அத்தியாயம் -18

எவ்ளோ பில் ஆச்சு என பார்த்தவள் திரும்ப அங்கே கண்ணன் நின்றிருந்தான். 

அவனருகில் வந்தவள். இந்த பில் பே பண்ணிட்டு வா! நான் ஒரு ஜுஸ் வாங்குகிறேன் என அனுப்பி வைத்தாள் மான்வி. 

590 பணம் செலுத்தி விட்டு வந்தான். “ஹே கருவா!.. தப.. கண்ணா! கொஞ்சம் பக்கத்தில் வா. என்னால நடக்க முடியல..” என மான்வி அழைக்க, தவழ்ந்து வாடி! என முன்னால் நடந்தான். 

“அப்படியா சரி நான் அத்தைக்கு கால் பண்றேன்.”

ஹே உன்னை என பற்களை கடித்துக் கொண்டு அருகில் வந்தவன். “என்ன டி சொன்ன? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி! ஓவர் அட்வான்டேஜ்ன்னு நீ தான சொன்ன?”

“ஆமா சொன்னேன். நீ என் கிட்ட சொல்லி இருக்கலாம். அதை விட்டு வண்டி ஓட்டிட்டு இருக்கும் போது தொடுற? எந்த பொண்ணு கூட வண்டியில் போனாலும் இப்படி அவளோட ஹிப் தெரிஞ்சா உடனே தொட்டு சரி செஞ்சிடுவயா?” என்றாள் மான்வி. 

கண்ணன் என்ன பதில் சொல்வது என தெரியாமல் நின்று கொண்டிருக்க, “நானும் கோபமா பேசியிருக்க கூடாது. நான் கீழே விழுந்து கிடக்கிறேன். நீ என்னை வேடிக்கை பார்த்திட்டு நிக்கிற? எனக்கு எப்படி வலிச்சது தெரியுமா? அந்த கோபத்தில் தான் அப்படி பேசிட்டேன். ஆனால் நான் பேசினதெல்லாம் தப்பில்லை.”

என்ன சொல்றா? இப்போ ஆமாங்கறாளா? கோபம் இல்லங்கறாளா? இவளை புரிஞ்சுக்கறதுக்கு பதில் நான் இன்னொரு தடவை கூட upsc பாஸ் பண்ணிடுவேன் என நினைத்தான் கண்ணன். 

“ஹே வா போலாம்! நேரமாச்சு” என சொல்லி விட்டு அவள் மெல்ல நடக்க, கண்ணன் அவளின் பின்னால் சென்றான். இவ்வளவு நேரமும் பார்த்து கொண்டே இருந்தாள் பொன்மலர் அவளருகில் மோகன் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அங்கேயே கடலை போட்டு கொண்டிருந்தான். 

ஒரு பக்கம் மகேஸ்வரி கல் வைத்த தோடு பார்த்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கோபி கடையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.  

ம்ம் பாக்கலாமா? என ஒரு சேரை இழுத்து போட்டு அமர்ந்தாள் மான்வி. 

கண்ணன் அவளின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். “Peacock இருக்கிற மாதிரி மோப்பு காட்டுங்க.”

இதோ மேம் என எடுத்து ஒரு ட்ரேயில் காட்டினாள் பணிப்பெண். இதோ இது எவ்ளோ? என கேட்டாள் 

எவ்ளோ பட்ஜெட் என மான்வி கண்ணனின் பக்கம் திரும்பினாள். 

7 or 11 பவுன் நீயே எது ஓகேவொ அதை எடுத்துக்க. 

அப்படியா எனக்கு லைட்டா வேணும் அதனால் 5 சவரன் காட்டுங்க. என்றாள் மான்வி. 

அழகான மோப்பு மயில் மரகத கற்களில் இருப்பது போல ஒன்றை எடுத்து கண்ணனிடம் காட்டி, ஓகே வா! 

நீ போட்டுக்க போறது சோ உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை வாங்கிக்க என்றான். 

அத்தை நான் எடுத்திட்டென் வந்து பாருங்க என அழைத்தாள். 

அண்ணி எடுத்துடீங்களா? அதுக்குள்ளயா என பொன்மலர்  ஆச்சரியத்துடன் கேட்க, நான் ஆகாசரீஸ்க்கு எல்லாம் பெருசா டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேன். என புன்னகையுடன் கூறினாள். 

நீ எப்போ வந்த? இன்னும் எடுக்கிற? என் மான் குட்டி வந்ததும் எடுத்திட்டா! என்றார் மகேஸ்வரி. 

அக்கா ஒரு நாள் ஆனால் கூட வெயிட் பண்ணி அவளுக்கு பிடிச்சத வாங்கி கொடுப்பேன் என்றார் கோபி புன்னகையுடன். 

சரி டாடி அவ்ளோ தான! நான் கிளம்பவா? 

இரு மா கொடி காசு எடுப்போம் என மாங்கா டிசைன், லட்சுமி டிசைன் ஜோடி காசுகள், முத்து, பவளம், கருகமணி என அனைத்தையும் வாங்கி விட்டு வைரம் மற்றும் மரகத கல் பதித்த ஆரம் நெக்லஸ் தோடு மூன்றையும் எடுத்து கொடுத்தார் கோபி. 

டாடி அது வேணும் இது வேணும் என மான்வி தாராளமாக வாங்கினாள். 

மகேஸ்வரி பெரு மூச்சுடன் திரும்ப, என்ன மா? நான் பணம் கொடுத்தெனே பாப்பாவுக்கும் எடுப்போம் என கண்ணன் வந்து நிற்க, இப்போதைக்கு இருக்கிறத போடுவோம் அப்புறம் தலை ஆடி, தலை பொங்கல் இன்னும் எவ்வளவோ இருக்கு மீதிய அப்புறம் கொடுப்போம் என கூறினார். 

மா நான் நாலு வருசம் வேலை செஞ்ச பணத்தை பேங்க்ல இருக்கு சொல்லுங்க இப்போவே எடுத்து கொடுப்போம். என கண்ணன் கூற, வாடா பார்த்துப்போம் என மகேஸ்வரி அடக்கினார். 

அத்தை இது தான் எடுத்தேன். காசு மாலை செட் நல்லாருக்கா? என மான்வி காட்டினாள். 

ம்ம் நல்லாருக்கு மா! என மகேஷ் கூறினார். 

“மாமா மான்விக்கு நீங்க நகை போட வேணாம். எனக்கு எதுவும் செய்ய வேணாம். கொடி பார்க்க தான் கூட்டிட்டு வந்தீங்க?” என கண்ணன் தடுத்தான். 

செய்ய கூடாதுன்னு நீங்க சொல்ல கூடாது மாப்பிள்ளை. பெருசா நான் செய்யல மைதிலிக்கு என்ன செஞ்சேனோ அதை தான் மான்விக்கும் செய்வேன். ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி தான் அதனால நீங்க வேண்டாம்ன்னு சொல்ல கூடாது. இது வரதட்சணை இல்ல நானே என் பொண்ணுக்கு பிரியபட்டு கொடுக்கிறது என கோபி கூறினார். 

அதற்கு மேல் கண்ணனால் எதுவும் பேச முடிய வில்லை. 

இங்கே மல்லிகா பதட்டத்துடன் காணப்பட்டார். என்னாச்சு மா? என மைதிலி அவளின் குழந்தைக்கு சோர் ஊட்டி கொண்டே கேட்க, மாமா எங்கே டி என வேகமாக உள்ளே சென்றார். அண்ணா! அண்ணா! என மல்லிகா கத்தி கொண்டே சென்றார். 

என்ன மல்லி? 

“அண்ணா நான் நல்லா மாட்ட போறேன். எனக்கு பயமா இருக்கு?”

என்னாச்சு? நான் இருக்கேன் விசயத்தை சொல்லு என அவரை அமர வைத்தவர். வைதேகி மல்லி வந்திருக்கா! சின்னவன கறி வெட்டிட்டு வர சொல்லு என கூறினார். 

மல்லிகா முத்து முத்தான வியர்வையை துடைத்துக் கொண்டே அண்ணா இன்னும் மூணு நாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு. இன்னிக்கு அந்த மனுஷன் நகை எடுக்க போயிருக்கார். 

போகட்டும் மா! மான்வி கண்டிப்பா அந்த கருவாயன கட்டிக்க மாட்டாள். மான்வி சுரேஷ்க்கு தான் என்றார் சாதாரனமாக.. 

நீ சொல்றத நடக்கல நான் அவ்ளோ தான். மான்வி கல்யாணத்துக்கு அவர் வாங்கி கொடுத்த 20 சவரனை உன் கிட்ட தான் கொடுத்து சுரேஷ் பேரில் அடமானம் வச்சிருக்க. மைதிலி அப்பாவுக்கு தெரியாம நான் கொடுத்திருக்கேன். மான்விய சுரேஷ் தான் கட்டிக்க போறான்ற நம்பிக்கையில் தான் பண்ணேன் என மல்லிகா பயத்துடன் கூறினாள். 

மாதேஸ்வரன் சிரித்துக் கொண்டே இப்போவும் சொல்றேன். மான்வி சுரேஸ்க்கு தான் நீ எதை பத்தியும் கவலை படாதே கல்யாணம் நடக்கும் ஆனால் அது மான்விக்கும் சுரேஷ்க்கும். நீ கவலை படாதே! என்றார். 

“அண்ணா இப்போ அவர் வந்து நகைய கேட்டால் நான் என்ன சொல்றது?” என மல்லிகா பதட்டத்துடன் கேட்டார். 

மச்சான் உன் கிட்ட நகைய கேட்கிறதுக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு மான்வி மருமகளா வந்திருப்பா என்றார். 

எப்படி அண்ணா என மல்லிகா கேட்க, சுரேஷ் பார்த்துப்பான். அவனுக்கு மான் வின்னா எவ்ளோ இஷ்டம்ன்னு உனக்கு தெரியும் தானே நீ கவலை படாமல் இரு என பேசி முடித்தார்கள். 

அண்ணி வாங்க நாட்டு கோழி குழம்பு உங்களுக்கு பிடிக்குமேன்னு தண்ணியா வச்சிருக்கேன் என வைதேகி அழைத்தார். 

இல்ல வேணாம் அண்ணி என மல்லிகா மறுக்க, அட வாங்க அண்ணி சுரேஷ் பார்த்துக்குவான் என அவளை சாப்பிட வைத்து அனுப்பினார்கள். 

சுரேஷ் இரவு அவனது கூட்டாளி பசங்களுடன் சுற்றி விட்டு வீட்டுக்குள் நுழைந்தான். சுரேசு என மாதேஸ்வரன் அழைத்தார். 

சொல்லுங்க பா! என சிகரட்டை வீசி காலில் மிதித்தான். 

“மான்விக்கு இன்னும் மூணு நாளையில் கல்யாணம் டா! மல்லிகா வேற நகைய கேட்டுட்டு போறா நான் என்ன பண்ணட்டும் சொல்லு”

மான்விக்கு கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தால் அது என் கூட தான். நான் ஆல்ரெடி என்ன பண்றதுன்னு ஃபிக்ஸ் பண்ணிட்டேன். நீங்க நிம்மதியா போங்க. என உறுதியாக கூறினான். 

அவர் சென்றதும் மான்வியின் படங்களை எடுத்து பார்த்தான். சின்ன வயதில் இருந்தே மான்வியை அவனுக்கு பிடிக்கும். படுக்கையிலேயே அவளை எடுத்து கொள்வது போல நினைத்துப் பார்த்து விட்டான். காலேஜ் போனதில் இருந்து இன்னும் பளபளவென பப்பாளி போல மாறி விட்டாள். வெளியே ஆயிரம் இருந்தாலும் அனைத்தும் அனுபவித்து விட்டான். மான்வியை கட்டிக் கொண்டு ஒழுக்க சீலனாக வாழ வேண்டும் என இப்பொழுது ஊதாரியாக சுற்றி கொண்டிருக்கிறான். மான் குட்டி! என காமத்துடன் முத்தம் பதித்தான். 

அந்த நேரம் போன் வர, பா போன் கால் என எடுத்து பார்த்தான். தீனா என இருந்தது. 

“என்ன மச்சி இந்த நேரத்தில் கூப்பிட்டுருக்க?”

“டேய் செம்ம பீசு ஒயோ வந்திருக்கு! வந்தால் என்ஜாய் பண்ணலாம்.”

“இல்ல மச்சி கல்யாணம் ஆக போகுது டா!”

“ஃபர்ஸ்ட் நைட் ரிகர்சல் இப்போவே பார்க்கலாம் டா நல்லா புது பீசு பெரிய பார்ட்டி தள்ளிட்டு வந்திருக்கான். நீ கொஞ்சம் பேசினால் மயங்கி உன் அழகில் விழுவா” என உசுப்பி விட்டான் தீனா. 

“அப்படிங்கிற”

“ஆமா மாமு”

ஹான் வரேன் மச்சி என உடனே சுரேஷ் கிளம்பினான் ராத்திரி வேட்டைக்கு. 

டாடி நீ வண்டி ஓட்டு என ஸ்கூட்டியை தந்தையிடம் கொடுத்து அவர் மேல் சாய்ந்து கொண்டாள் மான்வி.

கண்ணன் ஜீப்பை வர வழைத்திருந்தான். மூவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். அப்பா சாப்பிட்டு போயிடலாம் என மோகன் மலரை பார்த்துக் கொண்டே கூற, அக்கா சாப்பிடுவோம் என நேராக சைவ ஹோட்டல் சென்றார்கள். 

கண்ணன் ஆச்சரியத்துடன் பார்க்க, “என்ன டா கருவா அப்படி பார்க்கிற?”  நெய் தோசையை மென்ற படி கேட்டாள். 

“இந்த பசிக்கு பேரென்ன?”

“இது கபகப பசி டா! என்ன கண்ணு வைக்கிறயா?”

“இல்ல வேற என்ன வேணும்னு கேட்டேன்”

இந்த ஹோட்டல் ஸ்பெசல் எல்லாம் வேணும். வாங்கி கொடு என கேட்டாள். 

நல்லா சாப்பிடு வாங்கி தரேன். நீ பேசுற வாய்க்கு இதெல்லாம் கம்மி என கண்ணன் ஆர்டர் செய்தான். 

உணவு முடித்து அவள் எழுந்து கை கழுவி விட்டு வந்தவள். அத்தை கர்சீப் கொடு. என கேட்க.. மகேஷ்வரி மனி பர்சில் தேடியவர். டேய் கண்ணா உன்னோட கற்ச்சீப கொடு மான்வி வாங்கிக்கோ பொண்ணு என்றார். 

“ஹே ஸ்கூல் டீச்சர் தான டி நீ ஒரு கர்சீப் வச்சுக்க மாட்டியா? இன்னும் அந்த பழக்கத்தை மாத்தளயா நீ!” என கேட்டுக் கொண்டே நீட்டினான் கண்ணன். 

மான்வி வாங்கி உதட்டை துடைத்துக் கொண்டு சாருக்கு தான் என்னை பிடிக்காதே! அப்புறம் இந்த எக்ஸ்ட்ரா டிடெயில்ஸ் எல்லாம் எப்படி? நினைப்பில்… வச்சிருக்கீங்க? என புருவம் தூக்கினாள் மான்வி. 

கண்ணன்…? 

டேய் தீனா? நாளைக்கு  கிருஷ்ணாவ கூட்டிக்கிட்டு கார் எடுத்திட்டு வரயா? ஒரு கல்யாணம் பண்ணனும் டா என்றான் சுரேஷ். 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.