அத்தியாயம் -20

சுரேஷ் தும்மல் வந்திடுச்சு? என்றாள் மான்வி புன்னகையுடன்.. 

என்ன என சுரேஷ் பார்க்க கைப்பையில் இருக்கும் பெப்பர் ஸ்ப்ரே வை எடுத்து அவனது முகத்தில் அடித்தாள் மான்வி. 

ஹா! அய்யோ கண்ணு எரியிதே! அய்யோ ஆசிட் ஆசிட்! என்ன டி பண்ண? கண்ணு எரியுது டி! ஹே மான்வி உன்னை என அவளை பிடிக்க பாய்ந்தான் சுரேஷ். 

அதற்குள் கிருஷ்ணா ஒரு பக்கம் சுரேஷ்சை பிடிக்க இன்னொரு பக்கம் தீனா ஆவேசமாக என்ன தங்கச்சி இப்படி பண்ணிட்ட! என அவளின் கையில் இருக்கும் ஸ்ப்ரேவை பிடுங்கி தூக்கி போட்டவன். இப்போ என்ன பண்ணுவ? என மான்வியை பிடிக்க அருகில் நெருங்கினான். 

டேய் அவளை புடி டா தீனா! மான்வி உன்னை இரு டி மவளே! டேய் தாலியை கொடு டா என கண்ணை தேய்த்துக் கொண்டே கிருஷ்ணாவின் உதவியுடன் மான்வி பக்கம் வந்தான் சுரேஷ். 

அடங்க மாட்ட அப்படி தான டா என்றவள். கைப்பையில் இருந்து மிளகாய் பொடியை தீணாவின் மீது ஊதினாள் மான்வி. 

அய்யோ தீனா? என கிருஷ்ணா ஆவேசமாக மான்வியை பிடிக்க வர கையில் இருக்கும் மீதி மிளகாய் பொடியை திரும்பி அவன் மீது  ஆவேசமாக வீசினாள். 

அய்யோ! அது கிருஷ்ணா இல்ல கண்ணன் அய்யோ கார்வண்ணன். 

தீணாவின் கண்களில் மிளகாய் பொடி படும் போதே அவ்விடத்தை அடைந்திருந்தான் கண்ணன். 

“அம்மா! ஹே என்ன டி போட்ட? உன்னை காப்பாத்த வந்தேனே? பிளான் பண்ணி அய்யோ” என பேசவே முடிய வில்லை கண்ணனால்.. 

மான்வி வேகமாக தண்ணீரில் கை கழுவியவள். சாரி சாரி டா கண்ணா நான் வேணும்னு பண்ணல.. அய்யோ வாடா ஹலோ முத்து சீக்கிரம் வாங்க தண்ணி எடுத்திட்டு வாங்க.. 

மேடம் அக்யூஸ்ட்? என முத்து கேட்க.. 

அதான் மூணு போலீஸ் இருக்கீங்களே அப்புறம் என்ன சீக்கிரம்.. சீக்கிரம் கருவா சாரி டா! பிளீஸ் நீ சொல்லி இருக்கலாம் தானே! அட்லீஸ்ட் என் பேரை கூப்பிட்டு இருக்கலாம் தானே உனக்கு என்ன டா கேடு? வாயில கொழு கட்டை எதுவும் வச்சிருந்தயா கருவா நாயே! என அவனை அணைத்த வாறு தண்ணி பைப்புக்கு அழைத்து சென்றாள். 

மேடம் முதல்ல நீங்க கழுவுங்கள் என முத்து கூற.. அவளது கைப்பையில் இருந்து ஃபேஸ் வாஷ் லிக்விட் போட்டு நன்றாக கழுவினாள். பியர்ஸ் பிரவுன் வாசம் கண்ணனின் நாசியை துளைத்தது. அதை விட கண் எரிச்சல் இன்னும் அதிகமானது. 

முத்து கண்ணனின் கண்களில் படும் படி நீரை அள்ளி அடித்தான். கண்ணா இப்போ ஓகே வா டா! இரு நான் ஹேன்ட் வாஷ் பண்ணிட்டேன். நீ ஒரு தடவை பண்ணு என அவனது கைகளில் லிக்விட் கொடுக்க, ஹே இது கேர்ள்ஸ் போடுற சோப்பு.. 

டேய் டென்ஷன் பண்ணாத போடு டா! என்றவள் அவளே அவனது முகத்தில் போட்டு விட்டாள் தண்ணீரை வாரி முகத்தில் அடித்து விட்டாள். 

கண்களை அவனால் முழிக்க முடிய வில்லை. எரிச்சல் இருக்கத் தான் செய்தது. கண்ணில் இருந்து நீர் சொட்டி கொண்டே வந்தது. 

இப்போ எப்படி இருக்கு? ஓகே வா? 

ம்ம் ஓகே என பொய் கூறினான் கண்ணன். 

சுரேஷ், கிருஷ்ணா, தீணா என மூவரையும் கண்ணன் அழைத்து வந்த போலீஸ் பிடித்தார்கள். 

கண்ணன் கர்சீப் கொண்டு கண்களை துடைத்த படி நடக்க, மான்வி அவனது கைகளை பிடித்துக் கொண்டு நடந்தாள். 

“ஹே என்ன பண்ற?”

நீ கம்முன்னு வா கீழே விழுந்துட்டா என்ன பண்றது? என மான்வி பிடித்துக் கொண்டவள் நொடிக்கு ஒரு முறை அவனது கண்களை பார்த்தாள். 

சுரேஷ் துடித்தது துள்ளிய படி மான்வி என அழைக்க, கிருஷ்ணன் அவளை கொல்லும் வெறியில் பார்த்தான். 

நான் அவ்ளோ முட்டாள் இல்ல டா கூமுட்டைகளா? கார்ல் ஏறுவதற்கு முன்னாடியே information pass பண்ணிட்டு லைவ் லொக்கேஷன் DSPக்கு share பண்ணிட்டு வந்தேன். என ஒற்றை புருவம் தூக்கினாள். 

சார் இவனுங்க மேலே என்ன கேஸ் போடுறது என இன்ஸ்பெக்டர் சுதர்சன் கேட்க, மான்வி கண்ணனின் பக்கம் திரும்பி அவன் வெளியேவே வர கூடாது FIR போட சொல்லு டா! நான் complaint தரேன் என்றாள். 

இல்ல என கண்ணன் ஆரம்பிக்க, அங்கிருக்கும் அனைவரும் DSP யை பார்த்தார்கள். 

வேற என்ன பண்ண போற நீ? என கண்ணனின் காதில் முனுமுனுத்தாள் மான்வி.

சுதர்சன் முத்து இருவரும் கண்ணனை பார்த்து உதட்டுக்குள் சிரித்தார்கள்.  “என்ன டி பண்ண சொல்ற? எனக்கே சொல்லி தரயா?” என அவன் மெதுவாக கூறினான். 

“டேய் நான் சொல்றத செய். அவன் மேலே FIR போடு கருவா!”

நீ இப்படி தான் டி சொல்லுவ? நாளைக்கு மனசு மாறி!..

“உன்னோட ஸ்டாப்ஸ் முன்னாடி செருப்புல அடி வாங்க சம்மதமா? இல்ல மிளகா பொடி எடுக்கட்டா! கருவா?”

க்கும் சார் இப்போ நாங்க என்ன பண்றது? சுதர்சன் மீண்டும் கேட்க, கண்ணன் கண்களை   இறுக்கி மூடிய படி, ஹான் மேடம் சொல்றத செய்ங்க. ஐ மின் மேடம் தான் கம்ப்லைன்ட் பண்றேன்னு சொல்றாங்களே புரோசீட் பண்ணுங்க என உத்தரவிட்டான் கண்ணன். 

அங்கிருக்கும் காவலர்கள் அவர்கள் இருவரையும் பார்த்து சார் இப்போவே மேடம் கண்ட்ரோல்ல வந்துட்டார். கல்யாணம் ஆனால் இன்னும் அதிகமா இருக்கும். இனி மேடம் ராஜ்ஜியம் தான் என அவர்களுக்குள் பேசி கொண்டார்கள். 

டேய் கண்ணா! உன்னை சும்மா விட மாட்டேன் டா! மான்வி இரு டி உன்னை என்ன பண்றேன் பார் டி! என சுரேஷ் கத்தினான் கண்களில் நீர் வழிய, கண்களை திறக்க முடிய வில்லை. 

இன்ஸ்பெக்டர் ஒரு நிமிசம் என மான்வி கூற, இன்னும் என்ன டி? என கண்ணன் சலித்துக் கொண்டு கேட்டான். 

“அவனோட சட்டை பேன்ட் ரெண்டையும் கழட்டி ஜட்டியோட இழுத்துட்டு போக சொல்லு!” என மான்வி கூற, ஹே அவன் உன் மாமன் பையன். 

டேய் மூடிட்டு சொல்றத செய் டா! அவன் என்ன உறவு ஏதுன்னு உன் விளக்கத்தை கேட்டனா? 

டிரை டூ அண்டர்ஸ்டான்ட் மான்வி. என கார எரிச்சலில் கண் விழித்தான் . 

என்னமோ பண்ணு என முகத்தை திருப்பி கொண்டாள். 

வா உன்னை ட்ராப் பண்றேன் என கண்ணன் அழைக்க, மான்வி முனகிய படி நடந்தாள். 

முத்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க என கண்ணன் அதே இடத்தில் நிற்க, மான்வி அவனருகில் வந்து கைகளை பிடித்த படி கீழே அழைத்து சென்றாள். 

இருவரும் ஜீப்பில் ஏறினார்கள். சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் இருவரையும் இன்னொரு ஜீப்பில் காவல் நிலையம் அழைத்து சென்றார்கள். 

“முத்து நேராக மேடம் வீட்டுக்கு போங்க”

சார் உங்களை முதல்ல விட்டுட்டு அப்புறம் மேடம். ஏன்னா உங்களோட கண்ணு.. என முத்து அக்கறையுடன் கூறினான். 

இல்ல நீங்க நான் சொல்றத செய்ங்க. என கண்ணன் கட்டளையிட்டான். அவனது தவிப்பு மான்விக்கு அப்பட்டமாக தெரிந்தது. ரொம்ப எரியும் போலயே! என அவனது முகத்தை பார்த்தவள். 

“முத்து நீங்க உங்க சாரை முதலில் இறக்கி விடுங்க அப்புறம் நான் போறேன்” என்றாள் மான்வி. 

“சொல்றத கேளு மான்வி நேரமாச்சு. அப்புறம் உன்னை மாமா தேடுவாங்க” என அக்கறையாக கூறினான் கண்ணன். 

இல்ல முதல்ல நீ போ அப்புறம் நான் போறேன். நீங்க வண்டிய விடுங்க என கூறிவிட்டாள் விடாப்பிடியாக.. 

கண்ணன் மெதுவாக “ஏன் டி இப்படி டென்ஷன் பண்ற? வீட்டுக்கு போடி!”

நான் சொல்றத நீ கேளு என இருவரும் கண்ணனுக்காக கொடுக்கப்பட்ட பங்களா வந்திருந்தார்கள். 

சரி மான்வி வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணு என இறங்கி கொண்டான். 

சரிங்க சார் என முத்து காரை எடுத்தான். கண்ணன் கண்களை துடைத்த படி வேகமாக வீட்டுக்கு வந்தவன். கதவை திறந்து ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ் கட்டியை தேடினான். அவன் அதிகமாக ஃப்ரிட்ஜெ பயன்படுத்துவதில்லை அதனால் ஐஸ் க்யூப்ஸ் எதுவும் அங்கில்லை. 

ச்ச என வேகமாக சட்டைக்குள் பூரான் புங்குந்தது போல நெண்டினான். பாவி மக அய்யோ கண்ணு எரியுது டி என துடித்தான் கண்ணன். அனைவரும் இருக்கும் இடத்தில் DSP பதவியில் இருப்பவன் இப்படி நெண்டினால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என பொறுத்து கொண்டிருந்தான். 

எப்பொழுதடா வீட்டுக்கு வருவோம் என இருந்தது. 

என்னாச்சு டா எதுவும் எறும்பு உள்ளே போயிடுச்சா பேன்ட்க்குள்ள? என வீட்டுக்குள் நுழைந்தாள். 

அய்யோ..  என தன்னை சரி படுத்திக் கொண்டவன் சிவந்த கண்களுடன் நீ வீட்டுக்கு போகலயா? எனக்கு என்ன நான் நல்லாருக்கேன் என இயல்பாக நின்றான். 

பக்கா! 

பக்கா நீ கிளம்பு. என கண்ணன் இயல்பாக ஸோபாவில் அமர்ந்தான். 

சரி என திரும்பிய மான்வி மெல்ல அருகில் வந்து அமர்ந்தாள். 

“வீட்டுக்கு போடி!” என்றவன் கண்கள் சிவப்பு மிளகாய் பொடியின் காட்டமான காரத்தின் வீரியத்தால் சிவந்திருந்தது. 

கருவா என அவனது முகத்தை திருப்பியவள். ரொம்ப எரியுதா? இங்கே கண்ணை காட்டு என எக்கி அவளது குளிர்ந்த நாக்கை அவனது கண்ணில் வைத்து வருடினாள். 

இருவரும் மிக நெருக்கத்தில் மான்வியின் முகத்தில் அத்தனை கவலை கண்ணன் சுற்றம் மறந்து அமர்ந்திருந்தான். அவளின் குளிர் நாக்கு அவனது கண்ணில் இருக்கும் காரத்தை ஒற்றி சுழற்றி எடுத்தது. 

அவளின் மூச்சு காற்று ஆண் அவனை மயக்கியது. பியர்ஸ் வாசமும் கூடவே சேர்ந்து மயக்கியது. இந்த கண்ணை காட்டு என திருப்பி மெல்ல நாக்கை கொண்டு வருடினாள். உள்ளுக்குள் தவுசன்ட் வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தது அவனது உடல்.. அதை அவளுக்கு கடத்த நினைத்தது கண்ணனின் உதடுகள். தவித்து கொண்டிருந்தது. 

சரியான வித்தைகாரியா இருப்பா போல.. இதெல்லாம் எங்கே இருந்து கத்துக்கிட்டா! என தோன்றியது. இப்போ ஒகே வா என மெல்ல ஊதியவள். அவளின் கை பையில் இருக்கும் டிஷ்யூவை தண்ணீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்க வர, போதும் என தடுத்தான். 

டேய் தண்ணியோட ஈரம் பட்டால் கொஞ்சம் நல்லாருக்கும்.  என மான்வி துடைக்க வர, கைகளை பிடித்தான் கண்ணன். 

மான்வி…? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.