🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
12. உறவே உயிரே
உறவே உயிரே
📖 உறவே உயிரே · Chapter 12 of 18

உறவே உயிரே

  • 14 Aug 2025
  • 369 reads
  • ☆ No ratings yet
  • 8 min read

உயிரே-10

செவ்வந்தி கோவிலுக்குப் போய் பிள்ளையாருக்கு தண்ணி ஊத்திட்டு, எல்லா சாமிக்கும் பூ வச்சுட்டு, இப்ப கர்ப்பகிரஹத்துல இருக்கிற சாமியை கும்பிட வந்தா.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவ கண்ணை மூடிக்கிட்டு, “சாமி, இது சரியா? தப்பா? என்னால முடிவு எடுக்க முடியல! ஒரே மன உளைச்சலா இருக்கு! நீதான் எனக்கு நல்ல வழி காட்டணும்”னு சொல்லிக்கிட்டே அப்படியே நின்னுக்கிட்டு இருந்தா.

“அக்கா! அக்கா! ஹே, செவ்வந்தி!”னு சத்யா அவளை உசுப்பினா.

பூசாரி தட்டோட வந்து நின்னாரு. “சாமி”னு கையை நீட்டினா செவ்வந்தி. திருநீறை கொடுத்துட்டு உள்ள போனாரு.

சத்யா, “அக்கா, உன் எண்ணம் எங்க இருக்கு?”

“இல்லடி, ஒண்ணும் இல்ல. நான் நல்லாதான் இருக்கேன்!”னு ரெண்டு பேரும் நடந்து போனாங்க.

சத்யா, “அக்கா, அவ்ளோதானா? வீட்டுக்கு போலாமா?”

செவ்வந்தி, “இன்னும் சிவன் கோவிலுக்கு போகணும். என்ன ஆச்சு?”

“எனக்கு பசிக்குதுக்கா!”

செவ்வந்தி, “நீ போ! நான் கோவிலுக்கு போறேன்!”

சத்யா, “மாட்டேன்! உன்கூடத்தான் இருப்பேன்”னு கோவிலுக்குள்ள நுழைஞ்சாங்க. வாய்க்கால் பக்கத்துல, ரெண்டு பக்கமும் அரளிப்பூ செடிகள், வேப்ப மரம், மகிழ மரம்னு ஒரு ரம்மியமான இடத்துக்கு நடுவுல கோவில் இருந்துச்சு.

சிவ்வயர் மட்டும்தான் அங்க இருந்தாரு. செவ்வந்தியைப் பார்த்ததும் புன்னகையோட வரவேற்றாரு. பெரிய இடத்துப் பொண்ணுங்கிறதால இல்ல, எல்லாரிடமும் கனிவா நடந்துக்குவா.

அவர்கிட்ட தலையை அசைச்சுட்டு சாமி கும்பிட ஆரம்பிச்சா. சத்யா அந்த இடத்தையே பார்த்துக்கிட்டு இருந்தா. நவக்கிரகத்துக்கு ஒன்பது அடி பிரதட்சணம். சத்யா சூரிய பகவான் பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டா.

அய்யர், “செவ்வந்தி!”

“சாமி!”னு ஒரு வழியா கும்பிட்டு முடிச்சுட்டு வந்தா.

அய்யர், “இன்னைக்கு ஒருத்தர் குங்கும அர்ச்சனை பண்ணினாரு. கூடவே பிரசாதம் படைச்சாரு. அதான் உனக்காக எடுத்து வச்சிருந்தேன். நீதானே ஆசையா சாப்பிடுவ! இந்தா, வாங்கிக்கோடி!”

செவ்வந்தி சிரிச்சுக்கிட்டே வாங்கிக்கிட்டா. “உன் தங்கச்சிக்கும் ஒண்ணு”னு நீட்டினாரு.

“சரிங்க சாமி!”

“அப்புறம் அர்ச்சனையில குங்குமம் இருக்கு, ஒரு டப்பா எடுத்து வச்சிருந்தேன்! இந்தா பிடி, ‘தீர்க்க சுமங்கலி பவ’! நல்ல பையன் உனக்குக் கை பிடிக்க வருவான்”

“சரிங்க சாமி!”னு ரொம்ப சந்தோஷத்தோட வாங்கிக்கிட்டா.

சத்யா, “அக்கா!”னு சிரிச்சுக்கிட்டே பக்கத்துல வந்தா.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“உனக்கும் தர்றேன், இருடி!”னு குங்குமம் வைக்க…

“அக்கா, முதல்ல பொங்கலைக் கொடு!”னு அவளோட பங்கை வாங்கிக்கிட்டா. “அக்கா, செம டேஸ்டு! உண்மையாவே இன்னிக்கு நாள் செமையா இருக்கப் போகுது!”

செவ்வந்தி அந்த பொங்கலை ரெண்டு வாய் மட்டும் சாப்பிட்டு, மீதிய சத்யா பிடுங்கிக்கிட்டா. அவ மனசும் வயிறும் நிறைஞ்சு இருந்துச்சு.

ரெண்டு பேரும் நேரா வீட்டுக்கு போனாங்க. செவ்வந்தி அவ அப்பாவுக்கு சிரிச்சுக்கிட்டே சாப்பாடு பரிமாற, அவர் திருப்தியா சாப்பிட்டுக்கிட்டே, “சத்யா குட்டி!”

“பெரியப்பா!”

“பேசாம இங்கேயே இருந்திடு தங்கம். உங்க அக்கா இன்னைக்குத்தான் சிரிக்கிறா. கிட்டத்தட்ட ரெண்டு மூணு மாசமாவே சிரிப்பைக் காணோம். இன்னைக்கு நீ வந்ததும்தான் நல்லா இருக்கா.”

சத்யா, “அதுக்கென்ன பெரியப்பா, கல்யாணம் பண்ணிக்கிட்டு வர்றேன்!”

அன்பு வெடுக்கென புரை ஏறிட, செவ்வந்தி அவன் தலையை தட்டி தண்ணி கொடுத்தா.

சுதா, “என்ன சத்யா?”

“அத்தை, படிப்பை எல்லாம் விட்டுட்டு எப்படி வர முடியும்? மொத்தமா முடிச்சுட்டு என்னோட மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு வர்றேன், சேர்த்துக்க மாட்டிங்களோ?”

சுதா சிரிச்சுக்கிட்டே, “நீ வாடி மருமகளே!”னு சொன்னாங்க. உடனே சத்யா, “அத்தை, லவ் யூ!”னு கன்னத்துல முத்தம் கொடுத்து கட்டிக்கிட்டா.

முத்துசாமி, “என்ன பொண்ணு! அத்தை மேல பாசம் பயங்கரமா இருக்கு!”

“எனக்கு ஒரே ஒரு அத்தை இவங்க மட்டும்தான் மாமா!”னு கலகலக்க ஆரம்பிச்சா.

அன்பு செல்வன் சரியான நேரத்துல எழுந்தான். ராத்திரி எல்லாம் தூக்கமே இல்லை. அவளோட நினைப்புதான்! ஆனா அது எல்லாமே கோபமா மாறிடுச்சு. தன்னைத் தேடி எல்லாரும் வரணும்னு நினைப்பவன், முதல்முறையா அவளைத் தேடி போனான்! அதுதான் மிகப்பெரிய தவறு! அவளை தன்னைத் தேடி வர வைக்கணும்! ‘அவள் என் பொருள்! அவளை சொந்தமாக்கிகொண்டாதான் இந்த மனசு நிம்மதி பெறும்’னு நினைச்சான்.

அதே நேரம் மகேந்திரன் ஃபோன் பண்ணினாரு. வேண்டா வெறுப்பா ஃபோனை எடுத்தான்.

“ஹலோ, டாட்!”

“என்னடா கண்ணா ஆச்சு? உனக்கு ஃபீவர்னு சந்தானம் சொன்னான்.”

“இப்போ ஓகே”னு சிடுசிடுத்தான்.

“குரல் ஒண்ணும் சரியில்லையே!”

“நத்திங்!”

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“சொல்லுடா, என்ன விஷயம்?”

“அவள் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா டாடி! ஐ காண்ட்! முடியல டாடி! எனக்கு கோபம் கோபமா வருது!”னு இயலாமையில படபடனு பொரிஞ்சு தள்ளினான்.

மகேந்திரன் அப்படியே ஆறு மாசத்துக்கு முன்னாடி போனாரு.

(ஆறு மாசத்துக்கு முன்னாடி)

சுந்தரமூர்த்தியோட பொண்ணு கீர்த்தனா, இவனுக்கு ஒரு வயசு சின்னவ. இவனைப் பிடிச்சிருக்குன்னு சொல்லி பேசலாம்னு சுந்தரமூர்த்தி அழைச்சாரு.

“சொல்லு சுந்தர்!”

சுந்தரமூர்த்தி பேசுறதுக்குள்ள, “அங்கிள், எனக்கு அன்பை ரொம்ப பிடிச்சிருக்கு. அதுதான் உங்ககிட்ட சொல்லிட்டு அவர் கிட்ட என் காதலை சொல்ல வந்தேன்!”னு கீர்த்தனா சொன்னா.

அவளும் MIT-ல சிவில் இன்ஜினியரிங் முடிச்சுட்டு இப்பதான் இந்த கட்டுமானத் துறையில நுழைஞ்சிருந்தா.

“யாருக்கு யார் பார்ட்னர்! உன்னை என்னோட ஜூனியராக்கூட சேர்த்துக்க மாட்டேன்! எல்லாம் சுந்தர் அங்கிளுக்காக விட்டு வைக்கிறேன்!”னு சொல்லிக்கிட்டே அன்பு செல்வன் நடந்து வந்தான்.

மகேந்திரன், “சாரி சுந்தர்! என்னை மன்னிச்சிடுடா!”

சுந்தர் சிரிச்சுக்கிட்டே, “இது எனக்கு முன்னாடியே தெரியும்டா! ஆனா என் பொண்ணு நம்பல. அதனாலதான் சம்மதம் சொன்னேன். இனி கீர்த்தனா அவ வேலையை பார்ப்பா.”

கீர்த்தனா அவனை கோபத்தோடவும் விரக்தியோடவும் பார்த்தா.

அன்பு அங்க நடந்த எதையும் கண்டுக்காம கிளம்பிட்டான்.

கீர்த்தனாவோட கண்ணுல தண்ணி நிக்க, உதட்டைக் கடிச்சு நின்னா.

மகேந்திரன், “அவன் ஒரு ராட்சசன்மா! எனக்கே அவனை நினைச்சா பயமா இருக்கு. உன்னை எனக்கு மருமகளாக்கி கொள்ள எனக்கு சம்மதம்தான்டா கண்ணா!”

கீர்த்தனா, “வேண்டாம் அங்கிள்! ஆனா நீங்க தப்பா நினைக்க வேண்டாம், அவன் நிறைய கஷ்டப்படுவான். ச்ச… அழகு அத்தைக்கு எப்படி இப்படி ஒரு பையன்!”னு வாய் மொழியா சொன்னா.

ஆனா இன்னைக்கு…

மகேந்திரன் ரொம்ப அமைதியா இருக்க, “டாடி! ஐம் டாக்கிங் டு யூ! என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”

“ஒண்ணும் இல்ல. அப்புறம் என்ன ஆச்சு?”

“ப்ளீஸ், சீரியஸா பேசுங்க டாட்!”

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

மகேந்திரன் கொஞ்சம் நிதானத்தோட, “சரி, அப்போ நான் வரவா? அவங்க குடும்பத்துல பொண்ணு கேட்டு கட்டிக்கிடு!”

அன்பு செல்வன் எதையோ யோசிச்சவன், “வேண்டாம் டாட்!”

“என்னடா, நீதானே ஃபீல் பண்ண?”

அன்பு செல்வன் தீர்மானத்தோட, “அவள் ஃபீல் பண்ணனும் டாட்! அவளே என்கிட்ட வந்து லவ் சொல்லணும்! என்னோட இயல்பை மீறி அவளை விரும்பினேன்! ஆனா என்னை… என்னை!”னு தலையை கோதிக்கிட்டான்.

மகேந்திரன், “நான் சொல்றத கேளு அன்பு செல்வன்!”

“அவள் விரும்பணும் டாட்! அவள் வேண்டாம்னு சொல்லிட்டா என்னோட இந்த மேரேஜ் லைஃப் எண்ட்!”னு சொல்லி ஃபோனை கட் பண்ணிட்டான்.

மகேந்திரன் ஃபோனை வச்சு கண்ணை மூடி உட்கார்ந்தாரு. ‘எப்படி இவனுக்கு புரிய வைக்க? அழகு! என்னால முடியலடி! உன் பையனுக்கு லவ் பத்தி ஒண்ணுமே தெரியல. எல்லாம் நம்ம பண்ண தப்பு. எங்க அப்பா கூட அவனை விட்டதுதான், இப்படி முன்கோபக்காரனா வந்திருக்கான்’னு நினைச்சுக்கிட்டாரு.

இங்கே அன்பு செல்வன் ரொம்ப கோபத்தோட கிளம்பினான். இப்படி கோபத்தோட இருக்கிறவனுக்கு, இவனை போலவே எல்லா குணங்களும் ஒத்த குணத்துல ஒருத்தி இருக்கா. அன்போட க்ளாஸ், கூடவே க்ளோஸ் ஃபிரண்ட் ஜெஸ்ஸி. சின்ன வயசுல இருந்தே ஒண்ணா வளர்ந்தவங்க.

அவனை பார்க்க, அவனுக்கு தெரியாம வந்துகிட்டு இருக்கா. அன்பு செல்வன் நேரா சைட்டுக்கு போனான். அவனோட கண்ணு எல்லாம் சிவந்து இருந்துச்சு.

செவ்வந்தி உற்சாகத்தோட நர்சரிக்கு கிளம்பினா. கூடவே சத்யாவும் கிளம்பிட்டா.

செவ்வந்தி, “சத்யா, நீ வீட்ல இரு!”

“ஏன் அக்கா? நானும் வர்றேன்! பெரியப்பா உங்களை விட்டு பிரியக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க!”

செவ்வந்தி தன்னை அழகுபடுத்திக்கிட்டே, “ஹே, அத்தைக்கு ஹெல்ப் பண்ணக் கூட இருடி!”னு கிளம்பிட்டா.

சத்யா, “அதுவும் சரிதான். நைட் தூங்கவே இல்லையே, இப்போ தூங்குறேன்!”னு அனுப்பி வச்சா.

அன்பு வெளியில தயாராக இருந்தான். செவ்வந்தி, “அன்பு, போலாமா?”

அன்பு சுத்தி பார்த்துக்கிட்டே, “என்ன, நீ மட்டும் வந்திருக்க? அந்த வாயாடி வரலையா?”

“அவ அத்தை கூட இருக்கேன்னு சொல்லிட்டா, நானும் ஓகே சொல்லிட்டேன். சரி வா போலாம்”னு செவ்வந்தி வண்டியில் உட்கார்ந்தா.

அன்பு அவளோட முகத்தைப் பார்த்தான். “என்னடி, இன்னைக்கு ரொம்ப ரொம்ப அழகா தெரியுற!”

உள்ளே இருந்து ‘டம்’னு சத்தம் கேட்டுச்சு. அன்பு நாக்கைக் கடிச்சுக்கிட்டான். “என்னடி உள்ள சத்தம்?”னு செவ்வந்தி கேட்க…

சத்யா, “ஒண்ணும் இல்லக்கா!”னு வெளியில வந்து கைய அசைச்சா. அவளோட பார்வை அன்பை துளைச்சு எடுத்தது.

அன்பு தன்னை சுதாரிச்சுக்கிட்டு கிளம்பினான். அதுக்கப்புறம் அரை மணி நேரம் ஆச்சு. செவ்வந்தி உற்சாகத்தோட இறங்கினா.

“ஹே, வரட்டாடி!”

“ம்ம்… பாய்”னு கைய ஆட்டினா.

அதுக்கப்புறம் எல்லா வேலையையும் ஆரம்பிச்சா.

அவ சின்ன சின்ன பூந்தொட்டிகளை வெளிய கொண்டு வந்து அடுக்கிட்டு இருக்க, அந்த நேரம் ஒரு கார் வந்தது.

“ஹலோ, அன்பு செல்வன்!”

“ஜெஸ்ஸி!”

“என்ன, உன்னோட வாய்ஸ் சரியில்லையே பேபி!”

அன்பு, “எனக்கு இப்போ உன்னை பார்க்கணும் போல இருக்கு! ஐ ஃபீல் சாட் ஜெஸ்ஸி!”

“ம்ம்… நான் ஆன் தி வே. நீ எங்க இருக்க?”

“ஹே, நான் சென்னையில இல்ல பேபி. ஈரோடு!”

“கம் ஆன் டா, நான் இங்கதான் இருக்கேன். என் எதிரில ஒரு நர்சரி இருக்கு. அதுக்கு மேல எப்படி வரணும்!”

அன்பு, “ஹே, ஹே, பேபி! அங்கேயே இரு, நான் உடனே வர்றேன்!”

செவ்வந்தி வெளியில கோலத்தைப் போட்டு முடிச்சு எழுந்து நிற்கவும், அன்பு செல்வனோட கார் வரவும் சரியா இருந்துச்சு.

தொடரும்…

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!