அத்தியாயம் – 12

பள்ளியில் இருந்து ஸ்டாபிங் வரை நடந்து வந்திருந்தாள் மான்வி. “இந்த மோகன் அந்த உலக அழகி குட்ட கோமளா மலரை பார்த்து வாய பிளந்து ட்டு அங்கேயே செட்டில் ஆகி இருப்பான் பன்னாடை பய! இப்போ நான் எப்டி கடை வீதிக்கு போவேன்?  அந்த கருவா கிட்ட கோர்த்து விட்டுட்டான் பாவி! அந்த மோகன் நாயை ஓட விட்டு ஜான கடிக்க விடணும்” என முடிவெடுத்தவள். ஒரு பெரு மூச்சுடன் வியர்த்து வழிய பார்த்தாள். இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. 

தண்ணீரை எடுத்து குடித்தவள். சரி கொண்டைய கழட்டிட்டு கொஞ்சம் தளர்வா பின்னி போடுவோம் என கொண்டை வலையை கழட்டி முடியை விரித்தாள்.அவளின் இடை வரை உள்ள கூந்தல் அழகாக இருந்தது. மொத்த முடியையும் ஒரு பக்கம் போட்ட படி பையில் ரப்பர் பேண்ட் எடுக்க தேட, புல்லட் சத்தம் டுபு டுப்புவென அருகில் கேட்டது. 

யாரது? என நிமிர்ந்தாள். வெள்ளை சட்டை காக்கி பேண்ட்  என கம்பீரமாக அவள் முன் நின்றிருந்தான் கண்ணன். அவனை பார்த்ததும் வேகமாக ரப்பர் பேண்ட் தேடினாள். பாவம் கிடைத்த பாடில்லை. 

என்ன பண்றா? என கண்ணன் உற்று பார்க்க, கருவா எதுக்கு இப்படி பார்க்கிறான்? என நெளிந்து கொண்டு நின்றவள். பையில் பேண்ட் கிடைக்காத காரணத்தால் கொண்டை சுற்றினாள். 

முடிக்க மட்டும் காத்திருந்தவன். “ம்ம் நேரமாச்சு வந்து வண்டியில் ஏறு!” என்றான்.

எதுவும் பேசாமல் வண்டியில் ஏறினாள். ஒரு வளைவில் அவளின் கொண்டை சரிந்து விழுந்தது. சைட் மிரர் வழியாக கண்கள் களவாடியது.  

“ப்ச் ஜீப்ல தானே வருவ? எங்கே உன்னோட ஜீப்?”

“என்னோட விஷயத்துக்கு ஜீப்ல வருவேன்.”

இப்போ என்ன? என மான்வியின் கண்கள் கூறானது. 

“உனக்கும் எனக்கும், நீ இன்னும் கோபியோட பொண்ணு தான் அதனாலே நான் ஜீப்ல வரல!”

மான்வி எகத்தாள பார்வையுடன் எனக்கு என்னமோ அதுக்காக தோணல.

வேற என்ன? என சைட் மிரரை திருப்பி இன்னும் வளைத்தான் கண்ணன். 

ஸ்பீட் ப்ரேக் கூடவே இந்த சைட் மிரர்ல என்னை டச் பண்ண தான் நீ வேணும்னு என உதட்டில் எலன புன்னகையை படற விட்டாள். 

கண்ணனுக்கு கோபம் வர எதிரில் இருக்கும் ஸ்பீட் பிரெக்கரை பார்த்தான். வேண்டும் என்றே இழுத்து பிடித்து ப்ரேக் போட்டு ஏறி இறங்கினான். மான்வியின் முட்டிகொள்ளும் ஸ்தனங்கள் இரண்டும் அவன் முதுகை தொட்டது உள்ளுக்குள் சிலிப்பு. 

“கருவாயா!” என அவனது தோல் பட்டையில் கடித்தாள். 

லேசான லிப் ஸ்டிக் வட்டம் சட்டையில் வட்டம் போட்டது. 

கண்ணனும் அசர வில்லை. நீ தான டி உண்மைய சொன்ன! அதான் அது உண்மையா இருக்கும் பட்சத்தில் உன்னோட ஸ்டேட்மென்ட் ஓகே! அது பொய்யாகிட்டா நீ ஃபீல் பண்ணுவல்ல அதான் என்றான். 

ராஸ்கல்! ஸ்கவுன்ட்ரல், மெண்டல், என வரிசையாக வசை சொற்களை முணுமுணுத்து கொண்டே வந்தாள் மான்வி. 

கண்ணன் வேண்டும் என்றே அவளை இடிக்க புள்ளட்டுடன் வர வில்லை. அவளை அழைக்க தயக்கமாக இருந்தது. சொந்த வேலைக்கு பயன்படுத்த விருப்பம் இல்லை. 

கருவா என அவள் வாயில் முணுமுனுப்பது நன்றாகவே கேட்டது. உள்ளுக்குள் கோபமும் இயலாமையும் தோன்றியது. எல்லாம் என் தங்கச்சிக்காக தான் பொருத்திட்டு இருக்கேன் என்றான் வாய்மொழியாக.. 

“என் அண்ணனுக்காக! அந்த நாய்க்காக ஏன் பொறுத்திட்டு இருக்கணும்னு தோணுது.” என்றாள் முடியை ஒதுக்கி கொண்டு, “எனக்கும் கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்ல.” என்றான் கண்ணன். 

“MBA படிக்க வைக்க ஒத்துக்கிட்டதுக்காக தான் கல்யாணம் பண்ண ஓகே!” என்றாள் மான்வி. கண்டிப்பா என்னோட வாக்கை காப்பாத்துவேன். அண்ட் இது என் தங்கைக்காவும் என்னோட அம்மாவுக்காகவும் இல்லன்னா கட்டிருக்க மாட்டேன். என்றான் கண்ணன். 

ம்ம் என சொல்லி கொண்டிருக்கும் போதே அவளின் எண்ணுக்கு அழைப்பு வந்தது. முகத்தில் புன்னகையுடன் ஹலோ என உணர்வு பூர்வமாக அழைத்தாள் மான்வி. 

சைட் மிரர் வழி கண்ணன் பார்த்து கொண்டே வண்டியை ஓட்டினான். 

“அச்சோ சாரி டார்லிங்! பிளீஸ் பார்கிவ் மி!” என மான்வி குலைந்து பேசினாள். 

கண்ணன் வண்டியில் கொஞ்சம் வேகம் காட்டினான். 

டார்லிங் ஒரு நிமிசம் என கூறியவள். ஹே வண்டிய நிறுத்து! 

டைம் ஆச்சு முடியாது. 

நீ என்னை கூட்டி போக வேணாம் நானே வந்துடுவேன் வண்டிய நிறுத்து என கொஞ்சம் சத்தத்துடன் கூறினாள். 

கண்ணன் வண்டியை நிறுத்த, டார்லிங் இப்போ கேட்குதா! ஒகே! இம்பாட்டன்ட் ஒர்க் நான் ஸ்கூல் வரதுக்கு முன்னாடி கால் பண்றேன் நீங்க அங்கே வந்துடுங்க! என்றாள் மான்வி. 

மறுமுனையில் என்ன சொன்னார்களோ. ஹே பிளீஸ் டி முக்கிய வேலை. வெளியே டின்னர் கூட போலாம். நான் நேரில் வந்து கன்வின்ஸ் பண்றேன் டார்லிங் கிட்ட கொஞ்சம் எனக்காக பேசி கூட்டிட்டு வா! நான் பார்க்கணும். டைம் ஸ்பென்ட் பண்ணனும் பிளீஸ் மது என்றாள் மான்வி. 

அவளின் முகத்தில் அத்தனை அமைதி, ஆசை, பொறுமை என அனைத்தும் இருந்தது. பேசி முடித்து புன்னகையுடன் போனை வைத்தவள் கண்களை உருட்டி எதையோ யோசித்தவாறு “ம்ம் போலாம்” என்றாள். 

வண்டி வேகமாக பறந்தது. “டேய் கொஞ்சம் மெதுவா போ! என்னை ஒரே அடியா பரலோகம் கூட்டி போக சொல்லல”

கண்ணன் எதுவும் பதில் கொடுக்க வில்லை. வண்டி ஓட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினான். மான்வி ஒரு வித பதட்டத்துடன் அவனது தோல் பட்டையை இறுக்கி பிடித்துக் கொண்டாள். 

கருவா! கருவா! என்ன கேடு வந்ததோ தெரியல என முனகி கொண்டே இருந்தாள் அவளின் முடி காற்றில் பறக்க, இருவருக்கும் நடுவில் பேக் வைத்திருந்தாள். அவளின் இடை மடிப்பு விலகி அழகாக சிறுத்த இடை தெரிந்து கொண்டிருந்தது. ஆர்பாட்டத்துடன் புடவை கடை முன் வந்து வண்டியை நிறுத்தியிருந்தான் கார்வண்ணன். 

வந்து இத்தனை நாள் ஆச்சே ஒரு போன் பண்ணி பேசினானா? என சதா கார்வண்ணன் நினைவில் மூழ்கி இருந்த நந்திதா இப்பொழுது அழைத்தாள். 

வண்டியை பார்க்கிங் விட்டுவிட்டு நடந்தான் கண்ணன். அதற்குள் மான்வி கூந்தலை அள்ளி முடிந்து சரியாக கொண்டை போட்டிருந்தாள். ஆனால் நெட் போட வில்லை. அவளின் இடையை சரி செய்து கொண்டே வந்தாள். 

ஹலோ நான் நந்திதா பேசுறேன். IPS officerக்கு என்னை நியாபகம் இருக்கா? நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் இங்கே அகாடமியில் நாலு வருஷம் படிச்சோம் என்றாள். 

“மிஸ் யூ” என்றான் எடுத்த எடுப்பில்  இதயங்கள் நின்று துடித்தது. ஒன்றல்ல இரண்டல்ல மூன்று. வார்த்தைகள் வர மறுக்க நந்திதாவின் கண்ணம் சிலிர்த்து போனது ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டான். 

‘அய்யோ பாடா படுத்துறானே!’ என நந்திதா உதட்டை கடித்துக் கொண்டு பேசினாள். என்ன சொன்ன? என நந்திதா கேட்க, கண்ணன் கரகரத்த குரலில் எப்போவும் என்னை மோடிவேட் பண்ணி பேசுவ! நான் நெகடிவ்வா திங்க் பண்ணாலும் நீ பாசிட்டிவா பேசுவ! இன்னிக்கி எனக்கு மைண்ட் சரி இல்ல நந்திதா! நீ இருந்திருந்தா உன்னோட பேச்சுக்கள் எனக்கு ஒரு புத்துணர்வை கொடுத்திருக்கும். அதை மிஸ் பண்றேன் என ஒரு பக்கம் வந்து நின்று பேசினான். 

என்ன ஆச்சு? எதுக்கு இத்தனை ஃபீலிங் என அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ச்ச இங்கே வந்திருக்க கூடாது. அப்போவே கண்ணன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணிருக்கணும் என உள்ளம் அடியாய் அடித்து கொண்டது. 

ஒன்னும் இல்ல! என தன்னை மீட்டு கொண்டவன். எப்டி போகுது ஒர்க்? 

இப்போ ப்ரேக் டைம் அது தான் உனக்கு கூப்பிட்டேன். நீ என்ன பண்ற? 

எங்க கல்யாணத்துக்கு முகூர்த்த புடவை எடுக்க வந்தோம். மாப்பிள்ளை வீடு, பொண்ணு வீடு வந்திருக்காங்க. பொன் மலர் நான், அம்மா எல்லாரும் இருக்கோம். அதே போல அவங்க சைடும் வந்திருக்காங்க. 

எப்போ கல்யாணம்? ச்ச நான் பக்கத்தில் இருந்திருந்தால் அழகா செலக்ட் பண்ணிருப்பேன் பாப்பாவுக்கு என்றாள் நந்திதா. 

“சரி கண்டிப்பா எங்க கல்யாணத்துக்கு வரணும் நந்திதா! பத்திரிக்கை அணுப்புறேன் பார்த்திட்டு எப்டி இருக்குனு சொல்லு!”  என்றான் கண்ணன். 

நந்திதாவின் சிந்தையில் பொன்மலர் பற்றி பேசுகிறான் என நினைத்துக் கொண்டாள். ஆனால் கண்ணன் தன்னுடன் மான்வியை பற்றியும் தான் பேசி கொண்டிருந்தான். அவனது மனசோர்வில் நந்திதாவிடம் மான்வி பற்றி சொல்ல தோன்ற வில்லை. 

“நம்ம வீட்டு கல்யாணத்துக்கு பத்திரிக்கை அனுப்பணுமா?”

“ஹே அப்படி இல்ல!” என அவனும் இயல்பாக பேசினான். நந்திதாவின் மனதில் இருக்கும் காதல் எண்ணங்கள் கண்ணன் மனதில் அவள் மேல் எந்த எண்ணமும் இல்லை. இதுவே நிதர்சனமான உண்மை. 

என்ன டா உம்முன்னு இருக்க? 

“ஒன்னும் இல்ல!”

டேய் கண்ணா எந்த விதத்திலும் உன்னையே நீ தாழ்த்திக்க வேணாம். உனக்கு என்ன குறை? நீயே உன்னை கம்மியா நினைக்கிறது தான் உன் கிட்ட இருக்க பெரிய குறை! கண்ணன் நிஜமாவே நீ மாய கண்ணன் தான் உன்னை பார்த்தால் எல்லாரும் இம்ப்ரெஸ் ஆவாங்க! அதை விட உன்னோட கேரக்டர் நீ ஒரு சொக்க தங்கம் டா! கண்டத நினைச்சிட்டு இருக்காத! என இதமான வார்த்தைகளை கூறினாள். 

“ம்ம்”

நீ அடி வாங்க போற! வந்து வச்சிக்கிறேன் உன்னை. சரி பாப்பாவுக்கு புடவை எடுத்ததும் எனக்கு அனுப்பி விடு பார்க்கிறேன் என நந்திதா கூற, சரி என வைத்து விட்டு ஒரு பெரு மூச்சை விட்டவன். நந்திதா பேசிய வார்த்தையில் தன்னை மீட்டுக் கொண்டு பொன்மலர் மற்றும் மகேஸ்வரி இருக்கும் இடத்திற்கு சென்றான். 

பொன்மலர் அருகில் மோகன் ஆசையுடன் நின்று கொண்டு பார்க்க அவள் ஒவ்வொன்றையும் மேலே போட்டு பார்த்து மாமா எப்டி இருக்கு? இது ஓகேவா? அது எப்டி இருக்கு? என கேட்ட படி நின்றாள். 

அவர்களுக்கு கொஞ்சம் தள்ளி மான்வி எதுவும் எடுக்காமல் நின்று கொண்டிருக்க, “மாப்பிள்ளை மான்வி புடவை எடுத்திட்டா!” 

கண்ணன் புருவங்கள் இடுங்க அதுக்குள்ளவா? என ஆச்சரியத்துடன் கேட்டான். 

மகேஷ் பெருமையுடன் என்னோட மருமக கெட்டிகாரி! இந்த நீல நிறம் வரவேற்புக்கு, இந்த அரக்கு நிறம் முகூர்த்த புடவை! என்றார். 

அங்கு வந்த பணிப்பெண் வாங்க மேடம் ட்ரையல் போட்டு பார்ப்போம் இதோ நகை செட் என அழைத்தார். 

“மேடம் க்கு எண்ணம் இங்கே இல்லையே எங்கோ விட்டு வந்திருக்கா! என கைகளை மடக்கியவன் அங்கேயே நிற்க..  போடா போய் பாரு நான் வரேன் என அனுப்பினார். 

கண்ணன்…? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.