உனக்கு தெரியும்… ரகு, அந்த பொண்ணு விவேகா என் ஆபீஸ்ல நியூ அப்ளிக்கேஷன் டிசைனிங்ல வொர்க் பண்றா….

அவள் தான் லீட்.. இன்பா, ஓ… ரகு, இப்போ பேசுவியா… இனி தான் முக்கிய டீலே இருக்கு…. என்ன.. அவளை வேலைய விட்டு தூக்கிடு.. என்ன.. மம் அவளை தூக்கிடு சிம்பில்..

ரகு, இது இதை நீ சூரியா கிட்ட தான் கேட்கணும்.. ஏன்.. அவன் தான் அந்த பொண்ணை போட்டு இருக்கான்,மெயின் ஷேர் சூர்யா தான்.. அப்போ நான் சூர்யா கிட்ட பேசி கொள்கிறேன்.  என்று சொல்லி அவன் திரும்ப அங்கே விவேகா, யாரு சக்தி அது என்று அவனிடம் கேட்க சக்தி ஓடி சென்று இன்பாவை கட்டி கொண்டு மாமு நான் கிஸ் பண்ணிட்டேன்..

மம் குட் உனக்கு ஒரு சூப்பர் கிஃப்ட் ரெடி என்று சொல்லி நான் உனக்கு ஒரு பிஸ்டல் செட் வச்சு இருக்கேன் அதோட கார் செட் இருக்கு… ஹய்யா ஜாலி ஜாலி… டாடி கிட்ட கொடுத்து இருக்கிறேன். 

விவேகா அவனை முறைக்க சூர்யா அங்கே வந்தான். என்ன ஆச்சு விவேகா.. சார், அவர் யாரு எதுக்கு இங்கே வந்து இருக்கிறார். சக்தி அவர் கிட்ட அவரை என்று அவள் கோபத்துள் பேச இன்பா சூரியா வை பார்த்து கண் சிமிட்ட..

யார் அது எனக்கு தெரியாது மா அந்த கார்த்திக் இருக்கானே அவனோட பிரென்ட் அவனை பார்த்தாலே எரிச்சலா இருக்கு.. நான் கிளம்புகிறேன் சார்..

சூரியா, என்ன ஆச்சு மா உன்னை எதுவும் சொல்லி விட்டானா..  விவேகா எதோ யோசித்தவலாக சார் நீங்க அவர் ப்ரெண்ட் தானே அவர் என் கிட்ட..

சூரியா,  உன் கிட்ட என்ன சொல்லு மா.. விவேகா, ஒன்னும் இல்ல நீங்களும் அவரும் ஒன்னா… என்று அவள் சொல்ல வர அதற்கும் முன்பே இவனை நான் கார்த்திக் கூட தான் பார்த்தேன் அதில் இருந்து கார்த்திக் கூட என்று நிறுத்த.. அவள் ஓ.. இருந்தாலும் நான் இப்போ கிளம்புறேன்..

சூர்யா, அவன் உன்னை எதுவும்.. சார் சார் அப்படி எல்லாம் இல்லை அவனை பார்த்தாலே இர்ரிடேட்டிங்கா இருக்கு…

சூர்யா, இப்போ என்ன சொன்ன.. அது இரிடேட்டிங்கா இருக்கு சார் நான் மை விழி அக்கா கிட்ட போறேன்.. என்று சொல்லி அவள் சென்றாள். 

இன்பா, சக்தி நீ மாமி கூடவே இரு அப்போ அப்பப்போ என் சார்பில் கிஸ் கொடுத்திடு.. ம்ம் டன்  மாமு என்று சொல்லி அவன் ஓடினான். 

சூர்யா, எத்தனை வருஷம்..

இன்பா, 3 வருஷம் மச்சி..

சூரியா,  த்த்தூ… 

மச்சி அப்புறம் துப்பு டா நான் என் டார்ஜ்லிங்க பார்க்க போறேன். 

விவேகா அங்கு இருந்து வேகமாக அருகே உள்ள அறை பக்கம் செல்ல ஹே எப்படி டி நான் இருக்க இடம் எல்லாம் கண்டு பிடித்து வந்திடுற….என்று சொல்லி அவள் கையை பிடித்து இழுக்க ஹே கையை எடுங்க..

ஏன் நான் கையை எடுக்க முடியாது என்ன டி செய்வ..

உங்க லவ்வர் இனியாள் அப்டின்னு ஊரு முழுக்க தெரியும் இப்போ என் கையை பிடித்தால் உங்களை தானே தப்பா பேசுவாங்க..

இன்பா, ஒழுன்கா இரு டி ஓவரா பண்ணாத.. என் கையை விடு டா.. அவளை அறைக்குள் இழுத்து அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான்.

அவள் அவனை தள்ளி விட நீ ரகு ஆபீஸ் ல தான இருக்க ரகு என்னோட சீனியர் என்னோட க்ளோஸ் சோ இனி அடிக்கடி உன்னை கிஸ் பண்ண போறேன்.. அவள் அவனை பார்த்து கைகளை ஓங்கிட அடி டி நான் அடிச்சத விட இது கம்மி தான்.. அவள் இந்த முறை அறைந்து விட்டு அவள் வெளியே ஓட

இன்பா, நான் கிஸ் அடிச்சத சொன்னேன். என்று அவன் வெளியே வர..

சூரியா இப்போது வந்தான். பாத்துட்டியா மச்சி.. மம்.. எதை பார்த்த.. நீ அடிச்சதையும் பார்த்தேன் அவ உன்னை அடிச்சதையும் பார்த்தேன். சரி விடு மச்சி என்று அவர்கள் பேசி கொண்டு இருக்க டு அப்போது ஜெய் ஆகாஷ் வந்தான். 

இன்பா மச்சி எனக்கு முக்கியமா நிறைய வேலை இருக்கு நீ பாரு எண்டு என்று விவேகாவை தேடி சென்றான். 

தொடரும்…  

இன்னும் ரெண்டு நாளில்  ரவி – விவேகா மீட்டிங் நடக்கும்.. 

Episode 236

இன்பா மச்சி எனக்கு முக்கியமா நிறைய வேலை இருக்கு நீ பாரு  என்று சூர்யாவிடம் சொல்லி விட்டு விவேகாவை தேடி சென்றான்.

விவேகா இவன் இவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று நினைத்து கொண்டே மை விழி யை நோக்கி சென்றாள். இன்பா அவளை பின் தொடர அனைவரும் விவேகா வை கொஞ்சம் வித்தியாசமாக பார்த்தனர். 

என்ன நம்மல எல்லாம் கொஞ்ச ஸ்டன் ஆகி பார்க்கிறாங்க என்று திரும்பி பார்க்க இன்பா அவள் பின்னால் நின்று கொண்டு இருந்தான். இன்பா அவளை பார்த்து ஒற்றை கண் அடிக்க அய்யோ டார்ச்ச்ர் பன்றானே! என்று சலித்து கொண்டே வேறு பக்கம் செல்ல 

இன்பா அவளை விட வில்லை. அங்கு இருக்கும் அனைவரையும் பார்த்து சிரித்து கொண்டே ஹே இப்போ எதுக்கு என்னை இப்படி ஃபாலோ பண்றீங்க! 

இன்பா ஒன்னும் இல்ல லவ் பண்ணு தட்ஸ் ஆல்.. ஹே என்னை டென்ஷன் பண்ணாத டா நான் கஷ்டபட்டு வாயை அடக்கி வச்சு இருக்கேன். 

அவன் சிரித்து கொண்டே நீ பேசு டி அப்போ தான் எனக்கு பிடிக்கும்.. அவள் அவனை பார்த்து முறைத்து சிணுங்கி கொண்டே வெளியே செல்ல ம்ம் நீ எங்கே போனாலும் நான் வருவேன் என்று சொல்லி சென்றான். 

அந்த நேரம் மை விழி, விவேகா! விவேகா! என்று கூப்பிட சொல்ல உடனே அக்கா நீயுமா என்று செல்ல போக ஹே இப்போ போ ஆனால் நான் உன்னை சும்மா விட மாட்டேன். என்று சொல்லி அவள் இடையை வருடி விட்டு சென்றான். 

அவன் தீண்டலில் உள்ளுக்குள் காய்ச்சல் அடித்தது. அதன் பின் கார்த்திக் மை விழி இருவரையும் அமர வைத்து அவனுக்கு சடங்குகாக முகத்தில் சந்தனம் பூசி விட்டு மை விழி ககு வளையல் போட்டு விட்டனர். 

போட்டோஸ் சாப்பாடு என அனைத்தும் நிறைவாக முடிந்தது. விவேகா சுற்றிலும் இன்பா இருக்கிறானா என்று தேடி பார்க்க அவன் எங்கும் இல்லை ஒரு நிம்மதி பெரு மூச்சை விட்டு வழக்கம் போல் சக்தியுடன் ஒரு ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு அவனிடம் கொஞ்சி விளையாட விவி இங்கே வாயேன்..

ம்ம் என்ன சக்தி! இன்னும் கிட்ட வா? அவள் இன்னும் நெருங்கி முகத்தை காட்டிட அவளது கன்னத்தில் முத்தம் பதித்தான். என்ன கிஸ் எல்லாம் பலமா இருக்கு! 

ஆமா மாமுவுடைய கிஸ் இங்கே பாரு எனக்கு பிஸ்டல் செட் எல்லாம் வாங்கி தந்து இருக்காங்க … என்ன அந்த நாய் சொண்ணானா! 

யாரு டாக்? 

விவேகா சலித்து கொண்டே சாரி யார் சொன்னது? 

அதுவா என்னோட போலீஸ் மாமா என் டாடியும், அவரும் ரொம்ப க்ளோஸ் தெரியுமா! 

விவேகா ஷாக் ஆகி எந்த டாட் கார்த்திக் ஆ?  சூர்ய தேவ் ஆ? 

அவன் பேச வரும் நேரம் சத்ய தேவ்!.. என்று அழைத்து கொண்டே சூர்யா வந்தான். 

விவேகா உடனே எழுந்து நின்றாள். என்ன சீரியஸ் டிஸ்கஸ்சன்? 

ஒன்னும் இல்ல சார்.. சரி ஓகே விவி நான் கிளம்புறேன். என்று சொல்லி அவன் கட்டி மீண்டும் முத்தமிட விவேகா அவனை கண்களை சுருக்கி பார்த்தாள். 

சக்தி, விவி இது என்னோட கிஸ் காட் இட் என்று சொல்லி செல்ல 

விவேகா, குழந்தைக்கு என்ன என்ன சொல்லி கொடுத்து இருக்கான் விவஸ்த கெட்டவன். இவனுக்கு எல்லாம் யார் போலீஸ் வேலை கொடுத்தது. இவனை முதலில் டெரரிஸ்ட் லிஸ்ட் ல சேர்க்கணும். என்று சொல்லி கொண்டே விவேகா அவளுடைய வீட்டுக்குள் செல்ல அந்த நேரம் போன் அடித்தது. 

விவேகா எப்பொழுதும் போல் வீட்டுக்குள் சென்றாள். இன்பா விவேகா வருவாள் என்று கீழே வெயிட் செய்து கொண்டு இருக்க . 

சூர்யா, என்ன டா இங்கே செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்து விட்டாயா! 

நான் எதுகிகு சேரனும்.. 

ம்ம் மேடம் இங்கே தானே இருக்காங்க அதான் கேட்டேன்.. 

என்ன சொல்ற! என்று இன்பா அதிர்ச்சி ஆகி கேட்க.. 

டேய் உன் வீட்டில் அவள் தான் ஸ்டே பண்ணி இருக்கா! ஓ சாருக்கு இது தெரியாதா! 

இன்பா, அப்போ இந்த ஆறு மாசம் அவள் தான் இருந்தாளா! 

ம்ம் ஆமா மிஸ்டர் இடியட் ராகவன் இப்போ உண்மையாவே இடியட் தான் போல.. 

இன்பா கொஞ்சம் தன்னை சமன் படுத்தி கொண்டே ச்ச இந்த ஆறு மாசததுள் எவ்ளோவோ பண்ணி இருக்கலாமே.. 

என்ன சொன்னீங்க! கொஞ்சம் மறுபடியும் சொல்லுங்க சார் என்று சூர்யா கொஞ்சம் அவன் அருகில் ஒட்டி நிற்க.. 

ம்ம் நத்திங் நீ வீட்டுக்கு கிளம்பு என்று இன்பா சொல்ல 

அப்போ இன்னிக்கு நைட்டு ஜமாய் தான் போலயே! 

டேய் நீ வேற அவள்  என்னை கொன்றுவிடுவாள். உடனே அருகில் இருந்த சக்தி, மாமு நீ சொன்னது போல கிஸ் பண்ணிட்டேன். 

சூரியா அவனை பார்க்க இன்பா சும்மா மச்சி என்று சமாளித்தான். உடனே அவன் கள்ள புன்னகை சிந்தி கொண்டே சத்ய தேவ் இனி அவளுக்கு நீ கிஸ் தர தேவையில்லை. மாமாவே கிஸ் பண்ணிடுவான் என்று சொல்லி காரை ஸ்டார்ட் செய்தவன் மச்சி அடிச்சா சொல்லு டா! 

இன்பா, டேய் குழந்தை முன்னாடி என்ன பேசுற? சூர்யா, ஹே நான் அவள் உன்னை கட்டாயம் கன்னத்தில் அடிப்பா அதை சொன்னேன் ஐ மின் அரை ஆனால் நீ எபோதும் தப்பாவே திங்க் பண்ணு டர்ட்டி மைன்ட் என்று கண்ணடித்து விட்டு சென்று விட்டான். 

இன்பா ஒரு பெரு மூச்சை விட்டு அந்த அப்பார்ட்மெண்ட்டை பார்த்தான். ஒரு நிமிடம் கூட யோசிக்க வில்லை படிகளில் ஏறி சென்றான். காலிங் பெல் அடிக்க அவள் கதவை திறந்தாள். இவனை பார்த்த அடுத்த நொடி விவேகா கோபமாக கதவை சாத்த.  

இப்போ மட்டும் நீ சாத்திட்டு உள்ளே போனால் நான் இங்கேயே தான் நிற்பேன் அப்புறம் நம்ம விஷயம் கார்த்திக், மை விழி, ரகு எல்லார்க்கும் தெரிய வரும் அப்படியே ரகு சரவணன் சுபா கிட்ட சொல்லிடுவான். 

விவேகா அவனை முறைத்து கொண்டே பார்க்க இன்பா அவன் கண்ணாடியை கலட்டி கொண்டே  ரகு சரவணன் ரெண்டு பேரும் ஸ்கூல் மேட் சுபாவுக்கும் எனக்கும் சீனியர் என்று புருவததை உயர்த்தினான். என்னா பண்ணுவ! ஹ என்ன பண்ணுவ!.. 

விவேகா வேறு வழி இல்லாமல் தள்ளி நிற்க அவன் காலரை தூக்கி விட்டு கொண்டே உள்ளே சென்றான். அவன் உள்ளே வந்ததும் கதவை சாத்தி விட்டு கைகளை பிசைந்து கொண்டே எப்போ போவ!.. 

இன்பா, இப்போ தானே வந்து இருக்கேன் இனி உன்னோட தான் இருக்க போறேன். என்ன? என்று அவள் சாக் ஆகி கேட்க.. 

ஓவரா பண்ணாத என் மாம் என்னை ரொம்ப ஒழுக்கமா வளர்த்து இருக்காங்க, அதனால் நீ இங்கே சோபாவில படுத்துக்க நான் பெட் ரூமில் படுத்து கொள்கிறேன். 

விவேகா, ஹே டென்ஷன் பண்ணாத ஒழுங்கா போயிடு.. 

அப்போ கிஸ் மி… 

முடியாது என்று அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொள்ள.. 

அப்போ என்னாலும் முடியாது ரொம்ப கஷ்டம் என்று அவன் சோபாவில படுத்து கொண்டான். டிவியை ஆன் செய்து ஸ்போட்ஸ் சேனல் ஆன் செய்து அதில் இருந்து ஆங்கில பாப் இசை சேனல் தட்டி விட்டான். 

கெட்டி பெர்ரி ரோர் ஷாங் ஓடி கொண்டு இருந்தது. இன்பா மர்மரிங் செய்து கொண்டு இருக்க.. 

விவேகா வேறு வழி இல்லாமல் சரி கொடுத்து தொலையுறேன் இனி இந்த பக்கம் வரவே கூடாது. 

இன்பா அவளை கண்டு கொள்ளாமல் ஜாலியாக பார்த்து கொண்டு இருந்தான். 

ஹே உன்னை தான்.. என்று விவேகா கோபத்தில் கூப்பிட இன்பா என்ன மேடம் கூப்பிடீர்களா! 

ம்ம் ஆமா எழுந்து வா கிஸ் பண்றேன். என்று சொல்லி கதவுக்கு அருகில் கூட்டி சென்றாள். ஹே என்ன பண்ற! என அவன் ஆச்சரியமாக பார்க்க.. கிஸ் பண்ண அடுத்த செகண்ட் நீ கிளம்ப வேணும் அதுக்கு தான் என்று அவள் சொல்ல.. 

இன்பா உன்னை இரு டி இனி என் நேரம் என்னை ஆறு மாசம் தவிக்க விட்டதுக்கு உன்னை இனி தனியாவே விட மாட்டேன் டி என்று நினைத்து கொண்டே சென்றான். 

இருவர் இதயமும் வேகமாக துடிக்க இன்பா அதை வெளி காட்டி கொள்ள வில்லை. அவன் அவளை தின்று விடுவது போல் பார்க்க விவேகா அருகில் வந்தாள். இன்பா அவனது சட்டையின் முதலாவது பட்டனை கழட்டி விட.. 

விவேகா பார்வையை கூராக்கி ஹே இப் இப்போ எதுக்கு உன்னோட ஷர்ட் பட்டனை கள்ட்டி விடுற.. 

இன்பா, இப்போ அதனால் உனக்கு என்ன டி உன் வேலையை நீ பாரு.. விவேகா கைகளை கட்டி கொண்டு உனக்கு கிஸ் பண்ண முடியாது போ என்று கதவை திறக்க போக.. 

ம்ம் நான் மை விழி வீட்டுக்கு போறேன்.. இதை கேட்ட விவேகா, ஹே இரு இரு நான் தரேன்.. அவள் நெருங்கி வந்தாள். இன்பா இன்னொரு சட்டை பட்டனை கழட்ட ஹே இப் இப்போ எதுக்கு மறுபடியும் கலட்டிற எனக்கு தெரிந்தே ஆகனும்! 

இன்பா, சொல்லியே ஆகணுமா! அவள் வேறு எங்கோ பார்த்து கொண்டு நிற்க அவன் உதட்டை மடித்து கடித்து கொண்டே கொஞ்சம் சூடா இருக்கு அதான்.. 

இதை சொன்னதும் அவள் முகம் குப்பென்று வியர்க்க விவேகா மனம் ஹே கண்ணை மூடி முத்தத்தை கொடுத்து அவனை வெளியில் தள்ளி விட்டு விடு.. 

உடனே விவேகா, கொஞ்சம் கீழே குனி.. இன்பா விஜய் போல் ஒரு லுக்கு விட்டு கொண்டே அவளை பார்க்க கண்களை மூடி கொண்டு அவன் இதழுக்கு அருகில் வந்தாள். 

இன்பாவின் இதழ் காந்தம் போல் ஒட்டி கொண்டது. அவன் கைகளை அவள் இடைக்கு கொண்டு வந்தான். விவேகா கண்களை அகலமாக விரிக்க இன்பா அவன் முத்தத்தில் இன்னும் மென்மையை கூட்டி இருந்தான். அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு அவன் வேலையை ஆரம்பிக்க.. 

விவேகா அந்த கிரக்கத்தில்  இருந்து கஷ்டபட்டு தன்னை மீட்டு கொண்டு ஹே பிளீஸ் விடு.. இன்பாவின் குரல் அவள் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொஞ்சம் சைலன்ட்டா இரு டி என்று சொல்லி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். 

விவேகா கொஞ்சம் கொஞ்சமாக அவன் கட்டுப்பாட்டுக்குள் வந்து இருந்தாள். அவளை தூக்கி கொண்டு முத்தமிட்டான். அவன் கைகள் அவள் உடலுக்குள் சென்று இருந்தது. அந்த மென்மையில் இவள் உருகி கொண்டு இருக்க.. 

இன்பா அவளை தூக்கி கொண்டு படுக்கை அறை சென்று இருந்தான். இன்பா, எத்தனை நாள் என்னை கட்டு படுத்தி இருக்கேன் தெரியுமா டி இப்படி என்னை ஒவ்வொரு நாளும் என்னை டார்ச்சர் பண்ணிட்ட இதுக்கு மொத்தமும்  நீ தான் ரெஸ்பான்சிபில் என்று சொல்லி அவளை படுக்கையில் கிடத்தினான். 

அவள் கண்கள் மூடி இருந்தது. ஒவ்வொரு நாளும் அவனை திட்டி கொண்டே அழுது கொண்டும் இன்பாவை பற்றி நினைத்து கொண்டே இருப்பாள். இப்பொழுது அவனை பார்த்ததும் அவள் வெடித்து போனாள். அவள் உணர்வுகளை கட்டு படுத்த முடியவில்லை. அவன் கண்களுக்கு விருந்தாக இருந்தாள். 

இப்படியே அவள் உடைகள் எல்லாம் மேலே சுருண்டு போய் இருந்தது. இன்பா அவ்னுடைய அணைத்து ஷர்ட் பட்டனையும் கலட்டி விட்டு அவளின் உடையில் கை வைக்கும் நேரம் கதவு வேகமாக தட்ட பட்டது. 

ஒரு சில நிமிடம் கழித்து போன் விடாமல் அடிக்க.. சட்டென்று சுய நினைவுக்கு வந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள இன்பா வேகமாக குளியலறை சென்றான். 

விவேகா அவள் உடை இருக்கும் நிலையை பார்த்து சரி செய்து கொண்டு போனை எடுக்க அதில் கார்த்திக் சார் என்று வந்தது. தன்னை சரி செய்து கொண்டு வெளியே வந்தவள் அவனுடைய ஷூ எடுத்து ஒளிய வைத்து விட்டு ஒரு பெரு மூச்சை விட்டு கதவை திறந்தாள். 

சார்! என்ன ஆச்சு நான் உள்ளே பெட் ரூமில் இருந்தேன்.. 

அது ஒன்னும் இல்ல மா இப்போ சாப்பிட சமைக்க வேண்டாம் வீட்டில் சாப்பாடு இருக்கு அதுக்கு தான் காலிங் பெல் அடித்தேன் நீ எடுக்கல சோ அதான் போன் பண்ணேன். 

அப்படியா சரி அண்ணா நான் இப்போ வருகிறேன் என்று உள்ளே சென்று பாத்திரம் எடுத்து கொண்டு வந்தாள். அதன் பின் உணவுகளை வாங்கி கொண்டு உள்ளே சென்று மீண்டும் யாரும் பார்க்காத வண்ணம் கதவை பூட்டினாள். 

இன்பா சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவன்.  படுக்கையில் படுத்து கொண்டான்.விவேகா, ஹே கார்த்திக் சார் மட்டும் வரல என்னை இந்நேரம் என்ன பண்ணி இருப்ப.. 

நான் என்ன பண்ணி இருப்பேன். ஒன்னும் பண்ணல.. ஜஸ்ட் கட்லிங் புதுசா கேட்கிற… என்று அவன் போனில் கவனம் செலுத்தினான்.

விவேகா, என்னை எதுக்கு டா இப்படி டார்ச்சர் பன்ற நான் நிம்மதியா இருந்தால் உனக்கு பிடிக்காதா! 

இன்பா,  ஆல் ரெடி நீ எனக்கு தான் சொந்தம்.  இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கு அப்புறம் முழுசா நீ எனக்கு சொந்தமாக போற. ஆயிரம் பிரச்னை வரும் ஆயிரம் பேர் குறுக்க வருவாங்க அதுக்கு எல்லாம் நீ பயபட்டு நடுங்கிட்டு இரு டி அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. 

அண்ட் இத்தனை நாள் நான் தான் உன்னை விட்டு வச்சு இருக்கேன். இல்லன்னா எப்போவோ உன்னை எடுத்து கொண்டு இருப்பேன். இன்னிக்கு நான் இங்கே தான் இருப்பேன். இனி டெய்லி வருவேன் என் இஷ்டம் என்று சொல்லி அவன் சாப்பிட சென்றான். 

விவேகா அப்படியே அமர்ந்து இருந்தாள். இன்பா, நான் இருக்கும் போது பரிகொடுத்தது மாதிரி இருந்த அப்புறம் உண்மையாவே என் கிட்ட கொடுக்க வேண்டி வரும் என்று அவன் சொல்ல அவள் வேகமாக சாப்பிட வந்தாள். 

இன்பா ரசித்து ருசித்து சாப்பிட்டான். அவளுக்கு உணவு தீருந்து விட உடனே உப்மா செய்தாள். அதிலும் பாதி சாப்பிட்டான். அவள் தூங்க சென்றார். அவளுக்கு முன் இன்பா படுத்து கொண்டு இருக்க.. 

விவேகா வெளியே சோபா அருகில் செல்ல.. ம்ம் போ நீ எனக்கு மேல் இருப்ப.. 

அவள் அப்படியே நின்றாள். சமத்து பொண்ணா இங்கே வந்து தூங்குர.. விவேகா வேறு வழி இல்லாமல் அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள். 

அதன் பின் அவன் தூங்கி விட்டான். அவள் தான் தூங்க வில்லை. அடுத்த நாள் அவளுக்கு நைட் ஷிஃப்ட் இருந்தது. காலை பொழுது அவன் மார்பில் அவளுக்கு விடியலாய் அமைந்தது.

இன்பா அவளை இறுக்கி அணைத்துக் முத்தமிட்டு விட்டு நான் வருவேன் என்று சொல்லி விட்டு 7.00 மணிக்கு கிளம்பி விட்டான். 

காலை 10.00 மணி இருக்கும் சூர்யா ஆபீஸ் ல சின்ஸியராக மீட்டிங் போய் கொண்டு இருக்க அவர் ஆபீஸ் உள்ளே நுழைந்தார். 

அந்த மீட்டிங் ஹால் பின் ட்ராப் சைலன்டில் இருக்க ரகு, கார்த்திக், தினேஷ், ராஜி, கீர்த்தனா என அனைவர் கவனமும் சூர்யாவின் மேல் இருக்க மீட்டிங் ஹாலின் கதவு திறந்தது. 

சூர்யா வின் பார்வை கூறாக்கி வந்தவரை முறைக்க பார்த்தவன். அவரின் முகத்தை பார்த்து உடனே புன்னகை ததும்ப கார்த்திக் கேரி ஆன் என்று சொல்லி எழுந்தான். 

அங்கே இருக்கும் அனைவரும் யார் அந்த இம்பார்ட் பெர்சன் என்று திரும்ப சூர்யா ஹாய்  ரவிசந்திரன் என்று கட்டி கொண்டான். 

டேய் ஃப்ராடு இப்போ தான் நினைப்பு வருதா..

நான் இல்ல அந்த இடியட் அண்ட் நீங்க தான் ஃப்ராடு.. 

ம்ம் அப்பாவுக்கும் பையனுக்கும் இதே வேலை அவன் உங்களை மிஞ்சி விட்டான். 

ரவி சரி ஹாட்டா ஒரு ஷாட் சாப்பிடலாமா!.. பீர் கூட அடிக்கலாம் என்று தோளில் கைகளை போட்டு கொண்டே இருவரும் சென்றனர். 

விவேகா ஒரு முடிவுடன் ஆபீஸ் கிளம்பினாள். 

தொடரும்… 

Episode 237

அந்த அறைக்குள் ரவி சந்திரன் நுழைந்ததும் அதை பார்த்த சூர்யா கார்த்திக்கிடம் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு எழுந்து செல்ல.. 

ராஜி அவரை பார்க்க.. ரவி, ஹே ராஜி டார்லிங் அதுக்குள் மறந்து போச்சா! இல்ல டாடி சும்மா நான் வரவா என்று எழுந்து நிற்க சூர்யா அவளை முறைத்தான். 

ம்ம் நீ போ சூரியா நான் மீட்டிங் பார்க்கிறேன் நிறைய வேலை இருக்கு என்று சமாளித்தாள். அதன் பின் ரவி, எதுக்கு டா இப்படி ராஜிய அந்த பார்வை பார்க்கிற.. உங்களுக்கு என்ன ஜாலி அதுவும் அந்த போலீஸ் காரன் வீடு வாங்கி லவ் பண்றான். எந்த பக்கம் போனாலும் அணை கட்டி அவளை கட்டம் கட்டுறான். 

ரவி, அவனுக்கு என்ன வேலை இருக்கு போலீஸ் ன்னு சொல்லிட்டு ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கான். என்று இருவரும் பேசி கொண்டே சூரியாவின் அறைக்கு வந்தனர். ரவி அவனை பார்த்து உன்னை பார்க்க எனக்கு பெருமையா இருக்கு தெரியுமா! நீ ரொம்ப திறமைசாலி டா தனி ஆளாக வளர்ந்து நிக்கிற இது தான் உன் கிட்ட எனக்கு ரொம்ப பிடித்த விஷயம்.. 

சூரியா, அங்கே மட்டும் என்ன குறைச்சல் இன்பா கூட ஒரு சாம்ராஜ்யத்துக்கு மன்னன் தான் என்று தலையை கோதி கொண்டே சொல்ல.. ம்ம் அவனை விட்டு கொடுக்க மாட்டியே! 

நான் எதுக்கு விட்டு தரனும். என்று சூரியா சொல்லி விட்டு இப்போ என்ன திடீர் விஜயம் என்ன விஷயம்? 

ரவி, ம்ம் ஸ்மார்ட் அந்த பொன்னு இங்கே தானே வொர்க் பண்றா! யாரு? 

ஹே நடிக்காத டா.. 

ம்ம் ஆமா ரகு ஆபீஸ்ல இப்போ புராஜக்ட்ல இருக்கா! சரி என்னோட நியூ கம்பனியில உங்க கூட டை அப் பண்ணி இருக்க அந்த வேலைக்கு அவளை அனுப்பி வைத்து விடு.. 

ஓ! அப்போ நிஜமாவே இப்போ மாமனார் ஆகி விட்டீங்க ரவி நேத்து தான் உங்க பையனுக்கும் அவளுக்கும் என்று சொல்ல வந்தவன் அப்படியே நிறுத்தி விட.. 

ஹே என்ன விஷயம்? சொல்லு டா! 

சூரியா, ஒன்னும் இல்ல இப்போ அவள் உங்க புது கம்பனிக்கு வந்து ஜாயின் பண்ணனும் அவ்ளோ தான.. ம்ம் அது தான் விஷயம் என்று ரவி மேலும் அந்த போலீஸ் நாய் கம்பெனி அப்டின்னு சொல்லி விடாத அவள் வேலையை விட்டு போயிடுவாள். 

சூரியா, அதை நான் பார்த்து கொள்கிறேன். அண்ட் எத்தனை நாளைக்கு இப்படி கண்ணா மூச்சி ஆட்டம் சீக்கிரம் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுங்க இல்ல உங்க பையன் இருக்க வேகத்துக்கு ” புள்ளை குட்டி பெத்து கிட்டு கட்டிக்களாமா!” அது தான் நடக்கும் போல.. 

ரவி எழுந்து நின்றவர். இதை அவன் கிட்ட சொல்லு என் கிட்ட உன் கிட்ட மட்டும் தான் இந்த வாய் பேசுவான். ஆனால் வசுமதியைப் பார்த்தாலே உள்ளுக்குள் ராகவனுக்கு பயம் தான்.. 

சூர்யா, சரி வாங்க கூலாக ஒரு பீர் சாப்பிடலாம்.. ரவி, எப்படி டா இப்படி பொய்யா நடிக்கிற உன் பொண்டாட்டியை மிஸ் பண்ற தானே இதை கேட்டதும் அவன் முகம் இறுகி எதுக்கு ரவி இப்படி என் மோட் ஸ்பாயில் பண்றீங்க.. நான் சீக்கிரமே இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன் அப்போ பார்ட்டி பண்ணுவோம். 

ம்ம் நான் சொல்றத கேளு அவளை எங்கே இருந்தாலும் தூக்கிட்டு வந்து உன்னோட வீட்டில் போட்டு எல்லா சேட்டை, கோபம், கொடுமையும் பண்ணு ஜாலியா இருக்கும் டா.. 

சூரியா, என்ன சொல்றீங்க! 

ம்ம் சண்டையில் தான் அதிகம் ரிலேஷன்ஷிப் வச்சுக்க தோணும். ஐ மின் உன்னை பற்றி அவள் புரிந்து கொள்வாள்.  அவள் எப்போதும் உன்னை விட்டு போகனும் அப்டின்னு நினைக்க மாட்டாள் டா.. 

சூர்யா, ம்ம் இப்போ தெரியுது! 

என்ன தெரியுது? 

நீங்க அவனை விட டர்ட்டி மைன்ட் போல.. ரவி, நான் சொல்றது உனக்கு இப்போ புரியாது அத நீ கண்டிப்பா ஃபீல் பண்ணுவ டா.. 

சூரியா, ம்ம் கட்டாயம் அப்படி ஒரு நாள் வந்தால் உங்களுக்கு கால் பண்றேன். என்று சொல்லி விட்டு விவேகாவை எப்போ அங்கே வரனும்ன்னு சொல்லிடுங்க.. 

ரவி, ம்ம் கமிங் ஃப்ரைடே நல்ல நாள் அன்னிக்கு அவள் ஜாயின் பண்ணணும்..

ம்ம் நல்ல குடும்பம் பல்கலை கழகம் என்று சொல்லி விட்டு சூர்யா, எத்தனை நாள் இங்கே இருக்க போறீங்க! 

எனக்கு வியாழன் மார்னிங் ஃப்ளைட் என்று சொல்லி விட்டு கிளம்பினார்.அவர் கிளம்பியதும் அன்று மாலை 6.00 மணிக்கு விவேகா ஆபீஸ் வந்தாள். 

மே ஐ கம் இன் சார்? என்று கதவை தட்டி கொண்டே உள்ளே வந்தாள். ரகு, ம்ம் நல்ல வேலை விவேகா நானே உன்னை கூப்பிட நினைத்தேன் உனக்காக சூர்யா  கார்த்திக் ரூமில் வெயிட் பண்ணீட்டு இருக்கான் போய் மீட் பண்ணு.. 

விவேகா, சார் என் வேலையை பற்றி முக்கியமா உங்க கிட்ட பேசணும்.. ரகு, ம்ம் வேலை விஷயம் தான் மா இந்த ஃபைல் எடுத்து கொண்டு போ.. 

அதற்கு மேல் அவளால் எதுவும் பேசமுடியாமல் அந்த ஃபைல் வாங்கி கொண்டு உள்ளே செல்ல அங்கே கார்த்திக், ராஜி, சூர்யா மூவரும் இருந்தனர். 

அவள் உள்ளே அனுமதி கேட்டு கொண்டே சென்றாள். சார் உங்க கிட்ட முக்கியமா பேசணும்! சூர்யா, நானும் உன் கிட்ட முக்கியமா பேசணும் மா! 

சொல்லுங்க சார்! சூர்யா, உனக்கு இங்கே வேலை இல்ல மா? 

விவேகா, என்ன சார் சொல்றீங்க என்று உள்ளுக்குள் வருத்தம் சந்தோஷம் இரண்டும் இருந்தது. இந்த மாதிரி ஒரு டீம் அவளுக்கு எங்கேயும் கிடைக்காது. ஆனால் அவளும் வேலை விட்டு போக வேண்டும் என்ற முடிவில் வந்து இருக்க அதற்கு முன் சூரியா இப்படி சொன்னது அவளுக்கு அதிர்ச்சி ஆக இருந்தது. 

சூரியா, ஹே ஐ மம் ஜஸ்ட் கிட்டிங் யூ திறமை சாளிகளை என்றும் இந்த ஃபீனிக்ஸ் கம்பெனி இழக்காது. 

சார் இப்போ என்ன சொல்றீங்க! என்று அவளுக்கு மீண்டும் அதிர்ச்சி ஆக இருக்க.. சூரியா, ராஜி மேம் பார்த்து கொண்டு இருக்க இது  digital marketing technology and solutions சார்ந்த ஒரு கம்பெனி புராஜக்ட் .. 

அது நம்ம ஊரில் தானே இருக்கு என்று விவேகா சொல்ல.. ம்ம் நம்ம அந்த கம்பனி கூட ஒரு பேங்க் ஆஃப்ல ஜாயின் பண்ணி இருக்கோம் சோ இங்கே இருந்து அந்த கம்பனிக்கு நீ ஷிஃப்ட் ஆகிடு.. 

இதை கேட்டதும் விவேகாவுக்கு சந்தோஷம் அவள் வீட்டுக்கு போய் விட்டால் இன்பா வால் வீட்டுக்கு வர முடியாது அவள் ஆதி வீட்டில் தான் தங்கி இருக்கிறாள். கங்கா அதியை பார்த்து கொள்ள கோட்ரஸ் சென்று விட்டார். எப்படியும் அவனை சந்திக்க வாய்ப்பு இருக்காது என்று நினைத்து கொண்டு ம்ம் ஓகே சார் நான் ஷிஃப்ட் ஆகிறேன். 

சூர்யா, உன்னை ராஜி மேம் தான் லீட் பண்ண போறாங்கோ அந்த கம்பனியில் எதுவும் பிரச்னை, சந்தேகம் எல்லாம் நீ ராஜி மேம் கிட்ட கேட்டுக்கோ.. 

ம்ம் ஓகே சார் என்று புன்னகையுடன் அவள் சொல்ல.. 

கார்த்திக் , சரி நீ என்ன சொல்ல வந்த.. 

விவேகா, அது வந்து இந்த வேலையை விட்டு விடலாம் அப்டின்னு சொல்ல வந்தேன் சார்.. 

மூவரும் அவளை திடுக்கிட்டு பார்க்க விவேகா, சாரி சார் எனக்கு வீட்டு நினைவு அதிகமா இருக்கு அதனால் தான் இப்போ ஒன்னும் பிரச்னை இல்ல நான் வீட்டில் இருந்தே ஆபீஸ் போலாம். 

சூரியா, வேற காரணம் இல்ல தானே உனக்கு இந்த ஆபீஸ் ல எதுவும் பிரச்னையா! 

No சார் இந்த டீம் அதை மிஸ் பண்ண முடியல உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். 

ம்ம் ஓகே மா நீ வர வெள்ளிக்கிழமை அங்கே ஜாயின் பண்ணிக்க என்று அவன் ராஜியை பார்க்க.. 

ம்ம் வாங்க விவேகா உங்களுக்கு இதை பற்றி ஃபுல் டிடைல்ஸ் கொடுக்கிறேன் அங்கே போய் நீங்க யாரை பார்க்கனும் அப்டின்னு சொல்றேன் என்று அழைத்து சென்றாள். 

அதன் பின் விவேகா சக்தி, மை விழி, மற்றும் கார்தியிடம் பிரிய மனம் இல்லாமல் அழுது கொஞ்சி பிரிந்து செல்ல சக்தி, மறுபடி எப்போ மீட் பண்றது நான் உன்னை மிஸ் பண்ணுவேன் விவி.. 

ஒன்னும் பிரச்னை இல்ல சக்தி குட்டி இன்னும் நான்கு  மாசம் தான் அதுக்கு அப்புறம் நான் இங்கே வந்து விடுவேன். அப்போ நம்ம கூட இன்னும் ரெண்டு குட்டி பாப்பா இருக்கும். 

அதன் பின் விவேகா அந்த வீட்டில் இருந்து அவளுடைய உடைகளை எடுத்து கொண்டு வீட்டை சுத்தம் செய்து சாவியை கார்த்திக் கிட்ட கொடுக்க.. 

கார்த்திக், இதை நீயே வைத்து இரு மா.. சார் வேற ஒருத்தங்களுக்கு வாடகைக்கு விட மாட்டாங்களா! 

இல்ல மா அதான் நீ நாலு மாசம் கழித்து வர போற தானே அப்போ பார்த்து கொள்ளலாம். 

விவேகா, இல்ல சார் அது வரை நீங்க வைத்து இருங்க வாடகை அனுப்பணுமா என்ன! 

இல்ல மா இந்த வீட்டு ஓனர் சூர்யா வுக்கு ரொம்ப க்ளோஸ் அதனால் நீ ஸ்டே பண்ணும் போது வாடகை கொடுத்தால் போதும். 

விவேகா சரி ஓகே சார் சாவியை நீங்களே வைத்து இருங்கள் என்று சொல்லி கொடுத்து விட்டு செல்ல கார்த்திக் சரி என்று வாங்கி கொண்டான்.

ஆனால் அவளுடைய வாழ்க்கை தொடங்குவது இந்த பெங்களூரில் இதே வீட்டில்  தான் அதை பாதியில் விட்டு செல்வதும் இந்த பெங்களூரில் உள்ள இதே வீட்டில்  தான் என்று அவளுக்கு தெரிய வில்லை. 

விவேகா நேராக பெங்களூர் ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தாள். 2 AC யில் புக் செய்து இருந்தாள். பெங்களூர்ல ஒரு வேலை தொடர்பாக வந்த இன்பா இறங்கவும் விவேகா இன்னொரு பக்கம் டிப் டாப்பாக டிரயினுக்கு காத்து கொண்டு இருந்தாள். 

இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் வந்தவன் அவள் அருகில் வந்தான். என்ன டிப் டாப்பா எங்கே போற!

இனி நீ நினைத்தது ஒன்றும் நடக்காது டா நான் இப்போ எங்க வீட்டுக்கு இல்ல என் மாமாச்சி வீட்டுக்கு போக போறேன் அதோட புது வேலையில் கமிட் ஆகியாச்சு இனி ஆபீஸ் விட்டால் வீடு அப்படி இல்லன்னா வீடு விட்டால் ஆபீஸ் எந்த கவலையும் இல்ல.. 

இன்பா, சோ.. விவேகா,என்ன சோ நமக்குள் எல்லாம் முடிந்தது. சோ இனி நான் ஃப்ரீ பேர்ட் போ போய் உன் வேலையை பாரு என்று கர்வமாக பேசி விட்டு திரும்ப ட்ரெயின் வந்தது. விவேகா டாட்டா இடியட் என்று சிரித்து கொண்டே ஏற அந்த நேரம் அவசரமாக வந்த ஒருவர் தெரியாமல் இன்பாவின் மேல் மோதி விட்டார். 

ஏற்கனவே அவள் பேசியதில் கடுப்பில் இருந்தவன். இந்த முறை அறிவு இருக்கா இல்லையா கொஞ்சம் கூட மெனர்ஸ் இல்ல இப்படி வந்து மோதூறீங்க? 

அனைவர் முன்பு இன்பா அப்படி பேசவும் உடனே அவர்க்கு கோபம் வர உன் கண்ணை எங்கே வைத்து இருந்த ராஸ்கல் என்று திட்ட விவேகா வெளியே என்ன நடக்கிறது என்று கதவுக்கு அருகில் வந்து எட்டி பார்க்க இன்பாவை யாரோ திட்டுவது போல் இருக்க.. 

விவேகா உச்சி கொட்டி கொண்டே பார்க்க இன்பா அவளை பார்த்து முறைத்து விட்டு அவள் கண்களை பார்த்து உன்னை நான் வாட்ச் பண்ணிட்டு தான் இருப்பேன் என்று சைகை செய்து விட்டு கோபமாக செல்ல.. 

அந்த நபர் விவேகா அருகில் வந்து ஹலோ மேம் கொஞ்சம் நகருங்க! விவேகா அவரை பார்த்து ச சாரி சார் என்று சொல்லி நகர்ந்தாள். அங்கே போகும் இன்பாவயும்  இவரையும் மாறி மாறி பார்க்க.. 

டிரெயின் மூவ் ஆனது.  விவேகா ஆச்சரியமாக உள்ளே வந்து அமர்ந்து வைத்த கண் வாங்காமல் அவரை பார்க்க. .. என்ன மேம் அப்படி பார்க்காரீங்க! 

சாரி சார் நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கவா? ம்ம் கேளுங்க ! என்று அவர் சொல்ல.. 

இப்போ வெளியே என்ன நடந்தது. அதுவா ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் ல எல்லாம் இப்படி பொண்ணுகளை ஏமாற்ற டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணிட்டு வந்திடுறானுக அது போல் ஒருத்தன் திமிர் பிடித்தவன் என் மேல் மோதி விட்டு என்னை திட்டினான். வேற ஒன்னும் இல்ல.. 

விவேகா, அவர் போலீஸ் சார்! என்று சொல்ல

அவர் ச்சீ எனக்கு போலீஸே பிடிக்காது ஐ ஹேட் காக்கி சட்டை..

சூப்பர் சார் எனக்கும் போலீஸ் பிடிக்காது. என்று விவேகா சொல்ல அவர் கண்ணகுளி தெரிய ஒரு சின்ன சிரிப்பு.. 

விவேகா, சார் உங்க உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா! 

ம்ம் கேளு மா! 

உங்க பேர் என்ன? 

அந்த நேரம் டேய் நளா! என்று குரல் வர ஒன் மினிட் மா என்று சொல்லி திரும்ப.. 

அங்கே சசிகுமார் நின்று கொண்டு இருந்தார். உடனே அவர் டேய் சசியா என்ன டா உன்னை ட்ரெயின்ல பார்க்கனும் அப்டின்னு இருக்கு.. 

விவேகா, அப்போ இவர் பேர் நளன் எனக்கு தான் யாரை பார்த்தாலும் அவனை பார்ப்பது போல் இருக்கா! என்று யோசித்து கொண்டு அவள் போனை நோண்ட ஆரம்பிக்க அவள் மனதில் இரண்டு நாட்கள் பின்னோக்கி சென்றது. 

கார்த்திக் மை விழி வளைகாப்பு முடிய அவன் உள்ளே வந்தது. அதன் பின் அன்று இரவு அவன் பேசிய அனைத்தும் கேட்டு விட்டு அமைதியாக இருந்தாள். 

இன்பா, இப்போ நீ என் கூட தூங்கல நீ எனக்கு மேல் இருப்ப என்று அவன் சொல்ல வேறு வழி இல்லாமல் அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள். 

இன்பா அதன் பின் அவளை பார்த்து கொண்டே தூங்கினான். ஆனால் விவேகா தூங்க வில்லை. அவளுக்கு மட்டும் இப்படி இருக்க ஆசையா என்ன! அவளுக்கு வேறு வழி இல்லை. இனியாழ் ஒரு பக்கம் அந்த  கவ்யா சத்யமூர்த்தி இன்னொரு பக்கம் எதற்கு இந்த தேவையில்லாத பிரச்னை என்று அதை நினைத்து கொண்டே கண்களில் கண்ணீருடன் சிறிது நேரத்தில் தூங்கி விட்டாள். 

அதன் பின் இன்பா அவளின் இடையோடு இழுத்து கட்டி கொண்டு தூங்க ஆரம்பித்தான். அவளுக்கு தெரியும் விவேகாவினால் அவனை விட்டு விலக முடியாது. அடுத்த நாள் காலையில் அவனின் வாசனை தான் அவள் நாசியில் இருந்தது. 

மெதுவாக 6.15 மணிக்கு கண்களை மெதுவாக திறக்க இன்பா போன் நோண்டி கொண்டு இருந்தான். அவளை எழுப்ப வில்லை. அப்படி எழுப்பினால் இப்படி தன் மேல் முட்டி கொண்டு தூங்குவாளா சண்டைக்காறி மாதிரி இந்நேரம் முகத்தை உர் ரேன்று தூக்கி வைத்து கொண்டு இருப்பாள். அதனால் தான் விட்டு விட்டான். 

அவள் அசையும் அரவம் கேட்க போனை அருகில் தூக்கி போட்டவன் அவள் கழுத்தில் முகம் புதைத்தான். அவள் கண்களை இறுக்கி மூடி கொண்டாள். அவன் கைகள் அவள் உடலில் மேய்ந்தது. 

விவேகா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கஷ்ட பட்டு அவனை தள்ளி விட இன்பா அவள் காதில் இது கொஞ்சம் தான் என்னை விட்டு போகனும் அப்டின்னு நினைப்பு வரவே கூடாது. ரெண்டு நாள் கழித்து வருவேன் இப்போ முக்கியமா வேலை இருக்கு வந்து உனக்கு எப்படி லவ் பண்ணணும் அப்டின்னு சொல்லி தரேன் என்று உதட்டை வலிக்க கிள்ளி விட்டு கிளம்பினான். 

அதன் பின் விவேகா மனம் இங்கு இருந்தால் இனி அவன் நம்மிடம் இது போல் அத்து மீறி கொண்டே இருப்பான் என்று தோன்ற உடனே இந்த வேலையை விட்டு போய் விட வேண்டும் என்று தோன்றியது. 

ஆதி அந்த கோச்சிங் அகாடமி யிள் படிதது UPSC பிரிலிம்ஸ் பாஸ் செய்து இப்பொழுது மெயின்ஸ் க்ளியர் செய்ய அதற்கு படிக்க டெல்லி சென்று விட்டான். அவளுக்கு இங்கே துணை யாரும் இல்லை. அந்த கேம்பஸ் இன்டர்வியூல தேர்வான வேறு department தோழிகள் இருந்தாலும் அவள் யாருடனும் ஒட்ட மாட்டாள். இதை பற்றி நினைத்து கொண்டு இருந்தாள். 

அந்த நேரம் ஆதி போன் செய்தான். ஹலோ சொல்லுங்க மிஸ்டர் அன்பு செல்வன்.. என்று விவேகா சொல்ல ஹே விவேகா நீ கிண்டல் பண்ண நானும் பண்ணுவேன். சரி டா கிண்டல் பண்ணு பார்ப்போம். 

ம்ம் சொல்லுங்க மிசஸ் இன்பராகவன்! என்று ஆதி சொல்ல ஹே நான் எப்போவும் விவேகா வாசுதேவன் தான் புரியுதா அண்ட் அவனை பற்றி தேவையில்லாமல் பேசின உன்னை என்ன செய்வென்னு எனக்கே தெரியாது. 

ம்ம் அப்படியா மேடம்.. என்ன ரெண்டு நாளா போன் காணோம். என்று ஆதி கேட்க.. 

ஒன்னும் இல்ல சும்மா தான்.. 

ஹே சொல்லு டி.. 

ஒன்னும் இல்லன்னு சொல்றேன் தானே அப்புறம் என்ன.. என்று விவேகா கோபம் கொள்ள ஆதி அமைதியானான்.

விவேகா, ஆதி சாரி செல்லம் எதோ ஒரு கோபத்தில் பேசி விட்டேன். என்று சொல்லி விவேகா அந்த பங்ஷன்க்கு இன்பா வந்த விஷயத்தை சொல்ல.. 

ஆதி, சார் எப்பொதும் ஹீரோ தான் டி அவரு தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பாரு அப்படியே விவேகா மன்சிலும் இருப்பார்.. 

விவேகா, உன்னை கொன்று விடுவேன் வாயை மூடு.. என்று சொல்லி இந்த வேலை விஷயம் பற்றி சொல்ல.. 

ஆதி, இதில் எங்கேயோ இடிக்குதே! ஒன்னும் இடிக்கல நீ சம்மந்தம் இல்லாமல் பேசாத என்று சொல்லி வைக்க போக.. 

ஆதி, ஒரு நிமிடம் இரு டி.. 

ம்ம் என்ன விஷயம் ? 

அந்த யாழினி எனக்கு சும்மா சும்மா கால் பண்ணிக்கிட்டே இருக்கா என்று அவன் சொல்ல.. 

விவேகா, எனக்கும் டெய்லி கால் பண்றா டா நீ நினைப்பது போல் இல்ல அவளை தவறா நினைக்க வேண்டாம். 

ம்ம் சரி என்று சொல்லி தயங்கி கொண்டே இருக்க என்ன ஆச்சு டா என்று விவேகா சந்தேகமாக கேட்டாள். 

அது ஒன்னும் இல்ல…

சொல்லி தொலை டா நாயே! 

ஆதி, நீ இதை ரொம்ப சீரியஸா எடுத்துக்காத.. 

விவேகா, நீ முதலில் விஷயத்தை சொல்லு.. 

ஆதி ஒரு பெரிய மூச்சை விட்டு அந்த இனியாழ் UPSC பிரிலிம்ஸ் கிளியர் பண்ணி விட்டாள். 

சரி ஓகே அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற என்று குரல் ஒரு நிமிடம் கவலையில் தோயிந்தது.

ஆதி, நான் சும்மா சொன்னேன் ஆனால் நீ எதையும் பெருசா எடுத்து கொண்டு ஓவர் ரியாக்ட் ஆஹிட்டு இருக்காத என்று சொல்லி வைக்க விவேகா ஆதி சொன்னதை நினைத்து பார்த்து கொண்டு இருந்தாள். 

சசி குமாருடன் பேச சென்றார். டேய் என் அப்பா பேர் சொல்லி கூப்பிடாதே அப்டின்னு எத்தனை முறை சொல்வது ஒழுங்கா என் பேரு சொல்லு இல்ல நான் இப்போவே போறேன். 

சசி, சாரி ரவி எனக்கு அப்படியே கூப்பிட்டு பழகி போச்சு எத்தனை வருஷம் ஆச்சு. உன்னை பார்த்து பேசி நம்ம ஜாலியா சரக்கு அடித்தது அது எல்லாம் ஒரு காலம். 

ரவி, சரி உன் ஃபேமிலி எங்கே? அவங்க நெக்ஸ்ட கம்பார்ட்மென்ட்ல இருக்காங்க.. அந்த நேரம் டாடி என்று சொல்லி கொண்டு அவன் மகன் வர ரவி இது என் மகன் சந்தோஷ் என் பிஸ்னஸ் இவன் தான் பார்த்து கொள்கிறான். என்று அறிமுகம் செய்து வைத்து விட்டு வீட்டுக்கு வரும் படி கூப்பிட்டு விட்டு அவர் இடத்துக்கு வந்தார். 

ரவி, ம்ம் என்ன மா கேட்ட? ஒன்னும் இல்ல சார் என்று சமாளித்தாள். 

ரவி, உன் பேர் என்ன மா? 

என்னோட நேம் V. விவேகா சார்.. ம்ம் நல்ல பேர் புதுமையா இருக்கு.. 

விவேகா, உங்க பேர் கூட சூப்பரா இருக்கு சார் என்று அவளும் பேசினாள். 

ரவி அவளை எதேட்சையாக பார்க்க விவேகா அவரை தான் பார்த்து கொண்டு இருந்தாள். 

என்ன மா நான் எதுவும் உன்னை மிரட்டி விட்டேனா என்னை அப்படி பார்க்கிற? 

விவேகா, அது ஒன்னும் இல்ல சார் சும்மா தான்.. 

ரவி, இந்த சார் ரொம்ப டூ மச் நீ ஒன்னும் என் கூட வேலை செய்ய வில்லை தானே.  

ம்ம் ஆமா சார்! 

அப்போ அன்க்கில் சொல்லு மா! 

ம்ம் ஓகே அங்கிள் என்று சொல்ல ரவி, சரி என்ன விஷயம் எதுக்கு என்னை அப்படி பார்த்த.  

விவேகா, உங்களை நான் பார்த்த முகமா இருக்கு அதுவும் உங்க கண்ணகுளி அது.. என்று நிறுத்தினாள். 

ரவி, என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சது அவ்ளோ தான் என் பொண்ணு அதை விட கோபம்.. 

விவேகா, ஸாரி அங்கிள்  நான் சும்மா சொன்னேன். 

ரவி, இட்ஸ் ஓகே மா அழகா இருந்தாலே இது ஒரு தொல்லை தான்.. 

விவேகா,அங்கில் இது டூ மச்.. 

ம்ம் அப்புறம் உன்னை பற்றி சொல்லு என்ன படிச்சு இருக்கீங்க! 

விவேகா அவளை பற்றி சொல்ல ம்ம்  நல்ல வாழ்க்கை தான் நல்லா படிச்சு இருக்க, ஒரு பெரிய நல்ல  கம்பனியில் வேலை,அப்படியே அடுத்து ஒரு பையனை லவ் பண்ணி கல்யாணம் தான்.. 

அவள் சாக் ஆகி பார்க்க.. 

என்ன மா அப்படி பார்க்கிற நான் எதுவும் தவறா சொல்லி விட்டேனா! 

அது ஒன்னும் இல்ல அங்கில்.. 

ரவி, உன் பின்னாடி யாரும் சுற்ற வில்லையா! 

விவேகா அமைதியாக இருக்க ரவியும் அமைதி ஆனார். 

அவர் அமைதியாக இருப்பதை பார்த்து விவேகா, என்ன ஆச்சு அங்கில் சைலண்ட் ஆகி விட்டீர்கள்.. 

ரவி, ஒன்னும் இல்ல மா தேவையில்லாமல் அட்வான்டெஜ் எடுத்துக்க கூடாது.

அவள்…?

தொடரும்… 

Episode 238

அவர் அமைதியாக இருப்பதை பார்த்து விவேகா, என்ன ஆச்சு அங்கில் சைலண்ட் ஆகி விட்டீர்கள்.. 

ரவி, ஒன்னும் இல்ல மா தேவையில்லாமல் அட்வான்டெஜ் எடுத்துக்க கூடாது. என்று சொல்லி கொண்டே நிகோலஸ் ஸ்பார்க்ஸ் நாவல் புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தார். 

இதை கேட்ட விவேகா சட்டென்று அப் அப்படி இல்ல அங்கில் சும்மா தான் பிளீஸ் நீங்க திடீர்னு கேட்கவும் நான் ஸ்டன் ஆகி விட்டேன்… 

இட்ஸ் ஓகே மா.. என்று சொல்லி படிக்க ஆரம்பிக்க விவேகா, எதுவும் பேசுங்க பிளீஸ் என்று அவள் அவரையே பார்த்து கொண்டு இருக்க ஒரு குட்டி சிரிப்பு சிரித்து விட்டு அந்த புத்தகத்தை மூடி வைத்தவர். 

ம்ம் என்ன பேச எனக்கு பிஸ்னஸ் பற்றி தான் தெரியும் வேற ஒண்ணும் தெரியாது மா.. விவேகா, ஓ அப்படியா எனக்கு என்னன்னு தெரியல உங்களை பார்த்தால் பேசி கொண்டே இருக்கணும் போல் தோணுது.. 

ரவி சிரித்து கொண்டே என்னை பார்த்தால் உனக்கு தெரிந்தவர் போல் இருக்குன்னு சொன்னியே யார் அது?  உன்னோட க்ரஸ்சா? என்று இரு புருவமும் தூக்கி கேட்டார். 

விவேகா, அது அது வந்து இல்ல சும்மா சொன்னேன். ரவி, உன் டாட் என்ன பண்றாங்க? நான் 12th படிக்கும் போது என்று அவள் நிறுத்த.. சாரி மா என்று ரவி சொல்லி விட்டு பேச தொடர்ந்தார். 

உன்னை பார்க்கும் போது என் தங்கை பொண்ணு மாதிரி இருந்தது. சோ அதான் ஜாலியா பேசினேன். விவேகா, ம்ம் ஒகே அங்கில் அப்புறம் உங்க வீடு எங்கே இருக்கு? 

ரவி, என்னோட வீடு கோர்ட் சைட் இருக்கு மா! சாப்பிடும் நேரம் வர விவேகா சாப்பிட ஆரம்பிக்க ரவி, அவளை போலவே வெஜ் தேர்வு செய்தாள். 

உங்களுக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட் அங்கிள்.. ரவி, எனக்கு கொஞ்சம் கடவுள் நம்பிக்கை இருக்கு மா நம்மை மீறி இந்த உலகத்தில் ஒரு பாஸிட்டிவ் இருக்கு அதை நான் உருவமாக பிலீவ் பண்றேன். 

விவேகா மனம் இதை கேட்டு அந்த இடியட்க்கு கடவுள் நம்பிக்கை இல்ல சோ இவர் வேற ஒருத்தர் தான் என்று நினைத்து கொண்டாள். ரவி, நானும் என் பொன்னும் வெஜ் என் பொண்ணு சூப்பரா சமைப்பா.. 

உனக்கு சமைக்க தெரியுமா.. எனக்கு பெருசா தெரியாது ஆனால் உப்மா, கிச்சடி, ஆம்லெட், வெண்பொங்கல், அப்புறம் மெது வடை, சாம்பார் சாதம், அப்புறம் தோசை, கோதுமை தோசை , அடை இது எல்லாம் தெரியும்.. மம்மம் இன்னும் கூட பொட்டு கடலை சட்னி இது கூட என்று அவள் உணவு திணித்து கொண்டு கூற.. 

ரவி உதடு கடித்து சிரிப்பை அடக்கி கொண்டு ம்ம் இத்தனை டிஷ் தெரியுமா! ம்ம் அங்கிள் என்று அவள் சாப்பிட்டு கொண்டே பார்க்க.. 

ரவி, அது என்ன பொட்டு கடலை சட்னி நான் அந்த மாதிரி கேள்வி பட்டதே இல்லையே !

விவேகா சிரித்து கொண்டே அது தேங்காய் பதில் கொஞ்சம் அதிகமா பொட்டு கடலை சேர்த்தால் அது தான் கடலை சட்னி..  

ம்ம் யாருக்கு சாப்பிட கொடுத்து வச்சு இருக்கோ தெரியலயே.. என்று ரவி சிரித்து கொண்டே நினைத்து விட்டு அவளிடம்.. 

இந்த நாண் வெஜ் பக்கம் எதுவும் தெரியாதா! 

அங்கிள் என்று விவேகா அவரை பார்த்து கொண்டே ஆடி மாதம் எங்க ஊரில் நோம்பி, புரட்டாசி வாய்ப்பே இல்ல , ஐப்பசி, கார்த்திகை எங்க வீட்டில் எடுக்க மாட்டோம். மார்கழி மாசம் கிருஷ்ண பவானுக்கு உகந்த மாசம் அப்புரம்.. 

ரவி தை மா ! என்று நினைவு படுத்த ஹான் அப்போ கறி நாளுக்கு சாப்பிடுவோம். மாசி மா என்று ரவி மெதுவாக மென்று கொண்டே கேட்க அப்போ எங்க ஊர்ல தேரு.. என்று தண்ணீரை குடித்தாள். 

ரவி, இப்படி கறியே கண்ணுல காட்டலன்னா ஏங்கி விடுவானே! விவேகா என்ன அங்கிள் என்று பார்க்க..இப்படி சுத்தமா நாண் வேஜ் சாப்பிடாமல் இருந்தால் ஏங்கி விட மாட்டியா! 

விவேகா, எல்லாரும் ஒண்ணா இருக்கும் போது மட்டும் தான் சாப்பிடுவோம். ரவி, சரி அதில் மட்டன் பிடிக்குமா! சிக்கன் பிடிக்குமா! இல்ல ஷி புட் பக்கம் தான் உனக்கு ரொம்ப பிடிக்குமா! 

விவேகா ஒரு விரலை தூக்கி கொண்டு சாப்பிட ரவி இப்படி சாப்பிட கூடாது 5 விரலும் சேர்த்து சாப்பிடு விவேகா, சாரி அங்கிள் என் மாம்ச்சி கூட இது தான் சொல்லுவாங்க.. சரி என்ன தான் சாப்பிடுவ? என்று ரவி கேட்க.. 

ம்ம் சிக்கன் பிடிக்காது, மட்டன் பிடிக்கும்.. அங்கிள் என்று அவள் உதட்டை துடைக்க

 ரவி, அப்போ கடல் உணவு பிடிக்குமா! ம்ஹும்  பிடிக்காது.. என்று அவள் இட வல பக்கம் தலை அசைக்க ரவி மனதில் மவனே நீ செத்த டா.. இனி தான் உன்னோட ஆட்டம் கம்மியாக போகுது நாயே என்று நினைத்து கொண்டார். 

ரவி கையை கழுவி கொண்டு வந்து அமர விவேகா போய் ஹேன்ட் வாஷ் செய்து விட்டு வந்து அமர்ந்தார். அப்புறம் சாப்பிட தான் பிடிக்காதா! இல்ல சமைக்கவும் பிடிக்காதா! என்று அவர் கேட்க.. 

விவேகா, என் குடும்பம் வளர்ந்து வர நேரம் அடுத்த கட்டத்துக்கு போகும் நேரம் தான் அப்பாவுக்கு இப்படி ஆகி போச்சு இது எல்லாம் சூழ்நிலையால் தான் இப்படி ஆகி போச்சு அங்கிள் இப்போ தான் நான், அண்ணா, அம்மா எல்லாரும் வேலைக்கு போறோம். என்று சொல்லியவள். வாழ்வதற்கு தானே சாப்பாடு பணம் எவ்வளவு இருக்கோ அதை பொறுத்து சாப்பாடு மாறும் இது தான் என்னோட டேஸ்ட் பட்ஸ் அங்கிள் என்று அவள் சொல்ல ரவிக்கு எதோ போல் ஆகி விட்டது. 

ரவி, சரி போதும் மா வேற பேசுவோம் என்று சொல்லி பொதுவான விஷயம் பேசி கொண்டு இருக்க விவேகா, நீங்க ஒன்னு கேட்டீங்களே! என்ன மா என்று ரவி கேட்க.. யாரையும் பிடிக்குமா அப்டின்னு கேட்டீங்க தானே! 

ம்ம் சொல்லுங்க யார் அந்த லக்கி பெல்லோ! என்று ஆர்வமாக கேட்டார். விவேகா, என் வாழ்க்கையில் கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல எனக்கு நிறைய சாதிக்கணும். ஒரு அப் டிசைன்னர்  ஆகனும்  இந்த லவ்கும் நமக்கும் ரொம்ப தூரம் அங்கில்.. 

ரவி, ம்ம் இது உன்னோட பெர்சனல் அதில் நான் என்ன சொல்ல என்று பேசி விட்டு சிறிது நேரம் கழித்து இருவருக்கும் தூக்கம் வர அவரவர் படுக்கையில் படுத்து உறங்க ஆரம்பித்தனர். 

அதன் பின் ஒரு ரெண்டு மணி நேரம் கழித்து எழுந்தனர். ம்ம் இன்னும் கொஞ்ச நேரத்தில் ரீச் ஆக போறோம்.. என்று மணி பார்த்து கொண்டே வசுமதிக்கு போன் செய்தார்.

ஹலோ மதி நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் இறங்கி விடுவேன்.. 

என்ன இவளோ நேரம் எதுள வரீங்க?என்று வசுமதி கேட்க 

ப்ளைட் மிஸ் பண்ணி விட்டேன் அதனால் ட்ரெயின்ல தான் வந்து கொண்டு இருக்கிறேன். சரி இருங்க ராகவ் செகண்ட் காலில் வரான் பேசிட்டு கூப்பிடுறேன் என்று கட் செய்தார். 

இவளை அவன் வந்து விட்டால் நான் முக்கியம் இல்லாமல் போய் விடுகிறது. இருக்கட்டும் டி உனக்கு போட்டியா இதோ வர போகிறாள். அப்புறம் நீ என் கூட தான் இருக்கனும் இது எல்லாம் சீக்கிரம் நடக்கும் என்று ரவி ஒரு கணக்கு போட விவேகா என்ன செய்ய போகிறாள். ம்ம் அதையும் பார்ப்போம். 

அவர்கள் இறங்க ஒன்னும் அரை மணி நேரம் தான் இருந்தது. விவேகா அவரை பார்க்க அவரும் அவளை பார்த்து சிரித்து கொண்டே என்ன மா என்ன ஆச்சு.. இல்ல அங்கிள் இஃப் யூ டோண்ட் மைண்ட் உங்க நம்பர் கிடைக்குமா! 

ரவி ம்ம் கண்டிப்பா மா என்று சொல்லி அவர் எண்ணை சொல்ல விவேகா அதை பதிய வைத்து கொண்டாள். விவேகா சரி தானே என்று அவரும் பதிய வைத்து கொண்டார். ரவி, ம்ம் பார்ப்போம் என்று சொல்ல.. 

விவேகா, என்னை பற்றி நிறைய கேட்டீங்க பட் நீங்க யங்கா இருக்கும் போது உங்க பின்னாடி எத்தனை கேர்ள்ஸ் சுற்றி இருப்பாங்க.. என்று அவள் கேட்க… 

ரவி, இதை மட்டும் என் பொண்டாட்டி கேட்டால் இன்னும் ஒரு வாரம் என் கிட்ட பேச மாட்டாள் தெரியுமா!  என் பையன் கேட்டால் அவன் உடனே டைர்வர்ஸ் வாங்கி கொடுத்து விட்டுவான் மா… 

விவேகா அவருடன் கீழே இறங்கி வந்ததும் இருவரும் பிரிய ரவி, உன்னோட முகத்தில் எங்கேயோ ஒரு கவலை இருக்கு கவலை படாதே உனக்கு நல்லது தான் நடக்கும். என்று சொல்லி விட்டு அவர் சென்றார். 

விவேகா நேராக ஆதியின் வீட்டுக்கு சென்றாள். தேவி அவளை அப்படி உபசரித்தார். 

அடுத்த நாள் வெள்ளி கிழமை உத்வேகத்துடன் ஆபீஸ் கிளம்பினாள். “புத்தம் புது காலை பொன்னிற வேளை” என்று மனதில் பாடல் வரிகள் ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்க 9.30 மணிக்கு அந்த ஆபீஸின் உள்ளே நுழைந்தாள். 

அங்கே ரிசப்ஷனிஸ்ட் கிட்ட அவள் வந்த விஷயத்தை சொல்ல ம்ம் வாங்க மேம் உள்ளே வந்து வெயிட் பண்ணுங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்க M.D வந்திடுவாரு.. 

ம்ம் ஓகே என்று சொல்லி உள்ளே சென்று அமர்ந்தாள். அதன் பின் விவேகா ராஜிக்கு போன் செய்து ஆபீஸ் வந்த விஷயத்தை சொல்ல.. 

அதற்குள் அவர் உள்ளே நுழைந்தார். அந்த வரவேற்பு பணிப்பெண்,  அப்பாயின்மென்ட் இல்ல  சார் உங்களை பார்க்க RV குரூப்ஸ் ல இருந்து ஒருத்தங்க வந்து இருக்காங்க.. 

ம்ம் ஓகே நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி உள்ளே வந்தார். அங்கு உள்ள அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்ல விவேகா அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டே திரும்ப அங்கே ரவி சந்திரன் கம்பீரமாக நடந்து வந்து கொண்டு இருந்தார். 

அவர் அவளை பார்த்ததும் ஹலோ விவேகா! என்று கைகளை அசைத்தார். அங்கில் நீங்க எங்கே இங்கே! என்று ஆச்சரியமாக கேட்க ம்ம் சும்மா வேலை செய்ய வந்தேன். என்று நடந்து கொண்டே அவள் அருகில் வந்தார். 

விவேகா ஷாக் ஆகி அப்போ நீங்க தான் M.D ஆ!  சாரி சார் என்று சொல்ல.. ரவி, ஹே யூ சிட்டர் MD க்கு ரெண்டு கொம்பு இல்லையே! அது அப் அப்படி இல்ல சார்.. 

முதலில் இந்த சார் அ கட் பண்ணு எப்பொதும் போல் அங்கிள் சொல்ற இல்ல நான் பேச மாட்டேன். நீ இப்போவே கிளம்பு நான் சூர்யாவுக்கு கால் பண்ணி சொல்றேன்…

இதை கேட்டதும் விவேகா சரி சாரி அங்கிள் என்று சொல்ல ம்ம் அப்புறம் என்று பேச வர விவேகா, அங்கில் இந்த புராஜெக்ட் என்று அவள் அதை பற்றி பேச வர அது அப்படியே இருக்கட்டும் நீ வா நம்ம இப்போ எதுவும் சாப்பிடலாம் ஆர் யூ ஃபினிஸ் யுவர் ப்ரேக் பாஸ்ட்? 

ம்ம் ஃபினிஸ் அங்கிள் நீங்க என்று கேட்டு கொண்டே அவர்கள் நடந்து சென்றனர். 

இங்கே இன்பா சூர்யா ஆபீஸ்ல டேய் அவளை வேலை விட்டு தூக்கிட்டியா? சூரியா, இல்லையே! இப்போ என்ன ஆச்சு! 

இன்பா, என்னை பார்த்து சவால் விட்டு போறா மச்சி அவளுக்கு ஆட்டம் அதிகமாகி போச்சு டா.. 

சூர்யா,மிஸ்டர் ரவி சந்திரன் தான் அவளை உன்னோட ஆபீஸ்ல ஷிஃப்ட் பண்ண சொன்னாரு.. 

அவன் அதிர்ச்சி ஆச்சரியமாக போலீஸ் ஆகி விட்டாளா! 

இடியட் இப்போ புதுசா ஒரு ஆபீஸ் ஓபன் ஆகி இருக்கே அதுல தான் ஜாயின் பண்ணி இருக்கா! 

என்ன டா சொல்ற? 

ம்ம் உன் டாட் கிட்ட கேளு இந்த மாதிரி ஒரு டாட் கிடைக்க நீ ரொம்ப கொடுத்து வைத்து இருக்கனும் டா.. 

இன்பா, அப்படி எல்லா ஒன்னும் இல்ல அவரு ஒரு பிராடு டா அந்த சண்டைக்காரி ஃபார்ஜெர்ரி இனி என்ன நடக்க போகுதோ ஏற்கனவே என்னை டாற்ச்சர் பண்றது தான் அவரோட ஆல் டைம் ஃபேவரட் இப்போ என்று அவன் தொப்பென்று அமர்ந்து யோசிக்க.. 

சூர்யா அவன் முன் ஒயின் கோப்பையை நீட்டி ரிலாக்ஸ் மச்சி ஒன்னும் ஆகாது நீ க்சில் ஆகு.. என்று சியர்ஸ் செய்து இருவரும் குடிக்க ஆரம்பித்தனர். 

இங்கே விவேகா ஆபீஸ் தொடர்பான வேலையை ரவி கிட்ட கேட்டு பேசி தெரிந்து கொண்டு மிகவும் இயல்பாக நீண்ட நாள் பழகியது போல் பேசி கொண்டு இருந்தனர். 

மாலை ஆனதும் வீட்டுக்கு கிளம்பும் நேரம் வர விவேகா என்று அவர் அழைக்க.. 

ம்ம் சொல்லுங்க அங்கிள்! 

ஒன்னும் இல்ல என்னை இடிதானே ஒரு ராஸ்கல்! 

ம்ம் என்று அவள் தயங்கி கொண்டே பார்க்க 

ரவி, அவன் போலீஸ்ன்னு உனக்கு எப்படி தெரியும்? 

அவள் மனம் உள்ளுக்குள் பந்தய குதிரையை போல் துடிக்க ஆரம்பித்தது. அவள் பேச வருவதற்குள் ரவி, அன்னிக்கு யூனிஃபார்ம்ல கூட இல்லையே உனக்கு முன்னாடியே அவனை தெரியுமா! 

விவேகா…? 

தொடரும்…. 

Episode 239

ரவி, அவன் போலீஸ்ன்னு உனக்கு எப்படி தெரியும்? 

அவள் மனம் உள்ளுக்குள் பந்தய குதிரையை போல் துடிக்க ஆரம்பித்தது. அவள் பேச வருவதற்குள்

ரவி, அன்னிக்கு யூனிஃபார்ம்ல கூட இல்லையே உனக்கு முன்னாடியே அவனை தெரியுமா! என்று கேட்க.. 

அது அது வந்து நான் இந்த ஊர் தானே பார்த்து இருக்கேன் அண்ட் அவங்க காலேஜ் வந்து இருக்காங்க..

எதுக்கு நீ படிக்கும் காலேஜ்க்கு வந்து இருக்கான்? என்று அவர் கேள்வி அடுக்கி கொண்டே சென்றார். 

ம்ம் அது UPSC, group 2, இந்த மாதிரி எக்ஸாம்க்கு கோச்சிங் கொடுக்க வந்து இருக்கார் அப்போ பார்த்து இருக்கேன். ஆனால் இப்போ எதுக்கு அவனை பற்றி பேசணும் அதான் உங்களையே இடித்து விட்டு போயிட்டான் இடியட், திமிர் பிடித்தவன், அவனை எதுக்கு போலீசா போட்டாங்க ஓவர் ஹெட் வெயிட் ,புடுங்கி என்று விவேகா கொந்தளித்து கொண்டு பேச.. 

ரவி அவளை பிரமிப்பாக பார்த்தார். அவள் வேக மூச்சு எடுத்து விட்டு நிறுத்த தண்ணீரை நீட்ட அங்க்கில்! என்று ஆச்சரியமாக பார்த்தாள். 

ம்ம் வெல் டன் மா எனக்காக இவளோ கோபபடுற இது நிஜமா! 

பின்ன என்ன அங்கிள் என்று அந்த தண்ணீரை வாங்கி குடித்தாள். ரவி உடனே நீ என் வீட்டுக்கு நிச்சயம் வரனும் மா! இதுக்கு போய் எதுக்கு வீட்டுக்கு நீங்களே சொல்லுங்க! 

ரவி, இல்ல மா உன்னை என் மனைவிக்கு இன்ட்றோ கொடுக்கணும் என்னை மாதிரியே போலீஸ் பிடிக்காத பொன்னு ஒருத்தி இருக்கான்னு காட்டணும்.. 

ம்ம் நிச்சயம் வரேன் அங்கிள் என்று சொல்லி விட்டு அவரவர் வீட்டுக்கு கிளம்பினர். விவேகா வுக்கு காலேஜ் ல இருந்து போன் வந்தது.இன்னும் இரண்டு வாரத்தில் பட்டமளிப்பு விழா யுநிவர்சிட்டியில் கோல்ட் மெடல் ரெங்கிங் பட்டியலில் முதல் இடத்தை பெற்று கொடுத்து இருக்கிறாள். 

இரண்டாம் இடம் வேறு துறையை சேர்ந்த மாணவி சந்தியா, மாணவன் தமிழரசன் மூன்றாம்  இடம் ஆதி வந்து இருக்கிறான். அதை மிகவும் விமர்சையாக கொண்டாடலாம் என்று திட்டம் தீட்டி இருந்தனர். அதன் பின் உநிவர்சிட்டியில் நேரடியாக அங்கு அழைத்து செல்ல பட்டு பத்தக்கதை அந்த பல்கலைகழகம் வழங்கும் பட்டமளிக்க கவர்னர் வருகை தருகிறார். 

கிருஷ்ணன் அவளுக்கு அழைத்தார். விவேகா யார் அது புது நம்பர் என்று பதில் ஏற்றாள். ஹலோ நான் கிருஷ்ணன் பேசுகிறேன் விவேகா இருக்காங்களா! தாத்தா நான் தான் பேசுறன்! 

ம்ம் எங்களை மறந்து விட்டு மேடம் பெங்களூர் போயிடீங்க? அப்படி இல்ல தாத்தா என்று அவள் தயங்கி கொண்டே பேசிட.. 

இப்போ என்ன ஆச்சு வீட்டுக்கு ஒரு நாள் வந்து விட்டு போ மா பாவை கேட்டு கொண்டே இருக்காள். உன்னை பார்த்து கிட்ட தட்ட 8 மாசம் ஆச்சு.. 

விவேகா தயங்கி கொண்டே அது அது வந்து தாத்தா! உனக்கும் அவனுக்கும் தானே பிரச்னை நாங்க என்ன பண்ணோம். என்று அவர் அமைதி காத்திட….  சரி தாத்தா நான் வருகிறேன் என்று சொல்லி வைத்தாள். 

அந்த இரவு ஏனோ மனம் அவனை நினைத்து கொண்டே இருக்க சாப்பாடு கொஞ்சம் மட்டும் கொறித்து விட்டு நேராக படுக்கைக்கு சென்றாள்.

அவள் போனில் g mail சென்று அவனுக்கு முதன் முதலாக  அனுப்பிய செய்திகளை எடுத்து பார்த்தாள். அதில் விவேகா அவனை முட்டி போட வைக்கும் படம் இருக்க அதில் இன்பாவின் முகம் பார்க்க சகிக்க வில்லை. சிறு பிள்ளை போல் அவ்வளவு கோபம் அதை வருடியவள் கண்களில் கண்ணீர் கொட்டியது. 

அதன் பின் வாட்ஸ் அப்பில் அவன் அனுப்பிய செய்திகள் அனைத்தும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சேஃப்டி செய்து வைத்து இருந்தாள். அதை எடுத்து படிக்க படிக்க இன்னும் கண்ணீர் தலையணையை நனைத்தது. 

விவேகா, ராகவ் உனக்கு லவ் சொல்ல எனக்கு அருகதை இல்ல டா ஆனால் மேட் லி லவ் யூ இப்போ நீட் யூ டா ஆனால் நீ என் கண் முன்னால் வராத பிளீஸ் நீ மட்டும் வந்தால் என்னோட இதயம் குதித்து உன் கிட்ட வந்திடும் என்னோட லிப்ஸ் உன் கிட்ட வந்து ஒட்டிக்கும் நீ என் முன்னாடி வராத என்று சொல்லி

அந்த அறையில் இருந்து வருண் அதிதி கல்யாண ஆல்பம் எடுத்தவள் வேகமாக இன்பாவின் படத்தை எடுத்து   அவனின் புகைப்படத்துக்கு முத்த மழை பொழிந்தாள். உன்னை கட்டிக்கணும் போல இருக்கே என்று அழுது கொண்டே அந்த புகைப்படத்தை பார்த்து ஆல்பத்தோடு அணைத்து கொண்டு உறங்கினாள். 

அதன் பின் வந்த இரண்டு நாட்களில் எந்த பிரச்னையும் இல்லாமல் நன்றாக தான் சென்றது. கங்கா அவளை பார்க்க வீட்டுக்கு வந்து இருந்தார். 

விவேகா களைப்பாக மாலை வீட்டுக்கு வந்தாள். ம்ம் என்ன மா இந்த பக்கம் வந்து இருக்க? அதை நான் தான் டி கேட்கணும்.. 

இப்போ என்ன ஆச்சு மா அத்தை எனக்கு ஒரு டீ என்று அந்த சேரில் அமர்ந்தாள். கங்கா, அதிய வந்து பார்க்கனும் அப்டின்னு உனக்கு தோணிச்சா அந்த பக்கமே வர மாட்டிக்கிற… 

விவேகா இப்போ என்ன நான் அதிய பார்க்கனும் அவ்ளோ தானே அவளை இங்கே கூட்டி வாங்க. 

ஹேய் அவள் வயிற்று பிள்ளைகாறி டி நீ தான் அவளை பார்க்க வரனும்.

விவேகா பேச வருவதற்குள் தேவி டீ எடுத்து கொண்டு வெளியே வந்தவள்.

அக்கா!  இன்னும் ஒரு மாசத்தில் சீமந்தம் பண்ணிட்டா அதிதி இங்கே தானே இருக்க போறா அப்புறம் என்ன விவேகா  வேலைக்கு போயிட்டு டயர்டா வரா சோ அவளை தொந்தரவு செய்ய வேண்டாம்.

கங்கா, எல்லாம் நீயும் என் அன்னானும் அவளை தலையில் தூக்கி வச்சுட்டு ஆடுறீங்க இது சரி இல்ல மா என்று சலித்து கொண்டே அவள் கூற.. 

மா அத்தையை எதுவும் சொல்லாத நான் ஆதி வந்ததும் அவனும் நானும் சேர்ந்து பார்க்க வருகிறோம். என்று விவேகா கூறி விட்டு உள்ளே செல்ல தேவி மனதில் சீமந்தம் முடிந்ததும் கல்யாண பேச்சை எடுத்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டார். 

இப்படியே ஒரு வாரம் சென்று இருக்க விவேகா பட்டமளிப்பு விழா முடிந்ததும் கிருஷ்ணன் வீட்டுக்கு வருவதாக கூறினாள்.இரண்டு நாள் வந்ததோடு சரி. அதன் பின் முக்கிய வேலையாக மும்பை சென்று இருந்தவர் மீண்டும் ஒரு வாரம் கழித்து அடுத்த  வெள்ளி கிழமை தான் வேலை முடித்து வந்து இருக்கிறார். 

இங்கே வீட்டில் வசுமதிக்கு இன்று வீக் ஆஃப் எடுத்து இருந்தாள். ரவி சாப்பிட்டு கொண்டே எங்கே டி உன்னோட தவ புதல்வன்? 

நீங்க பண்றது சரி இல்ல ரவி அவனை எல்லார் முன்னாடியும் திட்டி இருக்கீங்க! 

எப்போ? 

அதானே பார்த்தேன் இந்த முக்கியமான விஷயம் எல்லாம் உங்களுக்கு நினைவு இருக்குமா! 

இப்போ என்ன டி வேணும்? 

வசுமதி அவரை பார்த்து இனி அவனை தேவையில்லாமல் அப்சட் பண்ணாதீங்க.. 

ம்ம் பண்ணல இப்போ எங்கே இருக்கான்? 

வசுமதி அவரை திட்டி கொண்டே ராகவ்! ராகவ்! என்று சத்தமிட காக்கி உடையில் கம்பீரமாக நடந்து வந்தான். 

ரவி, இன்னிக்கு முக்கியமான ஒருத்தர் கூட டின்னர் சோ ரெண்டு பேரும் வந்திடுங்க. 

முடியாது.. என்று சொல்லி கொண்டே அவன் உடமைகளை எடுத்து கொண்டு செல்ல.. 

ரவி, டின்னர் பீச் ஹவுஸ்ல இல்ல இங்கே தான் நம்ப வீட்டில் கொஞ்சம் யோசித்து பாருங்க சார்! 

இன்பா கோபமாக அவரை பார்க்க ரவி இரு புருவமும் தூக்கி என்ன என்பதை போல் பார்த்தார். 

அவன் தரையில் கால் ஊன்றி கொண்டு வேகமாக கதவை நோக்கிச் சென்றான். 

ரவி, மதி DSP சார் வருவாரா! இல்ல என்று நிறுத்த.. 

வர்ரேன்!.. என்று அழுத்தி சொல்லி விட்டு சென்றான். 

வசுமதி, ரவி பீச் ஹவுஸ்ல என்ன இருக்கு? 

ம்ம் பீச் இருக்கு, அப்புறம் வீடு இருக்கு, கூட நீ இருந்தால்! எனக்கு இன்னும் நல்லா இருக்கும். போலாமா! 

அவள் இதை கேட்டு முறைத்து கொண்டே நான் வரல நீங்க போயிட்டு வாங்க என்று சொல்லி முறைத்து கொண்டே சென்று விட்டார். 

 அதன் பிறகு ரவி நேராக விவேகா கெபினுக்கு சென்றார். அவள் வேலையின் பரபரப்பில் இவரை கவனிக்க வில்லை. மே ஐ கம் இன் மேம்! யெஸ் கம் இன் என்று சட்டென்று திரும்பி பார்த்தாள். அங்கில்! என்று எழுந்து நின்றாள். ம்ம் உட்காரு மா.. 

இன்னிக்கு விவேகா மேடம்  ரொம்ப பிரைட்டா இருக்கீங்க? இன்னிக்கி வெள்ளிக்கிழமை அதனால் தான் சார் என்று அவள் சொல்ல வேலையில் பிசியாகி விட்டனர். 

ரவி, விவேகா… ம்ம் சொல்லுங்க அங்கிள் ! இன்னிக்கு ஈவ்னிங் ஒரு டின்னர் மீட்டிங் இருக்கு நீ கட்டாயம் வரனும். 

நானா! ஆபீஸ் விஷயமா அங்கிள் என்று அவள் யோசனையாக கேட்க.. இல்ல மா என்னோட வைஃப இன்ட்ரோ கொடுக்க போறேன். 

ம்ம் ஓகே அங்கிள் நானும் அவங்களை பார்க்கனும் யார் அந்த அதிஷ்டசாலி நிஜமாவே அவங்க   லக்கி பெல்லோ தான்.. 

இதை கேட்ட ரவி கண்ணகுளி தெரிய ஒரு சிரிப்பை உதிர்க்க அங்கிள் உங்க சிரிப்பு வேற லெவல் தெரியுமா! விவேகா திஸ் டூ மச் என்று சொல்லி ஈவ்னிங் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போலாம் உனக்காக வெயிட் பண்றேன். 

ம்ம் ஒகே அங்கிள் என்று சொல்லி அதன் பின்  வேலையில் மூழ்கினர்.ரவி, விவேகா நான் இவெனிங் பார்க்கிறேன் இப்போ எனக்கு இம்பொட்டன்ட் மீட்டிங் இருக்கு என்று சொல்லி சுபா பொறுப்பில் உள்ள கம்பனிக்கு சென்றார். 

மதிய உணவு இடைவேளையில் யாழினி கால் செய்தாள். விவேகா சிரித்து கொண்டே ம்ம் சொல்லு யாழ் எப்படி இருக்க! 

நீ ஊருக்கு வந்து இருக்க விஷயத்தை என் கிட்ட சொல்லவே இல்லை என்று அவள் கோபம் கொண்டாள். 

இல்ல டி ஒரு புராஜெக்ட்ல பிசி ஆகி விட்டேன். யாழ், சரி மீட் பண்ணலாமா? ம்ம் பண்ணலாம் நெக்ஸ்ட் வீக் கழித்து காலேஜ் வர போறோம் தானே இதை கேட்டதும் அவள் கோபம் கொண்டு என்ன விவேகா காலேஜ் ல தான் மீட் பண்ணனுமா வீட்டுக்கு கூப்பிட மாட்டியா!

ம்ம் அவ்ளோ தான வீட்டுக்கு வா! என்று விவேகா சொல்ல ம்ம் ஓகே அப்போ இந்த வாரம் சண்டே வீட்டுக்கு வரேன். 

விவேகா, ஹே நான் ஆதி வீட்டில் தான் ஸ்டே பண்ணி இருக்கேன். ஓ அப்படியா என்று தயங்கி கொண்டு இட்ஸ் ஒகே டி என்று வருத்தம் கொண்டு பேச.. 

உடனே அவள் இல்ல நீ வா யாழினி என்று சொல்லி விட உள்ளுக்குள் அவளுக்கு குற்றாலத்தில் குளிப்பது போல் இருந்தது. ம்ம் வரேன் என்று சொல்லி போன் வைத்தாள். 

அதன் பின் மதியம் கடகடவென்று ஓடியது. மாலை ஆனது அடுத்த ஷிஃப்ட் ஆட்கள் வர தொடங்கினர். விவேகா அவளுடைய இடத்தில் அமர்ந்து கொண்டு தேவிக்கு கால் செய்தாள். 

சொல்லு விவேகா ! 

அத்தை இங்கே எனக்கு முக்கிய மீட்டிங் இருக்கு அது முடித்து விட்டு சாப்பிட்டு தான் வீட்டுக்கு வருவேன். அதனால் எனக்காக நீங்க காத்திருக்க வேண்டாம். 

ம்ம் சரி நீ கிளம்பும் போது சொல்லு நான் மாமாவை அனுப்பி வைக்கிறேன். 

சரி என்று சொல்லி போன் வைத்தாள். ஒரு 6.30  இருக்கும் ரவி ஆபீஸ் வர அனைவரும் வணக்கம் சொல்லி வரவேற்றனர். 

விவேகா அங்கிள் போலாமா! 

ம்ம் போலாம் மா சீக்கிரம் வா! என்று அவர் முன்னே நடக்க அவள் ஒரு நிமிடம் அங்கிள் என்று ரெஸ்ட் ரூம் சென்று முகத்தை கழுவி கொண்டு பொட்டு சரியாக ஒட்டி கொண்டு அந்த கட்டப்படாத முடியை சரி செய்து ஒரு பக்கமாக போட்டு கொண்டு அந்த துப்பட்டாவை ஒரு பக்கம் போட்டு கொண்டு தன்னை தானே ஒரு முறை பார்த்து திருப்தி பட்டு கொண்டாள். 

விவேகா வெளியே வந்ததும் அங்கிள் போலாமா! ம்ம் லெட்ஸ் கோ என்று சொல்லி இருவரும் அந்த XYZ ரெஸ்டாரன்ட்டின் உள்ளே நுழைந்தனர். 

அந்த இடத்தை கொஞ்சம் பிரமிப்பாக பார்த்து கொண்டே விவேகா அவருடன் வந்தாள். ரவி, என்ன மா இது ஒன்னும் பெரிய இடம் இல்ல சாதாரண ஒரு இடம் தான் சோ உன் முகத்தில் இருக்கும் ஷாக் அதை கொஞ்சம் குறைச்சுக்க.. 

அப்படி இல்ல அங்கிள் என்று சொல்லி ஏற்கனவே பதிவு செய்ய பட்ட இடத்துக்கு வந்தனர். 

ரவி அவளிடம் மெனு கார்டை காட்டி ம்ம் உனக்கு பிடித்ததை ஆடர் பண்ணு மா.. 

இல்ல அங்கிள் மேம் வரட்டும்.. ரவி சிரித்து கொண்டே நான் ரொம்ப பங்க்சுவல் பட் என் மனைவியும், பையனும் அப்படி இல்ல லேட் பெல்லோஸ் இப்போ தான் வீட்டில் இருந்து கிளம்பி இருப்பாங்க.. சோ நீ ஆடர் பண்ணு நம்ம ஸ்டார்ட் பண்ணுவ்வொம்.. 

விவேகா அந்த மெனு கார்டை பார்த்து திறு திருவென்று முழிக்க ரவி, நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் இங்கே பனீர் டிஷ் சூப்பரா இருக்கும் வளர்ர பொண்ணு அதனால் புரோடீன் சாப்பிடணும் என்று சொல்லி சப்பாத்தி, பனீர் டிக்கா, மட்டர் பச்சை பட்டாணி வகை சப்ஜி என வட இந்திய உணவுகளாக சொல்ல விவேகா அவரை தான் பார்த்து கொண்டு இருந்தார். 

ஒரு சில நிமிடம் கழித்து ரவி அவளை பார்த்து மீல்ஸ் சொல்லட்டுமா சூப்பர் அங்கிள்! என்று சொல்ல இருவரும் வாய் விட்டு சிரிக்க அங்கே தூரத்தில் உள் ஒரு பெண் அவர்கள் இருவரையும் பார்த்து ஹே சந்திரன்! என்று ஆச்சரியமாக சொல்லி கொண்டே வந்தார். 

விவேகா, ரவி இருவரும் யார் என்று திரும்பி பார்க்க அங்கே ஒரு நடுத்தர பெண் ஒருவர் சிரித்து கொண்டே இவர்களை நோக்கி வந்தார்.

அவரின் வயது 48 ஆனால் அவரை  பார்த்தால் 35என்று சொல்லலாம் அவரின் உடை நடை முகத்தில் உள்ள அந்த ஒளி இதை எல்லாம் பார்த்தால் அப்படி தான் தோன்றும்.. 

ரவி உடனே கண்டு கொண்டு ஹனி! “அங்கிள் இவங்கள ஆன்டின்னு சொல்லவே முடியாது நான் தான் ஆன்டி மாதிரி இருக்கேன் உங்க ஜோடி பொருத்தம் சூப்பர்”. என்று சொல்ல

இது  அந்த பெண் மணியின்  காதுகளில் விழ அவர் சிரித்து கொண்டே  சந்திரன் யாரு இது உன்னோட டாட்டர் இன் லா வா! என்று சொல்லி கொண்டே அவரை நட்பாக கட்டி அணைத்தார். 

விவேகா இதை கேட்டதும் திடுக்கிட்டு பார்க்க ரவி, ம்ம் ஹனி அப்படி கூட வச்சுக்க என்று சொல்லி விட்டு விவேகா பக்கம் திரும்பி இது என்னோட க்ளாஸ் மேட் நேம் தேன்மொழி.. 

உடனே தேன் மொழி, ஹாய் பேபி சொல்ல போனால் நான் தான் உன்னோட ஆன்டி ஆகி இருக்கணும் நான் படிக்க போன கேப்ல உன்னோட அங்கிள் கல்யாணம் பண்ணி கொண்டார். 

விவேகா இதை கேட்டு வேறு வழி இல்லாமல் சிரித்து வைத்தாள். ரவி, சரி விடு ஹனி இப்போ கூட உனக்கு ஓகே வா சொல்லு நான் ரெடி தான்.. 

தேன் மொழி, போடா உன் டாட்டர் இன் லா  முன்னாடி உன்னோட இமேஜ டேமேஜ் பண்ணிக்காத.. என்று பேசி கொண்டு இருக்க.. 

வசுமதி அழைத்தார். ம்ம் நாங்க பார்க்கிங் ல இருக்கோம்.. அவன் வந்துட்டானா!.. ம்ம் என் பையன் உங்களை மாதிரி இல்ல..  ம்ம் சரி saruv உள்ளே வாங்க. 

விவேகாவுக்கு திடீரென்று சந்தேகம் தோன்ற அங்கிள் உங்களை எதுக்கு இவங்க சந்திரன் அப்டின்னு கூப்பிட்டார்கள்?  

அவர் பதில் சொல்ல திரும்ப உடனே வசுமதி போன் செய்தார். என்ன? என அவர் கேட்க.. நீங்க எங்கே இருக்கீங்க.. உள்ளே வா டேபிள் நம்பர் 10 என்று சொல்லி விட்டு வைக்க.. 

தேன் மொழி, யாரு டா உன் பொண்டாட்டியா! ம்ம் ஆமா ஹனி! என்று அவர் முகம் கலவரத்துள் மாறிட

உடனே அவள் சரி சரி இதுக்கும் மேல் இருப்பது நல்லது இல்ல நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு பாய் பேபி என்று சொல்லி விட்டு தேன் மொழி கிளம்பி விட்டாள்.

பேசி கொண்டே   போகும் பொழுது அவளுடைய பேர்ஸ் விட்டு சென்று விட்டார். 

அவள் வெளியே வர இன்பாவும் வசுமதியும் உள்ளே வந்தனர். தேன் மொழி இன்பா வை பார்த்து விட்டு ஹாய் நீ உன் டாடி போலவே ஸ்மார்ட்டாக இருக்க டா.. வசுமதி, யாரோ எவரோ என்று பார்க்க.. இன்பா, தங்ஸ் ஆன்டி.. 

வசுமதி யார் என்று சந்தேகத்தில் பார்க்க இன்பா, மாம் அவரோட க்ளாஸ் மேட் தேன் மொழி.. ஹாய் ஹலோ என்று வசுமதி வேண்டா வெறுப்பாக பேசி விட்டு உள்ளே செல்ல தேன் மொழி பாய் டா கண்ணா என்று சொல்லி விட்டு அவரின் டேபிளுக்கு சென்றார். 

எவ்ளோ திமிர் இவளை பார்க்க தான் என்னை வர சொன்னாரா என்று கோபத்தில் உள்ளே வசுமதி நடந்து வர

இன்பா, மா நீங்க தப்பா நினைப்பது போல் ஒண்ணுமே இல்ல மா!.. அவர் கிட்ட சண்டை போடாதீங்க! தாத்தா வீட்டுக்கு எல்லாம் கிளம்பி போக வேண்டாம்!. என்று தூண்டி விட்டு சிரித்து கொண்டே சென்றான். 

வசுமதி, நான் என் அப்பா வீட்டுக்கு போறேன் இனி எனக்கு என்ன வேலை! என்று சொல்லி கொண்டே அவர் உள்ளே நடந்து சென்றார். 

அந்த நேரம் விவேகா அங்கிள் ஒரு நிமிடம் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன் என்று சொல்லி உள்ளே செல்ல விவேகா செல்லவும் அவர்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது. 

மூவரும் பார்த்து கொள்ள வில்லை. வசுமதி பத்ர காளியாக அவர் முன் வந்து நின்றார். 

அடுத்து என்ன நடக்கும்? 

ம்ம் விவேகா – இன்பா – ரவி – வசுமதி சந்திப்புக்காக காத்திருங்கள்… 

தொடரும்….

இந்த episode உங்களுக்கு பிடித்து இருந்தால் comment பண்ணிட்டு போங்க.. 

Episode 240

 விவேகா ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன் என்று சொல்லி   செல்லவும் அவர்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது. 

மூவரும் பார்த்து கொள்ள வில்லை. வசுமதி பத்ர காளியாக அவர் முன் வந்து நின்றார். 

அந்த வெஜ் சூப் குடித்து கொண்டே போன் நோண்டி கொண்டு இருக்க.. வசுமதி அவரின் முன்னால் வந்து நின்றாள். இன்பா பின்னால் தந்திர புன்னகையை உதிர்த்து கொண்டே வந்து நின்றான். 

ரவி, என்ன மதி இவளோ லேட் என்ன பண்ணிட்டு இருந்த? ம்ம் உங்க கெஸ்ட்ட பார்த்து பேசிட்டு வந்தேன். 

ம்ம் அப்படியா சர்ப்ரைஸ் எப்படி இருந்தது. என்று பின்னால் இருக்கும் இன்பாவை பார்த்தார். 

இன்பா வேண்டும் என்றே ஹனிமூன் மீட்டிங் பற்றி முதலில் மாம் கிட்ட நீங்க சொல்லுங்க? வசுமதி கோபத்துடன் அவரின் எதிரே அமர்ந்து என்ன ஹனிமூன்! என்று கைகளை இறுக்கி மடக்கி சூடான மூச்சு காற்றை வெளி விட்டாள். 

ரவி அவனை முறைத்து விட்டு மதி நீ என்ன சொல்ற எனக்கு ஒன்னும் புரியல மா.. இன்பா தன் அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டே கண்ணாடியை கலட்டி விட்டு தேன் மொழி ஹனி அப்டின்னா நீங்க மூன் தான!… என்ன டா நாயே உலருற? என்று ரவி பற்களை கடித்தார்… 

இன்பா, மிஸ்டர் சந்திரன் உங்க ஹனியை இப்போ தான் அம்மாவும் நானும் பார்த்து விட்டு வந்தோம் என்று சட்டை  காலரை தூக்கி விட்டு கொண்டே கால் மேல் கால் போட்டு கொண்டு பின்னால் சாய்ந்தான். 

ரவி கொஞ்சம் நிதானித்து இல்ல மதி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அவன் பொய் சொன்றான் நீ நம்பாத டி !.. 

இன்பா, மாம்  நான் சொல்றது பொய் தான் அப்போ இந்த ப்பர்ஸ் யாரோடது லேடிஸ் திங்க்ஸ் மாதிரி இருக்கு.. 

வசுமதி அந்த பொருளையும் ரவியையும் மாறி மாறி பார்த்தாள். இது!  இது! என்று ரவி தயங்கி பார்க்க…

அந்த நேரம் சாரி ஃபார் டிஸ்டர்ப் யூ சந்திரன்! என்று சொல்லி கொண்டே தேன் மொழி வந்தார்.

ம்ம் சொல்லும் தேன் மொழி என்று தயங்கி கொண்டே அவர் பேச டேய் உனக்கு என்ன ஆச்சு? ஒன்னும் இல்ல வா! என்னோட பெர்ஸ் விட்டு போயிட்டேன்.

ம்ம் இது தான மேம் என்று வசுமதி காட்டிட ஒரு மினுக்களுடன் அவள் கைகளில் இருந்து பெர்ஸ் வாங்கி கொண்டாள். சரி சந்திரன் நான் போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு கிளம்ப விட்டாள். 

வசுமதி கோபத்துடன் அப்போ என் கிட்ட பொய் சொல்லி இருக்கீங்க உங்களுக்கு எப்பொதும் இதே வேலை தான் என்னால் இனி ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. என்று கண்களில் கண்ணீர் கோர்க்க

இன்பா, மாம் உங்களுக்கு நான் இருக்கேன். நம்ம ஒன்றாக இருக்கலாம் இவரை எதுவுமம் சொல்லாதீங்க இனி டைவர்ஸ் பண்ணா ஊர் தப்பா பேசும் அவர் அப்படியே ஒரு ஓரமா இருந்து விட்டு போகட்டும்… 

அந்த நேரம் வாஷ் ரூம் சென்று விட்டு விவேகா வந்தாள். அங்கில் அவங்க வந்தாச்சா! யார் அந்த லக்கி பெர்சன் என்று கேட்டு கொண்டே விவேகா முன்னால் வந்தாள். 

வசுமதிக்கு ஆச்சரியமாக பார்க்க விவேகா அதிர்ச்சியாக பார்த்தாள். ம்ம் வா மா நான் எப்போதும் லக்கி தான் ஆனால் உன் ஆன்டி தான் அன் லக்கி என்று விவேகாவை பார்க்க.. அவள் ஷாக் ஆகி மேடம் என்று அவள் அதே இடத்தில் நிற்க ரவி வா மா நீயும் நானும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டு கிளம்புவோம். 

விவேகா இன்பாவின் பார்வையை தவிர்த்து விட்டு என்ன ஆச்சு அங்கில்! சாரி சார் என்ன ஆச்சு சார்? என்று அவள் திக்கி திணறி கொண்டே கேட்க… 

என்ன சாரா! உன் கிட்ட பேச மாட்டேன் நான் மட்டும் போறேன்.. என்று அவர் எழுந்து கொள்ள ஸாரி அங்கில் இப்போ என்ன ஆச்சு?

அவள் பேச்சை காதில் போட்டு கொள்ளாமல் ரவி எழுந்து நின்று அருகில் உள்ள விவேகாவின் பேக் எடுத்து கொண்டு அவள் கைகளை பிடித்து கூட்டி செல்ல.. 

வசுமதி, விவேகா நீ எப்படி இங்கே? முதலில் இங்கே என்ன நடக்குது? இன்பா மனம் அப்போ இவள் தான் கெஸ்ட் போலயே நம்ம இவரை மாம் கிட்ட மாட்டி விட்டு விட்டோம். ஓ காட்! 

ரவி யின் மனம் இனி என் ஆட்டம் டா என்று நினைத்து கொண்டு எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் என்னோட கெஸ்ட் இவள் தான் விவேகா கிட்ட தட்ட என்னை போலவே கேரக்டர் சோ அதான் உனக்கு இன்ட்றோ கொடுக்க கூட்டி வந்தேன் ஆனால் நீ என்று நிறுத்தி விட்டு இன்பாவை ஒரு தந்திர பார்வை பார்த்து.. 

சில ரப்பிஸ்ட் பேச்சை கேட்டு என்னை…. என்னை சந்தேகம் பட்டு விட்டாய். இனி எனக்கு என்ன வேலை நான் கிளம்புறேன் முதலில் என்னோட கெஸ்ட கொண்டு விட்டு விட்டு நான் என்னோட வீட்டுக்கு போறேன். 

இதை கேட்டதும் வசுமதி ரவி பிளீஸ் சாரி எனை மன்னித்து விடுங்கள் நான் எதோ கோபத்தில் பேசி விட்டேன் என்று எழுந்து avr அருகில் சென்றாள். விவேகா உன்னோட அங்கில்க்கு சொல்லு மா..

அவள் மனம் என்ன டா நமக்கு வந்த சோதனை யார் கிட்ட நெருங்க கூடாது அப்டின்னு நினைக்கிறேனோ அவங்க கிட்டயே கொண்டு வந்து சேர்க்கிது. 

வசுமதி, விவேகா சொல்லு மா என்று அவர் சொல்லி ரவியின் கைகளை பிடித்து கொள்ள அவள் ஆமா  அங்கில் மேம் எவ்ளோ தூரம் சொல்கிறார்கள் நீங்க கொஞ்சம் மனசை மாற்றி கொள்ளுங்கள்.. 

இல்ல மா எனக்கு சலித்து போய் விட்டது நீ வா நம்ம கிலம்புவோம். விவேகா, அங்கில் எனக்காக பிளீஸ் வாங்க என்று அவள் கேட்க உடனே ரவி ஒரு முறை மூவரையும் பார்த்து விட்டு உனக்காக மட்டும் தான் இது எல்லாம் செய்கிறேன் என்று சொல்லி வந்து அமர்ந்தனர். 

ரவி! சாரி பிளீஸ் நான் இனி யார் சொல்வதையும் நம்ப மாட்டேன். என்று அவள் அவரின் முகத்தை பார்க்க

ரவி, ம்ம் அதையும் பார்க்கிறேன் என்று சொல்லி மெனு கார்ட் எடுத்து வைத்து விட்டு அந்த சைவ மீல்ஸ் இரண்டு ஆர்டர் செய்து அதோடு இன்னும் உணவுகளை ஆடர் செய்தார். 

விவேகா என்ன செய்வது எப்படி இது நடந்தது. உடனே இன்பா சொன்ன சில விஷயம் நினைவுக்கு வந்தது.

இன்பா  ஏற்கனவே சொல்லி இருக்கிறான் அவனுக்கும் அவனுடைய அப்பாவுக்கும் எப்பொழுதும் எழாம் பொருத்தம் தான் அப்போ இவர் தான் அவனுடைய அப்பாவா! அப்போ நானா வழிய வந்து தலையை கொடுத்து மாட்டி கொண்டனா! என்று அவள் குனிந்த தலை நிமிராமல் யோசித்து கொண்டு இருந்தாள். 

ரவி, என்ன விவேகா இப்படி சைலன்ட்டா இருக்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பட்டாசு மாதிரி இருந்தியே இப்போ என்ன ஆச்சு? 

அது வந்து ஒன்னும் இல்ல சார் சும்மா தான்! 

என்ன சார் சொல்ற அதுக்குள்ள  இப்போ என்ன ஆச்சு?

வசுமதி, ரவி வாயாடியை எப்படி தெரியும்! 

ஓ காட் யார் வாயாடி இவள் ஸ்மார்ட் கேர்ல் உனக்கு  தெரியுமா! என்று ரவி சொல்ல அப்படி எல்லாம் இல்ல மேம்.. 

வசுமதி, இவள் தான் உங்க கெஸ்ட் டா! 

ம்ம் ஆமா ரொம்ப திறமையான பொன்னு கிட்ட தட்ட என்னை போலவே போலீஸ் வாடையே ஆகாது தெரியுமா! 

யார் சொன்னது? என்று வசுமதி கேட்க நான் தான் பார்த்தேனே ஒரு ராஸ்கல் என் மேலே மோதி விட்டான். அவனை எனக்காக திட்டினாள். 

இன்பா அவளின் முகத்தை பார்க்க அவள் இம்மி அளவுக்கு கூட திரும்ப வில்லை. அங்கில் போதுமே என்னை பற்றி மேம்க்கு ஆல்ரெடி தெரியும். 

எப்படி? 

ம்ம் அது என் அண்ணா அங்கே தான் கோட்ர்ஸ்ல இருக்கான். 

என்ன சொல்ற மா? என்று ரவி ஷாக் ஆகி கேட்க.. 

வசுமதி, என்னங்க நான் கூட விவேகா பற்றி சொல்லி இருக்கேனே உங்களுக்கு நினைவு இல்லையா! நீங்க கூட பார்க்கனும் அப்டின்னு சொன்னீங்க அவள் தான் இவள்!

இல்லையே எனக்கு நியானகம் இல்லையே! 

வசுமதி, என்னங்க அன்னிக்கு கூட இவள் மிஸ் ஆகி ராகவ் தான கூட்டி வந்தான். 

விவேகா கண்களை மூடி தலைக்கு கை வைத்து போச்சு சோலி முடிஞ்ச்சு என்று நினைக்க

ஓ என்னால் என்னால் நம்பவே முடியலை அந்த பொண்ணு நீ தானா என்று ரவி எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் சொன்னார். 

விவேகா, அங்கில் உங்க பேர் என்ன என்று அவர் காதுக்கு அருகில் கேட்க.. 

அவர் சிரித்து கொண்டே என் பேர் ரவிச்சந்திரன்.. என்ன மா தெரியாத மாதிரி கேட்கிற.. 

அப்போ அன்னிக்கு டிரெயின்ல நளன் அப்டின்னு சொல்லி கூப்பிட்டார்கள். என்று அவள் சந்தேகமாக வினவ.. 

அவர் சிரித்து கொண்டே அது என் அப்பா பேரு என்னை காலேஜ் ல எல்லாரும் அப்படி தான் கூப்பிடுவாங்க.. 

வசுமதி, என்ன அங்கே ரெண்டு பேரும் ரகசியம் பேசுறீங்க! 

அது ஒன்னும் இல்ல மதி என்று சொல்ல.. 

அதற்குள் ஆடர் செய்ய பட்ட உணவுகள் வந்தது. 

வசுமதி, சரி இப்போ எப்படி விவேகா வை தெரியும் இவளும் உங்களை பார்க்கனும் அப்டின்னு ரொம்ப ஈகரா இருந்தாள் தெரியுமா! 

ரவி, அது ஒன்னும் இல்ல அந்த உன் தவ புதல்வன் கம்பனியில் தான் இப்போ ஜாயின் பண்ணி இருக்கா ஒரு பேங்கிங் புராஜெக்ட் போயிட்டு இருக்கு அண்ட் டிரெயின்ல மீட் பண்ணோம். என்னை மாதிரி போலீஸ் பிடிக்காதே அதான் சம்திங் ஸ்பெசல் உன் கிட்ட இன்ட்றோ கொடுக்க தோணிச்சு.. 

இதை கேட்டதும் இன்பா காதுகளில் தேன் வந்து பாய விவேகா, அங்கில் என்ன சொல்றீங்க நான் ஜாயின் பண்ணி இருப்பது உங்க கம்பனி தானே! என்று அவர் காதுக்கு அருகில் கேட்க.. 

ம்ம் என் கம்பனி தான் மா ஆனால் அதுக்கு லீகளா வசுமதி பையன் தான் ஓனர்!

என்று சொல்லி ரவி மீட் மிஸ்டர் R. இன்ப ராகவன் அண்ட் வசுமதி ரவிசந்திரன் அண்ட் நான் N. ரவி சந்திரன்.. 

வசுமதி சிரித்து கொண்டே என்ன ரவி அவளுக்கு முன்னாடியே எங்களை தெரியும். மேடம் தான் அந்த பக்கம் எட்டி கூட பார்ப்பது இல்லை. 

அவள் பேச வருவதற்கு முன் ரவி, ம்ம் சரி தான் ஆனால் என்னோட மனைவியா உன்னை தெரியாதே! 

விவேகா, மேடம் அப்படி இல்ல எனக்கு நிறைய வேலை இருக்கு அதான் வர முடியல அங்கே அண்ணா வீட்டுக்கு கூட வர டைம் இல்ல.. 

வசுமதி, ராகவ் என்ன அமைதியா இருக்க எதுவும் பேசு.. 

ரவி, அவனே அமைதியா இருக்கான் இப்போ தான் சுத்தமான சுதந்திர காற்றை என்னால் சுவாசிக்க முடியுது இப்போ எதுக்கு டி அவனை பேச சொல்ற.. 

இன்பா இதை கேட்டு முறைக்க  விவேகா, சிரித்தாள். ரவி, என்ன விவேகா சிரிக்கிற அப்போ நான் சொல்றது சரி தானே.. 

அவள் அங்கில் சொன்னால் சரி தான் நான் எப்போதுமே உங்க பக்கம் தான் அங்கில் என்று அவள் பேச 

ரவி அழகாக புன்னகைத்தார். 

உடனே விவேகா, ச்ச இந்த சிரிப்பு இந்த கண்ணக்குழி வேற லெவல் அங்கில் உங்க பக்கத்தில எவனும் நிற்க முடியாது. எவ்ளோ ஸ்மார்ட்டாக இருக்கீங்க. 

வசுமதி, வாயாடி என்ன அவரை போய் வர்ணிக்கிற.. 

விவேகா, மேம் நீங்க ரொம்ப லக்கி தெரியுமா இவரு ரொம்ப யுனிக் அண்ட் சொல்ல வார்த்தை இல்ல.. 

இதையெல்லாம் கேட்க கேட்க இன்பாவின் முகம் மாறியது.. சட்டென அவன் எழுந்து நின்றான். விவேகா அவனை கண்டு கொள்ள வில்லை அதற்குள் ரவி அவர்களுக்காக ஆடர் செய்த அசைவ உணவுகள் வர.. 

ரவி, க்கும் DSP சாரை சாப்பிட்டு போக சொல்லு.. மாம் எனக்கு வேண்டாம் வேலை இருக்கு.. 

வசுமதி அவனை பார்த்து இப்போ எதுக்கு இவளோ கோபம் உட்காரு ராகவ் கண்ணா! 

ரவி புருவம் நெருக்கி கொண்டே என்னோட கெஸ்ட்ட அவமான படுத்துகிறான் டி உன் பிள்ளை.. 

இன்பா, இவள் எல்லாம் ஒரு ஆளு இவளை நான் அவமான படுத்துறேன்.. 

விவேகா ரவியை பார்த்து விடுங்க அங்கிள் போகட்டுமே இப்போ என்ன நம்ம சாப்பிடுவோம். 

வசுமதி, என் பையனை எதிர்க்க ஆள் கூட்டு சேர்த்து கிட்டு இருக்கீங்களா! நீ உட்காரு ராகவ் கண்ணா! என்று கைகளை பிடித்து அமர வைத்தாள். 

இன்பாவின் மனம் இவளை சும்மா விட கூடாது வலுவாக இன்னிக்கு கவனிச்சு அனுப்பணும். என்னை எதிர்க்கும் ஆள் கூட தான் கூட்டு சேர்ந்து இருக்கா.. என்று நினைத்து கொண்டு அவனது போனை எடுத்து எது எதோ செய்தான்.

ஒரு சில நிமிடங்களில் விவேகா எண்ணுக்கு செய்திகள் மூன்று எண்களில் இருந்து தொடருந்து வந்த வண்ணம் இருக்க.. அவள் எடுத்து பார்த்தாள். அத்தனையும் அவனின் கை வண்ணம் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படம் மற்றும்

அன்னிக்கு என்ன வாய் பேசின!  இனி மொத்தத்துக்கும் அவுட் புட் தர போறேன்!  அதற்கு கீழ் இன்னிக்கி செம்மயா இருக்க டி! நல்லா சாப்பிட்டுக்க இனி தான் என் தான் எல்லாமே  ஆரம்பம்.. இதையெல்லாம் படித்த அவளுக்கு புரை ஏறியது. அவளது பார்வை மழையில் நனைந்த வெட கோழி போல் இருக்க 

ரவி, என்ன ஆச்சு மா எதுக்கு உன் முகம் இப்படி படபடப்பாக இருக்கு.. 

நத்தின்க் அங்கில்! 

நாட்டுக்கோழி பள்ளிபாளையம் ஸ்பெசல் வந்ததும். மாம் இந்த லெக் பீஸ் ரொம்ப டேஸ்டா இருக்கு என்று மெதுவாக ருசித்தான். ம்ம் சாப்பிடு ராகவ் என்று அவனுக்கு பரிமாறினாள். 

வசுமதி, என்னங்க இது டேஸ்டா இருக்கு கொஞ்சம் டிரை பண்ணுங்க இது உங்களுக்கு பிடிக்குமே! 

இன்னைக்கு வெள்ளி கிழமை சோ எனக்கு வேண்டாம்! வசுமதி, விவேகா நீ கொஞ்சம் வாங்கிக்க வைக்கட்டுமா? 

விவேகா, இல்ல மேம் அங்கில்  போல  நானும் இன்னிக்கு சாப்பிட மாட்டேன்.  

மாம் நீங்க சாப்பிடுங்க இது எல்லாம் சாப்பிட்டால் தான் மனுசங்க வசுமதி, அப்போ இவங்க ரெண்டு பேரும்? 

ம்ம் அணிமல்ஸ் மாம் ஒன்னு ஏஜ்ட் அனிமல் இன்னோன்று ஹென் சிக்கன் மாம்.. 

வசுமதி சிரித்து விட ரவி, அவன் ஒரு மாதிரி மா நீ விட்டு விடு என்று சொல்லி நால்வரும் சாப்பிட்டனர். 

வசுமதி மெதுவாக சாப்பிட ரவி மதி கொஞ்சம் ரசம் சாப்பிடு என்று ஊற்றி பரிமாற விவேகா, அது என்ன அங்கில் மதி!

ரவி, அது சும்மா சிம்பிளா கூப்பிடலாம் தானே வசுமதி ரொம்ப பெருசா இருக்கே அதனால் தான் என்று இருவர் முகமும் கொஞ்சம் வெட்கத்தில் மாறியது.. 

 விவேகா இதை பார்த்து  ரொம்ப கியூட்டா இருக்கே நீங்க எது பேசினாலும் அழகா இருக்கு.. 

ரவி உடனே ம்ம் இது டூ மச் உன்னோட ஆன்டி போலீசா இருந்து பொண்ணா மாறிக்கிட்டு வரா.. 

விவேகா சிரித்து கொண்டே எனக்கு வயிறு ஃபுல் நான் ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வரேன்.. என்று எழுந்து சென்றாள். 

ஒரு சில நொடிகளில் அங்கே சர்வர் வந்து தண்ணீர் பவுல் கொடுக்க அதில் கை கழுவியவன். வேகமாக கைகளை துடைத்து கொண்டே ரவி, வசுமதி இருவரையும் பார்க்க அவர்கள் இப்பொழுது வேறு உலகத்தில் இருந்தனர். ரவி அவளுக்கு ஊட்டி விட இது தான் சமையம் என்று எழுந்து சென்றான். 

விவேகா வெளியே வந்தவள் இவனை பார்த்ததும் இப்பொழுது என்ன செய்வது என்று திக்கு தெரியாத கோழி போல் அவனிடம் மாட்டி கொண்டாள். 

ம்ம் என்று இன்பா அவளை பார்த்து இரு விரல்களை காட்டி உன்னை நான் வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கேன் டி என்று காட்டி கொண்டே அவளை நோக்கி வந்தான். 

விவேகா…?

தொடரும்… 

You may also like

Leave a Comment