அத்தியாயம் – 15

வெள்ளச்சி என அவளை சிறுவயதில் கூப்பிட்ட பெயரை டைப் செய்தான் கண்ணன். 

இன்று புடவை கடையில் தன்னை பழித்து பேசிய இரு பெண்களையையும் பார்த்து சிரித்துக் கொண்டே வந்து என் வண்டியில் ஏறினாளே! என மீண்டும் மீண்டும் தோன்றியது. ‘இது ஒத்து வருமா கண்ணா! அவளுக்கு உன்னை பிடிக்கல டா! சன்யாசியா கூட வாழலாம் ஆனால் தன்னை வெறுக்கிற, தன்னோட குணத்தை, முக்கியமா இந்த கலரை வெறுக்கிற ஒருத்திய ஏன் டா கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற? பாதாள குழி குள்ள விழ பார்க்கிறயா டா? ஆமா அவள் அழகான ஒரு சுழல். அவளை பார்த்தால் கண்ணு ஸ்டன் ஆகிடுது. அழகு மட்டுமா? என்னை அடி மட்டம் வரைக்கும் வெறுக்கிற ஒருத்தி மேலே ஏன் நான் இப்படி பைத்தியமா இருக்கேன்.’ என நெஞ்சை நீவினான். 

தட்டச்சு செய்த பெயரை உடனே டெலிட் செய்து விட்டான் அடுத்த நொடி. உள்ளுக்குள் ஏமாற்றம் கூடவே அவமானமாக இருந்தது. மான்விக்கு என்னை எப்போவுமே பிடிக்காது. என அவளின் படத்தை பார்த்து தொடு திரைக்கு முத்தமிட்டான். வெட மூக்கி வெள்ளைச்சி! என வருடி பார்த்து கொஞ்சினான். முதன் முதலில் மகேஸ்வரி உன்னை கட்டிக்க நான் மான்வியை பார்த்திருக்கிறேன் என சொல்லும் போதே உள்ளுக்குள் சொல்ல முடியா பேரானந்தம். பிடிக்காத மாதிரியே பாவ்ளா காட்டினான். அழகா இருப்பாள்ன்னு கண்ணனுக்கு தெரியும். ஆனால் பேரழகியா இருப்பாள்ன்னு நினைத்து பார்க்க வில்லை. அவளே தன்னை வேண்டாம் என்று சொல்வதை விட தான் முந்திக் கொள்ள வேண்டும் என நினைத்தான்.  மான்வியை முதன் முதலில் பார்த்ததும் இறுக்கி கட்டிக்கொண்டு திணற திணற அவளுக்கு மூச்சு முட்டும் வரை முத்தமிட வேண்டும் போல தோன்றியது. சிறு வயதில் இருந்தே மான்விக்கு கண்ணனை பிடிக்காது. மைதிலி, மோகன், கண்ணன் மூவரும் தான் விளையாடுவார்கள். 

இன்னும் கண்ணனுக்கு நினைவிருக்கிறது. மான்வி பண்டிகைக்கு வீட்டுக்கு வரும் போது பொன்மலர் சிறு குழந்தை. எப்பொழுதும் மான்வி மகேஷ் பின்னால் சுற்றுவாள். அதற்கு காரணம் குழந்தைகள் என்றால் அத்தனை பிரியம். இப்பொழுது வரை மாற வில்லை. பொன்மலர்ரை குளிக்க வைத்தலில் இருந்து அவள் தூங்கும் வரை அருகில் அமர்ந்து பார்த்து கொஞ்சி கொண்டே இருப்பாள். 

மகேஷின் தாய் தனம் பலகாரம் செய்து வைத்திருந்தால் விளையாடும் கேப்பில் மோகன், மைதிலி, கண்ணன் மூவரும் வந்து எடுத்துக் கொண்டு தண்ணீரை குடித்து விட்டு ஓடி விடுவார்கள். முகிலுக்கு மான்வியை சீண்டுவது தான் வேலை. அவளை பயமுறுத்துவது கிள்ளி விட்டு ஓடி விடுவது என அவளை அழ வைத்து ஆனந்தம் கொள்வான். கண்ணன் அவ்விடம் வந்தால் முகிலன் பின்னால் போய் ஒளிந்து கொள்வாள் மான்வி. கண்ணனை பிடிக்காது. காரணம் தெரியாது. 

“ஹே வெள்ளைச்சி இங்கே வா! உனக்கு சவ்வு மிட்டாய் வாட்ச் மிட்டாய் வாங்கி தரேன் கடைக்கு போலாம் வாடி!” என அழைப்பான் கண்ணன். 

இல்ல நான் முகில் கூட போவேன். என அடிப்பவன் பின்னால் தான் ஒளிந்து கொள்வாள் மான்வி. 

டேய் கண்ணா இவள் பேர் வெள்ளச்சி இல்ல சுண்ணாம்பு பாரு செவுறு கலர்ல இருக்கா இனி சுண்ணாம்பு சொல்லு அவளோட காலை பாரு எப்டி சுண்ணாம்பு ஒட்டிருக்கு நம்ம இல்லாத நேரம் செவுத்த நக்கிட்டி இருக்கா டா! ஹே காட்டுடி என மிரட்டுவான். மான்வி முகிலை காதை பிடித்து திருகி விளையாடுவாள். கண்ணன் அவளை இமை வெட்டாமல் ரசிப்பான். 

கண்ணன் மற்றும் முகிலன் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் நேரம் தான் தந்தை வேலை செய்யும் போதே இறந்து விட்டார் என செய்தி வர மொத்த குடும்பமும் நிலை குலைந்து போனது. “உன் புருசன் அக்கா மேல் இருக்கிற பாசத்துல மொத்த பணத்தையும் அங்கே போய் கொட்ட போறாரு என்னன்னு பார்த்து கவனமா இரு” என பற்ற வைத்து விட்டு சென்றார் மல்லிகாவின் அண்ணன். 

இறுதி காரியத்தில் மல்லிகாவின் நடவடிக்கை சுத்தமாக சரி இல்லை. குடும்பம் மொத்தமும் நிலை குலைந்து தெம்பு தேர ஆறு மாதம் ஆனது. அதன் பின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் இரண்டு குடும்பமும் பிரிந்து போனது. வாய் வார்த்தை கை கலப்பாக மாற, மல்லிகாவின் அண்ணன் மாதேஸ்வரன் கண்ணனை அடிக்க பாய முகில், கண்ணன் இருவரும் தள்ளி விட்டார்கள்.  மல்லிகா ஒப்பாரி வைத்து பிரச்சனையை ஊதி பெரிதாக்கி விட, அங்கு என்ன பிரச்னை என அறியாத சின்ன பெண் மான்வி மல்லிகாவின் மடியில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தாள். 

அவர்களுடன் சுரேஷ் ஒட்டி கொண்டே திரிந்தான். மைதிலி நேராக அவர்களிடம் சென்று இனி நான் வரவே மாட்டேன் டா! நீ ஒரு அசிங்கம் பிடிச்சவன் நீங்க எல்லாரும் என முகில் பொன்மலர் என அனைவரையும் மான்வி சொல்ல சிறுவர்கள் அனைவருக்குள் சண்டை வர முகில் கோபம் வந்து தன் அண்ணனை பேசியதற்காக மைதிலியின் முடியை ஒரு கைப்பிடி அளவு கத்தரிக்கோல் வைத்து கட் செய்தவன். மான்வியின் கையை முறுக்கி விட்டான். 

டேய் என்ன டா பண்ற? சின்ன புள்ளைங்க டா என கண்ணன் தடுக்க, நீ போடா உன்னை எப்டி அந்த ரெண்டு சிறுக்கிங்க அப்படி சொல்லலாம் என பிரச்னை பெரிதாக, அதே நாளில் மொத்தமாக இரு குடும்பமும் பிரிந்தது. 

கண்ணனுக்கு உள்ளுக்குள் ஒரு உத்வேகம் தன்னை நம்பாமல் சென்று விட்டாளே! அதை விட மாதேஸ்வரன் மல்லிகா இருவரும் தம்பி வீட்டுக்கு வந்து இருந்து அவனை வச்சு  ஒண்டி பிழைக்கும் எண்ணம் என நிறைய புண்படும் சொற்களை மகேஸ்வரியின் காது பட பேச அதில் மொத்தமாக நிலை குலைந்து போனார். அந்த நொடி அவனுக்குள் உதித்த அந்த தீ இதோ இன்று இவ்வளவு பெரிய பதவியில் நிருத்தியிருக்கிறது. எட்டாம் வகுப்பிலேயே ஹாஸ்டல் சேர்ந்து கொண்டான். இறந்து போன கணவர்  பழனி சாமிக்கு ஒரு ஏக்கர் இருக்க அதை குத்தகைக்கு விட்டார் மகேஷ்வரி. 

மான்வியின் எண்ணம் தோன்றாமல் இல்லை. பதவி பகட்டுக்காக நிறைய பேர் கண்ணனை கட்டிக் கொள்ள முன் வந்தார்கள் அனைவரையும் வேண்டாம் sba என ஒத்துக்கினான். இப்பொழுது கூட மான்வியின் சிந்தனைகள் அவனுக்கு பிடிக்க தான் செய்கிறது. காரணம்? அவளின் பிடியில் நிற்கிறாள். அவளது நிலையில் கொஞ்சம் கூட மாற வில்லை. அது எந்த ஆண் மகனையும் திரும்பி பார்க்க வைக்கும் அப்படி இருக்கும் போது நம்ம ips ஆபிசர் எம்மாத்திரம். 

‘என்ன செய்வது என தெரியவில்லை. எப்படியாவது அவளை இம்ப்ரெஸ் பண்ணனும் டா!’ என உள் மனம் கூற, உன்னை பிடிக்காமலயே போயிடுச்சுன்னா? அவளோட மனசுல வேற ஒருத்தன் என தயங்கினான். 

வாய்ப்பே இல்ல அப்படி இருந்தால் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ருந்திருக்க மாட்டாள். அப்போ அவளோட மனசுல யாரும் இல்ல.. ட்ரை பண்ணி பார்க்கலாம். முடியாத பட்சத்தில் அவளுக்கான வாழ்க்கைய அமைச்சுக்க நான் வழி செய்வேன். வழின்னா? என்னை விட்டு போறது தான் என விரக்தியாக சிரித்து கொண்டவன். பார்க்கலாம் முயற்சி பண்ணனும். என்னை பிடிக்க வைக்க, என நினைத்த படி அவளின் படத்தை வருடி முத்தமிட்டு கொண்டே தூங்கினான் கண்ணன். 

என்ன டல்லா மெஸேஜ் பண்ற? என விஷ்வா தட்டி விட்டான். 

எனக்கு இந்த காலேஜ் சுத்தமா பிடிக்கல! என தேன் தமிழ் சோகமான இமோஜிகளை அனுப்பினாள். 

“அப்படியா?”

“உனக்கென்ன உன்னோட டிபார்ட்மென்ட்ல ஜாலியா இருக்க. நான் பேசாம நம்ம காலேஜிலயே இருந்திருப்பேன். இங்கே இருக்க எதுவுமே செட் ஆகல” என தமிழ் அனுப்ப, “அங்கே இருந்தால் உன்னை எப்டி நான் பார்ப்பேன். உனக்கு என்னை பார்க்காமல் இருக்க முடியுமா? அப்படி இருந்திருந்தால் அங்கேயே ஜாயின் பண்ணி இருக்கலாமே எதுக்காக வந்த?” என விஸ்வா அனுப்பி விட்டான். 

விஸ்வா!.. 

பதில் இல்லை.

விஷ்வா!.. என மீண்டும் அனுப்பினாள் தேன் தமிழ். 

அவன் போனை ஆஃப் செய்து விட்டு தூங்கியே விட்டான். 

சா..  சாரி என டைப் செய்த வார்த்தைகள் அவளை கேலி செய்தது. இந்த சாரி யாருக்காவது இது வரை தேன் தமிழ் சொல்லி இருக்கிறாளா? என வரலாற்றை புரட்டினால் இல்லை என்பது தான் பதில். ஆனால் அவனை பார்த்த பின், எவன்? விஷ்வா தேன் தமிழை இளங்கலை  முதலாம் ஆண்டில் விரட்டி இரண்டாம் ஆண்டின் இறுதியில் வென்று விட்டான் அவளை..

அதன் பின் தேன் தமிழ் மொத்தமும் இவனது கண்ட்ரோல் தான். இளங்கலை படித்த காலேஜில் பெஸ்ட் ஸ்டூடன்ட் விஸ்வா தான். மொத்த மாணவிகள் கூட்டமும் அவன் பின்னால். விஷ்வா அவளின் பின்னால் வந்தவன் இறுதியில் இரண்டு ஆண்டு போராட்டத்துக்கு பின் தேன் தமிழ் அவன் பின்னால். இருவரும் கல்லூரியில் எதையும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஒரு சின்ன கேப் கிடைத்தாலும் அவளுடன் நேரம் செலவிட்டு தேன் தமிழின் மொத்த பலவீனமாகி போனான். 

அவனில்லாமல் அவள் இல்லை. இது வீட்டில் அவளின் சித்திக்கு பட்டும் படாமல் தெரியும். சித்தி காதல் கல்யாணம் அதனால் விஷ்வாவை கரம் பிடிக்க எந்த பிரச்னையும் வராது என நினைத்தாள். அவள் நினைத்தது நடக்குமா? பார்ப்போம். 

அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. தேன் தமிழ் நேரத்திலேயே வந்து விட்டாள் விஷ்வாவை சமாதானம் செய்ய வேண்டுமே!. 

“டேய் வரா டா உன் ஆளு” என இயற்பியல் முதுகலை மாணவர்கள் அனைவரும் தன் நண்பனின் காதில் கூற, அதான் வாரான்னு தெரியுதுல்ல போங்க டா! என சொன்னவன். நிறுத்தப்பட்ட பேருந்துகளின் இடையில் நுழைந்தான். அங்கிருக்கும் அனைவரையும் சுற்றி பார்த்துக் கொண்டே அவன் சென்ற பேருந்துகளின் இடை வெளியில் சென்றாள். 

விஷ்வா அம் சாரி! என தமிழ் தலை குனிந்து கொண்டே கூற, அவளின் கையை பிடித்து அருகில் இழுத்தான். அவள் பயத்துடன் சுற்றிலும் பார்க்க, ப்ச் தமிழ்.. என அவன் இழுக்க, யாராவது வந்துட்டா? 

ம்ம் கன்னத்தில் கொடுக்கிற முத்தத்துக்கு இத்தனை பில்ட் அப்பு? என கன்னத்தை காட்டினான். கொட்ரி.. 

இந்த முத்தத்துக்காக தான் சண்டை போட்டியா நீ என அவள் சிரித்துக் கொண்டே பார்க்க, நானே கொடுக்கிறேன் என அவன் முத்துமிட திரும்ப உதடுகள் இரண்டும் பட்டும் படாமல் ஒட்டி பிரிய..  விஸ்வா அவளை இழுத்து மீண்டும் முத்தமிட முயற்சி செய்ய, அவனை வெடுக்கென தள்ளி விட்டு ஆசை தான் போடா! என சிரித்த படி பூரிப்புடன் ஓடினாள். 

விஷ்வா தலையை கோதியவாறு பார்த்தான். முதல் இதழ் முத்த குறுகுறுப்பு குறையாமல் கிளாசுக்கு சென்றாள் தேன் தமிழ். 

அங்கே முகில்… கார் முகிலன். 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.