அத்தியாயம் – 14

எங்கே பார்க்கிறா? என மான்வியின் பார்வை சென்ற திசையில் படிந்தது. போலாம் என வண்டியில் ஏறி இருந்தாள். வண்டி மெதுவாக கிளம்பியது. ‘அப்போ அவளுக்கு நான் தகுதி இல்லன்னு அந்த லேடிஸ் சொன்னது இவளுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு! ஆமா எனக்கே தெரியும். இவள் பக்கத்தில் நிற்க எனக்கு தகுதி இல்ல தான். இதுக்கு உடனடியாக ஒரு முடியை கட்டனும்’ என கண்ணன் யோசனையில் இருக்க..  

“என்னைய இறக்கி விட்டுடலாம்ல. ரொம்ப வேகமா போற! உன்னோட வேகத்துக்கு என்னால ஈடு கொடுக்க முடியல” என கிண்டலடித்தாள் மான்வி. 

தன்னிலைக்கு வந்தவன் கொஞ்சம் வண்டியின் வேகத்தை உயர்த்தி இருந்தான். கருவாவுக்கு கவனம் எங்கே இருக்கோ தெரியல என முணுமுணுத்தாள். 

அரை மணி நேரத்தில் அவளை பிக் அப் செய்த இடத்தில் ட்ராப் செய்ய நிறுத்தினான் கண்ணன். ‘அடேங்கப்பா அவ்ளோ கணக்கு கருவா பயலே!’ என வண்டியில் இருந்து இறங்கினாள். 

“உன் கிட்ட கொஞ்சம் பேசணும். நில்லு” 

“எனக்கு ஸ்கூல்க்கு டைம் ஆச்சு ஈவ்னிங் போன் பண்ணு” என அவள் நகர, வண்டிய நகர்த்தி தடுத்தான். 

“ப்ச் என்ன டா?”

“பேசாம கல்யாணத்தை நிறுத்திடலாமா?”

ம்ம்..  நிறுத்தி.. நிறுத்திடலாமே! என்றாள் மான்வி. 

“ஆமா அது தான் எனக்கும் சரின்னு படுது. நீ கஷ்ட பட்டு என்னை கல்யாணம் பண்ணிட்டு இருக்க வேணாம். உனக்கு எந்த விதத்திலும் நான் பொருத்தம் இல்ல.” என்றான் கண்ணன். 

“தெரிஞ்சா சரி! அப்போ வீட்ல இதை பத்தி பேசிட்டு எனக்கு இன்பார்ம் பண்ணிடு!”என நடையிட்டாள் மான்வி. 

கண்ணன் அதே இடத்தில் நிற்க, மான்வி எதையோ யோசித்தவளாக  திரும்பி உன் தங்கச்சி மனசை மாத்திடுவ தானே! என கேட்டாள். 

“தெரியல”

எதுக்கு கேட்கிறேன்னா நீ திரும்பவும் என் கிட்ட இதை பத்தி பேச கூடாது. ஐ மின் திரும்ப திரும்ப குழப்பத்தில் நடக்க கூடாது என்றாள் மான்வி. 

“எனக்காக சகிச்சுகிட்டு நீ கஷ்ட பட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு தோணுது. அதான்.” என்றான் கண்ணன். 

மான்வி ஒரு பெரு மூச்சை விட்ட படி மணியை பார்த்தவள். “நீ யாருக்காக கல்யாணம் பண்ணிக்கிற? நான் யாருக்காக கல்யாணம் பண்ணிக்க போறேன்? நம்ம ரெண்டு பேரும் எதுக்கு இந்த முடிவை எடுத்தோம்? நீ உன் அம்மாவுக்காக உன்னோட தங்கைக்காக, அதுல எந்த குழப்பமும் உனக்கு இல்லல்ல. நான் கேட்ட படி நீ என்னை படிக்க வைக்கறேன்னு சொல்லிருக்க. உன்னோட எல்லாமே எனக்கு சொந்தம்..”

கண்ணன் அவளை கூர்ந்து பார்க்க, மான்வி உடனே “ஐ மின் உன்னை கட்டிக்கிட்டா உன்னோட எல்லா புரோபர்ட்டியும் எனக்கு சொந்தம். அண்ட் உனக்கு தான் என்னை பிடிக்காதே. நாளைக்கு உன்னோட மனசுக்கு பிடிச்சவ வந்தால் தாராளமா நீ உன்னோட வழியில் போலாம். புரோப்பெர் டைவர்ஸ் கூட வேணாம். உன் மனைவியா இருக்கிற வரைக்கும் தான் உன்னோட எல்லாத்துக்கும் நான் உரிமை கொண்டாடுவேன்.” 

“கல்யாணம் டைவர்ஸ்ல போய் முடியரதுல எனக்கு விருப்பம் இல்ல”

“நான் இருக்கும் போதே இன்னொரு பொண்ணு கூட கஸகசா ஜல்சா பண்ண போறியா?”

“ச்சீ! என்ன இப்படி பேசுற?”

“வேற எப்டி பேச சொல்ற?” என்றாள் மான்வி. 

“விவாகரத்து எல்லாம் செட் ஆகாது. அது பெரிய பிரச்னை ஆகும். அதை சொல்ல வந்தேன்.” என்றான் கண்ணன். 

“இப்போ என்ன சொல்ல வர?”

“நீ சொல்லு! உனக்கு…? என கண்ணன் ஆரம்பிக்க, “நான் எல்லாத்தையும் சொல்லிட்டு தான் இருக்கேன். நீ தான் எதையும் சொல்ல மாட்டிகிற” என்றாள் மான்வி. 

என்ன? 

யாரையோ கல்யாணம் பண்ணிக்க போறேன்! அந்த இடத்தில் நீ இருக்க. ஓகே எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. 

“உனக்கு வருத்தம் ஒன்னும் இல்லையே! இப்போ எடுக்க போற முடிவு தான் ஃபைனல்.”

ஆனால் நீ இந்த முடிவை பத்தி இனி பேசவே கூடாது மூடிக்கிட்டு இருக்கணும். திரும்ப திரும்ப உன் இஷ்ட மயிருக்கு பண்ண! அவ்ளோ தான். எல்லாம் என் அப்பாவுக்காக பொறுத்துக்க வேண்டியதா இருக்கு. 

“ஹே மரியாதை கொடு”

“நான் இப்படி தான் யாருக்காகவும் மாத்திக்க மாட்டேன். போடா!” என நடையிட்டாள். 

சரி வா ஸ்கூல்ல ட்ராப் பண்றேன் என அருகில் சென்று வண்டியை நிறுத்தினான். 1000 எடு என உரிமையுடன் அவனது பர்ஸை பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொண்டாள். 

அம்மாவின் படம் கூடவே அப்பாவின் படம்.. பாசக்காரன் டா கருவா! என உதடுகள் முணுமுணுத்தது. 

வண்டியில் ஏறிக்கொண்டாள். நேராக ஸ்கூலில் இறக்கி விட்டான். 

மது அவளுக்காக காத்திருக்க அவனது மகன் டாலிங் என அழைத்துக் கொண்டு நின்றான். 

ஹாய் டார்லிங்! என சொல்லிய படி வண்டியில் இருந்து இறங்கினாள் மான்வி. 

கண்ணனின் முகத்தில் இனம் புரியா நிம்மதி. இவன் தானா! அந்த டார்லிங்! அந்த வார்த்தைக்கு சொந்தக்காரன். 

“என்ன உனக்கு நேரம் ஆகலயா?”

இதோ போறேன் என திரும்பி ஹெல்மெட்டை போட்டுக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான். 

“ஆன்ட்டி”

டேய் ஒழுங்கா ஆன்ட்டிய வாபஸ் வாங்குற! எவ்ளோ தைரியம்.  உன் அம்மா மாதிரி நான் ஆண்ட்டி இல்ல ஐம் யங் தெரியுமா! உன் கூட டூ போடா என சண்டைக்கு சென்றாள் மான்வி. 

“டாலிங்” என பால் பற்களுடன் சிரித்தான் அந்த பொடியன். 

“ஹே போதும் டி வா அட்மிஷன் போட்டு உன்னோட டார்லிங்க நீயே வச்சுக்க”  என மது சொல்ல, மூவரும் உள்ளே சென்றார்கள். 

கிண்டர் கார்டன்ல பொடியனுக்கு அட்மிஷன் போட்டு விட்டு டார்லிங் வா! வந்து உட்காரு இவங்க எல்லாம் உன்னோட ஃப்ரெண்ட்ஸ், அது நிலா, ஆசா, நிதி, இது இனியா.. என்னோட ஃப்ரெண்ட்ஸ் அண்ட் அது ஜிஸ்னு, கிஷான், நிஷாந்த, திவ்யேஷ், ராம், அஸ்வின் இவங்க எல்லாரும் என்னோட டியர்ஸ் எல்லாருக்கும் ஹாய் சொல்லு என மான்வி கேட்க, பொடியன் மான்வியின் புடவையை பிடித்துக் கொண்டு பின்னால் ஒளிந்தான். 

அடி வாங்க போற என்ன ஹாபிட் இது என மது மிரட்ட, ஹே திட்டாத மது எல்லாருக்கும் பாய் சொல்லு டார்லிங் நம்ம போலாம் போய் உனக்கு என்ன வேணும் சொல்லு நான் வாங்கி தரேன் ஆனால் அதுக்கு முன்னாடி எல்லாருக்கும் பை சொல்லு என கேட்டாள். 

நிஜமா வாங்கி தருவியா? 

சத்தியமா வாங்கி தரேன் டார்லிங் புரோமிஷ் என்றாள் மான்வி. 

ஒகே பை பை என கை ஆட்டினான். 

பை என அனைத்து குழந்தைகளும் டாட்டா காட்டினார்கள். 

நேராக பிரின்சிபால் ரூமுக்கு சென்றவள் முழு நேரமும் லீவ் எடுத்துக் கொண்டு மது, மற்றும் அவனது கணவன் விக்ரமை வர சொல்லி குட்டி பொடியனுடன் நேரம் செலவிட சென்று விட்டாள். 

மொத்தத்தில் அந்த நாள் பரபரப்புடன் ஒரு வழியாக முடிந்தது. 

கண்ணா என்ன பண்ற? என நந்திதா மெசேஜை தட்டி விட்டாள். 

இப்ப தான் கெஸ்ட் ஹவுஸ் வந்தேன். மேடம் என்ன பண்றீங்க? என கேட்டான் கண்ணன். 

நான் கூட இப்போ தான் ரூம்க்கு வந்தேன். என்றாள் நந்திதா. 

“இப்போ உன்னோட மைன்ட் ஓகேவா!”

ம்ம் ஹேப்பி என்றான் கண்ணன். 

“அடேங்கப்பா! அப்படி என்ன ஹேப்பி? காலையில் கிண்டர் கார்டன் போயிட்டு வந்தேன். அங்கே கிட்ஸ்ச பார்த்ததும் ஹேப்பியா இருந்தது என்றான் கண்ணன். மான்வியின் நினைவில். 

“கிண்டர் கார்டனா? அங்கே எதுக்கு போன?” என நந்திதா கேட்க, ட்ராப் பண்ண போனேன். என்றான் கண்ணன். 

“யாரை?”

“சரி அதை விடு உனக்கு போட்டோஸ் அனுப்பினேனே பார்த்தியா?”

“அந்த ஸாரி போட்டோசா? ஹான் எல்லாமே சூப்பர் எந்த கடை?” என கேட்டாள். 

“முகூர்த்த சாரிக்கு எதோ ஃபேமஸ் கடையாம் மாப்பிள்ளை வீட்டு சைடு சொன்னாங்க.”

நந்திதா புடவையை பார்த்துக் கொண்டே அந்த ஸ்கை ப்ளூ செம்மையா இருக்கு.

உனக்கும் பிடிச்சிருக்கா என்று சொன்னவன் உடனே மான்வியும் அவனும் சேர்ந்து இருக்கும் படங்களை எடுத்து பார்த்தான். 

ஏன் உனக்கும் பிடிச்சிருக்கா? என நந்திதா கேட்க, ரொம்ப பிடிச்சிருக்கு என மான்வியின் படத்தை ஜூம் செய்தான் கண்ணன். 

பின் குறிப்பு : நந்திதாவுக்கு அனுப்பப்பட்டது அனைத்துமே மலர் கையில் வைத்திருப்பது போல, மான்வியும் கண்ணனும் இருப்பதை அவன் யாருக்கும் அனுப்ப வில்லை. 

“அந்த அரக்கு கலர் இன்னும் சூப்பரா இருக்கு.” 

அது முகூர்த்த புடவை என்றான் கண்ணன். 

இன்னும் சூப்பரா இருக்கு டா கண்ணா! என நந்திதாவின் எண்ணங்களில் இப்பொழுதே கண்ணன் பட்டு வேஷ்டி சட்டையிலும், அவள் அந்த முகூர்த்த புடவையிலும் இருப்பதை போல நினைத்து பார்த்தாள். 

“ஹே அம்மா கூப்பிடுறாங்க வைக்கவா டி!”

கண்ணா உன் கிட்ட முக்கியமான விசயம் சொல்லணும். 

“என்ன சொல்லு!”

அது நா.. நான் நேரில் வந்து சொல்றேன். என அவள் வைக்க போக, ம்ம் நானும் வெயிட் பண்றேன் மேடம் வாயிலிருந்து என்னைக்கு விசயம் வெளியே வரும்ன்னு பார்க்கிறேன் பார்க்கிறேன் என கண்ணன் கூற, அப்போ அவனும் என்னை விரும்புறானா? என நந்திதாவின் இதயம் வேகமாக துடித்தது. 

அவள் அடுத்து பேச வர, அதற்குள் கண்ணன் போனை வைத்து விட்டான். அய்யோ அவசரம் இவனுக்கு! என படுக்கையில் விழுந்தாள் நந்திதா இரவு முழுவதும் கண்ணன் தான் கனவில். 

டேய் உன் ஆளு கிட்ட தான்டா பேசிட்டு இருந்தேன் என கண்ணன் கூற, எப்போ ஊருக்கு வரா! என கேட்டான் சரவணன் IAS. 

அப்போ நீ லவ்வ சொல்லவே இல்லையா? இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் உன்னை பத்தி அவள் கிட்ட சொல்லிருப்பென் டா! ஏன் டா இன்னும் வெயிட் பண்ற? என கேட்டான் கண்ணன். 

சரவணன் புன்னகையுடன் அவளை பார்த்தாலே கை கால் உதருது மச்சி! கண்டிப்பா சொல்லுவேன் டா! அவள் டெல்லியில் இருந்து வரட்டும்.  அடுத்து எங்க கல்யாணம் தான் என்றான் சரவணன். 

முதல்ல லவ்வ சொல்லு! என கண்ணனும் சரவணனும் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தார்கள். 

வாட்ஸ் அப் சென்றான். Peahen என type செய்தான். அவளின் dp-யில் சிம்பு படம். தொட்டு உள்ளே சென்றான். ஆன்லைன் என காட்டியது. 

கண்ணன்…? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.