அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள்

by Pradhanya kuzhali
16 views

promo

அந்த திருமண மண்டபத்தில் இருக்கும் அத்தனை பேரின் பார்வையும் அதர்வனின் மீது தான் படிந்திருந்தது. அங்கே மணப்பெண் கோலத்தில் நின்றிருந்த சசிரேகாவின் கண்களில் மளமளவென கண்ணீர் சரிந்து விழ ஆயத்தமாக இருந்தது. ஆம் சசி ரேகாவின் உயிருக்கு உயிரான காதலன் அதர்வன் இப்பொழுது அகிம்சாவின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

சசி ரேகா!! இன்னும் எதுக்கு இங்கே நின்னுட்டு இருக்க? அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே!! வா வீட்டுக்கு போலாம். இனி நீ இவனோட பேர எடுக்க கூடாது. இன்னிக்கி இப்போவே trending time broadcast ல இருந்து நீ எல்லாத்தையும் தூக்கி போட்டு வந்திடு. என உரக்க கத்தினார் அவளின் தந்தை கிருஷ்ணமூர்த்தி. 

அவரின் கத்துதலில் அங்கிருந்த உறவினர்கள் அனைவரும் அகிம்சாவை கேவலமாக பார்த்து விட்டு அதை விட இன்னும் கேவலமாக அதர்வாவை பார்த்து அவர்களுக்குள் திடீர் கல்யாணத்தை பற்றி பேசி கொண்டிருக்க, அதர்வாவின் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. எங்கிருந்து முளைத்தாள் அகிம்சா என்பவள்? யார் இவள்? இவளை அதர்வன் காதலித்து ஏமாற்றி விட்டானா? அதை விட இந்த திடீர் கல்யாணம் பேரடியாக இருந்தது. 

அகிம்சா அவளின் கழுத்தில் இருந்த தாலியை அதிர்ந்து பார்த்தவள் வேகமாக அங்கிருந்து நகர்ந்து செல்ல முற்பட, இன்னொரு பக்கம் சசி ரேகாவின் கைகளை பற்றி கிருஷ்ணமூர்த்தி இழுத்து செல்ல, ரேகா நில்லு பேபி என கத்தியபடி வேகமாக வேட்டியை மடித்து கட்டினான். 

அதர்வன் சட்டென அகிம்சாவின் கையை ஆவேசமாக பற்றியவன். ரேகா நில்லு பேபி என அந்த அரங்கமே அதிருபடி கத்தியவன். இப்பவும் சொல்றேன். என்னோட லவ் நீ மட்டும் தான்.. நான் இவளை விவாகரத்து பண்ணிட்டு உன்னை தான் கட்டுவேன். நீ என்னோடவ சசி!! என்று அந்த இடமே அறியும்படி கத்தியிருந்தான். Trending Time groupன் முதலாளி சூர்ய நாராயணனின் தவ புதல்வன் அதர்வன். 

அதர்வா என பற்களை கடித்தபடி அவனது தந்தை அதட்டிட, அகிம்சா வேகமாக கையை உதற பெரும்பாடு பட்டு கொண்டிருந்தாள். 

சசிரேகா..? 

அதர்வன்..? 

அகிம்சா..? 

எதற்காக இந்த திருமணம்? அகிம்சா யார்? அதர்வன் அகிம்சா இருவருக்கும் நடுவில் என்ன? சசி ரேகா? 

ஹலோ wait wait இந்த சசிரேகா name எங்கேயோ கேட்ட போல இருக்கே? ஹான் சமரன் story.. 

Yes சமரன் story தான் சமரன் friend சசிரேகா. அப்போ இந்த அதர்வன்? அவன் ஆதிக்கு ஃப்ரெண்ட் அப்புறம் சமரனுக்கு எதிரி. 

இதுவும் connected story தான். 

வன்மத்தின் உச்சம் நீயடா 

Writer pradhanya Kuzhali 

விரைவில்.. 

You may also like

Leave a Comment