அத்தியாயம்-17
டேய் கருவா லைன்ல இருக்கியா? என மான்வி கேட்க, “ப்ச் சொல்லு!”
“அத்தைக்கு தேவைன்னா அவங்க எனக்கு போன் பண்ணி கேட்கட்டும். அதுக்கு நடுவில் நீ எதுக்கு? அவங்க போன்ல?” என்றாள் மான்வி.
கண்ணன் கோபத்துடன் போனை கட் செய்தான்..
கொஞ்ச நேரம் கழித்து அழைப்பு வந்தது. கருவா என்று எழுத்துக்கள் மின்ன, புன்னகையுடன் போனை காதில் வைத்தவள். “சொல்லுங்க கருவா!”
“ஹே வந்தேன்னா என்ன நடக்கும்னு தெரியாது டி!”
அப்போ வாடா! வந்து பார்றா வந்து பார்ரா கருவா! என வேண்டும் என்றே சீண்டினாள் மான்வி.
மீண்டும் போனை கட் செய்தான். உதட்டுக்குள் சிரித்து கொண்டவள் அனைத்து குழந்தைகளுக்கும் பாடம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தாள். அடுத்து விளையாட்டுக்கான நேரம் மான்வி குழந்தைகளை அழைத்து சென்று விளையாட விட்டாள். பள்ளி நான்கு மணிக்கு முடிய, பேருந்தில் அனைவரையும் சரியாக ஏற்றி அனுப்பி வைத்து விட்டு திரும்பினாள்.
மான்வி மிஸ் இன்னிக்கு பிரின்சிபால் மீட்டிங் இருக்கு என சொல்லிக் கொண்டே அங்கிருக்கும் ஆசிரியை ஆசிரியர்கள் நடக்க, பள்ளியின் பியூன் வந்தார்.
“என்ன மாணிக்கம் அங்கில் என்னாச்சு அரக்க பரக்க ஓடி வரீங்க?”
“பிரின்சிபால் உன்னை கிளம்ப சொன்னாரு பாப்பா!” என்றார் மூச்சு வாங்கி கொண்டே..
“மீட்டிங் இருக்குன்னு டெய்சி மிஸ் சொன்னாங்களே?” என மான்வி கேட்க, “பாப்பா உன்னை பார்க்க போலீஸ் ஜீப்ல வந்திருக்கார்.” இவர் தான் பாப்பா.. என மாணிக்கம் கூற, அங்கு வந்த முத்து மான்வியை பார்த்து “மேடம் சார் உங்களை கூட்டிட்டு வர சொன்னார்.”
ஹே என்ன மான்வி? வாட்ஸ் கோயிங் ஆன்? என பதட்டத்துடன் டெய்சி கேட்க, நதிங் மிஸ் என்றவள் அவனிடம் நீங்க போங்க நான் வரேன் என அனுப்பி வைத்தாள்.
சார் வரேன்னு சொன்னாங்க என சொல்லி விட்டு முத்து அவனது இருக்கையில் அமர்ந்து கொள்ள, டெய்சி கலவரத்துடன் பார்த்தாள்.
என் மூஞ்சியில் என்ன இருக்கு? மீடிங்கை கவனி என்றாள் மான்வி.
சிறிது நேரத்தில் பிரின்சிபால்க்கு போன் வந்தது. அவர் உடனே மான்வியை பார்க்க, கருவா வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டான் என வாய்க்குள் முனுமுனுத்தவள் தலையை சரி செய்த படி அமர்ந்தாள்.
மீட்டிங் வேகமாக முடிக்க பட்டது. ஓகே காய்ஸ் மீதிய நாளைக்கு பார்க்கலாம் என்றவர் அனைவரையும் கிளம்ப சொன்னார்.
ரொம்ப சீக்கிரமா முடிஞ்சு போச்சு மீட்டிங் என அனைவரும் பேசிக் கொண்டே வெளியே வந்தார்கள். மான்வி வெளியே வந்து எதிர்பார்ப்புடன் பார்த்தாள்.
கண்ணன் இல்லை. ஜீப்பும் இல்லை. “கருவா பயலே” என முறைப்புடன் அவள் ஸ்கூட்டியை எடுக்க போக அழைப்பு வந்தது.
வேண்டும் என்றே காத்திருந்தாள். ஹே எடுத்து பேசு என அர்ச்சனா கூற, உங்க வேலையை பாருங்க டீச்சர் என அவளின் காதுக்கு கேட்கும் பொருட்டு கூறினாள்.
அடுத்த அழைப்பு ஏற்று காதில் வைத்தாள் மான்வி.
“பக்கத்தில் இருக்கிறவங்க தான் எடுத்து பேசுன்னு சொல்றாங்கல்ல! எடுத்து பேச உனக்கு என்ன டி!” என்றான் கண்ணன்.
“ஓ பக்கத்துல இருந்து கிட்டு உனக்கு வரதுக்கு என்ன கேடு கருவா?”
“வாய் கொழுப்பு டி! உன்னை பிக் அப் பண்ண வந்தேன் பாரு என்னை சொல்லணும்” என வண்டியை எடுக்க சொன்னான்.
மான்வி ஊஞ்சலில் ஆடி கொண்டிருந்தாள்.
இவள்! கிண்டர் கார்டன் குழந்தையை விட மோசம் என நினைத்தவன். மீண்டும் அழைக்க வரேன் வெயிட் பண்ணு என மூன்று ஆட்டாங்கள் ஆடி விட்டு எழுந்து சென்றாள்.
கேட்டுக்கு வெளியே அவளுக்காக காத்திருந்தான் கண்ணன்.
“போலாமா?” என கண்ணன் செல்ல, போலாமே என ஸ்கூட்டி உரும்பும் சத்தம் கேட்டது.
மான்வி தான் அவளது ஸ்கூட்டியில் அமர்ந்திருந்தாள்.
“என்ன பண்ற? எதுக்கு ஸ்கூட்டி?”
மான்வி முடியை வருடி விட்ட படி என்னோட ஸ்கூட்டி. நாளைக்கு நான் எப்டி ஸ்கூலுக்கு வரது?
நானே ட்ராப் பண்றேன் என்றான் கண்ணன்.
அப்படியா பெட்ரோல் காசு மிச்சம். சரி எங்கே உன்னோட மொப்பட்டு. சாரி புல்லட்டு?
“ஹே ஜீப்ல வந்திருக்கேன் டி! ஓவரா பண்ற?”
கருவா சார் நாலு நாளைக்கு முன்னாடி ஜீப்க்கு ஒரு explanation கொடுத்தீங்க? அதை பத்தி திரும்பவும் ஓகே எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. என மான்வி பேச ஆரம்பிக்க.. வேணாம் என தடுத்தான் கண்ணன்.
மான்வியின் உதட்டில் புன்னகை பரவ உதட்டை கடித்துக் கொண்டு சிரிப்பை அடக்கினாள்.
“முத்து நீங்க போங்க”
“சார் நீங்க எப்டி?” என அக்கறையாக முத்து கேட்க, அவள் வரமாட்டாள் போங்க!
“ஹே கருவா!”
ப்ச் மேடம் வர மாட்டாங்க. நீங்க ஸ்டேசன் போங்க நான் வரேன். என அனுப்பி வைத்தான்.
மான்வி வண்டியை ஸ்டார்ட் செய்து முறுக்கி கொண்டே நகர, வண்டி அதற்கு மேல் நகராமல் சக்கரம் அதே இடத்தில் சுழல, “டேய் வண்டிய விடு!”
“என்ன அப்படியே நீ பாட்டுக்கு போற? வண்டிய விட்டு இறங்கு நான் ஓட்டுறேன்.”
“இல்ல மாட்டேன்!”
மான்வி டென்ஷன் பண்ணாத! என அவன் கொஞ்சம் அதட்டி கேட்க, முடியாது டா என அவளும் விடா பிடியாக பதில் கூறினாள்.
கண்ணன் வேறு வழி இல்லாமல் பின் சீட்டில் அமர்ந்தான்.
எந்த கடை? என கேட்டுக் கொண்டே ஓட்டினாள். சாலைகள் மேடும் பள்ளமுமாக இருக்க, வண்டி குலுங்க குலுங்க கண்ணன் அவள் மீது வந்து மோதினான்.
ஹே அந்த பக்கம் இல்ல டி! இந்த பக்கம்.
தெரியுது நீ வண்டிய விட்டு இறங்கு! என மான்வி கத்தினாள் மூக்கு புடைக்க, என்ன டி?
நீ ஓட்டு! என இறங்கி கொண்டாள்.
இதை தான் முதல்லயே சொன்னேன். நீ தான் கேட்கல என பின்னால் மான்வி அமர்ந்து கொள்ள முன்னால் கண்ணன்.
சடன் ப்ரேக், குண்டு குழி என சாலை அனைத்து வகையான டாஸ்க்கும் வைத்து இருவரையும் சோதித்தது. ஹே மெதுவா போடா! ப்ச் வேகமாக போடா! அய்யோ சட்டன் பிரேக் என அவள் அவன் தோள் பட்டையை அழுத்தி பிடித்தாள்.
கண்ணனுக்கு ஒவ்வொரு தீண்டலும் சொர்க்கமாக இருந்தது. இப்பொழுது இன்டன்சனாக அவளை இடிக்க வேண்டும் மோதி கொள்ள வேண்டும் என்றே ஓட்டினான்.
தோள்களை இறுக பற்றி கொண்டாள். “ஒகே வா இல்ல மெதுவா போகட்டுமா?” என கண்ணன் வேண்டும் என்றே கேட்க, எப்டி வேணாலும் போ எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.
“பொய் சொல்லாத!”
“நான் எதுக்கு பொய் சொல்லணும்?”
“அப்படியா! இருக்கட்டும் அதான் பிடிப்பை இறுக்கி பிடிச்சிருக்கியே அதிலேயே தெரியுது”
“டேய் கருவா வண்டிய நிறுத்து! நிறுத்து டா!”
“என்னாச்சு?”
நானே ஓட்டுறேன் என மீண்டும் அமர்ந்தாள். கண்ணன் சிரிப்பை மறைத்துக் கொண்டு அவளை பார்க்க, ஹே கண்ணை நோண்டி காக்காய்க்கு போட்றுவேன் என்றவள் ஓட்ட ஆரம்பித்தாள்.
மான்வி இடையை சரி செய்து கொண்டே ஹேண்டில் பாரை பிடித்தாள்.
அது மீண்டும் இறங்கி கொள்ள, கண்ணன் அவளின் மடிப்பை சரி செய்து விட ஹக் என துள்ளினாள்.
அடுத்த நொடி ஸ்கூட்டி கீழே விழுந்தது கிடக்க ஸ்காட்டியுடன் மான்வியும் விழுந்திருந்தாள்.
கண்ணன் நின்று கொண்டிருந்தான்.
டேய் என்ன டா பார்த்திட்டு நிக்கிற வந்து வண்டிய தூக்கு! என்னை கொல்ல தான் கூட்டிட்டு வந்தியா? என மான்வி இஷ்டத்துக்கு கத்த, இதோ என வண்டியை தூக்கி ஸ்டான்ட் போட்டவன் உனக்கு எதுவும் ஆகலயே என அவளின் முழங்கையை பார்த்து ஊதி விட்டான்.
“எதுக்கு டா என் இடுப்பை புடிச்ச? எதுக்கு என் இடுப்பை புடிச்ச? உன்னை பிடிக்க சொன்னேனா?”
“ஹே லூசு நீ பத்து முறை மடிப்பை சரி பண்ண தொட்ட! அங்கே வண்டி ஓட்டுறதுல கவனம் மிஸ் ஆகிட்டா என்ன பண்றதுன்னு ஹெல்ப் பண்ணேன்.” என்றான் கண்ணன்.
“எது ஹெல்ப்? உன்னை ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டெனா? மூடிட்டு உட்கார தெரியாதா? நீ பிளான் பண்ணி என்னை டச் பண்ண தான வந்த? இதே நினைபோட தான சுத்திட்டு இருக்க? ஸ்கூட்டி கேப் கிடைச்சதும் உன்னோட சீப்பான வேலைய பார்த்திட்டல்ல! இந்த அட்வான்டேஜ் என பேச வந்தவள் கோபத்தை கட்டு படுத்திக் கொண்டு நின்றாள்.
கண்ணனின் முகம் சடுதியில் மாறி போனது. நம்ம அவள் கிட்ட ஓவரா அடவான்டேஜ் எடுத்திக்கிறோம் என உள்ளம் மீண்டும் காயம் கண்டு துடித்தது. ஆட்டோ என அழைத்தான்.
“நீ ஆட்டோவில் போ! வண்டிய நான் ஓட்டிட்டு வரேன்.” என கண்ணன் பின்னால் செல்ல ஆட்டோவில் அவள் முன்னால் சென்றாள்.
நகை கடையின் முன் இறக்கி விட்டான் ஆட்டோக்காரன். அவனுக்கான பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தான் கண்ணன்.
மான்வி கைகளை தேய்த்த படி நடந்து செல்ல, “வேற எங்கேயும் அடி பட்டிருக்கா?” என கண்ணனின் குரல் பின்னால் கேட்டது.
“இல்ல ஆனால் பசிக்குது”
“என்ன சாப்பிடுற?”
இது தீனி பசி! என்றாள் மான்வி.
கண்ணன் அவளின் கையில் 500 தாள்கள் நான்கை வைத்து உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ! உன்னோட விசயத்தில் இனி நான் இன்டர்பர் ஆக மாட்டேன் என சொல்லி விட்டு முன்னால் நடந்தான்.
அவன் தன்னை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை என இப்பொழுது தான் கண்டு பிடித்தாள்.
அவன் கையில் திணித்த காசை அழுத்தி பிடித்தவள். கருவா! என உதடுகள் முனுமுனுத்தது அவனது முதுகை பார்த்து.
எங்கே டா மான்வி? என மகேஸ்வரி கேட்க, ஸ்நாக்ஸ் சாப்பிட போயிருக்கா! நீங்க பாருங்க என கூறினான் கண்ணன்.
கோபி தன் அக்காவை பார்த்து விட்டு வாசலை பார்த்தார் பெரு மூச்சுடன்.
மகேஸ்வரி கண்ணனை முறைத்த படி அருகில் வந்தவர். என்ன டா நினைச்சிட்டு இருக்க? அவளை சாப்பிட வச்சு கூட்டிட்டு வர தெரியாதா? கட்டிக்க போறவ தான! மாங்கா மடையா நான் தான் எல்லாத்தையும் சொல்லனுமா? என கண்ட படி திட்ட ஆரம்பித்தாள்.
மா என்னை டென்ஷன் பண்ணாத! என கோபத்தில் கர்ஜித்தான் மெதுவாக.
கோபி அவர்களின் அருகில் வந்தவர். அக்கா நான் போய் மான்வியை கூட்டி வரேன் என நகர, தம்பி நீ எதுக்கு போற? கண்ணன் போவான். டேய் போய் அவளை கூட்டிட்டு வா! என கண்களால் மிரட்டி விட்டு நகைகளை பார்க்க ஆரம்பித்தார்.
சொலே பட்டெல ஒரு செட் என சொல்லிக் கொண்டே அமர்ந்தாள் மான்வி.
மான்வியின் கண்ணம் போல இரண்டு பூரி உப்பி கொண்டு வந்தது. அதை நன்றாக சுட சுட வாயில் போட்டு நாக்கை வெளியில் நீட்டி ஊதிய படி ஒரு பூரியை காலி செய்தாள்.
அடுத்தது சூடாக வெஜ் கட்லட், அதை முடித்து ஒரு காபி, அதை குடித்து கொண்டே கண்ணில் பார்க்கும் பதார்த்தம் அத்தனையும் வாயில் நிரப்பியவள் ஒரு ஏப்பம் விட்டு திரும்ப கண்ணன் நின்று கொண்டிருந்தான்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels