Episode 201
இன்பா நேராக கிருஷ்ணன் வீட்டுக்கு சென்று ஆசிர்வாதம் வாங்கி விட்டு நேராக மதிவாணன், வென்மதி வீட்டுக்கு சென்று விட்டு அவனுடைய வீட்டுக்கு வந்தான்.
தன் அம்மாவின் பிடிவாதத்தில் நளன் தமயந்தி வீட்டுக்கு சென்று வந்தான். தமயந்திக்கு மிகவும் சந்தோஷம் அவனை ஆசிர்வதித்து கட்டி கொண்டார்..
இன்பா கண்ணா இனி பாட்டியை பார்க்க வருவியா..
நீங்க தாத்தாவை விட்டு என் வீட்டுக்கு வந்து விடுங்கள். நான் உங்களை பார்த்து கொள்கிறேன். அப்படி பேச கூடாது கண்ணா.. எனக்கு அவரையும் பிடிக்கல உங்க பையனையும் பிடிக்கல இதை கேட்டு தமயந்தி முகம் சோகமாக மாற..
இன்பா, ஆனால் என் தமயந்தியை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஓகே சொன்னா இப்போவே பிக் அப் பண்ணிக்கவா..
நளன், டேய் இங்கே வா..
நான் ஒன்னும் உங்களை பார்க்க வர்ல..
திமிர் இருக்கணும் தான் ஆனால் இந்த அளவுக்கு வேண்டாம் கொஞ்சம் குறைத்து கொள்..
ம்ம் பார்க்கலாம்
இட்ஸ் ஓகே இந்தா வாங்கிக்கோ என்னோட பர்த் டே கிஃப்ட் என்று பெங்களூரில் மூன்று appartment வீட்டின் பத்திரம் கொடுக்க..
என்ன இது..
நளன், இது உனக்கு தான் அடிக்கடி பெங்களூர் வேலை போய் வர போல
இன்பா, இதில் மூணு பத்திரம் இருக்கு,ஆனால் ஒரு சாவி தான் இருக்கு..
நளன், அது நீ ஸ்டே பண்ண மற்றது ரெண்டு வீடும் ரெண்ட்டுக்கு இருக்காங்க..
ஹவ் மச்..
நளன், ம்ம் அப்பனுக்கு தப்பாமல் பொறந்து இருக்க “some crores”
இன்பா, ம்ம் cool ஓகே என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தவன்
வசுமதி, சுபா கிட்ட கொஞ்சி கொண்டு வாழ்த்து வாங்கிய அவன் மனம் ஹேய் டார்ஜ்லிங்க் நீ மட்டும் தான் எனக்கு விஷ் பண்ணல அண்ட் ஒரு கொஞ்சல் கூட இல்ல என்று நினைத்து ஆதிக்கு கால் செய்தான்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் என்று கூறி விட்டு இன்பாவிடம்
“சாஷ்டாங்கமாக வாழ்த்து சொல்லி விட்டு பின் சார் இனி அவள் கிட்ட பேசிட்டு எனக்கு கால் பண்ணுங்க இல்லன்னா என் கிட்ட பேச மாட்டா” என்னோட கால் லாக்ஸ் எல்லாம் செக் பண்றா..
இதற்கு அவன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இட்ஸ் ஓகே நான் பெங்களூர் போயிட்டு வந்து பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி கிளம்பினான்.
அப்போது hai guys என்று பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது
யார் என்று அனைவரும் திரும்பி பார்க்க ஆனால் சூர்யா மட்டும் திரும்ப வில்லை
சஞ்சனா ஓடி சென்று அவனை அணைக்க செல்ல
இன்பராகவன் IPS- கொஞ்சம் கூட விறைப்பு குறையாமல் stop it சஞ்சனா என் பக்கத்தில் வராத
ஏன் டா கோபபடற நீயும் என்ன புரிந்தது கொள்ள மாட்டியா என்று அழ
ராம்,விடு இன்பா அவ life சம்மத பட்ட ரெண்டு பேரும் accept பண்ணிகும்போது நமக்கு என்ன அண்ட் இதெல்லாம் நடந்து வருஷம் ஆச்சு விடு என்று கூற
இன்பா-அப்படியே சரி என்று விட்டான்.
சஞ்சனா,ராம் எங்கே சுபா வரலயா அவன் கிட்ட கேட்டு சொல்லு…
இன்பா அதே விறைப்புடன் ராம் விக்ரம் சார் என்னை கூப்பிட்டாரு நான் வந்தேன் தட்ஸ் ஆல்..
சஞ்சனா, அப்போ சுபா..
இன்பா, நான் ஒன்னும் சுபா இல்ல என்று சொல்லி அங்கு இருந்து நகர..
விக்ரம், ஹே விடு சஞ்சு நாளைக்கு சுபா ஏர்போர்ட்டுக்கு வரென்னு சொல்லி இருக்கா..
இவ்வளவு தூரம் வந்ததே சூர்யாவை பார்க்க தான் ஆனால் அவன் இன்பனை கண்டு கொள்வதாக தெரிய வில்லை.
மகிழினிக்கு இன்பாவை பார்த்ததும் ஒரே குஷி
மகிழினி- சார் நீங்கள் தானே அது இன்பராகவன் IPS ஆ அவர் தானே ஹே மை விழி இங்க பாரு இன்பா சாரு நான் அண்ட் ஒரு நிமிடம் belated happy birthday sir..
ம்ம் thanks மா.. மான் விழி, என்னோட sister மை விழியும் உங்களோட பெரிய விசிறி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் என்று மகிழினி இன்பனை பார்த்து பேசிக்கொண்டு செல்ல ம்ம் உங்களுக்கு ராம் அண்ணாவை தெரியுமா?
அங்கு இருந்த அனைவரும் மகிழினியை தான் பார்த்தனர். இவள் இவ்வளவு பேசுவாளா! என்று இருக்க
ராம் இன்பாவின் காதில் இது தான் சூர்யாவின் மனைவி என்று கூற கொஞ்சம் சிரித்தான்.
அவள் சார் எதுவும் பேசுங்க என்று அவள் கண்களை உருட்டி உருட்டி பேசி கொண்டு இருக்க
இன்பா, ok மா thanks for your blessings கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமா
மகிழினி- ரகுவை வேறு இடம் போக சொல்லி விட்டு இன்பாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.சார் நான் ஒரு போட்டோ உங்க கூட எடுத்துக்கலாமா
இன்பா சூர்யாவை பார்த்து கொண்டே ம்ம்ம் sure என்று ஒரே selfie களை எடுத்து தள்ளினர் மை விழி நீயும் வா என்று அவளும் மிக சந்தோஷமாக போட்டோ எடுத்து கொள்ள..
இன்பா, நம்ப போட்டோஸ் எடுப்பது இங்கே சில பேருக்கு ரொம்ப ஜலசா இருக்கு போல..
சார் என்ன சொல்றீங்க..
ஒன்னும் இல்ல வா மா நம்ப போட்டோஸ் எடுப்போம்..
இங்கு இருவருக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. அது வேறு யாரும் அல்ல சூர்யாவும், கார்த்திக்கும் தான்
இன்பா-உங்க name என்ன என்று அவன் கேட்டது தான் தாமதம்
மகிழினி-என்னோட name மகிழினி வசந்தன், நான் உங்களோட பெரிய விசிறி உங்களோட கேஸ் ஸ்டோரி படித்து இருக்கேன், உங்களுக்கு ரொம்ப பிடிச்சது உங்க அம்மா தான் அப்புறம் உங்க அக்கா நீங்கள் படிச்ச காலெஜ் டெல்லி என்று அவனை பத்தி புட்டு புட்டு வைத்தாள்.
சூர்யா-m. v) அவனை பத்தி இப்டி புட்டு புட்டு வைக்கறாளே புருஷன் அப்டின்னு இங்கே ஒருத்தன் இருக்கானு அவளுக்கு தெரியுதா இல்லயா னு தெரியலையே
உங்களுக்கு மனைவியா வர போற பொன்னும் IPS ஆ இருக்கணும் னு நீங்க ஆசை படுறீங்க,இப்போ ஏதோ ஒரு name கண்ணுகினியாள் என்ற பொண்ணு உங்க பின்னாடி சுத்துது அது கூட உங்க அக்கா ரிலசன் எல்லா போட்டோஸ்ம் FBல பார்த்தேன்.
இன்பா-இன்பாவிர்க்கு கண்ணுகினியாள் பெயரை கேட்டதும் அவளின் நினைவு வந்து விட்டது வேறு யார் விவேகா தான் .
இன்பா இந்த பேச்சை வளர்க்க பிடிக்காமல் உடனே அவன் போதும் மகிழினி உங்க husband என்ன பண்றாங்க உங்க life பத்தி சொல்லுங்க
மகிழினி-இப்போது அமைதியானாள். எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, சக்தினு எனக்கு ஒரு மகன் இருக்கான் என்று கூறினாள்
இன்பா-மை விழியை பார்த்து நீங்கள்
“எனக்கு இப்போ தான் திருமணம் ஆச்சு என்னோட husband கார்த்திக் இவர் தான் என்று கூற கார்திக் ஸ்நேகமக புன்னகைத்தான்”
இன்பா- அப்புறம் நம்ப ஊர்ல நீங்க எந்த இடம் என்று கேட்க
SPR காலேஜ் பக்கத்தில் , அங்கே தான் மை விழியும் நானும் படிச்சோம் என்று கூற
இன்பா- அவன் மனதில் ஒரு அதிர்வு அதை மனதில் குறித்துக்கொண்டான். எதோ பொறி தட்டியது அவளை உற்று பார்த்தான். அதன் பின் வேறு விஷயம் அவள் பேச அதில் கவனம் செலுத்தினான். இப்போ தான் அவள் வாய் ஒயிந்தது.
சூர்யா இன்பா பக்கம் திரும்பவே இல்லை அதில் கடுப்பான இன்பா” மச்சி ஓவரா சீன் போடாத உடம்புக்கு ஆகாது “
இன்பா யாரை சொல்கிறான் என்று ஆதி, மகிழினி, மை விழி, கார்த்திக் பார்க்க
இன்பா- ஏய் ஒரு தடவை தான் டா கூப்பிடுவேன் இல்ல இப்போவே நான் கிளம்பிடுவேன்.
அப்போது சூர்யா அவனை பார்க்க
இன்பா-சூர்ய தேவ் என்னை பார்க்க இவ்ளோ நேரமா என்று கூற..
சூரியா, நீ இத்தனை வருஷம் எடுத்துக்கும் போது நான் இவ்வளவு நேரம் எடுத்துக்க கூடாதா.. மிஸ்டர் இடியட்..
இப்போது மகிழினி, ஆதி, கார்த்திக், மை விழி அதிர்ந்தனர்.
மகிழினி க்கு தூக்கி வாரி போட்டது.அவளுக்கு இன்பா சூர்யாவை கூப்பிட இவ்ளோ close ஆஅ என்று ஒரே அதிர்ச்சி..
இன்பா- சூர்ய தேவ் நான் தான் உன் மேல கோவாமா இருக்கேன் என் கிட்ட சீன் போடாத டா என்று எழுந்து நின்றான்
சூர்யா- அவனை முறைத்து விட்டு உனக்கு இப்போ தான் என்கிட்ட பேச தோணிச்சா
இன்பா-உனக்கு அது கூட தோணாலயே
சூர்யா-ஹேய் இடியட் இன்பா என்று அவன் அருகில் சென்று இருவரும் கட்டி கொண்டனர்
இன்பாவின் நட்பு வட்டங்கள் இதுக எப்போதும் இப்படி தான் என்று கண்டு கொள்ள வில்லை.
இன்பா, என்ன மா எங்கே போற என்று அவளை பார்த்து கேட்க அது அது வந்து நீங்க பேசிட்டு இருங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லி அவள் ஓடி விட
என்ன மச்சி பண்ண உன்னை பார்த்ததும் பறந்து போய் விட்டாள். நீ அவளை விடு உன் கதையை சொல்லு..
உனக்கு எப்படி தெரியும் ரவி சொன்னாரு..
வாட் அவர் உன் கிட்ட சொன்னாரா.. ஹே என்ன டா நானும் ரவியும் ரொம்ப க்ளோஸ் தெரியுமா.
இருந்திட்டு போ என் கிட்ட சொல்லாத..
ஹே ஓவரா போற..
போடா என்று இன்பா அமைதி ஆகி விட
சூர்யா, சரி சொல்லு என்ன பிரச்னை
அது அது..
ஹே அவள் பேரு கண்ணுக்கு மை அது தான..
இன்பா-அந்த பொண்ணு இல்ல டா அவ பேரு
சூர்யா-அவ பேரு கொஞ்ச நேரம் கழித்து சத்தியமா சகிக்கல தயவு செஞ்சு சொல்லு
இன்பா-விவேகா டா அவ தேன் மிட்டாய் டா.. பட் இப்போ ஆரஞ்சு மிட்டாய் மச்சி
எந்த மிட்டாயோ அதில் என்ன பிரச்னை..
விவேகா தான் மச்சி என்னோட பிரச்சினை எல்லாம் எல்லா பொன்னும் என் பின்னாடி சுத்த இவ என்ன avoid பண்ணா
அப்புறம் ஆதித்யான்னு ஒருத்தன் அவ மாமன் பையன் அவன் கூடவே தான் மச்சி இருக்கா any time என்னால முடியல டா அதுக்கு அப்புறம் இப்போ அருண் அவன் இப்போ தான் அடங்கி இருக்கான். கொஞ்சம் கொஞ்சமாக விவேகா மனச மாத்தி ips க்கு prepare time ல அந்த பொண்ணு கண்ணுகினியாள் எல்லார் முன்னாடி propose பண்ணிடுச்சு நான் accept பண்ணல அவ என்ன தப்பா புரிஞ்சுகிடா மச்சி.. இப்போ மாம் கிட்ட எப்படி நான் போலீஸ்சா இருக்க பொண்ணை லவ் பண்ணல அவன் அண்ணன் தான் போலீஸ்சா இருக்கான் அப்டின்னு எப்படி சொன்றது.
சூர்யா-உனக்கு IPS ஆ இருக்க பொண்ணு வேணுமா விவேகா வேணுமா
இன்பா-எனக்கு விவேகா தான் வேனும்
சூர்யா- அப்போ உன் முடிவில் இருந்து மாறாத டா அவ நிச்சயம் கெடைப்பாள்.
அவளை என்னால் அடக்க முடியல டா என்ன என்ன சொல்றா தெரியுமா அப்புறம் உங்க status வேற உங்க பக்கத்தில் இருக்க தகுதி இல்ல இப்படியெல்லாம் சொல்றா டா..
சூர்யா, நீ சொல்லு நாம்ப love state ல இருக்கோம் இதுக்கு தகுதி தேவை இல்லை னு
இன்பா- இப்போ தான் மச்சி எனக்கு கொஞ்சம் நல்லா இருக்கு..
சூர்யா, விவேகாவ நீ சும்மா விட்டு இருக்க மாட்ட எதாச்சும் வேலை செஞ்சிருப்ப சொல்லு முழுசா சொல்லு என்ன வேலை பண்ண சொல்லு..
இன்பா-நீ வேற மச்சி நீ கல்யாணம் பண்ணிட்டு எல்லாம் முடிச்சு இப்போ லவ் பண்ற .நான் என்ன நெனைக்கிறேன் அப்டிங்கறது கூட புரிஞ்சுக்க மாடிக்கிறா டா..
சூரியா, யாரு நான் லவ் பன்ற மாதிரியா தெரியுது எப்போ பார்த்தாலும் என்னை தவறா புரிந்து கொள்வது மட்டும் தான் அவளுக்கு வேலை.. சரி அதை விடு நான் கூட சாதாரணமா தான் நினைத்தேன் ஆனால் நீ ஃபுல் form ல தான் இருக்க உன்னையே சுத்த விடுறா அப்படின்னா she is very brillient.. அப்புறம் வேற என்ன என்ன பண்ண..
இன்பா-கொஞ்சம் non veg ஆ அப்போ அப்போ சீண்டுவேன்..
சூர்யா-அது தானே பார்த்தேன் அந்த பொண்ணு பாவம் பார்த்து மச்சி அப்புறம் அவுட் புட் வந்துட போகுது..
நீ ரொம்ப பண்ணாத நீ எவ்ளோ கேடி னு எனக்கு தெரியும் உனக்கு தான் இப்போ licence இருக்கு அப்போ சொல்லவா வேனும். டெய்லியும் மஜா தான்..
டேய் ***
இன்பா, இப்போ தான் மச்சி காது நல்லா இருக்கு இன்னொரு முறை சொல்லு..
மச்சி கம்முனு இரு டா..மகி வரா டா கொஞ்சம் silent ஆஅ maintain பண்ணு..
மகிழினி இன்பாவைப் அண்ணா சாப்பிடுங்க ஏதோ உங்களுக்கு பிடிச்சது எனக்கு தெரிஞ்சது எடுத்து வந்திருக்கேன் என்று சொல்ல கூடவே ஆதியும் வந்தான்.
ஆதி-உங்களுக்கு எப்படி தெரியும் சூர்யா அண்ணாவை
இன்பா- நானும் சூர்யாவும் காலேஜ் mate என்ன பத்தி யாரும் பேசி இருக்க மாட்டாங்க இந்த 5 years கழித்து இப்போ தான் பேசறோம் அதுவும் நான் தான் பேசறேன்
அப்போ கூட இவன் இந்த IPS கிட்டவே attitude காமிக்கிறான் என்று கூற இவன் என்கூட IPS ஆக வேண்டியது ஆனால் என்னோட professional க்கு தான் போவேன் ன்னு என்ன விட்டு விட்டு போய்ட்டான்
ஆதி-ஓ அப்படியா நீங்கள் பேசுங்க சார் என்று கூறிவிட்டு மகி வா நம்ப போலாம் என்று கூற
இன்பா-என்ன மகிழினி இப்போ தான் பார்ட்டி ஸ்டார்ட் ஆகி இருக்கு அதுக்குள்ள கெளம்புரிங்க
மகிழினி, என் அண்ணா இப்போ தான் கால் பண்ணாங்க சார் என்னோட husband சக்தியை அப்பா கிட்ட விட்டு வந்திட்டாரு so அது தான் இப்போ கிளம்ப போறேன்.
இன்பா-இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போங்க.. அவள் தயங்க..
சரி போங்க..
இல்ல சார் நான் இருக்கேன் ..
இன்பா-என்ன சார்னு கூப்பிடறீங்க , அண்ணா னு கூப்பிடுங்க ok வா
அவள் தயங்கி விட்டு ம்ம் சரி அண்ணா
கீதா-மகிழினி இங்க வா என்று கீதா கூப்பிட அவள் இதோ வருகிறேன் என்று செல்ல
ஆதி-அப்போ நானு என்று ஆதி சொல்ல
இன்பா-who is he?
ஆதி-என்னோட name ஆதி நான் மகிழினியோட கிளாஸ்mate
இன்பா-இன்பாவுக்கு ஆதித்யா நியாபகம் அது தான் விவேகாவின் மாமன் மகன் நியாபகம் வர
சூர்யா இவன் தான உனக்கு ரொம்ப டென்ஷன் தரான்
சூர்யா-மச்சி நான் மனசுல நினைச்சேன் டா நீ சொல்லிட்ட என்ன ரொம்ப torture பண்றான் டா
ஆதி-சார் நான் உங்களை என்ன பண்ணினேன் என்று கேட்க
சூர்யா-என் பொண்டாட்டி பின்னாடியே சுத்தறான் இன்பா இவன புடிச்சு jail ல போடு
ஆதி-ஆள விடுங்க சாமி என்று சிரித்து நான்கு வார்த்தை பேசி விட்டு சென்றான்
இன்பா-நீ என்னை ஏன் டா உன் கல்யாணத்துக்கு கூப்பிடல இப்போ பையன் கூட இருக்கான் அவனை யாவது காட்டுவியா இல்லயா
சூர்யா-அது ஒரு பெரிய கதை மச்சி என்னோட wife எப்டி இருக்கான்னு சொல்லவே இல்ல
இன்பா-நீ எப்போ இன்றோடுக்ஷன் பண்ண..
சூர்யா-ஏய் நடிக்காத டா அப்போ இவளோ நேரம் தெரியாத மாதிரி தான் நடித்தியோ உன் கிட்ட ராம் சொன்னது எனக்கு தெரியும். சீக்கிரம் சொல்லு எப்படி இருக்கா..
இன்பா- என்னோட தங்கை தேவதை தான் எப்டி உன்ன கல்யாணம் பண்ணிகிட்டா னு தான் தெரியல
சூர்யா-அவ பேரு மகிழினி, அலைஸ் மான் விழி என்னோட மகன் சத்ய தேவ் இப்போ எனக்கும் அவளுக்கும் fight சோ அதனால தான் intro கொடுக்கல
இன்பா-அதான் பார்த்தேன் ஆனால் நல்ல பொண்ணு கஷ்ட படுத்தாத
சூர்யா- அவ தான் என்ன கஷ்ட படுத்தறா மச்சி சஞ்சனா, அது இல்லாமல் இந்த ராஜி , ஜானு இவங்க எல்லாம் என்கூட கிலோஸ் ஆ இருக்கிறது அவளுக்கு கொஞ்சம் jealous டா வேற ஒன்னும் இல்லை
இன்பா-சூர்யா அவ கண்ணுல ஒரு ஏக்கம் தெரியுது ரொம்ப கஷ்ட படுத்தாத மச்சி
சூர்யா-இன்பா அனுபவம் ரொம்ப பேசுதோ
சரி என்ன பண்றாங்க விவேகா..
இன்பா-அவ காலேஜ் final year டா IT அவ உன்ன மாதிரி ஒரு IT பைத்தியமா இருக்கா some டைம்ஸ் அவள பார்த்தால் எனக்கு உன் நியாபகம் தான் வரும்
சூர்யா-ஒரு படிக்கிற பொண்னு கிட்ட உன் வேலைய காமிக்கிற
இன்பா-நீ எப்போ மகிழினிய marriage பண்ண
சூர்யா-அவ ug முடிச்சா எனக்கு first sightலயே அவள் கண்ணு கதை பேசுச்சு மச்சி என் அம்மா கிட்ட சொல்ல போனேன்.. ஆனால் என் அம்மாவுக்கு என்னை பற்றி அவ எனக்கு தான் அப்படின்னு தோணிச்சு போல மச்சி அப்டியே தூக்கிட்டு வந்துட்டேன் என்னோட சண்டைக்கோழிய என்னோட மான் விழிய
இன்பா, நீயெல்லாம் லவ் , கல்யாணம் எல்லாம் பண்ணலாம்
ஆனா நான் பண்ணா என்ன
சூர்யா-சரி விடு உன்னோட முகமே சரி இல்ல நீ பேசறது நடிக்கிற மாறி இருக்கு உன்னோட கண்ணுல உயிர்ப்பு இல்ல என்ன ஆச்சு இப்போ சண்டையில் தான் வந்து இருக்கியா..
இன்பா ம்ம் இப்போ கூட சண்டை தான் என்று சொல்லும் நேரம் மான் விழி வந்தாள்.
மகிழினி-அண்ணா சாப்பிடுங்க ஏதோ உங்களுக்கு பிடிச்சது எனக்கு தெரிஞ்சது எடுத்து வந்திருக்கேன்
இன்பா- ரொம்ப thanks டா என்று மகிழினி கிட்ட கூறினான்.
இன்பா-சூர்யா உன்னோட wife வரல என்று அவன் கண் சிமிட்டி சொல்ல
சூர்யா-அவ என் கூட வரல டா எல்லார்க்கும் என்ன புடிக்கும் புடிக்காது ன்னு அவளுக்கு தெரியுது ஆனால் என்ன சொல்ல என் மனசுல என்ன இருக்கு அப்டின்னு தெரியல டா
இன்பா- சரி விடு நம்ம மகிழினி கிட்ட பேச வை அப்புறம் அவங்க உன்ன புரிந்து நடப்பாங்க
சூர்யா- இவ கிட்ட பேச வச்சேன்னு வை அவ என்ன விட்டு ஓடியே போய்டுவா
மகிழினி-அண்ணா உங்க friend வீட்டுக்கு தான் வரணும்னு சொல்லி வைங்க என்று பற்கள் கடித்தாள் பின் அங்கு இருந்து சென்றாள்
இன்பா- சூர்யா மகிழினி உனக்கு சரியான சண்டைக்கோழி தான் டா என சிரித்தான்.
அதன் பின் இருவரும் நிறைய பேசினர் கூட ராம், ரகு, கீதா, இணைந்து கொண்டனர்..
இன்பா ஒரு இடத்தில் நின்று கொண்டு எதையோ யோசிக்க ..
சூர்யா, இப்போ என்ன யோசித்து கொண்டு இருக்க..
இப்போ எப்படி பேச வைக்க..
சூரியா உதடு மடிதது சிரிக்க..
டேய் *** இதுக்கு சிரிக்கிற, இல்ல இப்படி உன்னை புலம்ப விட ஒரு ஆள் இருக்கே..
டென்ஷன் பண்ணாத..
சோ சிம்பிள் அவளே உன்னை தேடி வருவா மச்சி..
இன்பா, எப்படி…
சூர்யா அவன் தோல் மேல் கை போட்டு கொண்டு ஒரு பொன்னால நார்மலா பேசுற பையன் கிட்டயே மூன்று நாளுக்கு மேல் பேசாமல் இருக்க முடியாது. அங்கேயே அப்டின்னா இங்கே அவளும் உன்னை லவ் பண்றா சார் வேற non veg ஆ டிரை பண்ணி இருக்கீங்க. சோ கண்டிப்பா அவளால் உன்னை பார்க்காமல் பேசாமல் இருக்கவே முடியாது நிச்சயம் உன் கிட்ட பேசுவா..
இன்பா, நிஜமா வா மச்சி..
பக்கா மச்சி அட்லீஸ்ட் சண்டையாவது போடுவாள். கட்டாயம் உன்னை பற்றி தெரிந்து கொள்ள எதுவும் செய்து கொண்டே இருப்பா நீ கவலை படாத மேடம் உன் நினைப்பில் தான் இருப்பாங்க..
இதை கேட்டதும் கண்ணகுழி தெரிய அவன் சிரிக்க..
சூர்யா, முக்கிய விஷயம்..
என்ன?
அந்த instagram போஸ்ட் நானும் மகி சொன்னதுக்கு அப்புறம் பார்த்தேன். சோ என்ன தான் ஐடியா வொர்க் அவுட் ஆனாலும் அவள் ரொம்ப வெக்சா இருப்பா அதனால் நீ கொஞ்சம் அவசர படாமல் ஹேண்டில் பண்ணு..
ம்ம் ஓகே அப்புறம் நான் கிளம்புறேன் என்று சொல்லி இரண்டு அடிகள் வைத்தான்.
ஹே இடியட்..
ம்ம் என்ன..
சூரியா, உனக்கு இன்னும் டவுட் இருந்தால் கிளம்பி இங்கே பெங்களூர் வராத..
எப்படியும் சக்தி மகி கூட இருப்பானே உன்னால் மகி கூட கில்மா பண்ண முடியாதே..
சூர்யா, டேய் ****…
இன்பா சிரித்து விட்டு சரி என்ன விஷயம் நான் ஏன் வர கூடாது.
அதான் ரவிசந்திரன் இருக்காரே சோ நீ அவர் கிட்ட கேளு என்னை விட எக்ஸ்பீரியன்ஸ் டா மச்சி..
இன்பா முறைக்க..
சரி விடு போன் பண்ணு வீட்டுக்கு எப்போ வர.. அதுக்கு அப்புறம் மகிக்கு இருக்கு..
உடனே இன்பா நின்று விட்டு ஹான் நிச்சயம் வீட்டுக்கு வரனும் டா அப்புறம் மகி கிட்ட கொஞ்சம் பேசணும்..
என்ன விஷயம்..
கொஞ்சம் கேஸ் பற்றி..
டேய் என்ன டா கேஸ்.. என்று சூர்யா திடுக்கிட
இன்பா, இல்ல மச்சி டென்ஷன் ஆகாத ஆதி, மை விழி, மகி,அண்ட் ஜெனி இவங்க எல்லார் கிட்டயும் பேசணும் டா சோ அவங்களையும் மீட் பண்ணனும் அவங்க படிச்ச பேட்ச் ல ஒரு கேஸ் அது தான் நீ கவலை படாத மச்சி..
தொடரும்…
உங்களுடைய எல்லா ஆதரவுக்கும் நன்றி இந்த கமென்ட்ஸ் தான் எனக்கு பூஸ்ட் அண்ட் நீங்க இந்த கமென்ட்ட எல்லாம் review ல போட்டு ஸ்டார் கொடுத்தா கூடிய சீக்கிரத்தில் இந்த ஸ்டோரி ஆடியோ புக் போக சான்ஸ் அதிகம் டிரை பண்ணிட்டு இருக்கேன்…
Wait a minute இங்கேயும் கொஞ்சம் episode எப்படி இருந்தது அப்டின்னு சொல்லிட்டு போங்க பா..
Episode 202
பெங்களூரில் இருந்து கிளம்பிய இன்பா நேராக அவனது வீட்டுக்கு வந்தான். அடுத்து வந்த இரண்டு நாட்களும் அந்த கிட்னாப் கேஸில் மிகவும் பிஸியாக இருந்தான்.
ஸ்டேஸனில்..
இன்பா, வருண் அந்த லேப் ரிபோட் பிங்கர் பிரின்ஸ் ரிபோர்ட் என்ன ஆச்சு..
சார் அதுல ரெண்டு இரத்த மாதிரி கலந்து இருக்கு ஒன்னு அந்த குழந்தையோடது, அண்ட் இன்னொரு பிளட் தெரியல சார்..
மித்ரன், சார் லோகேஷ் ஒரு கேஸ் பைல் சென்ட் பண்ணி இருக்கார். இந்த கிட்நப் கேஸ் மாதிரியே சேலம் ஷேவபெட் ல அதே போல் ஒரு பேக்கரி கிட்ட ஒரு பொண்ணு மிஸ்ஸிங் அடுத்து ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் பக்கத்தில் இதே போல் டாஸ்மாக் கிட்ட ஒரு கிட்ணப் ஆனால் இதில் ஒரு மாற்றம் கோயம்புத்தூர்ல மட்டும் பெண் குழந்தைக்கு பதிலா ஒரு ஆண் குழந்தை அதுவும் சிறப்பு குழந்தை வயசு 13 அப்புறம் எல்லாமே கிட்ட தட்ட ஒரே மாதிரியே இந்த குழந்தை எல்லாமே 13வது பிறந்தநாள்ல தான் மிஸ்ஸிங்.. இது க்ரைம் பிரண்ச் க்கு வந்து இருக்கு..
வருண், சார் இது சைக்கோ கில்லர் மாதிரி இருக்குமா..
இன்பா, இறுக்கமான முகத்துடன் முதலில் அவங்க படிச்ச ஸ்கூல் அதோட உரிமையாளர், அந்த குழந்தையோட பேரன்ட்ஸ் மற்றும் இன்னும் அந்த ஸ்கூல் மொத்த டிட்டைல்ஸ் எனக்கு வேண்டும்..
சாதனா, சார் அந்த மினிஸ்டர் சத்ய மூர்த்தி கேஸ்..
கீர்த்திகா, சார் spr கேஸ் ஸ்டடியில் புதுசா ஒரு முக்கிய விஷயம்..
இன்பா, என்ன என்பதை போல் பார்க்க
இந்த பிளட் கேம்ப், அப்புறம் ஃபெர்ட்டிலிட்டி ட்ரீட் மெண்ட் எல்லாம் கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வச்சு இருப்பதா ஹாஸ்பிடல்ல இருக்க நம்ப இன்பார்மர் சொன்னார் சார். ..
இன்பா, ம்ம் ஓகே மித்ரன் spr கேஸ்ஸ அப்படியே வாச் பண்ணுங்க இப்போ நம்ப முழுதாக இந்த கிடனப் கேஸ் மட்டும் எடுத்துப்போம் அடுத்த குழந்தை மிஸ் ஆகரதுக்கி முன்னாடி அந்த குற்றவாளி பக்கத்தில நெருங்கி இருக்கனும்.. அதனால் எப்போ வேணாலும் என்ன வேணாலும் நடக்கலாம் ரொம்ப விழிப்பா இருக்கனும்.
அண்ட் அடுத்து 13 வயசு பிறந்த நாள் கொண்டாட போகும் குழந்தை யாருன்னு லிஸ்ட் எடுத்து அவங்க பெற்றோர் க் இன்பார்ம் பண்ணி பாதுகாப்பா இருக்க சொல்லுங்க பார்ப்போம் என்று சொல்லி டிஸ்மிஸ் செய்தவன்.
இன்பா, கேஸ் விஷயமா எதுவா இருந்தாலும் நான் கால் பண்ண அடுத்த செகண்ட் டிடைல்சோட வந்து நிக்கணும்..
ம்ம் யெஸ் சார் என்று அனைவரும் சென்றனர்.
மித்ரன், மச்சி என்ன பெங்களூர் போனதில் இருந்து ரொம்ப எனர்ஜியா இருக்க..
அப்படி இல்ல மச்சி..
மித்ரன், அப்புறம் சண்டைக்காரியை எப்படி சரி பண்ண போற..
அவளை பத்தி பேசாத மச்சி என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மேலிடத்தில் இருந்து அழைப்பு வந்தது.
ஹலோ சார்..
செல்வ கணபதி, மினிஸ்டர் சத்ய மூர்த்தி எதோ ஒரு ஆபரேஷன்காக வெளிநாடு போறாங்க சோ பாதுகாப்பா அவரை பிளைட் ஏற வரைக்கும் பாதுகாப்பு கேட்டு இருக்காரு பார்த்துக்க இன்ப ராகவன்..
ம்ம் ஒகே சார் என்று சொல்லி விட்டு கிளம்பினான்.
மித்ரன், அப்போ லவ்வு
அது ஓரமா இருக்கட்டும் அவளே வருவா டா என்று சொல்லி விட்டு வேலையை பார்க்க சென்றான்.
இப்படியே ஒரு வாரம் சென்றது. சூர்யா சொன்னது போல மூன்று நாட்களுக்கு மேல் அவளால் அவனை பார்க்காமல் பேசாமல் இருக்க முடிய வில்லை. எப்படி பேசுவது யாரிடம் கேட்பது என்று குழப்பத்தில் சுற்றி கொண்டு இருக்க..
வருண் , கேஸ் பைல் எதோ பார்த்து கொண்டு இருக்க விவேகா, அண்ணா ரொம்ப பிசி போல..
ம்ம் ஆமா ரெண்டு நாளில் நான் ஈரோடு போகனும் விவேகா என்று சொல்லி கொண்டே போனில் தீவிரமாக பேசி கொண்டு இருந்தான்.
விவேகா, உன் டீம் ல இருக்க எல்லாருமா மித்ரன் அண்ணா, சாதனா, லோகேஷ்.. அப்புறம் அப்புறம் என்று இழுக்க..
வருண், அது எல்லாம் உனக்கு எதுக்கு நீ படிக்கும் வேலையை பாரு போ..
இப்போ எதுக்கு இவளோ கோவம்.. சரி கோபம் வேண்டாம் இன்னிக்கு தான் ஃப்ரீ டைம் கிடைத்தது.. நீ ஓவரா பண்ற போ என்று வெளியே செல்ல..
சரி சரி கோபம் வேண்டாம் விவேகா வா.. என்று பேச அவள் அருகே வந்து அமர்ந்து பேச ஆரம்பிக்க அவனுடைய இன்னொரு போன் அடித்தது.
வருண்,விவேகா அந்த போனை சார்ஜ் ல இருந்து எடுத்து கொடு..
விவேகா எழுந்து போனை எடுக்க அதில் ACP சார் என்று வர அதை பார்த்த அவளுக்கு அது இன்பா வின் எண் என்று தெரிய எதுவும் செய்ய வேண்டுமே என்று அட்டென்ட் செய்து வருண் கிட்ட அண்ணா தெரியாமல் கை பட்டு அட்டென் பண்ணிட்டேன்.
இங்கே கொடு என்று அவன் வாங்கி பார்த்து விட்டு உடனே எழுந்து நின்றான். சார் என்று வணக்கம் சொல்ல..
ம்ம் ரைட்டர் கிட்ட அந்த திருட்டு கேஸ்க்கு எழுதி வாங்கி விட்டாயா நாளைக்கு கோர்ட்க்கு போகனும், அடுத்து சன்டே
சார் ரெடி சார் ஆனால் அது கேஸ் செக்சன் எல்லாம் எப்படி ரெடி பண்ணது இன்னும் ஒரு முறை செக் பண்ணணும் சார் என்று படபடத்து கொண்டே சொல்ல..
சரி சீக்கிரம் எடுத்து வா.. ம்ம் ஓகே சார் என்று போன் வைத்தவன். மீண்டும் அழைத்து சார் வீட்டுக்கு வந்து கொடுக்கணுமா..
ம்ம் நான் இப்போ கமிஷ்னர் ஆபீஸ் போகனும்.. ஓகே சார் என்று போன் வைத்தவன்.
வருண், ச்ச இதில் ஒன்னு மிஸ் ஆகுது என்று கீர்த்திக்கு போன் செய்தான்.
விவேகா, அண்ணா என்ன ரொம்ப டென்ஷனா இருக்க என்னோட ஹெல்ப் உனக்கு வேணுமா..
வருண், எதோ யோசித்து விட்டு விவேகா இதை வசுமேம் வீட்டில் கொடுத்து விட்டு வா என்று அனுப்ப இதற்கு தானே காத்து கொண்டு இருந்தேன் என்பதை போல் அவள் எழுந்து வெளியே செல்ல…
இன்பாவிடம் இருந்து போன் வந்தது. ஹலோ சார் என்று பதில் சொல்ல..
வருண் இப்போ வேண்டாமா சார்.. என்று சொல்ல விவேகா அவன் வேண்டாம் என்கிறான் என்று நினைத்து கொண்டு வருண் நான் வரட்டுமா இல்ல வேண்டாமா என்று இன்பாவுக்கு கேட்கும் வண்ணம் கத்த..
வருண் முறைத்து விட்டு அமைதியா இரு என்பதை போல் செய்ய
அங்கே மறுமுனை யில் இன்பா சிரித்து விட்டு அவனிடம் ” வருண் சாருக்கு டிபார்ட் மென் ட் ல சொல்லி ஒரு அசிஸ்டன்ட் வாங்கி தரட்டுமா.. இதை கேட்டதும் அவனுக்கு குப்பென்று வியர்க சார்..
இன்பா, இனி உன்னோட தூது எல்லாம் வேண்டாம் நீ தான் கொண்டு வரனும் நான் சொல்றது புரியுதா..
ஒகே சார் என்று போன் வைத்தவன் ஒரு பெரு மூச்சை விட்டு விவேகா கிட்ட இருந்து அந்த கோப்புகள் எல்லாம் வாங்கி கொண்டு உடையை சரி செய்து கொண்டு இன்பாவை பார்க்க கிளம்பினான்.
விவேகா, அண்ணா என்ன ஆச்சு..
இல்ல விவேகா இனி நீ எந்த ஹெல்பும் எனக்கு செய்ய வேண்டாம் இங்கேயே இரு நான் போயிட்டு வந்திடரென் என்று சொல்லி கிளம்பினான்.
விவேகாவுக்கு புஷ் என்று ஆகி விட்டது. அடுத்த பிளான் ரெடி செய்தாள். வழக்கம் போல் அவன் வீட்டில் இருக்கும் பாத்திரம் வாங்க ஆவலுடன் தன்னை தயார் படுத்தி கொண்டு வெட்கம் கெட்டவள் சென்றாள். கேட்டுக்கு அருகில் சென்று தன்னை தயார் படுத்தி கொண்டு உள்ளே சென்றாள்.
அங்கே வசுமதி சோபாவில் அமர்ந்து இருக்க ஹே வாயாடி என்ன இந்த பக்கம்..
இல்ல மேம் சும்மா உங்களை பார்க்க தான் வந்தேன்..
ஹே பொய் சொல்லாத டி..
மேம் புரட்டாசி கும்பிட்டு பாத்திரம் அண்ணா இங்கே சாப்பிட கொடுத்து போனான் அதை வாங்க வந்தேன்.
வசுமதி,நல்ல வேலை பண்ண விவேகா..
மேம் நான் எதுவும் பண்ணல..
ஓ வருண் தான் அன்னிக்கு முக்கியமா வெளியே போயிட்டேன். இங்கே இன்பா மட்டும் தான் வீட்டில் இருந்தான். சரியா கவனிக்க முடியல வீட்டில் ரெண்டு ஐடம் மட்டும் தான் இருந்தது. எப்பொதும் வகை வகையாக தான் சாப்பிடுவான் அவனும் அவனோட அப்பாவும் அதில் ஒன்னும் குறைந்தாலும் சண்டை தான் முகத்த தூக்கி வச்சு சுத்துவான். நல்ல வேளை நான் வெண்பா கிட்ட சொல்லலாம் அப்படின்னு நினைத்தேன் அதுக்குள் வருண் கொண்டு வந்து விட்டான். என்று இன்பாவின் பெருமை புராணம் பாடி கொண்டு இருக்க..
விவேகா, மேம் சுபா அக்கா எங்கே அண்ட் சார் எங்கே வீட்டில் யாரும் இல்லையா நீங்க மட்டும் தானா..
வசுமதி, சுபா ஆபீஸ் போயிட்டா இன்பா மேலே இருக்கான்..
விவேகா, நான் சுபா அக்காவுடைய டாடி பற்றி கேட்டேன் மேம்..
ஓ அவரு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்..
விவேகா, நான் உங்க வீட்டுல எல்லாரையும் பார்த்து இருக்கேன் பட் அவரை மட்டும் பார்க்க முடியல சரி ஓகே மேம் சாப்பிடீங்களா..
ம்ம் நான் சாப்பிட்டேன் மா நீ சாப்பிட்டியா..
ம்ம் சாப்டன் மேம் என்று வீட்டை கண்களால் வட்டம் போட்டவள். சரி மேம் நான் கிளம்புறேன்… என்று எழ
இரு மா என்று சொல்லி பாத்திரம் எல்லாம் எடித்து கொடுத்த வசுமதி ஒரு நிமிடம் இரு நான் சுபாவுடைய டாடி போட்டோ ஆல்பம் மேலே இருக்கு எடுத்து வரேன் என்று எழுந்தார்.
இல்ல மேம் நான் இன்னொரு நாள் பார்க்கிறேன் இப்போ டைம் ஆச்சு..
இரு விவேகா ஒரு ரெண்டு நிமிடம் என்று சொல்லி மேலே செல்ல இதை எல்லாம் ஆபீஸ் கிளம்பி கேட்டு கொண்டு இருந்த இன்பா அந்த ஆல்பம் எல்லாம் தன் அம்மா வரும் முன்பே எடுத்து சுபா அறைக்கு கொண்டு சென்றான். அதன் பின் ரவிசந்திரன் மற்றும் குடும்ப போட்டோ இருக்கும் அனைத்தும் எடுத்து சுபா அறையில் போட்டவன் அவர்களது அறையில் இருக்கும் அனைத்தும் எடுத்து போட்டு கதவை சாத்தி விட்டு உள்ளே சென்றான்.
வசுமதி அனைத்தும் எங்கே போனது ஒரு பாஸ்போர்ட் சைஸ் கூட இல்லையே என்று தேடி பார்க்க..
இன்பா, என்ன ஆச்சு மாம் என்று கிளம்பி வந்தான்…
அது ஒன்னும் இல்ல ராகவ் டாடி போட்டோ நம்ம குடும்ப போட்டோ ஒன்னு கூட இல்ல..
அது எல்லாம் இங்கே தான் எங்கேயும் இருக்கும் இப்போ எதுக்கு அதை தேடுறீங்க அதான் மிஸ்டர் ரவிசந்திரனை டெய்லியும் பார்க்கரிங்க தானே அது இல்லாமல் போட்டோவில் பார்க்கணுமா..
வசு, ராகவ் அவர் உன்னோட அப்பா இப்படி எல்லாம் பேச கூடாது நீ வர வர ஒன்னும் சரி இல்ல ஒரு அம்மா கிட்ட இப்படி தான் பேசுவியா என்று வருத்தம் கொள்ள.. என்னோட வளர்ப்பு தான் தப்பாகி போச்சு போல சுபா சரியா இருக்கா நான் உனக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைத்து விட்டேன். என்று அப்படியே அமர்ந்து கொண்டார்.
இன்பா, ச்ச எதோ சொல்ல போய் அது எதோ ஆகி விட்டதே என்று நினைத்து அருகில் வந்தவன் மாம் பிளீஸ் நான் ஆபீஸ் டென்ஷன்ல இப்படி பேசி விட்டேன் சாரி சாரி என்று கைகளில் முத்தமிட்டு கன்னத்தில் முத்தம் வைக்க..
வசுமதி, நீ இனி அப்பா கிட்ட சண்டை போட கூடாது…
இன்பா அருகில் அமர்ந்து மாம் அவர் செய்வது சரியா எப்போ பார்த்தாலும் என்னை டார்கட் பண்ணிட்டே இருக்காரு எனக்கு எவ்ளோ டென்ஷன் தெரியுமா..
சரி சரி நான் டாடி கிட்ட பேசுகிறேன்.. என்று சொல்ல சரி எனக்கு லெமன் டீ வேண்டும் அப்புறம் நன் ஆபீஸ் கிளம்புகிறேன். என்று சொல்லி நகர
வசுமதி, இந்த இன்ஸ்டா, FB news பற்றி இன்பராகவன் இன்னும் எனக்கு எந்த பதிலும் சொல்லவே இல்லை..
இன்பா திடுக்கிட்டு திரும்ப..
அவர் புருவம் உயர்த்த என்ன ஆச்சு அந்த பொண்ணை அவள் தானா?
மாம் எனக்கு டேஸ்ட் இருக்கு..
வசுமதி, என் கிட்ட சொல்லுவியா இல்ல..
மாம் இது என்ன கேள்வி நிச்சயம் சொல்லுவேன்..
வசுமதி, இப்போ எல்லாம் உன் நடவடிக்கை ரொம்ப வித்தியாசமா இருக்கே இதுக்கு காரணம் யாரு..
யாரு யாரும் இல்ல எனக்கு நிறைய வேலை இருக்கு அண்ட் இந்த FB போஸ்ட் க்கு இன்னிக்கே முடிவு கட்டுறேன் என்று சொல்லி விட்டு சீக்கிரம் எனக்கு டீ வேண்டும்..
என்று சொல்லி விட்டு அவன் வேகமாக அந்த இடத்தை விட்டு வேகமாக சென்றான்.
வசுமதி கள்ள சிரிப்புடன் கீழே வந்து பார்க்க அங்கே விவேகா இல்லை. இந்த பொன்னு கிளம்பி விட்டாள் போல என்று கிச்சன் சென்றாள்.
விவேகா நேராக வீட்டுக்கு சென்று விட்டாள். நாட்கள் சென்றது. இப்படியே அவனை அங்கும் இங்கும் தூரத்தில் பார்த்து உள்ளுக்குள் நிரப்பி கொண்டாள்.
இன்பா கேஸ் விஷயமாக கோவை சென்று விட்டான் அவளை நினைக்க நேரம் இல்லை. என்பதை விட உண்மையாகவே நிறைய பிரச்னை..
இங்கே சென்னையில் உள்ள spr வீட்டில் குரு, அவனது ஆட்களுக்கு போன் செய்து இன்பாவின் காதலியை தூக்க பிளான் செய்தான்.
ராஜை வீட்டுக்கு வர சொல்ல அவன் spr வீட்டின் அந்த பீச் பங்களாவுக்கு சென்றான். சார்..
குரு, நாளைக்கு அந்த பொண்ணை தூக்க போறோம் சோ நீ தான் பக்கத்தில் இருந்து பார்த்து கொள்ள வேண்டும்..
இதை கேட்டதும் உள்ளுக்குள் அவனுக்கு உதறல் எடுத்தது. என்ன சார் சொல்றீங்க.. நான் சொல்றது புரியல எதுவும் சொதப்பின மொத்த பலி ஆடு நீ தான் நாளைக்கு எந்த இடத்துக்கு வரனும் அப்டின்னு சொல்றேன் ரெடியா இரு.. இந்த முறை அந்த ACP பிடிங்கி என்ன பன்றான்னு பார்க்கிறேன்..
நீ தான் வரனும் அவள் உன் மூலமா தான் எனக்கு கிடைக்க போறா.. என்று சொல்லி அவனை அனுப்பி விட..
ராஜுக்கு அங்கே இருந்து எப்படி வீட்டுக்கு வந்தோம் என்று தெரியவே இல்லை.. சற்றும் தாமதிக்காமல் வருனுக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.
ஆனால் எப்படி சொல்வது சொன்னால் நம்ப மாட்டான் முதலில் என் மீது தான் சந்தேகம் வரும் என்று நினைத்து கொண்டு இருக்க அவன் நினைவில் வந்தது இன்பா தான்..
சாட்சிகாரனுக்கு பதில் சண்டை காரன் காலில் விழுவது தான் சரி என்று நேராக அவனுடைய ஸ்டேஷன் சென்றான். அங்கே அவன் இல்லை.. அடுத்ததாக என்ன செய்வது என்று யோசித்தான்.
அந்த ஆதிக்கு கால் செய்து நம்பர் வாங்கி விட வேண்டும் என்று கால் செய்தான். ஆதி முதலில் மறுத்தவன் பின் நம்பர் கொடுக்க இன்பாவுக்கு அழைத்தான்.
ஹலோ..
ஹலோ நான் தேவராஜ் பேசுறன்..
யாரு நீங்க..
விவேகாவுடைய அத்தை பையன்..
இன்பா, என் நம்பர் சாருக்கு எப்படி கிடைத்தது என்ன விஷயம்..
நான் உங்களை நேரில் பார்க்கனும்..
எனக்கு டைம் இல்ல..
இது குரு சம்மத பட்டது..
இன்பா, உன்னோட தகவல் எனக்கு தேவை இல்ல…
தேவ ராஜ், இதற்கு மேல் இழுக்காமல் விவேகா கடத்தல் பற்றி பேசனும்..
டேய்****..
தேவ ராஜ், எனக்கும் பேச தெரியும் ஆனால் இப்போ என் மாமா பொன்னு எனக்கு ரொம்ப முக்கியம் அதனால் சீக்கிரம் நீ வா இல்ல நீ சொல்ற இடத்துக்கு நான் வரேன்..
இன்பா இந்த விஷயத்தை மித்ரனுக்கு சொல்லி விட்டு நேராக காக்கி உடையில் மினிஸ்டர் சத்ய மூர்த்தி இந்த பக்கம் விமானம் ஏறிய அடுத்த நொடி ராஜ் சொன்ன இடத்துக்கு விரைந்தான்.
வேகமாக இன்பா உள்ளே வர அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்த வாடிக்கையாளர் மற்றும் கடை உரிமையாளர் இன்பாவை பார்த்து பயந்து கொண்டே சார் எதுவும் பிரச்னையா..
இல்ல நீங்க பாருங்க என்று சொல்லி விட்டு அவனை வெளியே அழைத்தான். என்ன சீக்கிரம் சொல்லு..
ராஜ் நடந்த அனைத்து விஷயமும் சொல்லி விவேகா நல்லா இருக்கணும் இதில் என்னால் எதுவும் செய்ய முடியாது அவளை சேவ் பண்ணு..
இன்பா தன் தலையை கோதி விட்டு கொண்டே நீ அவ்ளோ நல்லவன் இல்லையே எப்போ டா என்னை கீழெ தள்ளி அவள் கிட்ட ஒட்டலாம் அப்டின்னு பிளான் போடுறியா….
ராஜ், அவள் மனசில் எப்படியும் நான் இல்லன்னு தெரிந்து போச்சு சோ என் மாமா பொன்னு நல்லா இருக்கணும் நான் சொல்றத நம்பினா நம்பு இல்ல என்னமோ பண்ணு நான் அவளை காப்பாற்றுவேன். என்று சொல்லி வேகமாக அங்கு இருந்து கிளம்ப..
இன்பா யோசனையாக அந்த இடத்தில் இருந்து நேராக கோட்ரேஸ் சென்றான். விவேகா வீட்டுக்கு சென்றான். அதுவும் காக்கி உடையில் வந்து கதவை தட்டினான். விவேகா யார் இந்த மட்ட மதியானத்தில் என்று கதவை திறக்க
இன்பா, அம்மா எங்கே..
விவேகா அவன் மேல் இருந்த கோபத்தில் என்ன நீங்க பாட்டுக்கு உள்ளே வரீங்க..
இன்பா அவளை உருத்து பார்க்க விவேகா அவனை உள்ளுக்குள் கொஞ்சம் பயத்துடன் தான் பார்த்தாள்.
என்ன என்ன வேணும்..
இன்பா, இன்னையில் இருந்து மூன்று நாளைக்கு வெளியே எங்கேயும் போக கூடாது.
எதுக்கு போக கூடாது..
ஏற்கனவே டென்ஷனில் இருந்த இன்பா நான் செம்ம கோபத்தில் இருக்கேன் சொல்றத மட்டும் கேளு டி..
அதுக்கு நான் என்ன பண்றது உங்க இனியாழ் வீட்டுக்கு போய் இந்த கத்தல் வச்சுக்கோங்க..
இன்பா இதற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து ஓவரா பேசுன உன்னை என்ன செய்வேன்னு தெரியாது.முதலில் வாயை குறை என்று அவளை நெருங்கி உன் தில்லாலங்கடி வேலை எல்லாம் இந்த மூணு நாள் தள்ளி வச்சி விட்டு வீட்டில் இருக்க என்று அவள் முன் ருத்திர மூர்த்தியாக நின்று கொண்டு அவன் சொல்ல..
அவள் கண்களில் கண்ணீர் கொட்ட..
இன்பா, இது வேற ஒன்னும் குறைச்சல் இல்ல வேற என்ன டி தெரியும் ஆ வுன்னா அழ தெரியும்.. அப்படி தானே நான் கவனித்து கொண்டே இருப்பேன் நீ வெளியே வந்தது தெரிந்தது..
விவேகா கண்களை துடைத்து கொண்டு காலேஜ் போனும்..
“நீ போக வில்லை என்றால் காலேஜ் நிற்காது நான் சொல்றத மட்டும் கேளு புரியுதா அதையும் மீறி நீ வீட்டை விட்டு தாண்டுன கால் இருக்காது” என்று சொல்லி வேகமாக கதவை டம் என்று சாத்தியவன் ஒரு சில நொடிகளில் மீண்டும் உள்ளே அடிதடியாக வந்து விவேகாவை இழுத்து இதழில் அழுத்தமாக முத்தம் பதித்து” சொல்றது புரியுதா வெளியே போக கூடாது நான் சொல்றத கேளு” என்று சொல்லி இறுக்கி அணைத்து விட்டு சென்றான்.
விவேகாவுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. என்ன ஆச்சு என்று யோசித்து கொண்டு இருக்க..
இங்கே சரவணன் ரவிசந்திரனை பார்க்க அவரது ஆபீஸ் வந்து இருந்தான்.
தொடரும்…
இனி அடுத்த கட்டத்துக்கு வந்தாச்சு இனி விவேகா, இன்பாவை பார்ப்பிங்க ஆனால் ரொமான்டிக்கா பார்க்க முடியாது.
ஆனால் இன்டரஸ்டா இருக்கும் அப்டின்னு நினைக்கிறேன்.
அடுத்து சுபா – வினய் கல்யாணத்தை நோக்கி பயணம் செய்வோம் அண்ட் நீங்க ஈகரா வெயிட் பண்ற ரவி விவேகா மீட்டிங் கூடிய சீக்கிரத்தில் நடக்க போகுது.. இது எல்லாம் சேர்ந்து ஒரு 10 எபிசோட் போகும்..
Episode 203
சரவணன் கைகளில் புராஜக்ட் கோப்புகளுடன் வினய் பற்றிய கோப்பு முழு விவரமும் எடுத்து கொண்டு வந்து இருந்தான்.
இன்று நம் தேவதை புடவையில் வந்து இருந்தாள். ஃப்ரீ ஹெர் இரு பக்கமும் காற்றில் பறக்க நடந்து வருகிராலா இல்லை மிதந்து வருகிறாளா என்று சதேகம் சரவணனுக்கு அவளிடம் இருந்து கஷ்டபட்டு கண்களை எடுத்தவன் உள்ளே அழைப்பு வர ரவியை பார்க்க சென்றான்.
ரவி, என்ன சார் இந்த பக்கம் ரகு சார் தான் வருவாரு நான் எல்லாம் வர மாட்டேன் அப்டின்னு சொன்னீர்கள்..
அவன் அசராமல் நம்ம லிமிட் எதுன்னு தெரிந்தால் ஆபீஸ் உள்ளே மட்டும் வைத்து கொள்ளலாம் சார் நான் எதுவும் தவறா சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்..
ரவி, ம்ம் ஸ்மார்ட் தான் சரி இப்போ எதுக்கு வந்து இருக்கீங்க..
இந்த ஃபைல் எல்லாம் உங்க கிட்ட கொடுத்து டிஸ்கஸ் பண்ண வந்தேன்..
சுபா உள்ளே வந்தவள் டாடி அதை எல்லாம் என் கிட்ட கொடுக்க சொல்லுங்க நான் ரகு கிட்ட பேசி கொள்கிறேன்.
சரவணன், இல்ல சார் நான் உங்க கிட்ட தான் பேசணும்..
ரவி சுபா, சரவணன் இருவரையும் மாறி மாறி பார்க்க..
இதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் அங்கு இருந்து ஓகே சார் நான் கிளம்புறேன்.. என்று சொல்லி விட்டு அவன் வெளியே வந்தான்.
இன்பா, மித்ரன் கன்ட்ரோல் ரூமில் செக் செய்து கொண்டு இருக்க ஆனால் நடந்தது வேறு..
இங்கே காவலர் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகமாக இருந்தது. விவேகா ஆச்சர்யமாக அந்த இடத்தை பார்த்தாள் என்ன ஆச்சு எதுக்கு இவளோ பாதுகாப்பு என்று நினைத்து கொண்டு இருக்க அதே நேரம் இங்கே தன் தோழிகளுடன் ஷாப்பிங் மால் சென்று இருந்த கவ்யாவை குருவின் ஆட்கள் தூக்கி விட்டனர்.
அவள் மயக்க நிலைக்கு செல்ல ராஜுன் போன் நம்பரை இன்பா GPS கொண்டு ட்ராக் செய்து கொண்டு இருக்க இன்பா வின் மொபைலுக்கு சோனா கால் செய்தாள் அதன் பின்னாலேயே கமிஷ்னர் என மாறி மாறி அவனுக்கு கால் செய்ய..
இன்பா சோனாவின் எண்ணை முதலில் ஏற்றான்..
சோனா மிகவும் பதட்டமாக சார் கவியை யாரோ கிட்நாப் பண்ணிட்டு போயிட்டாங்க சார் என்று அழுது கொண்டே அவள் சொல்ல..
என்ன சொல்ற..
ம்ம் ஆமா சார் நாங்க ஷாப்பிங் வந்த போது இங்கே இந்த மாதிரி ஆகி விட்டது.
சரி நான் பார்த்து கொள்கிறேன் என்று சொன்னவன் வேகமாக அந்த இடத்துக்கு விரைந்தான்.
அவன் மூளை எதுவும் செய்! எதுவும் செய்! ஒரு பொண்ணுடைய வாழ்க்கை இதில் அடங்கி இருக்கு டா என்று சொல்லி கொண்டே இருந்தது.
அங்கே உள்ள கேமரா பதிவுகள் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கேமரா பதிவுகள் அனைத்தும் செக் செய்யும் நேரம் தான் அவனுக்கு உண்மை புலப்பட்டது. அப்போ கவியா வை தான் என் லவ்வர்ன்னு தூக்கி இருக்கான் போல என்ன செய்ய என்ன செய்ய என்று யோசித்து கொண்டு இருக்க ஒரு பக்கம் போனுக்கு மேல் போன் வந்து குவிந்தது.
குருவிநுடைய பீச் பங்களாவுக்கு கார் வந்ததும் ராஜுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆர்ம்பித்தது ரெண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும் என்று வெளியே வர அப்பொழுது அவர்கள் தூக்கி சென்ற பெண்ணை பார்த்ததும் யார் இவள் இங்கு ஏன் இருக்கிறாள் இவளை ஏன் தூக்கி வருகிறார்கள் என்று நினைக்க..
இன்பா அதாவது குருவின் பீச் பங்களாவுக்கு விரைந்தான். கூடவே மீடியா பிரஸ் என்று எல்லா ஊடங்கங்களுக்கும் சொல்லி இருந்தான்.
மித்ரன் டேய் இப்போ என்ன செய்ய போற..
இன்பா, நீ பாம் ஷ்க்வார்டுக்கு கால் பண்ணு…
அவன் விநோதமாக பார்க்க..
சீக்கிரம் பண்ணு என்று சொல்லி விட்டு சென்றனர். கவ்யாவை குருவின் அறைக்கு தூக்கி சென்றனர். அவளுக்கு இன்னும் மயக்கம் தெளிய வில்லை. குரு அவளை அணு அணுவாக ரசிக்க ஆரம்பித்தான்.
கவ்யா மிகவும் அழகானவள் திமிருடன் இருக்கும் போது இன்னும் அவளுக்கே உரித்தான தனி தன்மையுடன் இருப்பாள். குரு அவளின் அருகில் வந்து முகத்த தடவ அந்த போதை தூக்கத்தில் ராகவ் என்று அழைக்க..
அவனுக்கு பிடி பட வில்லை..
யாரு ராகவ்? என்று யோசிக்க..
ஹே போலீஸ்காரா என்று குருவின் சட்டையை இழுத்து அருகில் கொண்டு வந்தவள் அவன் இதழுடன் பொருத்தி கொள்ள அவனுக்கு எதோ போல் ஆகி விட்டது.
குரு மனதுள் அவனுடைய இடத்தில நானா! என்னை அவனாக நினைத்து கொண்டு இருக்கிறாயா? நெவர் உன்னை சுயநினைவுக்கு கொண்டு வந்து தாண்டி எடுத்து கொள்வேன் என்று நினைத்தவன் அவளை தள்ளி விட்டான். அருகில் உள்ள ஒரு ஒயின் பாட்டிலை எடுத்து முழு ஒயினையும் அவள் மேல் கொட்டினான்.
அவள் மெதுவாக கண்களை சுழற்றி கொண்டே திறக்க முன்னால் இருக்கும் அனைத்தும் மங்களாக தெரிந்தது. குரு அவளை நெருங்கி தலையை பிடித்து ஹே என் பேர் குரு பிரகாஷ் ரெட்டி சொல்லு பார்ப்போம்… என்று அவளை பிடிக்க அவள் புருவம் சுருக்கி தன்னை சமநிலைக்கு கொண்டு வந்து கண்களை உருட்டி பார்க்க..
குரு அவளை கிறக்கமாக பார்த்தான். அழகான கண்கள், அளவான மூக்கு, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் கொடுத்த முத்தம் அதன் சுவை போதை ஏற்றியது. அவள் தாடைகளை பிடித்து ஹே இங்கே பாரு டி என்னை என்னை பாரு என்று சொல்லி அவள் மேல் கைகளை படற விட
கவ்யா அவனை யாரோ எவரோ என்பதை போல் பார்க்க குரு கம்பீரமாக அழகாக ஆனால் கண்களில் ஒரு கொடூரத்துடன் இருந்தான். சொக்க வைக்கும் பார்வை தான் எல்லா பெண்களும் மயங்கி தான் விழுவார்கள். ஹே நீ இன்பா இல்ல ஆனால் அழகா இருக்க என்று அவனை தள்ளி விட..
ம்ம் நான் அழகா.. என்று இளன புன்னகை சிந்தியவன். அவள் மேல் விழ அவள் அவனை தள்ளி விட முயற்சி செய்தாள். அவள் மயக்கத்தில் ஹே என்ன டா கொடுத்த என் கண்ணு எதோ சுத்துது என்று அவனை விலக்க கைகளை அங்கும் இங்குமாக அசைத்தாள். குரு எந்த ஒரு தயக்கமும் இன்றி உன் பேர் என்ன.. என்று ஒவ்வொரு வார்த்தையும் பேசி கொண்டே அவள் மேல் விழுந்தான்..
அவன் தீண்டல் உள்ளுக்குள் எதோ செய்ய அவன் கைகள் அங்கும் இங்கும் படர்ந்தது. அந்த ஒயினின் வாசம் அவனை இன்னும் போதை கொள்ள செய்ததும் சற்றும் தாமதிக்காமல் அவள் இதழை சுவைத்தவன் ம்ம் உன் கிட்ட எதோ இருக்கு டி என்று சொல்லி அடுத்த கட்டத்துக்கு செல்லும் நேரம் சரியாக கதவு தட்டும் சத்தம் கேட்டது.
வேகமாக தட்ட ச்ச என்று அதனை கண்டு கொள்ளாமல் மீண்டும் அவன் வேலைய தொடர துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. குரு உடனே எழுந்து கதவை திறக்க அங்கே சாதனா, மித்ரன், இன்பா, கீர்த்தனா, மற்றும் சில கான்ஸ்டபிள் நின்று கொண்டு இருக்க..
குரு, என்ன மிர்ஸ்டர் உனக்கு இங்கே என்ன வேலை யார் இவனை உள்ளே விட்டது. இன்பா, உங்க வீட்டில் கண்ணி வெடி வைத்து இருப்பதாக ஒரு தகவல் அதுவும் இல்லாமல் யாரோ ஒரு அரசியல் எதிரி உங்க அப்பாவை டார்கேட் பண்ணி உங்களை எதுவும் செய்வதா செய்தி பரவி கிட்டு இருக்கு அதான் பார்க்க வந்தேன்.
குரு, நீ கொஞ்சம் வெளியே போ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல..
மித்ரன், சார் இது எங்க கடமை சோதனை போட்டு விட்டு தான் கிலம்பன்னும்..
இன்பா, அது மட்டும் இல்லாமல் இங்கே பிரஸ் மீடியா எல்லாம் இருக்காங்க கொஞ்சம் அதையும் உங்க மண்டையில் வைத்து கொள்ளுங்கள் என்று திமிருடன் சொன்னவன் அவனை தள்ளி விட்டு உள்ளே செல்ல அங்கே கவ்யா இருந்த நிலையை பார்த்ததும் சாதனா கீர்த்தி என்று கத்தி கொண்டே வெளியே வந்தான்.
சார் என்று அவர்கள் அருகில் செல்ல உள்ளே போங்க என்று சொல்லி குருவின் சட்டையை பிடித்து டேய்**** என்னடா பண்ணி வச்சு இருக்க..
ஹே கையை எடு டா என்று தட்டி விட அதற்குள் அங்கே பாம்ஸ் கார்ட் மற்றும் மீடியா உள்ளே வந்தது. மித்ரன், இன்பா கையை எடு டா மீடியா காரங்க வந்து இருப்பாங்க…
குரு, ம்ம் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன் டா இனி அவளை ஒவ்வொரு தடவை நீ பார்க்கும் பொழுது நான் தான் நியாபகம் வரனும்.. என்று சொல்லி விட்டு அவன் வெளியே செல்ல
மித்ரன், என்ன டா இவன் சைக்கோ மாதிரி நடந்து கொள்கிறான். நல்ல வேளை அவனுக்கு விவேகா பற்றி தெரியல.. அவன் மித்ரனை முறைத்து விட்டு யாரா இருந்தால் என்ன டா ஒரு பெண்ணை இப்படி நாசம் செய்யணும் அப்படின்ற எண்ணம். வைத்து இருக்கும் இவனை எல்லாம் வெட்டி போடணும் என்று சொல்லி விட்டு சாதனா, கீர்த்திக்காக காத்து கொண்டு இருந்தான்.
இன்பா கீழே இறங்கி வர குரு ACP சாரே பாம் வைப்பாரு அவரே எடுப்பாரு போல பேசாமல் நீ இந்த போலீஸ் வேலை டீச்சர் வேலை எல்லாம் விட்டு படம் எடுக்க போயேன் டா நான் கூட புரோடியுஸ் பண்றேன். இன்பா அவனை எரித்து விடுவது போல் பார்த்து விட்டு அங்கு இருந்து நகர்ந்தான்.
இங்கே கீழே பாம் ஸ்கவார்ட் தேடி விட்டு அந்த பீச் ஹவுஸ் பின் வாசலில் ஒரு பாம் இருக்க அதை எடுத்து கொண்டு சென்றனர். இந்த செய்தி மிகவும் பரபரப்பாக பேச பட்டது. அங்கு இருந்து செய்தியாளர்கள் கிளம்பியதும் இன்பா பெண் போலீஸ் உதவியுடன் அவளை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து சென்றான்.
அங்கே கவ்யாவின் அம்மா அழுது கொண்டு இருக்க இன்பா, மேடம் உங்க பெண்ணுக்கு எதுவும் ஆகல என்று சொல்லி விட்டு சாதனாவை பார்க்க
அவள், மேடம் அவங்க எப்படி போனார்களோ அதே போல் தான் வந்து இருக்கிறார்கள் மீடியாவுக்கு கூட இந்த விஷயம் தெரியாது நீங்க கவலை பட வேண்டாம் அப்புறம் சார் இங்கே வரும் வரை பாதுகாப்பு அதிக படித்திரோம் அவங்க கிட்ட எதுவும் காட்டி கொள்ள வேண்டாம் என்று பேசி விட்டு செல்ல அதன் பின் அங்கே டாக்டர்ஸ் வந்து அவளை பரிசோதனை செய்து விட்டு அவள் நன்றாக இருப்பதாக சொல்லி விட்டு சென்றனர்.
இன்பா அங்கு இருந்து வெளியே வர சோனா, சார் அவள் இப்போ எப்படி இருக்கா என்று அழுது கொண்டே ஓடி வர.. ம்ம் நல்லா இருக்கா நீ சரியான நேரத்தில் போன் செய்யவும் தான் அவளை காப்பாற்ற முடிந்தது இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்ல வேண்டாம் நீ காலேஜ் ரெண்டு நாள் லீவ் போட்டு விட்டு அவள் கூட டைம் ஸ்பென்ட் பண்ணு என்று சொல்லி விட்டு கிளம்பினான.
சோனாவுககு இப்பொழுது தான் அவனை ஏன் கவ்யாவுக்கு இவ்வளவு பிடித்து இருக்கிறது இப்படி பைத்தியமாக சுற்றுகிறாள் என்று தோன்றியது என்ன மனிதன் இவன்! இப்படி ஒருவன் இருப்பானா! இவனோடு இருக்கும் பெண் மிகவும் கொடுத்து வைத்தவள் என்று விவேகாவை நினைத்து கொண்டாள்.
ராஜ் அங்கு இருந்து புறப்பட்டு இன்பா வை பார்க்க ஸ்டேஷன் சென்றான் இங்கு தான் அடுத்த பிரச்சனையே உருவானது. அவனை பார்த்ததும் இன்பா உள்ளே விட சொல்ல
வருண், அத்தான் இங்கே என்ன பண்றீங்க.. ம்ம் ஒன்னும் இல்ல மச்சான் ACP சாரை பார்க்க வந்தேன் அவர்கள் உரையாடல் கேட்டதும் இன்பாவுக்கு உள்ளுக்குள் கோபம் அதுவும் இவன் அத்தான் என்று அழைப்பதும் அவன் மச்சான் என்று அழைப்பதும் பற்றி கொண்டு வந்தது. வருன் என கணீர் குரல் அத்தான் நீங்க போங்க என்று பயந்து கொண்டே அனுப்பி வைத்தான்.
ராஜ் உள்ளே வந்ததும் இன்பாவை பார்த்து பேச வர அதற்குள்
இன்பா, ம்ம் உன்னால் ஒரு பொண்ணோட மானம் காப்பாற்ற பட்டது.
ராஜ், நான் அந்த காலேஜ் வேலையை விடலாம் அப்டின்னு இருக்கேன் விவே குட்டி என் கிட்ட என்று எதோ சொல்ல வந்தவன் பின் தன்னை சுதாரித்து கொண்டு விவேகா என் கிட்ட பேச மாட்டா அதுக்கு காரணம் நான் தான் இப்போ உங்களை பார்க்க வந்த விஷயம் உன்னோட காதலி அப்டின்னு தான் அந்த மினிஸ்டர் பொண்ணை தூக்கினான்க உன் கூட இருக்கும் போது அவளுக்கு பிரச்னை மட்டும் தான் வரும், உனக்கு இருக்க எல்லா எதிரியோட டார்கெட் உன்னை சேர்ந்தவர்கள் மட்டும் தான் சோ அதனால் அவளை நல்லா பார்த்துக்க.. என்று சொல்லி கிளம்பி விட அவனுடைய பேச்சு இன்பாவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.
இன்பா ஆழ்ந்த சிந்தனைக்கு சென்றான். அதன் பின் தன்னை சரி செய்து கொண்டு வேலையில் கவனம் செலுத்தினான் ஆனாலும் எந்த வேலையும் ஓட வில்லை. விவேகா இரண்டு நாள் காலேஜ் அவன் சொன்னதை போல் லீவு போட்டு கொண்டாள்.
சுபா சரவணன் வீட்டுக்கு வந்தாள். தேவகி, வா சுபா எப்படி இருக்க.. ம்ம் நல்லா இருக்கேன் ஆன்டி சரவணன் வந்தாச்சா? அவனா இன்னும் வர நேரம் இருக்கு என்று கேள்வியாக அவளை பார்க்க சுபா, சரவணன் பாஸ் ரகு வுடைய கம்பனி ஒரு புராஜக்ட்ல சேர்ந்து வேலை செய்கிறோம் அதனால் தான் பார்க்க வந்தேன் அண்ட் இந்த ஃபைல் அவர் வந்தால் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி கொடுத்து சென்று விட்டாள்.
சரவணன் ஏற்கனவே கோபமாக வீட்டுக்கு வந்தான் இங்கே வந்ததும் சுபா கொடுத்த ஃபைல் பற்றி சொல்லி தேவகி நீட்ட அதை பிரித்து பார்த்தவனுக்கு இன்னும் பற்றி கொண்டு வந்தது. எவ்வளவு திமிர் நான் நினைத்தே பார்க்க வில்லை டி திமிர் பிடித்தவளே அடங்காத கழுதை ஆடு டி உன்னை கூடிய சீக்கிரத்தில் அடக்குகிறேன். என்று நினைத்து கொண்டு உள்ளே சென்றான்.
அடுத்த நாள் என்ன நடக்குமோ என்று விடிந்தது. விவேகா வழக்கம் போல் காலேஜ் செல்ல கிளம்பினாள் இன்று நேரமே கிளம்பி பஸ் ஸ்டாப் வந்து நின்று கொண்டு இருந்தாள். அவள் நின்று கொண்டு இருப்பதை பார்த்த இன்பா அவள் அருகில் சென்று இன்னிக்கு ஈவ்னிங் போலீஸ் கிரவுண்டு கிட்ட வந்திடு பேசணும்..
என்ன பேசணும் இங்கேயே பேசுங்க என்னால் வர முடியாது.
இன்பா, இந்த ஒரு முறை மட்டும் வாங்க மேடம் இனி உங்களை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்..
விவேகா அவன் முகத்தில் எதுவும் தெரிகிறதா என்று பார்க்க ஒன்றும் கண்டு பிடிக்க முடிய வில்லை.
இன்பா, ஹே வர என்று சொல்லி விட்டு கிளம்பினான்.
அவன் பேசி விட்டு செல்வதை அங்கே நடந்து வந்து கொண்டு இருந்த வெண்பா பார்த்து விட்டு அடி பாவி எப்படி டி சண்டை போட்டு உடனே ஒட்டி கொள்கிறாய் அப்படி என்ன பேசி இன்பாவை மயக்கி வச்சு இருக்க..
விவேகா முகத்தில் வெட்கம் ஆனால் அதை வெளி காட்டி கொள்ளாமல் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லி விட்டு சிரித்து சமாளித்து விட்டு காலேஜ் சென்றாள். அவள் மனதில் அவனை பார்க்கும் எண்ணம் மட்டுமே நிறைந்து இருந்தது. என்ன பேச போகிறான் இந்த இடியட் என்று நினைத்து சந்தோஷமாக சிரித்து கொண்டே சென்றான்.
மித்ரன், டேய் அவள் கிட்ட என்ன பேச போற..
உனக்கு எப்படி தெரியும்..
வெண்பா தான் சொன்னாள்..
இன்பா, ஒன்னும் இல்ல மச்சி சும்மா தான் என்று சமாளித்து விட்டு சென்றான். அதே போல் மாலை ஆக புன்னகை முகத்துடன் விவேகா போலீஸ் கிரவுண்ட் வந்தாள்.
சுற்றிலும் தேடி பார்த்து கொண்டே அருகில் விளையாடி கொண்டு இருந்த குழந்தைகளுடன் பேசி கொண்டு இருந்தவள். சிறிது நேரம் கழித்து டைம் பார்க்க அப்பொழுது இன்பா அங்கு வந்தான். அவன் வந்தது அவளுக்கு தெரிய வில்லை.
பிரித்வி, ஹே விவேகா உன்னை பார்க்க அந்த சிடுமூஞ்சி போலீஸ் வந்து இருக்கான் பாரு..
உன் டாடி கூட போலீஸ் தான் நியாபகம் இருக்கா டா..
விவேகா, டேய் வாண்டு அடி வாங்க போற.. என்று திரும்பி பார்க்க தூரத்தில் இன்பா முகத்தை கடுமையாக வைத்து கொண்டு வந்து கொண்டு இருந்தான்.
ஹே போடி நான் என் மம்மி கிட்ட சொல்லவா நீ டெய்லியும் அவன் கூட தானே சுத்துற..
விவேகா, பிரித்வி செல்லம் அதான் நான் உனக்கு தேன் மிட்டாய் வாங்கி தரேன் அப்புறம் என்ன யார் கிட்டயும் சொல்லாத டா..
பிரித்வி, அப்போ இன்னிக்கி கொடு எங்கே..
விவேகா பையில் இருந்து தேடி பார்க்க எதுவும் இல்ல, ஹே பிரித்வி ஆரஞ்சு மிட்டாய் இருக்கு டிரை பண்ணி பாரேன்…
பிரித்வி, என்ன டி விவேகா நாளைக்கு எனக்கு தேன் மிட்டாய் வேணும் நான் ஸ்கூல் பஸ் போகும் போது அதுக்கு முன்ன நீ வந்து தர..
டேய் நீ ரொம்ப ஓவரா போற மம்மி கிட்ட சொல்லவா..
பிரித்வி, ஹேய் விவேகா போடி அவன் வந்து விட்டான் நாளைக்கு எனக்கு வெனும் ரெடியா இரு என்று சொல்லி விவேகாவின் எதிர் வீட்டு பையன் பிரித்வி என்கிற சுட்டி வாண்டு ஓடியது.
விவேகா சிரித்து கொண்டே எழுந்தவள் அவனை பார்த்து “உங்களுக்கு வர இவளோ டைம் எவ்ளோ நேரம் வைட் பண்றது , என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க எனக்கு டைம் ஆகுது..
இன்பா அவளை தீர்க்கமாக பார்த்து ஒவ்வொரு விஷயமாக சொல்ல அவள் முகம் மாறியது.
அப்படி இன்பா என்ன சொன்னான்….?
தொடரும்…
இந்த இன்பா இருக்கானே அடுத்த பிரச்னைக்கு கால் நட்டு வைத்து விட்டான். இனி வேற விவேகாவை பார்க்க போறான் சும்மா இருந்த அவளை சீண்டி விட்டு விட்டான். அப்படி என்ன தான் சொல்லி இருப்பான் உங்களுக்கு எதுவும் ஐடியா இருந்தால் ஒரு கமென்ட் போடுங்க..
அண்ட் இன்பா எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் அப்டின்னு நினைக்கும் ஃபேன்ஸ் எல்லாம் ஒரு ஹார்ட் தட்டி விடுங்க.. யோசித்து தட்டி விடுங்க..
Episode 204
விவேகா சிரித்து கொண்டே எழுந்தவள் அவனை பார்த்து உங்களுக்கு வர இவளோ லேட்டா..
என்ன விஷயம் சொல்லுங்க எனக்கு டைம் ஆகுது.. என்று சொல்லி கொண்டே அவளது காலேஜ் பேக் எடுத்து தோலில் மாட்டி கொண்டு புத்தகத்தை எடுத்து கொண்டு கேட்க
இன்பா அவளை தீர்க்கமாக பார்த்து பேச ஆரம்பித்தான்.
அன்னிக்கு வெண்பா கிட்ட என்ன சொன்ன..
ஏன் இப்போ என்ன ஆச்சு?
கேட்ட கேள்விக்கு பதில் வேணும்…
விவேகா அவளிடம் சொன்ன அனைத்தும் கூற..
இன்பா சோம்பல் முறித்து கொண்டே முகத்தில் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் சரி ஓகே அப்படியே இனி இருக்கலாம்..
விவேகா, நீங்க சொல்றது புரியல..
என்ன புரியலையா சரி நானே தெளிவா சொன்றன் கேட்டுக்கோ..இன்பா”நீ என்னை முதன் முதலில் பார்த்த போது காலேஜ்ல எல்லா ஸ்டூடண்ட்ஸ் முன்னாடியும் அவமான படுத்தியதுக்கு உன்னை பழி வாங்கணும் அப்டின்னு நினைத்தேன் ஆனால் உன்னை பார்த்ததும் உன்னை எப்படியும் அடையனும் அப்டின்னு தோணிச்சு…
விவேகாவுக்கு இதை கேட்டதும் கண்களில் நீர் கோர்த்து கொள்ள இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
இன்பா, அதனால் நிறைய பிளான் போட்டேன் பெங்களூர்ல உன்னை எடுத்துக்க நிலை இல்ல அண்ட் டெல்லில வேற ஒரு பிரச்னை, சரி பக்கத்தில உன்னை வைத்து கொண்டால் எதுவும் சந்தர்ப்பம் கிடைக்கும், அப்போ உன்னை அடைந்து அவமான படுத்தனும் அப்டின்னு நினைத்தேன் டி, ஆனால் ஒவ்வொரு தடவை உன்னை நெருங்கும் போது நானே உன் கிட்ட ரொம்ப பலவீனமா இருப்பது போல் எனக்கு தோணிச்சு..
நான் ரொம்ப கெட்டவன் ஆனால் கொஞ்சம் நல்லவன் சோ விட்டு விட்டேன்.
அதனால் என்னோட உண்மையான முகம் இது தான் சோ இனி என்னால் கஷ்ட பட முடியாது நீ சொன்னது சரி தான் என் பக்கத்தில் நிற்க கூட உனக்கு தகுதி இல்ல இதோட முடித்து கொள்வோம் நீ ரொம்ப கஷ்டப்படனும், அது தான் எனக்கு வேணும் இப்போ உன் கண்ணில் அதை பார்த்து விட்டேன், ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்லி விட்டு அவன் சொல்லி விட்டு ம்ம் என்னை பற்றி வெண்பா கிட்ட மித்ரன் கிட்ட எல்லாம் சொல்லி வைக்காத…..
விவேகா மனம் சுக்கு நூறாக உடைந்து போனது இது பொய் இது அத்தனையும் பொய் சத்தியமா இது என் ராகவ் இல்ல என் இன்பாவுக்கு இப்படி எல்லாம் பேச தெரியாது. என்று மனது உடைந்து அழுதாள். கண்களை துடைத்து கொண்டு அவன் அருகில் வேகமாக நடந்து இரு கைகளையும் முன்னால் அவன் செல்லாதவாரு நீட்டியவள்.
விவேகா, இது பொய் தான ராகவ்! சொல்லேன் இது பொய்!அப்டின்னு சொல்லு இன்பா!உன்னை பற்றி உன்னை விட எனக்கு தெரியும் நான் போசசிவ்னஸ்ல தான் உன் கிட்ட பேசாமல் இருந்தேன். உனக்கே நல்லா தெரியும் தானே நீ தான் என்னோட வீக்நஸ், உனக்கு எதுவும் பிரச்னையா இல்ல, நான் உன்னை ரொம்ப தொந்தரவு செய்கிறேனா! என் ராகவ்க்கு இப்படி எல்லாம் பேச தெரியாதே!அவனுக்கு எல்லாமே நான் தானே!.. என்று சொல்லி அவனை தொட கைகளை கொண்டு வர
இன்பா, ஹே ஸ்டாப் இட் யூ ஸ்டுபிட் டோண்ட் டச் மி .. என்று கைகளை தட்டி விட்டான். ஒரு தடவை சொன்னால் புரியாதா எனக்கு உன்னை பழி வாங்கணும் அப்டின்னு தான் இது எல்லாம் செய்தேன் “என்னை விட்டு போடி” என்று அவளை விட்டு வேகமாக நடந்து சென்று விட்டான்.
விவேகா மனம் நொறுங்கி போனது ஏனோ கண்ணீர் வர வில்லை நெஞ்சில் பாரம் ஏறி கொண்டது. அவள் நேராக வீட்டுக்கு சென்று கதவை அடைத்து கொண்டு அழ ஆரம்பித்தாள். இப்பொழுதே செத்து விட வேண்டும் என்று தோன்றியது. அவள் உள்ளே சென்ற சில நொடிகளில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. வெண்பா நின்று கொண்டு இருந்தாள்.
வெண்பா, விவேகா என்ன ஆச்சு உன் முகமே சரி இல்ல..
விவேகா, ஒன்னும் இல்ல நான் நல்லா இருக்கேன் உள்ளே வா என்று சமாளித்தாள்.
அவள் வந்து அமர்ந்து கொள்ள விவேகா, நீயே வந்தியா இல்ல இன்பா போக சொன்னானா.. வெண்பா ஒரு நிமிடம் திடுக்கிட்டு பின் தன்னை சுதாரித்து கொண்டு நான் தான் சும்மா உன்னை பார்க்க வந்தேன். என்று சொல்ல ஒ இரு ஃப்ரெஷ் ஆகி வரேன் என்று சொல்லி விட்டு உடை மாற்றி கொண்டு வந்தாள்.
கங்கா வேலையில் இருந்து வரும் வரை வெண்பா அங்கே இருந்தாள் அவள் வந்ததும் வெண்பா சென்று விட தன் அம்மாவுடன் சாப்பிட்டு விட்டு எதுவும் வெளியே காட்டி கொள்ளாமல் படுக்கைக்கு சென்று விழுந்து அழ ஆரம்பித்தாள்.
அப்பா என்னை எதுக்கு விட்டு போனீங்க என்னை அவன் ரொம்ப கஷ்டப் படுத்தி விட்டான். என் மனசு வெடிப்பது போல் வலிக்குது நான் உங்களோடு வந்து விடுகிறேன் எனக்கு வாழ பிடிக்கல என்று அழுது அழுது அடுத்த நாள் அவளுக்கு காய்ச்சலே வந்து விட்டது. காலேஜ் சென்றவள் நேராக ஆதி வீட்டுக்கு சென்று விட்டாள். ஒரு வாரம் காலேஜ் வரவே இல்லை. மனதில் ஆயிரம் எண்ணம் கவலை எல்லாம் ஓடி கொண்டு இருந்தது. இப்படியே ஒரு வாரம் முடிய விவேகா அவளுடைய வீட்டுக்கு சென்றாள்.
அடுத்த நாள் ராஜ் வீட்டுக்கு வந்து இருந்தான். கங்கா அவனை பார்த்ததும் முகம் மாறி இருந்தது. விவேகாவுக்கு அவனை சுத்தமாக பிடிக்க வில்லை.
கங்கா, வா ராஜ் எப்படி இருக்க வீட்டில் எல்லாம் நல்லா இருக்காங்களா?
ம்ம் நல்லா இருக்காங்க அத்தை என்று சொல்லி விட்டு ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்தவன். அதன் பின்” அத்தை இந்தாங்க இது கோர்ட் ல அம்மச்சி, தாத்தா போட்ட கேஸ் பற்றிய வாபஸ் லெட்டர், அப்புறம் இது வந்து மாமா வாங்கிய வீட்டுக்கும் அம்முச்சி தாத்தாவுக்கும் எந்த பங்கும் இல்ல அப்படின்ற வக்கில் முன்னாடி ரிஜிஸ்டர் ஆபீஸ்ல ஸ்டம்ப் பண்ண பத்திரம் ,நீங்க இதை கோர்ட் ல காட்டி எப்போ வர சொன்னாலும் அவங்க வருவாங்க இனி அது உங்க வீடு இதுக்கு தான் நான் வந்தேன்.”
இதை கேட்டதும் கங்கா அதை ஆர்வமாக வாங்கி பார்க்க கண்களில் கண்ணீரே வந்து விட்டது. ராஜ், அத்தை அழ வேண்டாம் நான் மாமாவுடைய வளர்ப்பு உங்களை யாரும் கஷ்ட படுத்த விட மாட்டேன். என்று சொல்லி கிளம்ப ராஜு நான் நான் உன்னை தவறா நினைத்து விட்டேன் ஆனால் நீ உண்மையாகவே என் வீட்டுக்காரர் பெயரை காப்பாற்றி விட்ட ரொம்ப நன்றி என்று கையெடுத்து கும்பிட ராஜ், என்ன அத்தை என் கிட்ட போய் நன்றி சொல்றீங்க.. என்று சொல்லி விட்டு விவேகாவை ஒரே ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான்.
அடுத்த நாள் விவேகா ஒரு முடிவுடன் நேராக இன்பாவை சென்று பார்த்து விட வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் அது முடியாதே அவன் கார் நிறுத்தும் இடத்துக்கு சென்று காத்திருந்தாள். இரவு 9.30மணி வரை காத்திருந்தாள்.
அதே போல் அவனும் வந்தான். விவேகா, ஹலோ சார் என்று அழைத்து கொண்டே அவன் முன் வந்து நின்றாள்.
இன்பா, என்ன என்பதை போல் பார்க்க அவள் கழுத்தில் அன்று பாவை போட்டு விட்ட மணி அதை அவன் முன்னால் கழுத்தில் இருந்து அறுத்தாள். அது சிதரவில்லை தங்க கம்பியில் கோர்க்கப்பட்டது அதுவும் தரமான மணி ஆனால் அவள் கழுத்தில் சிவந்த தடம் தெரிந்தது இழுத்த வேகத்தில் பதிந்து போனது. கலட்டி அதே பெட்டியில் வைத்து இருந்தாள் அதே போல் லேப் டாப், மற்றும் இது வரை இன்பா அவளுக்காக செலவு செய்த அத்தனை பணமும் அவள் வேலை செய்து சம்பாதித்த காசு மொத்தமும் சேர்த்து அவன் காரின் முன்னால் வைத்து விட்டு அவனை பார்த்து தீர்க்கமாக பேச தொடங்கினாள்.
இது எல்லாம் நீங்க என்னை அவமானம் செய்ய யூஸ் பண்ண பொருள் இதை எல்லாம் நீங்க விருப்ப பட்டால் வைத்து கொள்ளுங்கள் இல்லை தூக்கி குப்பை தொட்டியில் போடுங்க என்று சொல்லி விட்டு தெனாவட்டாக அனைத்தும் வைத்து விட்டு அவள் திரும்பி செல்ல..
இன்பா, இதில் எவ்ளோ பணம் இருக்கு என்று எடுத்து எண்ண ஆரம்பித்தான்.அவனும் அவளுக்கு சலைத்தவன் இல்லையே..
ஆனால் இன்பாவை விட அவள் பன்மடங்கு அகங்காரம் கொண்டவளாக இருந்தாள்.”அதில் இன்னும் உங்களுக்கு 25,000 தர வேண்டி இருக்கு கூடிய சீக்கிரத்தில் தந்து விடுவேன் அப்புறம் முக்கிய விஷயம் இனி இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை எங்க வீட்டுக்கு போக போறோம் அதுக்கு கூட வாடகை எவ்ளோ அப்டின்னு சொன்னால் இது வரைக்கும் ஃப்ரீயா இருந்ததுக்கு கணக்கு போட்டு சொல்லுங்க கொடுத்து விடுகிறேன். என்று சொல்லி விட்டு அவள் அந்த இடத்தை விட்டு செல்ல அவன் ஒரு பெரு மூச்சை விட்டு அதை எல்லாம் அவன் காரின் பின் சீட்டில் எடுத்து போட்டான்.
விவேகா கண்களில் அவன் மேல் வெறுப்பு மட்டுமே இருந்தது. அந்த வாரத்திலேயே விவேகா கங்கா கிட்ட டார்ச்சர் செய்து வீட்டை காலி செய்து விட்டு தன் அப்பா வாங்கிய வீட்டுக்கு திரும்பவும் மாற எல்லா வேலையும் முடித்து விட்டு ஒரு ஃப்பைனல் டச் தரமான சம்பவமாக கொடுக்க வேண்டும் இன்பாவுக்கு எதற்கும் எதிலும் நான் சளைத்தவள் இல்லை என்று காட்டி விட்டு தான் வர வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருந்தாள்.
ராஜுவுக்கு போன் செய்தாள். விவேகா, அத்தான்..சொல்லு விவே குட்டி..
பிளீஸ் போதும் உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.. இதை கேட்டதும் ராஜ் மனம் வலித்தது.
ராஜ், சொல்லு விவேகா..
விவேகா, இது வரை காட்டில் என்ன விளைச்சல் போட்டீங்க எவ்ளோ வந்தது அது பற்றி வருண், என் அம்மா யாரும் உங்க கிட்ட கேட்டது ஐ மின் தாத்தா கிட்ட கேட்டது இல்ல அதனால் எனக்கு அப்பா போனதில் இருந்து எவ்ளோ லாபம் வந்ததோ பாதி பங்கு அவங்க கிட்ட சொல்லி கொண்டு வந்து கொடுத்து விடுங்கள். இதை நான் அந்த வீட்டு பொண்ணா கேட்கிறேன்..
விவேகாவின் பேச்சில் அவன் வாயில் இருந்து வார்த்தையே வர வில்லை. விவேகா, அத்தான் நான் பேசியது கேட்குதா இல்ல அவுட் புட் வருமா? வராதா?…
ராஜ், ம்ம் நான் ரெடி பண்ணி கொண்டு வருகிறேன். விவேகா, நீங்க கொண்டு வர வேண்டாம் நானே வந்து வாங்கி கொள்கிறேன் என்று சொல்லி விட்டு போன் கட் செய்தாள்.
விவேகா சொன்னதை போலவே ராஜ் பணத்தை ரெடி செய்து கொண்டு வர அவளது பாட்டி, இது நம்ம விவேகா கேட்டாலோ சித்ரா, அவளுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா டா அவள் கேட்டாள் என்றால் நீ கொடுத்து விடுவாயா..
அம்மா இது அவங்க மற்றும் பெரிய மாமா உரிமை நமக்கு இதில் எந்த உரிமையும் இல்ல கொஞ்சம் அமைதியா ஒரு வருண் போலீஸ் தெரியும் தானே என்று சொல்ல அவர்கள் வாயை மூடி கொண்டனர்.
ராஜ் அவளிடம் பணத்தை கொடுக்க விவேகா கண்களில் ஒளியுடன் நெட்டி முறித்து கொண்டே வருனை அழைத்து கொண்டு வசுமதி வீட்டுக்கு சென்றாள்.
அங்கே வசுமதி மட்டும் இருக்க மேம் என்று அனுமதி கேட்டு உள்ளே சென்றதும் பணத்தை வைக்க விவேகா என்ன இது?
அவள் வாடகை பணம் என்று சொல்ல வசுமதி முகம் மாரியது. பூட்டி கிடக்கும் வீட்டுக்கு எதுக்கு மா வாடகை இப்போ என்ன அவசரம் எதுக்கு இங்கே இருந்து போறீங்க உங்க அண்ணா இங்கே தானே இருக்கான் அந்த வீட்டை வாடைக்கக்கி விட்டால் படிப்பு செலவுக்கு உங்க அம்மாவுக்கு உதவியா இருக்கும் தானே..
விவேகா, உங்க இந்த குணம் ஓகே தான் மேம் ஆனால் இது நிதர்சனதுக்கு ஒத்து வராது. இதை நீங்க வாங்காமல் போனால் எனக்கு அதை ஏற்று கொள்ள முடியாது. அதுவும் தவிர யாரையும் ஏமாற்றும் எண்ணம் எனக்கு இல்ல மேடம் எங்க கிட்டயும் கொஞ்சம் சொத்து இருக்கு இப்போ எங்க அத்தான் வீடு ஓகே தான் அவங்க எந்த பிரச்னையும் பண்றது இல்ல சோ ஏற்று கொள்ளுங்கள் என்று வசுமதி வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க மறுக்க வைத்து விட்டு மேம் ஒரே ஒரு முறை மட்டும் உங்களை கட்டி கொள்ளவா!
வசுமதிக்கு என்னவோ போல் ஆகி விட்டது. என்ன டி ஒரு மாதிரி பேசுற என்ன ஆச்சு என் வாயாடிக்கு முகம் எல்லாம் சுணங்கி போச்சு எதுவும் பிரச்னையா?
இல்ல மேம் நான் நல்லா இருக்கேன் இப்போ வரீங்களா இல்ல நான் போகவா என்று கண் சிமிட்டி கூப்பிட வசுமதி அவளை அணைத்துக் கன்னத்தில் முத்தமே கொடுத்து விட்டார் அவர் கண்கள் கலங்கி போனது. வருண் விவேகாவிடம் அபுரம் பேசி கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.
விவேகா, ஓகே மேம் நான் போறேன்..
ஹே அடி வாங்க போற..
இல்ல மேம் இனி இங்கே போர் அடிக்குது நான் வர மாட்டேன் என்று சொல்லி கண்களில் வந்த கண்ணீரை அடக்கி கொண்டு சென்று விட்டாள்.
இல்ல மேம் இனி இங்கே போர் அடிக்குது நான் வர மாட்டேன் என்று சொல்லி கண்களில் வந்த கண்ணீரை அடக்கி கொண்டு சென்று விட்டாள்.
அவள் சென்ற சிறிது நேரத்தில் இன்பா வீட்டுக்கு வந்தான். மேலே படியில் ஏறியவன். வசுமதி அமைதியாக இருப்பதை பார்த்து திரும்ப கீழே வந்தவன் “மாம் வாட் ஹப்பன்?எதுக்கு இப்போ இப்படி இருக்கீங்க, என்ன இது பணம் இங்கே இருக்கு?”
வசுமதி, விவேகா தான் கொடுத்து விட்டு போனாள்.
எதுக்கு?
அவள் இங்கே இருந்து அவங்க வீட்டுக்கு கிளம்பி விட்டாள் டா எனக்கு அவள் இங்கே வந்து பேசிட்டு போனது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு அவள் இங்கே இருந்து போனது எதோ ஒரு மாதிரி இருக்கு ராகவ் என்று வருத்த பட்டு சொல்ல..l
இன்பாவின் கைகள் இறுகியது. அப்படி என்ன சொன்னா என்ன சொல்லிட்டு போனாள்.?
வசுமதி, ஒன்னும் இல்ல விடு..
இன்பா, மாம் சொல்லுங்க என்ன சொன்னாள்..
வசுமதி விவேகா வந்து சொல்லி சென்ற அனைத்து விஷயமும் சொல்ல..
இன்பா, அவள் போறதுக்கு உங்களுக்கு என்ன கவலை இவளோ எதுக்கு ரிஆக்ட் ஆகுறீங்க இதுக்கு எல்லாம் அவளுக்கு தகுதியே இல்ல மாம்..
வசுமதி, உனக்கு ஒரு பெண்ணை பற்றி என்ன தெரியும் அவள் மாதிரி நான் ஒருத்தியை பார்த்ததே இல்ல இருக்குற கஷ்டத்தை இல்லாமல் செய்வா டா.. எனக்கு அவள் இங்கே இருந்து போவது பிடிக்கல எதோ ஒரு மாதிரி இருக்கு அவளை எங்கே பார்த்தாலும் முயல் மாதிரி துள்ளி கிட்டு வருவா டா ஆனால் ஏன் இந்த பொன்னு இப்படி பன்றாண்ணு தெரியலையே என்று அவள் அறைக்கு சென்றாள்.
இன்பாவுக்கு இதை எல்லாம் கேட்டு அவள் மேல் இன்னும் கோபம் வந்தது. நேராக அவளை பார்க்க கங்காவிடம் பேச வீட்டுக்கு சென்றான். ஆன்டி! ஆன்டி! உள்ளே வரலாமா!
விவேகா, ஓ வீட்டு ஓணரா இல்லையே இது கோட்ரெஸ் ஆனாலும் நமக்கு வாடகை தானே என்று சொல்லி கொண்டே கைகளை தட்டி கொண்டே விவேகா வந்தாள்.
இன்பா, ஆன்டி எங்கே?
என்ன ஆச்சு ஸார் பணம் சரியா தானே கொடுத்து விட்டு வந்தேன் அதுவும் இந்த மாச ரெண்ட்ட கூட கொடுத்து விட்டேனே!
ஹே வாயை அடக்கு டி…
அதை சொல்ல நீ யாரு டா..
இன்பா, நான் உன் கிட்ட பேச வரல,
விவேகா, அப்போ வெளியே போடா..
ஆன்டி எங்கே நான் அவங்கள பார்க்கனும்.
அவள் எழன புன்னகையை உதிர்த்து விட்டு உன் வெட்டி பேச்சை கேட்க என் அம்மாவுக்கு நேரம் இல்ல என்ன விஷயம்..
இன்பா, நீங்க எங்கேயும் போக வேண்டாம் அதை சொல்ல தான் வர சொன்னேன்.
அவளோ உன் தயவில் நான் இருக்க மாட்டேன் டா..
நீ இங்கே தான் டி இருக்கனும்..
அது உன் கனவில் கூட நடக்காது டா..
நீ எப்படி போரண்ணு நானும் பார்க்கிறேன் டி..
ம்ம் பாரு டா நல்லா பாரு என்னோட ரெண்டு காலில் நடந்து போக போறேன்..
இன்பா, உன் கால் இருந்தால் தானே அதை உடைத்து போடுவேன் டி..
விவேகா, அவனை பார்த்து எழன புன்னகை சிந்தி விட்டு கண்டு கொள்ளாமல் உள்ளே சென்று கதவை அடைத்து கொண்டாள்.
இன்பா வீட்டை சுற்றி பார்க்க ஏற்கனவே வீடு காலியாகி இருந்தது. இன்னும் ஒரு முறை வந்து சென்றால் மொத்த பொருளும் காலி செய்து இருப்பர்.
ஒரு சில மணி நேரம் காத்திருக்க கங்கா வருண் கூட பேசி கொண்டே வர அங்கே இன்பா, ஆண்டி என்ன திடீர்னு கிளம்புறேன் அப்டின்னு சொல்லி விட்டீர்கள்..
கங்கா, இல்ல தம்பி இதுக்கும் மேல் இங்கே உங்களுக்கு தொந்தரவா இருக்க கூடாது அது தான்..
என்ன ஆண்டி இப்படி பேசுறீங்க..
இல்ல தம்பி பாப்பாவுக்கு அவங்க அப்பா வீட்டில் இருக்கணும் அப்டின்னு சொல்லிட்டே இருக்கா அதான் நீங்க ஒன்னும் நினைத்து கொள்ள வேண்டாம் என்று ஒரு சில வார்த்தை பேசி விட்டு அவன் எதுவும் செய்ய இயலாமல் சென்றான்.
அடுத்து என்ன நடக்கும்..
ரெண்டு மாதம் கழித்து…
இதோ ஒரு குட்டி முன்னோட்டம் மார்கழி மாதம் காலை 5.00 மணிக்கு தலைக்கு குளித்து தாவணி கட்டி கொண்டு மங்களகரமா கையில் ஒரு செம்பு குடத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு பூஜா கூட விவேகா கிளம்பினாள்.
தொடரும்…
Comment யாருமே பண்ணாத இருக்கும் போதே நான் கண்டு பிடித்து விட்டேன் உங்களுக்கு ஸ்டோரி பிடிக்கல சரி தானே, என் ராகவ் எது செய்தாலும் சரியா இருக்கும் பொறுத்து இருந்து பாருங்க நீங்க எதிர் பாராத twist எல்லாம் நடக்கும்..
இப்போதும் உங்க கமெண்ட்க்கு வெயிட்டிங்..
Episode 205
இன்பா அந்த 13 வது கேஸில் பிஸியாக இருக்க அதற்குள் ஒரு மாதமே சென்று இருந்தது. குற்ற வாலியை நெருங்கும் நேரத்தில் வேறு ஒரு பிரச்னை வந்து விட்டது.
குரு இது தான் சரியான தருணம் அவளை இந்த முறை தூக்கி இருவருக்கும் பிரச்னை தர வேண்டும். இரு டா இன்பா நாயே அந்த மகிழினியை தூக்கி உனக்கு அந்த சூரியா அண்ட் என்னோட கியூட் குயின்க்கு சர்ப்ரைஸ்ஸ கொடுக்கிறேன் என்று புன்னகைத்து கொண்டான்.
விவேகா அவன் நினைத்ததற்கு மாறாக இருந்தாள். அப்படியே செல்ல பெங்களூரில் ஒரு மிகப்பெரிய சம்பவம் நடந்து போனது. மான் விழி, சூர்யா சென்று கொண்டு இருந்த கார் விபத்துக்கு உள்ளாகி இருக்க மான் விழி அவளை காரில் காண வில்லை.
இப்படியே ஒரு நாள் கழிந்தது. சூர்யா அடுத்த நாளும் கண் விழிக்க வில்லை
ராம் உடனே இன்பராகவனுக்கு கால் செய்து அனைத்து விஷயமும் கூற இன்பா அனைத்து வேலையும் ஒதுக்கி விட்டு உடனடியாக பெங்களூர் வந்தான்.
நேராக அவன் சூர்யா அட்மிட் செய்த மருத்துவமனைக்கு வந்தான். இன்பா நேராக ராமை பார்க்க செல்ல ராம் அங்கு நடந்த அனைத்து விஷயமும் ஒன்று விடாமல் கூறினான்.
கார்த்திக் இன்பா கிட்ட டாக்டர் கூறிய விஷயம் கூறினான்.
ராம் இன்பாவிடம் இப்போ என்ன பண்றது இன்பா சூர்யா எழுந்தால் முதலில் மகிளினியை தான் தேடுவான்.
நாங்கள் என்ன சொல்வது என்று ஒன்றுமே புரியவில்லை.
இன்பா -நீங்கள் விபத்து நடந்த இடத்துக்கு என்னை ஒரு தடவை கூட்டி போங்க
ஆதி, ஹரிஷ் இருவரும் இன்பனை விபத்து நடந்த இடத்திற்கு அழைத்து சென்றனர்.
ஒரு மணி நேரம் இன்பா அந்த இடத்தை சோதனை செய்தான் ஆனால் அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
இன்பா யாருக்கோ போன் செய்து பேசியவன் மீண்டும் சூர்யாவை வைத்து இருக்கும் ஹாஸ்பிடல் வந்தான்.
கார்த்திக் வேகமாக அவன் அருகில் வந்து மகிய பத்தி ஏதாவது தெரிஞ்சதா என்று கண்களில் கண்ணீர் கீழ விழாமல் கேட்க
இன்பா அவனிடம் இல்லை என்று தலை மட்டும் ஆட்டினான்.
ஒரு இருக்கையில் போய் கார்த்திக் அமர்ந்து கொண்டான்.
இன்பா எப்படி யோசித்து பார்த்தாலும் ஒன்றும் தெரியவில்லை.
அருகில் உள்ள cc tv footage எதாவது அந்த விபத்து நடந்த இடத்தில வழியில் இருக்கிறதா என்று மெதுவாக ஒவ்வொரு இடமாக பார்த்து கொண்டே வர
ஒரு இடத்தில் இருந்தது ஆனால் அதில் சூர்யா இருக்கும் ஒரு ஆம்புலன்ஸ் தான் இருந்தது அதை இன்பா ஒரு காப்பி செய்து கொண்டான்.
இன்பா மனதில் எந்த ஒரு clue வும் கிடைக்க மாட்டிங்குது. என்ன பண்ண என்று அவன் விபத்து நடந்த இடத்திற்கே மீண்டும் வந்து நின்று யோசிக்க ஆரம்பித்தான்.
அந்த விபத்து நடந்த இடத்தில் உள்ள அனைத்து திசையும் ஒரு முறை செக் செய்தான்.
அந்த containor எங்கு தேடியும் கிடைக்க வில்லை . நேராக சூர்யா இருக்கும் மருத்துவமனை வந்தவன்
ராம் கிட்ட அவன் சேகரித்த விஷயம் பற்றி கூற ஆரம்பித்தான்.
இந்த விபத்து சாதாரண மாக நடக்கவில்லை, அந்த லாரி எங்கும் இல்லை
அதனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு விபத்து அப்புறம்
சூர்யாவுக்கு எதிரிகள் யாராவது இருக்கிறார்களா.
என்ன இன்பா சூர்யாவுக்கு யார் எதிரி அப்படி யாரும் இல்லை.
இன்பா நான் அவனோட கால் logs , லொகேஷன், gps ட்ராக்ஸ் எல்லாம் செக் பண்ண சொல்லி இருக்கேன் அதோட ரிப்போர்ட் இப்போ வந்திடும்.
அவனிடம் கார்த்திக் மகி க்கு என்னாச்சு சார் என்று சுரத்தே இல்லாமல் கேட்க
எந்த ஒரு clue யும் இல்ல கார்த்திக்
சரி நான் ஹாஸ்பிடல் cc tv footage copy ஒன்னு வாங்கணும் அதுல எதாவது கெடைக்குதா அப்டின்னு பார்க்கலாம்.
என்று இன்பா, மித்ரனை வர சொல்லி இருவரும் தேவையான டீடெயில்ஸ் எடுத்து கொண்டு அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
முதலில் சூர்யாவின் கால்ஸ் ஹிஸ்டரி அனைத்தும் செக் செய்ய அதில் ஒரு தகவலும் இல்லை.
இன்பா ராம் க்கு கால் செய்து
நீங்கள் எதுக்கு அங்கே போனீங்க
சூர்யாவோட மகன் சக்தியை ஸ்கூல் ஜோன் பண்ண தான் போனோம்
இப்போ சூர்யா கிட்ட ஏதாவது அசைவு தெரியுதா
இல்ல இன்பா அப்படியே தான் இருக்கிறான்.என்று அவன் சொல்லிவிட்டு போன் வைத்தான்.
இன்பாவுக்கு இப்போது என்ன செய்ய என்று புரியவில்லை இன்பா போலீசா யோசி டா சென்டிமென்ட் fellow ஆ இருக்காத என்று மனம் சொல்ல
இன்பா இப்போது மித்ரன் கிட்ட வாடா நம்ப அந்த ஸ்கூல் க்கு ஒரு தடவை போய்ட்டு வரலாம் என்று அந்த ஸ்கூல் க்கு போய் செக் செய்ய அங்கே எதுவும் கிடைக்க வில்லை.
உடனே இன்பா வெளியே வந்து அந்த இடத்தை பார்த்தவன் எதிர் திசையில் வண்டியை ஓட்டினான்.
சென்று கொண்டே இருந்தவன் சிறிது தூரத்தில் வண்டியை நிறுத்தினான் அங்கு ஒரு ஆம்புலன்ஸ் நின்று கொண்டு இருக்க அதன் அருகில் சென்றான்.
பின் அந்த இடத்தை சுற்றி பார்க்க எதுவும் பிடி படவில்லை. இங்கு இருந்து தான் மகிழினி யை வேறு இடத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டான்.
பெங்களூர்ல் அவனுக்கு தெரிந்த போலீசை வர வைத்து விவரங்களை கூறி கண்டு பிடிக்குமாறு சொல்லிவிட்டு அவன் இடத்திற்கு செல்ல வண்டி எடுக்கும் போது இன்பாவுக்கு மித்ரன் கிட்ட இருந்து போன் வந்தது.
இன்பா வேகமாக மித்ரனை பார்க்க செல்ல அவன் அந்த cc tv footage ல இருந்து ஒரு சில நபர்களை சுட்டி காட்டினான்.
மித்ரன் கிட்ட இன்பா ஏய் அது தேஜு தானே அவள் என்ன பண்றா .
அவ டீன் ரூம் குள்ள போறா டா
அப்படின்னா சூர்யா க்கு இப்படி ஆனதுக்கு காரணம் அவ தானா
இன்பா சூர்யா அங்க இருக்கிறது safe இல்ல அவனை சீக்கிரம் வேற இடத்துக்கு மாத்தனும்.
அப்போ இதுல குரு பிரகாஷ் க்கு ஏதாவது சம்மந்தம் இருக்குமா
இன்பா -இல்ல மித்ரன் இதுல பெரிய விஷயம் இருக்கு ஆமா மகிழினி இந்த ஆறு மாசம் அவளுக்கு வந்த கால் history அவ எங்கே போனா வந்தா அப்டின்னு எல்லாம் கலெக்ட் பண்ணு டா
என்னடா சொல்ற
ஆமா மித்ரன் இது சூர்யாவுக்காக நடந்தது இல்ல
அப்படின்னா இது மகிழினிகாக நடந்ததா என்று சொல்லும்போதே மித்ரன் குரல் நடுங்கியது.
மித்ரன் – இன்பா இப்போ அவள் எங்கே டா இருப்பா
அங்கே குரு பிரகாஷ் முகத்தில் ஓங்கி ஒரு அரை விழுந்தது..
Spr தான் அறைந்து இருந்தான். Spr க்கு மான் விழி வேண்டும் ஆனால் பொறுமையாக அவளை அடைய நினைத்தான் ஆனால் அதற்குள் குரு தூக்கி விட்டான்.
இங்கு சூர்யாவின் வீட்டுக்கு வந்த இன்பா, மித்ரன், ஆதி, கார்த்திக் , ராம் மூவரும் வீட்டில் எதுவும் டீடெயில்ஸ் கிடைக்குமா என்று வீட்டை அலசி ஆராய்ந்தனர்.
ரகுவும், ஹரிஷ் ம் சூர்யாவை பார்த்து கொள்ள ஹாஸ்பிடல் ல இருந்தனர்.
அவர்கள் வீட்டின் அனைத்து இடங்களிலும் தேட கார்த்திக் சூர்யா மகிழினி படுக்கை அறை உள்ள அலமாரியில் தேடும்போது அந்த மகிழினி புகைப்படம் பார்த்து அவன் கண் கலங்கியது.
என்னோட மகி இப்படி இப்போ கஷ்ட படுகிறாளே இதற்கு நானும் ஒரு காரணம் தான் இப்போது அவள் எங்கு இருப்பாள் என்று நினைத்து நெஞ்சு குமிறினான்.
இன்பா, ஆதி, ராம் மூவரும் அந்த புகைப்படத்தை பார்த்து இந்த அளவுக்கு விரும்பி இப்படி ஒரே நாளில் இவர்கள் வாழ்க்கை தலைகீழாக மாறி விட்டதே என்று வருத்தம் கொண்டனர்.
அப்போது கார்த்திக் ஒரு இடத்தில் இருந்து கட்டுகளாக நிறைய கடிதம், லெட்டர் எடுத்து பார்த்து அதனை இன்பாவிடம் கொடுத்தான்.
ஆதி, இன்பா, மித்ரன் மூவரும் அதை பிரித்து பார்க்க அனைத்தும் அதில் பாதி
SPR கார்ப்பரேட்ஸ்,
மீதி நீலா ஹெல்த் கெர் சென்டர் என்று இருந்தது.
உடனே ஆதி இன்பா கிட்ட
சார் மகி என்கிட்ட ஒரு விஷயம் சொன்ன அவ படிச்சு முடிச்சதில் இருந்து காலேஜ் ல இவங்க செட் க்கு மட்டும் அடிக்கடி reunion condect பண்றாங்க அதுவும் காலேஜ் ல இருந்துன்னு சொன்னாள்.
அப்புறம் ஒரு நாள் pg பண்றதுக்கு வந்து join பண்ணுங்க அப்டின்னு சும்மா போன் பண்றாங்க அப்டின்னு சொன்னா.
இன்பா கண்டுகொண்டான் இதற்கு அர்த்தம் என்ன என்று
ராம் இன்ப கிட்ட
எங்களுக்கும் தான் நீலா ஹெல்த் care ல இருந்து 6 moths ஒன்ஸ் செக் பண்றாங்க இதுல என்ன சம்மந்தம் இருக்கு மகி காணாமல் போக
ராம் கிட்ட இன்பா
இது உனக்காக வைக்கிற செக் up இல்ல மகிழினி ய செக் பண்ண என்று அவன் கூற
இப்போது கார்த்திக், ஆதி, ராம் மூவரும் ஒரு அதிர்ச்சி அடைந்து பார்த்தனர்.
கார்த்திக் பேசினான் .
என்ன சார் சொல்லறீங்க நீங்கள் புதுசு புதுசா எது ஏதோ சொல்லறீங்க என்று கண்ணீர் அடைத்து கொண்டு கார்த்திக் கேட்க
ஆமாம் கார்த்திக் இதுல இன்னும் நிறைய விஷயம் இருக்கு மகிழினி ய பத்தி இன்னும் எனக்கு நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்.
ராம் கார்த்திககை பார்க்க அவன் இன்பா கிட்ட அவனுக்கு தெரிந்த அனைத்தும் கூறினான்.
அவள் படிச்சது அரசு பள்ளி
ரொம்ப அறிவான பொண்ணு
அவள் நல்லா பாடுவா,
ஆடுவா,
கணினி அறிவு ரொம்ப அதிகம்
இன்பா அவனை பார்த்து அவ்ளோ தானா வேற ஒன்னும் இல்லயா
அவ்ளோ தான் சார்
முழுவதும் சொல்லுங்க கார்த்திக் நான் போலீஸ்காரன்
கார்த்திக் ஒரு நிமிடம் அமைதிக்கு பின்
சார் நான் மகிய விரும்புனேன் என்று சொல்ல ஆதி அவனை வாயடைத்து பார்த்தான்
கார்த்திக் எல்லாவற்றையும் கூறினான் . இறுதியில்
சார் மகிக்கும் எனக்கும் ஒரே அலர்ஜி அந்த treatment கூட நாங்க அந்த நீலா ஹாஸ்பிடல் தான் பார்த்தோம் என்று கூறினான்.
மித்ரன் இன்பாவிடம் இதுக்கு எல்லாம் அந்த குரு தான் இன்பா காரணம் இப்போ மகிழினி எப்படி இருக்காங்க அப்டின்னு தெரியலையே.
இல்ல மித்ரன் முழுவதும் தெரியாமலேயே முடிவு எடுக்க கூடாது.
இன்பா இப்போது ஆதியை பார்க்க அவன் மகிழினி கல்லுரி காலங்களில் நடந்ததை கூற ஆரம்பித்தான்.
ஆதி சொன்ன அனைத்து விஷயமும் கேட்ட இன்பாவுக்கு இப்பொழுது தெரிந்து போனது மான் விழிக்காக தான் இந்த ஏற்பாடு அவளுக்காக spr எல்லாம் செய்து இருக்கிறான் என்று தெரிந்து கொண்டான் இதில் இருந்து எப்படி அவளையும் சூர்யா வையும் மீட்ப்பது என்று தான் ஓடி கொண்டு இருந்தது.
சூர்யா, மான் விழி இருவருக்குமே பழசு எல்லாம் மறக்க வைக்கும் வீரியம் மிகுந்த மருந்தை கொடுத்து மாற்றி இருந்தான் குரு பிரகாஷ்..
ஒரு இரண்டு நாள் கழித்து சூர்யா கண் விழித்து பார்க்க பழசு எல்லாம் மறந்து இருந்தான். அவனை அங்கு இருந்து கொஞ்சம் சரி செய்து தமிழ் நாடு அழைத்து வந்த இன்பா அவனை சரவணனுடைய ஆபீஸில் ஏற்கனவே கொலாபரேட்டிங் செய்து கொண்டு இருந்த புராஜக்ட்ல விட்டு மான் விழியை ஒரு வழியாக தேடி அங்கே அவர்களை இணைக்கவும் அடுத்தாதக spr எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்று அறிய சில போலீஸ்களை மப்டியில் போட்டு இருந்தான்.
இப்படியே ஒரு மாதம் சென்றது.
“மார்கழி திங்கள் அல்லவா!
மதி கொஞ்சும் நாள் அல்லவா!
இது கண்ணன் வரும் பொழுதல்லவவா! என்று கால்
மார்கழி மாதம் காலை 5.00 மணிக்கு தலைக்கு குளித்து தாவணி கட்டி கொண்டு மங்களகரமா கையில் ஒரு செப்பு குடத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு பூஜாவுடன் விவேகா கிளம்பினாள்.
நேராக கோவிலுக்கு சென்று அந்த குளிரில் அந்த தொப்பை விநாயகரை கும்பிட்டு விட்டு தண்ணீர் ஊற்றி வேண்டி கொண்டு வருவது தான் காலை வேலை மார்கழி மாதம் முழுவதும் இப்படி செய்தால் தான் கண்ணன் வருவானாம் ஆனால் தண்ணீர் ஊற்றுவது பிரம்மசாரி விநாயகரின் சன்னதிக்கு அது நமக்கு தேவை இல்லை கதைக்கு வருவோம்.
சரியாக அந்த கார் அருகில் நடந்து வரவும் விவேகா பூஜாவுடன் திடீர் என்று சிரித்து பேசி கொண்டும் மிகவும் சந்தோஷமாக இருப்பது போலவும் காட்டி கொண்டு நடந்து வருவாள் அந்த காரை தாண்டியதும் முகம் பழைய படி மாரியது.
பூஜா, விவேகா எனக்கு ஒரு டவுட்டு டி..
என்ன டி என்று சுறத்தே இல்லாத ஒரு பதில்
பூஜா, கோவில முகம் இப்போ இருக்க மாதிரி டல்லா இருக்கு ஆனால் சரியா அந்த கார் வளைவு வரும்போது மட்டும் என்ன அவ்ளோ சந்தோஷமா பிரிஷ்கா பதில் பேசிட்டு சிரித்து கொண்டு வர என்ன காரணம்..
விவேகா, எனக்கு அப்போ தான் சிரிக்கனும் அப்டின்னு தோணிச்சு.. என்று அவர்கள் பேசி கொண்டே செல்ல விவேகா மீண்டும் பழைய முகத்துக்கு மறுபடியும் சோக கீதம் வாசிப்பது போல் முகம் மாறியது.
இப்படியே மார்கழி மாதம் முழுவதும் அந்த கார் அதே இடத்தில் அரை மணி நேரம் நிற்கும்..
ஆமா அந்த கார்க்கு உள்ளே யார் இருக்காங்க?விவேகா, போய் கேளு.. ஹே வேண்டாம்..
என்று இருந்தாலும் பூஜாவுக்கு தெரிந்து கொள்ள ஆசை வந்தது.
மார்கழி கடைசி நாள் போகி அன்று விவேகா அவர்கள் வீட்டை சுற்றி உள்ள வாண்டுகளுடன் தண்ணீர் எடுத்து கொண்டு வந்தாள்.
பூஜா, என்ன டி இன்னிக்கி ரொம்ப துள்ளலா இருக்க.. விவேகா, ஹே ஒரு குட்டி கூலான் கல்லு எடுத்துக்கோ ஹே ஹரிஷ், வர்சு, தீபிகா, ரோஹித், அரவி, ஜனனி, பரத் எல்லாரும் ரெடியா..
ம்ம் எப்போவோ ரெடி விவேகா என்று அந்த வாண்டுகள் கத்த ஓகே டன் என்று கைகளை காட்டியது..
பூஜா ஒன்றும் புரியாமல் என்ன டி ரெடியான்னு கேட்கிறாய்! இங்கே என்ன நடக்குது?
விவேகா, இப்போ ஒரு சம்பவம் பண்ண போறோம்.. என்ன டி பண்ண போற என்று பூஜா கேட்க..
விவேகா, நம்ம போய் விநாயகர் டார்லிங்க குளிக்க வச்சுட்டு ரிடர்ன் வருவோம்மா!
ம்ம் ஆமா விவேகா என்று அந்த வாண்டு கூட்டம் கத்த..
அப்போ அங்கே நான் ஒரு கார் கிட்ட வரும்போது சைக காட்டுவேன்..
ம்ம் ஓகே..
விவேகா,அப்போ நான் ஸ்டோன் paper சீசர் அப்டின்னு கத்தும் போது அந்த கார் மேல நீங்க எல்லாம் இந்த கூலன் கல்லை தூக்கி போடணும் எப்படி இந்த விளையாட்டு!
இதை கேட்டு பூஜா திடுக்கிட..
வர்ஷினி, விவேகா சூப்பர் அப்போ நாளைக்கும் இதே போல் விளையாடலாமா!
ஹேய் முதலில் இன்னிக்கி விளையாடுவோம் அப்புறம் நாளைக்கு பார்க்கலாம் என்று சொல்ல..
பூஜா, ஹே வேண்டாம் டி உனக்கு எதுக்கு டி இந்த தேவை இல்லாத வேலை காலேஜ்க்கு டைம் ஆகுது வா போகலாம்..
ஹே எந்த ஊரில் 7மணிக்கு பஸ் வந்து உன் வீட்டு முன்னாடி வா பூஜா அப்டின்னு காத்து கொண்டு இருக்கு சும்மா வாடி..
பூஜா, மாட்டேன் நான் வரல அந்த கார் பளபளபபா இருக்கு ரொம்ப விலை அதிகம் போல் இருக்கு எதோ அன்னிக்கு உன் மேலே விடுவது போல் வந்ததுக்கு இது டூ மச் கண்ணாடி எதுவும் உடைந்தால் நாளைக்கு நம்மல பணம் கட்ட சொல்லி விடுவார்கள்.
நான் வரல விவேகா..
ஓ வரல அப்படி தானே..
தொடரும்…
அந்த காருக்குள்ள இருப்பது யாரு அப்டின்னு கமென்ட்ட போட்டு விடுங்க..ஆனால் உள்ளே ரெண்டு பேர் இருக்காங்க..
உங்க கமென்ட்டுக்கி வெயிட்டிங்..
இந்த சண்டைக்காரா ஸ்டோரி அடுத்து என்ன நடக்கும் அப்டின்னு ரொம்ப ரொம்ப ஆர்வமா இருக்க ரீடர்ஸ் எல்லாம் feb 1ல இருந்து வெண்ணிலா ஸ்டோரி ud பண்ண போறேன் அதில் 151 th episode ல இருந்து படிங்க அண்ட் continue வா அதை படிச்சா தெரிந்து கொள்ளலாம்…
Episode 206
விவேகா பூஜாவை முறைத்து விட்டு சரி நீ போ நான் என்னோட கூட்டத்தை வைத்து சம்பவம் பண்ணிக்கிறேன்..
பூஜா, ஹே சொல்றத கேளு டி இன்னிக்கி எனக்கு மாடல் லேப் பிளீஸ் என்னை விட்டு விடு டி நான் போய் புரோசிஜர் படிக்கணும்..
விவேகா, நீ இப்போ வரல அப்புறம் H2s கேஸ் மாதிரி நம்ம பசங்க கிட்ட ஒரு ஐடம் இருக்கு உன் மேல பாஸ் பண்ண சொல்லவா… என்று சொல்லி வர்ஷு நேற்று நைட் என்ன சாப்பிட்ட.. விவேகா நான் தந்தூரி சாப்பிட்டேன்..
ச்சீ நான் வெஜ் வேண்டாம் வெஜ் சொல்லு..
ஜனனி, விவேகா நான் முள்ளங்கி பருப்பு..
விவேகா, ம்ம் என்று மூக்கை பொத்தி கொண்டு ஜனனியை பூஜா அருகில் இழுக்க..
பூஜா, பிளீஸ் டி என்னை இப்படி எல்லாம் கொடுமை படுத்தாத வரேன் வந்து தொலையுரென்..
விவேகா, ஒரு பாம் மிஸ் ஆகி போச்சு இட்ஸ் ஓகே என்று சிரித்து கொண்டே அவர்கள் திட்டத்தை செயல் படுத்த தொடங்கினர். முதலில் அமைதியாக கோவில் சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்ப அங்கே ஆரவாரமாக குட்டி வாண்டிகளுடன் பேசி சிரித்து சந்தோஷமாக வந்து கொண்டு இருக்கும் விவேகாவை காரில் இருந்து அவன் பார்த்து கொண்டு இருந்தான்.
அருகில் இருக்கும் ஒருவன், டேய் இந்த மார்கழி மாத குளிருக்கு இதமா ஒரு கட்டிஙக போட்டால் மாஸ்ஸா நல்ல போதையா இருக்கும் அதை விட்டு காலங் காத்தாலை எதுக்கு டா இங்கே கூட்டி வந்த..
ஹே ஷட் அப்..
கக்கும் இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல இப்படியே எத்தனை நாள் பார்த்திட்டு இருக்க போற போய் பேசு டா..
சைலன்டா இரு டா***..
ம்ம் நீ இப்படியே பார்த்திட்டு இரு நான் தூங்குகிறேன் என்று சொல்லி அவன் தூங்க விவேகா சரியாக கார் வலைவுக்கு அருகில் வர நான்கு அடிகள் தான் இருந்தது.
பூஜா, வேண்டாம் டி..
ஹே போடி என்று சொல்லி சிசர்! பேப்பர்! ஸ்டோன்! என்று கொஞ்சம் மெதுவாக சொல்ல அந்த வாண்டு கூட்டம் ஸ்டோன் என்று கத்தி கொண்டே அந்த காரின் மேல் கற்கள் மழை பொழிந்து விட்டு ஒரே ஓட்டமாக ஓடி செல்ல விவேகா அந்த சில்வர் குடத்துடன் பூஜா கைகளை இழுத்து கொண்டு ஓடினாள்.
பூஜா, ஹே விவேகா என்னோட cu 29 ச்ச காப்பர் குடம் அய்யோ என் அம்மா அவ்ளோ தான் என்று கத்த கத்த இழுத்து வர..
விவேகா, ஹே என்ன டி நீ இப்படி இருக்க உன்னை யாரு குடத்தை போட்டு வர சொன்னது?
பூஜா, உன்னை யாரு என்னை இப்படி இழுத்து வர சொன்னது? உன்னோடது கூட சில்வர் தான் என்னோட cu 29 போச்சு..
விவேகா அவளை முறைத்து விட்டு கெமிஸ்ட்ரி லவ்வர்ன்னு காட்டுறியோ என்று முறைக்க..
பூஜா, ஒழுங்கா என் காப்பரை மீட்டு தா இல்ல அவ்ளோ தான் இங்கே நான் H2s பாஸ் பண்ண மாட்டேன் சல்பைடு ரெடி பண்ணவா..
விவேகா, என்ன சல்பைடு ?என்ன இருக்கு ?
பூஜா, அப்படியே 12 த் க்கு போய் சரியா இந்த practical புரோசிஜர உன் மண்டைக்குள் ஓட விடு பாப்போம்..
அதில்” அழுகிய முட்டையின் நாற்றம்” சல்பைடு உறுதி செய்ய பட்டது. செய்வன, பார்ப்பன ,அறிவன இப்போ உங்களுக்கு நியாபகம் வந்து இருக்குமே விவேகா..
இதை கேட்டு விவேகா, இப்போஉனக்கு என்ன வேணும் அந்த 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9 வேண்டும் அவ்ளோ தான..
பூஜா, இப்போ எலக்ட்ரானிக் கான்ஃபிகரேஷன் சொல்லும் நேரமா டி விவேகா உன்னை விட நான் கெமிஸ்ட்ரி ல ஒரு வெண்கள கிண்ணம் கூட இல்ல அது நீ தான் என் செம்பு குடத்தை மட்டும் வாங்கி கொடுத்து விடு டி..
விவேகா நெட்டி முறித்து கொண்டே ஜனனி ஹரிஷ் ஓடி போய் பூஜாவுக்கு அந்த குடத்தை எடுத்து வந்து விடுங்கள். இருவரும் யோசிக்க..
ஹே என்ன டா அவ்ளோ தானா..
இல்ல விவேகா அப்போ தேன் மிட்டாய் ரெடி பண்ணனும் ஆதி மாமா கிட்ட சொல்றியா..
விவேகா, நீ எடுத்து வந்தால் நான் ஆரஞ்சு மிட்டாயே தருவேன் அது அதை விட சூப்பரா இருக்கும்.. ..
ஹரிஷ், விவேகா ஏமாற்ற மாட்டியே?.
விவேகா, என் ஹரிஷ் டார்லிங் நிச்சயம் நீ ஸ்கூல் பஸ் ஏறுவதற்கு முன் உன் கையில் மிட்டாய் டெய்லி கொடுப்பேன் ஓகே வா.
ஜனனி, இவெனின் கூட தருவியா..
ம்ம் தருவேன் இப்போ போய் எடுத்து வாயேன்.. ஓகே டன் என்று சொல்லி விட்டு ஹரிஷ், ஜனனி இருவரும் மெது மெதுவாக அந்த குடத்தை எடுக்க நடந்து செல்ல..
விவேகா, என்ன ஆச்சு..
பூஜா, ஹே இப்போ தான் டி போனார்கள்…
விவேகா, முடிந்ததா..
இதோ குடத்தை எடுத்து விட்டார்கள் என்று பூஜா சிரித்து கொண்டே விவேகா கிட்ட சொல்லி விட்டு திரும்பி மறைந்து இருந்த இடத்தில இருந்து எட்டி பார்க்க..
பூஜா, போச்சு டி..
விவேகா, என்ன ஆச்சு சக்சஸ் தானே இந்த விவேகாவுடைய ட்ரைனிங் அப்படி…
பூஜா, ஹே அவனுங்க குடம் இல்லாமல் கையில் டைரி மில்க் சாக்லேட் சாப்பிட்டு கிட்டு வரானுக டி..
விவேகாவும் என்ன என்பதை போல் எட்டி பார்க்க..
அதற்குள் அந்த வாண்டுகள் இரண்டும் விவேகா உன் Orange மிட்டாய் வேண்டாம் டி என் கிட்ட டைரி மில்க் இருக்கு..
விவேகா, டேய் எங்க டா குடம்..
ஜனனி, விவேகா உள்ளே ஒரு மாமா குடம் கொடுத்தால் டைரி மில்க் தருவேன்னு சொன்னாங்க
விவேகா பூஜா ஷாக் ஆகி “அதனால”
அதனால் கொடுத்து விட்டு சாக்லேட் வாங்கி கிட்டு வந்துட்டோம்..
அப்போ குடம் ஜனனி, ஹே don’t feel நீ போனால் உடனே சாக்லேட் அப்புறம் குடமும் கொடுப்பதா அந்த மாமா சொன்னாங்க..
விவேகா, சரி பூஜா எனக்கு காலேஜ்கு டைம் ஆகுது போய் குடத்தை வாங்கிக்கோ உன்னை ஹரிஷ் பத்திரமா கூட்டி போவான்..
பூஜா, ஹே ஒழுங்கா வந்து என்னோட செம்பு குடத்த வாங்கி கொடு இல்ல அவ்ளோ தான்..
விவேகா, பூஜா நான் உனக்கு நிறைய சொப்பு சாமான் வாங்கி தரேனே நமக்கு இந்த செப்பு குடம் வேண்டாம் டி..
ஹே விவேகா இரு நான் கங்கா ஆன்டி கிட்ட சொல்றேன்.. அடி வாங்கினால் தான் நீ அடங்குவ..
அந்த வான்டுகள் விவேகா அம்முச்சி உன்னை அடிப்பாங்களா ஹே விவேகா அடி வாங்குவாலாம் என்று அவர்கள் சிரிக்க
டேய் நிறுத்துங்க டா! சிரிக்க கூடாது யார் கிட்டயும் சொல்ல கூடாது!.. என்று சொல்லி பூஜாவை பார்த்து
விவேகா, சரி வந்து தொலை இதோட உன் சகவாஷமே வேண்டாம். உன் கூட சேர்ந்தால் எல்லா கெட்ட பழக்கமும் வரும். அதை நான் சொல்லணும் டி என்று சொல்லி விட்டு நேராக அனைவரும் செல்ல..
விவேகா தைரியத்தை வரவளைத்து கொண்டு சென்றாள். ஜனணி, ஹே சீக்கிரம் வா விவேகா என்று அவளின் கைகளை பிடித்து அழைத்து செல்ல
பூஜா, ஹே நம்ம இங்கேயே நிற்கலாம் ஹே விவேகா நீ மட்டும் போய் வாங்கிட்டு வாடி..
விவேகா, கெட்டவளே இனிமேல் உன்னை கட் பண்றேன் டி.. என்று சொல்லி கொண்டே மெதுவாக நடந்து சென்றாள்.
அங்கே உள்ளே ஒரு குடத்தில் சாக்லெட் போட்டு ஒரு கை மட்டும் வெளியே நீட்டி மீண்டும் உள்ளே இழுத்து கொள்ள அதை பார்த்து பயந்து கொண்டே விவேகா அருகில் சென்றாள்.
கார் கண்ணாடி கதவுகள் மீண்டும் மேலே ஏற அவள் தட்டினாள். ஹலோ ஹலோ என் கொடம் வேணும் என்று தட்ட கதவுகள் ஜன்னல் கண்ணாடி மெதுவாக கீழே இறங்கியது. உள்ளே இருக்கும் நபரை பார்த்ததும் உள்ளுக்குள் பற்றி கொண்டு எறிந்தது.
நீயா! என்று அதிர்ச்சி ஆகி பின் குடைத்தை கொடு.. .
முடியாது..
விவேகா திரும்பி பூஜா நான் உனக்கு வேற குடம் வாங்கி தருகிறேன் என்று சொல்லி அவள் நகர உடனே அவளை கை பிடிக்க விவேகாவுக்கு கோபம் தலைக்கு ஏற அவன் கன்னத்தை பார்த்து ஓங்கி ஒரு அரை விட்டு அவனிடம் இருந்து குடைதை இழுக்க அவன் அவளை பார்த்து சிரித்து கொண்டே புருவத்தை தூக்க ஹே விடு டா..
உனக்கு வெ,மா,சு,சொ, இருக்கா?
அவன் புரியாமல் பார்க்க வெட்கம் மானம் சூடு சொரணை இருக்கா நீ எல்லாம் எதுக்கு டா சுற்றி கொண்டு இருக்க விட்டு தொலையென்டா…
பூஜா, விவேகா நான் வீட்டில் இருந்து யாரையும் வர சொல்லட்டா?
ம்ம் சொல்லுங்க மேடம் நானும் சொல்லுவேன் என் கார் மேல ஸ்டோன் பேபர் சிசர்ன்னு தூக்கி போட்டு ஓடுனது நீங்க தானே..
விவேகா, டேய் மானம் கெட்டவனே நீ தான் டா நான் போகும் எல்லா இடத்துக்கும் ஸ்லம் டாக் மாதிரி என் மேல் வண்டியை விட சீண்டிகிட்டே இருக்க இதோட என் மேல் கார் உரசி போற மாதிரி எத்தனை முறை காரை விட்ட சொரணை கெட்டவனே….
இதற்கு மேல் பொறுமை இழந்த அவன் ஆமா டி எனக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இல்ல டி இப்போ அதுக்கு என்ன செய்ய சொல்ற என்று சொல்லி கொண்டே வெளியே இறங்கினான்.
பூஜா அவனை இமை கொட்டாமல் ஒரு நிமிடம் பார்க்க..
ஹேய் பூஜா.என்று விவேகா அதட்ட
காரின் உள்ளே இருந்து ஒரு குரல் யாரு மா ஆனந்த வள்ளி!(யாரடி நீ மோகினியிள் சரண்யா மோகன் கேரக்டர் பேரு ஆனந்த வள்ளி)
ஓ கூட்டு வெரையா நான் இப்போவே அண்ணாவுக்கு கால் பண்றேன்.. ம்ம் சொல்லு எவன் வரான்னு பார்க்கிறேன்.
என்று அவள் சொல்ல அவளை அவன் ஒரே பிடியில் அவன் கைவலைவுக்குள் கொண்டு வந்தான்.
விவேகா….?
தொடரும்….
ம்ம் யாரு டா நீ புது ஹீரோவா?
நீங்க கமென்ட்ட போட்டால் தான் நான் யாருன்னு சொல்லுவேன்.. அண்ட் அவ்ளோ தான்…
.
Episode 208
இன்பா அவர்கள் அருகில் வேகமாக காரை கொண்டு போய் ப்ரேக் போட்டு நிறுத்த கார் வந்த சத்தத்தில் விவேகா பயந்து ஆதியின் கைகளை கட்டி கண்களை மூடி கொண்டாள்.
அவள் பயத்தில் அவன் கைகளை நடுங்கி கொண்டு பிடித்த காட்சியில் கோபமாக பேச வர சிவாவின் வாயில் எவண்டா ? அது என்று பேச வர அதற்குள் இன்பா கோபமாக இறங்கிட சிவா திடுக்கிட்டு அமைதி ஆகிட.. ஆதி என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க
விவேகா மெதுவாக கண்களை திறந்தாள். ஆதி அவள் கைகளை பிரித்து விட்டு “விவேகா நான் போயிட்டு வரேன் நீ எனக்கு அங்கே இருந்து கிளம்பும்போது கால் பண்ணு”.. என்று சொல்லி டாடா காட்டிட விவேகா அவனை திகைத்து பார்த்தாள். ஆதியின் பார்வையை பார்க்க அங்கே இன்பா நெருப்புடா என்பதை போல் நின்று கொண்டு இருக்க..
ஆதி அவளை பாவமாக விட்டு சென்றான். இன்பா தன் தலையை கோதி கொண்டு மீசையை முறுக்கி விட விவேகா அவன் மேல் கோபத்தில் இருந்தவள் வேகமாக காரின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.
இன்பா அவள் ஏறிய அடுத்த நொடி அவனும் காருக்கு வந்து இருந்தான். விவேகா அவனை பார்க்கவே இல்லை. இன்பாவும் அவளை பார்க்கவே இல்லை. சிறிது தூரத்தில் போய் நின்றது அவன் வெளியே இறங்கி காரின் பின் சீட்டை திறந்து அவளின் அருகில் சென்று அமர்ந்து அவள் முகத்தை பார்த்தான். அவள் இந்த இடத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் இருக்க..
ஒரு 5 நிமிடம் சென்று இருக்கும் விவேகா அவள் கை கடிகாரத்தை பார்த்து கொண்டே “எனக்கு இன்னும் 2 மணி நேரம் தான் டைம் இருக்கு அதுக்கு அப்புறம் நீங்க என்னை எந்த இடததில் விட்டீங்களோ அதே இடத்தில் விட்டு விடனும்”.
முடியாது… என்று சொல்லி அவள் முகத்தை அவனை பார்ப்பது போல் திருப்ப..அவள் எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தாள்.
இன்பா, என்ன டி எதுவும் பேசு அன்னிக்கு பொரிந்து தள்ளின..
பேச ஒன்னும் இல்ல..
அப்படியா அப்போ எதுவும் செய்..
அவள் முறைக்க.. ப்பா இதில் ஒன்னும் குறைச்சள் இல்ல என்று நினைத்து இல்ல அட்லீஸ்ட் சண்டை போடு உன்னோட வாய் அமைதியா இருந்தால் நல்லாவே இல்ல எவ்ளோ நிசப்தம் பாரு..
விவேகா அமைதியாக இருக்க இன்பா அவளை இன்னும் நெருங்கி அமர அவள் அப்படியே இருந்தாள் அவள் மேல் கைகளை போட்டான் அப்பொழுதும் அப்படியே இருந்தாள். அவள் கூந்தலில் உள்ள மல்லியின் வாசனையை இழுத்து கழுத்தில் முகம் புதைத்து முத்தம் கொடுக்க..
விவேகா அப்பொழுதும் அவள் அப்படியே இருக்க இன்பா, விவேகா என்ன டி மண்ணு மாதிரி அப்படியே இருக்க அட்லீஸ்ட் என்னை தள்ளி விடு..
விவேகா, “எனக்கு உன் மேல ஃபீலிங் இல்ல நீ என்ன பண்ணாலும் எனக்கு எதுவும் தோணாது”. இதை கேட்டதும் அவனுக்கு கோபம் வந்தாலும் அவளை எதுவும் செய்ய முடியாதே ஏன் என்றால் விவேகா தானே அவனுடைய பலவீனம் அதனால் எதுவும் பேசாமல் இன்பா அவள் முகத்தை பார்த்து “ம்ம் அப்படியா அப்போ எனக்கு ரொம்ப வசதியா போச்சு உன் மேல் எனக்கு ஃபீல்லிங்ஸ் பொங்கி வழியுது டி”.. என்று சொல்லி அவளின் இதழில் முத்தம் பதித்து உன் ஃபீலிங் ஸ்விட்ச் என் கிட்ட தான் இருக்கு என்று சொல்லி நேராக கடை வீதிக்கு வண்டியை விட்டான்.
இன்பா அவளை உள்ளே விட்டு காரை பூட்டி விட்டு ஒரு பிரம்மான்டமான கடைக்கு உள்ளே செல்ல அவன் சென்றதும் விவேகா தன் இயல்புக்கு வந்து அந்த இடத்தை சுற்றிலும் பார்த்தாள். இந்த ஸ்லம் டாக் எங்கே கூட்டி வந்து இருக்கான் இப்போ என்னை பூட்டி போட்டு எங்கே போயிருக்கான் என்று யோசித்து கொண்டு இருக்க ஒரு பத்து நிமிடத்தில் அவன் திரும்ப வந்தான்.
அவன் வந்த தோரணையில் விவேகா வாயை பிளந்த படி பார்த்து கொண்டு இருந்தாள்.
இன்பா அந்த ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டி, குங்கும கலர் ஷர்ட் அதை கை வரை மடித்து விட்டு இருக்க அவனது உடற் பயிற்சி யின் பயன் அந்த கை புடைத்து கொண்டு ஆண்மைக்கு அழகாக காட்டி கொண்டு இருந்தது. கழுத்தில் ஒரு இரண்டு பட்டன் கழண்டு இருந்தது அதில் அவன் கழுத்தில் உள்ள அந்த தங்க செயின் மின்னி கொண்டு இருக்க அந்த கண்ணாடியில் அந்த மீசையை முறுக்கி கொண்டு ஆராடி காத்து போல் அம்சமாக நடந்து வர அந்த கடையை சுற்றி இருக்கும் பெண்கள் கூட்டம் அனைத்தும் இவனை தான் பார்த்து கொண்டு இருந்தது.
அதில் ஒரு ஜோடி இன்பாவை பார்த்து விட்டு அந்த காதலி, டேய் அவனை பாரு என்ன மா இருக்கான் இது என்ன தலை முடி அசிங்கமா கலர் அண்ட் தேன்கா சுரண்டுனத போல் இருக்கு அங்கே அவனோட மீச பாரு எவ்ளோ அழகா இருக்கு நீ அவனை போல் ஆக முடியாது அது எனக்கு கொடுத்து வைக்கல ஆனால் உன்னோட ஸ்டைல அவனை போல் மாற்று டா என்று ஒருத்தி அவளுடைய காதலனுக்கு அறிவுரை சொல்லி கொண்டு இருந்தாள்.
இன்பாவை பார்த்த இன்னொரு பெண் “ஹலோ ஹன்ட்சம் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தலை பொங்கல் கொண்டாடலாமா”! என்று கேட்டு கொண்டே அருகில் வர அவன் அவளை பார்த்து கண்ணகுழி தெரிய ஒரு புன்னகை சிந்தி விட்டு நடக்க
ஹலோ சொல்லிட்டு போங்க ஓகே வா என்று கேட்க அவன் எந்த பதிலும் சொல்லாமல் நடந்தான்.
ச்ச என்னமா இருக்கான் அய்யோ கொல்றானே! அவனின் பின்னால் அந்த கடையின் பணியாள் அவன் போட்டு இருக்கும் ட்ரெஸ் பேக் செய்து கார் வரை வந்து கொடுக்க அவனை ஜொல்லு விட்டு பார்த்து கொண்டு இருந்த விவேகா இப்பொழுது எதுவும் பார்க்காதது போல் அமர்ந்து கொண்டாள். இன்பா அவளை பார்க்க அவள் வேறு எங்கோ பார்த்து கொண்டு இருக்க” ம்ம் இன்னும் எவ்ளோ நேரம் இப்படி இருக்க போறன்னு பார்க்கலாம் டி என்று சொல்லி கொண்டு காரை கிளப்பினான்”.
விவேகா வெளியே பார்ப்பது முடியை ஒதுக்குவது போல் அவனை பார்ப்பது எதெட்சியாக பார்ப்பது என இருக்க இன்பா மனதில் நிறைவான புன்னகை அங்கே கிருஷ்ணன் வீடு வந்ததும் அவன் இறங்கி விட்டு பின்னால் டிக்கியை திறந்து ஒரு பெட்டியை எடுத்து வந்தான்.
அவன் கதவை திறந்து அருகில் வந்து அமர அவள் தள்ளி அமர்ந்தாள். ச்ச.. ஓவரா பண்ணாத டி என்று அவள் முன் அந்த பெட்டியை நீட்டினான்.
என்ன இது ?
விவேகா, உன்னோட கிஃப்ட் எல்லாம் எனக்கு வேண்டாம்..
இன்பா, ஓ அப்போ மேடம்க்கு கிஃப்ட் வேணும் போலயே நெக்ஸ்ட் டைம் வாங்கி தரேன்..
விவேகா, நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன பேசிட்டு இருக்க..
இன்பா, ஹே சீன் போடாத டி என்று சொல்லி அவள் கழுத்தில் அந்த மணியை போட்டு விட்டான்.
வேண்டாம்..
இன்பா, என் டார்ள்ஸ்க்கு உன் மேல் ரொம்ப பாசம் இது இல்லாமல் நீ வந்தால் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க..
அதற்கு மேல் அவள் எதுவும் பேச வில்லை. விவேகா.. விவேகா.. பேபி.. இப்படி ஹர்ட் பண்ணாத டி.. என்று அவள் முகத்தை திருப்பி முத்தமிட அருகில் வந்தான்.
அவனின் இந்த பரிமாணத்தில் ஏனோ மனம் கரைய தான் செய்தது. அவள் இதழில் முத்தமிட அவள் கண்களை மூடி கொண்டு அந்த இருக்கையை பிடிக்க இன்பா அவளின் செய்கையை பார்த்து விட்டு உடனே விட்டான். அவள் வேகமாக மூச்சு விட விட்டான்.
விவேகா உடனே தன்னிலைக்கு வந்தவள். என்ன என்னை மயக்க பார்க்கிறியா இப்படி மேக் அப் பண்ணிட்டு வந்தால் நான் மயங்கி விடுவேனா..
இன்பா ஒரு பெரு மூச்சை விட்டு சரி டி ஒரு பெட் வச்சுக்கலாம்..
விவேகா, என்ன டா?
ம்ம் இனி நீயே என்னை வந்து கட்டிக்கும் வரை நான் உன்னை கட்டிக்க மாட்டேன். விவேகா ஆச்சர்யமாக பார்க்க..
விவேகா, அப்போ இனி என் பின்னாடி வர மாட்ட தானே ரொம்ப சந்தோஷம்..
ஓ மேடம் க்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கா அது மட்டும் நடக்காது டி என்று அவளிடம் இருந்து தள்ளி அமர்ந்தவன். அவளை பார்க்க விவேகா அவனை அப்பட்டமாக பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள்.
இன்பா ஒரு சொடக்கு போட்டு ஹேய் அது அப்படி இல்ல உன் கிட்ட நானா வந்து ஒட்ட மாட்டேன் நீயா வந்து ஒட்ட வைப்பேன்.
விவேகா, அது இந்த ஜென்மத்தில் நடக்காது போடா..
பார்க்கலாமா!
ம்ம் பார்க்கலாம் டா!
இன்பா எவ்ளோ கொழுப்பு ஆனால் இது நல்லதுக்கு இல்லையே சரி நான் தான் டி ஜெயிப்பேன்.
விவேகா, எப்படி?
அதை எதுக்கு உன் கிட்ட சொல்லணும்.
ஹே போடா நீயே ஒரு பச்சை ஃப்ராடு..
இன்பா, இது ட்ரூ டி இந்த அளவுக்கு என்னை நினைத்து விட்டாய் தானே நான் எந்த பிளேவும் பண்ண மாட்டேன் எனக்கு என் மேல நம்பிக்கை இல்ல ஆனால் உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு டி
அண்ட் ஒன் திங்க் இதுக்கு மீணிங் விட்டு போறது எல்லாம் இல்ல அது உன் கனவிலும் நடக்காது காட் இட் மை பாயிண்ட் ஆனால் உன்னோட விருப்பம் இல்லாமல் இனி ஒரு கிஸ் கூட தர மாட்டேன் நான் வசுமதி பையன் இல்ல டி.. என்று சொல்லி விட்டு முகத்தை அவன் திருப்பி கொண்டு போக இந்த விவேகாவுக்கு ஏனோ இப்பொழுது அவனை அணைத்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
ச்ச என் மனசு அவன் சொன்ன மாதிரி ரொம்ப வீக்கா இப்போவே போய் கட்டிக்கும் போலயே என்று நினைத்து தலையை உலுக்கி கொண்டு இருக்க..
பேபி சீக்கிரம் வா டைம் ஆகுது.. அவள் வெளியே இறங்கி அவனுடன் அருகில் நடந்தாள். அவன் கைகள் அவள் கைகளோடு கோர்த்து கொள்ள வேண்டும் என்று பரபரத்தது.
அவன் மனம் இல்ல ராகவ் இந்த முறை கொஞ்சம் மனஸ்தனா நடந்து கொள் மாம் பேரில் சவால் விட்டு இருக்க டா என்று எட்டி நடக்க விவேகாவின் கைகளோ கோர்த்து கொள்ள தோன்றியது.
ஹே மானம் போயிடும் டி என்று நினைத்து கொண்டு அவனுடன் நடந்தாள். கேட்டில் இருந்து உள்ளே நடக்கும் போதே கிருஷ்ணனும், பாவையும் கதவை திறக்க அங்கே அவர்கள் கண்ட காட்சி அவள் தாவணியில் இன்பா முதல் முறையாக இந்த வெஸ்டி சட்டையிலும் இந்த காட்சியை காண இரண்டு கண்கள் போதாது.
கிருஷ்ணன் உடனே தன்னுடைய போனில் ஒரு போட்டோ எடுத்து ரவிக்கு அனுப்பி வைத்தார். இன்பா முகத்தை உர் என்று வைத்து கொண்டு வர விவேகா சிரித்த முகத்துடன் வேகமாக அவனை தாண்டி போய் பாவையின் காலில் விழ..
பாவை சின்ன குட்டி இரு டா மா ராகவ் வரட்டுமே..
இன்பா அவள் ஒட்டாமல் ஆனால் அருகில் நெருங்கி நிற்க “ம்ம் இப்போ ஓகே வா” என்று விவேகா கேட்டு கொண்டே அவர்கள் காலில் விழ இருவரும் ஆசிர்வாதம் செய்து உள்ளே அழைத்து சென்றனர்.
கிருஷ்ணன் அவனை அணைத்துக் கொண்டு என்ன ராகவ் இது உன்னோட லிஸ்டில் இல்லாத கெட் அப் பா இருக்கு என்ன ஆச்சு.. அவன் சோர்ந்து போய் அமர டேய் சொல்லிட்டு போடா..
இன்பா, ஒன்னும் இல்ல சும்மா டிரை பண்ணேன் பட் அன்கம்பார்ட்டா இருக்கு தாத்தா..
கிருஷ்ணன், சரி வா சாப்பிடலாம் முகமே தொங்கி போய் இருக்கு.. இன்பா சோர்வாக கண்களை மூட பாவை அனைத்தும் எடுது வைத்து கொண்டே குட்டி நீ போய் தாத்தா, ராகவை கூட்டி வா..
ம்ம் சரி அம்மச்சி என்று சொல்லி சென்றவள்.
தாத்தா வாங்க சாப்பிடலாம்.. இன்பா கண்களை மூடி கொண்டு இருக்க..
அவர் எழுந்து செல்ல தாத்தா ! என்று இன்பாவை காட்டிட ம்ம் அவனுக்கும் உனக்கும் சண்டையா…
விவேகா திடிகிட்டு இல் இல்லையே! அவர் உங்க கிட்ட சொன்னாரா!
அவர் இல்ல அவன் முகத்தில் எதோ குறையுது எப்பொதும் வாரத்தில் ஒரு நாள் இங்கே வராமல் இருக்கவே மாட்டான்.
இப்போ என்ன ஆச்சு?
ரெண்டு மாசம் கழிச்சு வந்து இருக்கான்.
அப்டியா என்று நினைத்தவள்.. இல்ல தாத்தா அவன் ரொம்ப பிசி அதனால் தான் வேற ஒன்னும் இல்ல என்று பேசி கொண்டு இருக்க..
பாவை, என்னங்க….
ம்ம் வரேன் மா பாப்பா நீ கூப்பிடு என்று சொல்லி கிளம்ப விவேகா அவன் அருகில் சென்று அவள் வளையல் கைகளை குலுக்க இன்பா கண்களை மெதுவாக திறந்தான்.
உன்னை சாப்பிட வர சொன்னாங்க.. நீ போ நான் வரேன்..
இல்ல உன்னை கையோடு கூட்டி வர சொன்னாங்க..
அவன் சோம்பல் முறித்து கொண்டே எழுந்து சென்றான்.
இந்த முறை அனைத்தும் அசைவமாக இருக்க விவேகாவுக்கு பாவை பரிமாற விவேகா, ம்ம் வருனி, அருண், சிபி சார் எல்லாம் வர மட்டாங்களா?
ம்ம் அவங்க வந்துட்டு போயிட்டாங்க. விவேகா, இங்கே தங்க மாட்டார்களா? பாவை சோகம் ஆக கிருஷ்ணன், நான் யாரையும் இங்கே தங்க விட மாட்டேன் மா..
விவேகா, ஏன் தாத்தா?
அவங்க இங்கே இருந்தால் இவளுக்கு தான் வேலை அதிகமா இருக்கும். அவங்க வந்து போன் நோண்டவே டைம் சரியா இருக்கும்.
இன்பா, சாப்பிடும் வேலையை பாரு டி.. என்று சொல்ல அதற்கு மேல் அவள் அமைதி ஆகிட..
கிருஷ்ணன், ஹே இப்போ எதுக்கு டா அவளை திட்டுற.. பாவை,குட்டி நீ ரெண்டு நாள் இங்கேயே இருந்து விட்டு போயென்..
விவேகா, இல்ல அம்முச்சி நான் இருந்தால் வேலை அதிகமா இருக்கும்
கிருஷ்ணன், ம்ம் இல்ல நீ ரொம்ப பொறுப்பு அண்ட் நீ யார் கிட்ட பேச போற ராகவ் இங்கே தானே இருக்கான்..
இன்பா எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் சாப்பிட்டு கொண்டு இருக்க விவேகா தான் அவர்களுடைய பேத்தி போல் பேசி கொண்டு இருந்தாள். ஓர கண்ணால் அவனையும் பார்க்க அவன் இவள் பக்கம் திரும்பவே இல்லை.
இங்கே ரவி அந்த புகை படத்தை பார்த்து விட்டு உடனே கிருஷ்ணனுக்கு அழைக்க.. விவேகா சாப்பிட்டு முடித்து விட்டு அமர சரியாக ரவி கிருஷ்ணனுக்கு அழைத்தார்.
கிருஷ்ணன், உள்ளே இருக்க இன்பா வழக்கம் போல் நோண்டி கொண்டு இருக்க.. கிருஷ்ணன் போன் அளரியது.. விவேகா யார் என்று பார்க்க இன்பா#1 என்று இருக்க இவன் இங்கு தானே இருக்கான் புதுசா நம்பர் வாங்கி இருக்கான் போல என்று இவள் போனை எடுத்து அழைப்பை ஏற்று காதில் வைத்து..
ஹலோ என்று இன்பாவை பார்த்து கொண்டே கேட்க…
மறு முனை ஹலோ who Is speaking?
விவேகாவுக்கு தூக்கி வாரி போட்டது. இப்பொழுது என்ன செய்ய என்று மீண்டும் கட் செய்ய முடியாதே என்று இன்பா அருகில் சென்றவள்.
ராகவ் ராகவ் இது உன் நம்பரா யாருன்னு தெரியல டா தெரியாமல் அட்டேன்ட்ட பண்ணி விட்டேன். பிளீஸ் பேசு டா..
இன்பா, அழைப்பு எண்ணை பார்த்து விட்டு இவளை! இவர் எதுக்கு கால் பண்ணி இருக்காரு என்று நினைத்து கொண்டே..
எனக்கு தெரியாது போடி..
ஹே என்ன டா பிளீஸ்!
இன்பா, அப்போ வந்து கட்டிக்கோ!
விவேகா அதிர்ச்சி ஆகி அப்படியே நிற்க..
ரவி அழைப்பில் ஹலோ என்று மீண்டும் அழைக்க..
“ஹேய் போனை கொடு டி நீ ஒன்னும் கட்டிக்க வேண்டாம்” என்று சொல்லி அதை காதில் வைக்க..
ஹலோ டாட்.. இதை கேட்டதும் விவேகாவுக்கு இன்னும் அதிர்ச்சியின் உட்சிக்கே சென்றாள்.
ரவி என்ன சொன்னாரோ இன்பா அவளை பார்த்து முறைத்து கொண்டே..
அவளிடம் போன் நீட்டினான்..
இந்தா டி..
விவேகா அப்படியே நிற்க..
ஹேய் இந்தா டி வாங்கு என்று போனை நீட்ட..
விவேகா….?
தொடரும்…
இன்னிக்கு எப்படி இருந்தது அப்டின்னு சொல்லிட்டு போங்க….
Episode 210
ரவி கிருஷ்ணனுக்கு கால் செய்ய இன்பா தான் வேண்டும் என்றே விளையாடுகிறான் என்று நினைத்து கொண்டு விவேகா அழைப்பு ஏற்று காதில் வைக்க அது இன்பா இல்லை..
விவேகா ஒரு நிமிசம் அதிரிச்சி ஆகி பேசாமல் போனை இன்பா கிட்ட கொடுக்க.. அவன் வாங்கி காதில் வைத்தான்.
ரவி, “ம்ம் நம்ப ராகவ் சாருக்கு தலை பொங்கல் விருந்து கேட்குது போல”..
விவேகா அவன் பேசுவதை பார்த்து கொண்டு இருக்க இன்பா முகம் மாறியது.
இன்பா, இப்போ உங்களுக்கு என்ன வேணும்..
ரவி,டேய் வாயை அடக்கு டா அது அந்த பொண்ணு தான..
ம்ம்.. .
இப்போ நானும் உன் மம்மியும் அங்கே கிளம்பி வரவா..
இன்பா, நீங்க பெங்களூர்ல இருந்து கொண்டு இங்கே எப்படி வர முடியும்.. ரவி, நான் இப்போ ஏர்போர்ட்ல இருந்து நம்ம வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் டா..
இன்பா, சரி இப்போ அதுக்கு என்ன எனக்கு ஒன்னும் பயம் இல்ல வாங்க..
ரவி, ம்ம் உன் முகத்தில் பயம் தாண்டவம் ஆடுது..
எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன்.
ரவி,பாவம் அந்த பொண்ணை ஏமாற்றி கொண்டு இருக்க..
நானா உங்களை போல் இல்ல..
உன் கிட்ட எனக்கு என்ன டா பேச்சு நீ தாத்தா கிட்ட போன் கொடு..
இன்பா, விவேகா கிட்ட போனை நீட்டினான். இந்தா டி..
விவேகா பயந்து கொண்டே அவனை பார்க்க இதை தாத்தா கிட்ட போய் கொடு..
விவேகா ஒரு பெரு மூச்சை விட்டு போனை வாங்க செல்ல அதற்குள் கிருஷ்ணன் வந்து விட அவரிடம் இன்பா போனை கொடுத்து விட்டு அவன் அறைக்கு சென்றான்.
ஒரு சில நிமிடம் பாவையிடம் பேசி கொண்டு இருந்தவள். திரும்பி பார்க்க அங்கே இன்பா வேறு உடைக்கு மாறி இருந்தான். நேராக கிருஷ்ணன் அருகில் சென்றான்.
இன்பா, என்ன சொன்னாரு..
ம்ம் இங்கே வரேன்னு சொன்னாரு..
சரி நான் கிளம்புறேன் அவளுக்கு டைம் ஆகுது தாத்தா..
ராகவ் நான் சும்மா சொன்னேன் டா..
இன்பா, இல்ல தாத்தா அவளுக்கு டைம் ஆகுது நான் கொண்டு விடனும் நாளைக்கு பிரியாவை காலேஜ் ல மீட் பண்ணனும். சில பாரான்சிக் ரிபோட் பற்றி டிஷ்கஸ் பண்ண வேண்டி இருக்கு..
ம்ம் போயிட்டு வா..
சரி தாத்தா என்று அவன் திரும்ப..
ராகவ் இந்த சுபா விஷயம் என்ன ஆச்சு..
இன்பா, அதை அப்புறம் பார்த்து கொள்ளலாம்.
கிருஷ்ணன், உங்க அப்பா பத்திரிக்கை அடிக்க கார்டு செலக்ட் பண்ண சுபாவை கூட்டி போறாரு டா..
இன்பா, ம்ம் சீக்கிரம் எதுவும் செய்யணும் என்று சொல்லி விட்டு அவளை அழைக்க இருவரிடமும் விடை பெற்று சென்றார்கள்.
இறங்கும் இடம் வரும் வரை இருவரும் எதுவும் பேசாமல் வந்தனர். இன்பா மனதில் எதோ நடக்க போவது போல் தோன்றியது. அங்கே ஆதி காத்து கொண்டு இருக்க விவேகா இறங்கினாள். இப்பொழுது அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.
ஆதி, ஹே பாரு விவேகா அவர் உன்னை தான் பார்க்கிறார். அவள் திரும்பும் நேரம் ஆதித்யா என்று அழைத்தான்..
சார் என்று அருகில் வர…
ம்ம் ஒன்னும் இல்ல என்று மீண்டும் அழைத்தான்..
சார்..
அவளை பத்திரமா பார்த்து கொள் என்று சொல்லி விட்டு அவளை ஏக்க பார்வை பார்த்து விட்டு செல்ல
விவேகா அட போடா சீன் காரா என்று நினைத்து கொண்டாள். ஆதி அவளை வீட்டுக்கு அழைத்து சென்றான். அதன் பின் கங்கா விவேகா இருவரும் வீட்டுக்கு சென்றனர்.
மாலை மணி 6.00 இருக்கும் அருகில் உள்ள பார்க்கில் மிகவும் கூட்டமாக இருக்க அணைத்து வாண்டு கூட்டமும் விளையாட சென்றது. அதுவும் பொங்கல் சொல்லவே தேவை இல்லை கூட்டம் கூட்டமாக அனைவரும் வந்து இருந்தனர்.
விவேகாவுக்கு மனசு சரி இல்லை.. இப்படி ஏக்க பார்வை பார்த்தே நம்பலை மயக்கி விடுகிறான். என்று இன்பாவை நினைத்து கொண்டு இருந்தவள் பூஜாவுடன் அந்த பார்க்குக்கு சென்றாள். ஜனனி, ஹரிஷ், கணிரா, கரன், என அனைவரும் விளையாடி கொண்டு இருக்க விவேகா அவர்களை பார்த்து கொண்டு இருந்தாள்.
லிங்காவின் ஆட்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்து நின்று கொண்டு இருந்தனர். ஜனனி ஓடி சென்று தன் அண்ணன் ராகுல் கைகளை பிடித்து கொண்டு வர விவேகா அவனை பார்த்ததும் அவன் அருகில் சென்றாள். ஹே ராகுல் டார்லிங் ஸ்கூல் போனீர்களா..
ம்ம் விவேகா நம்ம கண்ணா மூச்சு விளையாடலாம் வரயா.. என்று கைகளை பிடித்தான்.
ஆம் அவன் 14 வயது நிரம்பிய பையன் ஆனால் மனதளவில் 5 வயசு மட்டும் தான் எதோ ஒரு காய்ச்சலில் மூளை பாதிப்பு அடைந்தது. ஆனால் மிகவும் துடிப்பான திறன் உடையவன்.
இந்த மாதிரி குழந்தைகளுக்கு அவர்களின் வயது கூடி கொண்டு போனாலும் கூட உடலிலி உள்ள உறுப்புகள் அனைத்தும் நல்ல செயல் திறனில் இருக்கும். அவர்கள் உடல் உறுப்பின் வயது 6 வயதுக்கு உரிய வேகம் புத்துணர்வு கொண்டு இருக்கும்.
ராகுல் ஜனனியிடம் பாப்பா உச்சா போகனும்.. உடனே ஜனனி வீட்டுக்கு அழைத்து செல்ல போக விவேகா, என்ன டி ஜனனி உடனே கிளம்பி விட்ட..
இல்ல விவேகா அண்ணாவுக்கு உச்சா வருதுன்னு சொல்றான்.
விவேகா, சரி நீ விளையாடு நான் ராகுலை கூட்டி போய் மம்மி கிட்ட விடுகிறேன் என்று சொல்ல என் செல்லம் விவேகா அண்ணா விவேகா கூட போ நான் அப்புறம் வரேன் என்று சொல்ல..
ராகுலை அழைத்து கொண்டு விவேகா சென்றாள். அவனை கொஞ்சி கொண்டும். அவன் பேசுவது ரசித்து கொண்டும் நடந்து வர..
ராகுல், விவேகா 1 வெரி அவசரம்..
விவேகா, ராகுல் இன்னும் கொஞ்ச தூரம் நம்ம வீட்டுக்கு போயிடலாம் அப்புறம் உனக்கு நான் நிறைய ஆரஞ்சு மிட்டாய் வாங்கி தருவேன்.
இல்ல வேண்டாம் வெறி பாஸ்ட் விவேகா.. என்று அவன் கஷ்ட பட இல்ல நீ ராகுல் இது பேட் ஹெபிட் அப்புறம் மம்மிகு தான் கெட்ட பேரு கண்ணா என்று அவள் அவன் வாயை துடைத்து விட்டு கையை பிடித்து கொண்டு சரி நம்ப வேகமா ஓடி விடலாம் ஓகே வா..
ம்ம் ஓகே டன் என்று அவன் சொல்ல விவேகா அவன் கைகளை பிடித்து கொண்டு நடந்தாள். அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்க சரியாக அந்த நேரம் லிங்காவின் கடத்தல் கும்பல் விவேகா, ராகுலை ஃபாலோ செய்தது.
அந்த கூட்டத்தில் ஜெகா என்னும் ஒருவன் விவேகாவை பின்னால் இருந்து பார்த்து விட்டு லிங்காவுக்கு போன் செய்தான். லிங்கு அந்த பையன் கூட ஒரு குட்டி இருக்கு டா எப்படி தூக்க..
டேய் என்ன விளையாட்டா என்ன செய்வியோ தெரியாது சீக்கிரம் தூக்கிட்டு வாங்க இந்த பீஸ் கிட்ட தட்ட பெரிய டீலிங்.. என்று சொல்ல அவன் சரி என்று போன் வைத்தான்.
ஜெகாவின் ஆட்கள் பாஸ் இப்போ என்ன செய்ய.. டேய் மாஸ்க் போட்டு கிட்டு தூக்குங்க டா.. என்று சொல்ல அந்த கூட்டம் விவேகாவை நெருங்கியது.
அவர்களை அந்த சந்துக்குள் தள்ளி கொண்டு வந்து விட்டது.
கண் இமைக்கும் நேரத்தில் ஒருவன் ராகுல் மூக்கில் அந்த மயக்க மருந்து அடிக்கப்பட்ட கற்சீப்பை வைக்க வர ராகுல் துள்ளி கொண்டு அதை தள்ளி விட்டு விவேகாவை பின் பக்கமாக கட்டி அணைத்து கொண்டான்.
விவேகா கத்தி கூச்சல் போட வர ஹே வாயை மூடு டி எனக்கு நீ முக்கியம் இல்ல அந்த பையனை விட்டு ஓடி விடு டி.. என்று அந்த கும்பல் வளைத்து கொள்ள..
விவேகா, அவர்களிடம் இருந்து ராகுலை காப்பாற்ற அவனை இறுக்கி பிடித்து கொண்டாள். டேய் யாரு டா நீங்க விட்டு விடுங்கள் தேவை இல்லாமல் பிரச்னை வேண்டாம்..
அந்த கும்பலில் ஒரு ஆள் நட்டு ராஜா ஜெகாவுக்கு போன் செய்தான். பாஸ் அந்த பையனை அந்த குட்டி விட மாட்டிங்குது.. ஜெகா, இரு டா நானே வரேன்.
ராகுல், விவேகா எனக்கு பயமா இருக்கு என்று நடுங்கி கொண்டே அவள் பின் பக்கம் இருக்கி கட்டி கொண்டான். இல்ல ராகுல் நான் இருக்கேன் தானே என் செல்ல பையன் என்று அவள் அந்த ரவுடி கும்பலிடம் இருந்து தப்பிக்க கீழே இருந்து அசையாமல் மண்ணை எடுத்து முகத்தில் போட வர அந்த நேரம் அவள் கைகளை ஜெகா வந்து பிடித்து கொண்டான்.
ஹே கையை விடு டா யாரு டா நீ ராஸ்கல் என்று அவனை ஓங்கி அரை விட்டாள். .. ஜெகா விவேகாவின் அழகில் ஒரு நிமிடம் லயத்து போனான். டேய் இவள் எனக்கு வேணும் ரெண்டு பேரையும் தூக்குங்க டா என்று அவள் கையை பிடித்து கொண்டே சொல்ல விவேகாவின் கையில் இருந்த அந்த புதிய டஸன் கண்ணாடி வளையல் உடைந்து விழுந்தது. விவேகா கைய உதறி கொண்டு அவன் சொல்வதை கேட்டு மனதில் பயப்பந்து உருண்டது.
விவேகா,ஹே என்ன சொன்ன கிட்ட வந்த உன்னை கொன்று விடுவேன். டேய் விடுங்க டா.. ஜெகா அவளை நெருங்கி வர ராகுலுடன் பின்னால் நகர அவன், நீ வா செல்லம் உன்னை அங்கே கச்சேரி வச்சுக்கறேன்.. என்று சொல்லி ஒரு மோக புன்னகை சிந்தி விட்டு செல்ல
விவேகா ராகுல் இருவரையும் கண் இமைக்கும் நொடியில் காரில் தூக்கி கொண்டு சென்றனர்.
விவேகாவின் கண்களில் அந்த ரவுடி கும்பல கோபம் கொழுந்து விட்டு எறிந்தது. ராகுல் அழுது கொண்டு இருக்க மனதில் ஒரு மூலையில் பயம் தான்.. அவர்கள் வாயில் துணி வைத்து அடைத்து இருக்க ஜெகா முன்னாடி அமர்ந்து இருந்தான்.
அந்த நகரின் முக்கிய பிரதான சாலையில் கார் சென்று கொண்டு இருந்தது. இன்று பொங்கல் என்பதால் நிறைய வாகன நெரிசல்.. ஒரு வளைவு வர இன்பா ஜீப்பில் லோகேஷிடன் எதிரில் வர விவேகாவின் இதயம் வேகமாக துடித்தது. கண்களில் கண்ணீர் வழிய.. கைகளை உயர்த்த முயற்சி செய்தாள்.அவள் தலையை அவன் காரின் பக்கமாக சாயிந்தாள்.
ராகுலின் விசும்பல் சத்தம் கேட்க அவன் அதே இடத்தில் யூரின் போயிருக்க.. நட்டு ராஜா, பாஸ் இந்த பையன் இங்கேயே ஒண்ணுக்கு அடித்து விட்டான். என்று அவனை அடிக்க வர விவேகா அவனை அடிக்காமல் தடுத்தாள்.
அவர்கள் இருவரையும் கடத்திக் கொண்டு சென்ற அரை மணி நேரத்தில் ராகுலின் அம்மா லில்லி தேடி கொண்டு விவேகா வீட்டுக்கு செல்ல அங்கே அவர்கள் இல்லை என்று தெரிந்ததும்
லில்லி, அக்கா விவேகா ராகுலை கூட்டி கிட்டு இங்கே வந்தாளா?
கங்கா, இல்லையே மா பார்க் போனாள் அதுக்கு அப்புறம் இன்னும் வீட்டுக்கு வரல என்ன ஆச்சு?
அது ராகுலை காணோம் நம்ம விவேகாவையும் காணோம்…
இருவரும் சேர்ந்து எல்லா இடத்திலும் தேட கங்காவுக்கு உள்ளே பயம் எடுக்க ஆரம்பித்தது. லில்லி, அக்கா எங்கேயும் காணவே இல்லையே.. இரு லில்லி நான் வருனுக்கு கால் பண்றேன்.
அதே போல் பூஜாவுக்கு விஷயம் தெரிய அவள் படபடத்து கொண்டே மித்ரனுக்கு கால் செய்தாள்.
ஹலோ என்ன பூஜா..
மித்து இங்கே விவேகாவை காணோம்..
ஹே நல்லா தேடி பாரு இது விளையாட்டு இல்ல நான் டியூட்டியில இருக்கேன்..
பூஜா, சார் கூடவே ராகுல் அப்டின்ற ஒரு பையனை காணோம்..
என்ன ராகுலா அது யாரு?
அவன் அந்த குட்டி பொன்னு ஜனனியோட அண்ணா கொஞ்சம் ஸ்பெசல் சைல்டு இதை கேட்டதும் மித்ரணுக்கி தூக்கி வாரி போட..
நீ வை நான் உடனே வரேன் என்று கட் செய்தான்..
இன்பாவுக்கு அழைக்க அவன் எடுக்க வில்லை உடனே லோகேஷ்க்கு அழைத்தான். என்ன மித்ரன்..
மித்ரன், வருண் தங்கையை கடத்தி விட்டார்கள் டா கூடவே ஒரு ஸ்பெசல் சைல்டு மிஸ்ஸிங் இன்பா கிட்ட போன் கொடு..
லோகேஷ் வாட் என்று கத்தி கொண்டே காரை நிறுத்த
இன்பா, வாட் ஹப்பென்..
லோகேஷ், இன்பா வருண் தங்கை மிஸ்ஸிங்..
இந்த வார்த்தையை கேட்டு அவன் முகம் இறுகி மனதில் பாரம் ஏறியது.
இன்பா அவனின் சட்டையை பிடித்து என்ன டா சொல்ற!
ம்ம் மித்ரன் கால் பண்ணான்..
இன்பாவுக்கு இப்போது என்ன செய்ய என்று ஒன்றும் புரியாமல் திணற
லோகேஷ் ,ஆர் யூ ஆல் ரைட் இன்பா உனக்கு என்ன ஆச்சு என்று சொல்லி கார் கதவை திறந்து விட்டு வெளி காற்றை சுவாசிக்க செய்ய..
அவன் மூளை எச்சரித்தது நாம் ஒரு நிமிடம் கூட தாமதம் செய்தால் அது அவளுக்கு தான் ஆபத்து என்று சொல்லி விட்டு வேகமாக லோகேஷ கார் எடுக்க சொன்னான்.
இன்பாவுக்கு ஒரு சில நொடிகளில் வருண் அழைக்க ஹே கவலை பட வேண்டாம் நான் இருக்கேன் அவளுக்கு எதுவும் ஆகாது அந்த ராகுல பத்திரமா கூட்டி வந்து விடுவேன்.
விவேகா வின் வீட்டுக்கு அருகில் ரெண்டு போலீஸ் ஜீப் மோப்ப நாய்கள் என ஒரு போலீஸ் படையே துரண்டு இருக்க கங்காவும், லில்லியும் அழுது கொண்டு இருந்தனர். அந்த இடத்துக்கு ஆதி, கங்கா, செல்வம், அதிதி வந்து விட விசாரணை நடத்த ஆரம்பித்து இருந்தது.
லில்லியின் அக்கா, உங்க பெண்ணால் தான் எங்க பையனை தூக்கி கிட்டு போயிட்டாங்க எங்கே தான் விவேகா எங்க பயனை கூட்டி போனாள்.. .
அந்த நேரம் அங்கே வந்த இன்பா காதுகளில் இது விழ இப்போ “இது பேச வேண்டிய நேரமா மேடம் உங்க பையனை கடத்த தான் இந்த திட்டம் இதில் விவேகா இல்லை என்றால் எந்த தடயமும் கிடைத்து இருக்காது .
லில்லி, என்ன சார் சொல்றீங்க என்று அழுது கொண்டே கேட்க, இப்போ பேச டைம் இல்ல அதனால் எங்க வேலையை பார்க்க விடுங்க என்று சொல்லி விட்டு ஒவ்வொரு இடமாக சல்லடை போட்டு தேட ஆரம்பித்தான்.
அந்த சந்து வளவில் சில காலடி தடம் மற்றும் கண்ணாடி வளையல் நொறுங்கி இருப்பதை கண்டறிந்து விட இன்பா அந்த வளையலை பார்த்தான். அவன் நினைவில் அவள் இன்று அவன் அருகில் வந்து கையை குலுக்கி ஆட்டி காட்டியது தான் நினைவுக்கு வந்தது. கண்கள் கலங்கி போனது.
மித்ரன், மச்சி அவளுக்கு ஒன்னும் ஆகாது டா என்று ஆறுதல் சொல்ல அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். பொங்கல் கூட்டம் என்பதால் யார் இதை செய்து இருப்பார்கள் என்று கண்டறிய முடியவில்லை..
லிங்கா ஜெகாவுக்கு கால் செய்தான். ஹே *** என்ன டா பண்ணிட்டு இருக்க.. இப்போ என்ன லிங்கா.. நீ தூக்கிட்டு வந்தது அந்த ACP யோடடீம்ல இருக்கவனுடைய தங்கச்சி இப்போ அந்த இன்பா மொத்த சிட்டியும் பிரட்டி போட்டு தேடிட்டு இருக்கான்.
ஜெகா, இதுக்கு எல்லாம் பயப்பட முடியாது லிங்கா அந்த குட்டி எனக்கு வேண்டும்.. லிங்கா, டேய் டேய்***** எதுவும் செய்யாத டா இல்ல உன்னை இந்த கேஸ்ல இழுத்து விட்டு விடுவேன்..
ஜெகா கண்ணாடி வழியாக விவேகாவை பார்த்தான். அய்யோ என்று பெரு மூச்சை விட்டு அவன் வழியில் செல்ல லிங்கா மீண்டும் போன் செய்தான். ஹே என்ன டா முடிவு பண்ணி இருக்க..
இங்கே அதற்குள் அந்த போன் டவரில் ஆக்டிவ்ல இருந்து அணைத்து எண்களும் போலீஸ் குற்றவாளிகள் தொடர்புடைய எண்கள் கூட ஒப்பிட்டு பார்க்க… அதில் எந்த ஒரு தகவலும் பிடி படவில்லை.
சில cctv footage காட்சிகளை செக் செய்து பார்க்க அதில் சில விவேகாவும் ராகுலும் நடந்து செல்லும் காட்சி தெரிந்தது. அந்த பார்க்கில் உள்ள சிசிடிவி கேமரா செக் செய்ய அதில் சில ஆடவர்கள் திடீர் என்று அந்த இடத்தில் புதிதாக நுழைந்து இருப்பதை பார்த்து விட்டு இன்பா அது யார் என்று கண்டறிந்து விட்டான். அந்த நேரம் அக்கம் பக்கத்தில் உள்ள ட்ராஃபிக் சிசிடிவி கேமராவில் உள்ள காரின் பதிவுகளை வைத்து ஓரளவு நிதானத்துக்கு வந்தவன். உடனே போலீஸ் ஜீப்பை எடுக்க சொன்னான்.
இங்கே விவேகா மனதில் அந்த ஜெகா சொன்னதே ஓடி கொண்டு இருக்க” ராகவ் நீ வரல நான் செத்து விடுவேன் டா, எல்லாம் என்னால் தான் உன் பேச்சை கேட்காமல் நான் செய்தது தவறு தான்”. ” இப்போ உன்னை கட்டிக்கணும் போல் இருக்கு! ராகவ் உன்னை கட்டிக்கனும் ராகவ்!” என்று நினைத்து அழுது கொண்டு இருக்க அந்த கார் நின்றது.
ஜெகா முதலில் இறங்கி பின்னால் வந்தான்..அந்த நேரம் அவனுக்கு போன் வந்தது..
விவேகா…?
இன்பா..?
தொடரும்…
Comment konjam பண்ணிட்டு போங்க…
இன்னிக்கி வெண்ணிலா ud போட்டு விட்டேன்.