🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
13. உறவே உயிரே
உறவே உயிரே
📖 உறவே உயிரே · Chapter 13 of 18

உறவே உயிரே

  • 14 Aug 2025
  • 385 reads
  • ☆ No ratings yet
  • 7 min read

உயிரே-11

செவ்வந்தி, நர்சரியின் வாசலில் உட்கார்ந்து கோலம் போட்டுட்டு இருந்தா.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அதே நேரம், ஜெஸி கார்ல இருந்து இறங்கி, ஒரு மாதிரியான கடுப்பு முகத்தோட அந்த இடத்தை பார்த்துக்கிட்டு இருந்தா.

‘ஏன் இந்த கோபம் அவளுக்கு?’ அவள்தான் அன்பான அன்பு செல்வனோட நகல் ஆச்சே! அப்படின்னா என்னதான் நடந்தது?

(இரண்டு வாரத்திற்கு முன்பு)

ஜெஸி அவளோட ஆபீஸ்ல வேலையா இருந்தப்போ, ஒரு கணக்கர் பதற்றமா ஓடி வந்தாரு.

“என்ன ஆச்சு?” ஜெஸி கேட்டா.

“மேம், ஒரு சின்ன தப்பு நடந்துபோச்சு!” அவரு பதறினாரு.

ஜெஸி தன்னோட கையை இறுக்கமா மடக்கி, “என்ன நடந்தது?”னு கேட்டா.

“அந்த அப்பார்ட்மென்ட் ப்ராஜக்ட்டுக்கு எல்லா பணமும் அனுப்ப வேண்டிய நேரம், கடைசி பத்து லட்சம் மட்டும் ஒரு நம்பர் மாறி, வேற ஒரு ஆளுக்குப் போயிடுச்சு மேடம்!” அவரு கைவிரல்களை சொடுக்கிட்டே சொன்னாரு.

ஜெஸி கோபமா எழுந்து, “யூ ரப்பிஷ்!”ன்னு கத்தினா.

அந்தக் கணக்கர் பயந்து, “சாரி மேம், என்னை மன்னிச்சிடுங்க. இப்போ என்ன பண்றது?”ன்னு கேட்டாரு.

“இந்த பணத்தை மீட்டுட்டு, உன்னை என்ன பண்றதுன்னு நான் முடிவு எடுக்கிறேன்!”ன்னு மிரட்டிட்டு, ஜெஸி ஒரு போன் நம்பரைக் கேட்டா.

அவரு பயத்துல வேற வழி இல்லாம நம்பரை கொடுத்தாரு. ரெண்டு மூணு தடவை கால் பண்ணியும், போன் எடுக்கல.

“அட்டென்ட் பண்ணாங்களா?” ஜெஸி கேட்டா.

“இல்… இல்ல மேடம்…”

“இன்னும் ஒரு தடவை ட்ரை பண்ணு!”

அவரு மறுபடியும் ட்ரை பண்ணாரு. ஆனாலும் எடுக்கல. பயத்துல “மேம், எடுக்கல, இப்போ என்ன பண்றது?”ன்னு கேட்டாரு.

உடனே ஜெஸி பேங்குக்கு போன் பண்ணி தகவல் சொல்லச் சொன்னா.

“மேம், என்ன சொல்றது?”ன்னு கேட்டப்போ, “நான் சொல்றேன்”னு யோசிச்சா.

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், ஜெஸி சைபர் கிரைம்ல ஒரு புகார் கொடுத்தா. அடுத்த நாளே அந்த நம்பரோட பணப்பரிவர்த்தனை முடக்கப்பட்டது.

ஒரு வாரத்துக்கு அப்புறம், பணம் அவளோட கம்பெனிக்கே வந்து சேர்ந்துச்சு.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அப்போ செக்யூரிட்டி வந்து, “ஜெஸி மேம்!”னு கூப்பிட்டாரு.

“ம்?”

“உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கார்.”

“யாரு?”

“ஏதோ இன்டீரியர் டிசைன் வேலைன்னு சொன்னாரு மேடம்!”

“வரச் சொல்லுங்க!”ன்னு சொல்லிட்டு, ஜெஸி தன்னோட கம்ப்யூட்டரைப் பார்த்துட்டு இருந்தா.

“ஹலோ! நீங்கதான் இந்தக் கம்பெனியோட எம்.டியா?”ன்னு ஒரு குரல் கேட்டது.

ஜெஸி அவரைக் கோபமா பார்த்து, “பார்க்க எப்படி தெரியுது?”ன்னு கேட்டா.

“மூளையே இல்லாத ஒருத்திக்கு இவ்வளவு பெரிய கம்பெனி, அதுக்கு கீழ நாலு வேலைக்காரங்க, அதும் இல்லாம ஒரு செக்யூரிட்டி, கூடவே ஒரு பியூன்…”ன்னு அவர் பேசிக்கிட்டே போனார்.

இதைக் கேட்கக் கேட்க ஜெஸியோட முகம் மாறி, எழுந்து நின்னு, “ஹே, யாருடா நீ? ராஸ்கல்!”ன்னு கத்தினா.

அவளை விடாம அவனும், “அது ஒண்ணும் இல்லடி, சும்மா உன்னைப் பார்த்துட்டுப் போக வந்தேன்!”ன்னு சொன்னான்.

“டேய், ஓவரா பேசுற!” ஜெஸி கோபமா சொன்னா.

அவனோ அவளைக் கண்டுக்காம, எதிர்ல இருந்த சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்து, “எதுக்குடி என் மேல சைபர் கிரைம்ல கம்ப்ளைன்ட் கொடுத்த?”ன்னு கோபமா கேட்டான்.

ஜெஸி தன்னோட பதற்றத்தை முகத்துல காட்டாம, “தேவையில்லாம வம்பு பண்ணாத. நான் போலீஸை கூப்பிட வேண்டி வரும்!”ன்னு சொன்னா.

“கூப்பிடு, கூப்பிட்டுத்தான் பாரேன்! திமிரு பிடிச்சவளே!”ன்னு அவனும் விட்டுக் கொடுக்காம பேசினான்.

“டேய், ஓவரா பேசிட்டு இருக்க ஸ்கவுன்ட்ரல்!”ன்னு ஜெஸி திட்ட, “ஒருத்தருக்கு மூணு தடவை கால் பண்ணி போன் எடுக்கலன்னா, நீ வெயிட் பண்ணி இருக்கணும். தப்பு பண்ணது நீ, பணத்தை தப்பா என் அக்கவுன்ட்ல போட்டதுகூட நீதான்! ஆனா இதையெல்லாம் பண்ணிட்டு என் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்க!”ன்னு அவன் கோபத்துல பொரிஞ்சு தள்ளினான்.

ஜெஸி, “நாங்க வேணும்னு பண்ணல. அதனால பிரச்னை பண்ண வேணாம். கிளம்பு!”ன்னு சொன்னா.

அவன் அவளை முறைச்சுப் பார்த்து, “உன்னோட இடத்துல வேற ஒருத்தன் இருந்தா, அவனைக் கை, கால ஒடிச்சுப் போட்டுருப்பேன்!”ன்னு சொல்லிட்டு கிளம்பினான்.

அப்போ கணக்கர் பொண்ணு வேகமா கதவைத் திறந்துட்டு, “மேம், பணம் கிரெடிட் ஆகிடுச்சு!”ன்னு சிரிச்ச முகத்தோட சொன்னா.

“யூ புல்ஷிட்! டிஸ்மிஸ்!”ன்னு ஜெஸி அவளை வேலையை விட்டு கோபத்துல துரத்தினா.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவன் நின்னு அந்தப் பொண்ணைத் திரும்பிப் பார்த்தான்.

அந்த கணக்கர் பொண்ணு கண்ணுல தண்ணியோட நின்னுட்டு இருந்தா. ஜெஸி ‘டொம்’முனு கதவை சாத்திட்டா.

இது நடந்து ரெண்டு வாரம் இருக்கும். இப்போ மறுபடியும் அதே நபரோடதான் இந்த வண்டி தகராறு! அதே கோபத்துல தன்னோட மனசை சாந்தப்படுத்திக்க, நண்பனைப் பார்க்க வந்திருக்கா.

செவ்வந்தி திருப்தியோட கோலம் போட்டு எழுந்து நிக்க, அன்பு செல்வனோட கார் வரவும் சரியா இருந்துச்சு.

ஜெஸி “பேபி!”ன்னு கையை அசைச்சா.

அன்பு கார்ல இருந்தபடியே அவளுக்கு கை அசைச்சான். அவனோட கண்கள் ஜெஸி மேல மட்டும்தான் இருந்துச்சு. அந்தக் கண்கள் பேசும் மொழியை ஜெஸி புரிஞ்சிக்கிட்டா.

“எவ்வளவு தூரம் பேபி?”

“நான் வரவே கூடாதுன்னு நினைச்ச இடத்துக்கு, என்னை வரவச்சுட்ட. இட்ஸ் ஓகே, இன்னும் கொஞ்ச தூரம்தான். ஃபாலோ மீ பேபி!”ன்னு அன்பு சொன்னான்.

“அம் ஆங்கிரி டூ ஆங்கிரி அன்பு!” ஜெஸி சொன்னா.

“ஜஸ்ட் சில் ஜெஸி. ஃபாலோ மீ!”ன்னு கிளம்பினான்.

ஜெஸி கூலர்ஸ் போட்டுக்கிட்டு, செவ்வந்தியைப் பார்த்து ஒரு லுக்கு விட்டவள், முடியை ஒதுக்கிட்டு கிளம்பிப் போயிட்டா.

ஆனால் செவ்வந்தியோட நிலை? அவ்வளவுதான்! மனசுல இடி இறங்கின மாதிரி இருந்துச்சு.


ரெண்டு பேரோட காரும் மால் ப்ராஜக்ட் பக்கத்துல வந்து நின்னுச்சு. கார்ல இருந்து ஒரே நேரத்துல இறங்கினாங்க.

அன்பு பக்கத்துல போன ஜெஸி, அவனோட வயித்துல ஒரு குத்து விட்டா.

“பேபி, வலிக்குது!”

“எதுக்கு என்கிட்ட மறைச்ச?”

“எப்படி இருக்கா? அதை சொல்லு!”

“ம்… உனக்குப் பிடிச்சா எனக்கும் பிடிக்கும்”ன்னு ஜெஸி செவ்வந்தியைப் பத்தி சொன்னா.

அன்பு, “பட்…”ன்னு இழுத்தான்.

“என்ன?”

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“அவளுக்கு என்னை பிடிக்கல!”ன்னு உதட்டைக் கடிச்சிக்கிட்டே சொன்னான்.

இதைக் கேட்டு கோபமான ஜெஸி, “அவள் உன் பொருள் அன்பு! உன் இஷ்டம்! புரியுதா? இப்போவே அவளைத் தூக்கிட்டு வரேன்! எவ்ளோ திமிர் உன்னை கஷ்டப்படுத்திக்கிறாளா!”ன்னு கத்தினா.

அன்பு, “உன் முகம் சரியில்லையே, ரொம்ப கோவமா இருக்க?”ன்னு கேட்டான்.

ஜெஸி கையை இறுக்கமா மூடி, “ஒரு ராஸ்கல் என் வழில குறுக்க வந்து என்னை ரொம்ப அவமானப்படுத்திட்டான்!”ன்னு சொன்னா.

“அப்படியா! சொல்லு, எங்க இருக்கான்? இப்போவே போய் அவனை சும்மா விடமாட்டேன்!”ன்னு அன்பு கிளம்பினான்.

“ஓய்ந்துடு பேபி! எனக்கு ரொம்ப பசிக்குது!”ன்னு ஜெஸி சொன்னா.

“ஃப்ரீயா இருக்கியா? ஆபீஸ்?”

ஜெஸி நொந்துபோய், “அந்த ட்ரான்ஸாக்‌ஷன் தப்பு பண்ண லேடிய வேலையை விட்டு தூக்கினேன். என்னோட டாடி ஓவர் ரூல் பண்ணி, என்னை கண்டபடி திட்டினார். எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்திட்டேன் பேபி!”ன்னு சொன்னா.

அன்பு, “பேபி, என் கூட சேர்ந்துக்க. நீயும் நானும் சேர்ந்து இதை முடிப்போம்! உனக்கு ஓகேவா?”ன்னு கேட்டான்.

“டன் பேபி!” ஜெஸி சொன்னா.

“அப்போ வா சாப்பிடலாம்!”

“அவள் பேர் என்ன?”

“செவ்வந்தி.”

“இட்ஸ் டூ போர் அன்பு. ஹிஸ்டாரிக்கல் ஹீரோயின் மாதிரி!” ஜெஸி சொன்னா.

அன்பு, “செவ்வந்தி பேபி! எப்படி இருக்கு?”ன்னு கேட்டான்.

“ம்… தட்ஸ் மை அன்பு! சரி வா. நான் கொஞ்சம் போய் அவள் கூட விளையாடிட்டு வரேன்!”ன்னு ஜெஸி எழுந்தா.

“ரொம்ப டஃப் கொடுக்கிறா. நான் போய் வான்ட்டட் டாக் கொடுத்தேன், அது தப்பா பேபி?”ன்னு அன்பு கேட்டான்.

“என்ன தப்பு? தப்பு இல்ல. உன்னை அவள் ஒதுக்குறதுதான் தப்பு! என் கைல கிடைச்சா அவளை சும்மா விடமாட்டேன் அன்பு!” ஜெஸி சொன்னா.

“பாவம் செவ்வந்தி பேபி!” அன்பு சொன்னான்.

ஜெஸி சிரிச்சிக்கிட்டே, “செவ்வந்தி பேபி! இங்கே உன் முகத்தைக் காட்டு, ‘ஷை’ தெரியுதே! ஐ லைக் இட் அன்பு!”ன்னு சொன்னா.

அன்பு செல்வன், செவ்வந்தியோட நர்சரிக்கு எதிர்ல இருந்த கடையின் முன்னாடி வண்டியை நிறுத்தினான்.

ஜெஸி, “ம்! சரியான இடம். இங்கே இருந்து பார்க்க நல்ல லொக்கேஷன்!”ன்னு சொன்னா.

ரெண்டு பேரும் இறங்கிக்கொண்டாங்க. கடையில பால் இல்லாம, சர்க்கரை இல்லாம ஒரு பிளாக் டீ!

ரெண்டு பேரும் வாங்கி குடிக்க ஆரம்பிச்சாங்க.

“பூ பிடிக்குமா பேபி?” அன்பு கேட்டான்.

“ச்சீ!” ஜெஸி சொன்னா.

“அவளை எனக்கு பார்க்கணும் போல இருக்கு. எனக்கு பதிலா நீ போய் பார்த்துட்டு வா!”

“சோ கூல்! இப்போவே போறேன்! நீயும் வா!”ன்னு ஜெஸி போனா.

“ஹலோ, எக்ஸ்கியூஸ் மீ! யாராவது இருக்கீங்களா?”

“என்ன வேணும்?”ன்னு அழுத கண்களை துடைச்சிக்கிட்டே வெளியே வந்தா செவ்வந்தி.

“எனக்கு ஒரு பூச்செடி வேணும்!” ஜெஸி கேட்டா.

“சொல்லுங்க, எது வேணும்? ரோஸ், ஜாஸ்மின், எல்லாமே இருக்கு!”

“ஸ்மெல் வராத பூ இருக்கா? ஐ மீன் பூச்செடி!”

“ம்… இருக்கு.”ன்னு உள்ளே கூட்டிட்டு போனா.

ஜெஸி எல்லாத்தையும் பார்த்தா. ஆனா அதைவிட செவ்வந்தியை அதிகமாக நோட்டம் விட்டா.

“வாங்கி ஆச்சா?”ன்னு அன்போட குரல் கேட்டுச்சு.

“இல்ல அன்பு, எனக்கு எதுவும் தோணல. உனக்கு எது பிடிச்சிருக்கு?”ன்னு ஜெஸி திரும்பினா.

செவ்வந்தி தரையைப் பார்த்துக்கிட்டே நின்னா.

உடனே அன்பு, “எனக்கு வாசமில்லாத பூ வேணும்!”ன்னு கேட்டான்.

இதைக் கேட்டதும் செவ்வந்தி ‘திடுக்’குன்னு நிமிர்ந்து பார்த்தா.

ஜெஸி, “ஹலோ மேடம், என்ன அப்படி பார்க்கிற?”ன்னு கேட்டா.

“நத்திங்!”ன்னு வாசமில்லாத பூத்தொட்டியை எடுக்கப் போனா.

“எவ்வளவு?”

“அம்பது மேம்!”

“அவ்ளோதானா!”

அன்பு அவனோட பர்ஸ்ல இருந்து நூறு ரூபாய் நோட்டை அவள்கிட்ட நீட்டினான்.

அவள் ரெண்டு பேரையும் பார்த்தா. ஜெஸி சிரிச்சிக்கிட்டே, “நானும் அவனும் ஒண்ணுதான்! வாங்கிக்கோங்க!”ன்னு சொன்னா.

செவ்வந்தி…?

தொடரும்…

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!