அத்தியாயம் – 13
கைகளை இறுக்கி மடக்கிய படி விரக்தியுடன் அவளின் பின்னால் சென்றான் கண்ணன். கண்ணாடியின் முன் வந்து நின்றாள் மான்வி. நல்ல வெளிச்சமான விளக்குகள் அவளின் அழகை இன்னும் கூட்டி காட்டியது. மான்வி எப்பொழுதும் மற்றவர்கள் முன் தான் ஒரு பேரழகி என காட்டிக் கொள்ள மாட்டாள்.
“மேடம் இங்கே நில்லுங்க முதல்ல இந்த ஸ்கை ப்ளூ டிரை பண்ணலாம்.” என பணிப்பெண் புடவையை பிரித்து முந்தியும், ப்ளௌஸ் என சரியாக பொருத்தி பார்த்து புடவை நிற்கும் பொருட்டு ஒட்டியாணம் கட்டி விட்டு நெக்லஸ், ஆரம் என இரண்டையும் போட்டு விட்டபடி புன்னகையுடன் “மேடம் உங்களுக்கு எந்த புடவை கட்டினாலும் அழகாத்தான் இருக்கும்.” என சொல்ல, அதற்குள் மான்வியின் கொண்டை அவிழ்ந்து விழுந்தது. “ப்ச்!” என அவள் தள்ளி விட முயற்சி செய்ய, “அச்சோ மேடம் அழகா இருக்கீங்க! சார் அங்கே நின்னா தெரியாது. இந்த பக்கம் வாங்க” என கண்ணனை அழைத்தாள் பணிப்பெண்.
கண்ணன் மெதுவாக அவ்விடத்திற்கு தயக்கத்துடன் வந்தான். மான்வி அழகு சிலை போல நின்று கொண்டிருக்க, இப்போ போட்டோ எடுங்க சார்! என சொல்லி விட்டு அந்த பணிப்பெண் அடுத்த புடவையை பிரித்து கொண்டிருந்தாள். மான்வியின் பின்னால் கண்ணன். அந்த கண்ணாடியில் இருவரின் பிம்பமும் அழகான ஓவியம் போல தெரிந்தது.
தன்னை மறந்து போனை எடுத்தவன் கண்ணாடியில் இருக்கும் பிம்பத்தை அப்படியே படமாக்கினான். “அழகாருக்க மான்வி!” என வாய் மொழியாக கூறி விட்டான் தன்னை மறந்து, மெல்ல தலை சாய்த்து மான்வி அவனை பார்த்தாள். சக் சக் என கிளிக்குடன் படம் எடுத்துக்கொண்டே இருந்தது அவனது கைகள்.
“இன்னும் எவ்ளோ நேரம்?” என சத்தம் கேட்க சட்டென இருவரும் தந்நிலைக்கு வந்தார்கள். மான்வி கூந்தலை அள்ளி முடித்தாள். அங்கே வேறு வாடிக்கையாளர்கள் புடவையுடன் நின்று கொண்டிருக்க, எஸ்கியூஸ் மி என சொல்லிக்கொண்டு ஓரமாக வந்தான் கண்ணன்.
ஒரு நிமிசம் இருங்க மேடம் இந்த புடவை மட்டும் பார்த்துக்கிறோம். அடுத்து நீங்க பாருங்க என பணிப்பெண் சொல்லி விட்டு முகூர்த்த புடவையை மான்விக்கு போட்டு விட்டாள். மற்ற பெண்களுக்கு மான்வியின் அழகும் அவளின் கையில் இருக்கும் புடவையும் பொறாமை கொடுக்க, வெரக்கி பார்த்தார்கள்.
“சார் மேடம் ரெடி! இந்த பக்கம் வந்து பிக் எடுங்க”
கண்ணன் இன்னொரு பக்கம் அவளின் ஒயில் அழகை படம் பிடித்தான். புடவை நல்லாருக்கு. ஆனால் யாரா இருப்பான் இவன்? அந்த பொண்ணு கிளி மாதிரி இருக்கு. இவன் என்ன இத்தனை கருப்பா இருக்கான். ஹான் பணக்காரனாக இருப்பான் போல அதான் கட்டிக்கிறா. இப்படி ஒரு ஆள் வந்தால் கொட்டி கொடுத்தாலும் நான் கட்டிக்க மாட்டேன் பா. யாரா இருந்தால் நமக்கென்ன அடுத்தவங்கள பத்தி நமக்கென்ன பேச்சு என அவர்கள் பழித்து பேசுவது அப்பட்டமாக அனைவருக்கும் கேட்டது.
மெதுவாகத்தான் பேசினார்கள். கண்ணனின் முகம் சடுதியில் மாறி போனது. ஆனால் வெளிக்காட்டி கொள்ள வில்லை. பணிப்பெண் சங்கடத்துடன் நெளிந்தாள். மான்வி எந்த உணர்ச்சியையும் காட்டாமல் ஓகே இது ரெண்டையும் பில்லுக்கு அனுப்பிடுங்க என்றவள். அங்கிருக்கும் இன்னொரு புடவையை எடுத்து மேல போட்டுக் கொண்டே கிளம்புங்க நான் பார்த்திட்டு வரேன் என்றாள்.
கண்ணன் அவ்விடத்தை விட்டு உடனே சென்றான். இன்னும் எவ்ளோ நேரம் வெயிட் பண்றது? என அந்த இரண்டு வாடிக்கையாளர்களும் கேட்க, “நான் செலக்ட் பண்ற வரைக்கும் மூடிட்டு நில்லுங்க” என்றாள் மான்வி.
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, மான்வியை பணிப்பெண் அப்பட்ட அதிர்ச்சியில் பார்த்தாள். “என்ன மா இப்படி பேசுற? நான் உனக்கு அம்மா ஸ்தானத்தில் இருக்கேன். நீ என்ன வளர்ப்பு?” என அந்த நடுத்தரவயது பெண்மணி கேட்க, அவளின் மருமகள் “ஹே என்ன நாக்கு நீலுது?” என பாயிந்து கொண்டு வந்தாள்.
நீ என்ன பேசினன்னு இதோ இதில் ரெக்கார்ட் பண்ணிருக்கேன். இதை அப்படியே எடுத்திட்டு போய் கமிஷ்னர் ஆபிஸில் ரெண்டு லேடிஸ் ஒரு ஜென்ன ஈப்டீசிங் பண்ணாங்க அதுவும் கலரை வச்சுன்னும், நிறவெறிய தமிழ்நாட்டில் கொண்டு வாங்க இதனால் எனக்கு மனஉளைச்சல்ன்னு சொல்லி நஸ்ட ஈடு கேட்கனும்ன்னு என்னோட மூளை ஒரு யோசனை கொடுக்குது செய்யலாம்ன்னு பார்க்கிறேன். நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க? என மான்வி இரு புருவத்தையும் தூக்கினாள்.
இரண்டு பெண்களும் அரண்டு போய் பார்த்தார்கள். நம்ம இருக்கிறது திராவிட தமிழ்நாடு இங்கே திராவிட கலரை பத்தி பேசினால் என்ன நடக்கும்? என உதட்டை பிதுக்கினாள் மான்வி.
மே.. மேடம் நாங்க எதோ தெரியாம சொன்னோம். தப்பா எதுவும் சொல்லல. நாங்க வந்து என உதடுகள் தந்தியடிக்க பேசினார்கள்.
“அச்சோ என்னோட மனசு இறங்கள! இந்த புடவை என்ன ரேட்? உன் கையில் இருக்கும் புடவை என்ன ரேட்?”
“20,000 மேடம்”
“இதை என் கல்யாணத்துக்கு கிஃப்ட் பண்ணு. இப்போவே”
“இதென்ன அநியாயம்?”
“அப்போ கோர்ட்டில் போய் ஃபைன் கட்டிட்டு எனக்கு நஸ்ட ஈடு கொடு நான் ரெடி” என மான்வி சிரித்தாள். .
“இல்ல இல்ல மேடம் இதோ இப்போவே பண்றோம். அந்த ஆடியோவ டெலிட் பண்ணுங்க.”
முதல்ல கிஃப்ட் அப்புறம் டெலிட்! ம்ம் போங்க என அழைத்து சென்றாள் மான்வி.
இருவரும் வேறு வழி இல்லாமல் 20,000 பணத்தை கட்டி அவளின் கையில் புடவையை கொடுக்க, வாங்கி கொண்டு நேராக அவர்களை அழைத்தவள். கொஞ்சம் அப்படி வாங்க என வெளியில் இருக்கும் புட் கோர்ட் பக்கம் அழைத்து சென்றாள்.
புடவையை திருப்பி தருவா போல என அவர்களும் சென்றார்கள். அங்கிருக்கும் டஸ்ட் பின்னில் அவர்களின் கண் முன் போட்டாள். அச்சோ கை தவறி கீழே சாரி குப்பை கூடையில் விழுந்துடுச்சு அந்த புடவை எனக்கு வேணாம் உங்களுக்கு வேணும்னா நீங்க கைய விட்டு எடுத்துக்கோங்க என கைகட்டி நின்றாள்.
இருவரும் கோபத்தில் மான்வியை பார்த்தார்கள். அவள் எதுவும் சொல்லாமல் அவ்விடத்தை விட்டு சென்றாள்.
பணிப்பெண் ஆச்சரியத்துடன் “எப்டி மேடம் அவங்க பேசினத ரெக்கார்ட் பண்ணீங்க?”
“யார் பண்ணா?” என மான்வி அவளிடம் கேட்டாள்.
“மேடம் நீங்க தானே சொன்னீங்க? அப்போ அது பொய்யா?” என பணிப்பெண் கேட்டாள். மான்வி சிரித்த படி பொய் சொல்றதா இருந்தாலும் தைரியமா சொல்லணும். நம்ம கண்ணு நேருக்கு நேர் ஐ காண்டாக்ட் பண்ணனும். அப்போ தான் எதிரில் இருக்கும் ஆள் தடுமாறி யோசிப்பான். அப்படி அவன யோசிக்க வச்சிட்டா போதும். நம்ம தான் அங்கே மாஸ்! என்றாள் மான்வி.
மேடம் உங்களை கட்டிக்க போறவர் அந்த மீசைகாரர் ரொம்ப கொடுத்து வச்சவர் என்றாள் பணிப்பெண் ஆத்மார்த்தமாக.
யாரு அந்த கருவாவா?
மேடம் என இன்னும் அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்றாள் பணிப்பெண். யாருடா இவள்? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த வீர வசனம் பேசிட்டு இப்போ? அப்படியே அந்தர் பல்டி அடிக்கிறா என இருந்தது.
மான்வி கண்ணடித்த படி,”நான் சொல்லுவேன் கருவா” என நேராக சென்றாள்.
என்ன பண்ண இவலோ நேரம்? என கோபி கேட்க, என்னோட பிரென்ட்ட பார்த்தேன் டாடி. நீ என்ன சும்மா கேள்வி கேட்கிற? எனக்கு 10 புடவை வாங்கி தா! என நின்றாள்.
கோபி தன் மகளின் கையை பிடித்து கொண்டவர். வா உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்க எதை பத்தியும் கவலை இல்ல. டாடி உனக்கு எல்லாமே வாங்கி தருவேன். கூடவே மைதிலி உங்க அம்மா ரெண்டு பேருக்கும் எடு என்றார்.
மான்வி தன் தந்தையை நெகிழ்ச்சியுடன் பார்த்து டாடி நான் லவ் யூ பா! உன்னை மிஸ் பண்றேன் என கட்டிக் கொண்டாள். என்ன டா தங்கம் என அவர் தலையை வருடி கொடுக்க, இல்ல டாடி நீ எப்போவும் எல்லாரையும் ஒரே மாதிரி தான் பார்க்கிற. அம்மா… இல்லல்ல நான் தப்பு டாடி! இப்போ உன் கூட இருக்கணும் போல தோணுது இத்தனை நாளாக நான் உன்னை புரிஞ்சுக்காம இருந்துட்டென். என்றாள் புருவம் சுருக்கி கொண்டு.
கோபி அவளின் முகத்தை பார்த்து இப்போவாச்சும் என் கடைக்குட்டி மான் குட்டி புரிஞ்சுகிட்டது எனக்கு சந்தோசம். இது எப்போவும் மாறாது தங்கம். நீ கல்யாண பொண்ணு சந்தோசமா இருக்கணும் என கூறினார்.
“ஒகே டாடி என்னோட டாடிக்கி உன் மூத்த பொண்ணு மைதிலி மாதிரி நான் செலவு வைக்க மாட்டேன். மது வரேன்னு சொல்லிருக்கா நான் ஸ்கூல் கிளம்பனும் மோகனை கொண்டு வந்து விட சொல்லு” என்றாள் மான்வி.
நிச்சய புடவை தான் செலக்ட் பண்ணிருக்காங்க. முகூர்த்த புடவை எடுக்க இன்னும் நேரமாகும் போல அங்கே பாரு என்றார்.
சரி அப்போ நான் கிளம்பறேன் என அவள் கூற, இரு தங்கம் என அவர் நேராக கண்ணனிடம் சென்றார்.
டேய் கொஞ்ச நேரம் இரு டா என மகேஷ் மன்றாடி கொண்டிருந்தார்.
அக்கா! மாப்பிள்ளை என அழைத்த படி கோபி விவரம் கூற, மகேஷ் மகனிடம் சரி கண்ணா நீ மான்விய கொண்டு விட்டு போ என்றார்.
கண்ணன் தன் தாயை முறைத்து பார்க்க, போடா போடா பார்க்காத என அதட்டி அனுப்பினார்.
மான்வி உன்னை கண்ணன் கொண்டு போய் விடுவான் செல்லம். ஸ்கூல்க்கு போயிட்டு எனக்கு போன் பண்ணு தங்கம்.
“ஏன் உன்னோட அக்கா பையன் என்னை கடத்திட்டு போயிடுவான்னு பயமா டாடி!”
கண்ணனை நீ கடத்திட்டு போய்டுவியோன்னு பயம் பாவம் அவன் சின்ன பையன். உன்னை மாதிரி ரவுடி இல்லையே என் அக்கா பையன். என்றார் குறும்பாக..
டாடி என அதட்டினாள்.
சும்மா சொன்னேன் தங்கம் போயிட்டு வா என அனுப்பினார்.
கண்ணனின் முகம் இன்னும் கருத்து போயிருந்தது. கோபத்திலும் இயலாமையிலும்.
ஒரு பப்ஸ் வாங்கி கொடு பசிக்குது என்றாள்.
வாங்கிக்கோ என g – pay செய்து விட்டு சென்றான்.
ஆர அமர பப்ஸ்சை சாப்பிட்டு முடித்தவள். முகத்தில் திருப்தியுடன் மேலே பார்த்துக் கொண்டே வந்தாள்.
அங்கே அந்த இரண்டு வாடிக்கையாளர்களும் நின்று கொண்டிருந்தார்கள்.
அவள் எங்கே பார்க்கிறாள் என கண்ணனின் பார்வை சென்றது.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels