உயிரே-9
செவ்வந்தி வேகவேகமா அன்பு வீட்ட விட்டு வெளிய வந்தவ, நேரா அவ வீட்டுக்கு போயி ரூமுக்குள்ள பூட்டிக்கிட்டா.
வேறொரு டிரஸ்ஸை எடுத்துக்கிட்டு வேகவேகமா பாத்ரூம்ல போய் குளிச்சுட்டு வந்தவ, வேற டிரஸ்ஸை மாத்திட்டு பெட்ல விழுந்தா.
பெரியசாமி பெட்ரோல் பங்க்ல இருந்து நேரா நர்சரிக்கு போனாரு. அங்க போய் பார்த்தா, நர்சரி பூட்டியிருந்துச்சு. ‘என்னடா, இன்னைக்கு பூட்டி இருக்கு, இது உலக அதிசயம் மாதிரில்ல இருக்கு!’னு உடனே அவர் மகளுக்கு ஃபோன் பண்ணாரு.
“ஹலோ கண்ணு!”
“பா!”
“என்னடா கண்ணு, கடை பூட்டியிருக்கு?”
செவ்வந்தி கொஞ்சம் சாதாரணமாக இருக்கிற மாதிரி, “இல்லப்பா, ஒண்ணுமில்ல.”
அவர் பதறிக்கிட்டு, “எதை பார்த்தும் பயந்துட்டியா? மயக்கம் வந்துருச்சா? நல்லாதானே இருக்க? உன்னை அருண கொண்டு வந்து விட்ற சொல்லவா? நீ பேசாம அத்தை கூட இரு. எதை நினைச்சும் பயப்படாத கண்ணு!”
“இல்லப்பா, நான் நல்லா இருக்கேன். எந்த பயமும் இல்ல…”
“சரிடா கண்ணு, அப்போ கடைக்கு வரலையா?”
“பா, சாவியை மணி பிளான்ட் செடிக்குள்ள வச்சிருக்கேன். கொஞ்ச நேரம் திறந்துவிட்டுட்டு வாங்கப்பா!”
பெரியசாமி, “கண்ணு என்னடா, குரல் ஒண்ணும் சரியில்லையே, எதை பார்த்து பயந்த? புகை பக்கம் எதுவும் போனியா?”
“பா, நான் நல்லா இருக்கேன்!”னு சொல்லி அவரை சமாதானப்படுத்தி, ஃபோனை வச்சா செவ்வந்தி.
ஃபோனை வச்சதும் அவளுக்கு மனசுக்குள்ள ஏதோ மாதிரி இருந்துச்சு. ‘நான் எதுக்கு அவனை பார்க்க போனேன்? அப்போ எனக்கு அவனை பிடிச்சிருக்கா? என்ன காரணம்? என் மனசுல அவன் மட்டும்தான் இருக்கானா? எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிறேன்’னு நினைச்சுக்கிட்டே தூங்கிட்டா.
அவ கண்ணசந்து தூங்கின கொஞ்ச நேரத்துல, அன்பு, சத்யாவை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்தான். சத்யா நேரா சுதா அத்தைக்கிட்ட போனா.
“அத்தை, நல்லாருக்கீங்களா?”
“ம்ம்… அட, யாரது? சத்யாவா?”
“நான் நல்லாருக்கேன். அப்புறம் நம்ம வீட்ல அம்மா, அப்பா எல்லாரும் சவுக்கியமா?”
சத்யா புன்னகையோட, “ம்ம்… நல்லாருக்காங்க. அக்கா கூப்பிட்டுட்டே இருந்துச்சு, அதான் வந்தேன். அக்கா எங்க அத்தை?”
சுதா, “நல்ல வேளை சத்யா, அக்காவுக்கு உடம்பு முடியல. உள்ள படுத்திருக்கா. நோன்பு வரைக்கும் அவளை பார்த்துக்க கண்ணு, கூடவே இரு, பிரியவே கூடாது!”
“சரிங்க அத்தை!”னு சிரிச்சுக்கிட்டே செவ்வந்தியின் ரூமுக்குள்ள நுழைஞ்சா சத்யா.
“அக்கா! நான் வந்துட்டேன்! உனக்கு என்ன தூக்கம்!”னு தட்டி எழுப்பினா.
“ஹே! அவளை எதுக்கு எழுப்புற? தூங்கிட்டு இருக்காளே தெரியாதா?”னு அதட்டிக்கிட்டே அன்பு உள்ளே வந்தான்.
சத்யா சுத்தி முத்தி பார்த்தவ, நேரா அன்புகிட்ட வந்து உதட்டுல ‘பச்’னு முத்தம் கொடுத்தா. அவளை உடனே கோபமா தள்ளிவிட்டான் அன்பு.
“மாமா!”னு அவள் செல்லமா சிணுங்க…
அன்பு கோபத்தோட, “இன்னைக்கு நைட் உன்கிட்ட தனியா பேசணும். சோ, பன்னிரெண்டு மணிக்கு மொட்டை மாடிக்கு வந்திடு!”
சத்யா பதட்டத்தோட, “மாமா! மாமா! ப்ளீஸ் மாமா!”னு கெஞ்சினா.
“யாரது?”னு தலையை பிடிச்சுக்கிட்டே செவ்வந்தி அப்போதான் எழுந்து உட்கார்ந்தா.
“அக்கா!”
“அழகி!”னு செவ்வந்தி கூப்பிட… அன்பு முறைச்சுக்கிட்டு வெளிய போனான்.
செவ்வந்தி சாதாரணமாக முகத்தை வச்சுக்கிட்டு, “எப்பவும் ரெண்டு பேருக்கும் சண்டையா? உன்னை பார்த்தாலே அருண் மல்லுக்கட்டி நிக்கிறான்.”
சத்யா, “அவருக்குத்தான் என்னைப் பிடிக்காதே! அதான் சண்டைக்குத்தான் நிப்பாரு.”
“சரி விடு. நான் எப்போ வரச் சொன்னேன், நீ எப்போ வர்ற?”
சத்யா, “அக்கா, நான் 12th க்ளாஸ் இல்ல, இப்போ காலேஜ் போறேன். இங்கே வந்தா நீ மட்டும்தான் பேசுவ. அப்புறம் என் பெரியப்பா, அத்தை, மாமா மட்டும்தான்.”
செவ்வந்தி அவளைப் பார்த்து, “வேற யார் பேசணும்?”
சத்யா, “அதை விடுக்கா! எப்படி இருக்க? எதை பார்த்து பயந்த? மயங்கி விழுந்துட்டியாமே! நர்சரிலகூட பிரச்னையா?”
அவள் மறக்க நினைச்ச விஷயத்தை எல்லாரும் ஞாபகப்படுத்த, மறுபடியும் அவளோட எண்ணம் அன்பு செல்வன் மேல போச்சு.
சத்யா, “அக்கா நீ எதுக்கு தனியா போற? எப்பவும் உன்னோட வால் அன்பைக் கூட்டிட்டு போக வேண்டியதுதானே?”
செவ்வந்தி கோபத்தோட, “ஹே, மரியாதை இல்லாம பேசாத, மாமான்னு சொல்லு!”
“ஆமா, பெரிய மாமா!”னு சிலுப்புனா சத்யா.
சத்யா வந்ததிலிருந்து வீடே கலகலப்பு, கொண்டாட்டம்தான்! வேலைகள் மலை போல இருந்தாலும் எல்லா வேலையையும் செய்வாள். அவ அத்தை, “மருமகளே!”னு கூப்பிடுறதுதான் அதுக்குக் காரணம்.
ராத்திரி நேரம் ஆச்சு. எல்லாரும் சாப்பிட்டுட்டு தூங்க ஆரம்பிச்சாங்க. அன்பு தூங்கல. அவளை இன்னைக்கு காலையிலிருந்து முறைச்சுக்கிட்டே இருக்கான்.
சரியா 12 மணி ஆச்சு. ‘எங்கே அவள்?’னு தேடிட்டு மேல போனான். அவனுக்கு முன்னாடி அவள் நின்னுட்டு இருந்தா. கிட்டத்தட்ட ஆறு வருஷக் காதல். இங்கே முதல்ல காதல் வந்தது சத்யாவுக்குத்தான். அவ தன்னோட எண்ணத்தைச் சொல்ல, அன்பு தடுமாறித்தான் போனான். அதுக்கப்புறம் ஏத்துக்கிட்டான். அவ்வளவுதான் காதல் சண்டைகள். இங்கே வரும்போது மட்டும் அவன் மேல தேக்கி வச்சிருந்த காதலை அவன்கிட்ட இருந்து அள்ளிக்கிடுவா. மணிக்கணக்கா பேச்சு வார்த்தை எல்லாம் இல்ல. வீட்டுக்குத் தெரிஞ்சா, உறவாக இருந்தாலும் காதல் எப்பவும் விவகாரம்தான்.
“மாமா!”
அன்பு அவளை முறைச்சுக்கிட்டே, “அறிவு இருக்காடி?”
“என்ன மாமா?”
அன்பு கொஞ்சம் கடுமையா, “விளையாட்டுத்தனமா இருக்காத சத்யா! இது பண்டிகை நேரம். அப்பா தான் பாதுகாவலர். நீ பாட்டுக்கு பக்கத்துல வந்து ஒட்டிக்கிற. காப்பு கட்ட இன்னும் நாலு நாள்தான் இருக்கு. இனி இந்த ஒட்டுறது, உரசுறது எல்லாம் வச்சுக்க வேணாம்!”
அவ கண்ணுல தண்ணி நிக்க, “சரிங்க”னு சொல்லிக்கிட்டே படிக்கட்டு பக்கம் போனா.
அன்பு அவளோட கையைப் பிடிச்சான். “விடுங்க! நான் போகணும்!”
அன்பு அவளைப் பார்த்து, ‘கொஞ்சம் கடுமையா பேசிட்டோமோ’னு நினைச்சு, “கோவமா?”னு கேட்க…
அவ எதுவும் சொல்லாம நின்னுகிட்டு இருந்தா.
அன்பு, “நீ ரொம்ப துடுக்கா இருக்கடி, புரியுதா?”னு பக்கத்துல இழுத்தான்.
சத்யா, “உங்களை பார்க்க ஹாஸ்டல்ல இருந்து நேரா இங்கே வந்தேன் தெரியுமா? ஒரு ஃபோன் பண்ணியிருப்பீங்களா? ஒரு தடவை என்கிட்ட பேசியிருப்பீங்களா? ஒவ்வொரு நாளும் உங்க நினைப்புதான்! விடுங்க மாமா, உங்களுக்கு புரியாது!”
அன்பு, “சரி, சாரி!”னு பக்கத்துல இழுத்தான்.
“அதான் காப்பு கட்ட போறாங்கள்ல, தள்ளி நில்லுங்க!”
அன்பு, “அவளோட முகத்தைத் திருப்பி, “இன்னும் நாலு நாள் இருக்கு! இப்போ கொடுத்தா தப்பில்ல. நாளைக்குதான் மாசம் பிறக்கப் போகுது”னு அவ உதட்டை கவ்விக்கொண்டான். சத்யா அவனை கட்டிக்கிட்டா.
ஒரு சில நிமிஷம் கழிச்சு மூச்சு வாங்க பிரிஞ்சவன், “வீட்ல எல்லார் முன்னாடியும் நீ என்னை ஏடாகூடமா மாட்டி விட்டுடுவியோன்னு பயமா இருக்குடி!”
சத்யா, “அப்போ என்னை கட்டிக்க மாட்டியாடா? கிஸ் பண்ணி கிஸ் பண்ணி என்னை ஏமாத்த பார்க்கிறியா?”
அன்பு, “ஹே, இல்லடி! நான் எதுக்கு உன்னை ஏமாத்த போறேன்! நம்ம வீட்ல பெரியவ செவ்வந்திதான். சோ, மாமா அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. அவ கல்யாணம் அன்னைக்கே உன்னை பரிசம் போட்டு தூக்கிட்டு போய்டுவேன்!”
“நிஜமாவா மாமா?”னு மறுபடியும் உதட்டுல முத்தம் பதிச்சா.
அன்பு, “இதுக்குத்தான் இந்த காரணத்துக்காகத்தான் உன்கிட்ட எந்த விஷயமும் சொல்றது இல்ல. நீ ரொம்ப இப்போ இருந்தே கனவு காண ஆரம்பிச்சிடுவ!”
சத்யா, “சரி, சாரி! இப்போ ஒரே ஒரு கிஸ் மட்டும் கொடு, இனி டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்! ப்ளீஸ் மாமா!”னு அவள் கேட்க…
அன்பு, “சரி”னு பக்கத்துல வர, அதுக்குள்ள அவள் முந்திக்கிட்டு அவனை ஒரு வழி ஆக்கிட்டா.
‘இங்கே அதே முத்தம்! கை மேல கொடுத்த அப்படியே என்னோட உதட்டுல கொடுத்துட்டான். இனி அவனை எப்படி எதிர்கொள்ள போறேன்? ஐயோ!’னு அன்பு செல்வன் என்னும் இந்திரனை நினைச்சு புலம்ப ஆரம்பிச்சா செவ்வந்தி.
நடு ராத்திரி வரை அன்பு அவளோட மடியில படுத்துக்கிட்டு மெதுவா கதை பேசி சிரிச்சுட்டு, சரியா விடியற்காலையில வாசலை பெருக்குற மாதிரி வந்தவ ரொம்ப புத்துணர்ச்சியோட வேலையை செய்ய ஆரம்பிச்சா.
அவனுக்கு விட்ட தூக்கத்தை பிடிக்க பெட்டுக்கு போய்விட்டான்.
சுதா ஆச்சரியத்தோட, “என் தம்பிக்கு இப்படி ஒரு பொண்ணா! சத்யா கண்ணு, அத்தைக்கு முன்னாடியே எழுந்துட்ட போல!”
“ஆமாங்க அத்தை!”னு அசட்டு சிரிப்போட வேலையை தொடர்ந்தா.
சுதா, “பொண்ணு செவ்வந்திக்கு இஞ்சி தட்டி போட்டு டீ வச்சுக்கொடு பொண்ணு. நான் பால் கறந்துட்டு வர்றேன்!”
“சரிங்க அத்தை!”னு தன் அக்காவைப் பார்க்க ஓடினா.
“அக்கா! எழு! இந்தா கடுங்காபி…”
செவ்வந்தி எழுந்து டீயை வாங்கிட்டு அவளை பார்த்தா.
“எப்போடி வந்து படுத்த? எப்போ எழுந்த? இப்போ டீயோட நிக்கிற!”
சத்யா சிரிச்சுக்கிட்டே, “அது நைட் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ஃபோன் பேசிட்டே அப்படியே மொட்டை மாடி மேல தூங்கிட்டேன்!”
செவ்வந்தி அவளைப் பார்த்து, “அப்போ என் கூட இருக்க வரலையா? நான் தான் உன்னை நினைச்சுக்கிட்டு இருக்கேன் போல!”
சத்யா தன் அக்காவோட கன்னத்துல முத்தம் கொடுத்துட்டு, “அக்கா! நீ என் அக்கா! உன்னையும் தான் நினைப்பேன்! நான் ஊர்ல இருந்து உனக்காக ஒண்ணு கொண்டு வந்திருக்கேன்!”
“என்ன?”
ஒரு பெரிய ஃபோட்டோ, அதுல செவ்வந்தி நடுவுல ஒரு பக்கம் அன்பு, அப்புறம் சசி, சத்யாவோட அண்ணன், சத்யா, நாலு பேரும் இருக்கிற படம் தான்.
“ஹே, அழகா இருக்குடி ரவுடி!”
“சரி, வா! இதே போல எங்க வீட்ல அண்ணா ரூம்ல ஒண்ணு இருக்கு! அதேபோல இங்கே! எப்பிடி!”னு பேசி பேசி அவளை சிரிக்க வச்சா.
அதுக்கப்புறம் செவ்வந்தி தலைக்கு குளிச்சுட்டு, காலை உணவு எல்லாத்தையும் சமைச்சுட்டு, சத்யாவுடன் கிளம்பி சாமி கும்பிட போய்ட்டா.
ஆனா அன்பு செல்வன் என்ன பண்றாரு? இனி செவ்வந்தி வேறு ஒரு ஆளை பார்க்கப் போறாள்.
தொடரும்…
ம்ம்… அன்பு-சத்யா ஒரு ஜோடி… இன்னும் ரெண்டு ஜோடி இருக்கு! நாளைக்கு வருவாங்க!
do like and share pradhanyakuzhalinovels